Wednesday, February 27, 2013

ஆதிபகவன் - எல்லாரும் தாழ்வான பகுதிய நோக்கி ஓடுங்க!!!


Share/Bookmark


நம்ம தமிழ் சினிமாவுல யார் யாரையெல்லாம் பெரிய டைரக்டருங்கன்னு தூக்கி வச்சிருந்தோமோ அவிங்க எல்லாரும் கொஞ்ச கொஞ்சமா நாதாரித்தனத்த காட்ட ஆரம்பிச்சிட்டாய்ங்க. உதாரணமா போனவருஷம் மிஸ்கின், பாலா, விஜய் மாதிரி டைரக்டருங்க எடுத்த படங்கள பாத்தப்போ அதுக்கு முன்னாடி எடுத்த படங்கள்லாம் இவிங்க தான் எடுத்தாய்ங்களான்னு ஒரு டவுட்ட கெளப்பி விட்டுச்சி.. அந்த வரிசையில இப்போ வந்து ஜாயிண்ட் அடிச்சிருக்காரு நம்ம அமீர். மொதல்ல மெளனம் பேசியதேன்னு ஒரு காமெடி கலந்த மசாலா படத்த கொஞ்சம் வித்யாசமா எடுத்தாரு. அப்புறம் ராம் ன்னு ஒரு த்ரில்லர் படம். அதுக்கப்புறம் பருத்திவீரன்னு கிராமப்புற கதைன்னு நல்லா எறங்கி வேல செஞ்சிருந்தாரு. 

சரிஒவ்வொரு படத்துலயும் நிறைய வித்யாசம் காமிக்கிறாரே...இதுலயும் எதோ மாஃபிஸ்கோ லவ் ஸ்டோரி காஃபிஸ்கோ லவ் ஸ்டோரின்னு  பிரியாத மாதிரி கேப்ஷன் வேற போட்டுருக்காரே. எப்புடியும் படம் நல்லாருக்கும்ங்கற நம்பிக்கையில தான் படத்துக்கு போனேன். மத்த ரெண்டு படங்களை விட மெளனம் பேசியதே  படத்த எடுத்த டைரக்டருப்பா... எதாவது பண்ணிருப்பாருன்னு போனா.... உண்மைய சொல்லப்போனா இந்த அளவு ஒரு கேவலமான படத்த கடந்த ரெண்டு மூணு வருசத்துல பாத்ததே இல்லைங்க..

படத்தோட ஒன்லைன மட்டும் கேட்டா எதோ நல்லாருக்க மாதிரி தெரியும்... ஆனா அதுக்கு நம்மாளு ஒரு கதை திரைக்கதை எழுதிருக்காரு பாருங்க... வக்காளி.. வடிவேலு மூஞ்சில காரி துப்புன கரடி கூப்டு வந்து தான் இவர டீல் பண்ண வைக்கனும். ஜெயம் ரவி தாய்லாந்துல ஒரு பெத்த டான். அவரு போட்டுருக்க கோட்டுக்கும் அவரு  வச்சிருக்க மீசைக்கும் அவரு எதோ பில்லா மாதிரி பெரிய டெரரானவர்னு நெனைப்பீங்க ஆனா அது தான் இல்லை. அவரு எப்பிடி டான் ஆனானாருங்கறதுக்கு நம்ம டைரக்டரு ஒரு ஃப்ளாஷ்பேக் வச்சிருக்காரு பாருங்க. அங்க நிக்கிறாரு.

ஜெயம்ரவியோட அப்பா ஒரு கெட்டவருன்னு அவங்க அம்மா அவர விட்டுட்டு மகன் ஜெயம் ரவியையும் மகளையும் அழைச்சிட்டு தாய்லாந்துக்கு  பொழைக்க வர்றாங்க... ஏண்டா டேய்.. பொழைக்கிறதுக்காக ஒரு தேனிலருந்து மதுரைக்கோ இல்லை ஒரு ராசக்காபார்ளையத்துலருந்து மெட்ராஸூக்கோ போறாய்ங்கன்னா சரி... பொழைக்கிறதுக்கு தாய்லாந்து போறாய்ங்களாம்.. ஏண்டா மூணு பேருக்கு  பேங்காக் போக ஃப்ளைட் டிக்கெட்டு அங்க இருக்க விசா எடுக்க ஆவுற காசே ஒரு லட்ச ரூவாய்க்கு மேல ஆவுமேடா.. அந்த காச இங்க வச்சிகிட்டு ஒரு பொட்டிக்கடை போட்டே பொழைக்கலாமேடா... அட அதக்கூட விடுங்க... தாய்லாந்துல குறிப்பா  எந்த ஏரியாவுக்கு போவாய்ங்க தெரியுமா... "பட்டாயா"... அந்த எடத்துல prostitution  தான் முக்கிய தொழிலே... நல்ல குடும்பத்துல பொறந்தவியிங்க கண்டிப்பா அந்த ஊர்ல தான போய் தங்கணும். இதுலயே டைரக்டர் டச்சு உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே.

