Saturday, June 29, 2013

BALUPU (2013) -அதே டெய்லர்! அதே வாடகை!!


Share/Bookmark

சென்ற வருடம் (2012) மட்டும் நான்கு படங்களை ரிலீஸ் செய்து நான்கு படங்களையுமே அட்டர் ஃப்ளாப்பாக கொடுத்தவர் மாஸ் மஹாராஜ் ரவிதேஜா. வழக்கமாக தெலுங்கில் ஒரு புது ஸ்டைல் படம் ரிலீஸ் ஆனா அத்தனை ஹீரோக்களும் அதே கதையில் அடுத்தடுத்து நடித்து ரப்படியடிச்சிட்டு தான் விடுவாங்க. ஆனால் ரவிதேஜா சற்று வித்யாசமானவர். அடுத்தவர் படங்களை அவர் நடிப்பதில்லை.  அவர் படங்களையே அவரே  திரும்ப திரும்ப நடித்து வெளியிட்டுக் கொள்பவர். மிரட்டல் அடி வாங்கியும் கொஞ்சம் கூட கொஞ்சம் கூட தன் பாதையிலிருந்து விலகாமல் அதே மாதிரி படங்களிலேயே நடித்துவருபவர். இவரின் படங்கள்ல முதல் பாதியில வர்ற காட்சிங்கள எந்த படத்துலருந்து எடுத்து வரோட எந்த படத்துல வேணாலும்  போட்டுக்கலாம். எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும். முதல் பாதி முழுசும் ஒரு ஹீரோயின கரெக்ட் பண்றதும் காமெடியும் தான். இண்டர்வல்ல ஒரு சின்ன ட்விஸ்டு வரும். இரண்டாவது பாதியில ஒரு ஃப்ளாஷ்பேக்.  அம்புட்டுதேன்.

இப்ப பாருங்க. ரவி தேஜா ஒரு வீட்டுல ட்ரைவரா வேலைக்கு சேருறாரு. ரொம்ப சாஃப்டானவரு. அந்த வீட்டு கொழந்தைங்க மேல ரொம்ப பாசமா இருக்காரு. ஒரு புள்ளை அவர தொரத்தி தொரத்தி லவ் பண்ணுது. இந்த கேப்புல ஒரு வில்லன் ஒரு ஃபோட்டோவ வச்சி ஒருத்தர தேடிகிட்டு இருக்கான். இண்டர்வல்ல எதிர்பாராம வில்லனோட நேருக்கு நேர் சந்திக்க, ரவிதேஜா யார்ங்கற உண்மை தெரியிது. ஒரு செம ஃபைட்டுக்கு அப்புறம் ஒரு டெரரான ஃப்ளாஷ்பேக். கடைசில அந்த வில்லன வதம் பண்றாரு. ஹலோ ஹலோ இது பலுபு படத்தோட கதை இல்லை. போன வருஷம் வந்த "வீரா" படத்தோட கதை. அதுக்கு முன்னாடி வந்த துபாய் சீனுவோட கதையும் இது தான். 

ஒரு சோகமான விஷயம் என்னன்னா இப்ப வந்துருக்க பலுபு படத்தோட கதையும் இதே தான்.. கல்யானமே பண்ணிக்கமாட்டேன்னு சொல்லிகிட்டு இருக்க பையன் ரவிதேஜாவ கல்யாணம் பண்ண வைக்க அவரு அப்பா ப்ரகாஷ்ராஜ் வித்யாச வித்யாசமா முயற்சி பண்றாரு. ஒண்ணும் ப்ரயோஜனம் இல்லை. ஒவ்வொரு  பப்புலயும், ஹோட்டல்லயும் போயி ஃபுல்லா சாப்டுட்டு, சாப்ட பில்ல வித்யாசமான ஒரு ட்ரிக்க  யூஸ் பண்ணி அங்க இருக்க ஒரு இளிச்சவாயன் தலையில கட்டிட்டு வர்றவங்க ஸ்ருதியும் அவரோட மாமா (க்ரேசி மோகன்) ப்ரம்மானந்தத்தமும். ஒரு கட்டத்துல ஸ்ருதியால ரவிதேஜாவோட நண்பன் பாதிக்கப்பட ஸ்ருதிய கலாய்க்கிறதுக்காக நேரடியா களத்துல எறங்குறாரு ரவி தேஜா.

இந்த கேப்புல அடிக்கடி ஒரு மீசைக்கார வில்லன் (வேட்டை படத்துல நடிச்ச வில்லன்) யாரோ ஒருத்தன தேடி அலையிறாரு. இப்டியே லைட் காமெடியா படம் போயிட்டு இருக்க, ஒரு கட்டத்துல ஸ்ருதி உண்மையிலயே ரவிதேஜாவ  லவ் பண்ண ஆரம்பிச்சி, கல்யாணம் வரைக்கும் போயிடுது. கரெக்டா கல்யாணத்துல வந்து அந்த வில்லன் ரவிதேஜாவ மடக்கிட, ஒரு செம ஃபைட் வித் செம ட்விஸ்ட். அப்டியே இண்டர்வல் விட்டு கட் பண்ணீ ஓப்பன் பண்ணா ஃப்ளாஷ்பேக். 

ரவிதேஜா Vizag லோ பெத்த டான். (இது மட்டும் இண்டவர்வல் ட்விஸ்ட் இல்லை இன்னொரு சூப்பர் ட்விஸ்டும் இருக்கு) சரி பாட்ஷா ரஜினி ரேஞ்சுக்கு பவர்ஃபுல்லான ஃப்ளாஷ்பேக் எதுவும் இருக்கும்னு பாத்தா அங்கயும் திரும்ப லேண்ட் டீலிங், 10% கமிஷன் 15% கமிஷன்னு ப்ரோக்கர் வேலையே தான் ஓடிகிட்டு இருக்கு. ஃப்ளாஷ்பேக்லோ அஞ்சலி.. டாக்டரா வருது. ரவிதேஜாவ கொஞ்ச நேரம் லவ்விட்டு மட்டை ஆயிடுது.  திரும்ப வழக்கமான க்ளைமாக்ஸ் ஃபைட்டோட படம் இனிதே நிறைவடைது.
ஒரு சந்தோஷமான விஷயம் என்னன்னா போன வருஷம் வந்த ரவிதேஜா படங்களோட கம்பேர் பண்ணும் போது இது எவ்வளவோ பெட்டர். ரவிதேஜாவோட வழக்கமான டைமிங் டைலாக் டெலிவரி &  காமெடி சூப்பர். காஸ்ட்யூம்சும் சூப்பர். முதல் பாதில பில்லா அஜித் மாதிரி ஒரே ஜிகு ஜிகு சட்டையிலயே ஜொலிக்கிறாரு. இரண்டாவது பாதில லைட்டா தாடி வச்சிட்டு 4 வருஷத்துக்கு முன்னாடி இருந்த கெட்டப்புக்கு போயிடுறாரு. ரவிதேஜாவோட intro சீனுக்காகவும் ஒரு பாட்டுக்காகவும் படத்துல சேர்க்கப்பட்டவர் லட்சுமி ராய். அந்த ஒரு பாட்டுலயே அவங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு "நடிச்சிட்டு" கெளம்பிடுறாங்க. (நோட் திஸ் பாய்ண்ட்- நடிச்சிட்டு. படம் பாக்குறவங்களுக்கு பவர் ஸ்டார் ரியாக்ஷன் தான்...  செம பீட்டிடா மச்சான்)

