Thursday, February 10, 2011

யுத்தம் செய்- புதிய யுத்தமல்ல


Share/Bookmark
என்னடா இவன் திரும்பவும் மொதல்லருந்து ஆரம்பிக்கிரானேன்னு வெறிக்காதீங்க.நான் யுத்தம் செய் படத்த நல்லா இல்லைன்னு சொன்னதும் என் நண்பேன் கார்த்திக்கு பொத்துகிட்டு கோவம் வந்துருச்சி "இத எப்புடிடா நல்லா இல்லைன்னு சொன்ன"ன்னு. மற்ற சில பதிவர்களும் யுத்தம் செய் படத்த உச்சில தூக்கி வச்சி எழுதிருந்தாங்க.

அதுல எடுக்கப்பட்ட பல காட்சிகள் ஏற்கனவே பார்த்த காட்சிகளாக இருந்தாதலேயே, எனக்கு யுத்தம் செய் அவ்வளவா பிடிக்கல. உதாரணமா, அந்நியன் ல வர்ற multiple personality disorder ங்கற term, ஏற்கனவே சந்திரமுகில காட்டப்பட்டதால, அந்நியன் மக்களை அவ்வளவா கவரல. (சந்திரமுகிக்கு முன்னாலயே அந்நியன் தொடங்கப்பட்டதுங்கறது வேற விஷயம்)அதே மாதிரிதான் இந்த படத்துலயும். சில உதாரணங்கள் இங்கே. குறிப்பா என் நண்பேன் கார்த்திக்காக....

இந்த படம் "memories of murder" ங்கற படத்தின் தழுவல்ன்னு நிறைய பேர் ஏற்கனவே எழுதிருக்காங்க. அந்த படத்த நா பாக்காததினால, நா பாத்த சில படங்கள்லருந்தே சொல்றேன்.

1. ஆரம்ப காட்சியில் ஒர் பெண் காணாமல் போவது, தொடந்து வெட்டப்பட்ட கைகள் பொது இடத்தில் கிடப்பது- வேட்டையாடு விளையாடு: முதல் காட்சியில் ராணிங்கற பெண் காணாமல் போய் பின் வெட்டப்பட்ட ஒரு சுண்டு விரல் ப்ரகாஷ்ராஜ் வீட்டில் தொங்குவது.

2.கொல்லப்பட்ட மகளுக்காக பெற்றோர் பழி வாங்குவது- 250க்கு மேற்பட்ட தமிழ் படங்கள் இதே one line la வந்திருக்கு. ரொம்ப குறிப்பா சொன்னா நான் சிவப்பு மனிதன், ரொம்ப கரெக்டா சொன்ன போன மாசம் ரிலீஸான ஈசன். அதுல தம்பி மட்டும். இதுல எல்லாரும். அவ்வளவுதான்.

3. வில்லன் கும்பல் பெண்களை கடத்தி தவறாக பயன்படுத்துவது- அஞ்சாதே

4.கொலை செய்பவர்கள் டாக்டர்- வேட்டையாடு விளையாடு (இளா, அமுதன்)

5.சேரனுக்கு நன்கு பழக்கமான ஒரு டாக்டரே கொளையாளிகளில் ஒருவர் - யாவரும் நலம்: மாதவனின் குடும்ப டாக்டரே கொலை செய்பவர்

6.பெண்களை கடத்துவது ஒரு போலீஸ் உயர் அதிகாரி - சரோஜா -ஜெயராம்

7.முதல் பாதியில் கடத்தப்பட்டவரை கட்டி போடு ரம்பத்தால் அறுப்பது, driller ஆல் காலில் ஓட்டை போடுவது - House of wax, Hostel, Chain saw போன்ற படங்களில் காட்டப்பட்டது. அதே காட்சியமைப்பு lighting உட்பட.

