Wednesday, May 17, 2017

தலைவா... உன் எதிரிகளை நம்பி அரசியலுக்கு வா!!!


Share/Bookmark
விபரம் தெரிந்ததில் இருந்து ரஜினி ரசிகனாகஇருக்கிறேன்ஆனால் ஒரு முறை கூட அவர் அரசியலுக்குவரவேண்டும் என்றோதமிழ்நாட்டை ஆள வேண்டும் என்றோ நினைத்ததில்லைகாரணம் நம்மூர்அரசியல்வாதிகளின்  அரசியலைப் பார்த்த அனுவத்தில்தான்அரசியல்வாதி என்பவனுக்கு மனசாட்சி என்பதேஇருக்கக்கூடாதுசார்ந்திருக்கும் கட்சி என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு மாற்றுக் கருத்து கூறக்கூடாதுஎந்தப்பக்கம் புறண்டாவது முட்டுக்கொடுக்க வேண்டும்எதிர்கட்சிகள் என்பவர்கள் தவறு மட்டுமே செய்பவர்கள் எனஎண்ணவேண்டும்பழகிய நண்பனே எதிர்கட்சியில் இருந்தாலும் தரம் தாழ்த்திப் பேசவேண்டும்இன்னும் பலவிஷயங்களை அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்அதற்கெல்லாம் இவர் சரிப்பட்டு வரமாட்டார்என்ற எண்ணம் எனக்கு எப்பொழுதுமே உண்டுஇப்போதும் கூட.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது உண்மையிலேயே இவர் இப்பொழுதுஅரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறதுஇப்போது கூட அவர் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்ற ஆசையால் அல்லகடந்த இரண்டு நாட்களாக நம்மூர் அரசியல்வாதிகளிடமும்அவர்களுக்குமுட்டுக்கொடுக்கும் அள்ளு சில்லுகளுக்கும் கிளம்பியிருக்கிறதே ஒரு பயம்… அதை இன்னும் கொஞ்ச நாள்நன்றாகப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறதுஅதற்காகத்தான்.

ஒருவனுக்கு ஏற்படும் பயத்தைபய உணர்வாகத்தான் வெளிப்படுத்த வேண்டும் என்றில்லைசிலர் கோபமாகவும்,சிலர் அழுகையாகவும்சிலர் ஏளமாகவும் வெளிப்படுத்துவர்அப்படி ஒன்றுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறதுரஜினியை ஏளனம் செய்வதாக நினைத்து அவர்களின் பயத்தை வெளிக்காட்டிக்கொண்டிருக்கின்றனர். பிடித்தவர்கள் புகழ்ந்தும் பிடிக்காதவர்கள் இகழ்ந்தும் பதிவிடுகிறார்களே தவிற ரஜினியை யாராலும் புறக்கணிக்க முடிவதில்லை. ”ரஜினியையெல்லாம் கண்டுகொள்ளக்கூடாது... அப்டியே விட்டுறனும்” என்று ஒருவர் பதிந்த பதிவில் கூட அவர் ரஜினியைப் பற்றித்தான் பேசியிருக்கிறார் என்பது அவருக்கு தெரியுமோ தெரியாதோ?

மற்றவர்கள் பேசுவதைப் போல அவர் அரசியல் பற்றி அடுக்கு மொழிகளில் அரைமணி நேரம் பேசவில்லை.நாற்பதைம்பதாண்டு கால அரசியல் வரலாற்றைப் புட்டு புட்டு வைக்கவில்லைகட்சி பற்றிப் பேசவில்லை.எதிர்காலத் திட்டங்கள் பற்றி பேசவில்லைஅவர் அந்த கூட்டத்தில் அரசியலைப் பற்றிப் பேசியது ஒரே ஒருநிமிடம்அதுவும் அரசியலில் அவர் நிலை என்ன என்பது பற்றி மட்டும்தான். ஆனால் அன்று லோக்கல் முதல்நேஷனல் சேனல்கள் வரை ப்ரேக்கிங் நியூஸ் அதுதான். மறுநாள் காலை அனைத்து செய்தித்தாள்களின் தலைப்புச் செய்தியும் அதுதான். இதுவே ரஜினி என்பவருக்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம்.

