Saturday, December 31, 2011

கவுண்டமணி தொகுத்து வழங்கும் சிறந்த படங்கள் - 2011


Share/Bookmark
கவுண்டர் வீட்டுல காஃபி குடிச்சிகிட்டே கோவை சரளாகிட்ட பேசிகிட்டு இருக்காரு

"இத பார் செகப்பி இன்னிக்கு புது வருசம் பொறக்குது. இன்னிக்கு முழுசும் என் காதுல கேக்குறதெல்லாம் நல்ல வார்த்தையாவே இருக்கனும்... நல்ல விசயத்த மட்டும் தான் நா  பாக்கனும்"ண்ணு சொல்லி முடிக்கிறதுக்குள்ள

 "அண்ணே...." ன்னு செந்தில் கையில ஒரு chair ரோட நிக்கிறாரு...

கவுண்டர் :
"அய்யோ... எத இன்னிக்கு முழுசும் நா பாக்ககூடாதுன்னு நெனச்சனோ அது காலங்காத்தால என் கண்ணு முன்னாடி வந்து நின்னுருச்சி... புது வருசம்... ஓகோன்னு தான்"

செந்தில் : "எண்ணணே காப்பி குடிக்கிறீங்களா?"

கவுண்டர் : "இல்ல பினாயில்ல சக்கரை போட்டு குடிச்சிகிட்டு இருக்கேன்... வேணுமா?"

செந்தில் : "சக்கரை போட்டுருக்குள்ள.. அப்ப குடுங்க"

கவுண்டர் : "அதுசரி...அன்னிக்கு திங்கிறதுக்கு எதுவும் இல்லண்ணு எங்க வீட்டு ஆட்டு கல்லுல பாதிய கடிச்சி திண்ணுட்டு போனவந்தான நீ... பினாயிலயா குடிக்கமாட்ட.. ஆமா அது என்னடா கையில் chair oda வந்துருக்க?"

செந்தில் : "எங்க வீட்டுல கரண்டு போயிருச்சிண்ணே"

கவுண்டர் : "அதுக்கு எங்க வீட்டுல chair போட்டு உக்காந்து காத்து வாங்கிட்டு போகலாம்னு வந்தியாக்கும்..விட்டேன்னா பல்லு தெரிச்சிரும்...எங்க வீட்டுலயும் கரண்ட் இல்ல ஓடிப்போயிரு"

செந்தில் : "அட அது இல்லைண்ணே... எப்பவும் புது வருசத்தண்ணிக்கு டிவில டாப் 10 போடுவாங்க... இந்த தடவ பாக்க முடியல..அதான் உங்கள டாப் 10 போட சொல்லி பாத்துட்டு போலாம்னு வந்தேன்"

கவுண்டர் : எண்டா உனக்கு டாப் 10 சொல்லி உன்ன entertain பண்றதுக்கு நா என்ன கேபிள்  டிவியா? போடா வெஸ்டர்ன் டாய்லெட் மண்டையா..."

செந்தில் : அண்ணே.. நா கோவப்பட்டு சாபம் குடுத்தா பலிக்கும்னு உங்களுக்கு தெரியும்ல... அதுவும் இன்னிக்கு புது வருசம் வேற.. என்ன கோவப்படுத்துனீங்க... சாபம் விட்டுருவேன்"

கவுண்டர் :
அய்யோ... குட்டிமா நா சும்மா தமாசுக்கு சொன்னேன். நீ கோச்சிக்காத... உனக்கு என்ன இப்ப டாப் 10 சொல்லனும் அவளவுதானே.. இதோ சொல்றேன் (மனதிற்குள் : பிசாசுங்களுக்கே பயப்படாத நா இந்த காட்டு பன்னிக்கு பயப்பட வேண்டியிருக்கே. செரி சமாளிப்போம்...)அந்த
chair ah இப்புடி போடு....

செந்தில் : ஹ்ம்ம்..அப்புடி வாங்க வழிக்கு.. அண்ணி இப்புடி வந்து உக்காருங்க.. அண்ணனோட டாப் 10 பாப்போம்.. அண்ணேன்.. நல்லா கால் மேல கால் போட்டு உக்காந்துகிட்டு சொல்லுங்க. அப்பதான் டிவில பாக்குற மாதிரியே இருக்கும்..

கவுண்டர் :
ஏன் கால் மேல கை போட்டு சொன்னா பாக்க மாட்டியா... ரொம்ம பேசுன உன் வாய் மேல தான் கால போடுவேன் மூடிட்டு உக்காந்து பாருடா

எல்லாருக்கும் வணக்கமுங்க.. இந்த காட்டு பன்னி சொன்னதால நா இந்த டாப் 10 தொகுத்து வழங்கலாம்னு வந்துருக்கேனுங்க...

10. இந்த பத்தாவது எடத்து புடிச்சிருக்க படம் பேரு வக்காளி... த ச்சி... போராளி. நம்ம சசிகுமார் நடிச்சி சமுத்திரக்கணி எடுத்ததுங்க.. இடைவேளை வரைக்கும் படம் சூப்பரோ சூப்பர். ஆனா அதுக்கப்புறம் கொஞ்சம் தம் கட்டனும்ங்க.. இல்லண்னா இன்னும் கூட முன்னாடி வந்துருக்கும்ங்க




9. ஒன்பதாவது எடத்த புடிச்சிருக்க படம் பயணம்.. ஒரு ஏரோ ப்ளேன நாலு அஞ்சி உல்மா போட்ட தீவிரவாதிங்க கடத்திருராங்க.. அத நல்ல குஜால்டியா எடுத்துருந்தாங்க... நா கூட அந்த பேசஞ்சர காப்பத்த நம்ம கேப்டன் வருவாருன்னு ஒரு ஆவலோட இருந்தேன்... ஆனா லோக்கல் பாய் நாகார்ஜூனே வந்து காப்பாத்திட்டான்.. i'm upset



8.எட்டாவது எடத்துல இருக்குறது தெயவ திருமகள்.. இந்த படத்த பாத்துட்டு என் செகப்பி தேம்பி தேம்பி அழுக.... அவள பாத்துட்டு நா அழுக.... எங்க ரெண்டு பேர பாத்துட்டு தியேட்டரே எதுக்கு அழறோம்னு தெரியாமயே அழுதுகிட்டு இருந்தாங்கப்பா... அந்த எடத்துலயும் இந்த காட்டு பன்னி சுண்டல்ல உப்பு இல்லைன்னு தியேட்டர் காரண்ட சண்ட போட்டுகிட்டு இருந்தான்யா



7. எழாவது எடத்துல இருக்க படம்... கல்பனா...

(செந்தில்: அய்யோ அண்ணே.. அது காஞ்சனா)

அட ரெண்டும் ஒண்ணுதானப்பா.. அதுவும் லேடீஸ் பேரு தான்... இதுவும் லேடீஸ் பேருதான்... கொழப்புறானுகளே... இந்த படத்துல ஒரு பேயி வந்து பயமுறுத்திகிட்டே இருந்துச்சி... எல்லாரும் தியேட்டர்ல பயந்துட்டாங்க... ஆனா நா பயப்படல.. ஏன் தெரியுமா..அதே மூஞ்ச நா தினமும்  பாத்து பழகிட்டேன்...

