விஜய்
ஆண்டனியின் முந்தைய படமான சைத்தானுக்கு இருந்த அளவு இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு
இருந்துச்சாங்குறது கொஞ்சம் சந்தேகம்தான். இந்தப் படத்துக்கான முன்பதிவு ரொம்ப ரொம்ப
ஸ்லோ. புதன் கிழமை நைட்டு டிக்கெட்ட புக் பன்னிட்டு உக்காந்துருக்கேன்.. வெள்ளிக்கிழமை
காலையில வரைக்கும் என்னைத் தவற ஒருத்தனுமே அந்த தியேட்டர்ல புக் பன்னல. என்னப்பா வழக்கமா
அலைகடலென புக் பன்னுவானுங்க இப்ப என்ன பம்புறானுங்க… நம்மதான் தெரியாம வந்து மாட்டிக்கிட்டோமோன்னு
கூட நினைக்க வச்சிருச்சி. ஆனா படம் பாக்குறப்போ கிட்டத்தட்ட தியேட்டர்ல 90% occupancy
இருந்துச்சி.
விஜய்
ஆண்டனியின் சினிமா பயணத்தை தொடங்கி வைத்த இயக்குனர் ஜீவா ஷங்கர், விஜய் ஆண்ட்னி தொடர்
வெற்றி நாயகனாக மாறிய பிறகு அடுத்த படத்தை கொடுக்க வந்திருக்காரு. முதல் படத்தை இயக்கியபோது
இருந்த பொறுப்புகளை விட இந்தப் படத்துல இன்னும் அதிகமாகத்தான் இருந்திருக்கும். ஏன்னா
விஜய் ஆண்டனி மக்களோட நம்பிக்கை நாயகனா விளங்கிட்டு வர்ற நேரத்துல அதக் காப்பாத்த வேண்டிய
முழு பொறுப்பும் இயக்குனர் ஜீவா ஷங்கருக்குத்தான். காப்பாத்தினாரா இல்லையான்னு பாப்போம்.
கொடி
படத்தின் ஆரம்பக்காட்சிகள் போலவே, நெல்லை மாவட்டத்தில் அரசியலில் ஈடுபட்டிருக்கும்
ஒருவர் (விஜய் ஆண்டனி) வஞ்சகக்காரர்களால கொல்லப்பட, தொடர்ந்து அவர் மனைவியும் தற்கொலை
செய்துகொள்ள அவர்கள் குழந்தை தாத்தாவின் (சங்கிலி முருகன்) பொறுப்பில் வளருகிறது. அந்தக்
குழந்தை பெடல் எல்லாம் சுத்தாம படக்குன்னு பெரிய பையன் ஆகிருது..திடீர்னு தாத்தாவுக்கு ஆப்ரேஷன் பன்ன வேண்டிய நிலையில, பணத்துக்காக
செய்யாத ஒரு குற்றத்த ஒத்துக்கிட்டு ஜெயிலுக்கு போறாரு. அதைத் தொடர்ந்து அவர் வாழ்க்கையில்
நடக்கும் சம்பவங்கள்தான் இந்த எமன்.
படத்தோட
மேக்கிங் ரொம்பவே அருமையா இருக்கு. எங்கயுமே போர் அடிக்கல. முதல் பாதி engaging ah
இருக்கு. ரெண்டாவது பாதிலதான் லைட்டா கண்ணக் கட்டிருச்சி. தூங்கி பக்கத்துல உள்ள அண்ணன்
மேல விழுந்துட்டேன்…ஆனா உடனே எழுப்பிவிட்டாப்ள.
ஒரு
படத்துல எந்த ஒரு முக்கியமான கேரக்டர்னாலும் அந்த
கேரக்டரோட தன்மைய முன்னரே புரிய வைக்கிறது ரொம்ப முக்கியம். உதாரணமா தனி ஒருவன்ல சித்தார் அபிமன்யூ எப்படிப்பட்டவன்ங்குறத
நாம புரிஞ்சிக்க அவன் சின்னப்பையனா இருக்கும்போது நடக்குற அந்த ஒரு சம்பவமே போதும்.
