Wednesday, April 29, 2015

ஐ.... பி எல்!!!!


Share/Bookmark


















Saturday, April 18, 2015

காஞ்சனா 2 – சாமிப்பேய்!!!


Share/Bookmark
மிகப்பெரிய ஹிட்டான படத்துக்கு மட்டுமே சீக்குவல் எடுக்க நினைக்கிற இடத்துல, ரொம்பவே ஆவரேஜா போன முனி படத்துக்கு ரெண்டாவது பார்ட் எடுத்து, அத செம ஹிட்டாக்குனது லாரன்ஸோட மிகப் பெரிய சாதனை தான். சரியா போகாத படத்துக்கே அடுத்த பார்ட் எடுத்தவரு, சூப்பர் ஹிட்டான காஞ்சனாவுக்கு அடுத்த பார்ட் எடுத்ததுல பெரிய ஆச்சர்யம் ஒண்ணும் இல்லை. எனக்கு தெரிஞ்சி தமிழ் சினிமாவுல மூணாவது பார்ட் ரிலீஸ் பண்ண முதல் படம் இது தான்னு நினைக்கிறேன். இன்னும் கொஞ்ச நாள்ல ”தாம்பரத்துக்கும் செங்கல்பட்டுக்கும் நடுவுல, ஆவடிக்கும் அம்பத்தூருக்கும் நடுவுல, அதுக்கும் இதுக்கும் நடுவுல” ன்னு காய் மூய்னு கத்திக்கிட்டு இன்னொரு மூணாவது பார்ட் படம்  வரப்போகுதுங்குறது வேற விஷயம்.

காஞ்சனாவுலயே படம் முடியும் போது முனி-3 எடுக்கப் போறதுக்கான ஒரு சீன வச்சிருந்தாரு லாரன்ஸ். ஆனா அடுத்த பார்ட் எடுக்கப்போறதுக்கான க்ளூ குடுக்குற எல்லா படங்களுக்கும் நிச்சயம் அடுத்த பார்ட் வரும்னு நிச்சயம் சொல்ல முடியாது. மக்கள்கிட்ட அந்தப்படம் எப்படி ரீச் ஆகுதுங்குறத பொறுத்தும், அந்தப்படம் எவ்வளவு லாபம் தருதுங்குறதப் பொறுத்தும் மாறுபடும். உதாரணத்துக்கு 1989 ல தக்காளி C சீனிவாசன், பிரபு, அமலாவ வச்சி எடுத்த ”நாளைய மனிதன்” படம் நல்லா போனதுனால, அதோட அடுத்த பாகமான “அதிசய மனிதன்” ங்குற திகில் படத்த எடுத்து ரிலீஸ் பன்னாறு. அந்தப் படத்தோட கடைசிலயும் தொடரும்னு போட்டு தான் முடிச்சாரு. ஆனா அதிசய மனிதனால ஏற்பட்ட நஷ்டத்துல அடுத்த பகுதி எடுக்குற முயற்சிய விட்டுட்டாரு.

ஆனா லாரன்ஸ் சொன்ன மாதிரியே அடுத்த பாகத்த எடுத்து சொல்லி அடிச்சிருக்காப்ள. இதுல இன்னொரு நோட் பண்ண வேண்டிய விஷயம் என்னன்னா, படத்துக்கு பெரிய ஹீரோ படங்களுக்கு இருக்குற மாதிரி செம  First day ஓப்பனிங். செக்ண்ட் ஷோவுக்கு கூட, ஃபுல்லா குழந்தை குட்டிங்களோட ஃபேமிலி ஆடியன்ஸ். சரி இப்போ காஞ்சனா 2 வ பத்தி கொஞ்சம் பாப்போம்.

திகில் படங்கள்னாலே, ஒரு பெரிய பங்களா, அங்க போய் வாலண்டியரா போய் தங்குற ஒரு குரூப்பு, ஒவ்வொருத்தரா சாகுறது, முன்னால பேய தேடிட்டு திரும்பும்போது டக்குன்னு அது நம்ம பின்னால நிக்கிறதுன்னு மக்கள பயமுறுத்த சில டெம்ளேட் சீன்கள்தான் இருக்கு. ஹாலிவுட்ல கூட திகில் படங்கள்னா இப்பவும் இதே ஃபார்முலாதான். எப்பவும் ஜெயிக்கிற ஃபார்முலாவும் கூட. அதே ஃபார்முலாவுல வந்துருக்க அடுத்த படம் தான் நம்ம காஞ்சனா 2.

