Wednesday, June 27, 2012

வைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்


Share/Bookmark
குறிப்பு : இந்த பதிவு வைத்தீஸ்வரன் கோவில் ஓலைச்சுவடி வரலாறுகளை பழிசொல்வதற்கோ அல்லது ஜோதிடத்தை நம்புபவர்களின் நம்பிக்கையை குலைப்பதற்காகவோ அல்ல. எனக்கு ஏற்பட்ட ஒரு சிறு அனுபவத்தின் தொகுப்பே.. மேலும் இப்பதிவில் குறிப்பிட்டுள்ள அனைத்தும்  கற்பனை அல்ல. உண்மையே..


போன வாரம் கம்பெனிக்கு தொடந்து ஒரு மூணு நாள் லீவு விட்டுட்டு (எனக்கு நானே லீவு விட்டுக்கிட்டேன்) அண்ணனோட திருமணத்துக்காக ஊருக்கு போயிருந்தேன்.  வெள்ளிக்கிழமை கொஞ்சம் freeya இருந்ததால வீட்டுல எல்லாரும் கும்பகோணத்த சுத்தியிருந்த கோயில்களுக்கு ஒரு நாள் டூர் மாதிரி கெளம்புனோம்... ஆலங்குடி  குருஸ்தலம், திருமணஞ்சேரி, திருக்கடையூர்னு பொய்ட்டு மதியம் 11.20 மணி போல வைத்தீஸ்வரன் கோயிலுக்குள்ள நுழைஞ்சோம். ஊருக்குள்ள நுழைஞ்ச உடனேயே
 "ஓலைச்சுவடி ஜோதிடம்" "நாடி ஜோதிடம்" "ஜோதிட சிகாமணி" "ஜோதிட கலாபூசன்" ன்னு பாக்குற இடமெல்லாம் இந்த மாதிரி போர்டுங்கதான்.

அந்த கோவிலுக்கு நா போனது அதுவே முதல்முறை.. ரொம்ப அருமையா இருந்துச்சி பாக்குறதுக்கு. கோவிலுக்கு உள்ள போற வழியில ரெண்டு சைடும் சின்ன சின்ன கடைங்க. வழக்கம் போல ஒருத்தர் வந்து அர்ச்சனை தட்டு வாங்கறதுக்காக எல்லாரையும் மறிச்சி அவர் கடைக்கு கூப்டாரு.. அர்ச்சனை வாங்கிட்டு கிளம்பும்போது கடைக்காரர் மெதுவா கிட்ட வந்து


 "கைரேகை எதாவது பாக்குறதுன்னா இப்பவே குடுத்துட்டு போங்க... நீங்க
வர்றதுக்குள்ள எடுத்து வைப்பாங்க"ன்னாரு

"எண்ணன்னே சொல்றீங்க... ஒண்ணும் புரியலயே"ன்னு நா கேக்க

"ஓலைச்சுவடி பாக்குறதுக்குப்பா..இங்க கோயில்பக்கத்துலயே பாக்குறாங்க... உங்களுக்கு பாக்கனும்னா உங்க கைரேகைய அங்க குடுத்துட்டு போங்க... உங்க கைரேகைக்கு  ஏத்த ஓலைச்சுவடிய அவங்க லைப்ரரிலருந்து தேடி எடுக்கவே பத்து பதினைஞ்சி நிமிஷம் ஆகும்.. அந்த ஓலைச்சுவடில உங்க பேரு உங்க அப்பா பேரு அம்மா பேரு எல்லாம் கரெக்டா வந்தா தான் உங்களுக்கு ஜாதகமே சொல்லுவாங்க.. 150 ரூவா தான்... ஒரு வேலை பேர்
சரியா வரலன்னா பாக்கமாட்டாங்க.. வந்துடலாம்... ஃப்ரீதான்.." ன்னாரு

"என்னது பல வருஷத்துக்கு முன்னாடி எழுதப்பட்ட ஒலைச்சுவடில நம்ம பேரு நம்ம குடும்பத்துல உள்ள பேரெல்லாம் இருக்குமான்னு அவர் சொன்ன விஷயங்கள் எனக்குள்ள ஒரு அமானுஷ்யமான எதிர்பார்ப்ப ஏற்படுத்துனுச்சி"

அவர் சொன்னத கேட்டதும் எங்கம்மாவும் நானும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கிட்டோம்.

"பாப்போமாடா"

"நீ சொல்லும்மா" ன்னேன்

"நீ எதுக்கும் மாமாட்ட கேளுடா... அவன் கரெக்டா சொல்லுவான்டா" ன்னு சொல்லுச்சி

முன்னாடி என்னோட தாய்மாமா சொக்கலிங்கம் போய்கிட்டு இருந்தாரு... அவருக்கு கொஞ்சம் நக்கல் ஜாஸ்தி

"மாமா இந்த ஓலைச்சுவடி ஜாதகம் பாக்கலாமான்னு அம்மா கேக்குது"

"என்னது ஓலைச்சுவடி ஜாதகமா? டேய் இவய்ங்கல்லாம் மொரட்டு ஃப்ராடுடா.. பேசாம வா.. பணத்த புடுங்கிருவாய்ங்க.." ன்னு சொன்னவுடனே நா கொஞ்சம் ஏமாற்றத்தோட அங்கனக்குள்ளயே நிக்க

"டேய் சொன்னா கேளு.... அத்தனையும் பொய்யி.. பேசாம வா சாமி கும்டுட்டு கெளம்புவோம்"ன்னாரு

"ஆரம்பத்துலயே கேட்டப் போட்டுட்டியா... வேற என்ன பண்றது" ன்னு தலைவர தரிசனம் பண்ண பொய்ட்டோம்..         


