நம்ம
தமிழ்நாட்டுல சினிமா ரசிகர்களைப் பொறுத்த அளவு மூணு வகை..ஒண்ணு எதாவது ஒரு நடிகரை சார்ந்த
ரசிகர்கள். அவங்களோட ஃபேவொரெட் நடிகரோட படங்களுக்கு எப்பாடு பட்டாவது சப்போர்ட் பன்றவங்க.
அந்த நடிகருக்கு போட்டியா இருக்க நடிகரோட படங்கள் எப்படி இருந்தாலும் அத ஓட்டு ஓட்டுன்னு
ஓட்டுறவங்க. இந்த ரசிகர்களோட கருத்து இவங்க வந்து அவனுக்கு பிடித்த, பிடிக்காத ரெண்டு
நடிகர்களத் தவற மத்தா எல்லா படங்களுக்கும் கரெக்டான கருத்து சொல்லுவானுங்க. தமிழ்நாட்டுல
பெரும்பாலானவங்க இவங்கதான். தமிழ்சினிமா தயாரிப்பாளர்கள் இன்னும் வாழ்ந்துகிட்டு இருக்க
முக்கிய காரணமும் இந்த மாதிரியான ரசிகர்கள்தான்.
ரெண்டாவது
இந்த நடுநிலை ரசிகர்கள். அதாவது நடுநிலை அப்டின்னு
சொல்றதவித எந்த நடிகர் மேலயும், இயக்குனர் மேலயும் ஏன் சினிமா மேல கூட அவ்வளவு ஆர்வம் இல்லாம என்னத்த கன்னையா
மாதிரி இருக்கவங்க. இவய்ங்கள பெருசா ஒண்ணும் கண்டுக்க தேவையில்ல. ஏன்னா இவய்ங்க யாருமே
தியேட்டர்ல படம் பாக்க மாட்டானுங்க. பஸ்ஸுல, காலேஜ்ல, ஆபீஸ்லன்னு யார்கிட்ட என்ன படம்
இருந்தாலும் வாங்கி பாப்பானுங்க. இவய்ஙளுக்கு எல்லா படமுமெ நல்லாருக்க மாதிரி தான்
தெரியும். ஏன்னா பாட்ட ஓட்டிருவானுக, ஃபைட்ட ஓட்டிருவானுக… ஒரு சீன் போர் அடிச்சிதுன்னா
ஒட்டிருவானுக்க. ரெண்ட்ரை மணி நேரம் ஓடுற ஒரு பட்த்த அதிகபட்சம் முக்கா மணி நேரத்துல
பாத்து முடிச்சிருவானுக. இவனுகளால பெரிய அளவுல சினிமாவுக்கு ஒரு புரயோஜனமும் இல்ல. 200 கோடில பாகுபலி எடுத்தாலும்
சரி, 300 கோடில எந்திரன் எடுத்தாலும் இவங்களுக்கு அது 400 MB தான்.
அடுத்து
மூணாவது குரூப்பு தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் படங்களை ஆதரிப்பவர்கள்.
இவயங்கதான் ரொம்ப டேஞ்சராஜ குரூப்பு. இவங்கள கண்டுபுடிக்கிறது ரொம்ப ஈஸி… Bro உங்க
ஃபேவொரெட் படம் பேரு ஒண்ணு சொல்லுங்க ப்ரோன்ன உடனே யோசிக்காம “அன்பே சிவம்”… அப்டின்னான்ன
நீங்க யோசிக்காம 2 ஸ்டெப் பேக் போயிருங்க. அடுத்த கேள்வி… உங்களுக்கு பிடிச்ச் இயக்குனர்
யாருன்னு கேளுங்க… “ராம்” “தியாகராஜா.. குமார்ராஜா” இப்டி எதாவது ஒரு பேர சொன்னான்னா
முடிஞ்சிது. அதுக்கப்புறம் அவன் பக்கம் தலை வச்சி படுத்துறாதீங்க.. ரொம்ப டேஞ்சர்.
இவய்ங்களோட
முக்கியமான வேலை என்னன்னா, most underrated இயக்குனர்கள கண்டுபுடிச்சி எழுதுற்துதான்.
அதாவது அதன் மூலமா என்ன சொல்லுவானுங்கன்னா இவரு ரொம்ப நல்ல டைரக்டரு… இவரோட திறமைய
நா மட்டும்தான் சரியா புரிஞ்சிக்கிட்டு இருக்கேன். நீங்கல்லாம் இவர அண்டர் ரேட் பன்னி
வச்சிருக்கீன்றதுதான்.
