Thursday, January 19, 2012

மிஷ்கின் என்னும் ஒலக மகா டைரடக்கர்


Share/Bookmark
நண்பர்களே... இவனுக்கு வேற வேலையே இல்லயா... எப்ப பாரு எவனையாச்சும் நொள்ளை சொல்லிகிட்டே திரியிறான்னு நெனைச்சாலும் பரவால.. இத... இத சொல்லியே ஆகனும்..

போன வாரம் நண்பர் ஒருவர் ஒரு வீடியோ இணைப்பு கொடுத்து பாக்க சொன்னாரு. சரி எதோ பாசத்துல நல்ல வீடியோவா பாக்கட்டும்னு அனுப்புறாருன்னு நெனைச்சேன். பாத்த அப்புறம் தான் தெரிஞ்சிது அவருஎன் மேல எவள கொலைவெறில இருந்தா இத அனுப்பிருப்பாருன்னு. ஒருத்தனை வெறியேத்தனும்னா இந்த வீடியோவ போட்டு காட்டுனா போதும். பங்காளி சண்டைக்கு போறவிங்க இத பாத்துட்டு போனா இன்னும் நாலு பேர அதிகமா போட்டு அடிக்கலாம். 

அப்புடி என்ன வீடியோன்னு பாக்குறீங்களா.. வேற எதுவும் இல்லை.. நம்ம டைரக்டர் மிஷ்கின் போன  வருஷம் சாரு நிவேதிதாவோட ஒரு புத்தக வெளியீட்டு விழாவுல பேசிருக்காரு.. ரொம்ப நேரம்லாம் இல்ல ஒரு முப்பதே முப்பது நிமிஷம் தான். இந்த முப்பது நிமிஷத்துல சாருவ பத்தியும் அவரு எழுதுன புத்தகத்த பத்தியும் மிஞ்சி மிஞ்சி போனா ஒரு நாப்பது செகண்டு பேசிருப்பாரு.

பின்ன அரைமணி நேரம் என்ன பேசுனாருன்னு தெரியனுமா? இந்த வீடியோவ பாருங்கன்னு நா சொல்ல மாட்டேன்.. பாக்க ட்ரை பண்ணுங்க. குறிப்பு: இந்த வீடியோவ பாக்கும் போது தனியா பாக்குறது உசிதம். இத பாக்கும் போது கூட யாராவது இருந்து நீங்க கடுப்புல அவன தூக்கி போட்டு மிதிச்சிட்டீங்கன்னா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

லிங்க்கை க்ளிக்கவும் 

http://www.dailymotion.com/video/xhenll_charu-2010-mysskin-speechvideo_creation


வீடியோவ முழுமையாக பார்க்க முடியாதவர்களுக்காக:

ஆரம்பிக்கும் போதே இவங்க சாருவும், மிஷ்கினும் வீட்டுல தண்ணி அடிச்ச கதை. அதோட சாருவோட chapter close. அதுக்கப்புறம் இவரு எப்புடி இந்த உலகதரமான படங்களை எடுத்தாருன்னு (அதாவது எங்கருந்து எடுத்தாருன்னு) ஆரம்பிச்சிட்டாரு. ஆரம்பிச்சி கொஞ்ச நேரத்துலயே அவரு போக்கே சரி இல்ல. "Actually நா தமிழ்ல புத்தகங்கள் அதிகம் படிக்கிறதில்லை... ஏன்னா நா தமிழ் மீடியத்துல படிச்சவன்" ன்னு ஒரு வரி சொன்னாரு பாருங்க... உடனே நா முடிவு பண்ணிட்டேன்... உனக்கெல்லாம் போலீஸ்காரன் பத்தாதுடா வேற வேற வேற வேற வேட்டைக்காரன் தாண்டா வேணும்னு நெனைச்சிகிட்டு இத தலைவர் கவுண்டமணி பொறுப்புல விட்டுட்டேன்.. அவரு இந்த வீடியோவ பாத்துட்டு சொன்ன கமெண்ட்ஸ் இதோ உங்களுக்காக.

