காலேஜப் பத்தி போஸ்ட் எழுதி ரொம்ப நாளாச்சி... எதாவது
எழுதலாம்னு நேத்து நண்பன் அனந்த நாராயணங்கிட்ட கேட்டேன்.. ”டேய் நம்ம காலேஜ்ல பண்ண காமெடி எதாவது சொல்றா
எழுதி ரொம்ப நாளாச்சி”ன்னேன்.. அதுக்கு
அவன் ”காமெடி தான.. உன்
காதல் கதைய எழுது. அதான் இருக்கதுலயே பெரிய காமெடி”ன்னான். அய்யோ அசிங்கமா போச்சே. சரி விட்ரா.. சிரிப்பு
காட்டாத எதாவது சொல்லுன்னேன். ”இந்த ஃபைனல் இயர்ல ஹாஸ்டல மூடுனாய்ங்களே அதப்பத்தி எழுதுடா “ அத
எழுதிட்டேண்டா..”இந்த 1st year ல ஓப்பண்டே
கொண்டாடுனோமே அது” அட அதையும்
எழுதிட்டேண்டா “இந்த 3rd ல பசங்க உள்ள
பூந்து அடிச்சாய்களே..அது..” டேய் அது 3rd இயரா.. அப்போ செகண்ட் இயர்ல என்ன பண்ணோம்? ”அட செகண்ட் இயர்ல
தான் கல்சுரல்ஸ்ல ப்ரைஸ் குடுக்கலன்னு கலவரம் பண்ணோமே”.. அட ஆமா.. சரிவிடு என்னடா இது..
ஒண்ணு ரெண்டா இருந்தா பரவால்லை. ரத்த பூமில எந்தக் கலவரத்த ஞாபகம் வச்சிருக்கது. சரி வாங்க..
அப்டியே கலந்தா மாதிரி கொஞ்சம் சரித்திரத்த புரட்டிப் பாப்போம்.
வழக்கமா Culturals நம்ம காலேஜ்ல மூணு நாள் நடக்கும். ஆனா அத ஒருவருஷம் கூட
ஒழுங்கா நாங்க பாத்ததில்லைன்னா
பாத்துக்குங்க. ஏன்னா 1st இயர் முழுசுமே
ஹாஸ்டல விட்டு வெளிய வந்தாலே ராகிங் பண்றேங்குற பேர்ல சீனியருங்கல்லாம் கூப்டுட்டு போயி
விளையாடுவாய்ங்க. ”டேய் பல்பு
மாட்டுடா.. பால் கறடா...”ன்னு டேய் எத்தனை
வருசம்டா இதயே பண்ணுவீங்க.. புதுசா எதாவது ரேகிங் பண்ண கத்துகிட்டு வந்து பண்ணுங்கடா. இதுல கொடுமை
என்னன்னா அவிங்க பண்ற காமெடிக்கு நம்மள சிரிக்க கூட விடமாட்டாய்ங்க. “என்னடா பல்லக் காட்டுற”ன்னு டெரரா
சொல்லுவாய்ங்க. அய்யயோ சார் ரொம்ப பயங்கரமானவரு போலன்னு நமக்கே பயம்
வரும். அதனால 1st year ல cultural la கலந்துகிட்டா
நம்மள தமாசாக்கி இவிங்க ஜாலி பண்ணிகிட்டு இருப்பாய்ங்கன்னு பெரும்பாலும் அந்தப்பக்கம்
போறதில்லை. அப்பாடா.. மூணு நாளு லீவுடோய்ன்னு மூட்டைய கட்டிகிட்டு ஊருக்கு கெளம்பிட்டோம்.
காலேஜ்ல ஒருத்தன் ரொம்ப சந்தோஷமா இருப்பான்னா அது செகண்ட்
இயர்ல தான். ஆனா அங்கயும் பாருங்க ஒரு கலவரம். மொத நாள் culturals la கலந்துகிட்டோம்.
எல்லா ஈவண்ட்லயும் கலந்துகிட்டோம். எங்ககிட்ட இருக்க அனைத்து
திறமையையும் கொண்டு போய் மேடையில கொட்டுன்னோம். ஆனா prize தரலியே... பசங்களுக்கும்
சரி பொண்ணுங்களுக்கும் சரி... எதுவுமே இல்லை. Prize தரனும்னா program நல்லா இருந்தா தான்
தருவாய்ங்களாம். எந்த ஊரு நியாம்டா இது..
