Wednesday, March 30, 2011

சிரிக்கெட் 2011


Share/Bookmark
இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனையே..  யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.
















நம்ம ஆஷிஷ் நெஹ்ராவின் வெற்றியின் ரகசியம் இதோ.......


 




Tuesday, March 15, 2011

கவுண்டரின் அ.இ.ஆ.மு.க (அகில இந்திய ஆம்ளைஸ் முன்னேற்ற கழகம்)


Share/Bookmark
கவுண்டர் வீட்டு திண்ணையில் காதை பொத்திக்கிட்டு உக்கார்ந்துருக்காரு. அப்போஅங்க செந்தில் வர்றாரு


செந்தில்: என்னண்ணே.... காத பொத்திகிட்டு உக்கார்ந்துருக்கீங்க.

கவுண்டர்: அட இந்த அரசியல்வாதிகள் தொல்லை தாங்க முடியலடா... வீட்ட சுத்திநாலு பக்கமும் பெரிய பெரிய கொழாய (loud speaker) கொண்டுவந்து கட்டிபுட்டானுக...இந்த பக்கம் ஒருத்தன் 'அய்யா'ங்குறான், இந்த பக்கம் ஒருத்தன் 'அம்மா'ங்குறான். பிச்சைகாரன் ரேஞ்சுக்கு எறன்கிட்டானுக. இந்த சத்ததுல என் காது ஜவ்வு ரெண்டும்கிழிஞ்சி ரத்தம் வர ஆரம்பிச்சிருச்சி. அதான் காத பொத்துனாப்புல புடிச்சிருக்கேன்.உள்ளுக்குள்ள வேற புழுக்கம் ஜாஸ்தியா இருக்கா அதான் வெளிய உக்கார்ந்துருக்கேன்

செந்தில்: பேசாம ஒரு ஏசி ய வாங்கி மாட்ட வேண்டியதுதானேண்ணே...

கவுண்டர்: அடேய் கலைஞர் டிவி மண்டையா... போன எலெக்க்ஷனுக்கு டிவி குடுத்தானுக. டிவி வாங்குற செலவு மிச்சமாச்சு..இந்த எலெக்ஷ னுக்கு ஏசி, வாஷிங் மஷின் எதாவது குடுக்குறானுகளான்னு பாத்துட்டு அதுக்கப்புறமா வாங்கலாம்னு இருக்கேன்.

செந்தில்: உங்களுக்கு ஒடம்பெல்லாம் மூளைண்ணே....ஆமா நீங்க யாருக்குண்ணே ஓட்டு போட போறீங்க..

கவுண்டர்: ஏன்.... நான் யாருக்கு ஓட்டு போறேன்னு சொன்னா என் கிட்ட பணம் குடுத்த மத்த கட்சி காரனுககிட்டல்லாம் சொல்லி அடி வாங்கி தரலாம்னு பாக்குறியா... அது நடக்காது மகனே.... ஆமா நீ யாருக்கு நாயே ஓட்டு போட போற...

செந்தில்: ஏன் ஓட்டு எப்பவுமே ஒபாமாவுக்கு தான்ணே....

கவுண்டர்: என்னது ஒபாமாவுக்கா... அவரு எந்த தொகுதில நிக்கிறாரு

செந்தில்: அதெல்லாம் எனக்கு தெரியாது.... போன தடவையும் அவருக்கு தான் போட்டேன்..இந்த தடவையும் அவருக்கு தான் போடுவேன். ஏன்னா அவருதான் என்ன மாதிரி கருப்பாஇருப்பாரு.

கவுண்டர்: இய்ய்ய்ய்... எங்க உன் மூஞ்சிய கொஞ்சம் திருப்பு.... இந்த மூஞ்சியும் அந்த மூஞ்சியும் ஒண்ணா? நல்ல வேளை நெல்சன் மண்டேலாவுக்கு ஒட்டு போடுவேன்னு சொல்லாம விட்டியே..நீ ஒபாமாவுக்கே ஓட்டு போடு ராஜா....இந்தியா ரொம்ப சீக்கிரம் முன்னேறிடும்...

செந்தில்: அண்ணேன் நாம நாட்டுக்காக எதாவது பண்ணனும்ணே....

கவுண்டர்: அந்தா ஒரு கெணறு தெரியிதல்ல.... அதுல விழுந்து செத்துபோயிரு, அதான்நீ நாட்டுக்கு செய்யிற பெரிய நல்ல விஷயம்..