இவனுங்கள
நல்லா உற்று நோக்குனா தெரியும்.. இந்த ப்ளாக் காமெடிங்குற பேர்ல சிரிப்பே வராத மாதிரி
சில படங்கள் வரும்ல.. அதெல்லாம் பயங்கரமான காமெடி படங்கள்னுவானுங்க. நம்ம எதிர்த்து
எதாவது சொன்னா நம்மளுக்கு சினிமா அறிவு இல்லைன்னுவானுக.. இல்லன்னா நம்மள C செண்டர்
ஆடியன்ஸூன்னுவானுக… அதயும் மீறி நாம எதாவது சொன்னோம்னா “ப்ரோ.. ஆக்சுவலா உங்களுக்கு இந்தப் படம் புரியல..
இன்னும் ஒரு ரெண்டு தடவ பட்த்த பாத்து புரிஞ்சிகிட்டு என்கிட்ட வந்து பேசுங்கன்னுவானுக…
ஏண்டா ஒருதடவே படத்த பாக்க முடியாமத்தான் இங்க வந்து குத்த வச்சிருக்கேன். இதுல இன்னும்
ரெண்டு தடவையா… அப்டின்னு அதோட ஓடிருவானுக.
இல்லன்னா
குறியீடு கண்டுபுடிப்பாங்க.. இந்த ஷாட்ல ஏன் ப்ளூ கலர் லைட்டிங்க் வச்சிருக்காங்க தெரியுமா?
பேக்ரவுண்டுல அந்த சுவத்துல ஏன் பூனை படம் வரைஞ்சிருந்துச்சி தெரியுமா? இந்த சீன்ல
கேமரா ஆங்கிள கீழ வச்சதனால டைரடர் இன் டைரக்டா என்ன சொல்ல வர்றாரு தெரியுமா? டேய் இதெல்லாம்
மொதல்ல அந்த டைரக்டருக்கு தெரியுமா?
இவய்ங்க
என்ன பண்ணி விட்டுருவானுங்கன்னா இப்டி குறியீடு கண்டுபுடிக்கிறேன், ஸ்க்ரீன் ப்ளேய
அனலைஸ் பன்றேன் அப்டின்னு அந்த படத்த எடுத்த இயக்குனருக்கே தெரியாத விஷயங்கள எழுதி
எழுதி அந்த இயக்குனர்களை உத்தமபுத்திரன் விவேக் மாதிரி ஆக்கி விட்டுருவானுங்க.. “அப்ப
என்னோட பவர் தெரியாமலேயே நான் இவ்வளவு நாள் வாழ்ந்துகிட்டு இருக்கேன்”ன்னு அந்த இயக்குனர்கள்
வேற உலகத்துல வாழ்ந்துகிட்டு இருப்பாங்க. விளைவு என்ன… பரிசு குடுக்க மேடைக்கு கூப்டா
ஏன் என்னோட படத்துக்கு பரிசு குடுக்கல.. ஏன் இந்த பாட்டுக்கு குடுக்காம அந்த பாட்டுக்கு
குடுக்குறீங்கன்னு ஆங்கர் பன்றவன்கிட்ட போய் சண்டை போட வேண்டியதாயிரும். அடுத்த வருஷம் ஃபங்க்ஷனுக்க்கே கூப்ட மாட்டானுங்க.
இந்த
மாதிரி இந்த மூணாவது குரூப்பு கண்டுபுடிச்ச ஒரு அண்டர் ரேட்டட் இயக்குனர்தான் தியாகராஜா
குமார்ராஜா… ஆரண்ய காண்டம்னு ஒரு படம்.. ஓடல.. ஆனா நம்ம குருப்பு அந்தப் படத்த
identify பன்னிட்டாங்க பல வருடங்களுக்கு அப்புறம் இந்த தியாகராஜா குமார்ராஜா படம் எடுக்குறாரு…பட்த்துக்கு
ட்ரெயிலர் ஒண்ணு விட்டுருந்தாரு பாருங்க.. ச்சை.. ஆனா நம்ம குரூப்பு அந்த ட்ரெயிலர்லயே
தாத்தா தெரிறாரு… பக்கத்து வீட்டு பாட்டி தெரியிதுன்னு ஆயிரம் குறியீட கண்டுபுடிச்சி
படம் வர்றதுக்கு முன்னாலயே விமர்சனம்லாம் எழுதி வச்சிகிட்டு படம் ரிலீஸூக்காக காத்திருந்து
படம் வந்தப்புறம் அப்படியே கக்கிட்டாங்க.