ஸ்ருதிய போஸ்டர்லயும் ஸ்டில்ஸ்லயும் பாத்துக்குறதே மேல். நடிக்க ஆரம்பிச்சா ரெம்ப குஸ்டம்.  பாடல்கள்லயும் அவ்வளவு சிறப்பா இல்லை. அஞ்சலிக்கு இந்த படத்துல 60 லட்சம் சம்பளமாம்பா... அது வாங்குன அதிக பட்ச சம்பளம் இந்த படத்துலதானாம். அரைமணி நேரம் வர்றதுக்கு 60 லட்சமா... ஆத்தாடி. ஆனா அவ்வளவு ஒண்ணும் சிறப்பா இல்லை. வழக்கமா  சுமார் ஃபிகர்களையே பல கோட்டிங் அடிச்சி பளிச்சின்னு காட்டுவாங்க தெலுகுல. ஆனா இந்த படத்துல ரெண்டு ஹீரோயினுமே பாக்குறதுக்கு ரொம்ப சுமார் தான்.

Gangnam style டான்ஸோட அதிரடி இண்ட்ரோ குடுக்குறாரு க்ரேசி மோனான தலைவர் ப்ரம்மானந்தம். ஆனா அடிக்கடி அதே டான்ஸ படம் முழுக்க ஆடிகிட்டு இருக்கது அருவை. அதோட ஒருசில காட்சிகள தவற பெரிய காமெடி இல்லை. ஆலேயும் லைட்டா சிரிப்பு காட்டுறாரு.ப்ரகாஷ்ராஜ் வழக்கம் போல அருமை. ஆனா அவர இன்னும் நல்லா யூஸ் பண்ணிருக்கலாம்.

தெலுங்கு படங்களுக்கு மிகப் பெரிய பலமே ஃபைட்டு தான். அந்த ஃபைட்டுக்கு வர்ற சவுண்டு தான் அந்த ஃபைட்டயே தூக்கி நிறுத்தும். ஆனா  தமன் டோட்டல் சொதப்பல். ஒவ்வொரு அடி அடிக்கும் போதும் சும்மா "சொத்" "சொத்" ன்னு சவுண்ட குடுத்து ஃபைட்ட டம்மி ஆக்கி விட்டுட்டாரு. ஒரு அடி அடிச்சாலும் தெறிக்கிற மாதிரி சும்மா டங்க்க்க்ன்னு சவுண்டு குடுக்க வேண்டாமா ... இதுக்கெல்லாம் கீரவணியும், மணிஷர்மாவும் தான் லாயக்கு.

பாட்டுங்க ஓக்கே தான். காஜலு ச்செல்லிவா பாட்டும், நினு சூசின ஷனம்லோ பாட்டும் சூப்பர். கடந்த  ஒரு மாசத்துல நா அதிகமா கேட்டது தலைவர் SPB பாடுன இந்த "நினு ச்சூசின ஷனம்லோ" பாட்டு தான்.ஃப்ளாஷ்பேக் முடிஞ்சி படம் முடியப்போற சமயத்துல, திடீர்னு ஆவின்னு ஒரு காமெடிய பண்ணி இன்னும் ஒரு அரைமணி நேரம் படத்த இழுத்துருக்காய்ங்க. க்ளைமாக்ஸ்ல ரவிதேஜா குரூப்பும், வில்லன் குருப்பும் மாறி மாறி IPL ஜம்பிங் ஜபாங்கு ஜம்பக்கு ஜம்பக்கு மியூசிக்கு ஆடுறது செம ரவுசு.


மொத்தத்துல இந்த படமும் அதே டெய்லர் அதே வாடகை தான். இருந்தாலும் ரொம்ப அருவை இல்லாம நகர்றதால ஒரு தடவ பாக்கலாம்.
  

Monday, June 17, 2013

தில்லு முல்லு - நீ கொஞ்சம் தூரமாவே நில்லு!!!


Share/Bookmark
நல்ல நல்ல படங்ககளையெல்லா ரீமேக் பண்றேன்னு நிறைய பேரு கெளம்பி வந்து ஒரிஜினல் படங்ளோட தரத்துல கால் பகுதிய கூட தொடமுடியாத நிலமை தான் இப்பல்லாம். ஆனா தில்லு முல்லு ரீமேக் பண்றாங்கன்னப்போ, அதுவும் மிர்ச்சி சிவாவ வச்சி ஆரம்பிக்கிராங்கன்னப்போ சந்தோஷமா இருந்துச்சி. அதுமட்டும் இல்லாம தேங்காய் சீனிவாசன் கேரக்டர்ல ப்ரகாஷ்ராஜ் வேற நடிக்கிறாருன்னு கேள்விப்பட்டப்போ பட்டைய கிளப்பப் போகுது படம்னு நெனைச்சிட்டு இருந்தேன். ஒட்டுமொத்த நெனப்புலயும் மண்ண அள்ளி போட்டுட்டு வந்து நிக்கிது இந்த தில்லு  முல்லு  த ரீ மேக்.

"காதலா காதலா" படத்துல கமலும் ஹனீஃபாவும் வர்ற சாமியார் சீன் மாதிரி ஒரு சம்பந்தமே  இல்லாத சீனோட படம் ஆரம்பிக்குது. சென்னை 28, தமிழ்ப்படம் மற்றும் சரோஜாவுல அசால்ட்டான நடிப்புல எல்லாருக்கும் புடிச்சவராயிட்டருசிவா. சிலர் கதைக்கு ஏத்தா மாதிரி தன்னோட நடிப்பையும்   மாத்திக்குவாங்க. ஆனா சிவா அதுக்கு நேர் எதிரானவரு. இவருக்கு என்ன நடிக்க வருதோ அதுக்கு ஏத்த மாதிரி தான் டைரக்டருங்க கதை எழுதிக்கனும் போலருக்கு. லூசு பய... ஒரு சீன் கூட ஒழுங்கா நடிக்கிறதுக்கு ட்ரை கூட
பண்ணல. இந்த நாயி ஒரிஜினல் தில்லு முல்ல பாத்துச்சா என்னன்னே தெரியல.