செந்தில்:
அண்ணேன் வெளையாடாதீங்கண்ணே... நா சீரியஸா பேசிகிட்டு இருக்கேன்...

(செந்தில் பேசிகிட்டு இருக்கும் போதே அங்கு நடிகர் விஜயகாந்த் ஒட்டு கேட்டு வர்றாரு)

கவுண்டர்: அய்யோ..ஊருக்குள்ள ஒரு காட்டெருமை வந்துருச்சிடோய்... எல்லாரும் ஓடிருங்க...

செந்தில்: இது நம்ம கேப்டன்ணே

கவுண்டர்: யாரு நம்ம கேப்டன் MS தோணியா?

செந்தில்: அய்யோ அண்ணே அவரு நம்ம விஜயகாந்த்ணே...மேக்கப் இல்லாம வர்றாரு

கவுண்டர்:
ஓ....

கேப்டன்: அலோ மிஸ்டர் gaவுண்டமணி... gow are u?

கவுண்டர்:
ஒ... இதுல இங்கிலீசு வேறயா? இதுவரைக்கும் நல்லாத்தானுங்க இருக்கேன்

கேப்டன்:
இந்த எலெக்ஸன்ல நீங்க கண்டிப்பா எனக்கு தான் ஓட்டு போடனும்.

கவுண்டர்:
(சைடுல திரும்பி) நீயெல்லாம் எலெக்ஷன்ல நிப்பன்னு தெரிஞ்சா நா ஓட்டு போடவே போக மாட்டேன்.... கண்டிப்பா உங்க காட்டெருமை சின்னத்துலயே போட்டரேன்ங்க

கேப்டன் : நோ மிஸ்டர் gaவுண்டமணி.. யூ பார் மிஸ்டேக்... நம்மளோட சின்னம்
         முரசு... அதுல போடுங்க....

கவுண்டர்: சரிங்... அப்புறம் உங்ககிட்ட ஒரு டவுட் கேக்கணும்ங்... அது என்ன மொதல்ல கூட்டணி வைக்கப்போறதில்லை. தனியாவே இந்தியாவ காப்பாத்தப்போறேன்னு சொன்னீங்.. இப்ப என்னங் ஆச்சு...

கேப்டன் : அது போன வருஷம்... இது இந்த வருஷம்...

போன வருஷம்: "கூட்டணி" தமிழ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை.
இந்த வருஷம்:  "கூட்டணி" தமிழ்ல எனக்கு புடிச்ச ஒரே வார்த்தை... வரட்டுமா....அவ்வ்வ்


கவுண்டர்: அய்யோ என்ன ஜென்மம் இவன்.... டேய் இந்த நாயெல்லாம் ஏண்டா ஊருக்குள்ள விடுறீங்க...

(கவுண்டர் கடுப்புல கத்திக்கிட்டு இருக்க... பிண்ணாடி நவரச நாயகன் கார்த்தி ஓட்டு கேட்டு வர்றாரு)

கவுண்டர்: டேய் zoo zoo மண்டையா.. யார்டா இந்த தொப்பி போட்ட நாயி....

செந்தில்: அவர்தாணே நவரச நாயகன் கார்த்தி

கவுண்டர்: அந்த நாயி ஏண்டா இங்க வர்றான்...

செந்தில்: என்னணே உங்களுக்கு தெரியாதா... அவரும் கட்சி தலைவர்ணே...

(கார்த்திக் வந்துடுறாரு)

கார்திக்: ஏய்...யூ... அவ்வ்..... மிஷ்டர் கவுண்ட....... மணி.........ம்ம்ம்ம்

கவுண்டர்:
டேய் ஒண்ணு  பீடாவ துப்பிட்டு பேசு... இல்லைன்னா அப்புடியே ஓடிப்போயிறு.. தமிழ கடிச்சி துப்புறவனுகள கண்டா இவனுக்கு புடிக்காது... நாக்க புடிச்சி கடிச்சி வச்சிருவான்..

கார்த்திக்: ஏய்... நோ... நோ.. நான்.... பீடா..... போடலா.... அவ்... எனக்கு அப்புடிதான் பேஷ வரும்...ம்ம்ம்ம்ம்...நாம கூட ரெண்டு... மூணு படம்... அவ்வ்வ்... நடிச்சிருக்கோமே..மறந்துட்டீங்களா.. மிஷ்டர் காலிங்....

கவுண்டர்: ஓ அவனா நீ... ஆமாப்பா... ஆண்டவன் ஆளாளுக்கு ஒரு கொறைய குடுக்குறான் பாவம் உனக்கு இப்புடி பேச்சு வராம பண்ணிட்டானேப்பா... சரி விடு.. இப்ப எங்க வந்த?