தரிசனம் முடிஞ்சி உள்ள உக்கார்ந்துருக்கும் போது அம்மா

"டேய் எவளவோ செலவு பண்றோம்.. ஒருதடவ என்ன சொல்றாய்ங்கண்ணு பாப்போமே" ன்னு அம்மா சொல்ல "உன் தம்பிகிட்ட கேளும்மா" ன்னேன்..

அது அவர்ட்ட போயி "தம்பி இவனுக்கு எதோ ஓலைச்சுவடி பாத்தே ஆவனுமாம்.. கொஞ்சம் அழைச்சிட்டு பொய்ட்டு வாயேன்... "ன்னு என்னைய போட்டு விட்டுருச்சி. ஆனா இந்த தடவ எதுவும் சொல்லாம சரி வாங்க போலாம்னு சொல்லிட்டு கூப்டுபோனாரு.நாங்க அர்ச்சனைவாங்குன கடைக்காரர் "வாங்கடே... நீங்க வருவீங்கன்னு தெரியும்டே" ன்னு மனசுல நெனைச்சிகிட்டே வாங்க வாங்கன்னு கோவிலுக்கு சைடுல இருந்த ஒரு வழில அழைச்சிட்டு போனாரு.

"ஓலைச்சுவடியா... அப்ப ஜாதகம் பாக்குறவருக்கு ஒரு 70 வயசு இருக்கும்.. நெஞ்சு வரைக்கும் தாடி வச்சிருப்பாரு... வெறும் ருத்ராட்ச மாலையா போட்டுருப்பாரு... காவி வேஷ்டி சட்டை போட்டுருப்பாரு" ன்னு அவரப்பத்தி எனக்குள்ளயே ஒரு கற்பனை ஓடிக்கிட்டு இருந்துச்சி.

ஆனா கோயில விட்டு வெளிய அவரு அழைச்சிட்டு போன எடத்துக்கு போய் பாத்தா ஒரு சின்ன கார்ப்ரேட் கம்பெனி மாதிரி வச்சி நடத்திகிட்டு இருந்தாய்ங்க.. ரிசப்ஷன்ல ஒருத்தர் வர்ரவங்க போறவங்க கைய எல்லாம் புடிச்சி வலுக்கட்டாயமா இங்க் க தடவி பேப்பர்ல கைரேகைய எடுத்து இன்னொருத்தர்கிட்ட குடுத்துட்டு ஒரு ரிஜிஸ்டர்ல வேற எண்ட்ரி போட்டுக்கிட்டு இருந்தாரு..

நாங்க உள்ள நுழைஞ்சதுமே "யாருக்கு பாக்கனும்.. யாருக்கு பாக்கனும்" பறபறன்னு  ஒருத்தன் கேக்க

"ஆகா..ரொம்ப ஆவலா எதிர்பாக்குறாய்ங்களே... அவசரப்பட்டு வந்து மாட்டிக்கிட்டோமோன்னு நெனச்சிட்டே, எனக்கு தாங்க பாக்கனும்"னு சொன்னன்.

உடனே அங்க இருந்த ஒரு INK pad la என் கைய வச்சி அமுக்கி ஒரு சின்ன துண்டு பேப்பர்ல கைரேகைய எடுத்துகிட்டாய்ங்க.. எடுத்தவன் கைலயே ஒரு சின்ன ஓலைச்சுவடி  கட்டு இருந்துச்சி.... போன மாசம்தேன் அத எங்கயோ ஆர்டர் குடுத்து செஞ்சிருப்பாய்ங்க போல.. கைரேகை எடுத்தவனுக்கு வயது 25 லருந்து 30 க்குள்ள தான் இருக்கும்.

"சரி நீங்க ஒரு 5 நிமிஷம் உள்ள உக்காருங்கன்னு ஒரு நாலுக்கு நாலு சைஸ்ல ஒரு சின்ன ரூம்ல உக்காரவச்சிட்டு உள்ள எங்கயோ போனாரு.. ஒரு ரெண்டே நிமிஷத்துல திரும்ப வந்தாரு.. கையில் முன்னாடி வச்சிருந்த அதே ஒலைச்சுவடிதான் இருந்துச்சி.. ரூம லாக் பண்ணிட்டு எதுதாப்புல சேர்ல உக்கார்ந்து ஆரம்பிச்சாரு....

சங்கத்தமிழ்ல, மூச்சுவிடாம ஓலைச்சுவடிய பாத்து எனக்கு புரியாத மாதிரியே எதோ படிச்சிட்டு "இப்ப நா படிச்சது கடவுள் வாழ்த்து" ன்னாரு.

"அப்புடியா... எனக்கு தான் ஒண்ணும் புரியலையே... நீங்க தேசியகீதத்த தமிழ்ல படிச்சேன்னு சொன்னா கூட நம்பித்தானே ஆகனும்" ன்னு நெனச்சிகிட்டு மேல சொல்லுங்கன்னு சொன்னேன்.

அவர் அதே மாதிரி புரியாத மாதிரியே அடுத்த ஓலைச்சுவடிலருந்து இன்னும் ஏதேதோ படிச்சிட்டு...

"உங்க அப்பா பேரு கா, கீ, கு , கே இதுல எதாவது ஒரு எழுத்துல தொடங்குமா?" ன்னு கேட்டாரு

"இல்லை" ண்ணேன்.

"ஆ, உ, வே, நா" இதுல எதாவது ஒரு எழுத்துல ஆரம்பிக்குமா?

"இல்லை"

"மா, மு, வ, ர" இதுல எதாவது ஒரு எழுத்துல ஆரம்பிக்குமா?

"இல்லை"

"வீ, ச, ஜெ, அ" இதுல எதாவது ஒரு எழுத்துல ஆரம்பிக்குமா?