ஆஃபீச கட் அடிச்சிட்டு foot ball மேட்சுக்கு போகனும். தங்கச்சிக்கு ஒடம்பு சரி இல்லைன்னு ஃபோன் பண்றேன்னு சொன்ன ஃப்ரண்டு மாத்தி அம்மாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு ஃபோன் பண்ணிடுறான். இந்த சீன்ல ரஜினி தேங்காய் சீனிவாசன சமாளிக்கிறத எவ்ளோ சூப்பரா எடுத்துருப்பாங்க. இங்கயும் எடுத்துருக்காய்ங்க பாருங்க.. கண்றாவி... இவன வச்சி இதுக்கு மேல ஒண்ணும் முடியாதுன்னு டைரக்டருக்கு தெரிஞ்சி போச்சி போலருக்கு. நீ எதோ பண்றத பண்ணுன்னு விட்டுட்டாரு,

ஒரு கேரக்டர் நல்ல கண்ணு பசுபதி..இன்னொரு கேரக்டர் பூனைக்கண்ணு கங்குலி கந்தன். ஒரு சீன்ல "நா சின்ன வயசுலயே கேக்ல முட்டை இருக்கும்ங்கறதால கேக் சாப்டமாட்டேன்" ன்னு ப்ரகாஷ்ரஜ் கிட்ட பசுபதி சொல்ல, "அதெப்டி சின்ன வயசுலயே கேக்குல முட்டை இருக்கது உனக்கு தெரியும்" னு படையப்பால "பாம்பு புத்துக்குள்ள கையவிட்டது எப்புடிங்கோ"ன்னு கேட்டுகிட்டே இருக்கது அருவை.

இன்னொன்னு சவுக்கார் ஜானகி கேரக்டர்ல கோவை சரளா. உண்மையிலயே ரொம்ப நல்ல சாய்ஸ். ஆனா இப்பல்லாம் கோவைசரளா ஒரிஜினல் ஆக்டிங்க விட்டுட்டு ஓவர் ஆக்டிங் தான் அதிகம் பண்ணுது. சாராயம் விக்கிற பொம்பளையாம்.. லோக்கல் தமிழ்தான் இதுக்கு பேச வருமாம். அதுக்காக ப்ரகாஷ்ராஜ் வர்றப்போ விரதம்னு நாக்குல வேல் குத்தி உக்கார வச்சிருக்காய்ங்க. ஏண்டா மொன்னைங்களா எந்த ஊர்லடா வீட்ல விரதம் இருக்கும் போது நாக்குல வேல் குத்தி வச்சிருக்காய்ங்க. சரி எதோ ஒரு சீன்னாலும் பரவால்ல. ஆனா ப்ரகாஷ்ராஜ் கோவை சரளாவ பாக்குற அத்தனை சீனும் நாக்குல வேல் குத்திட்டு தான் இருக்கு.

தேங்காய் சீனிவாசனா ப்ரகாஷ்ராஜ்.. படத்துல நா நம்பி இருந்த இன்னொருத்தர். இவருக்கு நடிப்ப வெளிப்படுத்துற மாதிரி சீனும் எந்த டைரக்டர் அமைச்சி குடுக்கலன்னு தான் சொல்லனும். இப்புடி எடுக்குறதுக்கு எதுக்குங்க உங்களுக்கு ப்ரகாஷ்ராஜ்... வேற யாரையாச்சும் போட்டு பட்ஜெட்டயாது கம்மி பண்ணிருக்கலாம்.

பாட்டு BGM ரெண்டும் ஓக்கே தான். தில்லு முல்லு ரீமிக்ஸ் பாட்டு ரொம்ப நல்லாருக்கு. ராகங்கள் பதினாரும் ஓக்கே தான். ஆனா சம்பந்தமே இல்லாத ஒரு சிட்டுவேஷன்ல வந்து எரிச்சலாக்குது. ஹீரோயின் யாருன்னு தெரில. ஆனா ஹீரோயின விட சிவா தங்கச்சியா வர்ற பாப்பா ரொம்ப அழகா இருந்துச்சி. அதயே ஹீரோயினா போட்டுருக்கலாம் போலருக்கு. இன்னொரு கொடுமையான விஷயம் அந்த அழகு புள்ளைக்கு ஜோடி பரோட்டா சூரி. கண்றாவி. சமீபகாலமா பரோட்டா  சூரி நல்ல ஃபார்ம்ல இருந்தாரு. ஆனா இந்த படத்துல அவர் பண்ற எந்த காமெடிக்குமே சிரிப்பு வர்ல.

அப்புறம் நாகேஷ் கேரக்டர்ல சட்டி சத்தியனும், பூர்ணம் விஸ்வநாதன் கேரக்டர்ல இளவரசுவும். ஓண்ணும் சொல்றதுக்கில்ல. ரஜினிய ப்ளாக்மெயில் பண்ற சின்ன பையன் கேரக்டர் படத்துல இல்லை. ஆமா உள்ள கேரக்டருங்களயே ஒழுங்கா யூஸ் பண்ணல. இதுல அவன் வேறயா. அப்புறம் படம் நல்ல பளிச்சின்னு சூப்பரா இருக்கு. கலர்ஃபுல்லாவும் இருக்கு. ஆனா அதுக்குன்னு படத்துல நடிச்சவங்க போட்டுருக்க ஸ்பெக்ஸ் ஃப்ரேம் கூட ஊதா, ரோஸ்ன்னு ஜிகு ஜிகுன்னு  இருக்கது கொஞ்சம் ஓவர்.

இதயும் மீறி படத்துல அங்கங்க சிரிக்க வக்கிறது சிவாவோட வழக்கான சில ஒண் லைனர்ஸ் தான். கடைசி 5 நிமிஷம் வர்ற சந்தானம்தான் தியேட்டரயே கலகலக்க வக்கிறாரு. யய்யா... நீ  கொஞ்சம் முன்னாலயே வந்துருக்க கூடாதாய்யா. சிவா சார்... கொஞ்சமாது நடிக்க முயற்சி பண்ணுங்க. இல்லைன்னா கொஞ்ச நாள்ல மூட்டை முடிச்செல்லாம் கட்டிகிட்டு கெளம்ப வேண்டியதான். டைரக்டர் பத்ரியோட "வீராப்பு" படம் எனக்கு ரொம்ப புடிக்கும். ஏன் ஐந்தாம் படை படத்த கூட அட்வான்ஸ் புக்கிங்ல பாத்த ஒரு சில பேர்ல நானும் ஒருத்தன். ஆனா இந்த படம் மிகப்பெரிய ஏமாற்றம்.

ஒரிஜினல் தில்லு முல்லு எல்லாரும் பாத்துருப்பாங்கன்னோ என்னவோ நிறைய காட்சி முழுமையாவே எடுக்கல.. அங்கங்க பிட்டு பிட்டா விட்டுட்டு ஓடுன மாதிரி இருக்கு. ஒரிஜினல் பட ரசிகர்களுக்கு இந்த தில்லு முல்லு த ரீ மேக் எரிச்சலை மட்டுமே தரும்.

Saturday, June 15, 2013

தீயா வேலை செய்யனும் குமாரு- தாறு மாறு!!!