கார்த்திக்:
அவ்வ்... நா.... இங்க...எலெக்ஷன்ல..ம்ம்ம்... நிக்கிறேன்.. நீங்க எனக்கு....அவ்வ்... ஓட்டு போடனும்....

கவுண்டர்:
அடடா... இப்பதானப்பா அந்த கருநாயிக்கு ஓட்டு போடறதா வாக்கு குடுத்தேன்

கார்திக் அழ ஆரம்பிச்சிடுறாரு...

கார்திக்:  காலிங்... நா உங்க தம்பி மாதிரி...அவ்வ்வ்

கவுண்டர்; சரி சரி... இப்ப எதுக்கு அழுகுற நீ... உன் கிட்ட உண்டான கெட்ட பழக்கம்  இதாம்பா.. சரி உனக்காக நா ஒட்டு போடுறேன்

கார்த்திக்: ரொம்ப தான்க்ஸ் காலிங்.. நா வரட்டுமா...

--
செந்தில்: அண்ணேன் நீங்க நல்லா மாட்டிகிட்டீங்க....

கவுண்டர்: என்னடா இவனுக... நாலு படம் ஓடாம படுத்துருச்சின்னா ஒடனே அரசியலுக்கு வந்துடுறானுக.. அரசியல் என்ன அவ்வளவு கேவலமா போச்சாடா....

செந்தில்:
அண்ணேன் நீங்க ஏன் ஒரு கட்சி ஆரம்பிக்க கூடாது....

கவுண்டமணி: டேய் காக்கா.. என்ன நீ ஓவரா பறக்குற.. அது நமக்கு சரிப்படாதுடா..கண்டவன் கால்ல எல்லாம் விழனும்...

செந்தில்:
இல்லைண்ணே.. தமிழ் நாட்டு மானத்த உங்களால தான் காப்பாத்த முடியும்

கவுண்டர்:
அப்புடிங்குற.... டெலிகேட் பொசிஷன்... ஓண் ப்ளஸ் டூ... டூ ப்ளஸ் த்ரீ...
(கொஞ்ச நேரம் யோசனைக்கு பிறகு)

சரி விடு... நீ இவ்வளவு வற்புருத்தி கேக்குறதால நா கட்சி ஆரம்பிக்கிறேன்...

செந்தில்: ஹே ஹே... ஹே... கட்சிக்கு என்ன பேருண்ணே வைக்கலாம்?

கவுண்டர்: அகில இந்திய ஆம்ளைஸ் முன்னேற்ற கழகம்னு வச்சிக்க...

கட்சி கொள்கைகள் மற்றும் கட்சி மீட்டிங் அடுத்த பதிப்பில்

Wednesday, March 9, 2011

டிரைலர் டைம்


Share/Bookmark

இந்த சினிமா காரங்கதான் காமெடி டைம், சீரியஸ் டைம்னு உயிரை எடுக்குராயிங்கன்னா  நீயுமாடா ன்னு நீங்க கேக்குறது புரியிது. உணர்ச்சி வசத்த கட்டுப்படுத்திகிட்டு கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க. இப்ப நீங்க பாக்க போறது நா எடுக்க ட்ரை பண்ண ஒரு படத்தோட டிரெய்லரும் ஒரு பாட்டும். ஹலோ பாஸ்...நா எடுத்ததுன்னோன சுச் ஆப் பண்ணிட்டு தம் அடிக்க கெளம்பிட்டீங்க. கொஞ்சம் பாத்துட்டு போங்க


1. இது நா காலேஜ் Final year படிக்கும் போது , VVS PICTURES ( Varuththappadatha Vaalibhar Sangam) சார்புல தயாரிக்கப்பட்ட ஒரு குறும் படத்தோட டிரைலர். ஏண்டா குறும் படம்னாலே 5 நிமிஷம் தான். அதுக்கு ட்ரைலர் வேறயான்னு வெறிக்காதீங்க. படத்த முடிச்சிருந்தாதான் படத்தையே போட்டுருப்பேன்லண்ணே... நாங்க எடுத்த இந்த படத்தால ஹாஸ்டல்ல நெறையா பேர் பாதிக்கப்பட்டு 
இருக்காங்க. "மச்சி... உன் ரூம்ல தான் மச்சி ட்யூப் லைட் பளிச்சின்னு எரியுது.. இந்த ரூம் தான் நம்ம படத்துக்கு கரெக்டா இருக்கும்" ன்னு சொல்லி ஒருத்தன ரூம விட்டே ரெண்டு நாள் தொரத்திட்டோம்.



