குறிப்பு : இந்த பதிவு வைத்தீஸ்வரன் கோவில் ஓலைச்சுவடி வரலாறுகளை பழிசொல்வதற்கோ அல்லது ஜோதிடத்தை நம்புபவர்களின் நம்பிக்கையை குலைப்பதற்காகவோ அல்ல. எனக்கு ஏற்பட்ட ஒரு சிறு அனுபவத்தின் தொகுப்பே.. மேலும் இப்பதிவில் குறிப்பிட்டுள்ள அனைத்தும் கற்பனை அல்ல. உண்மையே..
போன வாரம் கம்பெனிக்கு தொடந்து ஒரு மூணு நாள் லீவு விட்டுட்டு (எனக்கு நானே லீவு விட்டுக்கிட்டேன்) அண்ணனோட திருமணத்துக்காக ஊருக்கு போயிருந்தேன். வெள்ளிக்கிழமை கொஞ்சம் freeya இருந்ததால வீட்டுல எல்லாரும் கும்பகோணத்த சுத்தியிருந்த கோயில்களுக்கு ஒரு நாள் டூர் மாதிரி கெளம்புனோம்... ஆலங்குடி குருஸ்தலம், திருமணஞ்சேரி, திருக்கடையூர்னு பொய்ட்டு மதியம் 11.20 மணி போல வைத்தீஸ்வரன் கோயிலுக்குள்ள நுழைஞ்சோம். ஊருக்குள்ள நுழைஞ்ச உடனேயே
"ஓலைச்சுவடி ஜோதிடம்" "நாடி ஜோதிடம்" "ஜோதிட சிகாமணி" "ஜோதிட கலாபூசன்" ன்னு பாக்குற இடமெல்லாம் இந்த மாதிரி போர்டுங்கதான்.
அந்த கோவிலுக்கு நா போனது அதுவே முதல்முறை.. ரொம்ப அருமையா இருந்துச்சி பாக்குறதுக்கு. கோவிலுக்கு உள்ள போற வழியில ரெண்டு சைடும் சின்ன சின்ன கடைங்க. வழக்கம் போல ஒருத்தர் வந்து அர்ச்சனை தட்டு வாங்கறதுக்காக எல்லாரையும் மறிச்சி அவர் கடைக்கு கூப்டாரு.. அர்ச்சனை வாங்கிட்டு கிளம்பும்போது கடைக்காரர் மெதுவா கிட்ட வந்து
"கைரேகை எதாவது பாக்குறதுன்னா இப்பவே குடுத்துட்டு போங்க... நீங்க
வர்றதுக்குள்ள எடுத்து வைப்பாங்க"ன்னாரு
"எண்ணன்னே சொல்றீங்க... ஒண்ணும் புரியலயே"ன்னு நா கேக்க
"ஓலைச்சுவடி பாக்குறதுக்குப்பா..இங்க கோயில்பக்கத்துலயே பாக்குறாங்க... உங்களுக்கு பாக்கனும்னா உங்க கைரேகைய அங்க குடுத்துட்டு போங்க... உங்க கைரேகைக்கு ஏத்த ஓலைச்சுவடிய அவங்க லைப்ரரிலருந்து தேடி எடுக்கவே பத்து பதினைஞ்சி நிமிஷம் ஆகும்.. அந்த ஓலைச்சுவடில உங்க பேரு உங்க அப்பா பேரு அம்மா பேரு எல்லாம் கரெக்டா வந்தா தான் உங்களுக்கு ஜாதகமே சொல்லுவாங்க.. 150 ரூவா தான்... ஒரு வேலை பேர்
சரியா வரலன்னா பாக்கமாட்டாங்க.. வந்துடலாம்... ஃப்ரீதான்.." ன்னாரு
"என்னது பல வருஷத்துக்கு முன்னாடி எழுதப்பட்ட ஒலைச்சுவடில நம்ம பேரு நம்ம குடும்பத்துல உள்ள பேரெல்லாம் இருக்குமான்னு அவர் சொன்ன விஷயங்கள் எனக்குள்ள ஒரு அமானுஷ்யமான எதிர்பார்ப்ப ஏற்படுத்துனுச்சி"
அவர் சொன்னத கேட்டதும் எங்கம்மாவும் நானும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கிட்டோம்.