அங்க ஜெயம் ரவி போதை பொருள் விக்கிற கும்பலோட சேந்து நெறைய பணம் சம்பாதிக்க ஆரம்பிச்சிடுறாரு. ஒண்ணும் பெருசா பண்ணல... ஒரு கஞ்சா பொட்டலத்த எடுத்துட்டு போயி ரயில்வே ஸ்டேசன் ஓரமா ஒருத்தன்கிட்ட மாத்திட்டு வர்றாரு. அவ்ளோதான் சரி ஒரு சீன்ல மட்டும் தான் இப்புடி பண்றாருன்னு பாத்தா மொத்த படத்துலயுமே டான் ஜெயம் ரவி பண்ற வேலை இந்த பொட்டி மாத்துறது மட்டும் தான். ஏண்டா நாயே இந்த பொட்டி மாத்துற வேலைக்கு உனக்கு கெத்தா ஒரு மீசை... ஒரு கோட்டு... ஒரு துப்பாக்கி...அந்த மீசைய மழுங்க வழிச்சிட்டு அக்கிள்ல ஒரு மஞ்சப்பைய சொருகி வச்சிருந்தாலே கரெக்டா இருந்துருக்கும். அதுவும் அந்த கோட் போட்டுருக்கும் போது எதோ கையில கான்கிரீட் போட்டு விட்ட மாதிரி நீட்ட மாட்டேங்குறாரு மடக்க மாட்டேங்குறாரு... கெத்தாமா...

டயலாக் பேசுறாரு பாருங்க... செம மொக்கை... சும்மா டயலாக் பேசுனாலே செம்ம காமெடியா இருக்கும்... இதுல "ஆ அப்புடியா" ங்க்குற டயலாக்க நம்மாளு..."ஆஆஆ.... அப்ப்..ப்பு...டியாஆ" ங்குற மாதிரி செம்ம ஸ்லோவா பேசுறாரு... டைரக்டர் சொல்லி  குடுத்துருப்பாரு போல.. ஒரு சீன்ல அவரோட தங்கச்சி ஒருத்தன் கூட ரோட்டுல திரிஞ்சிகிட்டு இருக்கு. அத பாத்த இவரு கூப்டு அடவைஸ் பண்றாரு... அந்த புள்ளை "நான் அவர லவ் பண்றேன்" ன்னு சொல்லுது... அது கூட்டிட்டு வந்த அது லவ்வர  பாக்கனுமே... ஆத்தாடி... அவன் ஆளையும் பேசுறதையும் பாத்தாலே நமக்கு ஸ்பாட்ல வாந்தி வந்துரும். 

பேசிட்டே இருக்க ஜெயம் ரவி பொட்டுன்னு துப்பாக்கிய எடுத்து  அவர சுட்டுடுறாரு... எனக்கு மலைக்கோட்டை படத்துல வர்ற ஒரு டயலாக்கு தான் ஞாபகம் வந்துச்சி..."நாம இதுவரைக்கும் யாரை அடிச்சிருக்கோம்... கோயில் குருக்கள்.. தமிழ் வாத்தியாரு... பழைய துணிக்கு பக்கெட் விக்கிறவன்..இந்த மாதிரி சாஃப்ட் கேரக்டரையெல்லாம் அடிச்சி ரவுடியா பாஃர்ம் ஆயிட்டோம்"  அதே மாதிரி அவன் செத்தோன ஜெயம் ரவி  தங்கச்சி "what just happened?" ன்னு வாரணம் ஆயிரம்ல சூர்யா செத்துப்போயி வாய பொளந்து கெடக்கும் போது அவன் பொண்ணு "Mummy...see daddy is smiling" ன்னு சொல்ற மாதிரி சொல்லுது...

