டைரக்டர் பி.வாசுவ பத்தி நா சொல்லி தான் உங்களுக்கு தெரியனும்னு தேவையில்லை. தமிழ்ல மட்டும் இல்லாம தெலுகு, கன்னடா, ஹிந்தின்னு எல்லா மொழியிலயும் 50 க்கும் மேல படம் டிரைக்ட் பண்ணி பல சூப்பர் டூப்பர் ஹிட்டுங்கள குடுத்தவர். இவர் தலைவரை வச்சு எடுத்த 5 படங்களில் 4 படங்கள் மெகா ஹிட், குசேலன் தவிற.. (பணக்காரன், உழைப்பாளி, மன்னன், சந்திரமுகி) ரஜினிக்கு ஏற்றமாதிரி திரைக்கதை எழுதுறதுல பி.வாசு பயங்கர கில்லாடி. சுருக்கமா சொல்லப்போனா பி.வாசு தலைவரை வைத்து தந்த எந்த படமும் நம்மள ஏமாத்துனதில்லை. அதுமட்டும் இல்லாம ப்ரபு, சத்யராஜ வச்சி நிறைய சூப்பர் டூப்பர் ஹிட்டுகள குடுத்தவரு. தலைவர் படங்கள் இல்லாம இவர் எடுத்த நடிகன், சின்ன தம்பி, மலபார் போலீஸ் போன்ற படங்களுக்கு நா பயங்கர Fan.
போன வாரம் திடீர்னு தலைவர் படம் பாத்தே பாக்கனும்னு உள்ளுக்குள்ளருந்து ஒரு தூண்டுதல். (இது அப்பப்ப வரும்... அநேகமா எல்லா தலைவர் ரசிகர்களுக்குள்ளும் இது வந்து போகும்) சரி பணக்காரன் பாக்கலாம்னு ஆரம்பிச்சேன். நா நிறைய தடவ சன் டிவில பணக்காரன் பாத்துருக்கேன். ஆனா போன வாரம் பாக்க ஆரம்பிக்கும் போது ஒரு சீனு. அப்டியே புல்லரிச்சிருச்சி.. எனக்குள்ள அடிமட்டத்துல இருந்த பி,வாசு அப்டியே உச்சிக்கு பொயிட்டாரு. எந்த சீன்? இது எல்லாரும் பல தடவ பாத்துருப்பீங்க.
ராதாரவி தங்கச்சி கொழந்தைய செந்தாமரைகிட்ட கொல்ல சொல்லி குடுத்துட்டு போயிடுவாரு. ஆனா செந்தாமரை கொழந்தைய கொல்லாம ட்ரெயின்ல தூக்கிகிட்டு ஊருக்கு போயிட்டு இருப்பாரு. செந்தாமரை கைல ப்ராந்தி பாட்டில் வச்சி குடிச்சிட்டே வருவாரு. திடீர்னு கொழந்தை பசியில அழுகும். எதிர்க்க ஒரு அம்மா அவங்க கொழந்தைக்கு பால் குடுத்துகிட்டு இருக்கத பாத்துட்டு
"ஏம்மா இந்த கொழந்தைக்கும் பால் குடேன்" ம்பாறு செந்தாமரை.
"ஹ்ம்ம்ம்... குடிக்க காசு இருக்கு... கொழந்தைக்கு பால் வாங்கி குடுக்க காசு இல்லையா? நா குடுக்க முடியாது போய்யா"ன்னுடும்.
கொழந்தை பசியில அழுதுட்டே இருக்க, இவரு என்ன பணறதுன்னு தெரியாம முழிச்சிட்டே இருக்க...
உடனே ட்ரெயின் ட்ராக் மாறுது..அந்த ஜெர்க்ல Upper berth கூடையில வச்சிருந்த பால் பாட்டில் கீழ விழுந்து அங்கருக்க கேப் வழியா கொழந்தைக்கு பால் கெடைக்குது..
அந்த பால் சொட்டு சொட்டா வடிஞ்சி கொழந்தை வாயில ஊத்திட்டு இருக்கும் போது செந்தாமரை ஒரு சந்தோஷத்துல தலைய அசைக்க, இசைஞானியோட வழக்கமான தாலாட்டுல "மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்" ங்குற பாட்டு ஆரம்பிக்குது.
இதுக்கு மேல ரஜினி படத்துக்கு சூப்பரான ஒரு பில்ட் அப் சீன் எழுதமுடியாது. நா இங்க சொல்லிருக்கது எந்த அளவுக்கு உங்களுக்கு ஃபீல் இருக்குன்னு தெரியல. நான் பலதடவ இந்த சீன பாத்துருக்கேன். ஆனா போன வாரம் பாக்கும்போது என்னவோ தெரியல ரொம்ப அஃபெக்ட் பண்ணிருச்சி.