மிஷ்கின்: இருபத்து மூணு நாள் படம் எடுத்த அப்புறம் தான் தெரிஞ்சிது சித்திரம் பேசுதடி புயூட்டி அண்டு த பீஸ்ட் மாதிரியே இருக்குன்னு?

கவுண்டர்:
அப்ப. நீ படம் ஆரம்பிச்சி இருபத்து மூணு நாள் கழிச்சிதான் இத யாரோ கண்டுபுடிச்சிருக்காய்ங்க்க. உடனே நீ கப்புன்னு கால்ல விழுந்துட்ட.. நல்லா சமாளிக்கிரம்மா...

மிஷ்கின்: கதிர்கிட்டயும் கத்துக்கல வின்சென்ட் செல்வாட்டயும் நா எதுவுமே கத்துக்கல யாராவது வேணா போய் சொல்லுங்க.. என்னப்பத்தி விமர்சனம் எழுதட்டும்.

கவுண்டர்: வளர்ர புள்ளை தொழில் கத்துக்குற மொறை...டைரக்டருன்னா இப்புடித்தான் இருக்கனும்

மிஷ்கின்: நான் வளர்ந்ததே  Kurosawa படங்கள பாத்துதான்

கவுண்டர்: ஆக நீங்க தமிழ் படங்களே வாழ்க்கைல பாத்தது இல்லை... முக்குல மூணு சீட்டு ஆடுற நாயி.. இவரு  குரொசவா படம் பாத்து தான் வளர்ந்தாராம்... மக்களே நல்லா கேட்டுக்குங்க இந்த பாவத்துக்கெல்லாம் நா ஆளாகவே மாட்டேன்

மிஷ்கின்: 2000 வாட்டி செவென் சாமுராய் பாத்துட்டேன்

கவுண்டர்: போ... இன்னும் முப்பது வருசத்துக்கு அதயே பாரு... உருப்புட்டுடலாம்


மிஷ்கின்: கிகுஜிரோ என் கதை தானே...எங்க வீட்டுல எனக்கு நடந்த கதை அய்யயோ இந்த மாதிரி படம் நம்ம ஊர்ல வந்தா எப்புடி இருக்கும்னு ஆசப்பட்டேன்..அதுனால எடுத்தேன்

கவுண்டர்: அடங்வா... ஆமா கிகுஜிரோ வந்த அப்புறம் அது உன்னோட கதை.. வர்றதுக்கு முன்னால அது அந்த டிரைக்டரோட கதை. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..


மிஷ்கின்: கிகுஜிரோ டைரக்டருக்கு ட்ரிபுயூட் பண்றதுக்காக நந்தலாலா படத்துல அதுல இருந்த நாலு சீன அப்புடியே வச்சேன்.

கவுண்டர்: நாயி நாலு சீன அச்சுமாறாம அப்புடியே எடுத்துபுட்டு எப்புடி சமாளிக்குது பாத்தியா... மகனே உனக்கு ஒரு நாளைக்கு இருக்குடி....

மிஷ்கின்: படிக்காதவங்க என் படத்த  விமர்சனம் பண்ணா பரவால்ல.. படிச்சவங்கதாங்க இந்த மாதிரி  தப்பா விமர்சனம்  பண்றாங்க.. அதான் எனக்கு வருத்தமா இருக்கு

கவுண்டர்:  ஆக்காங்..படிச்சவங்கதான நீ எங்கெங்க சுட்டுருக்கன்னு கண்டுபுடிக்கிறாங்க.. அப்ப அவங்கதான் இப்புடி விமர்சனம் பண்ணுவாங்க.

மிஷ்கின்: நந்தலாலா படத்த ஹிட் ஆக்கனும்னு எல்லாம் எனக்கு ஆசை இல்லைங்க. இந்த  படத்த எடுத்து ஒரு ஷோவாவது ஓட்டனும்னு ஆசை...அது நடந்துருச்சி....