அப்புறம் கஞ்சா பொட்டி மாத்தபோகும்போது ஒரு துப்பாக்கி சண்டை... நம்ம சின்ன புள்ளைல சின்ன குச்சிய துப்பாக்கி மாதிரி வச்சிகிட்டு சும்மா "டிஷூம் டிஷூம்"ன்னு  சுட்டு வெளாடுவோமே... அத விட காமெடியா இருக்கு.. ஜெயம் ரவி மேல நின்னு நாக்கு தள்ள சண்டை போட்டுகிட்டு இருக்கும் போது, நீது சந்தரா கீழ நின்னு "ஆதி என்ன நடக்குது அங்க?... கீழ வா... பயமா இருக்குங்குது... ஏண்டி அவன் என்ன சைக்கிளா ஓட்டிகிட்டு இருக்கான் சடன் ப்ரேக் அடிச்சிட்டு உடனே வர்றதுக்கு... சண்டை போட்டுட்டு இருக்கான்...

நீட்து சந்திரா... நம்மூர்ல பெரிய பெரிய ஹீரோக்களே சினிமாவுல புகைபிடிக்கிறமாதிரி காட்சிகளை வக்கிற சுத்தமா கொறைச்சிட்டாங்க... ஆனா இந்தாளு ஒரு டைரக்டர் சங்க தலைவரு... படத்துல நீட்டு சந்த்ரா வர்ற முக்காவாசி காட்சிகள சிகரட் புடிக்கிற மாதிரி வச்சிருக்காரு.... யோவ்... நானெல்லாம் கொஞ்ச நாள் முன்னாடி அந்த புள்ளைக்கு ஃபேனா இருந்தேன்யா... இனிமே அந்த புள்ளை குடும்ப பாங்கினியா நடிச்ச கூட அது தம்மடிச்சது தானய்யா முன்னாடி வந்து நிக்கும்.


இப்புடியே மொக்கை மொக்கையா காட்சிங்க போயிட்டு இருக்க ஒரு சின்ன டிவிஸ்ட வச்சி ஜெயம் ரவிய பாம்பேக்கு அழைச்சிட்டு போறாய்ங்க... பாம்பே போனா அங்க காட்ஃபாதர் அஜித் மாதிரி இன்னொரு ஜெயம் ரவி இருக்காரு.. அவருதான் பகவான். மும்பை கா பகவான். அவரு தாய்லாந்து ஜெயம் ரவிய விட பெரிய டண்டனக்கா டான்.  அவர காட்டுனோன இண்டர்வல்... போலீஸ் தேடுற பெரிய கிரிமினல். சரி இனியாது படம் எதாது தேறும்னு பாத்தா முதல் பாதியே பரவால்ல போலருக்கு  ரெண்டாவது பாதி... 

மீசையெல்லாம் எடுத்துட்டு எல்லா வெரல்லையும் மோதரம் காதுல பல கடுக்கன்னு பகவான் கேரக்டர்ல ஜெயம் ரவி பாக்க நல்லா தெரிஞ்சாலும் போக போக எப்படா படம் முடியும்னு ஆயிருது.  சிரிக்கிறது சினுங்குறதுன்னு பகவானா ஜெயம் ரவி புதுசா முயற்சி பண்ணிருந்தாலும் இவன் சும்மாவே இப்புடித்தான இருப்பான் இதுல என்ன புதுசுன்னு உள்மனசு கேள்வி கேக்குது.

  
யாருமே இல்லாத கடையில யாருக்குய்யா டீ ஆத்துறங்குற கதை தான் நம்ம யுவன் ஷங்கர் ராஜா வோட நிலமை... எந்த சீனுமே நல்லா இல்லைன்னாலும் BGM மட்டும் செம சீனா  இருக்கு. ஒரு சீன்ல நீது சந்த்ராவ அவ மாமனும் இன்னும் சில ரவுடிகளும் அடிச்சி கஷ்டப்படுத்த, தடார்ன்னு வர்றாரு ஜெயம் ரவி.. சரி அடி பிண்ணி பெடலெடுக்க போறாருன்னு பாத்த பைய தொறந்து ஒரு மூணு கட்டு பணத்த எடுத்து குடுத்துட்டு நீதுவ அழைச்சிட்டு போறாரு.. அப்ப யுவன் ஒரு மீசிக் போடுறாரு பாருங்க... :"ஸோம்... ஸீம்.... ஸாம் ..டடடான்"ன்னு ஒரு செம மீசிக்கு... டேய்... இந்த மியூசிக் போடுற அளவுக்கு அங்க ஒண்ணுமே நடக்கலையேடா,.. ஒரு ஃபைட்ட போட்டு எல்லாத்தயும் அடிச்சி நவுத்திட்டு நீதுவ அழைச்சிட்டு போற மாதிரி காட்சி இருந்தா இந்த மீசிக்கு ஓக்கே... அந்த நாயே கஞ்சா வித்த காச குடுத்து இவள வாங்கிட்டு போவுது... இதுக்கு ஏண்டா இந்த பில்ட் அப்பு.