Share/Bookmark
"தீயா வேல செய்யனும் குமாரு... தியாகம் தான் உன்னை உயர்த்தும்"ன்னு புதுப்பேட்டை படத்துல தனுஷ பாத்து அழகம் பெருமாள் சொல்லுவாரு. அந்த டயலாக் ஃபேமஸ் ஆகி இப்போ பட டைட்டிலா வந்து நிக்குது. நிறைய பேரு முழு நீள நகைச்சுவை படம் எடுக்குறேன்னு சொல்லிகிட்டு வந்து நம்மள கொன்றுவாய்ங்க. உதாரணத்துக்கு நம்ம பாண்டிராஜ் ரெண்டு மாசத்துக்கு முன்னால கேடி பில்லான்னு ஒண்ண ரிலீஸ் பண்ணி நம்மள வெறிச்சி ஓடவச்சிட்டாரு. இன்னொருத்தரு spoof பண்றேன்னு வந்து "9 ல குரு"ன்னு ஒண்ணு ரிலீஸ் பண்ணாரு. மாடே டைரக்டா போயி அந்த போஸ்டர்ல எல்லாம் சாணி அடிச்சிது. உண்மையிலயே முழுநீள காமெடி படம் எடுக்குற தகுதி நம்மூர்ல ஒருத்தருக்கு இருக்குன்னா அது தலைவர் சுந்தர்.சி க்கு தான்.

முந்தாநாளூ என் தம்பி ஒருத்தண்ட "டேய் நம்ம தல சுந்தர்.சி எடுத்த TVSK போவோமானாணேன்.. அதுக்கு அவன் "அய்யோ அண்ணே...அதுல கழுதப்புலி (சித்தார்த்) நடிச்சிருக்கு போனா நம்மள கடிச்சி வச்சிரும்ணே"ன்னு பயமுறுத்துனான்.  நல்ல வேளை அந்த மாதிரி சம்பவங்கள் எதுவும் நடக்கல. தல சுந்தர்.சி பெரும்பாலும் ஹீரோக்களை நம்பி படம் எடுக்கறதில்லை. சந்தானத்து மேல மட்டுமே நம்பிக்கை வச்சி எடுத்த படம் தான் இந்த தீயா வேலை செய்யனும் குமாரு.  தெலுங்குலயும் படத்த ஹிட்டாக்கனுமேன்னு தான் நம்ம சித்தார்த்த புடிச்சி போட்டுருப்பாங்க போல.

சுமார் பையனான குமாரு சூப்பர் புள்ளையான ஹன்சிகாவ எப்படியெல்லாம் கோல்மால் பண்ணி லவ் பண்ண வக்கிறாருங்கறதுதான் கதை. மெயின் ஹீரோவாக சந்தானமும் சைடு ஹீரோவாக சித்தார்த்தும் நடிச்சிருக்காங்க. காஃபி கப் உடைஞ்சதுக்கெல்லாம் ட்ரீட் கேக்குற மாதிரியான ஒரு சாஃப்ட்வேர் கம்பெனில வேலைசெய்யிற சுமார் சித்தார்த் புதுசா join பண்ற ஹன்சிகாவ பல போட்டிக்கப்புறம் வலையில விழ வைக்கிறாரு. விஷயம் தெரிஞ்ச அடுத்த செகண்ட் கம்பெனில உள்ள எல்லாருக்கும் SMS அனுப்பி தண்டோரா போடுற ஒருத்தர், ரேமண்ட்ஸ் மாடல் மாதிரி இருக்க கணேஷ் வெங்கட்ராம கரெக்ட் பண்றதுக்காக ஃபுல் மேக்கப்புல சுத்துற கேர்ஸ்,  FM la பேசுற மாதிரியே இங்கயும் "சர்ர்ர் புர்ர்ர்ர்ன்னு " செம ஸ்பீடா பேசுற BIG FM பாலாஜின்னு அந்த கம்பெனில உள்ள  எல்லா கேரக்டருமே சூப்பர்.

முதல் இருபது நிமிஷம் BIG FM பாலாஜியோட சுமார் காமெடில பயணம் செய்யிற கதை சந்தானத்தோட "அதிரடிக்காரன்" ஸ்டைல் எண்ட்ரியிலருந்து டாப் கியர் போட்டு எகிரிடுது.  பொண்ணுகளை கரெக்ட் பண்றதுக்கு ஐடியா குடுக்குறதுக்காகவே ஆஃபீஸ் வச்சி அதுல டோக்கன் சிஸ்டம்லாம் வச்சி, ஓவ்வொரு ஐடியாவுக்கும் பல ஆயிரம் பணத்த பசங்ககிட்ட புடுங்குற கேரக்டர்ல சந்தானம். இந்த படத்துல இவர காமெடியன்னு சொல்றத விட ஹீரோன்னு சொல்றதே கரெக்ட்.

ஒரு சீன்ல விஷால் வர்றாரு. எல்லாரும் விஷால் கிட்ட ஆட்டோ கிராஃப் வாங்க, சந்தானம் வந்தோன டக்குன்னு விஷால் அவர்கிட்ட ஆட்டோஃக்ராப் வாங்குறாரு. “ஆர்யாவெல்லாம் ஆறு  மாசத்துக்கு ஆறு லட்ச ரூவா பில்லுகட்டுற அளவுக்கு என்கிட்ட ஐடியா கேப்பான்” ன்னும் “சல்மான் கானுக்கு லவ்வுல ஒரு ப்ராப்ளம் அதான் சால்வ் பண்ணி வக்க போயிருந்தேன்” ன்னு அங்கங்க செம ரவுசு.  சந்தானம் சித்தார்த்துக்கு ட்ரெயிங் குடுக்குற சீன்ஸ் எல்லாமே செம.

முதல்பாதி என்னதான் காமெடி நல்லா இருந்தாலும் அதுல சுந்தர்.சியோட டச் கொஞ்சம் கம்மியா இருந்தமாதிரி ஒரு ஃபீல். ஆனா செகண்ட் ஆஃப் ஆரம்பிச்சதுமே படத்துல தல சுந்தர்.சி யின் ரகளை ஆரம்பிச்சிடுது. தெறிக்க விட்டுருக்காரு. உண்மையிலயே ஒரு லெவல்ல சிரிச்சி சிரிச்சி வயித்து வலியே வந்துருச்சி. குறிப்பா சந்தானமும், மனோபாலாவும் வர்ற சீன்ஸ். மனோபாலா வர்ற  அந்த பத்து நிமிஷத்துல சந்தானம் "டேய் நட்ராஜ் பென்சில்" "டேய் குச்சி ஐஸ்" ன்னு எத்தனை  பேரு வக்கிறாரு. யப்பா...