(செந்தில்: அப்புடியா யாருண்ணே அது)

கண்ணாடில போய் பார்ரா.. யாருண்ணு தெரியும்...




6. ஆறாவது எடத்துல இருக்க படம் கோ.

(செந்தில்: கோ கோ கோ கோ கோலீகே பீச்சே கியாஹே... கோலீகே பீச்சே)

கவுண்டர் :  ஆமா கோலீகே பீச்சே க்யாகே... ட்ராவிட்கே நீச்சே கியாகே
நீங்க எல்லாம் அப்புடியே ஒரு பிரேக் பொயிட்டு வாங்க.. நா இந்த நாய நாலு மிதி மிதிச்சிட்டு
வந்துடுறேன்...


 
5. எல்லாம் ப்ரேக் பொயிட்டு வந்துருப்பீங்கன்னு நெனக்கிறேன்.. இப்ப இந்த அஞ்சாவது எடத்த கடிச்சிருக்கது ச்சி புடிச்சிருக்கது சிறுத்தை... நம்ம கார்த்தியும் சந்தானமும் காமெடில கலக்கலோ கலக்கல்.. 2.30 அவர்ஸ் புல் எஞ்சாய்மெண்ட்.. ஆனா இந்த சந்தானம் நாயி  நம்மளயே பாலோ பண்ணிகிட்டு  இருக்கு... அதுக்கு ஒரு நாளைக்கு இருக்கு..




4. நாலாவது எடத்துல இருக்க படம் எங்கேயும் எப்போதும்.. நல்லா போயிகிட்டு இருந்த படத்துல ரெண்டு பஸ்ஸ மோதவச்சி பல பேர சாவடிச்சிடுறாங்க.. அதான் i'm கொஞ்சம் கடுப்பாயிட்டேன்,.... அந்த பஸ்ல இந்த நாய ஏத்தி அனுப்பிருக்கனும்... கொஞ்சம் மிஸ் ஆயிருச்சி இந்த படத்துக்கு விமர்சனம்னு இவன் எதோ எழுதிருக்கான்... முடிஞ்சா படிங்க.. இல்லண்ணா வெடிங்க..  கொஞ்சம் சங்கீதம் கொஞ்சம் சந்தோஷம்






3. மூணாவது எடத்துல இருக்க படம் மயக்கம் என்ன... தம்பி செல்வராகவன் அருமையா எடுத்துருந்தாரு... அந்த மூஞ்சிக்கு இந்த மாதிரி படம் தான் எடுக்க வரும்... இனிமே இந்த ஆயிரத்தில் ஒருவன் ஐயாயிரத்தில் ஒருவன்னு எதாவது ஆரம்பிச்சான் i'm டென்ஷனாயிருவேன்.



2. ரெண்டாவது எடத்த புடிச்சிருக்கதும் நம்ம தனுஷ் தம்பி படம் தான்... ஆடுகளம்.. இந்த  பருத்திவீரன் கார்த்தி மாதிரி மதுரை தமிழ் பேசி கொல்லாம,  கேக்குற மாதிரியான good மதுரை தமிழ் பேசிருந்தாரு. அதுவும் அந்த ஹீரோயின் டாப்ஸி.. ஆல் யங் கேர்ஸ்... ஐ லைக் இட்...



1. இப்போ நீங்க ஆவலோட எதிர்பாத்த முதல் இடம்... மங்காத்தா....

(செந்தில் : ஹை... 'தல' நடிச்ச படம்)

ஏன் மத்த எடத்துல எல்லாம் தலய கழட்டி வச்சிட்டு முண்டம் மட்டும் தான் நடிச்சிட்டுருக்கா... முனுசுபாலிட்டி வாயா...இந்த படத்துக்கு மொத எடம் குடுக்கலன்னா அதுக்கு சண்ட போடுறதுக்குன்னு சில பேரு காத்துக்கிட்டு இருப்பாய்ங்க.. எஞ்சாய்............... விமர்சனம்- Venkat & Yuvan's Game




கவுண்டர் : டேய் விஜய் மண்டையா... போதுமல்ல... அப்புடியே ஒடிப்போயிரு...

செந்தில் :
அண்ணேன் இன்னும் ஒண்ணே ஒண்ணு பண்ணனும்னே...

கவுண்டர் : என்ன?

செந்தில் : அப்புடியே டாப் 10 பாடல்களூம்சொல்லிட்டீங்கண்ணா நல்லாருக்கும்...

கவுண்டர் : இவ்வளவு தானா... இதோ இப்ப சொல்லிருவோம்... செகப்பி .. அந்த கதவ லைட்டா பொத்துனாப்புல சாத்து......

செந்தில்: ஆஆஆஆஆஆஆஆஆ!!!!!!!!!!!!

Thursday, December 29, 2011

கடுப்பேற்றிய படங்கள் -2011


Share/Bookmark
புத்தாண்டு வரப்போகுதுன்னு ஆளாலுக்கு டாப் 10 படங்கள், டாப் 10 ஹீரோயின்கள்னு கவுண்டவுன் போட ஆரம்பிச்சிட்டாங்க. சரி நாமளும் எதாவது கவுண்டவுன் போடலாமேன்னு தான் இந்த முடிவு. 2011ல நா எதிர்பாத்து, பாத்து கடுப்பான படங்களை பத்தின ஒரு பார்வை. இத படிச்சிட்டு நீங்க கடுப்பானா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

யுத்தம் செய்


மிஷ்கினின் முதல் மூண்று படங்கள் அவரின் மேல் ஒரு மதிப்பை ஏற்படுத்திருந்துச்சி. (வேற மொழியிலிருந்து படங்களை சுட்டிருந்தால் கூட). ஆனா யுத்தம் செய் பாத்தப்புறம் மொத்தமும் போயிருச்சி. தமிழ் படம் ஆங்கில படம் ரெண்டுத்துலருந்தும் கொஞ்ச கொஞ்ச சீன்ஸ சுட்டு படமாக்கியிருந்தாரு. சேரன் படத்துக்கு ஒரு பெரிய மைனஸ். நிறைய பேருக்கு இந்த படம் பிடிச்சிருந்தாலும் எனக்கு என்னவோ சுத்தமா புடிக்கல. இந்த படத்தை பற்றி எழுதிய இரண்டு விமர்சனங்கள்  யுத்தம் செய்- செத்துட்டோம் போய், புதிய யுத்தமல்ல

மாப்பிள்ளை



 படிக்காதவன் மாதிரியே தனுஷ், விவேக் & சுராஜ் காம்பினேஷன் பட்டைய கெளப்பும்னு நெனச்சிகிட்டு முதல்நாளே பார்த்த படம். ஒரிஜினல் வெர்ஷனோட 10% க்கு கூட இந்த படம் இல்லை. எதோ விவேக் இருந்ததால கொஞ்ச நேரம் தியேட்டர்ல உக்கார முடிஞ்சது

