Tuesday, May 15, 2018

இரும்புத்திரை!!!!


Share/Bookmark

நம்ம ஊர்ல ஒரு கெட்டப்பழக்கம் என்னன்ன மக்கள எப்பவுமே நிம்மதியா இருக்க விட மாட்டானுங்ககடையில பொரட்டா திங்கப்போனா ஒருத்தான் அய்ய்ய்யோ இத்த் திண்ணா கேன்சர் வருமேம்பானுங்க.. சரி காய்கறி வாங்கிட்டு போய் சமைக்கலாம்னா இதெல்லாம் பூச்சி மருந்து போட்டு வளர்த்த காய்கறி..இதத் திண்ணாலும் கேன்சர் வரும்.. சிக்கன் திங்கலாமா.. சிக்கனையெல்லாம் ஊசி போட்டு பெருசாக்குராங்க.. அத்த திண்ணாலும் கேன்சர் வரும். அது பாதாளக் கிணறுஅது வந்த பாதைஅய்யோ… அந்த வகையில இப்ப மொபைல் டேட்டாவுக்கும் வார்னிங்.

கொஞ்ச நாள் முன்னால உணவுபொருள் பற்றிய  விழிப்புணர்வுக்காக வேலைக்காரன்னு ஒரு படம் வந்துச்சி. அந்த வரிசையில அடுத்து மொபைல் டேட்டா திருட்டுக்களப் பற்றிய ஒரு விழிப்புணர்வு படம்தான் இந்த இரும்புத்திரை. இந்தப் படம் மூலமா இவங்க சொல்றது எனன்ன்னா இண்டர்நெட்ட யூஸ் பன்னி எதையுமே பண்ணிறாதிய.  ஸ்மார்ட் ஃபோன வச்சிக்கிட்டு எதயுமே சொல்லிராதியாஹலோவாச்சும் சொல்லிறலாமாடா….. அதயும் சொல்லிறாதிய.. எல்லாத்தையும் ஒருத்தன் ஒட்டுக்கேட்டுட்டு இருக்கான்.. உங்க கேமரா வழியாவே உங்கள நிறைய பேர் பாத்துக்கிட்டு இருக்கான்..

வீடியோ விமர்சனம்



படத்துல இவங்க காமிக்கிற அத்தனையுமே மறுக்க முடியாத உண்மை. நம்முடைய தனித் தகவல்கள் எப்படி வெளில லீக் ஆகுது.. நம்மோட ஃபோன் நம்பர் எப்படி எதோ ஒரு பேங்க் காரனுக்கோ, ஒரு RO purifier கம்பெனிக்கோ தெரியிதுநம்ம கூகிள்ல ஒரு விஷயத்த பத்தி தேடிருந்தோம்னா அடுத்தநாள் அது தொடர்பான விளம்பர்ங்கள் நம்ம ஃபேஸ்புக்குல வரும். நம்ம அடுத்தவங்களுக்குத் தெரியாதுன்னு நினைக்கிற அத்தனை விஷயங்களையும் அடுத்தவன் நினைச்சா கண்டிப்பா பார்க்க முடியும். நம்மளை அறியாமலேயே நம்மளப் பத்தின நிறைய விஷயங்கள இந்த் உலகத்துக்கு நம்ம தெரியப்படுத்துறோம். அதெல்ல்லாம் நிறைய தப்பு நடக்க காரணமா அமையிது  அப்டிங்குற நிறைய விஷயங்கள படத்துல சொல்லிருக்காங்க.

