Monday, October 25, 2010

ஜாக்கி அண்ணனுக்கு என் வாசகர் கடிதம்


Share/Bookmark
இது ஜாக்கி அண்ணனுக்கு என்னுடைய வாசகர் கடிதம். அவரது வாசகர்களுக்கான கடிதமும் கூட. இதனை அவருக்கு அனுப்பினால், தனிக்கை செய்யப்பட்டு, வழக்கமான ஜாக்கியின் புகழ்பாடும் வாசகர் கடிதமாகவே வெளியிடப்படும் என்பதால் என்னுடைய பதிவிலேயே வெளியிடுகின்றேன்.

ஜாக்கி அண்ணனைப் பற்றி நான் எழுதிய மூன்று பதிப்புகளுக்கும், வெளியிட முடியாத, ஆபாச வார்த்தைகளில் என்னை திட்டி பல பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன. இது சம்பந்தப்பட்டவரின் தரப்பிலிருந்தோ, சம்பந்தப்பட்டவரிடமிருந்தோ அல்லது அவருக்கு சம்பந்தமில்லாத எதிரிகளிடமிருந்தோ வந்திருக்கலாம் (மூன்று இடங்களிலும் இருந்து வந்துஇருக்கிறது என்பதே என் ஊகம்), ஆனால் அதை
பற்றி எனக்கு கவலை இல்லை.

என் பதிவிற்கு எதிராக பின்னூட்டம் இட்ட அனைவருமே, "உனக்கு ஏன் இந்த அக்கரை", "ஜாக்கி அவ்வாறு தான் எழுதுவார், உன்  வேலையை பார்த்துக்கொண்டு போ" என்றவாறு கூறினார்களே தவிற, ஜாக்கியின் பதிவுகள்
தரமானவை. அதை ஏன் ஏளனம் செய்கிறீர்கள் என ஒருவர் கூட கேட்கவில்லை. "உங்கள் பதிவுகள் ஆபாசமானவை" என்பதும், "உங்கள் பதிவுகள் ஆபாசமாக இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்" என்பதும் ஒரே அர்த்தம் தான்.முதலாவது கத்தியை எடுத்து நேராக நெஞ்சில் செருகுவது. இரண்டாவது முதுகுவழியாக குத்தி முன்னே இழுப்பது. நான் செய்தது முதல் ரகமே.

"சக பதிவரை எப்படி ஏளனம் செய்வது? அடுத்தவரை பற்றி விமர்சிக்க நீங்கள் யார்?" என்று பலர் கேட்டிருக்கின்றனர். ஒரு திரைப்படத்தை விமர்சிக்கும் உரிமையை தாங்களுக்கு யார் தந்தது? ஒரு நடிகரையோ, நடிகையையோ அல்லது ஒரு இயக்குனரோ அவரது வேலையை சரியாக செய்யாவிடில், அவரை சாடும் உரிமையை தங்களுக்கு யார் தந்ததோ அவரே தான்
எனக்கு சக பதிவரது தவறை சாடும் உரிமையையும் தந்தார்.

மேலும் ஜாக்கி அண்ணனின் உடல் அமைப்பை கேலி செய்திருக்கிறேன் எனவும், நடிகர் செந்திலின் புகைப்படத்தை இட்டு ஜாக்கியை அவமதிக்கிறேன் என்றும் கூறியிருக்கின்றனர் சிலர், நிச்சயமாக இல்லை. நண்பர் இளவரசன் அவருடைய பதிப்பின் தலைப்பு செந்தில் நடிக்கவிருப்பதாக இருந்த "ஆதிவாசியும் அதிசய பேசியும்" படத்தின் தலைப்பை ஒத்து இருந்ததாலேயே செந்திலின் படத்தை இட்டார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, அதை தொடர்ந்து அதை தழுவி என் பதிப்பு இருந்ததாலேயே நானும் அதே புகைப்படத்தை உபயோகிக்க வேண்டியதாயிற்றே தவிற, ஜாக்கி அண்ணனை கிண்டல் செய்வதற்காக அல்ல.

எனக்கு ஒன்று புரியவில்லை. செந்தில் என்றால் உங்களுக்கு என்ன அவ்வளவு இளக்காரமா? அவரும் வாழ்வின் அடிமட்டத்திலிருந்து முன்னேறியவரே. "செந்திலின் பட்த்தை இட்டு ஜாக்கியை அவமதிக்கிறீர்கள்" என்று நீங்கள் கேட்கும் இந்த தொணியில்  செந்தில் அல்லவா அவமதிக்கப்படுகிறார். சரி அதை விடுங்கள். இந்த கேள்விகளை கேட்டவர்களுக்காகவே இந்த பதிப்பில் அரவிந்த்  சாமியின் படத்தை இட்டிருக்கிறேன். சந்த்தோஷமா? அரவிந்த சாமியின் தரப்பிலிருந்து என்னிடம் சண்டைக்கு வந்தால் என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை.

வாழ்வின் அடிமட்டத்திலிருந்து வந்தவன். லோக்கல். இதெல்லாம் ஒருவர் ஆபசாமா எழுதலாம் என்பதற்கு தகுதிச் சான்றிதழ்களா?
என் பதிப்பில் இருந்த ஒரு ஒரு வார்த்தைக்கு அதுவும் தமிழ் திரைப்படங்களில தனிக்கை செய்யப்படாமல் வெளியிடப்பட்ட அந்த ஒரே ஒரு வார்த்தைக்காக என்னிடம் சண்டைக்கு வந்தவர்கள் ஏராளம். அவர்கள் அவரிடம் இதுபோல கேள்விகளை கேட்டிருந்தால் அவர்  முன்னரே இதைப்பற்றி யோசித்திருப்பார்.... சரி என்னால இதுக்கு மேல தம் கட்ட முடியாது.