வேங்கை

ஹரி படங்கள் ஒரே மாதிரி இருக்கும்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் அவருக்கு நா மிகப்பெரிய fan. ஏன்னா அவரோட screenplay அவ்ளோ சூப்பரா இருக்கும். ஆனா "ஐயா" ன்னு 2005 ல சரத்குமார வச்சி எடுத்த அதே படத்த 2011 ல வேங்கைன்னு பேர வச்சி திரும்ப எடுத்து ரிலீஸ் பண்ணிருந்தாரு பாருங்க.. ஏன் சார் ரீமேக்னா atleast ஒரு 20 வருஷமாவது ஆவனும் சார். பெரிய ஏமாற்றம் இந்த படம் தான்

அவன் இவன் 



அவனையும் இவனையும் வச்சி இவரு போட்ட மொக்கை இருக்கே... அந்த பயலுகல விட்டுருந்தா அவிங்க ஸ்டைலுல ரெண்டு கமெர்ஷியல் படமாச்சும் நடிச்சிருப்பாய்ங்க. காமெடிங்கற பேர்ல படம் முழுக்க அருவருப்பான வசங்கள். அவரோட சின்ன வட்டத்துலருந்து வெளியே வரமா எடுத்த இந்த படம் மரண மொக்கை. இந்த படத்தை பாத்துட்டு நா பொலம்புனது  அவன் இவன், அப்பாடக்கர் பாலாவின் பயோடேட்டா

வெடி


  அவன் இவனுக்கு அப்புறம் நம்மாளு நடிச்ச ரீமேக் ஆக்ஷன் unlimited. ஆனா
என்ன ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி வர வேண்டிய படம். தெரியாம இப்ப எடுத்து அவிங்களுக்கு அவங்களே வெடி வச்சிகிட்டாங்க. இந்த படம் பாத்து எனக்கு நா வெடி வச்சிகிட்டது வெடி- மரண கடி

7ம் அறிவு



இது ஒரு மெகா பட்ஜெட் மொக்கை. ஆரவாரமில்லாமல் சாதாரணமா வந்துருந்தா இவ்வளவு ஏமாற்றம் இருந்துருக்காது. இதுல மொழிப்பற்று, தமிழ்பற்றுன்னு படத்த ஓட்டணுங்கறதுக்காக சம்பந்தமில்லாம எத எதையோ திணிச்சி படம் வீணாயிருச்சி. இந்த படத்தை பற்றிய என் விமர்சனம் எழாம் அறிவு - எ.ஆர்.முருகதாஸின் கந்தசாமி


ராஜபாட்டை  


  
சுசீந்திரன் ஒரு மொக்கைன்னு தெரியும். சரி விக்ரம் ஒரு நல்ல கதையில தான்
நடிச்சிருப்பாருன்னு பாத்தா, இவருக்கு சுசீந்த்ரன் பரவால போலருக்கு. விக்ரமுக்கு சூட்டே ஆகாத ஒரு கதை. இந்த வருஷத்தோட கடைசி மொக்கை இதுதான். இந்த படத்தை பற்றிய நாலு வரி விமர்சனம் ராஜபாட்டை- பவர்ஸ்டார் படத்துக்கான சரியான போட்டி 

ஒஸ்தி - தி (த)மாஸ்
(நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க)


தமிழ்ல சுமார் 30 வருஷமா இதே மாதிரி பல போலீஸ் கதைங்க வந்துருக்கு. ரவுடி போலீஸ், என்கவுண்டர் போலீஸ், ஆக்ஷன் போலீஸ், இதுதாண்டா போலீஸ் ஏன் சிரிப்பு போலீஸ் மொதக்கொண்டு நாம  பாத்துருக்கோம். அதுக்கு மேல டபாங்ல என்ன இருக்குன்னு ரீமேக் பண்ணாங்கன்னு தெரில. எல்லாருக்கும் பெரியண்ணன் மாதிரி இருக்க நம்ம ஜித்தன் ரமேஷ சிம்புவுக்கு
தம்பியா நடிக்க வச்சதுதான் உச்சகட்ட காமெடி. 

Tuesday, December 27, 2011

ராஜபாட்டை - பவர்ஸ்டார் படத்துக்கான சரியான போட்டி


Share/Bookmark
இந்த படம் பாத்து முடிச்சப்புறம் எனக்குள்ள சில கேள்விகள் ஓடிகிட்டு இருக்கு.நீங்க பாத்தீங்கன்னா உங்களுக்கும் இதே கேள்விகள் தோணும். என்னன்னு கேக்குறீங்களா?

1. போன மாசம் வரைக்கும் விக்ரம் நல்லாத்தானய்யா இருந்தாரு... ஏன் இப்புடிப்பட்ட கேவலமான கதையில (?) எல்லாம் நடிக்க ஆரம்பிச்சிட்டாரு?

2. யுவன் சங்கர் ராஜா இவ்ளோ கேவலமாவும் மியூசிக் போடுவாரா?

3. அடுத்தவங்ககிட்ட இருந்து Land ah அடிச்சி புடுங்குற வில்லன் குரூப் எப்பதான் தமிழ் சினிமாவுலருந்து ஒழிவாங்க?

4.Yogi B ஏன் சம்பந்தம் இல்லாம இந்த படத்துல அங்கங்க வந்து காய்மூய் ன்னு சத்தம் போட்டுகிட்டு இருக்காரு?

5. இன்னும் எத்தனை வருசத்துக்கு இதே மாதிரி படம் எடுக்கப்போறாய்ங்க? (தெலுங்கு Action படங்களே பரவால)

6. ஆமா இது ஆக்சன் பிலிமா இல்ல கோமெடி பிலிமா?

  (படு மொக்கை பிலிம்ங்கறது தான் உண்மை)



சில விக்ரம் ஃபேன்ஸ் இந்த படம் பாத்தே ஆகனும்னு முடிவு பண்ணிருந்தா நீங்க தியேட்டருக்கு போகும் போது கையில ஒரு தூக்க மாத்திரையோ இல்லன்னா ஒரு தலைவலி மாத்திரையோ எடுத்துட்டு போங்க.. கண்டிப்பா தேவைப்படும்.

Tuesday, December 20, 2011

பவர்ஸ்டார் தரிசனம்


Share/Bookmark
இந்த பதிவின் முதல் பகுதியை படிக்க இங்கே க்ளிக்கவும்                                                                                  ஊர் மக்கள் எல்லாம் பவர்ஸ்டார் இருக்குற கேரவன சுத்தி கூட்டமா நின்னுகிட்டு இருக்க கவுண்டர் கூட்டத்த வெளக்கிகிட்டு உள்ள வர்றாரு.
கவுண்டர்: "டேய் அரை டரவுசர் பசங்களா.. தள்ளுங்கடா... என்னடா இங்க கூட்டம்... கெளம்பு கெளம்பு..."

