Wednesday, August 5, 2009

ஹலோ.... யாரு தன்ராஜா...


Share/Bookmark
கல்லூரி வாழ்கைல எவ்ளோதான் பொழுதுபோக்கு இருந்தாலும் அடுத்தவன வம்பிழுத்து அவன கலாய்கிறதுல இருக்க சொகமே தனிதான்.அதுலயும் எதாவது ஒரு தெரியாத நம்பருக்கு call பண்ணி அவங்கள சுத்த விடுறதுல தான் என்ன ஒரு ஆனந்தம்.இதுல சில நேரம் இடம்தெரியாம வம்பிழுத்து வாயில புன்னோட போறதும் உண்டு.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி BPL sim கார்டு ( தற்பொழுது vodafone) காலேஜ் வாசல்ல பத்து ரூபாய்க்கு மூணு னு கூட இல்லாம, பிள்ளயார் கோயில் ல உண்ட கட்டி தர்ற மாதிரி எல்லாரையும் வரிசையா நிக்க வச்சி free யாவே அள்ளி வழங்குனாய்ங்க. எந்த proof um தேவையில்ல. College ID card ah காட்டினாலே போதும். மொபைல் இல்லாதவன் கூட பின்னாடி யூஸ் ஆகுமேன்னு ஆளுக்கொண்ணு, அப்புறம் அவனோட "ஆளுக்கு" ஒன்னு னு வாங்கி வச்சிகிட்டானுங்க . இதுல இன்னொரு நல்ல விஷயம் என்னன்னா நைட் 10 மணியிலேர்ந்து காலயில பத்து மணி வரைக்கும் BPL to BPL free.

இதுல எப்புடியோ ஒரு சிம் கார்டு எங்க ரூம் கு வந்துடிச்சி. அது எவன் பேர்ல இருக்குன்னு கூட எங்களுக்கு தெரியாது. ஒரு பொருள் நம்மகிட்ட வந்துட்டாலே அப்புறம் அது நம்மோடது மாதிரி தான. அதுனால அந்த சிம் கார்டுக்கு நாங்களே அடைக்கலம் குடுத்து வச்சிருந்தோம். பத்து மணி வரைக்கும் எவனுக்காவது sms அனுப்பி வெளாடுவோம். இதுல சில நேரம் எங்க காலேஜ் பசங்களுக்கே தெரியாம அனுப்பிடுவோம். ஆனா அவன் எங்க காலேஜ் பையன்தான்னு மொத reply லயே தெரியும்.

"Hi" அனுப்புனா கொஞ்சம் கூட யோசிக்காம
"எவ புருசன்டா நீ?" னு reply பண்ணுவானுங்க. உடனே இவன் நம்ம பய ன்னு கண்டுபுடிச்சிடலாம்.

பத்து மணி வரைக்கும் ஒழுங்கா இருந்துட்டு அதுக்கப்றம் வேலைய ஆரம்பிச்சிடுவோம். குத்து மதிப்பா எதாவது ஒரு BPL நம்பர் டயல் பண்ணா எவனாவது எடுப்பான். அவன்ட சம்பந்தம் இல்லாம எதாவது பேசுவோம். சில பேர் கடுப்பயிடுவானுங்க. சில பேர் சிரிச்சிகிட்டே வச்சிடுவானுங்க.

ஒரு நாள் கரக்டா ஒரு 11.30 மணி இருக்கும். எதோ ஒரு நம்பெருக்கு கால் பண்ணேன். call ah attend பண்ண உடனே
" மாப்ள ரிசல்ட் வந்துடுச்சி... உனக்கு நாலு பேப்பர் அவுட்டு" ன்னு கொஞ்சம் பரபரப்பா சொன்னேன்.. கொஞ்ச நேரம் பதிலே வரல. அப்புறம் முதல் மரியாதையை சிவாஜி ஸ்டைல் ல

" தம்பி...... யாருப்பா நீ..... என்ன பிரச்சன உனக்கு..." ன்னு பதில் வந்துச்சி

"டேய் நீ பெயில் ஆயிட்டன்னு சொல்றேன் ... வாய்ஸ் மாத்தி mimicry பண்றியாடா நாயே..." ன்னேன்.
"டேய் யார்டா நீ....நாயே... நாயே...வந்தேன்னா சங்க கடிச்சிடுவேன்... ஒழுங்கா phone ah வச்சிரு" ன்னு சொன்னான் கொஞ்சம் கரகரப்பான்குரலில்.

"இப்புடி அன்பா சொன்னா வச்சிட்டு போறேன்.... அடபோங்கண்ணே....எல்லாத்துக்கும் கோவபடுவாறு" ன்னு சொல்லிட்டு வச்சிட்டேன்.

இன்னொரு நாள் இதே மாதிரி இன்னொரு நம்பருக்கு கால் பண்ணி
"மச்சி... ரொம்ப அவசரம்.... உடனே ஒரு ஐயாயிரம் ரூபாய எடுத்துகிட்டு கோத்தகிரி பெண்டுக்கு வந்துரு... " ன்னேன். அவன் எந்த பதட்டமும் இல்லாம
"சரிடா மாப்ள.... ஐயாயிரம் போதுமா?" ன்னு கேட்டான். "இத மொதல்ல கொண்டு வாடா" ன்னேன்.
"டேய் நாயே! நாலு பேர்ட நாங்க பண்ற வேலைய எங்ககிட்டயே நீ பன்றியா? வந்தேன்னா பிச்சிபுடுவேன்.எங்கருந்துடா பேசுற?" ன்னான்.