தலைவா.. நீ ஒரு நிமிடம் பேசிவிட்டுபலரின் தூக்கத்தைக் கலைத்துவிட்டு உன் பாட்டுக்கு வேலையைப் பார்க்கச்சென்றுவிட்டாய்பார்… பல நாட்கள் எங்கிருந்தார் என்று தெரியாதவரெல்லாம் நீ ஒருநிமிடம் பேசிய அரசியலுக்குஅரைமணி நேர அறிக்கை விடுகிறார்.

தலைவா.. நீ அரசியலுக்கு வா… தோற்றுப் போ… தவறே இல்லை.. இங்கு தோற்காத ஆளுமில்லைஉனக்கு அரசியல்தெரியாமல் தோற்றுப்போகலாம்.. சூது வாது தெரியாமல் தோற்கலாம்இங்கு 50 ஆண்டு காலம் அரசியல் அனுபவம்உள்ளவர்களையே பல தேர்தல்களில் முட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடச் செய்தவர்கள் நம் மக்கள்.. பலஆண்டுகளாக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பலரை சட்டமன்றம் எப்படி இருக்கும் என்றே பார்க்கவிடாதவர்கள் நம் மக்கள். ”ஒரே ஒரு முறை எங்களிடம் கொடுங்கள் அப்புறம் பாருங்கள்” என்று காலில் விழுந்தவர்களை எட்டி உதைத்தவர்கள் நம் மக்கள். அவர்களுக்கு முன்னால் நீ தோற்பது பெரிய விஷயமே அல்ல.

உன் துறையில் நீ தோற்றால்தான் நீ வெட்கப்படவோ வேதனைப் படவோ வேண்டும்உன் துறையில் என்றுமேநீதான் ராஜா.. உன் துறையில் நீ சாதிக்காத்து இன்னும் என்ன இருக்கிறது? ”தமிழ்” என்ற ஒன்றைவைத்துக்கொண்டுஊரை ஏமாற்றி குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில்பிறப்பால் வேறு மாநிலத்தோனாக இருந்தாலும், வெளிநாடுகளில் தமிழனுக்கு அடையாளமாய் இருப்பவன் நீ.ஜப்பான் மக்களைக் கூட தமிழ் கற்கச் செய்தவன் நீமலேசிய அதிபரை வீடு தேடி வரவைத்தவன் நீஉன்துறையில் நீ சாதித்ததைப் போல்அரசியலில் இங்கு எவனும் சாதிக்கவில்லை.

உன்னை பயந்தாங்கோளி என்கிறார்கள்.. அவர்களின் தைரியத்தைப் பற்றி மக்களுக்கு நன்றாகவே தெரியும்.தனியாகத் தேர்தலைச் சந்திக்கத் துப்பில்லாமல் கூட்டணிக்காக எவன் காலிலும் விழும்மகா தைரியசாலிகள்தான்உன்னை பயந்தாங்கோளி என்கிறார்கள்மக்களின் வாக்குகளைப் பெற ஜாதியின் துணையை கூடவே அழைத்துச்செல்லும் மாபெரும் தைரியசாலிகள்தான் உன்னை பயந்தாக்கோளி என்கிறார்கள்.

உனக்கு நிர்வாகத் திறமை இல்லை என்பார்கள்.. கூட்டத்தை கும்பிடு போட வைக்கும் நிர்வாகத் திறமையோ, கூண்டோடு எம்.எல்.ஏக்களை அடைத்து வைக்கும் நிர்வாகத் திறமையோ நிச்சயமாக உன்னிடம் இல்லை. தெர்மோக்கோலை வைத்து ஏரியை மூடிய புத்திசாலிகளை விடவோ, ஜெயிலில் இருக்கும் குற்றவாளிகளுக்காக தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறி வெட்கமில்லாமல் திரியும் மானஸ்தர்களை விடவோ நீ குறைவான அரசியல் எதுவும் செய்துவிடப் போவதில்லை.

மரம் வெட்டி அரசியல் செய்தவர்களுக்கும், பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கும் உன்னுடைய கள்ளங்கபடமற்ற நேர்மையான பேச்சு கலக்கத்தை தான் உருவாக்கியிருக்கிறது. கேட்பாரற்றுக் கிடப்பவர்கள் உன்னை வைத்து முகவரி தேடிக்கொள்ள முயல்கிறார்கள். உனக்கு அரசியல் சரிப்படாது என்கிறார்கள்.  நீ அரசியலுக்கு வந்தால் அவர்களுக்கு சரிப்படாதோ என்னவோ?