சரி சம்பந்தம் இல்லாம எதுக்கு இப்புடி ஒளரிட்டு இருக்கன்னு தானே கேக்குறீங்க.. சம்பந்தம் இருக்கு. சந்த்ரமுகிங்கற மெகா ஹிட் படத்த குடுத்த பி.வாசு கொஞ்ச நாளுக்கு முன்னாடி சந்த்ரமுகியோட sequel எடுக்கப்போறேன்.. படம் பேரு வேட்டையன். ரஜினி நடிச்சா மட்டுமே இந்த படத்த எடுக்க முடியும்னு சொல்லிகிட்டு பீதிய கெளப்பிகிட்டு இருந்தாரு. (தலைவர் ஜக்குபாயை ஹோல்ட் பண்ணிட்டு சந்த்ரமுகி அறிவிக்கும் போது இதே பீதி பல பேருக்கு இருந்தது). ஆனா தலைவர் அதுக்கு ஒத்துக்கலங்கறது நியூஸ்.
உடனே பி.வாசு கன்னடாவுல ஏற்கனவே எடுத்துருந்த ஆப்தமிராவுக்கு (சந்த்ரமுகிக்கு முன் எடுக்கப்பட்ட சந்த்ரமுகியின் கன்னட வெர்ஷன்) ரெண்டாவது பாகமா ஆப்தரக்க்ஷகா ங்கற படத்த அதே சூப்பர் ஹீரோ விஷ்ணுவர்தன வச்சி எடுத்து மிகப்பெரிய வெற்றிய கொடுத்தாரு. விஷ்ணுவர்தன் தலைவரின் சிறந்த நண்பர்களில் ஒருவர். இந்த ஆப்தரக்க்ஷகாவே விஷ்ணுவர்தனின் கடைசித் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனா? மட்டை ஆயிட்டாருங்க.
இதே ஸ்க்ரிப்ட தெலுகுல தலைவர் நடிச்சி வெளியான சந்த்ரமுகியோட sequel ah வெங்கடேஷ வச்சி நாகவல்லிங்கற பேர்ல எடுத்து 2010 ல ரிலீஸ் பண்ணாரு. தமிழ்லயும் டப்பிங் பண்ணி ரிலீஸ் பண்ணாங்க. படம் சூப்பர் ஹிட் ஆகலன்னாலும் ஒரளவு ஓடுனுச்சின்னு பாக்ஸ் ஆபீஸ் சொல்லுது. சரி அப்டி என்னதான் இந்த ரெண்டாவது பார்ட்ல பண்ணிருக்காருன்னு பாப்போம். ஒரு வேளை தலைவர் ஒரு நல்ல ஸ்கிரிப்ட மிஸ் பண்ணிருந்துருப்பரோன்னு நெனச்சி இன்னிக்கு இந்த படத்த பாத்தேன்.
இத சந்தரமுகியோட ரெண்டாவது பார்ட்டுன்னு சொன்னா சத்தியமா யாரும் நம்ம மாட்டாங்க. சந்த்ரமுகியோட ரீமேக்னு வேணா சொல்லலாம். சந்திரமுகியே ரீமேக் தான.. அப்பனா இது டபுள் ரீமேக்கான்னு கேக்குறீங்க அதான? ஆமாப்பா ஆமாம். இந்த படத்தோட கதைய கொஞ்சம் சுருக்கமா சொல்றேன் புரிஞ்சிக்குங்க.
சந்தரமுகிய ப்ரவு வீட்டுலருந்து தலைவர் வெளியேத்துனதும், சந்த்ரமுகியோட painting அப்டியே காத்துல பறந்து போய் வேற ஒரு எடத்துல விழுந்துடுது. அத ஒருத்தர் எடுத்து வீட்டுக்கு எடுத்துட்டு போக, அங்க இங்கன்னு சுத்திட்டு கடைசில சரத்பாபு வீட்டுக்கு போயிடுது. அந்த ஃபோட்டோ மூலமாதான் சந்த்ரமுகி கங்காங்கர ஜோதிகா வீட்டுலருந்து கெளரிங்கற ரிச்சா வீட்டுக்கு இடம்பெயருராங்க.