அப்படி
ஒரு ஓவர் பில்ட் அப் கொடுக்கப்பட்ட படம் தான் இந்த சூப்பர் டீலக்ஸ். ஒருத்தன் என்னான்னா
தமிழ்சினிமாவோட அடுத்த கட்டம்ன்றான். இன்னொருத்தன் என்னடான்னா இவர மாதிரி டைரக்டரு
ஒலகத்துலயே இன்ல்லன்றான்… சரி என்னா பன்னி வச்சிருக்கானுங்கன்னு பாக்கலாம்னு தியேட்டருக்கு
போனா.. ச்சை…
இதுல
படம் பாத்தவியிங்க ஸ்டேட்டஸூ.. இந்தத் திரைப்படத்தை அவ்வளவு சாதாரணமாக கடந்து போக முடியவில்லை.
உண்மைதான் அந்த முணு மணி நேரத்த கடந்து போறதுக்குள்ள நா பட்ட பாடு இருக்கே… அய்யயோ…
அருவை… அருவை… அருவை..
படம் வந்து எந்த காலகட்டத்துல நடக்குதுன்றதே பெரியபியூஷனா இருக்கு. Background
ல ஃபுல்லா ஒரே பழைய பாட்டுங்களா ஓடுது. காதாப்பத்திரங்கள் வாழுற வீடு, உபயோகிக்கிற பொருட்கள்ணூ
எல்லாத்துலயும் ஒரு ரெட்ரோ எஃபெக்ட் இருக்கு. நாம எதோ 80s ல நடக்குற கதை போலன்னு
நினைச்ச்சா இல்ல. இப்ப நடக்குற கதை தான். அதுவே பெரிய கடுப்பு.
அதவிட பெரிய கடுப்பு படம் எத நோக்கி பயணிக்கிதுன்னு கடைசி
வரைக்குமே நம்மளால கண்டுபுடிக்க முடியாது. படத்துல ஒரு கதை இருந்தா குத்து மதிப்பா
இந்த இட்த்துல இண்டர்வல் விடுவாங்க இந்த இட்த்துல படம் முடியும்னு ஒரு அனுமானம்
நமக்க் இருக்கும். ஆனா இந்த பட்த்த பொறுத்த அளவு இண்டர்வல் எப்ப வரும்னு நம்மாளால
சொல்ல முடியாது, படம் எப்ப முடியும்னும் நம்மளால சொல்ல முடியாது. அவனுங்களா மனசு
வச்சி பட்த்த முடிச்சி விட்டாதான் உண்டு.
படம் முழுக்க. ரொம்ப ஆக்வர்டான காட்சிகளால
நஎிரம்பி வழியிது. விஜய் சேதுபதிய போலீஸ் இன்பெக்டர் ஸ்டேஷன்ல மிரட்டுற
காடையாகட்டும்,
ஃபகத் ஃபாசில்
தண்ணியடிச்சமாதிரி கார்ல புலம்புற காட்சியாகட்டும் அருவருப்போட உச்சம். இது ஒரு மாதிரியான அருவருப்புன்னா மிஷ்கின்
ரம்யாகிருஷ்ணன் வர்ற காட்சிகள் அருவையோட உச்சம். சத்தியமா தலைவலிதான் வந்துச்சு. இதெல்லாம்
பத்தாதுன்னு ஏலியன்லாம் வேற பட்த்துல வந்துட்டுட்டு போகுது. பைத்தியமா இவன் ..
ரொம்ப நேரம் நல்லவன் மாதிரித் தெரிஞ்சானேய்யா…
அடுத்த கட்ட சினிமான்றது சென்சார் பன்னாம
கெட்ட வார்த்தைகள விடுறதுலயோ , இலைமற
காயா காமிக்க வேண்டிய சில விஷயங்கள explicit ah காமிக்கிறதுலயோ இல்ல. அடுத்தகட்டம்ன்றது technical excellence தானே தவிற இந்த மாதிரி கருமம் புடிச்ச
படங்கள் இல்ல.
நம்ம
கதையவே நாம இன்னும் சுவாரஸ்யமா, technically strong ah எப்டி சொல்றோம்றதுதானே தவிற
இந்த மாதிரி மூன்றாம் தர திரைப்படங்கள் நிச்சயமா தமிழ்சினிமாவின் அடுத்த கட்டம் இல்லை.
