Sunday, March 3, 2019

தடம் விமர்சனம் – No Spoilers- Athiradikkaran!!


Share/Bookmark


சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள் நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது எனதற்காக உருவாக்கப்பட்டவையே” என்கிற வாசகத்துடன், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதை என துவங்குகிறது இந்த “தடம்”.இரண்டு வெவ்வேறு வாழ்க்கை முறைகளில் வாழும் இரண்டு கதாப்பாத்திரங்கள்.. ஒரு கொலை.. சிக்கும் ஒரே ஒரு எவிடென்ஸ்.. அதை வைத்து கொலைகாரனை நெருங்குவது தான் கதை.

பொதுவாக இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் திரைப்படங்களில் நிறைய சஸ்பெக்ட்ஸ் இருப்பார்கள். பார்வையாளர்கள் உண்மையான கொலைகாரனை தவிற மற்றவர்களை சந்தேகப்படும்படியாக காட்சிகள் அமைக்கப்படும். இறுதியில் நாம் எதிர்பார்க்காத ஒருவர் கொலைகாரனாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் அந்த திரைப்படம் நம்மைக் கவரும்.

இந்த தடம் திரைப்படத்தை பொறுத்த அளவு இது அப்படியே மாறு படுகிறது. ஆடியன்ஸ் மண்டையைப் போட்டு குழப்பிக்கொள்ளத் தேவையில்லை. கொலைகாரன் யார் என்பதற்கு மொத்தமே மூன்றே மூன்று வாய்ப்புகள் தான். சஸ்பெக்ட் A அல்லது சஸ்பெக்ட் B அல்லது சஸ்பெக்ட் A + B. இவ்வளவு தான் . இடைவேளை தாண்டிய பிறகு இப்படி ஒரு மிகக் குறுகிய வட்ட்த்திற்கும் படம் அடைபடுகிறது.

முதல் பாதி மிக மிக சுமாரான காட்சிகளுடன் பயணிக்கிறது. அடுத்து அந்தக் கொலை. பிறகு அதற்கான விசாரணை. விசாரணையும் சீட்டின் நுனிக்கு நம்மை தள்ளும் அளவிற்கெல்லாம் இல்லாமல் எதோ செல்கிறது. ஒரு  கட்டத்தில் காவல் துறையே கொலைகாரனை கண்டுபிடிக்க முடியாமல் சலித்துப் போக, அதை விட படம் பார்க்கும் நமக்கு சலிப்பாக இருக்கிறது.

எது எப்படி இருந்தாலும் அந்த க்ளைமாக்ஸ் நாம் எதிர்பார்க்காத ஒரு புது விதமாக இருக்கும் பட்சத்தில் மேற்கூறிய அனைத்தும் காணாமல் போய்விடும். ஆனால் க்ளைமாக்ஸ் மிகப்பெரிய ஒரு திருப்பத்தையோ அல்லது ஒரு வியப்பையோ நமக்கு ஏற்படுத்தும் விதமாக இல்லாதது ஏமாற்றம்.

அருண் விஜய், மகிழ் திருமேணி கூட்டணியில் இதற்கு முன் வந்த தடையற தாக்கவும் சரி, மகிழ்திருமேனி, ஆர்யா கூட்டணியில் வெளிவந்த மீகாமனும் சரி. எனக்கு மிகவும் பிடித்த படங்கள். இந்த தடம் திரைப்படமும் மேக்கிங்கில் கிட்டத்தட்ட அந்த இரண்டு திரைப்படங்களின் தரத்தில் இருந்தாலும் கண்டெண்ட் மிகவும் குறைவு.

அருண் விஜய்.. ஆள் பார்க்க ஃபிட்டாக இருக்கிறார். 6 பேக்கை CG யில் உருவாக்கியிருக்கிறார்கள். பல மாதங்கள் தாமதத்திற்குப் பிறகு இத் திரைப்படம் வெளிவந்திருப்பதால், யோகி பாபுவும் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தது போல அடக்கி வாசித்துக்கொண்டு வெறுமனே வந்து போகிறார்.

மொத்ததில் இருபது நிமிடத்திலிருந்து அரைமணி நேரம் வரை ஓடக்கூடிய ஒரு குறும்படமாக இதை இயக்கியிருந்தால் simple & effective வாக இருந்திருக்கும். அந்த க்ளைமாக்ஸிற்காக இரண்டு மணி நேரம் நம்முடைய பொறுமையை சோதித்த்து சற்று அதிகம் என்றே தோன்றியது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...