நெற்றிக்கண் திறப்பிணும்... ச்ச... ச்ச...

கெட்ட வார்த்தையில் என்னை திட்டினாலும்
குற்றம் குற்றமே...

Nextu... Restu....

Friday, October 22, 2010

ஜாக்கி விவகாரம் - உலக தலைவர்கள் அதிர்ச்சி


Share/Bookmark

இளவரசன் என்பவர் ஜாக்கி அண்ணனை அவதூறாக பேசி அவமதித்த விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மதுரை, தேனீ உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று முழு கடையடைப்பு கடைபிடிக்கப்பட்டது. சென்னையில் இன்று ஜாக்கியின் ஆதரவாளர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டதில் இளவரசனின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. அங்கு ஏற்பட்ட கலவரத்தில், பதினாறு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் நாளை, UAE, US, USSR போன்ற பல நாடுகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் உலக தலைவர்கள் பலரும் இந்த வெறிச்செயலுக்கு கடுமையான கண்டனங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு.

(குறிப்பு: ஒவ்வொரு தலைவர்கள் பேச்சை படிக்கும் போதும், அவர்கள் தொணியில் கற்பனை செய்து கொண்டு படியுங்கள்)

கலைஞர் டிவியில் முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள கண்டன அறிக்கை:

"தமிழர்களே.. தமிழர்களே....
நீங்கள் ஜாக்கியை கடலில் தூக்கி எறிந்தாலும்
அவர் ஆபாசமாகத்தான் எழுதுவார்..
அதை பார்த்து நீங்கள் அவர் follower ஆகலாம்"

எனது அருமைத் தம்பி ஜாக்கி, சமுதாயத்தில் சில விஷக்கிருமிகளால்
அசிங்கப்படுத்தப்பட்டார், அவமானப்படுத்தப்பட்டார், ஏளனப்படுத்தப்பட்டார்,
கேவலப்படுத்தப்பட்டர், காரி உமிழப்பட்டார் என்ற செய்தியை கேட்டவுடன் நான் மிகுந்த துன்பம் அடைந்தேன், தீராத மன உலைச்சலுக்கு ஆளானேன். இதுபோன்ற கொடுமை இனிமேல் நடைபெறாமல் இருக்க, நாளை சட்ட மன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. அதன்படி இனி ஜாக்கியைப்பற்றி புகழ்ந்து ஒரு வரியேனும் இடம் பெற்றிருந்தால்தான் ஒரு வலைப்பதிவுக்கு 'வரி' விலக்கு அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புக்கு மூன்றெழுத்து
அறிவுக்கு மூன்றெழுத்து
தம்பிக்கு மூன்றெழுத்து
ஜாக்கிக்கு மூன்றேழுத்து
அவருக்கு பிடித்த"செக்ஸி" க்கு மூன்றெழுத்து
அவர் எழுதும் "டிஸ்கி" க்கு மூன்றெழுத்து
அவர் அடிக்கும் "விஸ்கி" க்கும் மூன்றெழுத்து

டி.ஆர் குரல் டிவியில் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

யிய்யாய்... டண்டனக்கா....

எவன்டா அவன் என் உடன்பிறப்பு ஜாக்கிய கிண்டல் பண்ணது. என்னோட குரல் டிவில ஜாக்கிய வச்சி "புதிரா புனிதமா" மாதிரி "ஜலஜாவா ஜல்சாவா" ன்னு ஒரு நிகழ்ச்சி நடத்தி TRP ரேட்டிங் ah increase பண்ணிக்கலாம்னு பாத்தா, எவன்டா என்ன மாதிரி (கரடி) வந்து காரியத்த கெடுத்தது. நீ வேணும்னா இளவரசனா இருக்கலாம்.. ஆன என் பையன் குரலரசன்.. இன்னோரு பையன் சிலம்பரசன்... அப்புறம் என் பொண்டாட்டி..."

ரிப்போர்ட்டர்: சார் சார்... ஜாக்கிய பத்தி சொல்லுங்கன்னா உங்க குடும்பத்த பத்தி பேசுறீங்க...

யோவ்.. இருய்யா... அப்புடி ஆரம்பிச்சி கடைசியா வருவேன்ல... இப்ப பாரு பட்டைய கெளப்புறேன்

"ஜாக்கி எழுதுறது சாண்ட்விச்சு
எங்க வீட்டுல எல்லாரும் நான் வெஜ்ஜூ
இன்னொரு தடவ எழுதுன கைவச்சு
உன் மேல நாங்க நடத்துவோம் கல்வீச்சு"


அது மட்டுமல்லாமல் பாகிஸ்தானின் AAJ NEWS தொலைக்காட்சிக்கு பின் லேடனின் அல்கொய்தா அமைப்பிலிருந்து வந்த ஒரு குறுந்தகட்டில், ஜாக்கியை பற்றி தவறாக எழுதியவர்கள் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டு
இருந்தது.