ஒரு டிவி சேனலோட டிஆர்பி ரேட்டிங்க ஏத்துறதுகாக, பேய் இருக்குறதா பொய் சொல்லி ஒரு ப்ரோக்ராம் பன்னலாம்னு கேமராமேன் லாரண்ஸ், டைரக்டர் டாப்ஸி, லைட் மேன் மனோபாலா டாக்டர் ஸ்ரீமன் உள்ளிட்ட ஒரு படப்பிடிப்பு குழு பாண்டிச்சேரி போற வழியில, பீச் ஓரமா இருக்க ஒரு பயங்கரமான பங்களாவ செலக்ட் பண்ணி போறாங்க. போய் இருக்கமாதிரியான சில சீன்கள இவங்களே க்ரியேட் பண்ணி ஷட்டிங் எடுத்துகிட்டு இருக்கும்போது, உண்மையான பேய் வேலையைக் காட்ட ஆரம்பிக்குது.

காஞ்சனாவுல நம்மள பயமுறுத்துனத காட்டிலும் இதுல பல மடங்கு பயமுறுத்திருக்காங்க. சொல்லப்போன, தமிழ் சினிமாவுல வந்த சிறந்த பேய் படங்களோட வரிசையில காஞ்சனா 2 வையும் சேத்துக்கலாம். முதல் பாதில அந்த அளவு இண்ட்ரஸ்டிங்காவும், செமைய நம்மள பயமுறுத்தியும் கொண்டு போயிருக்காங்க. லாரண்ஸ பயந்தவரா காட்டுற முதல் ரெண்டு மூணூ அருவை சீன்களை தவற, முதல் பாதில எல்லா சீனுமே செம. காமெடியோ இல்லை திகிலோ ரெண்டுல எதையாவது ஒண்ண போட்டு நம்மள வாயடைக்க வச்சிடுறாங்க.

காஞ்சனாவுலயே ஸ்ரீமன் காமெடில பின்னிருந்தாரு. அதே போல இந்தப் படத்துலயும். பத்தாததுக்கு, மயில்சாமி, மனோபாலா, ஜாவா சுந்தரேசன், ஓகே ஓகே ஜாங்கிரின்னு எல்லாரையும் நல்லா யூஸ் பண்ணி காமெடியும் செமையா வந்துருக்கு. இண்டர்வலலுக்கு அப்புறம் படத்தோட மொத்த செட்டப்பே மாறிடுது. முதல் பாதியில இருந்த அத்தனை பேரும் மாறி, லாரன்ஸ், டாப்ஸி, கோவைசரளா, ரேணுகான்னு ஒரு சின்ன குரூப்புக்குள்ள கதை சுத்த ஆரம்பிச்சிருது.

இண்டர்வல் முடிஞ்சி ஒரு கால் மணி நேரத்துக்கு அப்புறம், காஞ்சனா 2 திகில் பட வரிசையிலருந்து நகர்ந்து, சாதாரண மசாலா பட ரகத்துக்கு மாறிடுது. ஒவ்வொரு காட்சியையும் பாக்கும்போது, நாடாவுலருந்து லேசா எலி செத்த வாடை. அப்படியே அந்த நாடாவ புடிச்சிக்கிட்டே அடுத்தடுத்த காட்சிகளைப் பாத்தா நமக்கு தோணுறது என்னன்னா “ஆக மொத்தத்தில் இந்த நாடா நமக்கு ரொம்ப பழக்கப்பட்ட நாடா… அப்டியே இந்தப்பக்கம் கொஞ்சம் திரும்பும்மா” ன்னு திருப்பிப் பாத்தா, அதே பழைய காஞ்சனா.

கொஞ்ச நாளுக்கு முன்னால “The Conjuring” ன்னு ஒரு படம் வந்தது எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும். பயங்கரமான பேய் படம். ஓப்பனா சொல்லனும்னா, இந்த காஞ்சனா 2 வோட முதல் பாதி, The conjuring க்கு எந்த விதத்துலயும் குறைஞ்சது இல்லை. கேப்பே விடாம பயமுறுத்தி ஆடியன்ஸ நகர விடாம பண்ணிருவாய்ங்க. ஆனா இப்போ Conjuring க்கும் காஞ்சனாவுக்கும் உள்ள ஒரு வித்யாசம் என்னன்னா, Conjuring ல ஆடியன்ஸ பயமுறுத்தி, அந்த பயம் தெளியிறதுக்கு முன்னாலயே படத்த முடிச்சிருவாய்ங்க. ஆனா காஞ்சனாவுல முதல்பாதியில உண்டாக்குன பயத்த ரெண்டாவது பாதியில அவிங்களே தெளிவ வச்சிடுறாய்ங்க. படம் முடிஞ்சி வெளில வரும்போது ஒரு பயங்கரமான திகில் படத்த பாத்தோம்ங்குற ஒரு ஃபீலிங்கே இல்லாம போயிடுது.

அதுவும் செகண்ட் ஹாஃப்ல மல்டிபிள் பேய்கள். ஒரு ஆளுக்குள்ள எத்தனை பேயிங்க? உடம்புக்குள்ள போறதுக்கு இடம் இல்லாம shift போட்டு பேயிங்க குடும்பம் நடத்துது. பெரிய கொடுமை, “கங்காவ உடம்புல ஏத்திக்கிட்டு நீ வெளிய வா... சிவாவ உடம்புல ஏத்திக்கிட்டு நீ வெளிய வா” ன்னுலாம் சொல்றாய்ங்க. என்னடா பேய மெமரி கார்டு போட்டு பாட்ட ஏத்துற மாதிரி சொல்றீங்க?