அரசியலில் நீ இல்லாவிட்டாலும் கடந்த 20 வருடங்களாக உன் பெயர் அடிபடாமல் எந்தத் தேர்தலுமே இங்கு நடைபெறவில்லை. உன்னுடைய ஆதரவை நாடாத கட்சியும் இல்லை.

நிழலையும் நிஜத்தையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரிந்தவன் நீ. திரையில் பேசுவதைப் போல வீரவசனம் பேசி கட்சி ஆரம்பித்தவர்களுக்கு இன்று சின்னமே இல்லை. மக்கள் செல்வாக்கைப் பயன்படுத்தத் தெரியாதவன் என உன்னை சிலாகித்துவிட்டு உனக்கு முன் அரசியலில் இறங்கிய மெகா ஸ்டார்கள் கடையை காலி செய்துவிட்டு மீண்டும் அரிதாரம் பூசிய கதைகளை உலகறியும்.

எதை எப்போது செய்யவேண்டும் என்பது உனக்குத் தெரியும். உன் மனதில் இருக்கும் ஆண்டவனுக்குத் தெரியும். இரண்டு நிமிடப் பேச்சுக்கே பதற்றத்தில் ஆங்காங்கு நிறைய உளரல்கள் கேட்க ஆரம்பித்து விட்டது. அப்படியானால் நீ வருகிறாய் என்றால் அவர்களின் புலம்பல் எப்படி இருக்கும் எனப் பார்க்க பேராவலாக உள்ளது.

தலைவா… நீ அரசியலுக்கு வா… உன்னுடைய ரசிகர்களை நம்பி வரவேண்டாம்உன் எதிரிகளை நம்பி வா…. நீநடிகனாக இருக்கும்போதே “என்ன செய்தாய் என்ன செய்தாய்” என்று உரிமையோடு கேட்பவர்கள் அவர்கள்.. நாளெல்லாம் உன்னைக் திட்டித் தீர்த்துவிட்டு உன் படத்தின் முதல் காட்சிக்கு வந்து முதலில் நிற்பவர்கள் அவர்கள்.நீ என்ன செய்து கிழிக்கிறாய் என்று பார்ப்பதற்காவது அவர்கள் நிச்சயம் உனக்குத்தான் வாக்களிக்கப்போகிறார்கள்..!!!

நீ வெற்றி பெற்றால் வாழ்த்தும் தகுதி பலருக்கு உண்டு. ஆனால் தோல்வியடைந்தால் ஏளனம் செய்யும் தகுதி எவனுக்கும் இல்லை. ஏனென்றால் அரசியலில் தோற்காதவனே இல்லை!!!

Saturday, May 13, 2017

பாகுபலி – முதல் முறை கவனிக்கத் தவறவிட்ட சில விஷயங்கள்!!!


Share/Bookmark
முதல் முறை ரஜினி இல்லாத ஒரு படத்தை மூன்று முறை திரையரங்கில் பார்த்திருக்கிறேன். முதல் முறை பார்த்த பொழுது ப்ரம்மிப்பில்  வாய் பிளந்து இருந்துவிட்டு, கவனிக்காத சில விஷயங்களை அடுத்தடுத்த முறை  கவனித்தேன். நிறைய பேர் முதல் முறையே இவற்றைக் கவனித்திருக்கலாம்.

1. படம் முழுக்க ஒரு பொதுவான விஷயம் என்னவென்றால், எந்த ஒரு காட்சியையும் ஆரம்பிக்கும் பொழுதும், அக்காட்சியின் தொடர்ச்சியில் என்னெவெல்லாம் உபயோகப்படப் போகிறதோ அத்தனையும் காண்பிக்கப்படுகிறது. உதாரணமாக குந்தல தேசத்தில் நடக்கும் சண்டைக்கு முன், டாப் ஆங்கிளில் குந்தல தேசம் முழுவதையும் ஒரு overview காண்பிக்கிறார்கள். அதில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், அந்த மிகப்பெரிய சுவர், சுவருக்கு வெளியே பள்ளமான ஒரு பாதை, சுவற்றின் அருகில் மிக உயரமான மரங்கள் என அத்தனையும் முன்னரே காண்பிக்கின்றனர்.

