Thursday, December 30, 2010

கனவு மெய்ப்பட வேண்டாம்


Share/Bookmark
கனவுங்குறது எப்ப வரும், எப்புடி வரும், ஏன் வரும்னு யாருக்குமே தெரியாது.ஆனா தூங்குறப்ப மட்டும் தான் வரும்தான் வரும்னு எல்லாருக்குமே தெரியும். வழக்கமா நமக்கு வர்ற கனவு எல்லாமே தூங்கி எந்திரிக்கும்போது ஏதோ லைட்டா ஞாபகம் இருக்க மாதிரி இருந்துட்டு கொஞ்ச நேரத்துல மறந்து போயிடும். ஆனா எனக்கு வந்த ஒரு கனவ அது மாதிரி மறக்க முடியல.. இதுல பெருசா ஆரம்பம், முடிவுன்னு எதும் இல்லைன்னாலும், கொஞ்சம் வித்தியாசமா நல்லா இருந்துச்சி. அதுனால இங்க பகிர்ந்துக்கிறேன். "இந்த பதிவுல வெள்ளை கலர் எழுத்துல உள்ளத்தெல்லாம் நிஜம்... புளு கலர் எழுத்துல உள்ளதெல்லாம் கனவு" அப்புடின்னு S.J.சூர்யா மாதிரி சொல்ற அளவுக்கு இது ரொம்ப பெரிய கனவு இல்லீங்க.... ரொம்ப சின்ன கனவுதான் பாருங்க.ச்சீ.... படிங்க...

கிட்டத்தட்ட மூணு வருஷம் பட் ரோடு ஏரியால இருந்துட்டு, ரெண்டு மாசம் முன்னாடிதான் நானும் என்னோட friends um  ராமாபுரத்துல ஒரு வீடு பாத்துகிட்டு போனோம். வீடு shift பண்ணி 15 நாள் ஆகி இருந்தாலும் நா ஒரு நாள் கூட அந்த வீட்டுல தூங்கல. ஊர்ல போயி டேரா போட்டுட்டு ஒரு நாள் திரும்பிவந்தேன்.எல்லாரும் கெளம்பி கம்பெனிக்கு போயிட்டாயிங்க.எனக்கு கொஞ்சம் களைப்பா இருந்ததனால, சரி கழுத ஒரு அரை நாள் லீவ போடுவோமேன்னு கொஞ்சம் அசதில தூங்கிட்டேன். கனவு start...

நா படுத்துருந்த ரெண்டாவது பெட் ரூம் ஜன்னல் கதவ யாரோ தட்டுனாங்க. அந்த ஜன்னலுக்கு பின்னாடி வெறும் செங்க கல்லும், ஒரு குட்டி compound சுவரும் தான் இருக்கும்.. அந்த பக்கம் வந்து ஜன்னல் கதவ தட்டுறது யாருன்னு நெனச்சிகிட்டேஜன்னல தொறந்தேன்.

வெளில ஒரு பொண்ணு. நீளமான முகம். கண்ணாடி போட்டுருந்துச்சி. ரொம்ப கலரா இல்ல..லைட் கருப்பா இருந்துச்சி.

"என்ன? யார் வேணும்"" ன்னேன்

"வீட்டுக்குள்ள வரனும்...... கதவ தொறங்க" ன்னுச்சி.

நா நேரா போயி, வீட்டு கதவ தொறக்க, வெளில ஒரு பொண்ணு. ஜன்னல்ல வந்த  பொண்ணு இல்ல. இது வேற. நல்ல கருப்பான,Round முகம். கண்ணாடி போட்டுருக்கு. ஆனா அதுக்கு கால் நடக்க முடியல. சொல்லப்போனா காலே இல்லன்னு சொல்லலாம். போலியோ attack ஆன மாத்ரி இருந்துச்சி.  ரெண்டு காலையும் மடிச்சி சம்மனக்கால் போட்ட மாதிரி வச்சிக்கிட்டு கைய ஊனிக்கிட்டே   உள்ள வந்து ஹால் ல கிழக்கு பக்கம்  பாத்தா மாதிரி  உக்காருது. நா  எதுக்க உக்கார்ந்தேன்.