படத்துல ஒரு பெரிய ப்ளஸ் S S தமனோட பிண்ணனி இசை. First half la பீதியக் கிளப்பி விட்டுடுது.  ஆனா அதே பின்னணி இசை தான் ரெண்டாவது பாதியில நம்மோட காதுக்குள்ள கடப்பாரைய விட்டு ஆட்டுது. க்ளைமாக்ஸலயெல்லாம் BGM மிடியல.  நாலு பாட்டும் ஒவ்வொரு மியூசிக் டைரக்டர் போட்டுறுக்காங்க. தமன் கம்போஸ் பண்ணிருக்க ”மொட்டைப் பையன்” பாட்டு மட்டும் சூப்பர். மத்ததெல்லாம் சுமார் ரகம் தான்.

டாப்ஸி சில ஆங்கிள்ல மட்டும் நல்லாருக்கு. மத்தபடி, டயலாக் பேசும்போதெல்லாம் மூஞ்ச பாக்க முடியல. கோவை சரளா, வழக்கம்போல சூப்பர். ரேணுகா, நல்லா நடிச்சிருக்காங்கன்னு சொல்றதுக்கு பதிலா நல்லா சிரிச்சிருக்காங்கன்னு சொல்லாம். ஃப்ளாஷ்பேக்ல வர்ற நித்யா மேனன் செம. ஆனா காஞ்சனாவுல சரத்குமார் ஃப்ளாஷ்பேக் அளவு இந்த ஃப்ளாஷ்பேக்ல ஒரு impact இல்லை. லாரன்ஸ் ஆளு சூப்பரா இருக்காரு. காஸ்ட்யூமெல்லாம் நல்லா இருக்கு. ஆனா, முனி முதல் பாகத்துலருந்து அவர் பயப்படுறமாதிரி பன்ற சில ஓவர் ஆக்டிங் மட்டும் கொஞ்சம் சகிச்சிக்க முடியல. ஓப்பனிங் சாங் choreography வாய்ப்பே இல்லை. லாரன்ஸோட ஒன் ஆஃப் த பெஸ்டு.


மொத்ததுல, லாரண்ஸ் ஆடியன்ஸோட எதிர்பார்ப்ப நிச்சயம் வீணடிக்கல. கண்டிப்பா ஒருதடவ பாத்து பயப்படலாம். ரெண்டாவது பாதிய இன்னும் கொஞ்சம் நல்லா குடுத்துருந்தா, காஞ்சனா 2 மிகப்பெரிய வெற்றிப்படமாயிருக்கும். 


Tuesday, April 14, 2015

பாலிருக்கீ.. பழமிருக்கீ!!!


Share/Bookmark
வழக்கம்போல அன்னிக்கும் நாலு தடவ அலாரத்த மாத்தி மாத்தி வச்சி புரண்டு புரண்டு படுத்து அப்பிடி இப்புடின்னு ஏழு மணிக்கு கண்ணத்தொறந்து தமன்னா முகத்துல முழிச்சி எழுந்தேன். என்னாடா வாழ்க்கை இது டெய்லி பல்லு வெளக்கனும் குளிக்கனும்னு, ஆபீஸ் போகனும்ன் சலிச்சிக்கிட்டே பல்ல வெளக்கிட்டு பாத்ரூம் பக்கம் போனேன். ஃபாரின் போகும்போது லைட்டா கலர் கொஞ்சம் தூக்கலா இருந்துச்சி. “சென்னை சரியான சூடு” ன்னு நினைச்சிகிட்டே குளிச்சேன். சரி ஆபீஸ் போறதுக்கு முன்னால சூட்டை கொஞ்சம் குறைச்சிட்டு போவோம்னு ஒரு கை வெந்தையத்த எடுத்து கையில வச்சி, ”சரிக்க் கமப்ப் பதந்நீசே… கபக் கபக் கப ஜலசே” ன்னு DSP பாட்ட பாடிக்கிட்டே கபக்குன்னு வாயில போட்டு தண்ணிய குடிச்சிட்டு கிளம்புனேன்.

டூவிலர எடுத்துகிட்டு கரெக்டா ”ஏழரை” மணிக்கு வீட்டுலருந்து ஃஆபீஸூக்கு கிளம்புனேன். (நோட் த டைம் யுவர் ஹானர்). திருவொற்றியூர்லருந்து ஆஃபீஸ் கரெக்டா 18 கிலோமீட்டர். அதிகபட்சம் அரை மணி நேரத்துல போயிடலாம். அதுவும் பர்மா நகர்லருந்து எண்ணூர் வரை போற பீச் ரோட்டுல வண்டி ஓட்டுற சுகமே தனி. Roadrash ல கடல் ஓரத்துல போற  மாதிரி ஒரு track இருக்கும். எனக்கு ஒவ்வொரு தடவ பீச் ரோட்டுல எண்ணூர் போகும் அதே ஞாபகம் தான் வரும். அதுவும் சாயங்காலம் வரும் போது, கடல் அலை அடிச்சி அந்த சாரல் பைக் ஓட்டிக்கிட்டு போற நம்ம மேல படுறதும், கடல் view வும் செம்ம சூப்பரா இருக்கும். 

“வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை” ன்னு பாட்ட பாடிக்கிட்டே வண்டில போய்கிட்டு இருக்க, லேசா இடுப்ப பின்னாலருந்து யாரோ புடிச்சி கிள்ளுற மாதிரி இருந்துச்சி. எவண்டா பையன் இடுப்ப புடிச்சி கிள்ளுறதுன்னு திரும்பி பாத்தா யாரையும் காணும். என்ன இது அடி வயிற்றிலே சிறிய மாற்றம்? காலைக்கடனெல்லாம் சிறப்பா செலுத்திட்டோமே அப்புறம் என்னன்னு யோசிக்கும் போதே கிள்ளுறது அதிகமாயிருச்சி. மொத நாள் கண்டதுகடியத திண்ணுட்டா மறு நாள் லேசா வயித்த வலிக்கும். ஆனா கொஞ்ச நேரத்துல சரியாப் போயிறும். 

அதுமாதிரி தான் இதுவும்னு நினைச்சி வண்டிய நிறுத்தாம ஓட்டிக்கிட்டே இருக்க, ஒரு கிலோமீட்டர் கூட தாண்ட முடியல. தாழக்குப்பம் ஓரமா வண்டிய நிறுத்திட்டு, வயித்த புடிச்சிக்கிட்டே ஒரு பெட்டிக்கடை ஓரமா உக்காந்துட்டேன். நிமிர்ந்து கூட நிக்க முடியல. ஒரு வார்த்தை பேச கூட முடியல. அவ்வளவு வலி. ஒரு மாதிரி கஷ்டப்பட்டு அந்த பெட்டிக்கடை அண்ணன்கிட்ட “அண்ணேன் இங்க பக்கத்துல ஹாஸ்பிட்டல் எதாவது இருக்கா” ன்னு கேட்க, “அடுத்த பில்டிங்கே ஹாஸ்பிட்டல்தான்பா” ன்னாரு.

வெறும் இருபது அடி நடந்தா ஹாஸ்பிட்டலுக்குள்ள போயிடலாம். ஆனா என்னால ரெண்டு அடி கூட எடுத்து வைக்க முடியல. ரோடு ஓரமா உள்ள அந்த கடை திண்டுலயே உக்காந்துகிட்டு, என்னோட ரூம்மேட்டுக்கு கால் பண்ணேன். கால அவன் எடுக்கல. ஆனா ஆண்டவன் புன்னியத்துல அவன் எனக்கு பின்னாலதான் பைக்குல வந்துருக்கான். நா ஓரமா உக்காந்துருக்கத பாத்து வண்டிய நிறுத்திட்டு “என்னாச்சி சிவா” ன்னு கேக்க என்னால “வயித்து வலி” ன்னு முழுசாக் கூட சொல்ல முடியல. கைத்தாங்கலா அந்த ஹாஸ்பிட்டல் உள்ள அழைச்சிட்டு போனான்.

ஹாஸ்பிட்டல் உள்ள போனதும் ரெண்டு நர்ஸ் இருந்தாங்க. அவங்ககிட்ட வயித்து வலின்னு சொன்னதும், “முன்னால மட்டும் வலிக்குதா இல்லை வலி பின்னால வரைக்கும் போகுதா?” னாங்க. பின்னால வரைக்கும் போகுதுங்கன்னேன். சரி படுங்கன்னு சொல்லிட்டு டாக்டர கூப்பிட பொய்ட்டாங்க. அதுக்குள்ள வலி எக்கச்சக்கமாகி என்னை அறியாமையே “அய்யோ அம்மா” ன்னு கத்த ஆரம்பிச்சிட்டேன். டாக்டரம்மா வந்து பாத்துட்டு, ஸ்டோன் மாதிரி இருக்கும்னு நினைக்கிறேன்னு நர்ஸுங்கள பாத்து எதோ ரெண்டு பேர் சொல்ல, ரெண்டு நிமிஷத்துல ரெண்டு ஊசிய போட்டாங்க. ட்ரிப்ஸ் போட்டா கொஞ்சம் பெட்டரா இருக்கும்னு டாக்டரம்மா சொல்ல, ட்ரிப்சையும் மாட்டி ஏத்த ஆரம்பிச்சாங்க.

