என்னய்யா
ஓசோன்லதான ஓட்டைன்னு அவன் அவன் கிளப்பிவிடுவாய்ங்க. இது என்ன ’ஓ’ரிங்குல (’O’
Ring) ஓட்டை? அதுவுமில்லாம ஓரிங்னாலே ஓட்டையா தான இருக்கும். இதுல என்ன புதுசா இருக்குன்னு
சில பேரு வெறிக்கலாம். கொஞ்ச நாளுக்கு முன்னால நம்மூர்ல மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டப்போகுதுன்னு
நாஸாவே வெதர் ரிப்போர்ட் சொல்லிட்டாங்கன்னு வாட்ஸாப் மெசேஜ்ஜ கண்ண மூடிக்கிட்டு ஃபார்வார்டு
பன்னிக்கிட்டு இருந்தோமே.. அதே நாஸாவுக்கு சில வருஷங்களுக்கு முன்னால வெதர் (வானிலை) அடிச்ச ஒரு ஆப்ப பத்தி தான் இன்னிக்கு
நம்ம கொஞ்சம் பாக்கப்போறோம்.
1986..
ஜனவரி 22. ஃப்ளோரிடாவுல உள்ள கென்னடி ஸ்பேஸ் செண்டர்ல Challenger ங்குற ஒரு Space
shuttle லாஞ்ச் பன்னுறதுக்காக ரெடியா நிக்கிது. அதாவது பூமிய சுத்தி வர்ற சாட்டிலைட்டுகள
கொண்டு போய் அதோட சுற்றுப்பாதையில விட்டுட்டு வர்றதுக்காக பயன்படுத்தப்படுற ஹைடெக்
டவுன் பஸ் தான் இந்த Space shuttle ங்குறது. பூமியிலருந்து சுமார் 160 கிலோமீட்டர்லருந்து
2000 கிலோ மீட்டர் உயரத்துக்குள்ள உள்ள பகுதிய Low Earth Orbit ன்னு சொல்றாங்க. பூமிய
சுத்தி வர்ற சேட்டிலைட்டுகளெல்லாம் இந்த பகுதிக்குள்ள தான் சுத்திக்கிட்டு இருக்கும்.
ஆக மேல சொன்ன மாதிரி இந்த Space shuttle ங்குறது ஒரு சாட்டிலைட்ட கீழருந்து எடுத்துட்டு
போய் Low Earth Orbit க்குள்ள சுத்த விட்டுட்டு திரும்ப பூமிக்கே வந்துரும்.
இப்ப
லாஞ்ச் பன்றதுக்கு ரெடியா நிக்கிற சேலஞ்சர் Space shuttle இதுக்கு முன்னால 9 தடவ இதே
மாதிரி சாட்டிலைட்டுகள கொண்டு போய் விட்டுட்டு பத்திரமா திரும்ப பூமிக்கு வந்துருக்கு.
இப்ப பத்தாவது தடவ. இந்த தடவ சாட்டிலைட்டு கூட ஐந்து ஆண்கள், ரெண்டு பெண்கள் உட்பட
7 மனிதர்களும் விண்வெளிக்கு போறாங்க. வழக்கமா விண்வெளிக்கு போற மனிதர்கள் யாருன்னு
பாத்தா, விண்வெளி ஆராய்ச்சிக்குன்னு தங்களை அர்பணிச்சிக்கிட்ட விண்வெளி ஆய்வாளர்களாத்தான்
இருப்பாங்க. ஆனா இங்க கொஞ்சம் வித்யாசம். ஏழு பேர்ல அஞ்சி பேர் விண்வெளி ஆய்வாளர்கள்
மீதம் இருக்க ரெண்டு பேர் விண்வெளி ஆய்வில் ஈடுபடாத சாதாரண மனிதர்கள்.