அதில் பின் லேடன் பேசியதாவது

" உதுமாக்கி அப்துகாமியோ ஜாக்கி துலாஹி அபு
இன் ஹியாமி முகாபு ரிமேசியா இளவரசு, முத்துசிவா ரஸிமானி
கதிபுதா ரஹோ பிதாமி ரிஸ்தியா.....ஜெய் ஜாக்கி"

நடிகை ஷகீலா இன்று சூர்யா டிவிக்கு அளித்துள்ள பேட்டியில்

"என்னோட ரசிகர் மன்ற தலைவரான ஜாக்கிய பத்தி இப்புடி அவதூறா பேசுறத என்னால அனுமதிக்க முடியாது. என்னோட படங்கள எடுக்குற டைரக்டர்ஸ் நிறைய பேரு ஜாக்கியோட blog ல இருந்துதான் வசனத்த எடுத்து போட்டுக்குவாங்க.. அதவிட அவர் ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்ல என்னோட படங்கள தான் அதிகமா வச்சிருக்காரு. ஜாக்கி இருக்குறதால
என்னோட படங்களுக்கு ஆகும் விளம்பர செலவும் குறையும். இத வன்மையா
கண்டிக்கிறதுக்காக நா ஒரு படத்துல குடும்ப பொண்ணா நடிக்க போறேன்" என்று கூறி முடித்தார்.

ஒருபுறம் ஜாக்கிக்கு ஆதரவு பெருகினாலும், மறுபுறம் ஜாக்கி கலாக்கப்பட்டது சரிதான் எனவும் சிலர் அவருக்கு எதிராகவும் கோஷங்களை பரப்பி வருகின்றனர்.

கேப்டன் டிவில் நமது கேப்டன் அளித்துள்ள பேட்டி உங்களுக்காக:

நான் ஜாக்கிய பாத்து கேக்குறேன் " ஏண்டா நீ என்ன காந்தியா, நேருவா, சுபாஷ் சந்திர போஸா, அம்பேத்காரா... பாக்கீஸ்தான் தீவிரவாதிய கூட நா மன்னிச்சிருவேன்.. ஆன பொம்பள புள்ளைகள பத்தி ஆபாசமா பேசி எழுதுற உன்ன எந்தகாலத்திலயும் மன்னிக்க முடியாது.. மன்னிப்புக்கு அப்புறம் தமிழ்ல எனக்கு புடிக்காத வார்த்த ஆபாசம்...அவ்வ்வ்வ்வ்வ்"

ஜாக்கியின் வக்கிரத்தை பார்த்து வெகுண்ட தலைவர் கவுண்டமணி முதன் முதலாக ஒரு தனியார் தொலைக்காட்ச்சிக்கு அளித்துள்ள பேட்டியில்

"இந்த நாயி இது மாதிரியெல்லாம் எழுதுதேன்னு நாம சும்மா போனா அது பின்னாலயே வந்து பொச்ச புடிச்சி கடிச்சி வச்சிரும். இதயெல்லாம் விட்டு வைக்ககூடாது. வெட்டி வைக்கிறதுதான் சரி"

என்றார் தனக்கே உரிய பானியில்.

அதோடு ஜாக்கியின் சக நண்பர்களே அவரால் அதிருப்தி அடைந்துள்ளனர். நேற்று ஜாக்கி வெளியிட்டுள்ள ஒரு பதிப்பில் அவரை பற்றி வெளியாகியுள்ள செய்திகளை மறைப்பதற்காக, அவர் நண்பர்களுக்கு வந்த அசிங்கமான மிரட்டல் கடிததின் சுட்டியை கொடுத்திருக்கிறார். அவரைப்பற்றி தவறாக எழுதப்பட்ட (ஜாக்கியின் பார்வையில் தவறாக உண்மையில் சரியாக) வலைப்பதிவுகளின் சுட்டியை ஏன் அதில் இடவில்லை எனவும் அவரின் நண்பர்கள் கேள்வி
எழுப்புகின்றனர்.

ஜாக்கி நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த மனம் திறந்த பேட்டி அவர் நண்பர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஜாக்கிக்கு எதிராக AJF ( Anti Jackie Force) என்று ஒன்று உருவாகியிருப்பதாகவும், அவை ஜாக்கி தனது ஆபாசமான எழுத்து நடையை மாற்றும் வரை ஓயப்போவதில்லை எனவும் தெரிவித்ததாக துபாயிலிருந்து வரும் செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன.

நன்றி: கலைஞர் டிவி, குரல் டிவி, கேப்டன் டிவி, AAJ NEWS

Thursday, October 21, 2010

தர்மம் வென்றது.. இல்லை வென்றது ஜாக்கி


Share/Bookmark

"தர்மத்தின் வாழ்வு தான்னை சூது கவ்வும்
ஆனால் தர்மம் மறுபடி வெல்லும்..."

என்ற கூற்று மறுபடியும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது எங்கள் ஜாககி அண்ணன் விஷயத்தில்..... அவரை பற்றி அவதூறாக வலைப்பதிவில் பேசிய இளவரசன், நான்அவருக்கு விடுத்த கடுமையான கண்டானத்தால் , தான் சேற்றில் கல்லை விட்டு எறிந்தது தவறு என உணர்ந்து
ஜாக்கியின் ரசிகர்களிடம் நான் கேட்கும் மன்னிப்பு..