கவுண்டர்: டேய் நைட் லேம்ப் கண்ணா.. சாம் ஆண்டர்சன வச்சி படம் எடுத்தா கூட மூணு ஷோ ஓடும்டா. நீ ஒரு ஷோ ஓட்டணும்னு படம் எடுத்தேன்னு பீலா விடுறியா... படம் ஓடலங்கறதுக்காக நீ இப்புடி ப்ளேட்ட  மாத்திக்குவியாடா டப்ஸா கண்ணா.. ஆமா அது என்ன எப்ப பாத்தாலும் மதுரையில் கண் ஆப்ரேஷன் பண்ணவிங்க மாதிரி ஒரு கண்ணாடி.. நீ என்ன பொறக்கயிலயே அந்த கண்ணாடியோடதான் பொறந்தியா.. அத கழட்டவே மாட்டியா... மனசுல பெரிய கலைஞருன்னு நெனப்பு... த.. ச்சை... கழட்டுடா

 மிஷ்கின்: இப்புடி ஒரு படத்த தமிழ் மக்களுக்கு தந்ததுக்கு இந்த சமூகம் என்ன எப்படி பாக்கனும்? தோள் மேல வச்சி  தூக்கி கொண்டாட வேணாமா?

கவுண்டர்: ஆமா.. INSAT 5B ராக்கெட் செஞ்சி வானத்துல ஏவிட்டாரு...இவர கொண்டாடிட்டாலும்..

மிஷ்கின்: அஞ்சாதேல ஒரு லவ் சாங் வரும்.. அந்த சாங்க எடுத்து முடிச்ச அப்புறம் நா  "அப்பா.. படத்துல  இந்த ஒரு சீனுக்கு தாண்டா ஆடியன்ஸ் எந்திரிச்சி வெளிய போவாங்கன்னு சொன்னேன்"

கவுண்டர்: அப்ப அந்த படத்துல இந்த ஒரு சீனுதான் நீயா எடுத்தது. நண்பர்களே நா பொய் சொல்லலாம் ஆனா விக்கிபீடியா பொய் சொல்லது. தயவு செஞ்சி இத பாருங்க. இவன் எடுத்த நாலு படத்துல மூணு படம் இன்ஸ்பிரேஷன், ஆக்ஸிடெண்டல் இன்ஸ்பிரேஷன். அந்த ஒரு படம் மட்டும் ஏன் பாக்கி இருக்குன்னு பாக்குறீங்க அதான.. அது நிறைய படத்தோட கலந்து இருக்கதால எந்த படத்த போடுறதுன்னு தெரியாம விட்டு வச்சிருக்காய்ங்க.






மிஷ்கின்: மொத மொதலா தொப்புள காட்டாம ஒரு குத்துபாட்டு எடுத்துருக்கேன் சார்.

கவுண்டர்:  அடடா... இதுவல்லவா சாதனை.. உலகத்துல யாராவது பண்ணிருக்கானாய்ய இதுமாதிரி. நீ செஞ்ச இந்த சாதனைய தஞ்சாவூர் கல்வெட்டுல வெட்டி வச்சிட்டு பக்கத்துலயே நீ உக்காந்துக்க.. உனக்கு பின்னால வர்ற சந்ததிகள் அத பாத்து படிச்சி தெரிஞ்சிக்குவாங்க.


 மிஷ்கின்: நந்தலாலால ஒரு டயலாக் வரும்... நா அந்த கூலிங்க்ளாஸ வாங்கி போட்ட உடனே "அய்யோ இருட்டாயிருச்சி"ன்னு சொல்லி கண்ணாடிய கழட்டி குடுத்துருவே ன். அந்த ஒரு டயலாக்க மட்டும் நா ரெண்டு நாள் யோசிச்சேன்ங்க. அந்த கஷ்டத்த பத்தி யாராவது பேசுனாங்களா.."