2. இது சுமார் ஒரு ஆறு மாசத்துக்கு முன்னால, BlackBerry Pictures  சார்புல ஹரித்வார்ல எடுக்கப்பட்ட ஒரு வீடியோ. அதுல நடிச்சிருக்க கருப்பு கமலஹாசன் தான் producer. அவருக்கு வேண்டாத சில எதிரிகளால இந்த பாட்டு பாதி தான் எடுக்கு முடிஞ்சிது. என்ன இருக்கோ இல்லையோ title மட்டும் வக்கனையா போட்டுருகேன். இன்னொரு காமெடி என்னன்னா
இந்த project க்கு அய்யாவோட சம்பளம் ரூ.200/- ஹி ஹி...


பாத்தாச்சா..எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சா இருக்கனும். அது என்ன கல்ல பொறுக்கி எரியிறது.. ராஸ்கல். இனிமே ஒருத்தர் என் முன்னால நிக்க கூடாது.

Be carepull...

என்னை சொன்னேன்...

Tuesday, March 1, 2011

அதிசய ஜாக்கியும் ஆபாச டிஸ்கியும்-வெர்ஷன் 2.0


Share/Bookmark

இய்யாய்... இய்யாய்... நா கொஞ்ச நாள் ஊர்ல இல்லைன்னதும் யார் யாரோ எங்கஅண்ணன கலாய்க்கிறாங்க. வந்துட்டேன்ல... இனிமே யாரையும் விடமாட்டேன். நானேபாத்துக்குறேன்.

சமீபத்துல நகரம் படத்துல வந்த காமெடிய எல்லாரும் பாத்துருப்பீங்கன்னு நெனக்கிறேன்வடிவேலு சுந்தர்.C யோட சண்ட போட பயந்துகிட்டு என் ஏரியாவுக்கு வாடாம்பாரு ஏரியாவுக்கு போனோன என் தெருவுக்கு வாடாம்பாரு... தெருவுக்கு போனோன்ன என் வீட்டுக்கு வாடா பாத்துக்குவோம்பாரு...வீட்டுக்கும் போன ஒடனே "இனிமே வர
சொல்றதுக்கு வேற எடமே கெடையாதுப்பா இதாம்பா எண்டு" ன்னு கப்புன்னு கால்லவிழுவாரு.

அதே மாதிரிதான் எங்க அண்ணனும். "நீ யாருன்னு சொல்றா பதில் சொல்றேன்"ம்பாருஅப்புறம் உன் ஃபோட்டோவ போடுடா பதில் சொறேன்ம்பாரு... அப்புறம் போன் நம்பர் குடுடா பதில் சொல்றேம்பாரு.. அப்புறம் கடைசில "நான் பனங்காட்டு நரி.. நான் யாருக்கும பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" ன்னு சொல்லி எஸ்கேப் ஆயிருவாரு.அது தெரியாம சும்மா அண்ணேன் கிட்ட வம்பு இழுத்துகிட்டு. அட போங்க பாஸ்.

அட அத விடுங்க.. இது என்ன எங்க அண்ணனுக்கு புதுசா... அவரு எழுதுற ஒலகபட விமர்சங்கள நீங்க படிச்சதில்லையா. ஒரு படத்துல atleast 5 பிட்டாவது இருந்தாதான் எங்க அண்ணேன் அதுக்கு விமர்சனம் எழுதவே ஆரம்பிப்பாரு. டைட்டானிக் படத்துல ஒரே ஒரு பிட்டு தாம்பா இருந்துச்சி"ன்னு அந்த படத்துக்கே விமர்சனம் எழுதாம புறக்கணிச்சவரு எங்க தன்மான சிங்கம்.

தன்மானத்துல எங்க அண்ணேன் சிங்கம்னா, பதுங்கி தாக்குறதுல  எங்க அண்ணேன் புலி.ஏன் அப்புடி சொல்றேன்னா, போன தடவ நானும் என் நண்பனும் அவர கலாய்க்கும் போது சும்மா இருந்தாறு. சுறால வடிவேலு காலைல படகு போட்டிக்கு சாயங்காலம் போயி, அன் அப்பொஸ்டா ஜெயிச்சிட்டேன்னு சொல்ற மாதிரி, நாங்க அவர எவ்வளவு முடியுமோ அவ்வளவு கலாய்ச்சிட்டு tired la ஊரபாக்க போன அப்புறம் "என்னை பார்த்து பயந்து விட்டார்கள்" ன்னு அறிக்கை விட்டவரு.