ஹன்சிகா செம்ம அழகு. ரெண்டு நாளுக்கு முன்னால சுந்தர்.சி ஒரு டி.வி ஷோவுல "இந்த படத்துல ஏன் ஹன்சிகாவ ஹீரோயினா போட்டீங்க?"ங்குற கேள்விக்கு பதில் சொன்னாரு. "ஒரு அழகான  பொன்ன மாஞ்சு மாஞ்சு லவ் பண்றதுதான் கதையே.. இந்த கேரக்டருகு டக்குன்னு பாத்தோன புடிக்கிற மாதிரி ஒரு பேரழகியா இருக்கனும். உடனே டக்குன்னு எங்களுக்கு ஞாபகம் வந்தது  ஹன்சிகாதான்" ன்னாரு. கண்டிப்பா உண்மைதான்... அனுஷ்காவ கூட ஹன்சிகா பக்கத்துல நிக்க வச்சி பாத்த அசிங்கமா தான் இருக்கும் போல... அவ சிரிப்புக்கு முன்னால நா செதஞ்சி பொய்ட்டென் ஹையோ... ஐ லைக் இட். இந்த படத்துல ஹன்சிகா உடம்பு செமயா இளைச்சிடுச்சி. ஆனா மூஞ்சி மட்டும் இட்லி குண்டான் மாதிரி அப்டியே தான் இருக்கு.

பாஸ்கி கொஞ்ச சீனே வந்தாலும் சூப்பர். கலகலப்புல இருக்க அத்தனை பேரயும் இதுலயும் யூஸ் பண்ணிருக்காரு. மண்டை கசாயம், பேயி, திமிங்கலம் மூணு பேரும் ஒரு காமெடிக்கு வந்து  அசத்துறாங்க. சூது கவ்வும் இயக்கிய நளன் குமாரசாமியும் இதுல வசனம் எழுதிருக்காரு.  மியூசிக்ல கொறை சொல்ற மாதிரி எதுவும் இல்லை. எல்லா பாட்டுமே நல்லாதான் இருக்கு. பாட்டுங்க படமாக்கப்பட்ட லொக்கேஷன்ஸும் செம. ஆனா பாட்டுல காஸ்ட்யூம்ஸ்தான் கொஞ்சம் கப்பித்தனமா இருந்துச்சி.  படம் முடிஞ்சப்புறம் வர்ற "திருட்டு பசங்க" பாட்டுல ஹன்சிகாவயும் குஷ்பூவயும் மாத்தி மாத்தி காட்டுறாங்க.. ஆத்தாடி ரெண்டுக்கும் ஆறு வித்யாசம் கண்டுபுடிக்க முடியாது போல. அப்புடியே ஒரே மாதிரி இருக்காங்க.

சித்தார்த்தோட நடிப்பும் குறை சொல்ற மாதிரி இல்லை. ஆனா இந்த படத்து கதைக்கு 100%  பொருத்தமான ஆளூ தனுஷ் தான். தனுஷ் மட்டும் நடிச்சிருந்தா இந்த படம் எங்கயோ  போயிருக்கும். ஆரம்பத்துலருந்து படத்தோட கடைசி நிமிஷம் வரைக்கும் சிரிப்புக்கு உத்தரவாதம் தரக்கூடிய ஒரு படம்.

சுருக்கமா சொன்னா சுந்தர்.சியோட இன்னொரு கலகலப்பு. கண்டிப்பா பாருங்க. நம்ம இமாம் அண்ணாச்சி ஸ்டைல்ல சொன்னா “எலே மிஸ் பண்ணிடாதிய... அப்புறம் வருத்தப்படுவிய...”   


Monday, June 10, 2013

AFTER EARTH - தமிழேண்டாஆஆஆ!!!


Share/Bookmark


நம்மூர்ல ஒரு படம் ரொம்ப நல்லா இருந்தா அத உடனே "ஹாலிவுட் தரத்தில்" ஒரு படைப்புன்னு சொல்லி பெருமைப்படுத்துவோம். வாழ்க்கை ஒரு வட்டம்டே... இப்போ அவங்க நம்மூர் படங்களோட ஒப்பிட்டு பேசுற காலம் வந்துருச்சி.. இதோ நம்மூர் படங்களின் தரத்தில் ஒரு ஹாலிவுட் படம். இந்த அற்புதமான படைப்ப கொடுத்தது வேற யாரும் இல்லை. நம்மூர்லருந்து போன அய்யா நைட் ஷாமலன் அவர்கள் தான்.

நமக்கு என்ன வருமோ... நம்ம body எவ்வளவு தாங்குமோ அத தான் நாம செய்யனும். நம்ம விகரமன் சார்கிட்ட ஒரு 200 கோடி பட்ஜெட்ல ஒரு படம் எடுத்து தாங்க சார் சொன்னா என்னாகும்? அதே கதை தான் இங்கயும். க்ராஃபிக்ஸ் கொஞ்சம் கூட இல்லாம ஸ்க்ரீன்ப்ளேவ வச்சே நம்மள மெரட்டுனவருதான் நம்ம ஷாமலன். Sixth sense லயோ, Signs லயோ  Unbreakable லயோ இல்லை The village லயோ கதையோ திரைக்கதையோ பேசுமே தவற க்ராஃபிக்ஸ் இல்ல. ஆங்கில படங்கள் பொதுவா நா இந்த டைரக்டர் படம் தான் பாக்கனும்ன்னு எதும் பாக்குறதில்ல. (ஏன்னா டைரக்டர் பேரு எதுவும் எனக்கு தெரியாது). ஆனா மொத மொதல்ல நைட் ஷாமலனுக்காகவே இந்த படத்த கண்டிப்பா பாக்கனும்னு பாத்தேன். அப்புறம் தான் இனிமே அந்த மாதிரி தப்பு எதும் பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சிகிட்டேன்.

ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னால Sixth sense பாத்துட்டு என் நண்பன் அசால்டு அசார் கிட்ட "மச்சி செமயா இருக்குடா இந்த படம் பாரு"ன்னு. அதுக்கு அவன் "நீ இப்ப தான் அங்கயே வர்றியா.. லேட் பிக்கப்புடா நீயி" ன்னு அசிங்கப்படுத்திட்டான். அடுத்த ஒரு வாரத்துலயே ஷாமலன் Sixth sense க்கு அப்புறம் எடுத்த எல்லா படத்தையும் பாத்துட்டேன், அவர் produce பண்ண DEVIL உட்பட. ஆனா எந்த படமும் இவ்ளோ ஏமாத்துனதில்ல. மரண அடி வாங்குன "The last Airbender" கூட எனக்கு ஓரளவு புடிச்சி தான் இருந்துச்சி.

நம்ம வில் ஸ்மித்து எதோ ஒரு புத்தகத்துல ஒரு ஒன்லைன படிச்சிட்டு, அத நைட் ஷாமலன்கிட்ட சொல்லி, அவரே தயாரிச்சி அடம் புடிச்சி இந்த படத்த எடுக்க வச்சிருக்காரு. நுனலும் தான் வாயாலயே தான் கெடும். கூடவே அவரோட பையன் ஜேடன் ஸ்மித்தும். சரி AFTER EARTH என்னதான் பண்றாய்ங்க.