எனும் தலைப்பில் உலகெங்கும் உள்ள ஜாக்கி ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அத்தோடு மட்டுமல்லாமல் அகில உலக ஜாக்கி ரசிகர் மன்றத்தில் கோ.ப.செ பதவிக்கு அவரை பரிந்துரைக்குமாறும் என்னிடம் தொலைபேசியில் கேட்டுக்கொண்டார். இப்போது தெரிந்திருக்கும் அவருக்கு ஜாக்கி யார் என்று. அவருக்கு மட்டும் இல்லை. அவரை போன்ற மற்றவர்களுக்கும் நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன்.

சித்தூர் தாண்டுனா காட்பாடி
ஜாக்கிய சீண்டுனா நீ dead body

S(e)ix க்கு அப்புறம் seven டா...
ஜாக்கிக்கு அப்புறம் எவன்டா.....

ஜெய் ஜாக்கி !!!!

Wednesday, October 20, 2010

ஜாக்கி அண்ணன் கலாய்க்கப்பட்டதற்கு என் கண்டனம்


Share/Bookmark


நான் எப்போதும் காலைல ஆபீஸ் போனோன மொதல்ல எங்க ஜாக்கி அண்ணன் blog
ah தான் படிப்பேன். அப்படிப்பட்ட எனக்கு இன்னிக்கு காலைல ஒரு phone வந்துச்சி... "மச்சி
ஜாக்கி அண்ணன கலாய்ச்சிட்டாண்டா ஒருத்தன்... அவன் எதாது பண்ணனும்டா நாம"
என்று சொல்லு அந்து வலைப்பதிவு முகவரியயும் தந்தான்.

அதில் சென்று பார்க்கும் போதுதான் தெரிந்தது "வானம் என்ற போதி மரம்" என்னும் பெயரில் இளவரசன் என்பவர் "ஆபாச ஜாக்கியும் அதிசய டிஸ்கியும்" எனும் தலைப்பில் எங்கள் ஜாக்கி அண்ணனை பற்றி அவதூராக எழுதியிருப்பது. அவருக்கு பதிலடி கொடுக்கவே இந்த பதிப்பு. நீங்கள் கேட்கலாம் "உனக்கு ஏன் இந்த அக்கரை?
யாருக்கும் இல்லாத அக்கரை...?" என்று. நானே படிப்பேன். தினமும் படிப்பேன் எங்கள் ஜாக்கி அண்ணனின் வலைப்பதிவை.

ஆம் மிஸ்டர் இளவரசன். ஜாக்கி அண்ணன் அவருடைய வலைப்பதிவில் ஆபாச படங்களை சேர்த்தார். மக்களை கெடுக்க வேண்டும் என்பதற்காகவா? இல்லை. ஆபாச படங்களின் வலைமுகவரி தேடி நேரத்தை வீணடிக்கும் மனிதர்களின் கஷ்டங்களை போக்குவதற்காக.

தினமும் ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட் இல் ஒவ்வொரு கதா நாயகிகளின் படங்களை மாற்றினார். அவருக்கு பிடிக்கவில்லை என்பதற்காகவா? இல்லை. அனுஷ்காவின் படம் பிடிக்காமல் போனவர்கள் அசின் படம் போட்டால் திரும்பி விரும்பி படிக்க வருவார்கள் என்பதற்காக.

தினமும் நான்கு மணிநேரம் வலைப்பதிவில் செலவிடுகிறார். அதனால் அவர் வெட்டியாக இருக்கிறார் என்று அர்த்தமா? சத்தியமாக இல்லை. தினசரி அவருக்கு வரும் கடிதங்களில் எந்த கடிதம் அவரை திட்டாமல் வந்திருக்கிறது என்பதை தேடி எடுக்கவே அதில் மூணே முக்கால் மணி நேரம் வீணாகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? முரசொலியில் கலைஞர் கடிதம் இல்லாத பதிவை உங்களால் கண்டுபிடிக்க முடியும். ஆனால் எங்கள் ஜாக்கி அண்ணனின் வலைபதிவில் வாசகர் கடிதம் இல்லாத ஒரு பதிவை உங்களால் கண்டுபிடிக்க
முடியுமா?

நல்ல திரைப்படங்களுக்கு கூட நாராசமான பாணியில் விமர்சனம் எழுதினார்.
வேண்டுமென்றே செய்தாரா அதை? நிச்சயமாக இல்லை. ஏனென்றால் அவருக்கு அவ்வாறு தான் எழுத வரும். இதை அவரே அவரது பதிவுகளில் வெளியிட்டுரிக்கிறார். பத்தாம் வகுப்பில் 277/500 எடுத்த மாணவனின் வலைப்பதிவை இன்று தினசரி ஆயிரக்கணக்கனோர் படிக்கிறார்கள் என்ற அடிப்படை விபரமாவது உங்களுக்கு தெரியுமா? என்னவோ நீங்கள்
சொல்வதை பார்த்தால் அவர் பள்ளி பருவத்தில் "பருவம் 16" 'மாம்பழ ஆண்டி" போன்ற கதைகளை எழுதியதால் தான் அந்த மதிப்பண்கள் பெற்றார் என்பதை போல் இருக்கிறது.