"அடப்பாவிகளா இதுக்கு மேல தமிழ்ல எழுத்துக்களே இல்லையேடா... நீங்க இப்புடித்தான் ஒவ்வொருத்தரோட அப்பா பேரயும் ஒலைச்சுவடில கொண்டுவரீங்களா?" ன்னு நெனச்சிகிட்டு ஆமான்னேன்.அப்புறம் எங்க மேற்கண்ட எழுத்துக்கள்ல ஆரம்பிக்கிற தமிழ் பெயர்கள ஒண்ணு ஓண்ணா சொல்ல ஆரம்பிச்சி இதுவா இதுவா இதுவான்னு கேட்டு பதினைஞ்சி பேருக்கு அப்புறம் அத கண்டுபுடிச்சான்.. கண்டுபுடிச்சிட்டு "இருக்கே.. ஓலைச்சுவடில இருக்கே" ன்னு ஓலைச்சுவடில ஒரு பேனா மாதிரி வச்சி டிக் போட்டுகிட்டான்..

ஏண்டா அந்த தம்மா தூண்டு ஓலைச்சுவடிக்குள்ளயா இத்தனை பேரும் இருந்துச்சி.. அப்பா பேர கண்டுபுடிக்கிறதுக்கே இவளவு நேரம் ஆயிருச்சி.. திரும்ப அதே மாதிரி திரும்ப அம்மா பேர கண்டுபுடிக்க திரும்ப மொதல்லருந்து ஆரம்பிச்சி தமிழ்ல உள்ள அத்தனை பேரயும் கேட்டுட்டாரு.. கடைசில நானேதான் அம்மா பேர சொன்னேன்,.... அதுவும் ஓலைச்சுவடில இருக்குன்னு சொல்லி டிக் பண்ணிகிட்டாரு.. வெரிஃபிகேசனாமா..

திரும்ப என் பேர கண்டுபுடிக்கிறதுக்கும் இதே ப்ராசஸ்,,, அப்புறம் என் ராசி நட்சத்திரத்த கேட்டு தெரிஞ்சிகிட்டாரு.

"அப்ப சரி... இதுல உங்க வீட்டுல உள்ளவங்க பேரு இருக்கதால இதான் உங்களுக்கான ஓலைச்சுவடி... பலன் சொல்ல ஆரம்பிக்கலாமா" ன்னாரு

"அட இருங்க... எல்லாரயும் கூப்புடுறேன்" ன்னு சொன்னதும் அப்ப வாங்க வேற ஒரு  ரூமுக்கு போகலாம்னு பக்கத்துலருந்த பெரிய கேபினுக்கு அழைச்சிட்டு போனாரு... நா அம்மா அப்பா, மாமா எல்லாரும் சுத்தி உக்கார்ந்துருக்க நம்மாளு கேப்பே விடாம, நம்ம ராசி நட்சத்திரத்துக்கு குருபெயர்ச்சி பலன்லாம் புத்தகத்துல வருமே, அத அப்புடியே ஒப்பிச்சாரு.. ஆனி போயி ஆடி போயி.. ஆவனி போயி..

"யோவ் இப்டியே போயிகிட்டு இருந்தா எல்லாமாசமும் போயி அடுத்த வருசம் வந்துரும்யா.. மேல சொல்லு" ன்னு நெனைச்சிட்டு இருக்கும் போது ஒரு காமெடி பண்ணாரு பாருங்க

"உங்களுக்கு மூணு தங்கச்சி இருக்கானுமே" ன்னாரு

"இல்லை... ஒண்ணுதான்" ன்னேன்..

"ஓ... மூணு தங்கச்சி இருக்கதுக்கு சாத்தியம் இருக்கு... ஆனா ஒரு தங்கச்சிக்கான பலன்  சிறப்பா இருக்கு" ன்னு ஒரு சமாளிப்பு சமாளிசாரு பாருங்க... அவர் ஒவ்வொன்னா  சொல்ல சொல்ல எங்க மாமா பக்கத்துல உக்காந்து உன்னை நினைத்துல சார்லி  ஜாதகம் பாக்கும் போது சிங்கமுத்து "தெரிஞ்சிதா" "புரிஞ்சிதா"ன்னு கேப்பாரே.. அதே மாதிரி என்ன பாத்துக்கிட்டு இருந்தாரு...

ஒரு வழியா 5 நிமிஷத்துல ஒப்பிச்சி முடிஞ்ச அப்புறம் "வேற எதாவது கேக்கனுமா' ன்னாரு...

"ஒண்ணும் இல்லீங்க"

உடனே உள்ள ட்ராவுலருந்து ஒரு A4 சைஸ்ல ப்ரிண்ட் பண்ண ஒரு பேப்பர எடுத்தாரு. வேற ஒண்ணும் இல்லை.. அவங்களோட நாடி ஜோதிடத்துக்கு விளம்பரம்..அத கைல குடுத்துட்டு எங்ககிட்ட

"இப்ப உங்களூக்கு சொன்னது பொதுகாண்டம்.. இதுலயே உங்களுக்கு தனித்தனியான காண்டங்கள விளாவாரியா பாத்துக்கலாம்.. அதாவது தொழில், படிப்பு, வெளிநாட்டு பயணம் திருமணம்... இப்புடி எது வேணாலும் பாத்துக்கலாம்.. ஒரு காண்டம் பாக்க 150 ரூவா" ன்னாரு..