கொஞ்ச நேரம் போனப்புறம் அது கண்ணுலருந்து, அவ்ளோ கண்ணீரு."எங்க வீட்டுல ரொம்ப கஷ்டம்ன்னு ஆரம்பிச்சி, நாம பஸ்ல பாக்குற பசங்க சொல்ற மாதிரி அப்பா இல்லை, அம்மாக்கு உடம்பு சரி இல்லை எதாது உதவி பண்ணுங்க"ங்குறமாதிரி ஏதேதொ சொல்லி ரொம்ப நேரம் பேசுது....

எல்லாத்தையும் நா கேட்டுகிட்டே இருக்கும் போது, திடீர்னு ஒண்ணு கவனிச்சேன்.அந்த பொண்ணு பேசுதே தவற அதோட வாய் அசையவே இல்ல. ஆனா அது பேசுறது என் காதுல நல்ல கேக்குது. உள்ளுக்குள்ள பயத்தோடவே

"என்னங்க... நீங்க பேசுறது எனக்கு கேக்குது, ஆனா... உங்க வாய் அசையவே இல்லையே.. உங்களால பேச முடியாதா?"

"ஆமா என்னால பேச முடியாது"

பேச முடியாதுன்னு சொல்றது கூட என் காதுல கேக்குது ,
" நீங்க பேசலன்னா அப்புறம் எப்புடி எனக்கு கேக்குது?"ன்னு கேட்டதுக்கு,

"உங்களுக்கு கேக்குறது எல்லாமே நான் என்னோட டைரில எழுதி வச்சிருக்கது" ன்னு அது சொல்ல எனக்கு திடுக்குன்னு முழிப்பு வந்துருச்சி.

மொத நாள் படுக்கையிலயே இப்புடி ஒரு கனவான்னு நெனச்சிக்கிட்டு,அன்னையிலருந்து நா அந்த ரூம்ல தனியா படுக்குறதே இல்ல.

அப்புறம் ஒரு நாள் இந்த கனவ எங்க அம்மாட்ட சொன்னப்ப, அதுக்கு அம்மா ஒரு காரணம் சொல்ல, அதுவும் கிட்ட தட்ட கரெக்டா தான் இருந்துச்சி.

Monday, December 27, 2010

எந்திரனில் கவுண்டர் நடித்திருந்தால்


Share/Bookmark
சூப்பர் ஸ்டார் நடித்து, ஷங்கர் இயக்கிய எந்திரன் இப்போ அசத்தலான நூறாவது நாள நோக்கி போயிக்கிட்டு இருக்க, இந்த சமயத்துல அதே எந்திரன் படத்துல தல கவுண்டர் நடிச்சிருந்தா எப்புடி இருந்துருக்கும்? எந்திரன் காட்சிகளில் சில உங்களுக்காக.இந்த பதிப்புல வர்ற வசனங்கள் யாவும் நகைச்சுவைக்காகவே. யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.

டாக்டர் வடக்குபட்டி ராமசாமிங்குற கவுண்டர், குட்டிங்குற ரோபோவ (செந்தில்) உருவாக்குறாரு. அத ஆண்டிப்பட்டி பஞ்சாயதார் முன்னாடி அறிமுகம் செஞ்சி வைக்கிறாரு.

இந்தா நிக்குதே நெல் அவிக்கிற சட்டி கலர்ல. இது பேருதான் குட்டி. பன்றி உருவம்  கொண்ட ரோபோ. He is none other than my மெக்கனிக் ஷாப்'ஸ் க்ரியேஷன்.

செந்தில்: ஹாய்... ஐ யாம் குட்டி... the robo.. Speed 5 km/hr.. 2GB in built memory ..
8GB extendable memory.

இவனுக்கு ஆண்டிப்பட்டில உள்ள அனைத்து மொழிகளும் தெரியும்

"அண்ணன் மொழி தமிழ்"

He can fight...