"பாப்போமாடா"
"நீ சொல்லும்மா" ன்னேன்
"நீ எதுக்கும் மாமாட்ட கேளுடா... அவன் கரெக்டா சொல்லுவான்டா" ன்னு சொல்லுச்சி
முன்னாடி என்னோட தாய்மாமா சொக்கலிங்கம் போய்கிட்டு இருந்தாரு... அவருக்கு கொஞ்சம் நக்கல் ஜாஸ்தி
"மாமா இந்த ஓலைச்சுவடி ஜாதகம் பாக்கலாமான்னு அம்மா கேக்குது"
"என்னது ஓலைச்சுவடி ஜாதகமா? டேய் இவய்ங்கல்லாம் மொரட்டு ஃப்ராடுடா.. பேசாம வா.. பணத்த புடுங்கிருவாய்ங்க.." ன்னு சொன்னவுடனே நா கொஞ்சம் ஏமாற்றத்தோட அங்கனக்குள்ளயே நிக்க
"டேய் சொன்னா கேளு.... அத்தனையும் பொய்யி.. பேசாம வா சாமி கும்டுட்டு கெளம்புவோம்"ன்னாரு
"ஆரம்பத்துலயே கேட்டப் போட்டுட்டியா... வேற என்ன பண்றது" ன்னு தலைவர தரிசனம் பண்ண பொய்ட்டோம்..
தரிசனம் முடிஞ்சி உள்ள உக்கார்ந்துருக்கும் போது அம்மா
"டேய் எவளவோ செலவு பண்றோம்.. ஒருதடவ என்ன சொல்றாய்ங்கண்ணு பாப்போமே" ன்னு அம்மா சொல்ல "உன் தம்பிகிட்ட கேளும்மா" ன்னேன்..
அது அவர்ட்ட போயி "தம்பி இவனுக்கு எதோ ஓலைச்சுவடி பாத்தே ஆவனுமாம்.. கொஞ்சம் அழைச்சிட்டு பொய்ட்டு வாயேன்... "ன்னு என்னைய போட்டு விட்டுருச்சி. ஆனா இந்த தடவ எதுவும் சொல்லாம சரி வாங்க போலாம்னு சொல்லிட்டு கூப்டுபோனாரு.நாங்க அர்ச்சனைவாங்குன கடைக்காரர் "வாங்கடே... நீங்க வருவீங்கன்னு தெரியும்டே" ன்னு மனசுல நெனைச்சிகிட்டே வாங்க வாங்கன்னு கோவிலுக்கு சைடுல இருந்த ஒரு வழில அழைச்சிட்டு போனாரு.
"ஓலைச்சுவடியா... அப்ப ஜாதகம் பாக்குறவருக்கு ஒரு 70 வயசு இருக்கும்.. நெஞ்சு வரைக்கும் தாடி வச்சிருப்பாரு... வெறும் ருத்ராட்ச மாலையா போட்டுருப்பாரு... காவி வேஷ்டி சட்டை போட்டுருப்பாரு" ன்னு அவரப்பத்தி எனக்குள்ளயே ஒரு கற்பனை ஓடிக்கிட்டு இருந்துச்சி.
ஆனா கோயில விட்டு வெளிய அவரு அழைச்சிட்டு போன எடத்துக்கு போய் பாத்தா ஒரு சின்ன கார்ப்ரேட் கம்பெனி மாதிரி வச்சி நடத்திகிட்டு இருந்தாய்ங்க.. ரிசப்ஷன்ல ஒருத்தர் வர்ரவங்க போறவங்க கைய எல்லாம் புடிச்சி வலுக்கட்டாயமா இங்க் க தடவி பேப்பர்ல கைரேகைய எடுத்து இன்னொருத்தர்கிட்ட குடுத்துட்டு ஒரு ரிஜிஸ்டர்ல வேற எண்ட்ரி போட்டுக்கிட்டு இருந்தாரு..
நாங்க உள்ள நுழைஞ்சதுமே "யாருக்கு பாக்கனும்.. யாருக்கு பாக்கனும்" பறபறன்னு ஒருத்தன் கேக்க
"ஆகா..ரொம்ப ஆவலா எதிர்பாக்குறாய்ங்களே... அவசரப்பட்டு வந்து மாட்டிக்கிட்டோமோன்னு நெனச்சிட்டே, எனக்கு தாங்க பாக்கனும்"னு சொன்னன்.
உடனே அங்க இருந்த ஒரு INK pad la என் கைய வச்சி அமுக்கி ஒரு சின்ன துண்டு பேப்பர்ல கைரேகைய எடுத்துகிட்டாய்ங்க.. எடுத்தவன் கைலயே ஒரு சின்ன ஓலைச்சுவடி கட்டு இருந்துச்சி.... போன மாசம்தேன் அத எங்கயோ ஆர்டர் குடுத்து செஞ்சிருப்பாய்ங்க போல.. கைரேகை எடுத்தவனுக்கு வயது 25 லருந்து 30 க்குள்ள தான் இருக்கும்.