வலி கொஞ்சமும் குறைஞ்சபாடில்ல. போதாக்குறைக்கு ட்ரிப்ஸ் ஏறிக்கிட்டு இருக்கும்போதே அதுல ரெண்டு ஊசிய சேத்து வேற போட்டாங்க. ஒண்ணும் வேலைக்கு ஆகல. 8 மணிக்கு ஹாஸ்பிட்டல் உள்ள வந்த எனக்கு, 9 மணி ஆகியும் வலி கொஞ்சமும் குறையல. “அய்யயோ.. எதாவது மயக்க ஊசி இருந்தா போடுங்களேன்.. அய்யயோ தூக்க ஊசி இருந்தா அதையாச்சும் போடுங்களேன்” ன்னு என்னென்னவோ கத்துனேன். வானத்துல செல்லாத்தாவும், நாரதரும் கைகுலுக்கிட்டு போறது கண்ணுல தெரிய ஆரம்பிச்சிருச்சி. இன்னிக்கு உனக்கு க்ளைமாக்ஸ்தாண்டின்னு உள்ளுக்குள்ள நினைச்சிக்கிட்டேன்.

“சார்.. எங்ககிட்ட இருக்க எல்லா pain கில்லரும் போட்டாச்சி. இதுக்கு மேலயும் வலி நிக்கலன்னா நீங்க ஸ்கேன் பன்னி தான் பாக்கனும்னு ஸ்கேனுக்கு எழுதிக்குடுத்தாங்க. அதுவும் பக்கத்துலயெல்லாம் ஸ்கேன் பண்ணக்கூடாதாம். அவங்க செட்டிங்க் போட்டு வச்சிருக்க ராயபுரம் ibeam ல தான் ஸ்கேன் பன்னனும்னு வேற சொல்லிட்டாங்க. அப்புறம் ஹாஸ்பிட்டல் வெளியவே  இருந்த ஆட்டோ எடுத்துகிட்டு ஆட்டோவுலயே படுத்துக்கிட்டு ராயபுரம் போய் சேர மணி பதினொன்னு. போனா 12 மணிக்கு தான் ஸ்கேன் பன்ன முடியும்னு சொல்லி ஓரமா படுக்க வச்சிட்டாய்ங்க. வலி ஒரு இம்மி கூட குறையல. என்னோட பயமெல்லாம் ஒரு வேளை அப்பண்டிக்ஸா இருக்குமோ? வலி தாங்கமுடியலையே ஒரு வேளை அப்பண்டிக்ஸ் வால்வு பெருசாகி வெடிச்சிருக்குமோன்னு தான்.

ஒரு மணிக்கு ஸ்கேன் பண்ணி முடிச்சி, அந்த ரிப்போர்ட்ட எடுத்துகிட்டு திரும்ப பேங்ளூருக்கு நேர் எதிர இருக்க எண்ணூருக்கு போனா விடிஞ்சிரும்னு நினைச்சிகிட்டு, பக்கத்துலயே அவங்க சொன்ன இன்னொரு யூராலஜி டாக்டர்கிட்ட போனோம். ரிப்போர்ட்ட பாத்த உடனே “இது ஸ்டோனுங்க.. 5mm. சின்னதா தான் இருக்கு. கரைச்சிடலாம்” ன்னாரு. “ஐ சின்ன கல்லு பெத்த லாபம்”. அப்புரம்தான் அப்பாடா சேகர் பொழைச்சிருவாண்டா ன்னு எனக்கு ஓரளவு நம்பிக்கையே வந்துச்சி. அந்த ஹாஸ்பிட்டல்ல திரும்ப 2 ட்ரிப்ஸும், 5 இன்ஞ்ஜெக்‌ஷனும் போட்டப்புறம் லேசா வலிய மறந்து தூங்குனேன். காலையில 7.45 க்கு வந்த வலி கிட்டத்தட்ட மதியம் 3 மணிக்கு தான் நின்னுச்சி.

அப்புறம் ரெண்டு வாரத்துக்கு மருந்து மாத்திரைங்கள வாங்கிக்கிட்டு ஒரு வாரம் வீட்டுல ரெஸ்ட போட்டுட்டு இப்பதான் ஆஃபீஸ் வந்துருக்கேன். கல்லு கரைஞ்சிதா இல்லை கல்லு மாதிரி அசையாம அங்கயே இருக்கான்னு அடுத்த ஸ்கேன் எடுத்து பாத்தாதான் தெரியும்.
இந்த கல்லு பெரும்பாலும் ஆண்களுக்கு தான் அதிகம் வருதாம். ஒழுங்கான உணவு முறை இல்லாததாலயும், தண்ணி கொஞ்சமா குடிக்கிறதாலயும் வர்ற எஃபெக்ட்டு தான் இது. வலது பக்க முன் வயிற்று பக்கத்துலருந்து பின் பக்கம் வரைக்கும் வலிச்சா கண்டிப்பா அது இந்த கல்லோட வேலையாத்தான் இருக்கும். இல்லை அடிக்கடி இடுப்ப ஒட்டி முதுகு பக்கமா லேசா வலிக்கிற மாதிரி இருந்தா, அதுவும் இந்த கல்லோட அறிகுறிதான். உடனே செக் பண்ணிக்கிறது உசிதம்.