பல நூறு வருஷங்களுக்கு முன்னாலயே பூமிலருந்து மனிதர்கள் வெளியேறி வேறு ஒரு கிரகத்துல வாழ்ந்துகிட்டு இருக்காங்க. இப்போ பூமி மனிதர்கள் வாழ ஏற்றதா இல்லை. URSA ங்குற ஒரு  கொடிய மிருகத்தோட அந்த கிரகத்துலருந்து கெளம்புற ஒரு விமானம் விண்கற்களோட மோதினதால தொடர்ந்து பறக்க முடியாம பூமியில விழுந்துடுது. ஜேடனும், வில் ஸ்மித்தையும் தவற மத்த எல்லாருமே இறந்துடுறாய்ங்க. வில் ஸ்மித்துக்கு தொடை எழும்மு ரெண்டா முறிஞ்சி நடக்க முடியில. இப்போ முழுசா இருக்கது ஜேடன் மட்டும் தான்.

விமானம் விழுந்தப்போ அதோட தலைப்பகுதி ஒரு பக்கமும் வால் பகுதி அங்கருந்து 100 கிலோமீட்டருக்கு முன்னாலும் தனித்தனியா விழுந்துடுது. விமானத்தோட தலைப்பகுதில மாட்டிக்கிட்டு இருக்க  ஸ்மித் ஃபேமிலி, வால் பகுதில இருக்க ஒரு சிஸ்டம் மூலமா தான் அவங்க கிரகத்துக்கு தகவல்  கொடுத்து அவங்கள இங்க வர வைக்க முடியும். so, அந்த வால் பகுதில இருக்க சிஸ்டத்த ரெக்கவர் பண்ண நடக்க முடியாத வில் ஸ்மித், அவரோட பையன் ஜேடன அனுப்பி வைக்கிறாரு. அந்த பையன் அந்த சிஸ்டத்த ரெக்கவர் பண்ணாரா... ரெண்டு பேரும் தப்பிச்சாங்களா இல்லையாங்குறது தான் கதை. ( சினிமா என்று வந்துவிட்டால் கண்டிப்பா தப்பிச்சி தானே ஆகனும்)

படத்தோட ட்ரெயிலர பாக்கும் போது கிட்டத்தட்ட இன்னொரு அவதார் மாதிரி தான் ப்ரம்மாண்டமா தெரிஞ்சிது. ஆனா படத்த பாத்தப்புறம் தான் தெரியிது ட்ரெயிலர மட்டுமே பாத்துக்கிட்டு இருந்துருக்கலாம்னு. விமானத்தோட வால் பகுதிய நோக்கி போற ஜேடனுக்கு வில் ஸ்மித் டெலிகான்லயே இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்துகிட்டு இருக்காரு. ஆரம்பத்துல இது நல்லா இருந்தாலும் முழு படமும் இதே போலவே போறது செம கடுப்பு. எப்பவெல்லாம் படம் ஓரளவு சூடு பிடிக்குதுன்னு நெனைக்கிறமோ அப்பவெல்லாம் ஒரு செண்டிமெண்ட் சீன சொருகி தூங்க வச்சிடுறாய்ங்க. வில் ஸ்மித் ஒரு சீன்ல ஜேடனுக்கு ஒரு கதை சொல்றாரு.. சொல்றாரு சொறாரு... சொல்லிகிட்டே இருக்காரு... அது முடியும் போது அந்த பயலும் தூங்கிருவான்.. பாக்குற நாமலும் தூங்கிடுறோம்.

ஜேடன் போற வழியில குரங்குங்க அட்டாக் பண்ணுதுங்க... LORD Of The Rings la வர்றது மாதிரி ஒரு ராட்சச பறவை நம்மாள கவ்விகிட்டு போயி அது கூண்டுல போடுது.. அப்போ அங்க வர்ற சிங்கம் மாதிரியான ஒரு விலங்குட்டருந்து அந்த பறவையோட முட்டைங்ளையும், குஞ்சுகளையும்  காப்பாத்துறாரு நம்ம ஜேடன். அதுக்கு பதிலா அந்த பறவை ஜேடன் பனில உறையும் போது அவர காப்பத்திட்டு அது செத்துப்போயிருது.. டேய் என்ண்டா செண்டிமெண்டா...

படத்துல வில் ஸ்மித் கிட்டத்தட்ட அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டர்தான். ஒரே இடத்துல உக்காந்துட்டு வாயால வடை சுடுறதோட சரி. ஆனா ஆளு செமயா இருக்காரு. ஜேடன் பக்கத்துல அவர் பாக்கும் போது அண்ணன் தம்பி மாதிரி தான் இருக்கு. 


URSA ங்குற ஒரு வினோதமான ஒரு விலங்கு.. பயத்த மட்டுமே வச்சி மனிதர்களை கண்டுபுடிச்சி கொல்ற ஒரு விலங்கு. ஏற்கனவே ஜேடனோட அக்காவ மர்கயா சாலா பண்ணது. இந்த விமானம் விழுந்து நொறுங்குனதுல அந்த URSA  எஸ்கேப் ஆயிடுது. ஒரு வழியா பல தடைகள தாண்டி விமானத்தோட வால் பகுதிய கண்டுபிடிச்சி ஊருக்கு சிக்னல் குடுக்க போகும் போது URSA உள்ள வந்து ஜேடன அட்டாக் பண்ணுது.

Alien  (1978) படத்துல நடிச்ச ஏலியன்கிட்ட ஒரு ரெண்டு நாள் கால்ஷீட் வாங்கி இந்த படத்துல நடிக்க வச்சிருக்காய்ங்க. அதே டெய்லர் அதே வாடகை.  உர்சா பாக்க செம காமெடியா இருக்கு. ஜேடன் ஸ்மித் பயந்து பயந்து உர்சாவோட மல்லுகட்டிக்கிட்டு இருக்க அது அவர தூக்கிபோட்டு மிதிக்குது. கடைசியா,  க்ளைம்மாக்ஸ்ல அடிவாங்கி எழுந்திரிக்கிற தமிழ் ஹீரோ மாதிரி பயமே இல்லாம ஜேடன் எழுந்திரிக்க, உர்சா ஜேடன் எங்க இருக்காருன்னு தெரியாம தள்ளாடுது. அந்த கேப்புல உர்சாவுக்கு ஜேடன் சங்கு ஊதிட்டு ஊருக்கு சிக்னல் குடுக்க அடுத்த சீன்லயே ரெக்கவரி டீம் வந்து இவங்க ரெண்டு பேரயும் அள்ளிக்கிட்டு போயிருது.


எந்த காட்சியுமே சுவாரஸ்யமாவோ அல்லது புதுசாவோ இல்லை. நைட் ஷாமலனோட மிக மட்டமான படைப்பு இந்த AFTER EARTH.

Saturday, June 1, 2013

குட்டிப்புலி - அய்யோ அம்மா பூச்சாண்டி!!!