"சரி நீங்க ஒரு 5 நிமிஷம் உள்ள உக்காருங்கன்னு ஒரு நாலுக்கு நாலு சைஸ்ல ஒரு சின்ன ரூம்ல உக்காரவச்சிட்டு உள்ள எங்கயோ போனாரு.. ஒரு ரெண்டே நிமிஷத்துல திரும்ப வந்தாரு.. கையில் முன்னாடி வச்சிருந்த அதே ஒலைச்சுவடிதான் இருந்துச்சி.. ரூம லாக் பண்ணிட்டு எதுதாப்புல சேர்ல உக்கார்ந்து ஆரம்பிச்சாரு....
சங்கத்தமிழ்ல, மூச்சுவிடாம ஓலைச்சுவடிய பாத்து எனக்கு புரியாத மாதிரியே எதோ படிச்சிட்டு "இப்ப நா படிச்சது கடவுள் வாழ்த்து" ன்னாரு.
"அப்புடியா... எனக்கு தான் ஒண்ணும் புரியலையே... நீங்க தேசியகீதத்த தமிழ்ல படிச்சேன்னு சொன்னா கூட நம்பித்தானே ஆகனும்" ன்னு நெனச்சிகிட்டு மேல சொல்லுங்கன்னு சொன்னேன்.
அவர் அதே மாதிரி புரியாத மாதிரியே அடுத்த ஓலைச்சுவடிலருந்து இன்னும் ஏதேதோ படிச்சிட்டு...
"உங்க அப்பா பேரு கா, கீ, கு , கே இதுல எதாவது ஒரு எழுத்துல தொடங்குமா?" ன்னு கேட்டாரு
"இல்லை" ண்ணேன்.
"ஆ, உ, வே, நா" இதுல எதாவது ஒரு எழுத்துல ஆரம்பிக்குமா?
"இல்லை"
"மா, மு, வ, ர" இதுல எதாவது ஒரு எழுத்துல ஆரம்பிக்குமா?
"இல்லை"
"வீ, ச, ஜெ, அ" இதுல எதாவது ஒரு எழுத்துல ஆரம்பிக்குமா?
"அடப்பாவிகளா இதுக்கு மேல தமிழ்ல எழுத்துக்களே இல்லையேடா... நீங்க இப்புடித்தான் ஒவ்வொருத்தரோட அப்பா பேரயும் ஒலைச்சுவடில கொண்டுவரீங்களா?" ன்னு நெனச்சிகிட்டு ஆமான்னேன்.
அப்புறம் எங்க மேற்கண்ட எழுத்துக்கள்ல ஆரம்பிக்கிற தமிழ் பெயர்கள ஒண்ணு ஓண்ணா சொல்ல ஆரம்பிச்சி இதுவா இதுவா இதுவான்னு கேட்டு பதினைஞ்சி பேருக்கு அப்புறம் அத கண்டுபுடிச்சான்.. கண்டுபுடிச்சிட்டு "இருக்கே.. ஓலைச்சுவடில இருக்கே" ன்னு ஓலைச்சுவடில ஒரு பேனா மாதிரி வச்சி டிக் போட்டுகிட்டான்..
ஏண்டா அந்த தம்மா தூண்டு ஓலைச்சுவடிக்குள்ளயா இத்தனை பேரும் இருந்துச்சி.. அப்பா பேர கண்டுபுடிக்கிறதுக்கே இவளவு நேரம் ஆயிருச்சி.. திரும்ப அதே மாதிரி திரும்ப அம்மா பேர கண்டுபுடிக்க திரும்ப மொதல்லருந்து ஆரம்பிச்சி தமிழ்ல உள்ள அத்தனை பேரயும் கேட்டுட்டாரு.. கடைசில நானேதான் அம்மா பேர சொன்னேன்,.... அதுவும் ஓலைச்சுவடில இருக்குன்னு சொல்லி டிக் பண்ணிகிட்டாரு.. வெரிஃபிகேசனாமா..
திரும்ப என் பேர கண்டுபுடிக்கிறதுக்கும் இதே ப்ராசஸ்,,, அப்புறம் என் ராசி நட்சத்திரத்த கேட்டு தெரிஞ்சிகிட்டாரு.
"அப்ப சரி... இதுல உங்க வீட்டுல உள்ளவங்க பேரு இருக்கதால இதான் உங்களுக்கான ஓலைச்சுவடி... பலன் சொல்ல ஆரம்பிக்கலாமா" ன்னாரு
"அட இருங்க... எல்லாரயும் கூப்புடுறேன்" ன்னு சொன்னதும் அப்ப வாங்க வேற ஒரு ரூமுக்கு போகலாம்னு பக்கத்துலருந்த பெரிய கேபினுக்கு அழைச்சிட்டு போனாரு... நா அம்மா அப்பா, மாமா எல்லாரும் சுத்தி உக்கார்ந்துருக்க நம்மாளு கேப்பே விடாம, நம்ம ராசி நட்சத்திரத்துக்கு குருபெயர்ச்சி பலன்லாம் புத்தகத்துல வருமே, அத அப்புடியே ஒப்பிச்சாரு.. ஆனி போயி ஆடி போயி.. ஆவனி போயி..