(நம்ம சோ தான் நல்லாருக்காதேடா..) வக்காளி நம்ம year க்கு வேணும்னே prize தர
மாட்றாய்ங்கடா... ஆறும் culturals
பக்கம் போகக்
கூடாது... ஆறும் முருகப்பா ஹாலுக்கு நைஸா போயி ஸ்நாக்ஸ்
சாப்ட கூடாது. ஆறும் அங்க போயி சைட் அடிக்க கூடாதுன்னு சங்கத்துல சட்டம் போட்டாச்சி.
மறுநாள் Culturals நடந்துகிட்டு இருக்கு. செக்ண்ட் இயர் உட்காருற இடத்துல
மொத்தமா சீட்டு காலி. எவனும்
அந்தப்பக்கம் போவலை. காலையில ஹாஸ்டல்ல பொங்கல நல்லா ஃபுல் கட்டு கட்டிகிட்டு
மல்லாந்து மட்டையாயிட்டோம்.
இடையில Culturals நடத்துற ஃபைனல்
இயர் அண்ணனுங்கல்லாம் வந்து கூப்டாங்க. ”நாட்டாமை தீர்ப்புங்க..அத மீறி எங்களால ஒண்ணும் பண்ண
முடியாதுங்க” ன்னு சொல்லி
அனுப்பிட்டோம். இன்னும் ரெண்டு
மூணு தூது வந்தது. வந்தத வாசல்லயே வச்சி பேசி அனுப்பிட்டோம். அப்புறம் வந்துச்சி பாருங்க ஒண்ணு...
யாரு.. வேற யாருமில்லை.. நம்ம சம்பந்தம்.
ஓடுங்க.. எல்லாம் தாழ்வான பகுதிய நோக்கி ஓடுங்க. அது நம்மள
பாத்துருச்சி. சம்பந்தம் யாருன்னு உங்களுக்கு
தெரியும்னு நெனைக்கிறேன். தெரியாதவங்களுக்கு அவரப்பத்தி ஒரு சின்ன இன்ரோ. சம்பந்தத்துக்கும் உங்களுக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை. ஆனா சம்பந்தத்துக்கும் எங்க காலேஜூக்கும் ஒரு சம்பந்தம்
இருக்கு. ஏன்னா அது எங்க காலேஜ்ல தான் வேலை செய்யிது. சம்பந்ததத்துக்கும் எங்களுக்கும் ஒரு
சம்பந்தம் இருக்கு, ஏன்னா அது
எங்களுக்கும் ஒரு சப்ஜெக்ட் எடுத்துச்சி. சம்பந்தத்துக்கும் சம்பந்தத்துக்குமே ஒரு
சம்பந்தம் இருக்கு. ஏன்னா அது தான் சம்பந்தம். என்னடா அது
இதுங்குறானேன்னு ஒரு கன்பீன்சனா இருக்கா. எங்களுக்கும் அதே கன்பீசன் ரொம்ப நாளா இருக்கு. அத
அவன்னு சொல்றதா இல்லை அவள்ன்னு சொல்றதான்னு.
எல்லாரையும் காமன் ஹால்ல கூப்டு உக்கார வச்சிகிட்டு
நடுவாக்குல நம்மாளு chair
ah போட்டு உக்கார்ந்துருந்தாரு. ”டேய் இருட்டி
போனதுக்கப்புறம் இவன் ஏண்டா இங்க வந்துருக்கான்” “சமாதானம் பண்ண
வந்துருக்குடா மாப்ள” “என்னது
சமாதானமா... நெவர்’
“ஏம்பா culturals ah boycott பண்றீங்க” ன்னு சம்பந்தம்
வரலாறு அப்பா அஜித் ஸ்லாங்ல ஆரம்பிச்சாரு. (இனிமே சம்பந்தம் பேசுற மாதிரி வர்ற
எல்லா வசனங்களையும் அதே ஸ்லாங்ல படிக்கும் படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்
யுவர் ஹானர்)
“எங்களுக்கு
நேத்து எந்த evnet la யுமே prize தரல சார்.. இது
திட்டமிட்டு நடைபெற்ற சதி”
ன்னு எங்கள் தரப்பு
பப்ளிக் ப்ராசிகியூட்டர் வாதாட
“ஹே.. அப்டியெல்லாம் எதுவும் இல்லப்பா.. நீங்களா எதாவது ப்ராப்ளத்த க்ரியேட்
பண்ணாதீங்க.. Culturals ங்குறது
எல்லாரும் சேந்து பண்றது. இதுல ஒரு year students வரலன்னா எப்டிப்பா... ”ன்னு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்.. சரிடா நாங்க நாளைக்கு வர்றோம்.. நீ மொதல்ல எடத்த காலி
பண்ணுன்னு சொல்லியும் கெளம்பாம அட்வைஸ் பண்ணிகிட்டு இருந்தாரு.