Share/Bookmark
(சிங்கம் சூர்யா Slang la ஆரம்பிங்க) கரடிய காட்டுல  பாத்துருப்பீங்க...டிவில பாத்துருப்பீங்க, ஃபோட்டோவுல பாத்துருப்பீங்க, zoo வுல பாத்துருப்பீங்க... ஏன்? டி.ஆர் ரூபத்துல காமெடி பண்ணி கூட பாத்துருப்பீங்க .கப்பித்தனமா பஞ்ச் டயலாக் பேசி பாத்துருக்கீங்களா? வெறித்தனமா வெரட்டி அடிக்கிறத (audience ah) பாத்துருக்கீங்களா? இந்த குட்டிப்புலிய பாருங்க.. எல்லாமே உங்க கண்ணுல தெரியும்... அழகிய தமிழ் மகன் படத்துல போய் நாம யாருடா அந்த அழகிய தமிழ் மகன் இங்கன்னு தேடுன மாதிரி இங்கயும் போயி என்னடா புலின்னாய்ங்க இங்க ஒரு எறுமை கண்ணுக்குட்டி இங்கயும் அங்கயும் ஓடிகிட்டு இருக்குன்னு பாக்க வேண்டியிருக்கு. அதுலயும் பாருங்க அந்தாளு என்னானா நெப்போலியன விட 4 அடி அதிக ஒயரமா இருக்காரு ஆனா பேரு "குட்டி" புலி... மனசாட்சி இருக்காவே உங்களுக்கெல்லாம்...

ட்ரெயிலர் போடுறதுல நம்ம சன் பிக்சர்ஸ அடிச்சிக்க ஆளே கெடையாது... இல்லைன்னா இம்புட்டு பயலுகளையும் இத்தனை நாளா ஏமாத்தி இத்தனை படத்த ரிலீஸ் பண்ணிற முடியுமா? ட்ரெயிலர்ல பாக்கும்போது எதோ ஒரு அருமையான கிராமத்து ஆக்சன் + காதல் கதை போலருக்கு... இன்னிக்கு செம ஆக்சன் ப்ளாக்கு மாட்டிருக்குடோய்ன்னு பாத்தா அவிய்ங்கதான் நம்மள ஆக்சன் ப்ளாக்கா யூஸ் பண்ணிக்கிட்டாய்ங்க.. நேத்து வரைக்கும் இந்த சசி குமாரு நல்லாத்தானய்யா இருந்தாரு. எடுத்த 5 படத்துலயும் போராளி, ஈசன் படங்கள் below average னனாலும் எதோ வித்யாசமான ஒரு படம் பாத்த feel இருக்கும். ஆனா குட்டிப்புலி... ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்... கரடியின் கண்கள்......

ஆரம்பத்துல ஒரு அம்மா ஒரு ஊருக்குள்ள தொடைப்பம் வித்துகிட்டு வர்றப்போ சீட்டாடிகிட்டு இருக்க ஒரு கும்பல் அவங்கள கொஞ்சம் அசிங்கமா கிண்டல் பண்ணிடுறாங்க.. உடனே அந்த அம்மா அதோட தெருகாரங்கட்ட சொல்ல... "எலேய் நம்ம மேட்டுத்தெரு பொண்ண கிண்டல் பண்ணவன செய்யாம விடக்கூடாதுடா... "ன்னு உடனே அவன கொலை பண்ண ஒரு நாலு பேரு கோயில்ல சத்தியம் பண்ணிட்டு கெளம்புறாங்க... டேய் இப்ப என்னடா நடந்துச்சி... ஒரு புறாவுக்கு போரா... பெரிய அக்கப்போராக  அல்லவா இருக்கிறது... 

ஏண்டா கிண்டல் பண்ணதுக்கெல்லாம் உங்க ஊர்ல கொல்லுவீங்களாடா.. அவன பழி வாங்கனும்னா போய் ஒரு கைய வெட்டுங்க... காலை ஒடைங்க... கொல்லுற அளவு என்னப்பா நடந்துச்சி...  உடனே அந்த அசிங்கமா பேசுன நாய கொல்ல கெளம்புறாய்ங்க. அதுவும் சும்மா இல்லை அரவான் படத்துல ப்ளான் பண்ணி கொள்ளையடிக்கிற போற மாதிரி போறீங்க... இதுல பெரிய காமெடி  என்னன்னா கிண்டல் பண்ணவன் மொத சீன்ல தெரு முக்குல உக்காந்து மூணு சீட்டு ஆடிகிட்டு இருப்பான். ஆனா அடுத்த சீன்ல இவங்க அவன் ஒரு பல காவலாளிகள் இருக்க பங்களாக்குள்ள வச்சி கொல்றாய்ங்க... என்னப்பா
நீங்களும் உங்க சீனும். அவன ஓரமா ஒரு சந்து பக்கம் கூப்டு கழுத்தறுத்துருந்தாலும் நல்லாருந்துருக்கும்,
இந்த வீரப்போர்ல ஒருத்தர் உயிர விட, அவர மேட்டுத்தெருவே சாமியா கும்புடுது..

அவரோட பையந்தேன் நம்ம சசி.. அவருக்கு ஒரு இண்ட்ரோ வச்சிருக்காய்ங்க பாருங்க.. ஒருபய கெடையாது அடிச்சிக்கிறதுக்கு. யாருமே ஓட்டமுடியாத சைக்கிள்ல ரெண்டு கையயும் விட்டுட்டு "ஈஈஈஈஈஈஈஈ"  ன்னு இளிச்சா மாதிரி நம்மள நோக்கி வர்றாரு.. இத  பாத்துட்டு நா கூட இவரு படத்துல  சர்கஸ் காமிக்கிற கேரக்டர்ல நடிச்சிருக்காரு போலன்னு நெனைச்சிட்டேன்... படம் ஆரம்பிச்சதுலருந்து வெறும் மொக்கை மொக்கை காமெடியா பண்ணிக்கிட்டு திரியிறாரு. இதுக்கு நடுவுல அப்பப்போ "தாய்க்கு ஒரு ஆபத்துன்னா ஆம்புலன்ஸ கூப்புடுவேன்.. தாய் நாட்டுக்கொரு ஆபத்துன்னா நானே ஓடுவேன்" மாதிரி "பொம்பளை நெனைச்சாதாண்டா நாமெல்லாம் ஆம்பள" ன்னு லேடீஸ கவர் பண்ற மாதிரி வசனம் பேசிட்டு திரியிறாரு.