ஏன்
இந்த சாதாரண மனிதர்கள விண்வெளிக்கு அனுப்புனாங்க? அதாவது 1984 ல ஆசிரியர்களை கவுரவிக்கிறதுக்காகவும்,
மாணவர்கள உற்சாகப்படுத்துறதுக்காகவும் ”Teacher In Space” ங்குற ஒரு ப்ரோகிராம நாஸா
அறிவிக்கிறாங்க. அதன்படி விண்வெளி ஆய்வாளர்களா இல்லாத சில ஆசிரியர்கள சில நாட்கள் பயிற்சி
கொடுத்து விண்வெளிக்கு அனுப்புறது. அவங்க விண்வெளிக்கு பொய்ட்டு வந்து அவங்களோட அனுபவங்களையும்
படிப்பினைகளையும் மாணவர்களுக்கு சொல்லிக்குடுக்குறது. இதான் அந்த Teacher in Space
ப்ரோகிராமோட நோக்கம்.
அதனால
இந்த தடவ சேலஞ்சர் Space shuttle la பயணம் செய்யிறதுக்காக Christa McAuliffe ங்குற
ஒரு ஆசிரியை தேர்வு செய்யப்பட்டு பயணம் செய்ய தயாரா இருக்காங்க. சும்மா தெரிஞ்சவங்க
மூலமா ரெக்கமண்டேஷன்லயோ இல்லை சைடுல யாருக்கும் அமவுண்ட தள்ளியோ இவங்களுக்கு இந்த வாய்ப்பு
வந்துடல. இந்த Challenger la பயணம் செய்யிறதுக்காக நாஸாவுக்கு விண்ணப்பித்த 11,000
பேர்ல இவங்க ஒருத்தர் மட்டும் செலக்ட் ஆயிருக்காங்க. இவங்க ஒரு ஹை ஸ்கூல்ல சமூக படிப்பை
கற்றுக்கொடுக்கிற ஒரு ஆசிரியரா வேலை பாத்துக்கிட்டு இருந்தாங்க.
Space shuttle la ட்ராவல் பன்ன விண்ணப்பிச்சிருந்த 11,000 பேர்லருந்து முதல்ல ஒரு 10 finalists ah செலெக்ட் பன்னாங்க. அதுக்கப்புறம் அவங்களுக்கு ”Johnson Space Center " ங்குற இடத்துல மெடிக்கல் செக்கப் மற்றும் ஸ்பேஸ் ட்ராவல் பத்தின தகவல்கள்னு ஒரு வாரம் சொல்லிக் குடுத்துருக்காங்க. அதுக்கப்புறம் 1985 ஜூலை 19 ம் தேதி அந்த பத்து பேர்ல நம்ம Christa McAuliffe டீச்சர்தான் வண்டில சவாரி போகப்போறாங்கன்னு நாஸாவுலருந்து அதிகாரப்பூர்வமா அறிவிச்சாங்க.
அவ்வளவுதான். அந்த டீச்சரம்மா அமெரிக்கா ஃபுல்லா செம ஃபேமஸாயிட்டாங்க. நம்மூர்ல ஒருத்தனுக்கு ஒரு படம் ஓடிட்டா அவன வணக்கம் தமிழகம், காஃபி வித் DD, டீ வித் கேடி ன்னு இருக்குற எல்லா டிவிலயும் Chief guest ah கூப்டு கொன்னு கொலையறுக்குற மாதிரி இந்த டீச்சரம்மாதான் அந்த டைம்ல அமெரிக்காவுல உள்ள அனைத்து சேனல்கள்லயும் chief guest. ஒரு தடவ இதுமாதிரி டிவி ப்ரோகிராம்ல கெஸ்டா வந்துருக்கும்போது ஒருத்தன் இந்த மிஷனப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க.. உங்களுக்கு எப்புடி ஆர்வம் வந்துச்சின்னு கேட்டுருக்கான். அதுக்கு இந்தம்மா “யோவ் ராக்கெட்டுல சீட்டு இருக்குன்னு ஒருத்தன் கூப்டா படக்குன்னு ஏறி உக்காந்துரனும்... ஜன்னல் சீட்டா நடு சீட்டான்னு கேள்வியெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்க கூடாது” ன்னு ஜாலியா பதில் சொல்லிருக்கு.