உலக சினிமாவயே மூன்று பிரிவுகளில் வகைபடுத்த நினைப்பவர் எங்கள் அண்ணன் ஜாக்கி. அந்த மூன்று பிரிவுகள் என்னவென்றாவது உங்களுக்கு தெரியுமா? இப்போது தெரிந்த்து கொள்ளுங்கள். " பிட்டு படம்" "ஆபாச படம்" "A படம்" என்பதே அவை. அதற்காக அண்ணன் படும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமா? உலகின் அனைத்து மொழிகளில் ரிலீஸ் ஆகும்

அனைத்து படங்களையும் தினசரி பார்த்து நமக்கு விமர்சனங்களை சூடாக தருகிறார். அப்படி படம் பார்க்க நேரம் இல்லாவிடில் எதாவது பழைய ஆங்கில படங்களின் பெயரை மட்டும் படித்து விட்டு, அதற்கு அவராக ஒரு கதையை கற்பனை செய்துகொண்டு அதற்கு அவரே விமர்சனமும் எழுதுவாரே.. அந்த சேவைமனப்பங்கையா கேலி செய்கிறீர்கள்.

அப்புறம் "me the first" ன்னு comment போடுவபர்களை கடுமையாக சாடிய்ருக்கிறீர்கள். "என்னுடைய வலைத்தளத்துக்கு வந்தா comment போடாம போகக்கூடாது" என்று எங்கள் அண்ணன் விடுத்த அன்பு கட்டளையை மீறாமல், அவர் பதிவை type பண்ணிகிட்டு இருக்கும் போதே "me the first" ன்னு comment போடுறவுங்களோட சின்சியாரிட்டிய நீங்க கிண்டல் பண்ணீருக்கீங்க.

ஜாக்கி அண்ணனை அதிரடியா பேட்டி எடுத்த கழுகை நக்கலடிச்சிருக்கீங்க. இப்படி ஒரு வலைப்பதிவை வைத்துக்கொண்டு bebnoir blog க்கே சவால் விட்ட எங்கள் அண்ணன் ஜாக்கியை தவிர பேட்டி எடுக்க உகந்தவர் யாரேனும் உண்டா? "ஆன்மீகத்த பத்துன உங்கள் கருத்து என்ன?" என்ற கேள்வியின் உள்ளர்த்தம் உங்களைப்போன்ற மூடர்களுக்கு புரியாது தான், இப்போது தருகிறேன் விளக்கம் அதற்கு. நித்தியானந்தா, பிரேமானந்தா வரிசையில் ஜாக்கி எப்போது ஜாக்கியானந்தாவாக உருவெடுக்க போகிறார் என்பதே அதன் அர்த்தம். அந்த
நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அண்ணன் ஜாக்கி தனது பதிவுகள் மூலம் உலகுக்கு அடிக்கடி உணர்த்துவதை புரிந்து கொள்ள உங்களுக்கு அறிவு பத்தாது.

எதனால் எங்கள் அண்ணன் ஜாக்கி ஆனார் என்பது உங்களுக்கு தெரியும். ஜாக்கி ச்சான் மீது கொண்ட அளவுகடந்த பிரியத்தால். ஆனால நாங்கள் அவரை அந்த ஜாக்கியாக பார்க்கவில்லை. லாரியின் டயரை கழட்டும்போது அடியில் வைப்பார்களே ஒரு ஜாக்கி, அதுவாகத்தான் எங்களுக்கு அவர் தெரிகிறார். ஏனென்றால் பதிவுலகை தூக்கி நிறுத்திக்கொண்டிருப்பவரே எங்கள் எங்கள் ஜாக்கி தான்.

இறுதியாக ஒன்றே ஒன்று இளவரசன். எங்கள் ஜாக்கி அண்ணனை அவதூராக பேசியதற்காக உங்கள் மீது இ.பி.கோ....... ,,,,,,,,,,,,, ...... தத ப த,,,,,,,, எங்க ஜாக்கி அண்ணனுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை. எதாவது ஒரு பிரிவில் உங்கள் மேல் வழக்கு தொடருவார். We Will Meet In The Court.....

ஜாக்கி அண்ணேன்.. நீங்க எதுக்கும் கவல படாம ரெகுலரா போயிகிட்டு இருங்க... இவன் கெடக்குறான் சின்னப்பய........

Tuesday, October 19, 2010

என்ன கொடுமை 'தல' இது? -அஜித் ரசிகன்


Share/Bookmark

ஊர்ல பத்து பதினைஞ்சி ஹிட்டு படம் குடுத்த சூர்யா, தனுஷ் fan எல்லாம் சும்மா இருக்கானுங்க.. ஆனா ரெண்டே ரெண்டு ஹிட்டான படத்த வச்சிக்கிட்டு இந்த அஜித் fans பண்ற அலும்பு இருக்கே... அயூயோயோயோ...............

ஏன் தல நா தெரியாமதான் கேக்குறேன் இப்புடி தொடர்ந்து flop மேல flop ah குடுத்தீங்கன்னா, உங்க fans எல்லாம் எப்புடி விஜய் fans கிட்ட தைரியமா பேசுறது. நா என்ன வச்சிக்கிட்டா இல்லங்குறேன் ன்னு நீங்க சொல்றது புரியிது... ஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சிக்கோங்க தல... உங்களோடfans எல்லாம் உங்க நடிப்ப பாத்து தானா சேந்தவியிங்கன்னு மட்டும் தப்பா நெனச்சிடாதீங்க. விஜய் அப்புடிங்குற ஒரு கேவலமான ஜந்துவோட fans ட்டருந்து தப்பிக்கிறதுக்காக தற்கொலைப்படையா மாறி வந்தவியிங்க தான் உங்க ரசிகர்கள்ல பாதிபேர்..