ஸ்பெஷலா டைரக்டர் அமீர பத்தி சொல்லனும்னா படத்துல ஒவ்வொரு கேரக்டரையும் செதுக்கிருக்காருன்னு தான் சொல்லனும்... குறிப்பா ஜெயம் ரவி தங்கச்சி கேரக்டரும் அது கூட்டிட்டு வர்ற லவ்வர் கேரக்டரும்...கண்றாவி  வக்காளி படத்துல ஒருத்தன் கூட ஒழுங்கா பேசமாட்டேங்குறாய்ங்க. இதுல ரெண்டு டம்மி பீஸ் வில்லனுங்க வேற.. தெலுங்கயும் தமிழையும் கலந்துவிட்டு காதுஜவ்வ கிழிச்சிடுறாய்ங்க.. சரி இவரு 4 வருசமா படமே எடுக்கலையே.... செம கதைய ஒண்ண ரெடிபண்ணி படம் எடுத்துருப்பாரோன்னு நெனைச்சா படம் பாத்தப்புறம் தான்  தெரியிது நம்மாளு நாலு வருசமா கதை எதுவும் கெடைக்காம சுத்திட்டு இருந்துருக்காருன்னு. இவனுகளையெல்லாம் நம்பி எப்புடி பெட்டு கட்டுறது...

மொத்தத்துல படத்த பத்தி சொல்லனும்னா.... அது நம்மள பாத்துருச்சி... எல்லாரும் தாழ்வான பகுதிய நோக்கி ஓடுங்க!!!! இது ஒரு mafisco love story எல்லாம் இல்லை... இதுக்கு கடுப்பிஸ்கோ லவ் ஸ்டோரி.

இந்த படத்துக்கு torrent தேடி கூட உங்க நேரத்தை தயவு செஞ்சி வீணடிக்காதீங்க... 

 

Sunday, February 10, 2013

விஸ்வரூபம் - சுமாரான ஆங்கிலப்படம் !!!


Share/Bookmark

ஒரு படத்தோட ரிலீஸ தமிழ்நாடே இவ்வளவு ஆர்வமா எதிர்பாத்துச்சின்னா அது இந்த படத்துக்கு தான். அதுக்கு முக்கிய காரணம்... மத்த ஊர்ல்ல்லாம் ரிலீஸ் ஆகி நம்மூர்ல மட்டும் ரிலீஸ் ஆகலங்குறதும் அதுலயும் இந்த வெளிநாடு வாழ் தமிழர்கள் படத்த பாத்துட்டு "ஆசெம்" "அக்சார்செம்" "ஃபெண்டாஸ்டிக்" "எக்செலண்ட் மூவ்வி" " என்னோட இத்தனை வருஷ சர்வீஸ்ல இப்புடி ஒரு படத்த பாத்ததே இல்லை"  இப்புடி எல்லாம் பில்ட் அப் குடுத்ததுதான்.

கடந்த ரெண்டு வாரமா ஃபேஸ்புக் பக்கம் போனாலே விஸ்வரூம்ங்கற வார்த்தைய தவற வேற இல்லை.போனவாரம் மட்டும் பொதுத்தேர்தல் வச்சிருந்தாய்ங்கன்னா கமல எலெக்சன்ல நிக்க வக்காமயே சி.எம் ஆக்கிடுற அளவுக்கு அவருகு செல்வாக்கு "I support kamal... அப்ப நீங்க?" "உண்மையான உழைப்புக்கு மரியாதை செய்வோம்" "கலைஞன் வாழ்க" அப்புடின்னெல்லாம் ஒரே போஸ்டர்ஸ்.. அப்புறம் இன்னொரு கும்பல் "விஸ்வரூபத்தை DVD யில் பார்க்க மாட்டோம்..அப்படி  திருட்டு தனமா பாத்தா இந்த நம்பருக்கு கம்ப்ளைண்ட் பண்ணுங்க" அப்புடின்னு ஒரு ப்ரச்சாரம்.. நல்ல  விஷயம் தான். ஏங்க... கமல் மட்டும் தான் பணம் போட்டு படம் எடுக்குறாரா? மத்தவங்கல்லாம் சும்மாவா படம் எடுத்துட்டு இருக்காங்க.. இதே அறிவு மத்த படங்களுக்கு DVD rip" torrent ah நெட்டுல தேடும் போது இருந்துருந்தா எவ்வளவு நல்லாருக்கும்?