சந்தரமுகில கடைசி சீன்ல அந்த 30 அடி க்ராஃபிக்ஸ் பாம்பு வீட்ட விட்டு வெளிய போகுமே யாருக்காவது ஞாபகம் இருக்கா? அந்த பாம்பும் சரத்பாபு வீட்டுக்கே வந்துருது. என்ன சந்த்ரமுகில கொஞ்சம் ஒல்லியா இருந்த பாம்பு, நல்ல புஷ்டியான ஆகாரங்களா சாப்டு சாப்டு இந்த படத்துல அனகோண்டாவுக்கே சவால் விடுற அளவுக்கு வளர்ந்து நிக்குது. இதுல ஒரு காமெடி என்னனா அந்த பாம்பு அடிக்கடி சர்த் பாபு வீட்டுக்குள்ளயே சுத்தி கிட்டு இருக்கும் (வீட்டுக்குள்ளயே -நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹானர்) ஆனா அத யாராலயும் கண்டுபுடிக்க முடியாது. சந்த்ரமுகில இந்த பாம்ப காமிச்சப்பவே சிரிச்சவ்ங்க பல பேரு. படம் ஆரம்பிச்சி ஒரு கால் மணி நேரம் இந்த பாம்ப வச்சே படம் காட்டிகிட்டு இருந்தாய்ங்களா... நா கூட இது சந்த்ரமுகி பார்ட் 2வா இல்ல அனகோண்டா பார்ட் 2 வான்னு கன்பீஸ் ஆயிட்டேன்.
உடனே நம்ம ராமச்சந்திர ஆச்சார்யாவ வீட்டுக்கு கூப்புடுறாங்க. சந்த்ரமுகி ரிலீஸ் ஆகி அஞ்சு வருசஷம் ஆகியும் ஆச்சார்யாவுக்கு இன்னும் அதே டெய்லர் அதே வாடகை. அவரு வந்து ஞான திஷ்டில இந்த சந்தரமுகி குடியிருக்காடான்னு கண்டுபுடிச்சி சொல்றாரு. இந்த சந்தரமுகிய விரட்ட உலகத்துலயே ரெண்டே பேர்தான் இருக்காங்க.ஓண்ணு ஈஸ்வர் (தலைவர்) இன்னொன்னு அவரோட சிஷ்யன் விஜய் அப்புடின்னதும் நாலைஞ்சு மலைங்க வெடிக்குது. வெங்கடேஷ் உள்ளருந்து வந்து ஒரு தத்துவப்பாட்டை வெடிக்கவிடுறாரு. (இவரு சினிமாக்கு வந்து 25 வருஷம் ஆச்சாமப்பா)
டாக்டர் சரவணனோட சிஷ்யனா ப்ரச்சனைய சால்வ் பண்ண சரத்பாபு வீட்டுக்கு வர்றாரு வெங்கடேஷ். அதே மாதிரி அடுத்தவங்க மனசுல என்ன நெனைக்கிறாங்கனு சொல்றாரு. பொண்ணுங்கள மயக்குறாரு. சந்த்ரமுகில வர்ற மாதிரியே 12 மணி பேய் காமெடி மாதிரி இதுலயும். ப்ரமாணந்தம் இவ்ளோ மொக்கையா காமெடி பண்ணி நா பாத்ததே இல்லை. எந்த சீனுமே புதுசா பாத்த மாதிரி இல்லை. சந்த்ரமுகிய வேற கேரக்டருங்களோட திரும்ப
பாக்குற மாதிரி இருக்கு.
ஒரு சமயம் இவரு அந்த சந்த்ரமுகியோட STD ah தெரிஞ்சிக்க ஒரு லைப்ரரிக்கு போயி ஒரு புத்தகத்த வாங்கி படிக்கிறாரு. அது ஒரு ஒண்டர்ஃபுல் புக். எப்புடின்னு கேக்குறீங்களா? நூறு வருஷத்துக்கு முன்னால நடந்த கதைய அப்புடியே 12.1 MP கேமராவுல எடுத்த ஃபோட்டோவோட போட்டுருபாங்க. அத பாக்கும் போது தான் தெரியுது 100 வருஷத்துக்கு முன்னாடி சந்த்ரமுகிய கொலை செஞ்ச வேட்டைய ராஜா அப்டியே நம்ம வெங்கடேஷ்க்கு தாடி வச்சா மாதிரியே இருக்காருன்னு.