நீங்களே 'தல'ங்குற பேர்ல form ஆயிகிட்டீங்க.. 'அது" ன்னு ஒரு பஞ்ச் டயலாக் வேற பேசுறீங்க .அத நீங்க ரஜினிகிட்ட இருந்துதான் சுட்டீங்கன்னு உங்க ரசிகர்கள் பாதி பேருக்கு தெரியாது. நீங்க அந்த டயலாக்க பேசுற அழக பாத்தி ரஜினி அத பேசுறதயே நிறுத்திட்டாறு. அவரு கடைசியா அத பேசுனது
அருணாச்சலம் படத்துலதான்.உங்கல தல தலன்னு கூப்புடுறவியிங்கள வெளில தல காட்ட முடியாத மாதிரிபண்றீங்களே தல...இது நியாயமா?

நீங்க 'நடந்த' படங்கள் நிறைய இருந்தாலும் நடிச்ச படம்ன்னு பாத்தா அது ஏகன் மட்டும் தான். உங்களோட முந்தைய படங்களோட தாக்கத்தால அந்த படமும் மக்கள் கிட்ட ஒழுங்கா போய் சேராம போயிருச்சி. நீங்க டிவில வந்து அழுகாச்சியா பேட்டி குடுக்குறத பாத்தா எங்களுக்கு அழுகாச்சியாதான் வருது உங்கள பாத்து. ஆன நீங்க உங்க வேலைய கரெக்டா செய்யலயே தல.

படம் ஏன் ஓடலன்னு கேட்டா கார் ரேசுக்கு போனேன் இதுல concentrate பண்ண முடியலன்னு சொல்றீங்க. ஏன் கார் race la ஜெயிக்கலன்னு கேட்டா "போதிய
பயிற்சி இல்லன்னு சொல்றீங்க. கார் race la நீங்க 23 பேர்ல 21 வதா வந்துருக்கீங்க. நீங்க ரெண்டு பேர முந்தி வந்துட்டீங்கன்னு எங்களுக்கு சந்தோசம் தான் :-( . ஆனா அந்த ரெண்டு பேரும் கூட வழில accident la விழுந்துட்டதுனாலதான் நீங்க 21வது கூட வந்தீங்கன்னு....... நா சொல்லல தல.. மத்தவங்க சொல்றாங்க..

அத விட பெரிய காமெடி என்னனா பாலா உங்கள மெரட்டுனாறுன்னு நீங்க பயந்துருக்கீங்க. நாம கொஞ்சம் இழுத்து மூச்சி விட்டாலே அந்த ஈறுகுச்சி ரெண்டா ஒடஞ்சி விழுந்துடுவான். இதுல அவன் மெரட்டுனான்னு நீங்க மிஸ் கிட்ட complaint பண்ற மாதிரி சொல்றீங்க. அதோட பாலாவ தாக்குறதா நெனச்சி ஆழ்வார் படத்துல வச்சீங்களே ஒரு டயலாக்கு.. "நான் கடவுள்" ன்னு.. கருமம். நீங்க அந்த டயலாக்க பேசுறத அழக மட்டும் கடவுள் கேட்டுருந்தாருன்னா
"நான் இனிமேல் கடவுள் இல்லை" ன்னு சொல்லிட்டு ஓடிப்போயிருப்பாரு. ஆழ்வார பாத்து அழுதார் தான் அதிகம்.

நீங்க சினிமாவுக்கு வந்து இத்தனை வருஷம் ஆகியும் உங்களுக்கு என்ன வரும் என்ன வராதுன்னு உங்களுக்கே தெரியலயே தல. உங்க படங்கள் எல்லாம் இப்புடி flop ஆகும் போது ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் ஏன் இவளே gap விடுரீங்க. ஒருவேளை ரஜினிய follow பண்றீங்களோ? நீங்க இன்னும் அந்த level பக்கமே வரலயே தல.

ரஜினி படம் ரிலீஸ் ஆனோன அவரு இமயமலைக்கு போவாரு. அவரு ரெண்டு மாசம் கழிச்சி திரும்பி வந்தாலும் அவரோட படம் இங்க ஓடிக்கிட்டு இருக்கும். அவரு ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் gap விடுறதுல ஒரு நியாயம் இருக்கு. ஆனா நீங்க உங்க படத்த மொத ஷோ பாத்துட்டு வீட்டுக்கு போறதுக்குள்ளயே உங்க படத்த தியேட்டர்லேர்ந்து
தூக்கிருவானுங்களே.. நீங்க ஏன் அப்புடி?

உதாரணமா நடிகர் விஜய எடுத்துக்குங்க.. எவ்வளவு அடி வாங்குனாலும் பயத்த மட்டும் கண்ணுல காமிக்க மாட்டாரு. "என்ன பாஸ் நேத்து அடிக்க வர்ரேன்னீங்க வரவே இல்ல" ன்னு சொல்லிட்டு அடுத்த படம் நடிக்க போயிருவாரு. இப்ப கூட மூணுபடம் at a time ல நடிச்சிக்கிட்டு இருக்காரு. வளர்ற புள்ள... தொழில் கத்துக்குற மொறை... ஆனா அவரோட மூணு படம் ஓடுன நாட்களை கூட்டி மூணால வகுத்தா உங்க படம் ஓடுன நாள விட கம்மியாதான் வரும்குறது வேற விஷயம்.. ஆனா அந்த சுறுசுறுப்பு உங்க கிட்ட இல்லையே தல..