வழக்கமான தமிழ் சினிமா ஹீரோக்கள் மாதிரியே இவரும் கல்யாணம் வேண்டாம்னு அடம் புடிக்க அவங்க அம்மா சரண்யா கல்யாணம் பண்ணிக்க சொல்லி அடம் புடிக்கிறாங்க... இந்த கேப்புலதான் நம்ம டார்லிங் லஷ்மி மேனன் அதே தெருவுக்கு குடி வருது... கும்கிய கம்பேர் பண்ணும்போது இந்த படத்துல அழகு கொஞ்சம் கம்மிதான். லக்ஷ்மி மேனன் வீட்டுகு பீரோ எறக்கி வக்கப்போற நம்ம கரடி சார பாத்ததுமே அதுக்கு காதல் லைட்டா  எட்டிப்பாக்குது.. என்னடா இவன் இந்தாள கரடி கரடின்னு சொல்றானேன்னு என்னை பாத்து வெறிக்காதீங்க.. சாதாரணமா விலங்குகளுக்கு தான் உடம்பு பூர முடியாவும் கண்ணு மட்டும் இல்லாமயும் இருக்கும்.. இந்த படத்துல சசிகுமாரும் அப்புடித்தான் இருக்காரு.. மூஞ்சி எங்கடா இருக்கு.? இருக்குன்னு எழுதிபோடுங்கடா...

ஒரு தடவ ஒரு குரூப் சம்பந்தமே இல்லாம (இனிமே சம்பந்த படுத்திக்குங்க) புலிவேஷம் போட்டுகிட்டு  ரெண்டு வாலோட மேட்டுத்தெருவுக்குள்ள ஆடிட்டு வர கலவரம் வந்துருது. சிலம்பு போட்டி வக்கிறாங்க மேட்டுத்தெருவுலருந்து ஒரு பெருசும், ஒரு ஸ்கூல் பையனும் கம்பு சுத்தி அசத்துறாங்க. அப்புறம்  வர்றாரு தலைவரு.. "பெருசாட்டம் பாத்த.. சிறுசாட்டம் பாத்த... இப்போ புலியாட்டம் பாக்குறியான்னு கம்பெடுத்தவுடனே பிண்ணி பெடலெடுக்கப் போறாருடோய்ன்னு நெனைப்போம்.. அதான் இல்லை... கோவில் படத்துல வடிவேலு கம்ப நடுவுல நட்டு வச்சி சுத்துன மாதிரி நம்மாளு கம்புசுத்தும்போது
கால காமிக்கிறாய்ங்க... பின்னாடிருந்து முதுக காமிக்கிறாய்ங்க... டேய் கம்பு எங்கடா... சரி போய் தொலைங்க...


அப்புறம் நம்மாளுக்கு ஒரு மேனரிசம் வேற... "வா  வா வா" ன்னு ஒரு டயலாக்கு... சரி இத ஃபைட்டுல வில்லன பாத்து யூஸ் பண்ணா ஓக்கே... இப்ப பாருங்க... ஒரு குடிசை தீப்புடிச்சி எரிஞ்சிகிட்டு இருக்கு.. உள்ள ஒரு  அம்மா தீயில எரிஞ்சி சத்தம் போட்டுக்கிட்டு இருக்கு. உடனே மேலேருந்து குதிச்சி உள்ள போயி அதுக்கிட்ட நின்னு "வா வா வா வா வா" ன்னு எதோ டவுண் பஸ்ஸ ரிவர்ஸ் எடுக்குற மாதிரி கத்திக்கிட்டு இருக்காரு.. காப்பாத்த போனாமா படக்குன்னு காப்பாத்திட்டு வந்தமான்னு இல்லை.

பலபேர் கூடியிருக்குற மார்க்கெட்டுல ஒருத்தர கொலைபண்ற தமிழ்சினிமாவின் பாரம்பரிய வில்லன் ஒருத்தர் இருக்காரு. ஆளு செம கெத்து... அவரோடவும் சம்பந்தமே இல்லாத குட்டிப்புலி சம்பந்தப் படுத்திக்கிறாரு. எதுக்கா? படத்துல ஃபைட்டு வேணாமா? அதுக்கு தான்.. இந்த சைடு  கேப்புல லக்ஷ்மி மேனன் கூட ரொமாண்ஸ் வேற ஓடிக்கிட்டு இருக்கு. சசிகுமார்- லக்ஷ்மிமேனன் காம்பினேஷன பத்தி நா சொல்லலியே... சும்மா சக்கரைப்பொங்கலுக்கு வடைகறி மாதிரி அப்புடி ஒரு ப்ரமாதமான காம்பினேசன். அருவைக்கு இருக்குறவிங்க பத்தாதுன்னு காலெஜ் ஸ்டூடண்ஸ்னு ஒரு  நாலு பயலுகள போட்டு இன்னும் அருத்து கொண்ணுருக்காய்ங்க.

இன்னொரு கொடுமையான விஷயம் மியூசிக்கு... "அருவாக்காரன்... அழகன் பேரன்" பாட்ட தவற (அழகன் பேரன் - நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹானர்) மத்த பாட்டெல்லாம் கப்பி. படத்துக்கு BGM புதுசா எதுவும் போடல... பழைய பாட்டுகள சில பல உருவி சுப்ரமணியபுரம் மாதிரி போட்டு காத கிழிச்சிட்டாய்ங்க.

எப்பவும் கைலிய கட்டி மடிச்சி விட்டுகிட்டு "பாலிருக்கீ... பலமிருக்கீ" காமெடில வர்ற கறிக்கடை பாய் மாதிரி திரிஞ்சிகிட்டு இருக்க சசிகுமாரு, திடீர்னு அவங்க அம்மா சரண்யா வாங்கி குடுத்த புது ட்ரெஸ போட்டுகிட்டு ஸ்பைக்ஸ் எல்லாம் வச்சிகிட்டு "yo yo" பாய் ஆயிடுறாரு. ஆயிட்டு சும்மா இருக்காரா.. சுரேஷ் பீட்டர்ஸோட "அக்கா மக அககா மக எனக்கொருத்தி இருந்தாடா " பாட்டுக்கு மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஆடி பின்னி பெடலெடுக்குறாரு. படத்துல எனக்கு புடிச்சதே இந்த மூணு நிமிசம் மட்டும் தான். முனைவர் கு.ஞானசம்பந்தம் ஒரே சீன்ல வந்தாலும் செம.

என்னங்க தூக்கம் வருதா... இதோ க்ளைமாக்ஸ் வந்துருச்சி. வழக்கமா க்ளைமாக்ஸ்னா யாரையாச்சும் கொல்லனும். இந்தப் படத்துல சாவப்பொறது யாருன்னு தெரிஞ்சிக்க ரொம்ப ஆவலா இருக்கீங்களா? நீங்க செய்ய வேண்டியதெல்லாம் ஓண்ணே ஒண்ணு தான். உங்கள் வீட்டின் அருகில் குட்டிப்புலி ஓடும் திரையரங்கத்துக்கு போய் படம் பாருங்க. என்சாய் பண்ணூங்க. படத்தோட முடிவுல உங்களுக்காக ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்துகிட்டு இருக்கு. (குட்டிப்புலி க்ளைமாக்ஸ்ல கொல்லப்போறது உங்களத்தான்ன்னு நா சொல்லமாட்டேனே). பழைய சசிகுமாரின் தரமான படங்களின் எந்தவித தாக்கங்களும் இல்லாத இந்தப் படம் சன்பிக்சர்ஸால் வெளியிடப் படவேண்டிய அத்தனை தகுதிகளும் உடையது.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...