கூட்டத்துலருந்து ஒருத்தரு "யோவ் அழகுராஜூ... எங்கள தள்ளிவிட்டுட்டு நீ எங்கய்யா போற?"

கவுண்டர்:  "என்னது... நா எங்க... போறனா.... டேய்... இந்த வண்டிக்குள்ள இருக்கது யாரு தெரியுமாடா?"

"பவர் ஸ்டார் சீனிவாசன்"

கவுண்டர்:  "உனக்கு தாண்டா அவன் பவர் ஸ்டாரு... எனக்கு அவன் வெறும் சீனிவாசன் தான்.. நா அவன எப்புடி கூப்புடுவே தெரியுமா.. டேய் சீனி ... டேய் சீனின்னு தான் கூப்புடுவேன்...i'm சீனிவாசனோட சின்ன வயசுலருந்து ஃப்ரண்டு.. 10ங்க்ளாஸ் வரைக்கும் பாம்பேல ஓண்ணா படிச்சவண்டா.. என் பேர சொன்னா போதும் வண்டிக்குள்ளருந்து உடனே பொத்துகிட்டு வந்துருவான்... அவளவு சினேகிதம்"

செந்தில் கவுண்டரின் காதுக்குள் நைசாக  "அண்ணேன்... நீங்க ரெண்டாப்பு வரைக்கும்  தானே படிச்சிருக்கீங்க... இப்போ அந்தாளோட பத்தாப்பு படிச்சமுன்னு சொல்றீங்க?"

கவுண்டர் மெதுவாக "டேய் கக்கூஸ் ப்ரஸ் மண்டையா.. அது உனக்கு தெரியும்... இவனுகளுக்கு தெரியுமா? நா வெவரம் தெரிஞ்சதுலருந்து இந்த ஊரையே தாண்டுனதில்ல.... பாம்பேல படிச்சேன்ன்னு சொல்றேன் அப்புடியான்னு வாய பொளந்து கேட்டுகிட்டு இருக்கானுக.. நா இவனுகள அப்புடி பழக்கி வச்சிருக்கேண்டா... சரி நோண்டாமா நீயும் சேந்து ரெண்டு பிட்ட போடு... உங்க அக்காட்ட சொல்லி ரெண்டு கறிக்கஞ்சி ஊத்த சொல்றேன்"ன்னு சொல்லிட்டு

"ஏய் நகரு நகரு... எல்லாரும் அப்புடியே two step back...என் நண்பனுக்கு crowd na அலர்ஜி..."

உடனே செந்தில் "யோவ் ஆம்பளைங்கல்லம் பின்னாடி போங்க... வயசு பொண்ணுங்கல்லாம் முன்னாடி வாங்க.. பவர் ஸ்டாருக்கு சின்ன பொண்ணுங்கல தான் ரொம்ப புடிக்குமாம்... எங்க அண்ணேன் சொன்னாரு"

கவுண்டர் திரும்பி ஒரு லுக்கு விட்டுட்டு "டேய் கரடி..... பொண்ணுங்கள பவர் ஸ்டாருக்கு புடிக்குமா இல்ல உனக்கு புடிக்குமா... பன்னி அடிக்கிறது பாவம்னு தான் உன்ன விட்டு வச்சிருக்கேன்... என்ன அந்த பாவத்தையும் பண்ண வச்சிராத.. ஒழுங்கா வாய வச்சிகிட்டு நில்லு...இல்லன்னா வீடு போகும்போது வாயி இல்லாமதான் போவ"

கூட்டத்துலருந்து ஒருத்தன் கவுண்டர் கிட்ட " ஆமா பவர் ஸ்டாரும் நீங்களூம் பாம்பேல எந்த ஸ்கூல்ல படிச்சீங்க? "

" டேய் நாயே... பாம்பே இதுக்கு முன்னால போயிருக்கியா?"

"இல்லை"

"பாம்பேஎந்த பக்கம் இருக்கும்னாவது தெரியுமா?"

"தெரியாது..."

"அப்புறம் என்ன இதுக்குடா கேட்ட?"

"சும்மா தெரிஞ்சிகலாம்னு தான்"

"இத தெரிஞ்சிகிட்டு நீ என்ன கலெக்டர் ஆக போறியா... (தலையில அடிச்சி)... போடா..போய் கடைசி வரிசையில நில்லு...போ "

செந்தில் : அண்ணே பவர் ஸ்டாரு வர்றாரு.. பவர் ஸ்டாரு வர்றாருண்ணு கத்த... கவுண்டர் திரும்பி கேரவன பாக்க...

பவர் ஸ்டார் சிரிச்ச மொகத்தோட கீழ் எறங்கி கை காட்டுறாரு...

கவுண்டர் முகத்துல வெருங்கால்ல சாணிய மிதிச்சிட்டா மாதிரி ஒரு எஃபெக்ட்
"இய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்... எது... இந்த நாயி தான் பவர் ஸ்டாரா..... அடடாஆஆஆ... தப்பு பண்ணிட்டியேடா... சோஒ..."

லைட்டா அப்புடியே turn அடிச்சி கூட்டத்துக்குள்ள பூந்து எஸ்கேப் ஆக ட்ரை பண்றாரு

செந்தில் :
யோவ் எங்க அண்ணன் போறாருய்யா புடிங்க புடிங்க...

கூட்டத்துலருந்து ஒருத்தர் கவுண்டர புடிச்சி " யோவ் அழகு ராஜூ உன் நண்பன பாக்காம எங்கய்யா போறா...

"யோவ் இந்த நாயி யாருண்ணே எனக்கு தெரியாதுய்யா.... மக்களே இந்த பாவத்துகெல்லாம் நா ஆளாகவே மட்டேன்... என்ன விட்டுருங்க"

செந்தில் : "ஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் சென்று விட்டன. இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே...."

"செருப்பால அடி நாயே... அவன பார்றா கர்பமான கரடி மாதிரி இருக்கான்.. அவன் உனக்கு ஆடு மாதிரி தெரியிறானா?"

பவர்ஸ்டார் : தம்பி...

கவுண்டர் : அண்....ணா...

பவர்ஸ்டார் : என்னப்பா வேணூம்.. ஆட்டோ கிராஃபா..

கவுண்டர் : அந்த கருமாந்த்ரமெல்லாம் ஒண்ணும் வேணாம்ங்கண்ணா ஒரு சின்ன சந்தேகம் கேட்டுகட்டுமா?

பவர்ஸ்டார் : கேளுப்பா...

கவுண்டர் :
இந்த வயசுல உங்களுக்கு நடிச்சே ஆகனும்னு எப்புடிங்கண்ணா தோணுச்சி?