விஸ்வரூபத்துக்கு கமல் விளம்பரம் செஞ்சிருந்தா கூட இந்த அளவு ரீச் ஆயிருக்காது. ரெண்டு வாரமா சில நியூஸ் ச்சேனலுங்க இத ஃபுல் டைமாவே விளம்பரம் பண்ணியிருந்தாங்க. அதுக்கும் மேல கமல் கண்ணீரோட கொடுத்த அந்த பேட்டி, “ச்ச இவ்வளவு கஷ்டப்பட்டிருக்காரு இந்த படத்த கண்டிப்பா தியேட்டர்ல பாத்தே ஆகனும்ங்கற ஒரு ஆர்வத்த மக்கள் மனசுல ஏற்படுத்துச்சி. ஆனா இந்த விஸ்வரூபம் பற்றின பரபரப்பு "C" செண்டர் ரசிகர்கள்கிட்ட' ஒரு பெரிய தாக்கத்த உண்டாக்கலன்னு நேத்துதான் எனக்கு தெரிஞ்சது. 

இன்னிக்கு டிக்கெட் கெடைக்குமோ கெடைக்காதோங்கற பயத்துலயே தியேட்டருக்கு போன எனக்கு தியேட்டர்ல பெரிய ட்விஸ்டு காத்துகிட்டு இருந்துச்சி. அந்த தியேட்டர்ல மொத்தமே ஒரு பத்து பேர் அங்கங்க நின்னுகிட்ட் இருந்தாய்ங்க. கொடுமை என்னன்னா, ரெண்டு வாரத்துக்கு முன்னால அலெக்ஸ் பாண்டியன் அதே தியேட்டர்ல தான் ஓடுச்சி... நா ரெண்டு தடவ போய் டிக்கெட் கெடைக்காம திரும்பி வந்தேன். ஆனா நேத்து நா தான் கவுண்டர்ல மொத டிக்கெட்டு. பெருமையா இருந்துச்சி... தலைவர் மன்னன்ல சொல்ற மாதிரி "ச்சைனு.... அய்யோ மோதரம்" ன்னு சொல்லிட்டே உள்ள போனா படம் போட்டு கால்மணி நேரம் ஆகியும் பாதி தியேட்டர் கூட நிரம்பாதது ரொம்ப கஷ்டமா போச்சு...

நம்மூர் காரய்ங்க எப்பவுமே இப்புடித்தான்... கமல் கமல்ம்பாய்ங்க... ஆனா அவரோட எந்த படத்தையும் ஓட்டமாட்டாய்ங்க... இப்பவரைக்குமே சிலபேர்ட்ட உங்க ஃபேவோரெட் படம் எதுன்னு கேட்டா படக்குன்னு அன்பே சிவம்பாய்ங்க.. ஆனா என்ன அன்பே சிவம் எந்த தியேட்டர்லயுமே பத்து நாள தாண்டல. அத லேப்டாப்புல வச்சி ஓட்டி ஓட்டி நாலு சீன பாத்துட்டு ந.கொ.ப.காணும் விஜய் சேதுபதி மாதிரி "ப்ப்ப்ப்ப்பாஆஆஆ... கமல் பிண்ணிருக்காருல்ல"அப்டின்னு சொல்லிட்டு போக தான் அவிங்களுக்கு புடிக்கிது. சரி ஏண்டா மொக்கைய போட்டுசாவடிக்கிறன்னு கேக்குற உங்க மைண்டு வாய்ச நா கேட்ச் பண்ணிட்டேன். படத்துக்கு போலாம்.

இந்த படத்த கண்டிப்பா ஆங்கில படம் மாதிரியே எடுக்கனும்ங்கறதுல மட்டும் கமல் ரொம்ப கரெக்டா இருந்துருக்காரு. கதைக்களமும் சரி காட்சிப்பதிவும் சரி ஆங்கிலப் படங்களுக்கு எந்த விதத்துலயும் குறைஞ்சது இல்லை. அந்த விதத்துல கமல ஹாலிவுட் படம் எடுத்து தரச் சொல்லி ஒரு ஹாலிவுல் தயாரிப்பாளர் கேட்டது 100% கரெக்ட் தாங்குறது படம் பார்த்த உடனே புரியும்.