”டேய் அதான்
வர்றோம்னு சொல்லிட்டோம்ல இன்னும் ஏண்டா இவன் இங்கயே உக்கார்ந்துக்கான்” ன்னான் ஒருத்தான்.
“ஒண்ணும் இல்ல மச்சி இன்னிக்கு
ஹாஸ்டல்ல பரோட்டா , தயிர் சாதம்னு
தெரிஞ்சி தாண்டா இந்தாளு வந்துருக்காரு.. ரெண்டு போட்டு போவ சொல்லுங்க.. இல்லைன்னா
கெளம்ப மாட்டாரு”ன்னு சொல்லி
அப்புறம் ஒரு வழியா அவர கெளப்பிவிட்டுட்டோம்.
அடுத்த நாள் culturals க்கு போனோம். ஆனா
எதுலயும் கலந்துக்கல. ஏனா?
திரும்பவும் நம்ம
சோ நல்லாருக்காது. திரும்பவும் prize தரமாட்டய்ங்க.. ஏன் கலவரம்.. நாம வெறும் ஆடியன்ஸாவே இருந்து ”சுனா பானா… அப்டியே போயிகிட்டு இரு.. ஒரு பய ஒண்ணும் பண்ண முடியாது”ன்னு கெத்த
மெயிண்டெய்ன் பண்ணிக்கிட்டே அந்த வருஷ culturals ah முடிச்சி வச்சோம்.
அடுத்த வருஷ ஸ்போர்ட்ஸ் மீட். வழக்கமா நம்ம காலேஜ்ல Men's Shield , Women's shield,
Overall shield ன்னு மூணு இருக்கும். அந்த வருஷம்னு பாருங்க Men's shield நம்மளுக்கு
வந்துருச்சி. இது பத்தாதா நம்மளுக்கு. ஏற்கனவே எங்களுக்கும் எங்க immediate seniors க்கும் செம
வாய்க்கா தகறாரு. Men's
shield ah வேற எடுத்தாச்சா... சும்மாவே ஜங்கு ஜங்குன்னு ஆடுவோம். இதுல
சலங்கைய வேற கட்டிவிட்டா கேக்கவா வேணும். டேய் நாங்கல்லாம் prize வாங்காதப்பவே பல கலவரங்கல பண்ணவிங்கடா.. இப்போ shield eh வாங்கிட்டோம்...
“ஆம்பளை சிங்கம்
யாரு...
3rd year தான் பாரு”
“ஊட்டியில
தேயிலை...
----------------------------”
(கோடிட்ட இடத்தில் உள்ள வாக்கியம் சென்சார்
செய்யப்பட்டுள்ளது)
Sports meet முழுசுமே நம்ம
பசங்க இதே கோஷங்கள முழங்கிகிட்டே இருக்க final year வெறியாயிட்டாய்ங்க.
இதுல கொடுமை என்னனனா சம்பந்தமே இல்லாத
சம்பந்தத்த வேற அப்பப்போ நம்ம பயலுக கழுவி கழுவி ஊத்திகிட்டு இருந்தாய்ங்க. போன வருசம் நடந்த
மேட்டர்களப் மனசுல வச்சிக்கிட்டு இந்த வருஷம் culturals க்கு சம்பந்தம் permission குடுக்க மாட்டேனுட்டாரு. அப்புறம் கெஞ்சி கூத்தாடி final year 2-1/2 நாள் மட்டும்
Culturals நடத்துறதுக்கு permission
வாங்குனாய்ங்க.
விடுவோமா நாங்க. போவலியே...