"வவ்.... வவ்வ்.... வவ்வவ்""

he can dance

"அவா அவா.... அவவா... அவவா... அவா அவா"

நம்ம ஊர்ல எந்த வீட்டுல, எந்த கொழம்பு வச்சாலும் இது கண்டுபுடிச்சிடும். இவனோட வாயி பேசுறதுக்கு மட்டும் இல்ல. திங்கிறதுக்கும் தான்.நூறு பேரோட வாயும் வயிறும் இவனுக்கு program பண்ணப்பட்டு இருக்கு.நாம நூறுபேர் சாப்டுற சாப்பட்ட இது ஒரு ஆளே திண்ணுறும். இப்போ இவன யாராவது கேள்வி கேக்குறதுன்னா கேக்கலாம்.


கூட்டத்திலருந்து ஒரு நபர்,

குட்டி, சிம்பிளா ஒரு கேள்வி கேக்குறேன். 362437 ஃபிபெனோசி நம்பரா?

செந்தில்: அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க. by the by அது மூணாவது தெரு சுப்ரமணி wife oda.....

கவுண்டர்: அய்யயோ... ... ஏன்பா உனக்கு கேக்குறதுக்கு வேற நம்பரே இல்லையா...வேற எதாவது கேளுங்கப்பா....

கூட்டத்துலருந்து இன்னொருத்தர்,

உனக்கு தெரிஞ்ச Prime Ministers பேரு ரெண்டு மூணு சொல்லு...

செந்தில்:
243422224446466486383939838893389212127761212652256652556
21771278273123982378913791334897549058309583409583058045895034850
345049589304958049583049594580348509409583048954...........23984093840
3498209482094892..... 0798234982789 M forty four...இது சரியான்னு பாக்க உங்களுக்கு சில வருஷங்கள் ஆகும்.

கவுண்டர்: குட்டிமா.. உனக்கு பதில் தெரியலன்னா தெரியலன்னு சொல்லிரும்மா. இப்புடி சம்பந்தம் இல்லாம எதாவது சொன்னா இவனுக என் காத கடிச்சி வச்சிருவானுக...

கூட்டத்துலருந்த்து இன்னொருத்தர்,

ஆஹ்ஹா...... ஆஆ....ஆஆ....ஆஆ....ஆஹஹ்ஹாஆ.........

செந்தில்: நாட்டுகுறிஞ்சி பாருறேன்னுட்டு உசேரிக்கு போயிட்ட்டீங்க. நடுவுல
 ஆஹ்ஹ் இந்த இடத்துல சுதி வெலகிருச்சி.

நபர்3: ஏண்டா ஆப்ரிக்கா கொரங்கே... நா கட்டெரும்பு கால்ல கடிச்சிருச்சேன்னு அலருறேன்... இதுல உனக்கு சுதி வெலகாம வேற கத்தனுமா? செருப்பு  பிஞ்சிரும்.

கவுண்டர்: அய்யய்யோ.... டேய் மண்டையா.. கேக்குற கேள்விக்கு மட்டும பதில் சொல்லுடா... இப்புடி அதிக பிரசிங்கி தனமா எதாவது பண்ணி நா விஞ்ஞானி ஆவுறத தடுத்துடாதடா....

நபர்4: கடைசியா ஒரு கேள்வி. ப்ரபாகரன் உயிரோட இருக்கரா இல்லையா?

செந்தில்: பிரபாகரன்னா யாரு?

நபர்4: ஈழத் தமிழர்களுக்காக பாடுபட்டவரு. ராஜபக்ஷேவ எதிர்த்து நின்னவரு.

செந்தில்: எனக்கு தெரிஞ்சி ராஜபக்ஷேவ எதிர்த்து குரல் குடுக்குறது இப்பவும் எங்க அண்ணன் வடக்குபட்டி ராமசாமி தான்......(கவுண்டர நோக்கி கைகாட்டி)

"ப்ரபாகரன் இருக்காரு...."

கவுண்டர்: ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்.... அய்யா.. அம்மா... இந்த கருநாயி பொய் சொல்லுது....அது நா இல்லிங்க... சத்தியாமா நா இல்லிங்க..எனக்கு தலையெல்லாம் சுத்துதுடா சாமி...இந்த விஷயம் மட்டும் அந்த ஆளு காதுக்கு போனுச்சி, ஒரு லாரி நெறயா துப்பாக்கியோடஎன்ன சுடுறதுக்கு ஆள் அனுப்பிடுவான்...மெக்கானிக் ஷாப்ல ஷட்டர போட்டு மூடுங்கடா.....

