என்னதான் ஆண்ட்ராய்டு மொபைல் , ஜியோ சிம், 4G என்று வாழ்க்கை போய்க்கொண்டே இருந்தாலும் ஒரு சில பழக்க வழக்கங்கள் அன்றிலிருந்து இன்றுவரை நம் மக்களுடன் ஒன்றியே இருந்துவிட்டது. அவற்றில் ஒன்றுதான் ஜாதகம் பார்ப்பது. நல்லது கெட்டது என எது நடந்தாலும் “சனி பார்க்கிறான்... குரு சிரிக்கிறான்... சூரியன் முறைக்கிறான்” என ஒவ்வொரு கோள்களின் மேல் பழியைப் போட்டு விட்டு, நல்ல நேரத்திற்காக காத்திருக்கிறார்கள். அந்தக் காலம் இந்தக் காலம், படித்தவர்கள் , பாமரர்கள் என்ற வித்யாசம் இல்லாமல் ஒரு பகுதி மக்கள் இந்த ஜாதகக் கணிப்புகளை நம்பிக்கொண்டு தான் இருக்கின்றனர்.
அது பற்றி ஒரு சில பதிவுகள் எழுதலாம் என நினைக்கிறேன். ஏற்கனவே பலர் இது தொடர்பாக எழுதிய பதிவுகள் கொட்டிக்கிடந்தாலும் நமது பார்வையில் ஒரு முறை எழுதலாம் என்ற யோசனை . அதற்கு முன் நமது இணைய மக்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரிந்து கொள்வதற்காக ஒரு சிறிய சர்வே.
“ ஜாதகக் கணிப்புகளை நீங்கள் நம்புகிறீர்களா இல்லையா என்பதே எனது கேள்வி. நம்பலாமா வேண்டாமா என்பதல்ல. மேலும் கிளி ஜோதிடம், நாடி ஜோதிடம், கைரேகை ஓலைச் சுவடி ஜோதிடம் போன்றவற்றையும் அவை தொடர்பான உங்கள் அனுபவங்களையும் இதில் கருத்தில் கொள்ளவேண்டாம்.
