அரசியலில் ரஜினியும் விஜய்யும்!!
----------------------------------------------------------------
ரஜினி அரசியலுக்கு வரப் போவதாக கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாகப் பேச்சு இருந்தது. இருந்தாலும் அவரின் வளர்ச்சிக்கு அந்த அரசியல் கட்சியும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மீடியாக்களும் தொடர்ந்து துணை நின்றன.
இதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம். ஒன்று ரஜினி வரமாட்டார் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை.
அடுத்து ஒரு வேளை வந்தாலும் நமக்கு துணையாக நின்றால் அது நமக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்கிற எண்ணம்
மூண்றாவது 96 தேர்தலில் உதவிய ரஜினிக்கான கைமாறு.
அதேபோல ரஜினியும் அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் அவர்களுக்கு எதிரான எந்த பெரிய செயலிலும் ஈடுபடவில்லை.
யோசித்தார். யோசித்தார். பல வருடமாக யோசித்தார். இறுதியில் அரசியலுக்கு வர முடிவெடுத்தார். அதைவிட முக்கியமாக அவர்களுக்கு எதிரான அரசியலில் ஈடுபட முடிவெடுத்தார்.
அவர்கள் வேலையைக் காட்டத் தொடங்கினார்கள். ரஜினி வராமலிருக்க என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்தார்கள். ஒருவேளை வந்துவிட்டால் என்னென்ன செய்ய வேண்டுமோ அதையும் தயாராக வைத்திருந்தார்கள். அதில் ஒன்றுதான் ஆண்டவரின் அரசியல் பிரவேசம். ஆண்டவரை வைத்து பெரிதாக எதுவும் செய்யமுடியாது என்பது அவர்களும் அறிந்ததே.
ஆண்டவர் வெறும் சோதனை முயற்சி. ஒரு வேளை ரஜினி கட்சி தொடங்கிவிட்டார் என்றால் அவருக்கு எதிராக விஜய்யை களமிறக்கி முடிந்த வரை ரஜினி எஃபெக்டை சமன் செய்ய முயற்சித்ததாகக் கேள்வி. விஜய் கட்சி தொடங்குவதற்கான அத்தனை வேலைகளையும் அப்போதே தொடங்கி முக்கால்வாசி முடித்துவிட்டகாகவும் பேச்சு இருந்தது. எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.
அவர்களுக்கு எதிராக ரஜினி அதிகபட்சம் மூன்று வருடம் தாக்குப் பிடித்தார் எனலாம். "வர்ட்டா மாமே.. டுர்ர்ர்" என அரசியல் முடிவை மாற்றிக் கொண்டார். மீண்டும் அரசியல் பக்கம் வரப் போவதே இல்லை என தெளிவாகவும் கூறி, சினிமாவில் முழு நேரக் கவனம் செலுத்தினார். ரஜினியின் கிராஃப் மீண்டும் உயர்ந்து இன்னும் உச்சத்திற்குச் சென்றிருக்கிறது. சோஷியல் மீடியா தவிறப் இப்போதெல்லாம் ரஜினி பற்றிய எதிர்மறைச் செய்திகளை எந்த ஊடகமும் வெளியிடுவதில்லை.
இப்போது விஜிணாவின் கதைக்கு வருவோம். ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று தன் வாயால் உறுதிப்படுத்திய பின்னரே ரஜினிக்கு character assassination தொடங்கியது.
ஆனால் விஜய் அரசியலில் குதிக்கப் போகிறார் என்று அரசல் புரசலாக செய்தி பரவும் போதே ஏன் அவர் மீது தாக்குதல் தொடங்கியது?
காரணம் ரஜினி அதிகம் யோசிப்பவர். சுற்றி எத்தனை பேர் ஏற்றிவிட்டாலும் அசைந்து கொடுக்காதவர். ஆனால் விஜய் அப்படியல்ல. அப்படியே எதிர்மறை.
பத்துவருடம் முன்னரே விஜய் தரப்பு அம்மாவிடம் கூட்டணிக்குச் சென்று பேரம் படியாததால் வெளிவந்தது அனைவருக்கும் தெரியும். ஒரு வேளை ஒரு ஆர்வக் கோளாறில் விஜய் தொபுக்கடீர் என்று அரசியலில் குதித்துவிட்டால்? அது என்ன மாதிரியான விளைவைத் தரும் என்று யூகிக்க முடியாது. அதனால் முளைப்பதற்கு முன்னாலேயே கிள்ளி விட முயற்சிக்கிறார்கள்.
ஏற்கனவே சொன்னதுபோல ரஜினி தெளிவானவர். சுயமாக யோசிப்பவர். பேசுபவர். அவரையே மூன்று வருடத்தில் கடையைக் காலி செய்ய வைத்தவர்கள். விஜிமா ஒரு குழந்தை. என்னென்ன செய்யப்போகிறார்களோ?
இதையெல்லாம் தாண்டி, விஜய் கட்சி ஆரம்பித்து, ஆண்டவர் போல் அவர்களுக்கு சொம்படித்துக்கொண்டு கூடவே திரியாமல், அவர்களுடன் கூட்டணிக் குட்டையில் குழம்பாமல் தேர்தலைச் சந்திக்கும் பட்சத்தில் 👏👏👏👏
-அதிரடிக்காரன்
#Athiradikkaran #LeoAudioLaunch #Leo #Vijay