"ஓ.. இப்ப தொழில் காண்டம்னா அதுல என்ன சொல்லுவீங்க?" ன்னேன்

"உங்களுக்கு எப்டி பட்ட வேலை கிடைக்கும்.. சம்பள உயர்வு எப்ப வரும்,,, ப்ரமோஷன் எப்ப வரும்.. இந்த மாதிரி detail la சொல்லுவோம்"

"ஓ... எப்புடி.. முன்னாடி என்ன உள்ள கூட்டிட்டு போயி என்கிட்டயே விஷயத்த கேட்டு திரும்ப வெளில வந்து அத எங்ககிட்டயே திருப்பி சொன்னீங்களே.. அதே மாதிரி திரும்ப என்ன உள்ள கூப்டு உனக்கு எவள சம்பளம், எப்ப ப்ரமோஷன் தருவாய்ங்கங்கற மேட்டரல்லாம் என் டயே கேட்டு என் டயே சொல்றதுக்கா... ஆணியே புடுங்க வேணாம்" ன்னு நெனைச்சிகிட்டு "போதுங்க... முடிச்சிக்குவோம்" ன்னு சொல்லிட்டு பாத்ததுக்கு 150 ஓவாய குடுத்துட்டு வெளிய வந்தோம்..

எங்க மாமா லைட்டா என்ன பாத்தாரு...

"டேய்.. நா தான் சொன்னேன்ல.. இவய்ங்கல்லாம் மொரட்டு ப்ராடுடான்னு... பத்து வருசத்துக்கு முன்னாலயே நானும் என் ஃப்ரண்டு ராஜாவும் இங்க வந்து 4000 ரூவாய விட்டுடோம்டா"

"ஏன் மாமா... ஏற்கனவே நீ வாங்கிட்டு தான் இப்புடி பம்புனியா.. அந்த 4000 ரூவா மேட்டர முன்னாடியே சொல்லிருந்தா பின்பக்கம் வழியா எகிரி குதிச்சி ஓடிருக்கலாம்ல"

விடுறா.. இவய்ங்களுக்கு அந்த 150 ரூவா போகனும்னு இருக்கு...போயிருச்சி,... சரி வா கெளம்புவோம்  ன்னு போனால் போகட்டும் போடா background சாங்கோட வீட்டுக்கு கெளம்புனோம்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

39 comments:

Anonymous said...

Boss, ditto happened to me with these frauds in coimbatore. What they are doing is "trail and error" method to guess the name of the 1st person, his/her parents. They explicitly ask sun sign (i.e birth star). One can deduct rasi from it easily. with these two, they can proceed with minimal astrology.

If they feel the customer is a gullible idiot, they confidently go ahead with their bluff. If they feel that they cannot bluff, they outright claim the matching palm leaf writing cannot be found.

I observed their so called 2000 year old palm leaf writing which resembles the Tamil script of 16/17th century. These naadi-idiots don't know the history of Tamil scripts. Yet they survive because of the even worser stupidity of the customer.

As soon as this general kaandam was done, i asked for marraige kaandam. knowing my marriage is delayed and i'm working in it industry, he offered pariharam which needed kaanikkai worth 48 days of my earning. I mentally cussed him *fuck you* and informed him that i'll get back after thinking through.

i insisted to go through all the kaandams and willing to spend 1500 or so amt (ie Rs 150 for each kaandam). He conceded defeat and admitted he couldn't find scripts for all kaandams.

Unknown said...

Tamilpanel.com தளத்தின் மூலம் உங்கள் இணையத்திற்கு , மிக எளிதான முறையில் நூற்றுக் கணக்கான வாசகர்களை எளிதில் பெறலாம் .இதில் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் நீங்கள் , ஓட்டுப் பட்டையோ , வாக்குகளோ அல்லது உங்கள் தளத்தின் செய்திகள் முன்னணி இடுகையாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை .

எங்கள் இணையத்தின் ஓர் விட்ஜெட்டை மட்டும் உங்கள் இணையத்தில் இணைத்து விட்டால் போதும் . எந்த ஓட்டும் இல்லாமலே உங்களுக்கு எம் இணையத்தின் மூலம் டிராபிக் கிடைக்கும்


விட்ஜெட்டை இணைப்பது பற்றி அறியwww.tamilpanel.comநன்றி

Anonymous said...

LOL :))

கோவை நேரம் said...

மருதமலை அடிவாரத்துல ஒரு சித்தர் இருக்கார்னு சொல்லி அவருகிட்ட போனோம்.மை வச்சி ஒருநாள் கழிச்சி வர சொன்னாங்க.நான் போகவே இல்லை.நம்ம தலை எழுத்தை அவன் எப்படி தீர்மானிக்கலாம்..என்று ....

'பசி'பரமசிவம் said...

எனக்குப் ‘பரணி’ நட்சத்திரம்.
”நீ பரணியில் பிறந்திருக்கே. தரணி ஆள்ற யோகம் இருக்கு”ன்னு பார்த்த அத்தனை ஜோதிடர்களும் சொன்னாங்க.

பெண்டாட்டி புள்ளைகளைகளையே கட்டி ஆள முடியல. எழுபது வயசாச்சி. இனி எப்போ தரணி ஆள்றதாம்???

கேட்டா, உன் பிறந்த நாள் குறிச்சதுலே தப்பு இருக்கும்னு சொல்வாங்க!

நான் எப்பவோ இந்த மூட நம்பிக்கையிலிருந்து விடுபட்டுட்டேன்.

நம் மக்கள்???

அஸ்வரூடாவாராஹி ஜோதிடவாஸ்து நீர் ஊற்று மையம் said...