நமக்குன்னு ஒரு அடையாளம் இருக்கு. நாம ஏன் அடுத்த நாட்டு படம் மாதிரி எடுக்கனும்னு
ஆசைப்படுறோம்? நம்ம நம்ம நாட்டு படம் மாதிரி எடுப்போம். தெலுகு சினிமால இதப் பன்றாங்க.
ஒரு சில படங்கள் நகைப்புக்குள்ளாக்குனாலும்
பெரும்பாலான படங்கள் அடுத்தடுத்த கட்டத்துக்கு போயிட்டு இருக்கு.
Technically நம்மள விட அட்லீஸ்ட் அஞ்சு வருஷமாவது முன்னால இருக்காங்க.. இத நாஞ்சொன்னா
என்ன தெலுங்குகாரன்னு சர்டிஃபிகேட் குடுக்குறானுக.
இந்த சூப்பர் டீலக்ஸ் மாதிரி படங்களால நிச்சயம் திரையரங்கிற்கு மக்களோட வரத்த கம்மி பண்ணும். எதோ
முகம் தெரியாத நாலு பேர வச்சி இதே பட்த்த எடுக்குற பட்சத்துல யாரும் இந்தப் பட்த்த
மதிச்சிருக்கப்போறதில்ல. அன்னிக்கு பாத்தா அவ்வளவு கூட்டம்
கூட்டமா குடும்பத்தோட படம் பாக்க வந்துருக்காங்க. காரணம் ஃபஹத் ஃபாசிலோ இல்ல
தியாகராஜா கொமாரராஜாவோ இல்லை. விஜய் சேதுபதி திருநங்கையா நடிச்சிருக்காரு.. படம் நல்ல ஜாலியா
போகும்ன்ற ஒரே
காரணம்தான்.
அவங்கல்லாம் அடுத்த தடவ நம்பி குடும்பத்தோட ஒரு
படத்துக்கி வருவாங்களா?
A CERTIFICATE போட்டு வச்ச
படத்துக்கு உங்கள யார் குடும்பத்தோட வரச்ச்சொன்னதுன்னு சிலர் கேள்வீ வேற? Violence க்கும் A certificage
than.. vulgarity க்கும் A certificate தான். Violence tha குடும்பதோட பாக்க
முடியும். Vulgar ah இருக்க படங்கள குடும்பத்தோட பாக்க முடியாது. படம் பாக்குறதுக்கு முன்னால எத்தனை பேரு படம்
A
certifiaacte ah u certificate ah nu பாத்துட்டு புக் பன்றது? இன்னும் நம்ம ஊர்ல நடிகர்களப் பாத்துதான் புக் பன்றாங்க.
உண்மையிலயே நடிகர்களுக்கு தான் அந்த
ரெஸ்பான்ஸிபிலிட்டி இருக்கனும். ஏற்கனவே சொன்னதுதான். விஜய் சேதுபதிக்குன்னு ஒரு
ரசிகர் பட்டாளம் உருவாயிருக்கு. அவர் படங்களுக்கு போன ஜாலியா சிரிச்சிட்டு
வரலாம்னு ஒரு இமேஜும் உண்டாயிருக்கு. அத அப்டியே குழியில தூக்கி போட்டு பொதைக்கிற
மாதிரி தான் இந்தப் படம் வந்துருக்கு. ஒரு நடிகனோட அடுத்த கட்டம் ரசிகன மதிச்சி
அவனுக்கு பிடிச்ச மாதிரி படங்கள கொடுக்குறதுதான். ரசிகர்கள மதிக்காத நடிகர்கள் பல
பேர் இருக்க இடம் தெரியாம பொய்ட்டாங்க. விஜய் சேதுபதியும் அதை நோக்கிதான் போயிட்டு
இருக்காரு.
விஜய் சேதுபதி பையனா வர்ற அந்த சின்னப் பையன்
பட்டைய கிளப்பிருக்கான். விஜய் சேதுபதி தாத்தா அடிக்கிற கமெண்ட்ஸ், விஜய் சேதுபதி மிஷ்கின்கிட்ட மன்னிப்பு
கேக்குற சீன்னு அங்கங்க சில நல்ல காட்சிகளையும் மத்த காட்சிகள் நாரடிச்சி வச்சிருது
மொத்தத்துல
இந்த மாதிரி சினிமாக்களை புறக்கணிக்கிறதுதான் தமிழ்சினிமா நீண்ட நாள் உயிரோட இருக்க
நாம செய்யிற உதவியா இருக்கும்.