பவர் ஸ்டார் :
இத்தனை நாளா எனக்குள்ள தேக்கி வச்சிருந்த ரகசியத்த உன்கிட்ட  சொல்றேன்பா... சின்ன வயசுலருந்து எனக்குள்ள நடிகனாகனும்ங்கற வெறித்தீ உள்ளுக்குள்ள எறிஞ்சிகிட்டே இருந்துச்சி... ஆனா என்ன வச்சி படம் எடுக்க அப்ப ஒருத்தரும் ரெடியா இல்ல. நா சான்ஸ் கேட்டு போனாலே எல்லாரும் அலறி அடிச்சிகிட்டு ஒடிட்டாங்க"

கவுண்டர்: (மனதுக்குள்) ஆக்காங்... இந்த மூஞ்சிய போட்டோவே எடுக்க முடியாது... இதுல படமெங்க எடுக்குறது..

"அப்பதான் நா முடிவு பண்ணேன்... டாக்டராகி சம்பாதிச்சி சொந்த காசுலயே படம் எடுக்குறதுன்னு..அதே மாதிரி டாக்டர் ஆணேன்... சம்பாதிச்சேன்... நானே படம் எடுத்தேன்..."

அதாவது டாக்டரா இருந்து ஒவ்வொருத்தரா சாவடிக்கிறது புடிக்கலன்னு கூட்டம் கூட்டமா சாவடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்க.. புயூட்டிஃபுல் கேம்...ஆனா இப்புடி ஒரு கருமம் புடிச்ச ப்ளாஷ் பேக்க நா இது வரைக்கும் கேட்டதில்லீங்கண்ணா..."

பவர் ஸ்டார் : என்னது?

கவுண்டர் : " த த ப..... இது... இப்புடி ஒரு கருத்துள்ள ப்ளாஷ்பேக்க நா இது வரைக்கும் கேட்டதில்லீங்னு சொல்ல வந்தேனுங்கண்ணா...  "

பவர்ஸ்டார் :
ஓகோ..

கவுண்டர் : நா நீங்க எத்தனை படம் வேணாலும் நடிங்கண்ணா... உங்கள மாதிரி துடிப்புள்ள நடிகர்கள் சினிமாவுக்கு வந்தாதான் தமிழ் சினிமா (ரொமேண்டிக் லுக்குல வாய வச்சிகிட்டு) ஒலக தரத்துக்கு ஒயரும்... ஆக்காங்.."

பவர் ஸ்டார்:
ரொம்ப நன்றி தம்பி

கவுண்டர் : அது என்னங்கண்ணா மூக்குக்கு கீழ புல்லு கட்டுல தார் ஊத்துன மாதிரி எதோ இருக்கு...

பவர் ஸ்டார் : அது மீசைப்பா...

கவுண்டர் : ஓ... பாத்துங்கண்ணா... நம்ம ஊருல ஆடு ஜாஸ்தி.. புல்லு கட்டுன்னு ஏறி மேஞ்சிட போகுது...

பவர் ஸ்டார் "ஹாஹா ஹா ஹா" ன்னு எல்லா பல்லும் தெரியிற மாதிரி சத்தம் போட்டு  சிரிக்க பக்கதுல இருந்த செந்தில் மயக்கம் போட்டு கீழ விழுந்துடுறாரு...


கவுண்டர் : ண்ணா... நீங்க சிரிக்காதீங்கண்ணா.. கொழந்தை பையன்  பயப்படுறான்...

செந்தில் : அண்ணேன்.. அந்தாளூ பல்லு ஏண்ணே அப்புடி இருக்கு?

கவுண்டர் : ஆமா அந்தாளூ பல்ல நா எதோ அப்புடி பண்ண மாதிரி கேக்குற.. தீவாளியும் அதுவுமா எவண்டாயோ போயி பஞ்ச் டயலாக் பேசிருப்பான்.. அவன் வெடிய கொளூத்தி வாயில போட்டுருப்பான்... அப்ப செதறுன பல்லாத்தான் இருக்கும்.... டேய் வந்துடுடா இந்த கடல் பன்னி இன்னொரு தடவ சிரிக்கிறதுக்குள்ள ஓடிருவோம்...

ஒரு மணி நேரத்திற்கு பிறது, கவுண்டரின் மெக்கனிக் ஷாப்...

கவுண்டர்: டேய் warewolf மண்டையா... என்னடா வந்ததுலருந்து திங்க்கிங்

செந்தில் :
நா ஒரு முடிவுக்கு வந்துட்டேன்ணே...நானும் சினிமாவுல சேந்து பெரிய ஹீரோ ஆயிரலாம்னு இருக்கேன்...

கவுண்டர் : வெரிகுட்..அந்த கடல் பன்னி ஹீரோவா நடிக்கும் போது இந்த காட்டு பன்னி நடிக்க கூடாதா என்ன... படத்துல நடிக்கப் போற சரி... அத யாரு பாக்குறது...

செந்தில் :
"நீங்க தான்" ன்னு சொல்லிட்டு லைட்ட பம்பிகிட்டே ஒட கவுண்டர் கட்டைய எடுத்துகிட்டு பின்னாடி ஓடுறாரு.

Monday, December 12, 2011

போராளி


Share/Bookmark
 வர வர நம்ம ஊர்ல ஆக்க்ஷன் படம்னு எதாவது ரிலீஸ் ஆனாலே தியேட்டர் பக்கம் போறதுக்கு ரெம்ப பயமா இருக்கு. உள்ளூர் ரவுடிங்களை போட்டு பொறட்டி எடுத்தது பத்தாதுன்னு இன்டர்நேஷனல் லெவல்ல நம்ம ஹீரோக்கள் ரவுடிசத்த ஒழிச்சிகிட்டு வர்றாங்க.வெடி, வேலாயுதம் ஏழாம் அறிவுன்னு ரெண்டு மூனு மாசமா ஒரே மொக்கை படங்களை பாத்து கடுப்புல இருக்கும் போது, gap la ஒரு நல்ல படம் வந்துருக்கு.

நல்ல கதையோ கெட்ட கதையோ, ஒண்ண ரெடி பண்ணி வச்சிக்கிட்டு ஒவ்வொரு ஹீரோவா போனா அவிங்க ரெண்டு குத்து பாட்ட சேத்துவிடு, நாலு ஃபைட்ட உள்ள விடு, அந்த ஹீரோவ தாக்குற மாதிரி நாலு வசனத்த அள்ளி விடுன்னு ன்னு ஆயிரம் நொள்ளை சொல்லுவாய்ங்க.(என்னங்க? விஜய்யையா? ச்ச.. ச்ச... நா. பொதுவா சொன்னேன்) இந்த ப்ரச்சனையெல்லாம் இல்லாம அவருக்கு புடிச்ச கதைய அவருக்கு புடிச்ச டீமோட அவருக்கு புடிச்ச மாதிரி எடுத்துக்கிட்டு இருக்காரு சசிகுமார்.

சசிகுமார் நடிக்கும் போது சமுத்திர கனி டைரக்ட் பண்ணுவாரு.. சமுத்திர கனி நடிக்கும் போது சசிகுமார் டைரக்ட் பண்ணுவாரு... wow... beautiful game... எது எப்புடியோ இவங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேந்து இது வரைக்கும் நல்ல படமா தான் எடுத்துகிட்டு இருக்காய்ங்க.. சரி போராளிக்கு வரலாம்.