"அண்ணா...அவ்வளவு செரமம் எல்லாம் உங்களுக்கு வேண்டாம்னா... நானே பிச்சிக்கிறேண்ணா ... கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்றேன்னா... ஒலகத்துலையே ரெண்டே அறிவாளிங்கண்ணா .... ஒண்ணு நா..."

"இன்னொன்னு யாருடா?"
"அதுவும் நாந்தாங்கண்ணா... " ன்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டேன்.

பொதுவா ஆப்பு கண்ணுக்கு தெரியாதுன்னு சொல்லுவாங்க.... அதேமாதிரிதான் எனக்கும் மொதல்ல ஏதும் தெரியல... sim card நம்ம பேர்ல இல்ல... என்ன பண்ணிடுவாங்க ன்னு நெனச்சிட்டு இருந்தேன்.

வழக்கம் போல ஒருத்தனுக்கு நைட் கால் பண்ணி எக்கச்சக்கத்துக்கு பேசுனோம். அவனும் ஒரு கல்லூரி மாணவன் என்பது பேச்சிலேயே தெரிஞ்சுது. அவனும் கொஞ்சம் form ல இருந்துருப்பான் போல... கடைசில கடுப்பாயி கட் பண்ணிட்டன்... வழக்கமா நாங்க கால் பண்ணி பேசுன எவனும் எங்களுக்கு திரும்ப கால் பண்ண மாட்டனுங்க... அன்னிக்கு கொங்சம் வித்யாசமா அந்த நம்பர்ல இருந்து மறுநாள் திரும்ப கால் வந்துச்சி...
attend பண்ணி "சொல்லுடா மாப்ள.. எப்புடி இருக்க " ன்னேன்.
அதுக்கு அவன் "நா நல்லாருக்கேன் மச்சி... ஆமா ராஜா ங்குறது யாருடா.." ன்னு கேட்டான்.
"பக்கத்து ரூம் ல ஒரு வெட்டி முண்டம் அந்த பேர்ல இருக்கான்... ஆமா நீ ஏன் கேக்குற.. "
"இல்ல உன்னோட நம்பர் ah trace பண்ணிட்டேன். அது அந்த பேர்ல தான் இருக்கு... அதன் கேட்டேன்... " னு அசால்டா சொன்னான்...
"எப்புடி trace பண்ண?" னு கேட்டேன்.

"மவனே யார்ட உன் வேலைய காட்டுற ... உன்னையெல்லாம் ஓட விட்ட தண்டா சரியாவரும்... இன்னும் கொஞ்ச நேரத்துல உன்ன தூக்குறேண்டா... " ன்னு சொன்னான்.

"சாரி சார்.அப்புடியெல்லாம் பண்ணிடாதீங்க... நாங்க சும்மா வெளையாட்டுக்கு தான் பேசுனோம் ...."ன்னேன்.

"என்னடா வெளையாட்டு.. எத்தன பேர்டா இப்புடி கெளம்பி இருக்கீங்க.... காரைக்குடி காலேஜ் ல தானடா படிக்கிறீங்க... உன்ன எல்லாம் போலீஸ் ல புடிச்சி குடுக்கனும்டா..." நேரம் ஆக ஆக பேச்சுல கொலைவெறி அதிகமாயிடுச்சி ... எனக்கு பீதி அதிகமாயிடுச்சி.... lite ah வியர்வை வேற...

" சாரி சார்.தெரியாம பண்ணிட்டேன்... நீங்க யாரு சார் ?" ன்னு கேட்டேன்...

" நா காரைக்குடி police station லருந்து பேசுறேன்னு" அவன் சொன்ன அதே நேரம் கீழிருந்து என் நண்பன் என்னை சத்தம் போட்டு கூப்பிட்டான்.. அவனுடைய குரலை phone இல் என்னால் கேட்க முடிந்தது....
"ஆஹா... நம்ம ஹாஸ்டல் ல இருந்து தான் எவனோ நம்மள கலாய்கிரானா.... ச்ச... இது தெரியாம ஓவரா பம்பிட்டோமே " ன்னு நெனச்சுகிட்டு
"சார் நீங்க எங்கருந்து பேசுறீங்க?"
"அதான் சொன்னேனேடா... காரைக்குடி police station லருந்து பேசுறேன்..."

"சார் நீங்க ஒன்னு பண்ணுங்க... நீங்க இருக்குற எடத்த விட்டு நேர எழுந்து வந்து நொட்டாங்கை பக்கம் திரும்பி கொஞ்ச தூரம் போநீங்கன்ன... அங்க ஒரு பஸ் ஸ்டாப் இருக்கும்... அதுல் ஒரு தீஞ்ச மண்ட உக்கார்ந்து இருப்பன்.. அவன்ட பொய் சொல்லுங்க அவன் நம்புவான்" ன்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டேன்.

"நம்ம கொஞ்சம் ஓவரா போறோமோ... போவோம்..."ன்னு நெனச்சிக்கிட்டு திரும்புனா, ஒருத்தன் ரொம்ப நேரமா என்ன watch பண்ணிக்கிட்டு இருந்திருப்பான் போல... அவன் மெதுவா என் பக்கத்துல வந்து

" த்து... இதெல்லாம் ஒரு பொழப்பு..."ன்னு சொல்லிட்டு போய்ட்டான்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...