கவுண்டர்: இப்ப புரியுதும்மா உன் கஷ்டம்.. இந்த ஒரு டயலாக்க சொந்தமா யோசிக்கவே உனக்கு ரெண்டு நாள்  ஆகுதுன்னா ஒரு படத்தோட முழு கதை வசனத்தையும் நீ சொந்த மா யோசிக்கனும்னா எவளோ நாள் ஆகும்.. i understand your feelings. நீ வழக்கம்போல continue பண்ணு.. பாவம்பா.. ரொம்ப கஷ்டப்படுறான்பா நீங்களும் விட்டுருங்க... ஆனா ஒண்ணு இன்னொரு தடவ எங்கயாவது நீ மைக்க புடிச்சி பேசுறத பாத்தேன் மண்டையில நாலே முடி விட்டு வெட்டுபுடிவேன்... ஓடிப்போயிரு..



Tuesday, January 17, 2012

ஓட ஓட ஓட ஓவர் முடியல...


Share/Bookmark

Saturday, January 14, 2012

EXAM - 80 நிமிட உள்ளே வெளியே


Share/Bookmark
ஓண்ணரைமணி நேர படத்தையும் ஒரே ஒரு ரூமுக்குள்ள எந்த வித தொய்வும் இல்லாமஎடுத்துட்டு போகனும்னா எவ்ளோ ஸ்ட்ராங்கான ஸ்க்ரிப்ட் வேணும். அதுமாதிரி ஒரு படம் தான் இந்த EXAM. படத்தில் நடிச்சிருக்கவங்க மொத்தமே 10 பேர்.. படம் எடுக்கப்பட்டது ஒரே ஒரு லொகேஷன்ல மட்டும் தான். ஆரம்பிச்சிட்டாண்டா... முழுக்கதையையும் சொல்லி மொக்கைய போடப் போறானேன்னு வெறிக்காதீங்க படத்தோட முதல் காட்சிய மட்டும் சொல்லிடுறேன். பாக்குறதா வேண்டாமான்னு நீங்க முடிவு பண்ணிக்குங்க.


ஒரு அப்பாடக்கர்  நிறுவனத்தின் இறுதிகட்ட Selection னுக்காக ஒரு specialized ஹால்ல நடத்தப்படுற EXAM ல 8 பேர் கலந்துக்குறாங்க. ஓவ்வொருத்தரு உக்கார்ந்துருக்க table லயும் குப்புற கவுத்து வைக்கப்பட்ட  question paper. அவங்களை கண்கானிக்கிறதுக்கு VGP statue man மாதிரி துப்பாக்கியோட ஒரு செக்யூரிட்டி.

அப்ப அங்க ஒரு மொட்டைத்தல ஆபீசர் வந்து பேசுறாரு.

"
1. உங்களுக்கு முன்னாடி ஒரே ஒரு கேள்வி இருக்கு, அதுக்கு நீங்க ஒரே ஒரு பதில் சொல்லனும்

2. உங்களோட answer sheet ah தெரிஞ்சி இல்லை தெரியாம கிழிச்சிட்டீங்கனாலோ அல்லது சேதப்படுத்திட்டீங்கன்னாலோ நீங்க ஆட்டத்துலருந்து அவுட்டு.

3. இந்த செக்யூரிட்டிகிட்டயோ அல்லது கண்கானிப்பு கேமரா மூலமா என்கிட்டயோ பேச முயற்சி பண்ணா நீங்க அப்பீட்டு.

4. எந்த காரணத்துக்காகவும் இந்த Room ah விட்டு வெளிய போக முடிவு பண்ணீங்கன்னா  (அதாவது நம்ம பண்றமாதிரி தண்ணி குடிக்க போறது.. ஊரின் போறது) நீங்க அப்புடியே வீட்டுக்கு போயிட வேண்டியது தான்.