படத்தோட 1st half la சசிகுமார் இவளோ நல்லவாரான்னு எல்லாரும் கேக்குற மாதிரி கிட்ட தட்ட விக்ரமன் படத்து ஹீரோ மாதிரி வர்றாரு. காமெடி, செண்டிமெண்டுன்னு 1st half போறதே தெரில. அங்கங்க புல்லரிக்க வைக்கிற மாதிரி சில சீன்ஸ். அப்புறம் வழக்கம் போல இன்டர்வல் நெருங்க போற நேரத்துல ஒரு ட்விஸ்ட்.. ஹீரோ யாரு தெரியுமா?...ன்னு ஒரு கதை சொல்றாங்க.. இப்பல்லாம் தமிழ் சினிமா இன்டர்வல்ல ஒரே ட்விஸ்டு ட்விஸ்டா பாத்து இப்பல்லாம் இன்டர்வல்ல ட்விஸ்ட் இல்லன்னாதான் நமக்கு
பெரிய ட்விஸ்டா இருக்கு.

ஆனா ஹீரோ பாம்பேல பெரிய டான்... ஹைதராபாத்ல பெரிய ரவுடி, ஹீரோ ஒரு  IPS ஆபீசர்... அண்டர் கவர் ஆப்ரேஷன்ல இருக்காருன்னு வழக்கமான ஃப்ளாஷ்பேக் மொக்கைகள போடாம ஒரு டீசண்டான (புதுசுன்னு சொல்ல முடியாது) ஃப்ளாஷ்பேக்.2nd half la நம்மள அப்புடியே எதுவும் பேச முடியாம உக்கார வச்சிடுறாங்க. வழக்கமான சசிகுமார் பட effect. க்ளைமாக்ஸ்ல ஒரு 25 பேர அடிக்கிற ஃபைட்டு மட்டும் இந்த படத்துக்கு ஒட்டாத மாதிரி இருக்கு

கஞ்சா கருப்பு ஹரி படங்கள்ல போடுறா மாதிரி மொக்கைய போடாம நல்ல டைமிங் டயலாக்ஸ்ல நல்லா சிரிக்க வைச்சிருக்காரு. சசிகுமாரோட சின்ன வயசு சினேகிதனா வர்ற 50 பரோட்டா சாப்புடுறவரும் (பேரு தெரிலப்பா) நல்லா சிரிக்க வச்சிருக்காரு.

நல்ல கேரக்டர் செலக்ஷன்ஸ். கு.ஞானசம்பந்தன், படவா கோபி, இன்னொரு ஹீரோ தெலுகு நரேஷ் எல்லாருமே நல்ல நடிப்ப வெளிப்படுத்திருக்காங்க. படவா கோபிய இன்னும் நல்லவே யூஸ் பண்ணிருக்கலாம். சான்ட்ராவுக்கு சன் டிவி அசத்தப்போவது யாருல நல்ல build up குடுத்து வச்சிருந்தாய்ங்க.. கடைசில படவா கோபி wife ah இந்த படத்துல ஒரு மொக்க ரோல்ல நடிச்சிருக்காங்க. ஹீரோயின் ரெண்டு பேருக்குமே அதிக வேலை இல்ல. பாட்டு எதுவும் சொல்லிகிற மாதிரி இல்ல.



எப்புடி இருந்தாலும் படம் நமக்கு புடிச்சா மாதிரியே இருக்கு. இந்த வருஷத்துல வந்த ஒண்ணு ரெண்டு நல்ல படங்கள்ல இதுவும் ஒண்ணு.  அப்புறம் ஏண்டா பெருச்சாளின்னு போட்டுருக்கேன்னு பாக்குறீங்களா? ரைமிங்கா வேற எதுவும் கெடைக்கலப்பா... அதான்.

Friday, December 9, 2011

வடக்கு பட்டியில் பவர் ஸ்டார்


Share/Bookmark
கவுண்டர் மெக்கானிக் ஷாப்புல மோட்டர ஸ்பேனர வச்சி தட்டிகிட்டே சிம்பு பாட்ட ரீமிக்ஸ் பண்ணி பாடிகிட்டு இருக்காரு...

"எவண்டா இத செஞ்சான்... செஞ்சான்... செஞ்சான்...
அவன் கைல கெடச்சா ஒழிஞ்சான் ஒழிஞ்சான் ஒழிஞ்சான்...
ஹம்மே... ஹம்மே.. ஹம்மே....
ஹம்மே ஹம்மே... ஹம்மே..."

அப்போ செந்தில் "காதல் என் காதல் அது கண்ணீருல" ன்னு பாடிகிட்டே
சோகமா வர்றாரு...



கவுண்டர் : டேய் வெஸ்ட் இண்டிஸ் வாயா.... ஏண்டா சோகமா வர்ற....

செந்தில் : எனக்கு லவ் பெயிலாயிருச்சின்னே.....

கவுண்டர் :
ஒண்ணாங்கிளாஸ்ல ஒம்போது தடவ பெயில் ஆன நாயிக்கு லவ் பெயில் தான் ஆகும்.. சரி அழுகாத.... அந்த பொண்ணு யாருண்ணு சொல்லு நானே பாத்து கட்டி வைக்கிறேன்...

செந்தில் :
விடுங்கண்ணே... அது உங்களால முடியாது...

கவுண்டர்
: டேய் சீலிங் ஃபேன் மண்டையா.... இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா
மனசு வச்சி முடியாத காரியமே இல்லடா... பொண்ணு யாருண்ணு சொல்லு அலேக்கா தூக்கிட்டு வந்து அப்புடியே தாலி கட்ட வைக்கிறேன்..

செந்தில் : வேணாம் விடுங்கண்ணே...சமுதாயம் இதுக்கு ஒத்துக்காது

கவுண்டர் : அட இந்த சமுதாயத்துல இருக்க நாயிக ஒத்துகிட்டா என்ன... ஒத்துக்கலன்னா என்ன?பொண்ணு யாருண்ணு மட்டும் சொல்லு... அந்த மேட்டு தெரு தீஞ்ச வாயன் பொண்ணா... இல்ல வடக்கு தெரு ஆந்தை கண்ணன் பொண்ணா... common tell me... tell me... எந்த தெருவுண்ணாவது சொல்லு...

செந்தில் : இதே தெரு தாண்ணே...

கவுண்டர் : அட... ரொம்ப வசதியா போச்சு... ஆனா இந்த தெருவுல இந்த ஆப்பிரிக்கா கொரங்குக்கு கட்டி வைக்கிற மாதிரி யாரும் இல்லையேடா... ஆமா எந்த வீடு

செந்தில் : உங்க வீட்டுல தான்

கவுண்டர் : என்னது என் வீட்டுலயா? என் வீட்டுல யாரு... நானும் என் பொண்டாட்டியும் மட்டும் தானடா இருக்கோம்.. வேற யாரும் இல்லையேடா...
(மூஞ்ச சோகமா வச்சிகிட்டு)
 
செந்தில் : உங்க பொண்டாட்டி தான்னே அது...