ஆமா A சர்டிஃபிகேட் குடுத்த ஒரு படத்துக்கு உங்கள யாருங்க போக சொன்னது. யாரும்போக கூடது. ஏன்னா உங்களுக்கு வாழ்கை தத்துவம் தெரியாது. தெரியலன்னா எங்க அண்ணண்ட கேட்டு தெரிஞ்சிக்குங்க. ஏன்னா வாழ்க்கை தத்துவம் தெரிஞ்சவர் உலகில் அவர் ஒருவரே. நீங்கலாம் A சர்டிஃபிகேட் இருந்தா படத்துக்கு போகமாட்டீங்க. ஆனா எங்க அண்ணேன் A சர்டிஃபிகேட் இல்லைன்னாதான் படத்துக்கு போக மாட்டரு.

நடுநிசி நாய்கள் படத்தில் காட்டிய செய்தி,காட்டிய விஷயம் தமிழ் சூழலுக்கு புதுசு..அதான் உங்களுக்கு புரியல. ஆனா எங்க அண்ணேன் அது மாதிரி பல ஒலக படங்கள பாத்தவரு. பாத்துகிட்டு இருக்கவரு. இன்னும் நெட்டுல தேடிகிட்டே இருக்காரு. அப்புடி உங்களுக்கு அந்த படம் பாத்தே ஆகனும்னு தோனுச்சின்னா, எங்க அண்ணேன் அந்த படத்துக்கு எழுதுன விமர்சனங்கள படிச்சிட்டு போய் பாருங்க. அந்த படம் கொஞ்சம் decent ah  தெரியும். ஏன்னா எங்க அண்ணேன் விமர்சனம் அந்த படத்த மிஞ்சிரும்.

"நாம துப்ப சமுதாயத்துல நெறைய விஷயம் இருக்கு. ஆனான் நாம சினிமாவ மட்டும்தான் குறிபார்த்து துப்புவோம்". எங்க அண்ணேன் இப்புடி சொன்னதோட அர்த்தம் யாருக்காச்சும் புரிஞ்சிச்சா.. "ஏண்டா நா ஒருத்தன் இங்க இருக்கேன் கண்ணு தெரியலயா, ஏன் சினிமாம துப்புறீங்க?" ன்னு உரிமையோட கேக்குறாரு. இந்த பெருந்தன்மை யாருக்கு வரும்.

"அப்படி அந்த 85பர்சென்ட் பிட் படம் பார்த்த அத்தனை பேரும் கிளம்பி இருந்தால் யோசிக்கவே பயமாக இருக்கின்றது.." நல்ல வேளை.. இப்பதைக்கு எங்க அண்ணேன் மட்டும் தான் அப்புடி இருக்காரு. மத்தவங்கல்லாம் நல்லா தான் இருக்காங்க. Thank God.

ஒண்ணு தெரிஞ்சிக்குங்க. Blog la ஃபோட்டோ போடறவன் வீரன். மொபைல் நம்பர் போடறவன் மாவீரன். எங்க அண்ணேன் மாவீரன். அப்புடின்னு நா சொல்லல.. அவரே சொல்லிக்கிறாரு.இனிமே யாருக்காவது எங்க அண்ணன்கிட்ட பதில் வேணும்னா, உங்க ரேஷன் கார்டு, voter id  இல்லைன்னா driving licence ah ஒரு scan பண்ணி எங்க அண்ணனுக்கு அனுப்புங்க. அவரு அப்புறம் நேரமிருந்தால் (அவ்வ்) பதில் சொல்வாறு.

அப்புறம் கடைசியா ஒண்ணு எங்க அண்ணேன் சொன்னத எல்லாரும் ஞாபகம் வச்சிக்குங்க

அந்த பதிவு யாருக்கும் பதில் சொல்ல அல்ல - சும்மா எங்க அண்ணேன் எழுத வருதான்னு எழுதி பாத்தாரு

அதுக்கு எதிர்கருத்தோ அல்லது எதிர்பதிவோ வந்தாலும் அவரு பதில் சொல்ல போவது இல்லை- ஏன்னா எங்க அண்ணனுக்கு பதில் சொல்ல தெரியாது.


காரணம் ஒரு விஷயத்தை தொடர்ந்து அவரால் பேசிக்கொண்டு இருக்கமுடியாது..- காரணம் எங்க அண்ணேன் ரொம்ப பிஸி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...