அதுவும் இந்த சம்மர் சீசன் தான் இந்த கல்லுக்கு சீசன் போல. நிறைய பேருக்கு வருதாம். அதனால நிறையா தண்ணியடிங்க ச்சீ தண்ணிகுடிங்க. வாழைத்தண்டு, முள்ளங்கிய அதிக அளவுல சாப்பாட்டுல சேர்த்துகுங்க. இல்லைன்னா நீங்களும் “பாலிருக்கீ.. பழமிருக்கீ.. என் கிட்னீல கல் இருக்கீ” ன்னு பாட்டுப் பாட வேண்டிய நிலமை வந்தாலும் வந்துடும்.

ஒரு வேளை வந்துட்டா, ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. சின்னதா இருந்தா மாத்திரை, பெருசா இருந்தா லேசர்ன்னு ட்ரீட்மெண்ட் நிறைய இருக்கு. ஆனா மொத மொதல்ல வலி வர்றப்போ நரகத்த கண்ணு முன்னால கொண்டு வந்து நிறுத்திடும். இந்த பதிவ இவ்வளவு லென்த்தா சொன்னது கொஞ்சம் அருக்குற மாதிரி இருந்துருக்கும். ஆனா அந்த வலி வந்தா எவ்வளவு கடியா இருக்கும்னு சொல்லத்தான் எல்லாத்தையும் வெளாவாரியா எழுதுனேன். யாருக்காவது ரத்தம் வந்திருந்தா மன்னிச்சிடுங்க.


அதனால நா இன்னா சொல்ல வந்தேன்னா, “கொஞ்சம் உசாரா இருங்க நண்பர்களே!!!”. 


Friday, April 3, 2015

கொம்பன் – கலக்கிட்டடா காப்பி!!!


Share/Bookmark
ரெண்டு நாளுக்கு முன்னால ரூம்மேட் ஒருத்தர்கிட்ட “ஜி.. கொம்பன் வருது போலாமா?” ன்னேன். உடனே அவன் பதறிப்போய் “ அய்யயோ ஜீ.. அவன் குட்டிப்புலி டைரக்டர்ஜீ… அது ரொம்ப ஆபத்தான மிருகம். உயிருக்கு உத்திரவாதம் இல்லை” ன்னான்.  “ஜீ கார்த்தி, ராஜ்கிரனெல்லாம் இருக்காய்ங்கஜீ.. வாங்க ட்ரை பண்ணலாம்” ன்னு எவ்வளவு தான் மண்டைய கழுவிப்பாத்தாலும் “எனக்கு ஏற்கனவே பாடி கண்டிஷன் சரியில்லைஜீ.. நீங்க வேற இதுக்கு அழைச்சிட்டு போய் பெட் ரெஸ்ட் எடுக்க வச்சிடாதீங்க” ன்னுட்டான். என்னா உசாரா இருக்காய்ங்கய்யான்னு நினைச்சிட்டு கடைசில தெலுங்கு படத்துக்கு போறது மாதிரி நா மட்டும் தனியா, நம்பிக்கையோட கொம்பனப் பாக்கப் போனேன்.

ஒவ்வொரு டைரக்டருக்கும் ஒரு கெப்பாகுட்டி இருக்கு. அந்த கெப்பாகுட்டி எந்த அளவு இருக்குங்குறத அவங்க முதல் படத்துலயோ இல்லை அதிகபட்சம் ரெண்டு மூணு படங்கள்ல காமிச்சிருவாங்க. அதுக்கப்புறம் அவங்க எத்தனை படம் எடுத்தாலும் அவ்வளவு தான் நாம எதிர்பாக்கனும். அதுக்கு மேல எதிர்பாத்தா ஏமாற்றம் தான். அந்த மாதிரி இயக்குனர் முத்தையா தனது ரெண்டாவது படத்துல அவர் கெப்பாகுட்டி என்னன்னு காமிச்சிருக்காரு. குட்டிப்புலி தான் அவரோட கெப்பாகுட்டி. அதுக்கு மேல நாம அவர்கிட்ட எதிர்பாக்க கூடாதுன்னு செவுள்ல அடிச்சா மாதிரி ப்ரூவ் பண்ணிருக்காரு.