கருத்துக்கள், விழிப்புணர்வு இதையெல்லாம் தாண்டி ஒரு படமா இந்த இரும்புத்திரை எப்டி இருக்குன்னு பார்ப்போம். விஷாலுக்கு தனி ஒருவன் மாதிரி ஒரு பவர்ஃபுல்லான படம் பண்ணனும்னு ஆசை வந்துருக்கு. தப்பில்லஆனா தனி ஒருவனையே திரும்பப் பண்ணதுதான் தப்பு. அதே செட்டப். அதுல ஜெயம் ரவி IPS போஸ்டிங்அவருக்கு ஹெல்ப் பன்ன நாலு ஃப்ரண்ட்ஸ்.. இதுல விஷால் மிலிட்டரி மேஜர். அவருக்கு ஹெல்ப் பன்ன அவ் அரோட ஜூனியர் நாலு பசங்க. அங்க சித்தார்த் அபிமன்யூ ரோல்ல இங்க அர்ஜுன். நயந்தாராவாக சமந்தா. இம்புட்டுத்தேன் மேட்டர். குடும்பங்களைக் கவர் பண்ண கொஞ்சம் ஃபேமிலி செண்டிமெண்ட். அவ்ளோதான் இருப்புத்திரை ரெடி. எல்லாத்தையும் ஒரே இடத்துலருந்து எடுக்கக்கூடாதுன்னு காதல் காட்சிகளை மட்டும் அப்படியே சில மாசங்களுக்கு முன்னால வந்த மாயவன் படத்துலருந்து எடுத்துருக்காங்க
.
இவங்க எடுத்துகிட்ட கான்செப்ட், சொல்லிருக்க விஷயங்கள் எல்லாமே நல்லாதான் இருக்கு. ஆனா சொல்லிருக்க விதம்தான் ரொம்ப சொதப்பல். முக்கியமா திரைக்கதை ஒட்டமும் கதாப்பாத்திர அமைக்குகளும். இந்தப் படத்துல விஷால் மிலிட்டரி ஆளா வர்றதுக்கான எந்த அவசியமும் படத்துல இல்ல. முதல் நெருடலே அதுதான். ஒரு சாதாரன சிவிலியன் கேரக்டரா விஷால வச்சி இத எடுத்துருந்தாலே இன்னும் சிறப்பா இருந்துருக்கும். டெல்லிகணேஷ வச்சி கொஞ்சம் செண்டிமெண்ட் ட்ரை பன்னிருக்காங்க. அவரோட வயது முதிர்ந்த தோற்றத்த பாத்து நமக்கு ஃபீலிங் வருதே தவிற காட்சிகள்ல ஒண்ணும் இல்ல.

அடுத்து அர்ஜூனோட கேரக்டர சித்தார்த் அபிமன்யூ அரவிந்தசாமி மாதிரி கொண்டு வர முயற்சி பன்னிருக்காங்க. ஆனா அது அரவிந்த சாமி மாதிரி வர்றதுக்கு பதிலா அடுப்புல வெந்த சாமி மாதிரி தான் வந்துருக்கு.

இந்த சினிமாக்கள்ல ஹேக்கர்ன்னு ஒரு கேரக்டர் வருவானுங்க.. முடியெல்லாம் சுருள் சுருளா வச்சிக்கிட்டு சோடாபுட்டி ஒண்ண போட்டுக்கிட்டு,  யோ யோன்னுட்டு வருவாங்கசூப்பர் ஹீரோக்கள விட பவர்ஃபுல்லான ஆளுங்க இவனுங்க. ஒரு லேப்டாப்ப குடுத்துட்டா எத வேணாலும் ஹேக் பண்ணுவானுங்கடேய் அந்த ஃட்ராஃபிக் சிக்னல ஹேக் பண்ணு.. அந்த சிசிடிவி கேமராவ ஹேக் பண்ணு… பன்னியாச்சி பன்னியாச்சிஅந்த லேண்ட் லைன் ஃபோன ஹேக் பன்னுபண்ணியாச்சு.. அந்த செல்ஃபோன ஹேக் பண்ணு.. பண்ணியாச்சி.. கொண்ட்ருவேன்.. அது டிவி ரிமோட்டு….  அது மாதிரியான ஒரு கேரக்டர்தான் அர்ஜூனுக்கு. இந்தியாவுல உள்ள அத்தனை ஸ்மார்ட் ஃபோன்கள், ட்ராஃபிக் சிக்னல்கள், சிசிடிவி கேமராக்கள் அத்தனையும் இவரோட கண்ட்ரோல்தான். எத வேணும்னாலும் எந்த நொடில வேணும்னாலும் அக்ஸெஸ் பன்னுவாரு.