5.இதுக்காக உங்களுக்கு குடுக்கப்பட்டிருக்கும் நேரம் 80 நிமிஷம்... "

அப்புடின்னு சொல்லிட்டு  Timer ah ஆன் பண்ணிட்டு ஆபீசர் போயிடுறாரு.

எல்லாரும் பேந்த பேந்த முழிச்சிகிட்டே question பேப்பர தொறந்து பாக்குறாங்க. நானும் அப்புடியே சைடுல எட்டி பாத்தேன்.. உடனே என்கூடவே சேந்து எல்லாரும் கோரசா  சொல்றாங்க "நா அப்புடியே ஷாக் ஆயிட்டேன்" ன்னு.

ஏன்..... ஏன்னா அந்த question பேப்பர்ல ஒண்ணுமே இல்லய்யா... உஜாலாவுக்கு மாறுன மாதிரி ஒரே வெள்ளையா இருக்கு.

"யோவ் எங்கய்யா அந்த மொட்டை தலையன்.. இதுல ஒண்ணுமே இல்லையா"ன்னு கேக்கலாம்னு  பாத்தாலும் என்கிட்ட பேச முயற்சி பண்ணா நீங்க அவுட்டுன்னு சொல்லிருக்கான். காவலுக்கு இருக்குற செக்கிருட்டிகிட்டயும் பேசக்கூடாதுன்னு சொல்லிட்டாய்ங்க... "  ன்னு எல்லாருக்கும் ஒரே கண்பீசன்.

அதுக்கப்புறம் அவங்க எப்புடி question ah கண்டுபுடிச்சி, அதுக்கு Answer கண்டுபுடிச்சி எத்தனை பேர் செலக்ட் ஆகுறாங்கன்னு தான் ஸ்டோரி.

கடைசி நிமிஷம் வரைக்கும் thirilling க்கு உத்திரவாதம் தரக்கூடிய ஒரு படம். Miss பண்ணாம பாருங்க.

இந்த படத்தின் Torrent download செய்ய இங்கே க்ளிக்கவும்

இந்தப் படத்தோட IMDB rating : 6.8/10


Catagory :  Mystery, Thriller

Monday, January 9, 2012

காதல் தோல்விகளை குறைக்க சில வழிகள் !!!


Share/Bookmark
 ஏற்கனவே காதலிகள் (?) வைத்திருப்பவர்களும், திருமணம் ஆனவர்களும் அப்புடியே அப்பீட்  ஆயிக்குங்க. இது உங்களுக்கான பதிவு இல்லை. அல்ல. இனிமே காதலிக்கலாம்னு ட்ரை பண்ண போறவங்களான பதிவு. என்ன பண்ணா ஒரு பொண்ணு உங்கள லவ் பண்ணும்னு கேட்டா, சத்தியமா தெரியாது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங். ஆனா என்ன பண்ணக்கூடாதுங்கறத மட்டும் பாப்போம்.
குறிப்பு : இது பெண்களுக்கு எதிரான பதிவு அல்ல.

சுமார் 5000 பெண்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பையும், ஜெர்மன் டெக்னாலஜியையும் இணைத்து உருவாக்கப்பட்ட சில வழிகள் உங்களுக்காக. என்னது?  யார் கருத்துகணிப்பு நடத்துனதா? அலோ பாஸ் நான் தான். நம்புங்க.

1.ஒரு பொண்ண லப் பண்ண ஆரம்பிச்சா, அது அந்த பொண்ணுக்கு தெரியிறதுக்கு முன்னாடி அவகிட்ட propose பண்ணிடனும். அப்புடி இல்லாம நீங்க லவ்வ சொல்றதுக்கு முன்னால, அந்த பொண்ணு நீங்க அவள சைட் அடிக்கிறத கண்டுபுடிச்சிட்டா அவ்ளோதான்.அவகிட்ட உங்களோட value கம்மி ஆயிடும்... லவ் success rate உம் கம்மி ஆயிடும். 