ஜிகிர்தண்டா படத்துல First Half ல சங்கிலி முருகன் கேரக்டர் ஏண்டா வருதுன்னு நமக்கு உறுத்தலா இருக்கும். ஆனா செகண்ட் ஹாஃப்ல அவரை வச்சே ஒரு சூப்பர் சீன் பன்னிருப்பாங்க. அதுல அவரு “என்னோட கதையை படமா எடுக்க ஒரு ப்ரோடியூசர் வந்தாரு. ஆனா அந்தப் படத்துல அவரோட சொந்தக்காரன் ஒருத்தனை நடிக்க வைக்கனும் சொன்னாரு. நா முடியாதுன்னு கடைசி வரைக்கும் அடம் புடிச்சேன். கடைசில படம் எடுக்க முடியாதுன்னு அந்த ப்ரோடியூசர் பொய்ட்டாரு. நீ போய்யா உன்ன மாதிரி ஆயிரம் ப்ரோடியூசர் எனக்கு கிடைப்பான்னு நினைச்சிக்கிட்டேன். ஆனா அதுக்கப்புறம் இப்ப வரைக்கும் அந்த ஆயிரம் பேர்ல ஒருத்தன கூட நா பாக்கல. வாய்ப்பு ஒரு தடவ தான் வரும். அத ஒழுங்கா யூஸ் பன்னிக்கனும்” ன்னு சொல்லுவாறு.

கார்த்தி, ராஜ்கிரன்ன்னு இன்னிக்கு தமிழ் சினிமாவுல இருக்க ரெண்டு பெரிய நல்ல நடிகர்கள இயக்குறதுக்கு வாய்ப்பு கிடைச்சும் டைரக்டர் முத்தையா அத சரியா உபயோகிச்சிக்கலன்னு தான் சொல்லனும். கதை, திரைக்கதை காட்சி அமைப்புன்னு எந்த விதத்துலயும் எதையுமே புதுசா மக்களுக்கு காட்டிறக் கூடாதுங்குறதுல டைரக்டர் ரொம்ப ரொம்ப கவனமா இருந்துருக்காரு. எதுவுமே நம்மள பெருசா இம்ப்ரெஸ் பன்ன மாட்டேங்குது.

வழக்கம்போல மீசையை முறுக்கி விட்டுக்கிட்டு, (மதுரை ஸ்லாங்ல படிங்க) “என்னா லந்த குடுத்துக்கிட்டு இருக்காய்ங்க” “ ஓவரா பேசுனா சங்க அறுத்து விட்டுவேண்டா..” ”அவியிங்கள செய்யாம விடக்கூடாதுடா” மாதிரியான டெம்ளேட் மதுரை வசனங்களை பேசிக்கிட்டு திரியிற ஊர்க்காரய்ங்க மத்தியில சண்டியர் மாதிரி திரியிற ஒருத்தர் நம்ம குட்டிப்புலி. ச்ச சாரி.. இது கொம்பன்ல.. ரெண்டுக்கும் வித்யாசம் தெரியாததால கன்பீஸ் ஆயிட்டேன். அட ஆமாப்பா.. அப்டியே சசிகுமார் மொகரைக்கு பதிலா கார்த்தி மொகரைய வச்சா அதான்பா கொம்பன் என்கிற கார்த்தி.

யாரப்பாத்தாலும் செருப்பு காலோட தூக்கி நெஞ்சில நச்சுன்னு மிதிச்சிருவாப்ள கொம்பன். சண்டை வைக்கனும்னே வாலண்டியரா ஒரு நாலஞ்சி குருப்பு வந்து வந்து இவன்கிட்ட வம்பிழுப்பாய்ங்க. அட போதும்பா.. கொம்பன் நல்லா அடிப்பாருன்னு சாரி நெஞ்சில மிதிப்பாருன்னு எங்களுக்கு தெரியும் விடுங்கப்பான்னாலும் விட மாட்றாய்ங்க.

பக்கத்து ஊர்காரான ராஜ்கிரன், அவர் மகளை கொம்பனுக்கு கல்யாணம் பன்னி கொடுக்க, அந்த ஊர் மேல உள்ள வெறுப்புலயும், ராஜ்கிரன் மேல உள்ள சில கடுப்புலயும் மாமனாரான ராஜ்கிரன கார்த்தி மதிக்கவே மாட்டேங்குறாரு. ஒரு கட்டத்துல மகளுக்கு துணையா கார்த்தி வீட்டுலயே இருக்க ராஜ்கிரன அசிங்கமா பேசி அடிச்சி அவமானப்படுத்தி கார்த்தி அனுப்பிட அதுக்கப்புறம் எப்படி ஒண்ணு சேர்ந்து, ஏற்கனவே இவிய்ங்க உரண்டை இழுத்து வச்சிருக்க “சங்க அருத்துருவேண்டா” குரூப்போட சண்டை போட்டு எப்புடி எஸ் ஆவுறாய்ங்கங்குறது தான் கொம்பன்.

இந்த மாதிரி அருவா, ஊர்ப்பகைன்னு, கிராமத்து வெட்டுகுத்து டைப் படம்னாலே க்ளைமாக்ஸ யாரயாவது போட்டு தள்ளுவாய்ங்க. இதுலயும் படம் பாக்கும் போது, யாரக் கொல்லப்போறாய்ங்க? ராஜ்கிரனா, கார்த்தியா, லட்சுமி மேனனா இல்லை க்ளைமாக்ஸுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சாகுறதுக்குன்னே அளவெடுத்து தச்சா மாதிரி இருக்க தாய் மாமன் தம்பி ராமைய்யாவான்னு ஒரே கன்பீசன்ல இருந்தேன். ஆனா செத்தது யார் தெரியுமா? சொல்லகூடாது சொல்லகூடாது அதெல்லாம் சொல்லகூடாது.