கதைன்னு பாத்தா காலங்காலமா நமக்கு பழக்கப்பட்ட, சலித்துப்போன ஒரு கதை தான். ஆனா அதை கொஞ்சம் வித்யாசப்படுத்தி, ஏற்கனவே நடந்த ஒரு நிகழ்வோட சம்பந்தப் படுத்தி அருமையா எடுத்துருக்காரு. இந்த மாதிரியெல்லாம் சரித்திர நிகழ்வுகளையே களமாக எடுத்துகிட்டு அதுல தங்களோட கற்பனைகள புகுத்தி படமாக்குறது இந்த ஹாலிவுட் காரணுகளுக்கு கைவந்த கலை. ஹிட்லரையே பல மாதிரியா சாவடிச்சி பாத்தவனுங்க. அதயே தான் கமலும் பண்ணிருக்காரு. ஒசாமாவ ஆஃப்கான் மலைப்பகுதிகள்ல வச்சி குண்டுகளால தகர்த்துவிட்டோம்.... ஒசாமாவ கொண்ணுட்டோம்னு அமெரிக்கா மொதல்ல சொல்லிட்டு இருந்தத நம்மாளு கப்புன்னு புடிச்சி அதுல நம்மூர் டைப் மசாலாக்கள தடவி விஸ்வரூபத்த ரெடி பண்ணிருக்காரு.

முதல் பாதியில் கமல் மாணிக்கமா (பாஷா ரஜினி) அமெரிக்காவுல ஆட்டோ ஓட்டிகிட்டு இருக்காரு. ஓ சாரி... அமெரிக்காவுல ஆட்டோ ஓட்ட முடியாதுல்ல.. அதுனால கதக் டான்ஸரா இருக்காரு. காட்ஃபாதர் அஜித் மாதிரி ஒவ்வொரு அசைவுலயும் அபிநயம் புடிச்சிகிட்டே.. இவ்வளவு நல்லவரா இருக்காரேங்குற சமயத்துல அவரையும் அவரது மனைவியையும் தீவிரவாதிங்க புடிச்சிட்டு போக, அங்க மாறுறாரு பாஷாவா... தீவிர வாதிங்கள அடிச்சி தெறிக்க விட, பல படங்கள்ல இதே மாதிரி காட்சிகளை பார்த்திருந்தாலும், கமல் அந்த இடத்துல விஸ்வரூபமெடுக்கும் போது நம்மளையும் அறியாம ஒரு குதூகலம். அவ்வளவுதான் படம் இனிமே தாறு மாறுன்னுங்கற முடிவுக்கு வந்துடலாம். 

 உடனே ஆஃப்கான் ஃப்ளாஷ்பேக்... கமல் அங்க பாண்டியன் ரஜினி மாதிரி வில்லன் குரூப்லயே அவங்க ஆளுங்க மாதிரியே சேர்ந்து துப்பு  கொடுத்துட்டு இருக்காரு. ஆஃப்கான் காட்சிகள்ல காட்சிப்பதிவுகள் செமயா இருந்தாலும் காட்சிகள் டாக்குமெண்டரி டைப்புல ரொம்பவே மெல்லாமா நகர்ந்து, ஒசாமாவ கண்டுபிடிச்சி NATO படைகள் அவர் தங்கிருக்க மலைப்பகுதிய தரைமட்டமக்குற மாதிரி ஒரு தாறு  மாறு ஃபட் சீனோட இண்ட்டர்வல்.

அதுக்கு மேல படம் ரெம்ப கஷ்டம்.  காட்ஃபாதர் அஜித் மாதிரி இருந்த கமல் நார்மல் கமலா மாறி ஆஃப்கான் தீவிரவாதிகளோட  திட்டத்த முறியடிக்க முயற்சி பண்றாரு. நமக்கு லைட்டா கொட்டாவி வர ஆரம்பிச்சிடுது. முதல் பாதில பாத்த அளவுக்கு எதும் சொல்றா மாதிரி காட்சிகள் இல்லை. எதோ கடனுக்குன்னு ஓடிகிட்டு இருக்கு. அதோட க்ளைமாக்ஸ்ல பண்ணாங்க பாருங்க ஒரு அல்டிமேட் காமெடி.. நியூயார்க்கையே காலி பண்ணப்போற ஒரு மிகப்பெரிய BOMB... மொபைல் மூலமா ஆக்டிவேட் பண்ணா வெடிச்சிரும்... உடனே ஹீரோயின் ஒரு ஓவன கொண்டு வந்து அந்த BOMB மேல வச்சிடுறாங்க.. so, அது அந்த மொபைலுக்கு கால் வர்றத தடுத்துடுது.. எனக்கு உடனே நம்ம இங்கிலீஷ்காரன் பட காமெடிதான் ஞாபகம் வந்துச்சி... "இது யாரோட சீப்பு தெரியுமா? மாப்ளையோட சீப்பு..இத திருடிட்டா மாப்ள எப்புடி தலை சீவுவாறு.. எப்புடி கல்யாணம் நடக்கும்? "