Sports meet கலவரத்த கொஞ்சம் extend பண்ணி இதயும் boycott பண்ணோம். நம்ம பயலுக்கிட்ட ஒரு
கெட்ட பழக்கம் என்னன்னா லீவுன்னு ஒரு வார்த்தைய காதால கேட்டுட்டாய்ங்கன்ன அடுத்த நிமிஷம்
காரைக்குடி பஸ் ஸ்டாண்டுல பையோட நிப்பாய்ங்க. Culturals
க்கு தான் போவலியே.. எல்லாம் திருச்சி,
திண்டுக்கல் மதுரைன்னு ஊரப்பாக்க கெளம்பிட்டாய்ங்க. ஹாஸ்டல்ல இருந்த்தே மொத்தமா ஒரு 20 பேர் தான்.
ஏன்னா எல்லாம் சென்னை பயலுக. மத்தவிங்க மாதிரி
பொசுக்குன்னு கெளம்பிட முடியாது. நான் மதியம் லஞ்ச இங்க முடிச்சிட்டு
மெதுவா கெளம்பி பட்டுக்கோட்டைக்கு போவோம்னு இருந்தேன்.
Final year அவனுங்களுக்கு காளைய symbol ah வச்சிருந்தாய்ங்க. எங்க
பேட்ச்ல பால விக்னேஷ்னு ஒரு பையன் இருந்தான். நல்ல ட்ராயர். ஹலோ.. ஹலோ நல்லா படம் வரைவான்னு சொல்ல வந்தேன். அவன்கிட்ட ஒரு chart வாங்கி குடுத்து ஒரு காளைய
சிங்கம் அடிச்சி சாப்டுற மாதிரியும், அந்த காளையோட கொம்பு ஒடிஞ்சி
தொங்குற மாதிரியும் ஒரு படம் வரைஞ்சி எங்க ஹாஸ்டல் வெளி கேட்டுல மாட்டி விட்டுட்டோம்.
ஃபைனல் இயர் பசங்க காலெஜுக்குள்ள போகனும்னா எங்க ஹாஸ்டல தாண்டி தான்
போகனும். போகும் போதே எல்லாம் அத வெறித்தனமா பாத்துட்டு போனாய்ங்க.
இது ஒட்டுன அப்புறம் நானும் பாலவிக்னேஷும் போய் அந்த மாட்டுக்கு ஒரு
பொட்டு வேற வச்சிட்டு வந்தோம்.
கொஞ்ச நேரத்துல யார்ட்ட போய்
சொன்னாய்ங்களோ, க்ளர்க் கருமுண்டம் அந்த chart ah சுத்தி
எடுத்து பத்தரமா வச்சிகிச்சி. “டேய் இத வச்சி இவன் என்னடா பண்ணப்
போறான்.. வீட்டுக்கு எடுத்துட்டு போய் குழந்தைக்கு விளையாட குடுப்பானோ
”. மணி ஒண்ணரை ஆயிடுச்சி. ஒரு ரியாக்சனுமே இல்லை.
சரி ரைட்டு.. ஊருக்கு கெளம்பலாம்னு பைய எடுத்துகிட்டு
கெளம்புனா ஹாஸ்டல் ரோட்ட ஃபுல்லா அடைச்சிகிட்டு அண்ணியன்ல எறுமைமாடு திபு திபுன்னு
ஓடுமே அதுமாதிரி வர்றாய்ங்க.. நா அப்புடியே ஸாக் ஆயிட்டேன்.
அதாவது cultural முடியிற வரைக்கும் பொறுமையா இருந்துட்டு
முடிஞ்சோன பொங்கி எழுறாங்களாம்.. டேய் இதானாடா உங்க டக்கு.
நல்லா பொங்குனீங்க போங்க.. சரி மாட்டுனா கும்மிருவாய்ங்க… நாம எந்த year ன்னே தெரியாத மாதிரி எஸ்கேப் ஆயிருவோன்னு பொத்துனாப்ல ரோட்டு ஓரமா போய்கிட்டு
இருந்தேன். வக்காளி எவனோ ஒருத்தன்
“டேய்
இவனும் அந்த இயர் தாண்டா…”ன்னுட்டான்.
“டேய் எங்கடா போற”ன்னான் இன்னொருத்தன்.