ஹலோ , பாஸ் ,நானும் உங்களைமாதிரித்தான் .. ... என் பெயர் சுரேஷ் .. சின்ன வயசிலிருந்து தெய்வ நம்பிக்கையே கிடையாது .. இப்ப கும்பிடுகிறேன் ... ஏன் என்றால் அந்த நாடி ஜோசியம் தான் என்னை மாத்தியது ... நானும் உங்களை மாதிரித்தான் இதில் என்ன இருக்க போகிறது என்று நினைத்தேன்.நான் கொஞ்சம் உஷாராய் என் அப்பா அம்மா பெயரை சொல்லாமலே இருந்தேன் .. ஆம் இல்லை என்பதே என் பதில் ...௩வது கட்டில் என் புல் டிடைலும் வந்தது ..இன்னும் என்னால் நினைத்து கூட பார்க்க முடியலை ..அதில் வந்தது எல்லாம் நூறு சதவிகிதம் உண்மையே ..அப்ப உணர்ந்தேன் ..தெய்வம் இருக்கிறது என்று ..

Gobinath said...

எனக்கும் இதே போல் அனுபவங்கள் இருக்கு பாஸ். எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இருக்கிறது ஆனால் இந்த ஜோதிடர்களில் துளியளவு நம்பிக்கையும் இல்லை. 99 வீதமானவை அரைவேக்காடுகள்.

Jayadev Das said...

இவர்களிடம் போய் ஜோதிடம் கேட்டு திருப்தியாக இருப்பதாக பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஒரு வேலை போலிகள் அதிகமாகி விட்டிருக்கலாம்.

முத்துசிவா said...

@will be in future news in vpt //

நண்பரே..தெய்வ நம்பிக்கை தங்களுக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது.

//.நான் கொஞ்சம் உஷாராய் என் அப்பா அம்மா பெயரை சொல்லாமலே இருந்தேன் .. ஆம் இல்லை என்பதே என் பதில் ...௩வது கட்டில் என் புல் டிடைலும் வந்தது //

நீங்க விஜய் டிவில கொஞ்ச நாளூக்கு முன்னால நடத்தப்பட்ட "யார் மனசுலே யாரு?" நிகழ்ச்சி பாத்துருக்கீங்களா? ஆம் இல்லை பதிலை வைத்தே யாரை வேண்டுமானாலும் கண்டுபிடிக்கலாம் கேள்விகளால்.. கண்டிப்பாக நீங்க உங்க ராசி நட்சத்திரம் எதயாவது அவரிடம் சொல்லியிருப்பீர்கள்... அதை வைத்தே அவர் உங்களுக்கு நடந்தவற்றை சொல்லியிருப்பார்னு நினைக்கிறேன்.. ஒருவருடைய ஜாதகத்தை வைத்து அவருடைய வாழ்க்கையை கணிப்பது 80% சரியாகவே இருக்கும்.. நானே நிறைய முறை அனுபவப்பட்டிருக்கிறேன்.. ஆனால் இவர்கள் இந்த ஓலைச்சுவடியை வைத்து மக்களை ஏமாற்றவே கற்றிருக்கிறார்கள்...

முத்துசிவா said...

@Anonymous

//Boss, ditto happened to me with these frauds in coimbatore//


நிறைய பேர் இதால பாதிக்கப்பட்டு இருப்பாங்க போல... தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே!

முத்துசிவா said...

@கோவை நேரம்:
//நம்ம தலை எழுத்தை அவன் எப்படி தீர்மானிக்கலாம்..என்று .... //

ரொம்ப கரெக்ட் தல

முத்துசிவா said...

@முனைவர் பரமசிவம் :

//
நான் எப்பவோ இந்த மூட நம்பிக்கையிலிருந்து விடுபட்டுட்டேன்.

நம் மக்கள்??? //

ரொம்ப நாளாகும்..

வருகைக்கு நன்றி அய்யா...

முத்துசிவா said...

@Gobinath:

//எனக்கும் இதே போல் அனுபவங்கள் இருக்கு பாஸ்.//

ஹாஹா.. வாங்க... நீங்களும் ஜோதில ஐக்கியாம் ஆயிக்குங்க :)

முத்துசிவா said...

@Jayadev Das:

//இவர்களிடம் போய் ஜோதிடம் கேட்டு திருப்தியாக இருப்பதாக பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஒரு வேலை போலிகள் அதிகமாகி விட்டிருக்கலாம்//

அதற்கும் வாய்ப்பிருக்கிறது தலைவரே!

நம்பள்கி said...

நீங்கள் இந்த சோதனையை செய்து பாருங்கள்; உண்மை வெளிப்படும். நான் வெளி நாட்டில் இருக்கிறேன் அப்படி என்று சொல்லுங்கள்; உடனே அவர்கள், கட்டை விரல் ரேகை கொடுத்தால் போதும் என்பார்கள்.

உங்கள் அப்பா அம்மாவிடம் கொடுங்கள்; தெருவில் போகும் எதாவது ஒரு பிச்சைக்காரன்/காரி ரேகையை...

ஆனால், உங்களைப் பற்றிய எல்லா விவரத்தையும் உங்கள் அப்பா அம்மாவிடம் இருந்து சரியாக கறந்து விடுவார்கள். அதை உங்களுக்கு ஆடியோ கேசெட் மூலம் அனுப்பி வைப்பார்கள்.

ரேகை எவனுதோ!
பலன் உங்களது!

திண்டுக்கல் தனபாலன் said...

எனது நண்பருடன் சென்ற அனுபவம் உண்டு சார் ! உங்களுக்காவது ரூபாய் 150-ல் முடிந்தது. தப்பிச்சீங்க... ஆடியோ கேசட் எல்லாம் ரெகார்ட் செய்து தர தனி சார்ஜ்...(நாம் பேசியதை... இல்லை இல்லை அவர்கள் உளறியதை)

Manimaran said...

நண்பர் முத்து சிவா..
இதில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை கொஞ்சம் பகிர்ந்துகிறேன்.நான் தீவிர நாத்திகவாதி.கோயில் குளம் எதுவும் போனதில்லை.எந்த சாமியும் கும்பிட்டதில்லை இன்று வரை.ஆனால் குடும்ப வற்புறுத்தலுக்காக விருப்பமேயில்லாமல் எப்போதாவது கோயிலுக்கு செல்வதுண்டு.