கவுண்டர் :
இய்ய்ய்ய்ய்ய்ய்ய்....அடடடா....சோஓஓஒ..... டேய் என் கண்ணு முன்னால நிக்காத... எனக்கு வெறி வர்றதுக்குள்ள ஓடிரு...

செந்தில் : இதுக்கு எவ்வளவு செலவானாலும் பரவால... நீங்களே பாத்து ஒரு பைசல் பண்ணுங்க...

கவுண்டர்:
இது சரியில்ல தம்பி அநாவசியமா ஒரு செனப்பன்னிய கொல்லவேணாமேன்னு பாக்குறேன்... மரியாதையா ஒடிரு... இல்ல ஸ்பானர வாய்க்குள்ள விட்டு மூக்கு வழியா வெளிய எடுத்துருவேன்....

(கவுண்டர் பேசிக்கிட்டு இருக்கும் போதே ஊர்ல உள்ள எல்லாரும் வேகமா எங்கயோ ஓடிகிட்டு இருக்காங்க)

கவுண்டர் : என்ன.... ஊருக்குள்ள நாய் புடிக்கிற வண்டி எதுவும் வந்துருக்கா... ஏன் இப்புடி ஒடுறானுக....
(ஓடுறவங்கள்ள ஒருத்தன புடிச்சி இழுத்து )

டேய் எங்கடா போறீங்க...

"நம்ம ஊருக்கு பவர் ஸ்டார் எதோ ஷூட்டிங் வந்துருக்காராம் அதான் பாக்க போயிகிட்டு இருக்கோம்" னு சொல்லிட்டு அவன் ஓடிருறான்..

கவுண்டர் : நா அட்டிமேட் ஸ்டார் கேள்வி பட்டுருக்கேன்... சுப்ரீம் ஸ்டார் கேள்விபட்டுருக்கேன் ஏன் சூப்பர் ஸ்டார் கூட கேள்வி பட்டுருக்கேன்.. இவரு என்ன பவர் ஸ்டார்.. அவங்க எல்லாரையும் விட பெரிய ஆளா இருப்பாரு போலருக்கு.. இந்த நாயிகளுக்கு முன்னால நான் அவர்கிட்ட ஒரு ஆட்டோகிராப் வாங்கி வீட்டுல படம் போட்டு வச்சிக்க வேண்டியது
தான்... அட நானும் வர்றேண்டோவ்....


செந்தில் :
அண்ணேன் அண்ணேன்.. நானும் உங்க கூட வர்றேணே..நா பேசுனதெல்லாம்
மனசுல வச்சிக்காதீங்கண்ணே..

கவுண்டர் : சரி வந்து தொல நாயே... ஆனா என்னிக்கு இருந்தாலும் உன் உயிர் என் கைல தான் மகனே....

(ரெண்டு பேரும் பவர் ஸ்டார் ஷூட்டிங் பாக்க கெளம்புறாங்க....)




இனி பவர் ஸ்டார் தரிசனம்.......

Sunday, December 4, 2011

The Celestial Hunt -I - வரப்போகும் திரைப்படம்


Share/Bookmark
"அடப்பாவிகளா... இதுவரைக்கும் ரிலீஸ் ஆன படத்த தான் திருட்டு DVD la பாத்து
review எழுதி சாவடிசீங்க.. இப்ப வரப்போற படத்துக்கே review எழுத ஆரம்பிச்சிட்டீங்கன்னா வெளங்கிரும்" ன்னு சொல்ற உங்க மைண்டு வாய்ச நா கேட்ச் பண்ணிட்டேன். வெறிக்காதீங்க... u for mistake.. இது படத்த பத்தினது இல்ல. படமா வரக்கூடிய அளவு தகுதியுள்ள ஒரு ஆங்கில நாவல் பற்றியது.

ச்ச... எப்புடியெல்லாம் திங்க் பண்றானுங்கன்னு சில ஹாலிவுட் படங்கள பாத்து ஆச்சர்யபட்டு இருக்கேன். ஆனா இந்த நாவல படிச்சப்புறம் எப்புடி இவரால இப்புடி யோசிக்க முடிஞ்சிதுன்னு யோசிக்கவே எனக்கு ரெண்டு நாள் ஆச்சு. அப்புடி ஒரு தாக்கத்த ஏற்படுத்துச்சி இந்த நாவல்.

இந்த நாவல ஒரு நாளுக்கு ஒண்ணு இல்லன்னா ரெண்டு Chapter ah படிச்சிக்கலாம்னு நெனச்சி தான் இத வாங்குனேன்.. ஆனா ஒரே நாள்ல படிச்சி முடிக்கிற மாதிரி இந்த நாவல்ல எதோ பில்லி சூன்யம் வச்சிருக்காங்க. எடுத்தப்புறம் கீழ வைக்க முடியல. சின்ன வயசுலர்ந்தே எனக்கு இந்த மாதிரி mystery, thriller கதைங்க மேல ஒரு ஈர்ப்பு. யாரோட சின்ன வயசுலருந்துன்னு கேக்காதீங்க.. என்னோட சின்ன வயசுலருந்து தான்.

பல தனித்தனி களங்களில் நடக்குற கதைகள் கடைசியா ஒரு பொதுவான அச்சில் பிணைக்கப்பட்டு  இருக்கு. இது வழக்கமான நாவல் பாணிதான்னாலும் ஆரம்பத்துல நமக்கு ஆர்வத்தை ஏற்படுத்துற பல முடிச்சுகளை போட்டு கடைசில எந்த லாஜிக் குளறுபடியும் இல்லாம  அவிழ்த்துருக்காரு (அடுத்த பகுதிக்கான சில முடிச்சுகளையும் போட்டு) எழுத்தாளர் R.தேவி குமார் . த்ரில்லர் கதை ரசிகர்களை இது கண்டிப்பா ரொம்ப பிடிக்கும்.

இப்போதைய கால கட்டத்தில் கதையை ஆரம்பிச்சி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நம்மை அழைச்சிக்கிட்டு போறாங்க. நாம கற்பனையில் கூட நினைத்துப்பார்க்காத ஒரு உலகத்தில் பயணம் செய்த ஒரு அனுபவம். எழுத்து நடையில் நாம அந்த கதைக்களத்துலயே இருக்குற மாதிரி ஒரு எஃபெக்ட் இருக்கு. ஒரு வேள இந்த கதையில வர்ற அனில் மாதிரி தேவிகுமாரும் வீட்டுல ஒரு time machine ah செஞ்சி பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி என்ன நடந்துச்சின்னு பாத்துட்டு வந்தாலும் வந்துருப்பரோன்னு தோணுது. அந்த அளவு கதையில் நுணுக்கம் தெரியுது.