“ண்ணேன்… ஊருக்கு போறேன்னே…”
“போலாம் போலாம்…
மொதல்ல ஹாஸ்டலுக்குப் போ” ன்னு பொடனில தட்டி ஊருக்கு
கெளம்புனவன ஹாஸ்டலுக்குள்ள திரும்ப அழைச்சிட்டு வந்துட்டாய்ங்க. சரி இன்னிக்கு அடைமழை வெளுத்து வாங்கப்போவுதுன்னு bag ah ரூம்ல வச்சிட்டு வேடிக்க பாத்துகிட்டு இருந்தேன். நம்ம
க்ளர்க் சார் நல்ல விபரமா வந்து ஹாஸ்டல்ல இருந்த 20 பசங்களையும் உள்ள வச்சி ஹாஸ்டல் மெயின் கேட்ட
பூட்டிட்டாப்ள. வெளில கும்பல வந்து நின்னவிங்க.. டேய் வெட்டிருவேண்டா,…
குத்திருவேண்டா… ன்னு போய் ஸ்டாண்டுல நிக்கிற சைக்கிள
ஒடைக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க. “ஏண்டா சைக்கிள ஒடைக்கவாடா இவளோ
பில்ட் அப்போட வந்தீங்க… அப்டியே ரெண்டு சைக்கிளு பஞ்சரா கெடக்கு.. அதயும் அப்டியே ஒட்டி விட்டுட்டு போங்கடா…” இது பத்தாதுன்னு ஹாஸ்டலுக்குள்ள
இருந்து திரும்பவும்
“ஆம்பளை சிங்கம் யாரு…
3rd year தான் பாருன்னு “ நம்ம பயலுக
ஆரம்பிச்சிட்டாய்ங்க.
”ஆத்தாடி.. டேய்.. சும்மா இருங்கடா.. அப்புறம்
சைக்கிள தூக்கிட்டு போயிற போறாய்ங்க.. நம்மள அடிக்கிறத விட நம்ம
சைக்கிள மேல தான் இவிங்க ரொம்ப இண்ட்ரெஸ்ட் காட்டுறாய்ங்க”
சம்பவம் நடந்துகிட்டு இருக்கும்போதே
ஹாஸ்டலுக்குள்ள ஒரு மண்ணெண்னையில ஓடுற ஆட்டோ மாதிரி டர்ர்ர்ர்ர்ர் ன்னு ஒரு சத்தம். என்னடான்னு எட்டிப்பாத்தா பழைய பஜாஜ் ஸ்கூட்டர்ல சம்பந்தம்.
“அய்யய்யோ.. இவன் ஏண்டா இங்க வந்தான். இந்தாளு வருவான்னு தெரிஞ்சா
நாம இவிங்க கூட சமாதானமாவே போயிருக்கலாமே…அவனுக்கு இவிங்களே
பரவால்லையே “ ன்னு நெனைக்கும் போது தான் தெரிஞ்சிது எல்லாம் நம்ம
க்ளர்க் அண்ணேன் பாத்த வேலை. “ண்ணேன்,, நாங்க நல்லா பண்றோமோ இல்லியோ.. நீங்க நல்லா பண்றீங்கண்ணே…“
சம்பந்தம் வந்தோன காலையில எடுத்து ஒளிச்சி வச்சிருந்த அந்த
chart ah சம்பந்ததுக்கிட்ட காமிச்சி ”சார் இந்தாங்க சார்.. இந்த பசங்க பண்ணிருக்கத பாருங்க சார்” ன்னு ஒரு பர்பார்மன்ஸ போட்டாரு.
உடனே சம்பந்தம் “ஹே… என்னய்யா இதெல்லாம். ஏன் இந்த மாதிரி எப்போ பாத்தாலும்
ப்ரச்சனை பண்றீங்க… you are the guys who created problem during the last year cultural also know?”
“இங்கிலீசு… நம்மகிட்ட… this is an unwanted statement irrelevant to the
current situation your honor” ன்னு மாத்தி மாத்தி பேசிகிட்டு இருக்கும்போது
final year பசங்க ஒரு பேப்பர
குடுத்தாய்ங்க.. அதுல பாத்தா வரிசையா ஒரு பதினாறு பேரு..