பல வருடங்களுக்கு முன்,வெளிநாட்டு செல்வதற்கு முயற்சி செய்த வேளையில் நிறைய தோல்விகள் அடுத்தடுத்து வர,கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த நேரம்.அப்போது என் நண்பர் ஒருவர் நாடி ஜோதிடம் பார்க்கலாம் அப்படி நம்பிக்கை இல்லைஎன்றால் கொஞ்சல் திரில் ஆவது கிடைக்கும் என்றார்.எனக்கு விருப்பமில்லைஎன்றாலும்,அப்படி என்னதான் சொல்கிறார்கள் பாப்போம் என்று சென்றேன்.நீங்கள் சொல்வதுபோல் முதல் எழுத்து ,இந்த மாதிரி அந்த மாதிரி என்று ஒரு சில கேள்விகள் கேட்டார்கள்.ஐந்து நிமிடத்திலே என் ஓலைச்சுவடி கிடைத்துவிட்டதாக சொன்னார்கள்.ஆனால் அதிலிருந்து சொன்ன ஒரு சில விசயங்கள் இன்றளவும் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.அப்பா,அம்மா பெயர் சரியாக சொன்னார்கள்.கடந்த கால நிகழ்வுகளை ஓரளவு சரியாகத்தான் சொன்னார்கள். என்னுடைய ராசி நட்சத்திரம் என்று ஏதோ சொன்னார்கள்.எனக்கு ராசி நட்சத்திரம் கூட தெரியாது.எங்கள் குடும்பமும் நாத்திகம் என்பதால் என் பெற்றோருக்கும் தெரியாது.ஆனால் அவர்கள் சொன்னார்கள் கடக ராசி...ஆயில்யம் நட்சத்திரம்.மேலும் தற்போது செய்யும் வேலை,அயல்நாட்டுப் பயணம் என்று கிட்டதட்ட அனைத்துமே சரியாகத்தான் இருந்தது.எனக்கு திருமண ஏற்பாடு நடந்த போது எனக்கு ஜாதகம் எழுதவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.அப்போதுதான் தரகர்,என் பிறந்த நேரம் மற்ற தகவல்களை வைத்து ஜாதகம் எழுதினார். ஆனால் அதில்தான் ஆச்சர்யம்.அவர்கள் சொன்ன அதே ராசி அதே நட்சத்திரம்.

எனக்கு இன்றளவும் கடவுள் நம்பிக்கைக் கிடையாது.ஆனால் இது எப்படி சாத்தியம் என்று வேறொரு நண்பரிடம் விசாரித்தபோது,நாடி என்பது நாடிச்செல்லுதல்...அதாவது அந்தக் காலக் கட்டத்தில் மட்டும் செல்லுதல் என்றார். புரியவில்லை என்றேன்.அதாவது எல்லோருக்கும் ஓலைச்சுவடி எழுதப்பட்டிருக்கும்.அதை நீங்கள் அறியும் நேரம் தானாக வரவேண்டும்.உங்களுக்கு தற்போது இருபத்தேழு வயது என்று அந்த ஓலைச்சுவடியில் எழுதப்பட்டிருந்தால்,அதற்கான சூழ்நிலை அந்தக் காலக் கட்டத்தில் தானாகவே வரும்.அந்த நேரத்தில் அதில் சொல்லப்படும் விசயங்கள் யாவும் சரியாகவே இருக்கும் என்றார்.ஆனால் ஒரு சிலர் தானாகவே பார்க்க முற்படும் போது சரியான ஓலைச்சுவடி கிடைக்காமல் போக நேரிடலாம் என்றார்.

ஆனால் எனக்கு இன்றுவரை இது புரியாத புதிராகத்தான் உள்ளது கடவுள் நம்பிக்கையை மீறி.

ARIVUMANI, LISBON said...

@Manimaran: me too had the similar experience.....

Ganesh said...

six month back i also went to kanchipuram agathiyar nadi jothidam fraud group. Also in my experiance they asked same type of questions whether your father & mother name starting with these tamil letters etc., at this time i made mistakes because i told yes or no from mouth so they easily framed father & mother name because he didn't identify the names from first leaf bundle itself and he used to go down stairs wait for min 10 min and carrying other leaft bundle so i strongly feel the he was recoding our voice and getting name frame from other person in down stairs. when they told my family details i was surprised. it remembered me one vijay TV program one person used to ask series of questions (i think max 24) and at the end he will tell what you thought in your mind. it is kind of game / jorgan.however due to my bad time i spent about Rs 500 (to get other predictions)

After 1 week i again went to same place along with my 3 friends. i was told my friends that when they ask questions about your father or mother starting letters don't tell any word just shake your head like yes or no. surprisingly this time the jothidar didn't able to identify none of my friends family names from scribe leaf. finally he advised us to go to vaithieswaran temple place ;-) we saved min Rs 450 but waste of time.

Ganesh said...

six month back i also went to kanchipuram agathiyar nadi jothidam fraud group. Also in my experiance they asked same type of questions whether your father & mother name starting with these tamil letters etc., at this time i made mistakes because i told yes or no from mouth so they easily framed father & mother name because he didn't identify the names from first leaf bundle itself and he used to go down stairs wait for min 10 min and carrying other leaft bundle so i strongly feel the he was recoding our voice and getting name frame from other person in down stairs. when they told my family details i was surprised. it remembered me one vijay TV program one person used to ask series of questions (i think max 24) and at the end he will tell what you thought in your mind. it is kind of game / jorgan.however due to my bad time i spent about Rs 500 (to get other predictions)

After 1 week i again went to same place along with my 3 friends. i was told my friends that when they ask questions about your father or mother starting letters don't tell any word just shake your head like yes or no. surprisingly this time the jothidar didn't able to identify none of my friends family names from scribe leaf. finally he advised us to go to vaithieswaran temple place ;-) we saved min Rs 450 but waste of time.