2. விக்ரமன் படங்கள பாத்துட்டு யாரும் அதுமாதிரி ட்ரை பண்ணீங்கண்ணா உங்களுக்கு கடைசில செருப்படி நிச்சயம்.. அதாவது அவளுக்காக அவளோட ஆபீஸ்ல காத்துருந்து அழைச்சிட்டு வந்து வீட்டுல விடுறது, இல்ல காலேஜ்லருந்து ஹாஸ்டல் வரைக்கும் பாடி கார்டா போறது, அந்த புள்ளை கேக்கலண்ணாலும் அதுகிட்ட எதயாது வாங்கி குடுக்குறது...  சுருக்கமா சொன்னா எள்ளுண்ணா எண்ணையா இருக்கது...அது சுத்தமா ஆகாது. எள்ளூண்ணா எள்ளாவே இருங்க.. அதான் நல்லது.

3. நீங்க நீங்களா இருக்கனும். நீங்க சீன் பார்டின்னா கடைசி வரைக்கும் சீன் பார்ட்டியாவே  இருங்க... இல்ல சைலண்ட் பார்ட்டின்னா அத அப்புடியே மெயிண்டைன் பண்ணுங்க. இல்ல...அவளுக்காக என்ன நானே டன் லருந்து கிலோவுக்கு கொறைச்சிகிட்டேன்னு எதாவது மாத்த ட்ரை பண்ணா டஸ் ஆயிரும்.

4. மொதல்ல உங்க ஆளோட கொடுக்க கரெக்ட் பண்ணிட்டு அப்புறமா உங்க ஆள கரெக்ட் பண்ணல்லாம்னு பாத்தீங்கன்னா அவ்ளோதான்... அப்புறம் கொடுக்கு main picture ah மாறிடும் உங்க ஆளு உங்களுக்கே out of focus க்கு போயிடும். அதாவது புளியம்பட்டிக்கு போகனும்னா நேரா புளியம் பட்டிக்கு போங்க... பொள்ளாச்சி பொய்ட்டு புளியம்பட்டிக்கு வருவோம்னு நெனச்சா அது வேலைக்காவாது. வண்டி பொள்ளாச்சிலயே  கவுந்தாலும் கவுந்துடும்.

5. அந்த புள்ளை குடிச்சிட்டு போட்ட கோக் டின், அது தலையிலருந்து விழுந்த ரோஜாப்பூ அந்த புள்ளை நடந்து போன காலடி மண்ணு, அந்த பொண்ணு தொட்டு குடுத்த பேனா இந்த  மாதிரி ஐட்டங்களை பொறுக்கி வைக்கனும்னு தோணும். ராஜ்கிரன் பாணில சொல்லப்போனா "அப்புடித்தேன்..அப்புடித்தேன் இருக்கும்" பொறுக்கி வச்சிகோங்க.. ஆனா அது எந்த காலத்துலயும் அந்த புள்ளைக்கு தெரியவே கூடாது.. தெரிஞ்சா குப்பை பொறுக்குறவிங்க
ரேஞ்சுக்கு உங்க ரேஞ்சு இறங்கிடும்.

6. நீங்க உங்க ஆள்கிட்ட லவ்வ சொல்றதுக்கு முன்னால, அது வேற ஒரு பையன லவ் பண்ண ஆரம்பிச்சிருச்சின்னு வச்சிக்கோங்க... அந்த பொண்ணுக்கு எண்டு கார்டு  போட்டுட்டு "ச்ச... ச்ச... இத போய் நா லவ் பண்ணுவேனா... ஏன் ஆளு எங்க ஊர்ல இருக்கு" ன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயி அடுத்த பொண்ண தேடுறது உசிதம். இல்ல... காதல் ஒரு முறைதான் பூக்கும். வேற பூ பூக்காது ன்னு பீல் பண்ணிகிட்டு இருந்தா மரத்த வேறோட புடுங்கி எறிஞ்சிடுவாய்ங்க.