என்னதான் இந்தப் படம் குட்டிப்புலி மாதிரி இருந்துச்சின்னு சொன்னாலும், குட்டிப்புலி அளவு மனுஷன வெறியாக்கல. காரணம் ரெண்டே ரெண்டு. கார்த்தி & ராஜ்கிரனோட ஸ்க்ரீன் ப்ரசென்ஸ். கார்த்தி ஆளு செம்ம கெத்தா இருக்காரு. இருக்குற ஏழெட்டு ஃபைட்டும் ஒரே மாதிரி தான் இருக்குன்னாலும் பாக்க நல்லாதான் இருக்கு. இன்னும் கொஞ்சம் அழுத்தமான காட்சிகளும், வசனங்களும் வச்சிருக்கலாம். ஆள் இருக்க கெத்துக்கு படத்துல சீன்ஸ் இல்ல.

ராஜ்கிரன் உண்மையிலயே கொடூர நடிப்பு. லட்சுமி மேனனோட அப்பாவா, கார்த்திகிட்ட அவமானப்படும்போதும் சரி, கார்த்திகிட்ட அடி வாங்கிட்டு அழும்போதும் சரி அவர் முகத்த பாத்து நமக்கே அழுகை வருது. வாய்ப்பே இல்லை. ரொம்ப நாளுக்கு அப்புறம், இந்த படத்துதோட செகண்ட் ஹாஃப்ல கார்த்தியும், ராஜ்கிரனும் பேசுற ஒரு சீன்ல எனக்கு தியேட்டர்லயே கண்ணுல தண்ணி வந்துருச்சி. விட்டுறுங்க விட்டுறுங்க வலிக்குதுன்னு நா நிறைய படத்துல அழுதுருக்கேன். ஆனா இந்த மாதிரி ஃபீலிங்ல அழுததில்லை

ஒரு சீன்ல, ஜெயில்ல உள்ள கைதிகளையெல்லாம் உக்கார வச்சி படம் போட்டு காமிக்கிறாங்க. என்ன படம் தெரியுமா? நம்ம தளபதியோட ஜில்லா. தண்டனை கிடைச்சிதான் ஜெயிலுக்குள்ள வந்துருக்காய்ங்க எல்லாரும். இன்செப்ஷன்ல வர்ற கனவுக்குள்ள கனவு மாதிரி தண்டனைக்குள்ளயே இன்னொரு தண்டனையா. பாவம்யா.

கார்த்தியோட அம்மாவா வர்ற கொரியன் செட்டு கோவை சரளா பல இடங்களில் கேரக்டருக்கு பொறுந்தாத மாதிரி இருந்தாலும் அப்பப்போ அடிக்கிற சில ஒன்லைன் கமெண்ட்டு நல்லா இருக்கு. கார்த்தியோட தாய்மாமனா தம்பி ராமைய்யா. ஒரே ஒரு இடத்துல சிரிப்பு வந்த மாதிரி ஞாபகம் இருக்கு. ஒரு டம்மி கேரக்டர்ல கர்னாஸ்.

கார்த்தி கெட்டப்புலயும், நடை உடை பாவனை அத்தனையிலயும் பருத்திவீரன ஞாபகப்படுத்துறாரு. லட்சுமி மேனன பாத்த குஜால்ல அவர் பாடுற “அடி கருப்பு நிறத்தழகி” பாட்டும், கொரியோகிராஃபியும் அப்படியே ”ஒத்த சொல்லால” ய ஞாபகப்படுத்துது.  நாலு பாட்டுல மூணு ஓக்கே. கருப்பு நிறத்தழகி செம.  

இவ்வளவு நொள்ளை சொல்லிட்டு எதுக்கு டைட்டில்ல கலக்கிட்டடா காப்பின்னு போட்டேனு கொஞ்சம் வெறியாயிருப்பீங்களே. U for mistake. நா என்ன சொல்ல வந்தேன்னா பருத்திவீரன் ங்குற பால்ல, குட்டிப்புலி ங்குற காப்பி தூளப் போட்டு, கார்த்தி, ராஜ்கிரண்ணு கொஞ்சம் சர்க்கரையை சேத்து கலக்கி நமக்கு குடுத்தால கலக்கிட்டடா காப்பின்னு சொன்னேன்.


மொத்ததுல கொம்பன் குட்டிப்புலி வெர்ஷன் 2.0 தான். ஆனா கார்த்தி மற்றும் ராஜ்கிரனோட ப்ரசென்ஸ் இந்த படத்த அத விட கொஞ்சம் மேல தூக்கி விட்டுருக்கு அவ்வளவுதான். கண்டிப்பா பாக்கலாம். போர் அடிக்கல ஆனா அதே சமயம் பெருசாவும் ஒண்ணும் இல்லை. 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...