ஆனா இங்க விஜய் ஆண்டனி எப்படிப்பட்டவர்ங்குறத புரிஞ்சிக்கவே முடியல. அவர் எத நோக்கி
போயிட்டு இருக்காருங்குறா க்ளாரிட்டியும் இல்லை. அப்பாவ கொன்னவன பழிவாங்கப் போறாரா இல்ல அரசியல்ல
ஒரு பெரிய இடத்த நோக்கிப் போறாரான்னுலாம் எந்தக் ஒரு தெளிவும் இல்லை.
இந்த
Dark knight படத்துல ஜோக்கர் ஒரு வசனம் சொல்லுவாரு.. “நா தெருநாய் மாதிரி… எதயும் ப்ளான்
பண்ணியெல்லாம் பன்னமாட்டேன்.. அப்டியே போற போக்குல என்ன தோணுதோ பன்னிட்டு போவேன்னு.
அப்டித்தான் நம்ம எமன் சாரும். அப்டியே போறாரு. போற போக்குல நாலஞ்சி வில்லன ”சூ” ன்னு
விரட்டிட்டிடுப் போறாரு.
அதுவும்
மட்டும் இல்லாம படத்துல எக்கச்சக்க கேரக்டர்கள்… MLA, எதிர்கட்சி தலைவர், அவனுக்கு
கீழ கடத்தல் பன்றவன், கவுன்சிலரு, அவனுக்கு அள்ளக்கை.. இவனோட நொள்ளக்கைன்னு ஒரு
40, 50 பேர் இருக்காயங்க. ஒவ்வொருத்தன் பேரயும் ஞாபகம் வச்சிக்கிறதே பெரும் பாரு.
திடீர்னு
“சார் கருணாகரன் உங்களுக்கு ஃபோன் பன்றாரு சார்”
“சார் தங்க பாண்டியன் உங்கள பாக்கனும்ங்குறாரு சார்” “ சார் மணிமாறன் உங்கள தூக்கப்போறாரு சார்” ன்னு
சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நமக்கு யார்ரா இவய்ங்கல்லாம்னு கன்பீசன் ஆயிரும். ஆக்சுவல்
சீன்ல அவன் மொகரையப் பாத்தப்புறம்தான் இதான் கருணாகரனா.. இவந்தான் மணிமாறானான்னு கண்டுபுடிப்போம்.
பாரதி
கண்ணம்மா படத்துல வடிவேலு “ச்சீ.. ச்சீ.. ச்சீ.. இவன் பொண்டாட்டிய அவன் வச்சிருக்கான்…
அவன் பொண்டாட்டிய இவன் வச்சிருக்கான்.. ஊராடா இது” ன்னு சொல்ற மாதிரி இந்தப் படத்துலயும்
இவன் ஆளு அவன்கிட்ட போய் போட்டுக்குடுக்குறான்.. அவன் ஆளு இவன்கிட்ட போட்டுக்குடுக்குறான்..
ரெண்டு பேரயும் சேத்து இன்னொருத்தன் போட்டுக்குடுக்குறான்.. எவன் எவன் ஆளுடா? அத மொதல்ல
சொல்லுங்க..
RACE
ங்குற ஒரு ஹிந்திப் படத்துல இப்டித்தான் ரெண்டு pair இருப்பாய்ங்க. அதுல யாரு யாரோட
லவ்வரு? யாரு யாரு பக்கம் இருக்கான்னே கண்டுபுடிக்க முடியாத அளவுக்கு டுஸ்டு டுஸ்டா
வப்பாய்ங்க. கிட்டத்தட்ட அதே கொயப்பம் இங்கயும்.
விஜய்
ஆண்டனி ஆளு சூப்பரா, செம கெத்தா இருக்காரு. முதல் பாதில சில மாஸ் காட்சிகளும் அதுக்கான
BGM மும் செம. வசனங்கள எப்பவும் போல வாயத் தொறக்காமயே பேசுறாரு. அதுவும் தியாகராஜனும்
விஜய் ஆண்டனியும் பேசிக்கிற சீன்னா சுத்தம். நம்ம வெளிய போய் எதாவது வேலை இருந்தா முடிச்சிக்கிட்டு
ஒரு டீயக் குடிச்சிட்டு மெல்ல வரலாம். “ஆன்னா ஊண்ணா கொடியப் புடிச்சிக்கிட்டு கூட்டமா
கெளம்பிருறாய்ங்க… நா நேத்து நடந்தச் சொன்னேன்“ன்னு பேசுற என்னத்த கன்னையா ஸ்பீடுலதான் ரெண்டு பேரும்
பேசுறாய்ங்க. “நல்லா நடந்துச்சி நேத்து” ன்னு நம்ம வடிவேலு ரியாக்ஷன விட்டுக்கிட்டு
உக்கார வேண்டியதுதான்.