தொடரும்.....

Wednesday, December 22, 2010

முதல் வெற்றிப்பட இயக்குனர்கள்


Share/Bookmark சசிகுமாரின் ஈசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யாத நிலையில் எல்லாரும் "சசிகுமார் கிட்ட இத எதிர்பாக்கல" "ச்ச மொத படம் இப்புடி குடுத்துட்டு ரெண்டாவது படத்துல இப்புடி பண்ணிட்டாரே" ன்னு எங்க பாத்தாலும்  ஒரே விமர்சனங்கள். எதோ சசிகுமார் வரிசையா பத்து படம் ஹிட் குடுத்துட்டு பதினொறாவது படத்துல சொதப்புன மாதிரி எல்லாரும் பேசுறாங்க.

சுப்ரமணியபுரத்திலும் சசிகுமார் பெரிதாக எதுவும் செஞ்சிடல. வழக்கமா எல்லா டைரக்டருங்களும், ஒரு low budjet படத்த ஹிட்டாக்க என்ன செய்வாங்களோஅததான் சசிகுமாரும் பண்ணியிருந்த்தாரு, பருத்திவீரன் படம் மாதிரியே. இந்த ரெண்டு படத்துலயுமே, climax ah தவிர்த்து பாத்த, மிக சாதாரணமான படங்களே. அதாவது ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்கும், சாதாரணமான களத்துல பயணிக்கிற கதை, கடைசியில் ஒரு குரூரத்தில் முடியும். கண்டிப்பா அது ஹீரோ, இல்லன்னா ஹீரோயின் அல்லது ரெண்டு பேரோட மரணத்தில் முடியிறதாகவே இருக்கும். இப்போது ஓடிகிட்டுருக்கிற மைனாவும் இதே வகைதான்.

அதைவிட சுப்ரமணியபுரத்துல சசிகுமார் ரசிகர்களை, கவர ரொம்ப சூப்பரா ஒரு ட்ரிக் யூஸ் பண்ணிருப்பாரு. லவ் பண்ண பொண்ணு ஏமாத்திட்டா.... "பெண்களை நம்பாதே"ங்குற கருத்தே படத்தோட இறுதியில மேலோங்கியிருக்கும்.. நம்ம ஊர்ல இந்த "பெண்களை நம்பாதே" குரூப் நெறய பேரு இருக்காய்ங்க... பொண்ணுங்கள பத்தி தப்பா எதாது டயலாக் வந்தாலே விசிலடிக்கிற குரூப்பு.. இவிங்க யோக்கியம் மாதிரி.அதோட அந்த படத்தின் கதையும் அவரோட கற்பனையில் உருவானதாக தெரியல.. சில உண்மைச் சம்பவங்களின் கோர்வையாகவே இருக்கனும்.

அதை கொஞ்சம் புதுமையாக்க கதை 1980ல நடக்குற மாதிரி கதைக்களம் அமைச்சிருந்தாரு. காதல் காட்சிகளுக்கு பிண்ணயில் பழைய ஹிட்டான பாட்டு போட்டு அதை ஒப்பேத்தியிருந்தாரு. இந்த மாதிரி காட்சிங்க இப்போ இன்னொரு ட்ரிக். எதுவும் எடுக்க வரலன்ன, baground la எதாவது பழைய ஹிட்டான பாட்ட போட்டா, அந்த காட்சி நல்லா இல்லன்னாலும் பாக்குறவங்களுக்கு atleast சிரிப்பாவது வரும். இப்புடி சசிகுமார் இளைஞர்கள் மத்தியில ஒரு புதுமை புரட்சி இயக்குனரா அவதாரம் எடுத்தாரு.

அவர் ஹீரோவா நடிச்ச நாடோடிகளும் அதே போல் ஒரு புதுமையான கதை. இதுவரை யாரும் பார்க்கத ஒரு புது கோணத்தில் நண்பர்களை பத்தி சொல்லியிருந்தாங்க. கண்டிப்பாக அந்த கதையும் அவர்களின் கற்பனையில் உருவானது அல்ல என்பது உறுதி. எங்கோ நடந்த உண்மை சம்பத்தின் அதிகபட்சவெளிப்படே அது. முதல் படம் எடுத்து இரண்டு வருஷம் ஆகியும், அவரால அந்த படத்தின் தாக்கத்தை ஏற்படுதுற மாதிரியான கதையை (தேடி) பிடிக்கமுடியாமலேயே இதுபோலான ஒரு பிடிமானமில்லாத ஒரு கதையை உருவாக்கியிருக்காரு. அமீருக்கு கூட பருத்திவீரனுக்கு அப்புறம்  எந்த படமும் இன்னும் வரலங்குறது இன்னொரு வருத்தமான விஷயம்.