7. உங்களுக்கு உங்க ஆள எவ்ளோ புடிக்கும்னு உங்களுக்கு தெரியும். ஆனா
இதை அந்த பொண்ணுகிட்ட சொல்லக்கூடாது. எவ்ளோ புடிச்சாலும் உள்ளுக்குள்ளயே ரசிச்சிக்குங்க. அவ்ளோ புடிக்கும்னு அந்த பொண்ணுக்கு தெரிஞ்சா லைட்டா ஹெட்ல  வெய்ட்டு ஏற chance இருக்கு. அவள பிரிஞ்சா உங்களுக்கு எந்த ப்ராப்ளமும்  வராதுங்கறமாதிரி நீங்க காட்டிக்கனும். அதாவது "நமக்கு ஆயிரம் ஃபிகர் மடியும் மச்சி"ங்கற மாதிரி நடந்துக்கனும். அப்பதான் உங்க ஆளு உங்கள விட்டு போகாது

8. இது ஒரு முக்கியமான விஷயம்... "நீங்க தண்ணி அடிப்பீங்களா?" ன்னு
அந்த பொண்ணு உங்ககிட்ட கேக்குதுன்னு வச்சிக்கோங்க... சீன் போடுறதா நெனச்சிகிட்டு "நாங்கல்லாம் at a time la நாலு ஃபுல்ல அப்புடியே அடிப்போம்" ன்னு எதாவது உளரிட்டா அதான் உங்களோட கடைசி மீட்டிங்கா இருக்கும். அப்புடி இல்லாம   "அச்சச்சோ... தண்ணியா... அந்த வாசனையே எனக்கு புடிக்காது.." ன்னு நல்லவனா  காட்டிக்க ட்ரை பண்ணா "அய்யய்ய.. இது ஒரு பழமாட்டுருக்கு" ன்னு கொஞ்ச கொஞ்சமா உங்கள விட்டு அந்த புள்ளை போயிடும். அப்ப என்ன செய்யலாம்?... இந்த மாதிரி சிச்சுவேஷன்கள டேக்கிள் பண்ணுவதற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மகத்தான  வார்த்தை தான் "லைட்டா". "தண்ணி அடிப்பீங்களா?"  "லைட்டா அடிப்பேன்" மேட்டர் ஓவர். உண்மையிலேயே  தண்ணி அடிக்காதவர்கள் கூட "லைட்டா அடிப்பேன்" ன்னு சொல்லிக்கிறது உசிதம்.

9. அப்புறம் இன்னொரு ட்ரெண்டு யூஸ் பண்ணுவாய்ங்க.. முதல்ல சிஸ்டர்ன்னு ஆரம்பிச்சி படிப்படியா  லவ்வரா மாறிடலாம்னு. அதாவது மொதல்ல  வில்லனா பண்ணிட்டு அப்புறம் படிப்படியா ஹீரோவா ஆயிடலாம்னு.  நம்ம கலாச்சாரத்துக்கு இதெல்லாம் ஒத்துவராது. நம்ம "நடிச்சா ஹீரோ சார் நா வெயிட் பண்றேன் சார்" தான். "எனக்கு ஒன்ன புச்சிகீது.  உனக்கு என்ன புச்சிகீதா?" கேட்டுட வேண்டியதுதான். புடிக்கலன்னா  லாஸ் யாருக்கு... பாவம் அந்த புள்ளைக்கு தான...  அவ்வ்வ்....