8.முதல் பாதியில் கருப்பு உடை அணிந்து வரும் ஒரு உருவம்- அப்படியே தோற்றமும் பாவனைகளும் அஞ்சாதேயில் முகம் காட்டாத மொட்டையை ஞாபகபடுத்துகிறது.

9.வழக்கமான ஒரு மஞ்ச சேலை பாட்டு.

10.அஞ்சாதே படத்துல வந்த ஹாஸ்பிட்டல் ஃபைட்டு இங்க ரிப்பீட்டு

இதுல நீங்க mystery ன்னு சொல்ற எல்லாமே பலமுறை பாத்தது. புதுசா இருந்தாதன் அது mystery, இல்லன்னா அது 'worst'ery.

Monday, February 7, 2011

யுத்தம் செய்- செத்துட்டோம் போய்


Share/Bookmark
ஒரு படம் நல்லாருக்கு நல்லா இல்லைங்குறத தீர்மானிக்கிறது அந்த படத்தோட தரம் மட்டும் இல்ல. அந்த படத்த எங்க பாக்குறோம் யார் கூட பாக்குறோம்ங்குறதும் கூட தான். நேத்து ரூம் மேட்ஸோட AVM ராஜேஸ்வரிக்கு யுத்தம் செய் பாக்கலாம்னு போனோம். எங்க பக்கத்துல ஒரு குரூப்பு. லைட்டா சரக்குன்னு நெனைக்கிறேன். அவுங்களாலேயே யுத்தம் செய் ங்குற சீரியஸான படம் காமெடி படமாயிருச்சி.

நா போன வாரம் தான் நந்தலாலா வே பாத்தேன். ரொம்ப புடிச்சிருந்துச்சி. அதே மாதிரி வித்தியாசமா எதாவது பண்ணுவாருன்னு தான் போனேன். ஆரம்பத்துல படத்துல டயலாக்கே கெடையாது. வெறும் மீசிக்கு தான். 5 நிமிஷம் கழிச்சி சேரன் வந்தாரு. ஒரு DCP  சேரன ரொம்ப convince பண்ணி ஒரு கேச விசாரிக்க ஒத்துக்க வைப்பாரு.ஒடனே சேரன் வெறப்பா "சார் பாடி இப்ப எங்க இருக்கு?" ன்னோனஎன் பக்க்த்துல இருந்தவரு

"நாயுடு ஹால்" ல இருக்கு, சீக்கிரம் போங்க சார்ன்னு சொல்ல எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க.  அங்க அவரு சீரியஸா பேசிகிட்டு இருக்காருஇங்க எல்லாரும் சிரிச்சிகிட்டு இருந்தாய்ங்க. அப்பவே அந்த கேரக்டரோட கெத்து போயிருச்சி.

ரொம்ப நாளுக்கு அப்புறம், சேரன் இந்த படத்துல ஒரு guest role பண்ணிருக்காரு எல்லாரும் ஹீரோன்னு சொல்லிருப்பாயிங்களே... சத்தியாமா இல்ல. படத்துல மத்த எல்லாரும் வசனம் பேசுவாங்க. அவரு ஒரு ஓரமா screen la இருப்பாரு. அவ்வளவுதான்.

அஞ்சாதே பட்த்துல வர்ற மொட்டையன் மாதிரி இந்த படத்துலயும் ஒரு கேரக்டரு கருப்பு ட்ரஸ், மூஞ்சில mask லாம் போட்டுகிட்டு வருவான்.. அத பாத்தோன ஒருத்தன் "ஹை.... டோரா புஜ்ஜி" ன்னுகத்திட்டான். அதுக்கப்புறம் அவன பாக்கும் போதெல்லாம் காமெடியாதான் இருந்துச்சி.

அதே மாதிரி அஞ்சாதே படத்துல வர்ற hospital fight மாதிரியே ஒண்ணு இதுல இருக்கு. சேரன சுத்தி ஒரு பத்து ரவுடிங்க கத்தி ,அருவான்னு வச்சிகிட்டு சுத்தி நிக்கும் போது நம்மாளு பாக்கெட்லருந்து nail cutter ah  கெத்தா எடுத்து வச்சிகிட்டு சண்டை போடுவாறு.. அந்த சீனுக்கு நா மட்டும் இல்ல.. தியேட்டரே கை கொட்டி சிரிச்சிது.