1986,
ஜனவரி 22 ம் தேதி அனுப்பப்படுறதுக்கு ரெடியா இருந்த இந்த சேலஞ்சர் மோசமான வானிலை காரணமா
ஜனவரி 25க்கு தள்ளி வச்சிட்டாய்ங்க. ஆனா பாருங்க சென்னையில பெய்ஞ்ச மழை மாதிரி அங்கயும்
தொடர்ந்து வானிலை மோசமாவே இருக்க, நம்ம ரமணன் சார் பள்ளிக்கூடத்துக்கு லீவு விடுற மாதிரி
ராக்கெட் லாஞ்சயும் ஒவ்வொரு நாளா தள்ளிப்போட்டுக்கிட்டே வந்தாய்ங்க. அப்புடி இப்புடின்னு
ஜனவரி 28 ஆயிருச்சி. அன்னிக்கும் பாத்தா வானிலை ரொம்ப மோசம்தான். கிட்டத்தட்ட மைனஸ்
ஒரு டிகிரி. உறையிற அளவு குளுரு. இப்புடியே போனா இவனுங்க டெய்லி ஓப்பி அடிக்க ஆரம்பிச்சிருவாய்ங்கன்னு
நாஸா உசாராயிட்டானுங்க. என்ன ஆனாலும் சரி இன்னிக்கு
லாஞ்ச் பன்றது லாஞ்ச் பன்றதுதான்னு முடிவு பன்னிட்டாய்ங்க.
அத்தனை
டிவி சேனல், ரேடியோன்னு ஊர்ல உள்ள எல்லா மீடியாவும் நம்ம Challenger Space Shuttle
லாஞ்ச் பன்றதப் பாக்க ரெடியா இருக்காய்ங்க. நிறைய டிவி சேனல்கள் அத லைவ்வா டெலெகாஸ்ட்
பன்னிக்கிட்டு இருந்தாங்க. கிட்டத்தட்ட அமெரிக்காவோட ஜனத்தொகையில 17% இந்த சேலஞ்சர்
லாஞ்ச் பன்னப் போறத லைவ்வா பாத்துக்கிட்டு இருக்காய்ங்க. இதுக்கு இவ்வளவு முக்கியத்துவம்
கொடுக்க இன்னொரு காரணம் நம்ம டீச்சர் Christa McAuliffe தான். இன்னிக்கு சேலஞ்சரோட
கிளம்புனாங்கன்னா விண்வெளிக்கு போன முதல் டீச்சர்ங்குற பேர் இவங்களுக்கு கிடைக்கும்.
காலையில
11.29க்கு லாஞ்சிங் ப்ளான் பன்னியாச்சி. அட இன்னும் ஒரு அரை மணி நேரம் இருக்கே. இந்த
கேப்புல தியோக்கால் (Thiokol) ங்குற ஒரு கம்பெனியப் பத்தி கொஞ்சம் பாத்துட்டு கரெக்டா
லாஞ்ச்க்கு ஆஜர் ஆகிடுவோம் வாங்க. யார் இந்த தியோக்கால்? இவங்க 1929 ல ஆரம்பிக்கப்பட்ட
ஒரு பழைய கம்பெனி. ரப்பர் சம்பந்தமான product தான் இவய்ங்களோட மெயின் பிஸினஸ். இந்த
Challenger Space shuttle la இருக்க ஒரு சில முக்கியமான பகுதிகள் இந்த Thiokol கம்பெனில
தயாரிக்கப்பட்டது.