“அய்யய்ய… டேய் என்னடா இவனுங்க ஸ்கூல் லீடரு பேசுனவங்க
பேரெழுதி மிஸ்ஸுகிட்ட குடுக்குற மாதிரி குடுக்குறானுங்க… இவனுங்க
இன்னும் வளரவே இல்லடா”
”சார் இந்த் பேப்பர்ல இருக்க பேர்தான் சார் sports meet la எங்கள அசிங்கமா பேசி எங்க்கிட்ட வம்பிழுத்தவிங்க” ன்னு சொன்னாரு ஒரு final year அண்ணன்.
சம்பந்தம் வரிசையா ஒவ்வொருத்தர் பேரா படிக்க திடீர்னு "தேவிக்குமார்” ஒரு பேர படிக்கும் போது எங்களுக்கு டபீர்னு நெஞ்சி வெடிச்சிருச்சி… டேய்… தேவிக்குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) யாருன்னு உங்களுக்கு தெரியுமாடா.. அவனுக்கு காலேஜ் கிரவுண்டு எங்க இருக்குனே தெரியாதுடா.. அவன் உங்கள கிரவுண்ட்ல அசிங்கமா பேசி உங்ககிட்ட ப்ரச்சனை பண்ணானா… ஆக உங்ககிட்ட ப்ரச்சனை பண்ணவிங்க பேர நீங்க எழுதல.. உங்களுக்கு யாரு பேரெல்லாம் தெரியுமோ எல்லாத்தயும் எழுதி கொண்டு வந்துட்டீங்க… பலே வெள்ளையத் தேவா…“
நாட்டாமை
தீர்ப்புக்காக எல்லாரும் வெயிட்டிங்.. இந்த பதினாறு பேருக்கும் S.O குடுத்தாய்ங்க. அதுலயும் முக்கிய குற்றவாளியான மெக்கனிக்கல் பிரபு (முதல் எதிரி
விருமாண்டி), நவீன் (இரண்டாம் எதிரி கொத்தாளத் தேவன்) ,இளைய ராஜா (மூன்றாவது குற்றவாளி- நல்லம்ம நாயக்கர்) எல்லாரும் அடுத்த
பதினைஞ்சி நாளைக்கு சம்பந்தத்த டெய்லி மீட் பண்ணி கையெழுத்து போடனும்ன்னு சொன்னோன்ன final year பசங்க கலகலப்பு மண்டை கசாயம் மாதிரி “ஹ்ம்ம்... ஓக்கே” ன்னு சொல்டு பொய்ட்டாய்ங்க. டேய் உங்கள பெரிய ரவுடின்னு நெனைச்சேன்.. ஒரே அடில பொசுக்குன்னு பொய்ட்டீங்க..
அப்புறம் ரூமுக்கு போனப்புறம் “ S.O குடுத்த்து கூட பரவால்லடா… ஆனா அந்த மொகரைய டெய்லி போய் பாக்கனும்னு சொன்னாய்ங்க பாரு அது தாண்டா என்னால பொறுத்துக்க முடியலன்னு பிரபு மட்டும் தனியா பொலம்பிக்கிட்டு இருந்தான்.
அப்புறம் ரூமுக்கு போனப்புறம் “ S.O குடுத்த்து கூட பரவால்லடா… ஆனா அந்த மொகரைய டெய்லி போய் பாக்கனும்னு சொன்னாய்ங்க பாரு அது தாண்டா என்னால பொறுத்துக்க முடியலன்னு பிரபு மட்டும் தனியா பொலம்பிக்கிட்டு இருந்தான்.
எங்களுக்கு
முன்னால Cultural நடத்துன சீனியருங்க நாங்க குடுத்த தொல்லைக்கு என்ன சாபம் விட்டுட்டு போனாய்ங்களோ அப்டியே அது எல்லாம் நாங்க culturals நட்த்தும் போது வந்து தாக்க ஆரம்பிச்சிருச்சி.. பண்ண பாவமெல்லாம் சும்மா விடுமா…
அந்த
சரித்திரத்த பத்தி இன்னோரு நாள் பாப்போம்.
பதினாறு பருத்தி வீரர்கள்
பாக்ஸ் மண்டையனும் பாபா படமும்
நண்பேண்டா விருதுகள் - ACCET
ஹலோ யாரு தன்ராஜா