படத்துல எதேதேதோ பேர் சொல்லிக்கிட்டே இருப்பாயிஙக. "சார், சாருவ கடத்திட்டாங்க ராஜமாணிக்கம் வெளில வந்துட்டாரு.. லதாவ காணும்... பிரிஸ்டோ தலைமறைவாயிட்டான்"நமக்கு ஒன்னும் புரியாது... யாருடா இவிங்கல்லாம் ன்னு நமக்கே கொழப்பம் வந்துரும்.யாரோ காணம போயிட்டாங்க போலருக்கு.. யாரோ தலைமறைவாயிட்டாங்க போலருக்குன்னு நெனச்சிக்கிட்டு பாக்க வேண்டியது தான். சேரன் யார தேடி போனாலும் அவங்ககாணாம போயிருவாங்க படத்துல. ஒரு கட்டதுல ஒருத்தரு கடுப்பயி,

"அட போங்க சார்.. நீங்க ரொம்ப லேட்டு... ஒவ்வொரு தடவையும் நீங்க புடிக்கிற மாதிரியே ஓடிவரீங்க.. நாங்கல்லாம் ரொம்ப ஆவலா பாத்துகிட்டு இருக்கோம் ஆனா புடிக்க மாட்டேங்குறீங்க. உங்களுக்கு இதெல்லாம் செட் ஆகாது.. நீங்க ஆட்டோகிராஃப்-2 எடுங்க நாம பாப்போம்"  அப்புடின்னுட்டாரு.

படத்துல காணாம போனவங்க என்ன ஆனாங்கன்னு பாத்துகிட்டுருக்கும் போது,ஒரு ரூம்ல, ஒருத்தர கட்டிவச்சி, ஒரு உருவம், drilling machine ah வச்சி ஓட்டைபோடும். அப்பதான் தெரிஞ்சிது ஏற்கனவே ஆறு பார்ட் வந்த saw வயும், நாலு பார்ட் வந்தHostel ah யும் இப்பதான் நம்மாளு தமிழ்ல ரீமேக் பண்றாருன்னு. ஏன் மிஸ்கின் சார், எதோ நந்தலாலாவ யாருக்கும்தெரிய கூடாதுன்னு ஜப்பான் படத்துலருந்து சுட்டீங்க.... இதயும் அதுமாதிரி ஜப்பான்,தாயலாந்துஉகாண்டா, ரவாண்டானு வேற பக்கம் போயி தேடிருக்கலாமே..

எலலா படத்துலயும் டயலாக்குக்கு இடையில லைட்டா music வரும். ஆனா இந்தபடத்துல music க்கு நடுவுல எப்பவாச்சும் லைட்டா  டயலாக் வரும். அனேகமா music director படத்த பாக்காம தனியாவே BGM போட்டுருப்பாருன்னு நெனைக்கிறேன். எல்லா எடத்துலயும் ஒரே music தான். படம் பாத்து வெளிய வரும் போது தலைவலி நிச்சயம். Camera angle எல்லாமே கடுப்பேத்துற மாதிரிஇருக்கு.

ரவுடி கும்பல், பொண்ணுங்கள கடத்துறாங்க, ரத்தம்  இது மாதிரி ஒரு சின்ன வட்டத்த விட்டு மிஷ்கின் வெளிய வர மாட்டாரு போலருக்கு. யுத்தம் செய் அஞ்சாதே மாதிரி இருக்கும்னு நம்பி போறவங்கள மிஷ்கின் நிச்சயமா ஏமாத்த மாட்டாரு. ஏன்னா அதே படத்த தான் திரும்பவும் எடுத்து வச்சிருக்காரு.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...