முதல் படத்தில் தனது முத்திரையை பதிக்கனும்னு வர்ற இயக்குனருங்க, முதல்ல தேர்வு செய்யிறது இது போல உண்மை சம்பவங்களை அடிப்படையாக  கொண்ட கதையா தான் இப்போ இருக்கு. அதிலயும் எல்லோரயும் திரும்பி பாக்க வைக்கனும்னா கடைசில கண்டிப்பா கொடூரமா எதாவது நடக்கனும் அப்புடிங்குறதுல கரெக்டா இருக்காங்க. அவுங்க இந்த மாதிரியான கதையை தேர்வு செய்ய இன்னொரு காரணம் தயாரிப்பாளர்கள். ஒரு இயக்குனரோட முதல் படத்துக்கே 30 கோடி பட்ஜெட்ல படம் எடுக்க எந்த தயாரிப்பாளரும் தயாரா இருக்க மாட்டாங்க.

ஆனா இதுபோலான உண்மை சம்பவங்களை படமாக்குறேன், இயல்பா நடக்குறத எடுக்குறேன்னு சொல்லிகிட்டு இருக்க இயக்குனருங்களுக்கு, கற்பனைவளம் குன்றி தானாக எந்த கதையையும் யோசிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுறாங்க என்பதே உண்மை. .இப்போ சமீபத்துல ஹிட்டான "களவானி" படம் கூட இதை ஒத்ததே. எங்க ஊரு பக்கம் (ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை) என்ன நடக்குதுங்குறத அப்புடியே படம்மெடுத்துருக்கரு சற்குணம். இது அவர் சின்ன வயசுலேருந்து பாத்து பழகிய ஊரும், ஊர் மக்களோட வெளிப்படுமே. கற்பனை காட்சிகள் என்று அதில் எதுவுமே இல்லை. அவர் இதேபோலான இன்னொரு கதையை தேடிகிட்டு இருப்பாரு இப்போ. கண்டிப்பா அவரு அடுத்த படம் எடுக்க ரொம்ப நாள் ஆகும்.

இதனாலயே பல இயக்குனருங்க, ரெண்டு மூணு படத்துலயே காணாம போயிடுறாங்க.சினிமா துறையில உள்ள நுழையிறது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் துறையில் நிலைத்து நிற்பது. சினிமாவை சினிமாவாக எடுக்குறவங்கதான், திரைத்துறைய நீண்ட காலமா ஆட்சி செஞ்சிகிட்டு இருக்காங்களேயொழிய, உண்மையை எடுக்குறேன்... இயல்பான சினிமா எடுக்குறேன்னு சொன்னவங்க இல்லை.

இவ்வளவு படம் எடுத்தும், இப்போதும் எந்த இடைவெளியும் இல்லாம தொடர்ந்து படம் எடுத்துகிட்டு இருக்கும் k.s.ரவிகுமார், சுந்தர்.C, ஷங்கர் எல்லாருமே கற்பனை கதை, கற்பனையான காட்சிகள் போன்றவற்றினாலேயே இன்னும் திரைத்துரையில் நிலைச்சி நிக்குறாங்களே தவற இயல்பான சினிமாவினாலேயோ, உண்மைகதைகளை படமாக்கியாதலோ அல்ல. (A.வெங்கடேஷ கூட இந்த லிஸ்டுல சேத்துக்கலாம்...ஹி ஹி).

எப்போதாவது செய்தால் தான் வித்தியாசமான முயற்சி. எப்போதும் அதை போலவே செய்ய நினைத்தால் வீண்முயற்சியாகவே செல்லும் இது மாதிரியான இயக்குனர்கள் சில இயக்குனர்களுக்கு புரிந்தால் சரி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...