ஹீரோயின்
மியா கலீஃபா.. ச்சை..மியா ஜார்ஜ்.. நல்லாருக்காங்க…. (கலீஃபா அளவுக்கு நல்லா இல்லை)
அதிகமான காட்சிகள்லாம் இல்லை. வந்ததுக்கு கழுதைய ரெண்டு பாட்ட பாடிவிட்டுட்டு போவோமேன்னு
வர்றாங்க. சார்லிக்கு அளவெடுத்த தச்ச மாதிரியான கேரக்டர். வழக்கம்போல சிறப்பா செய்ஞ்சிருக்காரு.
சாமிநாதனும் ஓக்கே.
படத்துல
குறிப்பிட்டு சொல்லக்கூடிய இன்னொரு விஷயம் வில்லன். எந்த வில்லன்னு கேப்பீங்க. ஏன்னா
படத்துல ஒரு முப்பது நாப்பது வில்லன் இருக்காய்ங்க. விஜய் ஆண்டனியத் தவற படத்துல வர்றவன்
பூரா வில்லன் தா. அதுல நம்ம சத்குரு மாதிரி நிறைய தாடி மீசையெல்லாம் வச்சிக்கிட்டு
தங்க பாண்டியங்ன்குற கேரக்டர்ல ஒருத்தர் வருவாப்ள. ஆளும் கெத்தா இருக்காரு. நெல்லைத்
தமிழ் ரொம்ப அழகாப் பேசிருக்காரு. வழக்கமா நமக்கு நெல்லைத் தமிழ்னா ஹரி படத்துல வர்ற
வாலே போலே உக்காருலேன்னு காதுக்குள்ள குச்சிய வச்சிக் கொடையிறது தான் ஞாபகம் வரும்.
இதுல அப்டி இல்லை. ”ஆத்திரப் படாதவே.. கொஞ்சம் தன்மையா இருவே”ங்குற வாக்கியங்களையெல்லாம்
கேக்கவே இனிமையா இருந்துச்சி.
எம்மேல
கைவச்சா காலி பாட்டு மட்டும் ஓக்கே… மத்தபடி எந்தப் பாட்டும் வேலைக்கு ஆகல. செகண்ட்
ஹாஃப்ல ஒரெ ஒரு பாட்டோட நிறுத்திக்கிட்டதுக்கு கோட்டான கோடி நன்றிகள். ஆனா பாட்டுக்கெல்லம்
சேத்து சீன எடுத்து வச்சி இழுத்துட்டாங்க BGM அருமை. நாதஸ் திருந்திட்டேன்னு நாதஸே
சொல்ற மாதிரி அவருக்கு பில்ட் அப் மீசிக் அவரே போட்டுக்கிறாரு. ஆனா சூப்பர்.
ஜீவா
ஷங்கரோட மேக்கிங் மற்றும் ஒளிப்பதிவு ரொம்பவே நல்லாருக்கு. விஜய் ஆண்டனியோட கேரக்டர்ல
நான் படத்துல வர்ற கேரக்டரோட தாக்கம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யிது. ரெண்டாவது பாதில
கொஞ்ச நீளத்த கம்மி பன்னிருக்கலாம்.
ரெண்டாவது
பாதில மட்டும் கொஞ்சம் நெளிய வச்சாலும், படம் பாக்குற மாதிரி தான் இருக்கு. கண்டிப்பா
பாக்கலாம்.
இந்த முறை ஒரு வீடியோ விமர்சனமும் முயற்சி பன்னிருக்கேன்... நேரமிருந்தா பாத்துட்டு கருத்த கக்கிட்டு போங்க