"யோவ் இப்டியே போயிகிட்டு இருந்தா எல்லாமாசமும் போயி அடுத்த வருசம் வந்துரும்யா.. மேல சொல்லு" ன்னு நெனைச்சிட்டு இருக்கும் போது ஒரு காமெடி பண்ணாரு பாருங்க
"உங்களுக்கு மூணு தங்கச்சி இருக்கானுமே" ன்னாரு
"இல்லை... ஒண்ணுதான்" ன்னேன்..
"ஓ... மூணு தங்கச்சி இருக்கதுக்கு சாத்தியம் இருக்கு... ஆனா ஒரு தங்கச்சிக்கான பலன் சிறப்பா இருக்கு" ன்னு ஒரு சமாளிப்பு சமாளிசாரு பாருங்க... அவர் ஒவ்வொன்னா சொல்ல சொல்ல எங்க மாமா பக்கத்துல உக்காந்து உன்னை நினைத்துல சார்லி ஜாதகம் பாக்கும் போது சிங்கமுத்து "தெரிஞ்சிதா" "புரிஞ்சிதா"ன்னு கேப்பாரே.. அதே மாதிரி என்ன பாத்துக்கிட்டு இருந்தாரு...
ஒரு வழியா 5 நிமிஷத்துல ஒப்பிச்சி முடிஞ்ச அப்புறம் "வேற எதாவது கேக்கனுமா' ன்னாரு...
"ஒண்ணும் இல்லீங்க"
உடனே உள்ள ட்ராவுலருந்து ஒரு A4 சைஸ்ல ப்ரிண்ட் பண்ண ஒரு பேப்பர எடுத்தாரு. வேற ஒண்ணும் இல்லை.. அவங்களோட நாடி ஜோதிடத்துக்கு விளம்பரம்..அத கைல குடுத்துட்டு எங்ககிட்ட
"இப்ப உங்களூக்கு சொன்னது பொதுகாண்டம்.. இதுலயே உங்களுக்கு தனித்தனியான காண்டங்கள விளாவாரியா பாத்துக்கலாம்.. அதாவது தொழில், படிப்பு, வெளிநாட்டு பயணம் திருமணம்... இப்புடி எது வேணாலும் பாத்துக்கலாம்.. ஒரு காண்டம் பாக்க 150 ரூவா" ன்னாரு..
"ஓ.. இப்ப தொழில் காண்டம்னா அதுல என்ன சொல்லுவீங்க?" ன்னேன்
"உங்களுக்கு எப்டி பட்ட வேலை கிடைக்கும்.. சம்பள உயர்வு எப்ப வரும்,,, ப்ரமோஷன் எப்ப வரும்.. இந்த மாதிரி detail la சொல்லுவோம்"
"ஓ... எப்புடி.. முன்னாடி என்ன உள்ள கூட்டிட்டு போயி என்கிட்டயே விஷயத்த கேட்டு திரும்ப வெளில வந்து அத எங்ககிட்டயே திருப்பி சொன்னீங்களே.. அதே மாதிரி திரும்ப என்ன உள்ள கூப்டு உனக்கு எவள சம்பளம், எப்ப ப்ரமோஷன் தருவாய்ங்கங்கற மேட்டரல்லாம் என் டயே கேட்டு என் டயே சொல்றதுக்கா... ஆணியே புடுங்க வேணாம்" ன்னு நெனைச்சிகிட்டு "போதுங்க... முடிச்சிக்குவோம்" ன்னு சொல்லிட்டு பாத்ததுக்கு 150 ஓவாய குடுத்துட்டு வெளிய வந்தோம்..
எங்க மாமா லைட்டா என்ன பாத்தாரு...
"டேய்.. நா தான் சொன்னேன்ல.. இவய்ங்கல்லாம் மொரட்டு ப்ராடுடான்னு... பத்து வருசத்துக்கு முன்னாலயே நானும் என் ஃப்ரண்டு ராஜாவும் இங்க வந்து 4000 ரூவாய விட்டுடோம்டா"
"ஏன் மாமா... ஏற்கனவே நீ வாங்கிட்டு தான் இப்புடி பம்புனியா.. அந்த 4000 ரூவா மேட்டர முன்னாடியே சொல்லிருந்தா பின்பக்கம் வழியா எகிரி குதிச்சி ஓடிருக்கலாம்ல"
விடுறா.. இவய்ங்களுக்கு அந்த 150 ரூவா போகனும்னு இருக்கு...போயிருச்சி,... சரி வா கெளம்புவோம் ன்னு போனால் போகட்டும் போடா background சாங்கோட வீட்டுக்கு கெளம்புனோம்.