என்னதான் டெக்னிகலா அவங்க சொன்ன ரீசன் கரெக்டா இருந்தாலும், அந்த காட்சி எதோ கொஞ்சம் சில்லி தனமா இருந்த மாதிரி ஒரு ஃபீலிங்.  இன்னும் கொஞ்சம் அதிகமா எதிர்பாத்தோம். நல்லா படம் பாத்துகிட்டு இருக்கும் போது பாதில , "சரி சரி படம் முடிஞ்சிது... எல்லாம் கெளம்புங்க கெளம்புங்க"ன்னு சொன்னா எப்புடி இருக்கும். அதே தான் நடக்குது இங்க.. அந்த பாம் மேல ஓவன வச்சி மூடிட்டு எல்லாரும் வரிசையா நடந்து வரும்  போதே படத்த முடிச்சிட்டு அடுத்த பகுதில பாக்கலாம்னு விஸ்வரூவபம் -II trailer ah ஓட விட்டுட்டாங்க¸.. ரெண்டாவது பகுதி எடுக்கப் போறீங்கன்னாலும் முதல் பகுதிய நட்டாத்துல விட்டா மாதிரியா முடிக்கிறது? என்னமோப்பா
                    (இந்த வார குமுதத்தில் வெளிவந்தது )

படத்தோட மிகப்பெரிய ப்ளஸ், நம்மூர் பக்கமே வராம மொத்த படத்தையும் ஆஃப்கானிஸ்தான்லயும் US லயுமே எடுத்தது முழுமையா ஒரு ஹாலிவுட் படத்த பாத்த feel குடுக்குது. கமல பத்தி சொல்லித்தான் தெரியனும்னு இல்லை. வழக்கம்போல பின்னி பெடலெடுத்துருக்காரு. ஒவ்வொரு கமல் படத்துலயும்  அது காமெடி படமா இருந்தாலும் நமக்கு கண்ணீர் வர வைக்கிற மாதிரி ஒரு காட்சி கண்டிப்பா இருக்க்கும். தெனாலில கமல் சொல்ற ஃப்ளாஷ்பேக், வசூல் ராஜா க்ளைமாக்ஸ்ல வசனம் பேசி அழவைக்கிறது... அவ்வளவு ஏன்.. மன்மதன் அம்புல கூட கமல் ஊர்வசிகிட்ட ஃபோன் பேசிகிட்டே “நீ கவலப்படாதம்மா... எனக்கு இங்க நிறைய வழி தெரியிதுன்னு சொல்லிகிட்டே சுத்தி பாப்பாரு.. அது ஒரு முட்டு சந்தா இருக்கும். அப்போ ஒரு ரியாக்சன் குடுப்பாரு பாருங்க..  எப்படியாது சில காட்சிகள்ல தொண்டைய அடைக்க வச்சிருவாரு. ஆனா இந்த படத்துல அப்படி ஒரு காட்சி வரும்னு எதிர் பார்த்த எனக்கு ஏமாற்றமே. 

அப்புறம் படத்தோட வில்லன். ஆளு செம டெரரா இருக்காரு. ஆஃப்கான்ல கமலுக்கு நண்பரா இருக்கும் போதும் சரி, நியூயார்க்ல எதிரியா இருக்கும் போதும் சரி.. செம வில்லத்தனம். ஆனா என்ன படத்துல அராபு மொழி பேசும் போது மட்டும் போடுற சப் டைட்டில இவர் பேசுற தமிழுக்கும் போட்டுருக்கனும். வக்காளி இந்தாளு என்ன பேசுறார்னே புரியல. அத கொஞ்சம் புரியிற மாதிரி re-recording பண்ணா தான் என்ன...