அதே போல் பாகுபலி கொல்லப்படுவதற்கு முன்னர், சத்யராஜூம், பாகுபலியும் பேசிக்கொல்லும் காட்சியின் பின் பகுதியில் பாராங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்ட ஒரு இரும்பு தொட்டி போல் ஒன்று காட்டப்படும். பின்னர் சண்டை நடக்கும்போது அந்த கற்களைக் கீழிறாக்கித்தான் கொன்றவர்களை மரத்தில் அடுக்கி அந்த மரத்தை மேலேற்றுவார்.

பனைமரத்தை வளைத்து உள்ளே செல்லும் காட்சிக்கு முன்னதாக, க்ளைமாக்ஸ் சண்டை நடக்கும்போதே அரண்மனைக்கு அருகே நிறைய பனைமரங்கள் இருப்பதுபோல ஒரு காட்சி காண்பிக்கப்படும்.

2. தேவசேனா ஷிவுவையும், குமாரவர்மனையும் அழைத்துக்கொண்டு வேட்டைக்கு செல்லும்போது நீல வண்ண அம்புகள் குமாரவர்மனுக்கும், ஊதா வர்ண அம்புகள் தேவ சேனாவுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும். அங்கு மட்டுமல்ல.. முதல் பாதியில் தேவசேனா அணிந்திருக்கும் ஆடைகள் அனைத்திலுமே ஊதா நிறம் கலந்திருக்கும்.

3. தேவசேனா கண்ணன் பூஜையில் பாடல் பாடும்போது, கண்ணனுக்கு என்னென்ன செய்கிறாரோ அத்தனையும் ப்ரபாஸூக்கு நடக்கும். தேவசேனா கண்ணன் தலையில் பூக்களைக் கொட்டும்போது, ஒரு செடியிலிருந்து ப்ரபாஸ் மேல் பூக்கள் உதிரும். கண்ணனுக்கு பன்னீர் தெளிக்கும்போது ஒரு புறா தண்ணீரை ப்ரபாஸ் மேல் தெளிக்கும். கண்ணனுக்கு தீபாராதனை காட்டும்போது அருகிலுள்ள தீப்பந்தத்திலிருந்து ப்ரபாஸூக்கு முகத்தில் அனல் அடிக்கும்.

4.அனுஷ்காவின் குந்தல தேசத்தின் சின்னம் அண்ணம். குந்தல தேசத்து அரண்மனையின் பெரும்பாலான இடங்களில் இந்த அண்ணப்பறவையின் சிலைகள் காண்பிக்கப்படும். அதனால்தான் அவர்கள் குந்தலதேசத்திலிருந்து பயணிக்கும் கப்பல் அண்ணப்பறவை போல்  இருக்கும். அதே கப்பலில் மகிழ்மதிக்குள் நுழையும்போது அந்தக் கப்பலில் இருக்கும் அண்ணப்பறவை சின்னக்கொடி யானைப் பாறையின் மேல் மோதி உடையும்.

5. இடைவேளையில் பாகுபலி படைத்தலைவாக பங்கேற்றதும், மக்கள் பாகு..பலி வாழ்க.. என்ற ஒலியை எலுப்ப, அத்தனை படை வீரர்களும் தரையிலும் கேடையத்திலும் ஒரே மாதிரி ஒலியை எழுப்ப கீழிருக்கும் கற்கள், பல்வாள் தேவனின் நிழற்குடை என அனைத்தும் அதிர்விற்குள்ளாகும். இதை நகைப்புள்ளாக்கிய ஒரு சில பதிவுகளைக் கண்டேன். உண்மையில் இது resonant frequency என்னும் கான்செப்ட். ஒரே அதிர்வலையில் ( frequency) ஒலிகள் எலுப்பப்படும்போது அதன்  ஆற்றல் மிக அதிகமாக இருக்கும். (விபரங்களுக்கு resonant frequency  பற்றி படிக்கவும். பாலங்களில் march fast செய்தால் விரிசல் விழும் என்பதற்கு இதுதான் காரணம். இதே கான்செப்ட்டைத்தான் ”கேமராமேன் கங்கதோ ராம்பாபு”வின் க்ளைமாக்ஸ் காட்சிக்கு உபயோகப்படுத்திருப்பார்கள். ஆனால் அது இன்னும் நகைப்புக்கு உள்ளானது. காஸி திரைப்படத்தில் நீர்மூழ்கிக் கப்பலுக்கு வெளியே இருக்கும் ஒரு பாமை வெடிக்க வைக்க அனைவரும் சேர்ந்து தேசிய கீதம் பாடுவதும் இதே கான்செப்ட் தான்.