உடனே ஃப்ளாஷ்பேக். தஞ்சாவூர்ல இருக்க சந்த்ரமுகிய வேட்டையன் போய் தூக்கிட்டு வந்துடுறாரு. கிட்ட தட்ட ஒரு 20 நிமிஷம் ஃப்ளாஷ்பேக். சந்த்ரமுகில 2 நிமிஷம் ராஜா கெட்டப்புல காட்டுனாலும் படத்தையே தூக்கி நிறுத்துனது அந்த ரெண்டு நிமிஷம் தான். ஆனா இங்க ஒரு சீனும் தேறல. "லகலகலக" க்கு பதிலா புதுசா "அவுரா... அவுரா" ன்னு எதோ சொல்றாரு ராஜா.. எதடா அவுக்க சொல்றீங்கன்னு நா முழிச்சிகிட்டு இருந்தேன். சந்த்ரமுகில காட்டுன கதையோட மேட்ச் பண்றதுக்காக நெறைய சீன் சொதப்பலா இருக்கு. சந்த்ரமுகியா வர்ற அனுஷ்காவுக்கு மூஞ்சி முழுக்க பொங்கலுக்கு வெள்ளை அடிச்ச மாதிரி சுண்ணாம்ப அடிச்சி விட்டு பாக்கவே முடியாத அளவுக்கு பண்ணிட்டாய்ங்க. சந்த்ரமுகிய கொலைசெஞ்ச அப்புறம் ஊர் மக்கள்லாம் ஒண்ணு சேர்ந்து வேட்டையன கொன்னுடலாம்னு ப்ளான் பண்றாங்க. ஆனா வேட்டையன் உசாரா விட்டு காட்டுக்குள்ள ஓடிருறாரு. அவரு உயிரோட இருக்காரா இல்ல செத்துடாராங்குறது மர்மமாகவே உள்ளதுன்னு அந்த புக்குல முடிச்சிருப்பாங்க.
உடனே வெங்கடேஷ் வேட்டையன தேட ஆரம்பிச்சிருவாரு. ரொம்பலாம் இல்ல. அன்னிக்கு சாயங்காலமே கண்டும் புடிச்சிருவாரு. ஒரு பாழடைஞ்ச கிராஃபிக்ஸ் பங்களா. அதுக்குள்ள இடுப்பு வரைக்கும் வளர்ந்த முடியோடவும் பேய்ங்களுக்கு உள்ள மாதிரி நகத்தோடவும் நம்ம வேட்டையன் உயிரோட இருக்காரு. அதுவும் சும்மா இல்லை. மேட்ரிக்ஸ் படத்தை திருட்டு விசிடில பாத்து அதே மாதிரி ஃபைட்டும் கத்து வச்சிருக்காரு. ரெண்டு பேருக்கும் ஒரு சண்டை. என்ன கருமாந்துரக்கு அந்த ஃபைட்டுன்னு தெரில. 130 வயசு வேட்டைய ராஜா சும்மா left leg ah செவத்துல ஊணி right leg ஆல பறந்து பறந்து அடிக்கிறாரு பாருங்க. எனக்கு வாந்தி வந்துருச்சி அத பாக்குறதுக்கு.
இவருதான் அந்த 130 வயதான வேட்டைய ராஜா
அப்புறம் அதே கிராஃபிக்ஸ் பங்களால கிளைமாக்ஸ் பைட்டும். இதுக்கு மேல உலக கேவலமான கிராஃபிக்ஸ் பண்ணவே முடியாதுங்க. அந்த கன்றாவிய நீங்களே பாருங்க. இப்புடி ஓரு சீன்ல நம்ம தலைவர் நடிச்சிருந்தா என்ன ஆயிருக்கும்? மயக்கம் என்ன படம் பாத்தப்புறம் இந்த ரிச்சா நல்லாருக்க மாதிரி தோணுச்சி... ஆனா இந்த படத்துல ஹை பிட்ச்ல ஒரு டயலாக் பேசும் பாருங்க.. சத்தியமா அத பாத்தா நாலு நாள் சோறு திங்க முடியாது..
ஏற்கனவே சந்திரமுகி நடிச்சப்ப "என்னடா தலைவர் பேய்க்கதையில எல்லாம் நடிக்கிறாரேமே..தேறுமா?" ன்னு யோசிச்சிட்டு இருக்கும் போது, படம் வந்தப்புறம் "நா எப்டி கண்ணா தப்பு பண்ணுவேன்"னு சொல்லி தலைவர் செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சி. அதே மாதிரி தான் இந்த படம் பாத்த அப்புறம் ஸ்கிரிப்ட் செலெக்ட் பண்றதுல நம்ம தலைவர் ரொம்ப தெளிவா இருக்காருன்னு தெரியுது.
என்னது? அப்புறம் ஏன் குசேலன்ல நடிச்சாரா? எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. இத பத்தி இன்னொரு நாள் பேசுவோமே... :)