Asureshwaran said...

அது சுவடியோட்டின் தவறல்ல,,,அதை கொணர்ந்தவருக்கு அனுபவம்(அ)புரிந்து கொள்ளும் திறம் இல்லை,,,அவ்வளவே

கார்த்திக் ஸ்வீட் ஹார்ட் said...

நாடி ஜோதிடம் நூறு சதவிகிதம் உண்மை... என்னை பொறுத்தவரை... நம்புபவர்களுக்கு.... பார்க்கும் இடம் மற்றும் பார்பவரை பொருத்தது.......

Unknown said...

வணக்கம் அன்புடையீர்,

ஒம் அகத்திசாய நம !!!

கருணை உள்ளம் கொண்ட கும்ப முனியின் அருளால் வைகாசி வளர்பிறையில் இருந்து, கோயம்புத்தூர் அருகே உள்ள கல்லார் அகத்தியர் ஞான பீடத்தில் அகத்தியர் ஜீவ அருள் நாடியில் அருள்வாக்கு வருவதாக தகவல் உறுதி படுத்தப்பட்டு உள்ளது.

தொடர்பிற்கு மாதாஜி சரோஜினி - 9842550987

கல்லார் அகத்தியர் ஞான பீட முகவரி :
Sri Agathiar Gnana peedam
2/464-E, Agathiar Nagar,Thoorippalam
Kallar-641305,Mettupalayam,Coimbatore Dt, Tamilnadu, India
PH:98420 27383, 98425 50987.
( மேட்டுப்பாளையம் to ஊட்டி மெயின் ரோட்டில், மேட்டுப்பாளையத்தில் இருந்து 10 வது கிலோமீட்டரில் கல்லார் உள்ளது. )

நாடி பார்க்கும் நாள்:சனிக்கிழமை மட்டும்
நேரம் :9 மணி முதல் 2 மணி வரை
கட்டணம்:500/- ரூபாய்.
ஒம் அகத்திசாய நம !!!
ஒம் அகத்திசாய நம !!!
ஒம் அகத்திசாய நம !!!

Anonymous said...

நண்பர் மணிமாறன் சொல்வது போல நானும் ஓர் நாத்திகவாதி தான். நானும் 11 வருடங்களுக்கு முன் இந்த நாடி ஜோதிடம் பார்த்தேன். அப்பொழுது நீங்கள் கூறியது போல நான் எதையும் கூறவில்லை. என் பதில் ஆம் மற்றும் இல்லை என்பது மட்டுமே. ஆனால் நான் சொன்ன பதில்களைக் கொண்டு அவரால் என்னுடயவற்றை சத்தியமாக கணிக்க இயலாது. அவர் அனைத்தையும் ஒரு நோட்டில் எழுதி விளக்கியும் கூறினார். நானும் அப்படியா? எனக் கேட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். என் தந்தையிடம் கொடுத்தேன். அவர் தன்னிடம் வைத்திருந்த என்னுடைய ஜாதகத்தையும், இவர் எழுதி தந்த ஜாதகத்தையும் ஒப்பிட்டு பார்த்தார். ஒரு சிறு மாற்றம் கூட இல்லை. இரண்டும் ஒருவரே எழுதியது போன்று இருந்தது. எனக்கு மிகுந்த ஆச்சரியம். அது எப்படி வெறும் ரேகையின் மூலம் எடுக்க முடியும் என்று? நானும் அதனை அப்பொழுது மறந்தே விட்டேன். அதன் பின் சில ஆண்டுகள் முன்பு தற்செயலாக அவர் கொடுத்த நோட்டினை படிக்க நேர்ந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் அதில் என்ன கூறப்பட்டதோ, அது அத்தனையும் என் வாழ்வில் நடந்திருந்தது. அதிசயத்து விட்டேன். மற்றவர்களுக்கு அது எப்படியோ? எனக்கு இந்த நாடி ஜோதிடம் ஓர் வாழ்க்கை வழிகாட்டியே..

Anonymous said...

ஹும்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் அந்த வைத்தீஸ்வரன் தான் இவர்களிடமிருந்து எல்லோரையும் காக்கவேண்டும்

Unknown said...

எங்கே பார்த்தீர்கல் அய்யா,எனக்கும் பார்க்க வேண்டும்

Unknown said...

எங்கே பார்த்தீர்கல் அய்யா,எனக்கும் பார்க்க வேண்டும்

Unknown said...

இதே கொடுமையை தான் நானும் அனுபவிச்சன். எனலாம். அதுக்கு 600ரூ வேற மொக்க

Unknown said...

எந்த ஊரில் பார்த்தீர்கள் நண்பரே

Unknown said...

நாடி ஜோதிடம் உண்மையே ,படித்து பலன் சொல்பவன் மட்டுமே பொய்.

Unknown said...

நாடி ஜோதிடம் உண்மையே ,படித்து பலன் சொல்பவன் மட்டுமே பொய்.

Anonymous said...

எங்கே பார்த்தீர்கள்...
அனைவருக்கும் உதவட்டும்

Unknown said...

அருமை

Anonymous said...

Why viewers still use to read news papers when in this technological
globe all is accessible on net?

தங்கராஜ் said...