6. பாகுபலி கொல்லப்பட்ட அதே இடத்தில் நடக்கும் சண்டையில் தான் கட்டப்பா அவர் மகன் மகேந்திர பாகுபலியைச் சந்திப்பார்.

7. அனுஷ்காவை கட்டி வைத்திருந்த சங்கிலியை கையில் எடுத்து இதில் தேவசேனா இல்லாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என பல்வாள் தேவன் கூறுவார்கடைசியில் ப்ரபாஸ் கையில் தேவசேனாவைக் கட்டி வைத்திருந்த அதே சங்கிலியை சுற்றித்தான் பல்வாள் தேவனை அடித்துக் கொல்வார்.

8. அமரேந்திர பாகுபலி கட்டப்பாவை சிறைசேதம் செய்யக் கொண்டு செல்லும் செய்தி கேள்விப்பட்டு அவரைக் காப்பாற்றக் கிளம்பும்போது, தேவசேனா மகிழ்மதியின் சின்னம் பொறிக்கப்பட்ட பாகுபலியின் வாளை எடுத்துக் கொடுத்தனுப்புவார்… பாகுபலி கட்டப்பாவால்  குத்தப்பட்ட பிறகு சாகும் தருவாயில் அந்த வாளில் கைவைத்தபடியே உயிர் நீப்பார். ராணாவின் மகன் பத்ராவின் தலையை மகேந்திர பாகுபலி கட்டப்பா வைத்திருக்கும் அதே வாளால்தான் துண்டிப்பான். க்ளைமாக்ஸில் பல்வாள் தேவனை, தீயிலிடுவதற்கு முன் அதே வாளால்தான் காலில் குத்துவார். கீழே இருவருக்கும் இடையே இருப்பதுதான் அந்த வாள்.
9. முதல் காட்சியில் 26 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கூலி வழித்திருவிழாவில் மகிழ்மதியைத் தீமையிலிருந்து காக்க, அரசகுடும்ப மருமகள் தீச்சட்டையைத் சுமந்து சென்று காட்டில் இருக்கும் கூலிக் கோயிலுக்குச் என்று அரக்கனை அழிப்பது மரபு எனக் கூறப்படும். முதல் காட்சியில் அரச குடும்ப மருமகளான ரம்யா கிருஷ்ணன் தீச்சட்டி சுமந்து  அந்த நெருப்பில் ப்ரம்மாண்டமான அரக்கன் அழிக்கப்படுவான். அதே போல் அடுத்த இருபத்து ஆறு ஆண்டுகள் கழித்து அதே அரச குல மருமகளான தேவசேனா, பல்வாள் தேவன் என்னும் அரக்கனை அழிக்க தீச்சட்டி சுமந்து அவனை எரித்துக் கொள்வாள். 26 ஆண்டுகள் என்று குத்துமதிப்பாகவெல்லாம் கூறவில்லை. முதல் பாகத்தில் அனுஷ்கா 25 ஆண்டுகளாக சங்கிலியில் பிணைக்கப்பட்டிருப்பதாக கட்டப்பா கூறுவார். (verified)

10. படம் முடிந்த பிறகு உருட்டி விடப்படும் பல்வாள்தேவனின் தங்கத்திலான தலை முதல் பாகத்தில் ஷிவு அருவியில் கொண்டு வைக்கும் சிவலிங்கத்திடம் சென்று சேர்வதை கடைசிவரை திரையரங்கில் உட்கார்ந்து பார்த்தவர்கள் கவனித்திருக்கலாம். 

இன்னும் எத்தனையோ இருக்கலாம்.. அடுத்த முறை பார்த்த பிறகு புதிதாக எதாவது இருந்தால் பதிகிறேன் :-) 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...