சேலஞ்சர்
ஏவப்படுறதுக்கு மொதநாள் நைட்டு Thiokol இஞ்சினியர்ஸ் சில பேரு நாஸாவுக்கு ஃபோன் பன்னி
“அண்ணே அண்ணே.. ஒரு சின்ன டெக்னினிக் fault இருக்குண்ணே… இப்ப நீங்க லாஞ்ச் பன்றது
சரியில்லைண்ணே.. ஒரு ரெண்டு மூணு நாள் கழிச்சி லாஞ்ச் பன்னா நல்லதுண்ணே” ன்னு சொல்லிருக்காய்ங்க.
ஏற்கனவே ரெண்டு மூணு தடவ லாஞ்ச் date ah தள்ளி வச்ச நாஸா ஆளுங்க அவனுங்ககிட்ட “ அடேய்…
இப்ப தான் நாங்க ஒரு புளோவா போயிட்டு இருக்கோம். நீங்க ஏண்டா இடையில பூந்து ஆட்டையக்
கலைக்கிறீங்க.. எங்கள கொஞ்சம் பெர்பார்மன்ஸ் பன்ன விடுங்கடா” ன்னு சொல்லிருக்காய்ங்க.
என்ன சொன்னாலும் நாஸா ஆளுங்க கேக்குற மாதிரி இல்லைன்னு தெரிஞ்சதும் Thiokol ஆளுங்க “தங்களுக்கு தெரியாத சட்டம் எதுவும்
இல்லை. அதில் எந்த சட்டம் சிறந்த சட்டமோ அதை தாங்களே தெரிவு செய்து ராக்கெட்ட ஏவிருங்க”
ன்னு நாஸாகிட்ட சொல்லிட்டு வச்சிட்டானுங்க.
அட…
லாஞ்ச்சுக்கு டைம் ஆயிருச்சிங்க. வாங்க வாங்க… ஃப்ளோரிடா… கென்னடி ஸ்பேஸ் செண்டர்.
மணி 11.29. ரெடியா.. த்ரீ… டூ.. ஒன்… ப்ளாஷ்….
பேக்குல நெருப்ப கக்கிக்கிட்டு சேலஞ்சர் சும்மா ”ஜொய்ய்ங்ங்” ன்னு வானத்துல சீரிப்
பாயிது. எல்லாரும் டிவிலயும் நேர்லயும் எல்லாரும் பாத்து கைதட்டி ஆரவாரப்படுத்துராங்க.
கரெக்டா 73 செகண்ட் ஆச்சி. வானத்துல ஒரே பட்டாசா வெடிச்சிது. அட ராக்கெட் லாஞ்ச்சுக்காக
நம்ம அரசாங்கம் வான வேடிக்கையெல்லாம் ஏற்பாடு செஞ்சிருக்காங்கப்பான்னு அமெரிக்க மக்கள்லாம்
ஒரே குஜாலா கைதட்டிக்கிட்டு இருந்தாய்ங்க. எல்லாரும் கைதட்டிக்கிட்டு இருக்க கூட்டத்துலருந்து
ஒருத்தன் ஓடிவந்து எல்லாரயும் பாத்து சத்தம் போட்டு சொன்னான்
“அடேய்…
வெடிக்கிறது பட்டாசு இல்லடா… நம்ம அனுப்புனா ராக்கெட்டுடா”
இரண்டு நிமிடம் முன்பு வரை ப்ரம்மாண்டமாக நின்றிருந்த சேலஞ்சர், விண்ணில் சுக்கு நூறாக வெடித்துச் சிதற, அமெரிக்காவே அதிர்ச்சியில் உறைந்தது.
இரண்டு நிமிடம் முன்பு வரை ப்ரம்மாண்டமாக நின்றிருந்த சேலஞ்சர், விண்ணில் சுக்கு நூறாக வெடித்துச் சிதற, அமெரிக்காவே அதிர்ச்சியில் உறைந்தது.