சார் என்னுடைய அனுபவத்தை இங்கு கூறுகிறேன். பிடிக்காதவர்கள் தயவு செய்து இதனை பெரியதாக எடுதுகொள்ளகூடாது.எனக்கு அறிவியலுக்கு புறம்பான மூட நம்பிக்கைகள் சுத்தமாக பிடிக்காது. இந்த நாடி ஜோதிடம் மாதிரி ஒரு முட்டாள்தனம் எதுவும் கிடையாது என நினைப்பவன். ஒரு முறை எனக்கு வேண்டியபடவர்கள் ஈரோட்டிலிருந்து சேலம் செல்லும் வழியில் சேலத்திற்கு சற்று முன்பே பூலாவரி எனும் ஊரில் நாடி ஜோதிடர் ஒருவர் மிக தெளிவாக ஜோதிடம் சொல்கிறார் என கேள்விப்பட்டு என் மனைவியின் வற்புறுத்தலின் பேரில் சென்றிருந்தேன். ஜோதிடர் முப்பது வயது இளைஞர். மனைவி பிரிந்து சென்றுவிட்டார். மிக வயதான அப்பா அம்மா உடன் வசிக்கிறார். நாங்கள் சென்றதும் வரவேற்று அமர வைத்துவிட்டு கைரேகை எடுத்துக்கொண்டார். உள்ளே சென்று வெகு நேரம் கழித்து ஒரு ஓலை சுவடியோடு வந்தார். கடவுள் மேல் எதோ ச்லோகும் படித்துவிட்டு தாய் தந்தை பெயரை கூறிய பின் எனக்கான ஏடு எடுத்து பலன் கூற ஆரம்பித்தார். நான் கையோடு கொண்டு சென்றிருத்த Tape recorder கருவியால் அவர் சொல்வதை பதிவு செய்ய ஆரம்பித்தேன். அந்த கேசட் இன்றும் என்னிடம் பத்திரமாக உள்ளது. ஆரம்பத்தில் அசுவாரசியமாய் கேடுகொண்டிருந்த நான் சற்று நிமிர்த்து உட்கார்ந்தேன். என் சிறு வயது நிகழ்சிகளை வயது கிராமமாய் சொல்ல ஆரம்பித்தார். என் உடன்பிறப்புகள் அவர்கள் பெயர் உட்பட, எனக்கு ஏற்பட உயிராபத்துகள், குடும்பத்தார் இயல்புகள், உட்பட பல பல நுணுக்கமான சங்கதிகள். நான் ஆடிபோய்விட்டேன்.எதிர்காலத்தில் எனக்கு ஏற்பட உள்ள குழந்தை பேறுகள் ஆண் பெண் குழந்தைகள் வரிசை பிறக்கும் ஆண்டு பார்க்கும் உத்தியோகம் அரசு உத்தியோகம் இன்ன ஆண்டில் கிடைக்கும் என்பது உட்பட. மேலும் அவர் கூறியது அத்தனையையும் ஒரு நோட்டிலும் எழுதி கொடுத்தார். நான் ஜோதிடம் பார்க்க சென்றது 1999ம் வருடம். இன்றளவும் அவர் கூறியது இம்மி பிசகாமல் நடந்து வருகிறது. என்னை பொறுத்தவரை நாடி ஜோதிடம் சாத்தியமான உண்மை. இதை ஏதோ ஜோதிடருக்கு விளம்பரம் தேடி தரும் முயற்சி என என்ன வேண்டாம். ஏனெனில் அவர் இறந்து பல ஆண்டுகள் ஆகிறது. அவர் உயிரோடு இருக்கும்போதே இதனை பற்றி கூறியிருக்கிறார். அவருடய மனைவி பிரிந்து சென்ற பிறகு ஏன் நீங்கள் ஒரு மறுமணம் செய்து கொள்ளகூடாது, உங்கள் அம்மாவிற்கு உதவியாக இருக்குமே என்ற கேள்விக்கு வாய் கொள்ளா சிரிப்புடன் அவர் சொன்னது என்ன தெரியுமா? நான் இன்னும் ஒன்றரை வருடத்தில் இறந்து விடுவேன் எனக்கு ஆயுள் அவ்வளவுதான், சிவன் சித்தம்.. என்பதே.என்னுடைய இந்த பதிவை யாராவது சந்தேகித்தால் அவர்கள் தாரளமாக பூலாவரி சென்று அங்குள்ள பெரியவர்களை சந்தித்து தெளிவு பெறலாம். நன்றி.

கோ.இராசாராமன் said...

நல்ல இடம். நல்ல ஜோதிடர் பெயர் தெரிவிக்கவும்

கோ.இராசாராமன் said...

தற்போது நல்ல ஜோதிடம் எங்கே சொல்கிறார். இடம் கூறவும்

Murasoli said...

முருகேசன் ஜோதிடர்.11, Pallavan Nagar Main Rd, Pallavan Nagar, Maduravoyal, Chennai, Tamil Nadu 600095
உண்மையில் மிக அருமையாக சொல்கிறார்.நான் சென்று பார்த்து விட்டு வந்தேன்.ஆனால் வெகு நேரம் காத்திருக்க வேண்டும்.no appointment.ஜோதிட நம்பிக்கை உள்ளவர்களுக்கு பயன்படவே இந்த பதிவு.

Unknown said...

அப்புறம் இயேசு அல்லா வந்து உன்னோட குடும்பம் பத்தி open na சொல்லிருப்பார் அதானே... துஉஉஉஉஉஉஉஉ நடுநிலை டேவிட் புள்ள...?
பாவ மன்னிப்பு கேக்க போனப்போ.... பாதிரி சொன்ன பதில் போடுறது...
இமாம் கிட்ட போய் panni கறி சாப்டாச்சா னு கேக்குற தைரியம் இருக்கா?
துஉஉஉஉஉஉஉஉ தே... பயலே.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...