இன்னொரு முக்கியமான விஷயம் இந்த நாவல பத்தி சொல்லலும். Time machine  working பத்தின இவ்ளோ technical data வேற எங்கயும் நாம பாக்க முடியாது. எழுத்தாளரோட பல  வருட உழைப்பு இதுல தெரியுது. கண்டிப்பா இந்த நாவல் விரைவில் நாம திரையில பாக்குற வாய்ப்பு வந்தாலும் வரலாம்.இது தான் அவரோட முதல் நாவல்னு நெனைக்கிறேன். இந்த நாவலின் அடுத்த பகுதிக்காக அனைவரையும் போல நானும் காத்திருக்கிறேன்.

கதையில் வரும் காதாபாத்திரங்களோட பேரு எல்லாமே ஒரே வரிசையில இருக்குறதால (anil, arun, rajesh, ram) சில இடங்களில் படிக்கும் போது சின்ன கன்பீசன் ஆயிடுது. இன்னும் இந்த பெயரெல்லாம் நமக்கு ரொம்ப பழக்கப்பட்ட பெயரா இருக்கு.Main characters ku கொஞ்சம் unique names குடுத்துருந்தா நல்லா இருந்துருக்கும்

 இந்த நாவலில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. கதை நடப்பதை போல் (அதாவது காட்சிகளாக) எழுதியிருந்தால் இன்னும் ரொம்ப நல்ல இருந்துருக்கும்.
வேற எதுவும் மைனஸ் இருக்கதா எனக்கு தெரியல.. யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க.

இந்த நாவல் flipkart.com ல கெடைக்குது. லிங்க் இதோ


http://www.flipkart.com/books/8190796720?pid=gw23f9n1cr&_l=qZBl8t+jD61L+lgB7L9uGw--&_r=8KYKCXr4dONlGvxxil6Uwg--&ref=64f681d2-ec4d-400f-a1ba-59ea3eb39694



ஆசிரியர் குறிப்பு:

"The Celestial Hunt" ஒரு சாதாரண நாவலா மட்டும் இல்லாம, பல ஆறிவியல் சம்பந்தமான நுனுக்கங்களும் அடங்கியிருந்துச்சி. அப்போ தான் இந்த புத்தகத்தோட author ah பத்தி தெரிஞ்சிக்கலான்னு இணையத்துல தேடிய போது ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைச்சிது. அத இப்போ உங்களோட பகிர்ந்துகிறேன்.

சில வருடங்களுக்கு முன்னாடி ஒரு பொறியியற் கல்லூரில 1st year பசங்க தங்கியிருந்த விடுதி.

ரூம் நம்பர் 208 ல ஒரு நாலு பசங்க தங்கியிருந்துருக்காங்க. கொஞ்சம் மக்கு பசங்கதான் போலருக்கு. அவங்களுக்கு பக்கத்து ரூம்ல (209) ரெண்டு மூணு பேர் தங்கியிருந்துருக்காங்க இந்த ரெண்டு ரூம் பசங்களுக்கும் அதிக பழக்கம் இல்லை போலருக்கு.

ஒரு மாசம் கழிச்சி காலேஜ்ல 1st cycle test வச்சி பேப்பர் குடுத்துருப்பாங்க போல. ரூம் 208 உள்ள பசங்க எல்லாரும் பாஸ் ஆயிட்டானுங்க. அம்துக்கு 35, 30 ன்னு மார்க் எடுத்து பாஸ் ஆயிருப்பானுங்க போல. எல்லாருக்கும் ரொம்ம சந்தோஷம். அப்போ ரூம் 209 க்கு வெளியே ஒரு பையன் இன்னொரு பையன்ட ரொம்ப feel பண்ணி சொல்லிகிட்டு இருந்துருக்கான்.

"ச்ச... maths la மார்க் கொறைஞ்சிருச்சிடா... அசிங்கமா இருக்கு.. 1st test laye இப்புடி
ஆச்சின்னா மிஸ்ஸுக்கு என் மேல impression eh போயிடும்டா" ன்னு ரொம்ப feel
பண்ணி சொல்லிகிட்டு இருந்துருக்கான். இத பாத்த 208 பசங்க அய்யோ பாவம் ஃபெயில் ஆயிட்டான் போல... கொஞ்சம் ஆறுதல் சொல்லி மனச தேத்தி விடலாம்னு நெனச்சி அவன் பக்கத்துல போயி...

"விடு மச்சி... 1st test தான... freeya vidu... அடுத்த டெஸ்ட்ல பாத்துக்கலாம்... இதுக்கெல்லாமா feel பண்றது"ன்னு ஆறுதல் சொல்லிருக்கானுங்க...

அதுக்கு அந்த பையன் "இல்லடா... எனக்கு இதுமாதிரி மார்க் கொறைஞ்சதே இல்லடா... இதான் 1st time... ரொம்ப கஷ்டமா இருக்குடா" ன்னுருக்கான்....

"சரி விடு மாப்ள.. பாத்துக்கலாம்.. இது என்ன செமஸ்டரா... சைக்கிள் டெஸ்ட் தானே... ஆமா உனக்கு எத்தன மார்க்ல போனிச்சி?" ன்னு கேட்டுருக்கானுக...

அதுக்கு அந்த 209 பையன் " ஒரு மார்க் போயிருச்சிடா... ஐம்பதுக்கு நாப்பதி ஒன்பது தான் எடுத்துருக்கேன் (49/50)... மிஸ்ஸுக்கு என் மேல impression eh போயிடும் டா" ன்னு  சொல்லிருக்கான்.

இத கேட்டதும் அந்த பசங்க எதும் பதில் சொல்லாம slow motion la reverse gear ah
போட்டுகிட்டு எஸ்கேப் ஆயிட்டனுங்கலாம்.அப்புறம் அந்த பையன பத்தி
விசாரிச்சி பாத்தப்பதான் தெரிஞ்சிருக்கு அந்த பையன் தான் 10th matriculation exam la
state first ன்னு. அதுக்கப்புறம் அவனுங்க அந்த பையன்க்கிட்ட நாலு வருஷமும் மார்க்  என்னனு கேட்டதே இல்லையாம்.

அந்த பையன் வேற யாரும் இல்ல. இந்த நாவலோல writer R.தேவிகுமார் தான். அப்புறம் தான் தெரிஞ்சிது இந்த நாவல்ல ஏன் இவ்ளோ டீடெய்ல்ஸ் இருக்குன்னு. இதுக்காதா பின்னே.... இந்த நாவலோட அட்டைப்படமே பார்த்தோன நம்க்கு புடிக்கிற மாதிரி இருக்கும்.இத டிசன் பண்ணவரு தேவிகுமாரோட கல்லூரி நண்பர் பாலவிக்னேஷாம். அவர் கல்லூரில ப்ரோஜெக்ட் இல்லாத மக்கு பசங்க சில பேருக்கு அவரோட ப்ராஜெக்ட குடுத்து உதவி பண்ணிருக்காருன்னு வரலாறு சொல்லுது.


என்ன கேட்டீங்க.. அந்த 208 ரூம் பசங்களா? அட அவனுங்கள விடுங்க... எங்கயாவது. மொக்கையா எதாவது blog எழுதிகிட்டு இருப்பானுங்க....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...