ஊர்ல உள்ள புது டைரக்டருங்க எல்லாம் உங்கள வச்சி தான் டிரயல் எடுத்துகிட்டு இருக்காங்க.... ஏற்கனவே உங்க ரசிகர்கள் பாதிபேர் "இது ஆவுரதில்லை" ன்னு சொல்லிட்டு வேற ஆக்டருக்கு convert ஆயிட்டாங்க. இதே மாதிரி ட்ரயல் பாக்க விட்டீங்கன்னா, ஏற்கனவே தியேட்டர் ஆபரேட்டர் மற்றும் தான் உங்க படத்த பாத்துகிட்டு இருக்காங்க. அப்புறம் அதும் இருக்காது. ஏதாவது பாத்து பண்ணுங்க தல...

Saturday, October 2, 2010

எந்திரன் First Day -First Show -First Row


Share/Bookmark

காலைல 5.30 மணிக்கு அலாரம் அடிக்காம எந்திரிச்சது இன்னிக்கு தான்..சட்டுபுட்டுன்னு கெளம்பி சத்யம் தியேட்டருக்குஒரு 6.30 மணிக்கு போனா, ஊர்ல உள்ள மொத்த பேரும் அங்க இருக்காய்ங்க. என்ன மாதிரியே எல்லரும் அப்புடிதான் எந்திரிச்சிருப்பாங்க போலருக்கு.... ஒருத்தன் அங்க வந்து தான் பல்லே வெளக்குனாருன்னா பாருங்களேன்.. சத்யம்ல வழக்கமா வக்கிற பெரிய size banner la தலைவர பாக்கலாம்னு ஆசையா போன எனக்கு மிஞ்சுனது கடுப்பு தான்... இன்னும் அந்த பழைய பாஸ் (எ) பாஸ்கரன் banner ah மாத்தாம வச்சிருந்தாய்ங்க...ரசிகர் மன்றத்துல ஏற்பாடு செஞ்சிருந்த தாரை தப்பட்டைகள் கிழிய, அங்க சில ரசிகருங்க குத்தாட்டம் போட்டுக்கிட்டு இருந்தாங்க... 7.30 மணிக்கு show. டிக்கெட் வச்சிருந்த என் நண்பேன் வராததுனால, தியேட்டருக்கு எதுத்தாபுல நின்னு சுத்தி சுத்தி வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தேன்.

"தம்பி" அப்புடின்னு ஒரு குரல் கேட்டு side la பாத்தேன்...நாப்பது வயசு உள்ள ஒருத்தர் பக்கத்துல நின்னாரு.

"சொல்லுங்கண்ணே"

"தம்பி எக்ஸ்ட்ரா டிக்கெட் எதாவது இருக்கா.. எவ்வளவா இருந்தாலும் பரவால்ல"

"அய்யோ... இல்லண்ணே... எனக்கே என் frineds ரொம்ப கஷ்டப்பட்டு வாங்குனாங்கண்ணே... எக்ஸ்ட்ரா டிக்கெட் எதும் இல்லண்ணே...வேணும்னா காசி, கமலா ல ட்ரை பண்ணுங்கண்ணே... வாய்ப்பு இருக்கு"ன்னேன்..

"அங்கல்லாம் பொய்ட்டு தாம்பா இங்க வந்துருக்கேன்" ன்னாறு...

"அண்ணே நீங்க எங்களுக்கும் மே....ல இருக்கீங்க"ன்னு சொல்லிட்டு அங்கருந்து நகந்துட்டேன்... "

மணி 7.05.. இன்னும் பசங்க வரல... அங்க நடந்த சில அளப்பறைகல மொபைல் ல வீடியோ எடுத்துக்கிட்டு இருந்தேன்... அப்ப ஒரு Bajaj caliber வந்து ரோடு ஓரமா நின்னுச்சி... அத ஓட்டிகிட்டு வந்தவருக்கு ஒரு 55 வயசு இருக்கும்.. பின்னாடி இருந்தவருக்குஒரு 50 வயசு இருக்கும். ரெண்டு பேரும் தியேட்டர்ல உள்ள கூட்டத்த ஏற இறங்க ஒரு தடவ பாத்துட்டு பின்னடி இருந்த என்ன பாத்து

"தம்பி... 7 மணிக்கு ஒரு ஷோ இருக்குல்ல?"ன்னாங்க...

"ஆமா சார்... 7 மணிக்கு, 7.30 ஒரு ஷோ... கண்டினுயஸா இருக்கு சார்" ன்னேன்..

" ச்ச.. நானும் எல்லா ரசிகர் மன்றத்துலயும் சொல்லி வச்சிருந்தேன்பா...கடைசில எதுலயும் கெடைக்கல... ஏதாவது ரிசல்ட் தெரிஞ்சிச்சாப்பா.... படம் எப்புடி இருக்காம்... யாராவது பாத்தவங்க சொன்னாங்களா?"

"படம் சூப்பரா இருக்காம் சார்...லண்டன்லருந்து என்னோட friend oda friend கால் பண்ணாறாம் சார்" ன்னேன்..

"அப்பாடா... காலைலயே ஒரு நல்ல வார்த்தை சொன்னப்பா.. ரொம்ப சந்தோஷம்... என் பையன் கூட ஆஸ்திரேலியால இன்னிக்கு பாத்துட்டான், ஆன அவன்ட இருந்தும இன்னும் ரிசல்ட் தெரியல... சரி படம் எப்புடி.. ரஜினி எடுத்துட்டு போற மாதிரி இருக்காஇல்ல ஷங்கர் எடுத்துட்டு போற மாறி இருக்கா..?"