படத்துக்கு மிகப் பெரிய மைனஸ் முதல் இருபது நிமிடம்.. ஆத்தாடி... US la settle ஆன ஒரு ப்ராமணப் பெண்ணாமா பூஜா குமாரு.. அது பேசுது பாருங்க... "என்னோட ஆத்துக்காரர்"ங்குது "எதாவது பொம்மனாட்டி இருக்காளா" ங்குது..  கமலும் இந்த ப்ராமண பாஷ பேசுறேன்னு  போட்டு சாவடிக்கிறாரு. இன்னொரு தடவ நளதமயந்தி படத்துக்குள்ள வந்து உக்காந்துட்டோமோன்னு ஒரு டவுட் வந்துருச்சி. எப்புடி தசாவதாரத்துல அசின் "பெருமாளே பெருமாளே"ன்னு  கமல் கூடவே வந்து நம்மள வெறுப்பேத்துச்சோ... அதே மாதிரி இந்த புள்ளை பூஜா குமார். ப்ராமன பாஷை பேசி எரிச்சல கெளப்பிட்டு இருக்கு.

ஹாலிவுட் படம் மாதிரியே எடுக்கனும்னோ என்னவோ, கமல் பல காட்சிகளுக்கு விளக்கத்த டீப்பா உள்ள போயி  விளக்காம, லைட்டா டச் பண்ணிட்டு நாமளே புரிஞ்சிக்கனுங்கற மாதிரி காட்சியமைச்சிருக்காரு. அதே மாதிரி ஹாலிவுட் படம் மாதிரியேங்கறதுக்காகவோ என்னவோ பூஜா குமாரோட கேரக்டரயும் வெளிநாட்டு கலாச்சாரப்படியே அமைச்சிருக்காரு.. கருமம் அது இவருக்கு மனைவியா இருந்துகிட்டு ஆஃபீஸ்ல ஒருத்தன் கூட ஜல்சா பண்ணிகிட்டு திரியிது. 

எக்ஸ்பைரி டேட் முடிஞ்சி போன பூஜா குமார ஏன் இந்த படத்துல எடுத்தாங்கன்னு தானே கேக்குறீங்க.. அதுக்கும் விளக்கம் சொல்ற மாதிரி ஒரு காட்சி வச்சிருக்காரு கமல். தேவையில்லாம திடீர்னு அந்த புள்ளை ஓவர் கோட்ட கழட்டி போட்டுட்டு வசனம் பேசுற மாதிரி ஒரு காட்சி வச்சிருக்காரு. கூடிய சீக்கிரம் அந்த புள்ளைய எதாவது மசாலா படத்துல அய்ட்டம் சாங்குக்கு ஆடுறத பாக்கலாம். வழக்கமா கமல் படம்னாலே ஹீரோயினோட இருக்க மாதிரி ஒரு படுக்கையறை காட்சி கண்டிப்பா இருக்கும். என்னடா மனுசன் திருந்திட்டாரோன்னு பாத்தா... வருது... செகண்ட் பார்ட்ல அதுவும் வருது.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் படத்துல நாசர் இல்லாம இருப்பாரா? ஆஃப்கான் களத்துல எல்லாமே புதுமுகங்களா இருக்க, நடுவுல வர்றாரு நம்ம நாசர். கண்டிப்பா நாசருக்கு பதிலா வேற யாரையாது போட்டுருக்கலாம்.. அல்லது நாசருக்கு வேற ரோல் எதாது தந்துருக்கலாம். சுத்தமா ஒட்டல. அப்புறம் மியூசிக்க பத்தி சொல்லனும்னா, மூணுல ரெண்டு பாட்டு ஓக்கே. BGM போடுறதுக்கு முன்னாடி மியூசிக் டைரக்டருங்க “The Dark Knight” ah  பாத்துட்டு தூங்கிருப்பாங்க போல.. அங்கங்க அந்த படத்துலருந்து உருவி இதுல அள்ளி தெளிச்சி விட்டுருக்காங்க.

ஒரு காட்சில பூஜா குமார் கமல்கிட்ட "நீங்க நல்லவரா கெட்டவரா?" ன்னு கேப்பாங்க.. அதுக்கு அவரு "to be frank... ரெண்டும் கலந்தது தான் நான்" அப்புடிம்பாரு... அதே டயலாக்க வச்சே படத்தோட ரிசல்ட்டயும் சொல்லலாம். மொத்தத்துல "படம் நல்லாருக்கா நல்லா இல்லையா?"ன்னு  கேட்டா "To be frank.... ரெண்டும் கலந்தது தான் இந்த விஸ்வரூபம்".


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...