அர்ஜுன் ஆளு செம கெத்தா இருக்காரு. ஆனா வசனங்கள் இன்னும் பவர்ஃபுல்லா இருந்துருக்கலாம். அர்ஜூன் படத்துல பன்ற பல விஷயங்கள் செம காமெடி.  ஒரு சீன்ல லிஃப்டுக்குள்ள நின்னுட்டு வாட்ச்ல இப்டி ரெண்டு தட்டு தட்டுவாரு. என்ன பண்ணேன் தெரியுமா? கை அரிக்கிதுன்னு சொரிஞ்சீங்க.. இல்லே ஒரு டெர்ரிஸ்டோட அக்கவுண்ட்லருந்து உன் அக்கவுண்ட்டுக்கு பணம் ட்ரான்ஸ்ஃபர் பன்னேன்ரைட்ரா.. அவர பவர்ஃபுல்லா காமிக்கனும்னு நினைச்சது ஓக்கேதான் அதுக்குன்னு இப்டி சிரிப்பு வர்ற மாதிரியெல்லாமா காமிக்கிறது.

லோன் வாங்க வர்றவன அடிச்சி விரட்டி மல்லையாவ புடிச்சியா, எங்ககிட்ட மட்டும் ஏன் கடன் திரும்ப கேட்டு வர்றன்னு சொல்ற காட்சியெல்லாம் வலுக்கட்டாயமா மக்கள கைதட்ட வைக்கனும்னு திணிக்கப்பட்ட காட்சிகள். மல்லையாவ புடிக்கிற வரைக்கும் குடுத்த கடன எவனும் கேக்கக்கூடாதுன்னு சொல்ல வர்றாங்களான்னும் தெரியல.

நிறைய ப்ரச்சனைகள் சொல்லிருக்காங்களே தவிற அதற்கான சரியான தீர்வு எதையும் படத்துல சொன்ன மாதிரி தெரியல. நம்ம படத்துலருந்து அவங்க சொல்றது  என்னன்ன இண்டர்நேட்டே எங்கயும் யூஸ் பன்னக்கூடாது,  எந்த் ஆப்புமே இன்ஸ்டால் பன்னக்கூடாது, ஸ்மார்ட் ஃபோனுக்கு பதிலா பழைய 1100 மாடல்கள யூஸ் பன்னனும், அப்டிங்குறதுதான். அதெல்லாம் நடக்குற காரியமா?

படத்துல  நல்ல விஷயங்கள்னு பாத்தா கேமரா, ஸ்டண்ட் எல்லாமே நல்லாருக்கு. யுவனோட மியூசிக் ஆஹா ஓஹோல்லாம் இல்லாட்டியும் பரவால்ல.  அடுத்து சமந்தா.. சமீபத்துல வந்த எந்தப் பட்த்துலயும் இவ்வளவு அழகா இல்ல.  திரும்ப லிப் சர்ஜரிலாம் பன்னிக்கிட்டு பழைய சமந்தாவா செம சூப்பாரா இருக்காங்க. ரோபோ ஷங்கரோட ஒண்ணு ரெண்டு ஒன்லைன் சிரிக்க வைக்கிது. 

யுவனோட இசையில ரெண்டு பாட்டு பரவால்ல. ரெண்டு பாட்டுதான் வந்துச்சின்னு நினைக்கிறேன். விஷால் அலுவலகப் பணிகள்ல மூழ்கி நடிப்புல கவனம் செலுத்த முடியலையா என்னன்னு தெரியல.. ரொம்ப மந்தமா இருக்காரு. கெட்டப்பும் சரியில்லாம அவன் இவன்ல இருக்க விஷால் மாதிரி இருக்காரு சில சீன்ல. மித்ரன் திரைக்கதைய இன்னும் விருவிருப்பாவும் சுவாரஸ்யமாவும் அமைச்சிருந்தா ரொம்ப சூப்பரான படமா வந்துருக்கும்.

மொத்தத்துல இந்த இரும்புத்திரை புதுமையான ஒரு ப்ரச்சனைய டீல் பன்னிருக்க ஒரு சுமார் ரகமான படம் தான்.



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...