"சார் என்ன சார் இப்புடி கேக்குறீங்க...லண்டன்லருந்து ஒருத்தர் கால் பண்ணி சொல்றாருன்னா அது தலைவரால தான் சார்" ன்னேன்..

"இதான் வேணும்பா.. ரொம்ப சந்தோஷம்... நீங்க பாத்துட்டு ஒரு தடவ எனக்கு கால் பண்ணி சொல்லுங்க... படம் எப்புடி இருக்குன்னு" ன்னு சொல்லுஅவரு மொபைல் நம்பர குடுத்துட்டு கெளம்பிட்டாரு. எனக்கு அப்டியே புல் அரிச்சிருச்சி..இந்த வயசுல இப்புடியா...அதும் காலைல 7 மணிக்கே...தலைவரால் மட்டுமே, தலைவருக்காக மட்டுமே நடப்பவை இவையெல்லாம்..ஆறிலிருந்து அறுபது வரை இது போன்ற ரசிகர்கள் தலைவருக்கு மட்டுமே...

7.30 மணிக்கு பசங்கலாம் வந்தோன உள்ள போனோம்.... எல்லாரும் 1st day 1st show பாக்கதான் ஆசப்பட்டுவாங்க... ஆனா உள்ள போன அப்புறம்தான் தெரிஞ்சிது நாங்க 1st row லயே உக்கந்து படம் பாக்கபோறோம்னு...

முதல் காட்சியிலிருந்தே வித்யாசம்.. நிறைய வியப்பு...பிரமிப்பு...தலைவரின் நடிப்பில் இன்னொரு பரிணாமம்.. படம் வெளிவருவதற்கு முன்,ரோபோ அந்த படத்தின் copy, இந்த படத்தின் copy என்று சொன்னவர்கள் இனி வாய் திறக்க முடியாதபடியான திரைக்கதை. நெற்றிக்கண் படத்தில் இருந்த அந்த ரஜினியின் அதே வில்லத்தனம், தில்லு முல்லில் இருந்த அதே குறும்பு.. ஜானியில் இருந்த அதே துடிப்பு... அத்தனை காட்சியிலும் தலைவர் ஜொலிக்கிறார் ஷங்கரின் கைவன்னத்தில்.

படத்தின் கதை? சாரிங்க... அது ஷங்கரோட கதை.. நா சொன்னா நல்லாருக்காது.... நீங்களே பாத்து தெரிஞ்சிக்குங்க... இதுக்கு மேல பெஸ்ட்டா எடுக்க முடியாது.வேறெந்த படமும் இதுக்கு மேல பெஸ்ட்டா இருக்க முடியாது.

மொத row la உக்கார்ந்து பாத்ததுனால படம் முடியும் போது கழுத்து bend ஆயிருச்சி.. எந்திரிச்சி நிமித்துனாலும் கழுத்து மட்டும் சாய்ஞ்சபடிக்கே இருக்கு.

முழு திருப்தியோட படம் பாத்துட்டு வெளில வந்தோம். அப்ப அடிவயிற்றிலே ஒரு சிறிய மாற்றம்... என்ன? இயற்கை அன்னை வந்துருக்காங்க... மூணு மணி நேரம் படத்த வெறிக்க வெறிக்க பாத்ததுல உச்சா போக மறந்துட்டேன்.. செரி rest room போயிட்டு, போயிட்டு போவோம்ன்னு போனேன். உள்ள போயி வாஷ் பேசின் பக்கத்துல நிக்கும் போது என் தோள்ல ஒரு கை விழுந்துச்சி.. திரும்பி பாத்தா என்கிட்டடிக்கெட் கேட்ட அந்த அண்ணேன்.

" தம்பி டிக்கெட் வாங்கிட்டேன்.. வெளில ஒருத்தரு குடுத்தாறு...600 ருவா தான்" ன்னாறு..

"ஆ... ஆ... ஆறுனூருவாதானாண்ணே... ரொம்ப சந்தோஷம்ணே"ன்னு வெளிய வந்து காலைல என்டபோன் பண்ண சொன்னவருக்குphone பண்ணி சொன்னேன்... " சார்... படம் நிஜமாவே தாரு மாறு சார்.... தல பிண்ணிருக்காரு."

"தம்பி..ரஜினி fan ங்குறதுக்காக சொல்லாதீங்க... ஷங்கருக்காக சொல்லதீங்க.. உண்மைலயே படம் எப்புடி இருக்கு?"ன்னாறு

"இதுல பொய் சொல்ல என்ன சார் இருக்கு... படம் 100 நாள் ஓடும் சார்.. இங்க இல்ல US லயே நூறு நாள் ஒடும்" ன்னேன்

"அப்பா.... இந்த நல்ல செய்தியை சொன்ன நீ வாழ்க... நின் குலம் வாழ்க.. உன் புகழ் ஓங்குக" ன்னு சொல்லிட்டு வச்சாரு,எனக்கு திரும்பவும் புல்லரிக்க ஆரம்பிச்சிருச்சி...

திரையிடப்படும் முன்பு உலகத்தையே திரும்பி பார்க்க வத்த இந்த ரோபோ, இனி அனைவரயும் விரும்பி பார்க்கவைக்கும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...