10. அந்த புள்ளையோட ஃபோன் நம்பர் வேணுமா, அதுகிட்ட தான் கேக்கனும். இத விட்டுட்டு அதுங்க ஃப்ரண்ட்ஸ புடிச்சி ஃபோன் நம்பர் கேட்டா.. "Actually என் ஃப்ரண்ட்ஸ் நம்பர் நா யாருக்கும் தர்றதில்லைன்னு" அந்த புள்ளை சீனப்போடும். அப்புடியே அப்புடி இப்புடி அந்த புள்ளை அசந்த  நேரத்துல நம்பர ஆட்டைய போட்டு, உங்க ஆளுக்கு ஃபோன் பண்ணா, அது ஒரு கேள்வி கேக்கும் பாருங்க.. "உனக்கு எப்புடி ஏன் நம்பர் கெடைச்சிது?".. ஆமா இது என்ன பெரிய அயல் நாட்டு அதிபர் நம்பரான்னு கேக்கனும்னு நமக்கு தோணும்.ஆனா கேக்க முடியாது. டெலிகேட் பொசிசன் ஆயிரும் நமக்கு. so, எப்பவுமே டீலிங் நாட்டாமை டூ பங்களி...பங்காளி டூ நாட்டாமைன்னு ஸ்ட்ரெய்ட்டா இருக்கனும். நோ  டீலிங்ஸ் வித் அள்ளக்கைஸ்.

11.அப்புறம் பிட்டு போட கத்துக்கனும். ஹலோ ஹலோ பாஸ்... எங்க DVD எடுக்க போறீங்களா? இது அந்த பிட்டு இல்ல.. உக்காருங்க.. எப்பவாது பேசிகிட்டு இருக்கும் போது பேச்சு வாக்குல " உன் கண்ணு காஜல் கண்ணு மாதிரி இருக்கு" "மூக்கு மும்தாஜ் மாதிரி இருக்கு" "சிரிச்சா ஸ்னேகா மாதிரி இருக்கு"  ன்னு சொல்லிட்டு போயிட்டே இருங்க.இதெல்லாம் லோக்கல் பிட்டு. இதே பாலிவுட்,  ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு feel பண்ணா அது ஹைடெக் பிட்டு. பிட்டு போடுறதுல அல்ரெடி எல்லாரும் Phd பண்ணவங்க தான். ஆனா இதுல நோட் பண்ண வேண்டிய  விஷயம் என்னன்னா இத மாசம் ஒரு முறை ரெண்டு முறைக்கு மேல சொல்லக்கூடாது. இந்த பிட்டுகள அடிக்கடி போட்டீங்கன்னா, உங்க ஆளுக்கு மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸாடர் வர வாய்ப்பு இருக்கு. அதாவது நீங்க எந்த ஹீரோயின் மாதிரின்னு சொல்றீங்களோ அந்த ஹீரோயின் மாதிரி நிப்பாங்க.. அந்த ஹீரோயின் மாதிரி நடப்பாங்க.. கடைசில அந்த ஹீரோயினாவே தன்ன நெனச்சிகிட்டு உங்கள காமெடியன் ஆக்கிருவாங்க.

12. உங்க ஆளு உங்ககிட்ட எதாவது கேட்டுச்சின்னா, performance காட்டுறதா நெனச்சிகிட்டு உடனே செஞ்சி குடுத்துடாதீங்க. ஏன்னா நம்ம ஊர்ல உடனே கெடைச்சிதுன்னா அந்த பொருளுக்கு  value கொஞ்சம் கம்மி தான். அதுக்குன்னு "உங்க ஆளு  உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிட்டல் போகனும்னு கூப்டா "அவ்வளவு... சீசீக்கிரமாவா போவனூம்....... போவோ...ம்" ன்னு இழுத்தா அதுக்குள்ள அது போய் சேந்துரும்.  இடம், பொருள், ஏவல் ரொம்ப முக்கியம்.

சரி நீங்க எல்லாரும் இதெல்லாம் ட்ரை பண்ணிட்டு ஒர்க் அவுட் ஆகுதானு இல்லையான்னு சொல்லுங்க. அப்புறம் நா ட்ரை பண்றேன்.

-கருத்துக்கள் , அனுபவங்கள் நண்பன் அசால்டு அசாரின் வாழ்கை வரலாற்றிலிருந்து பெறப்பட்டவை

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...