Thursday, July 28, 2011

FACEBOOK-சில குஜால்டிகளும் சில கடுப்புகளும்:


Share/Bookmark
முன்னாடியெல்லாம் ஃப்ரண்ட்ஸ் phone பன்னி பேசிட்டு இருந்தாய்ங்க... இப்பல்லாம்ஒர்த்தனும் ஃபோன் பண்றதில்ல..ஏண்டா ஃபோன் பண்றதில்லன்னு கேட்டா, நா என்னமோ கேக்கக்கூடாதத கேட்டுட்ட மாதிரி என்ன பாத்து வெறிக்கிறாய்ங்க..இப்பல்லாம் யாரும் வாயல பேசறதில்ல. likes, comments, status updates இப்புடி facebook language la தான் பேசுறாய்ங்க

நேர்ல பாத்தா மூஞ்சி குடுத்து கூட பேச மாட்டானுங்க சில பேரு... ஆனா
Facebook chat ல வந்தா மட்டும் வக்கனைய "hi dude...wassap... how s going" ன்னு
பீட்டர் விட ஆரம்பிச்சிடுரானுங்க.வீட்டுல அம்மா சாப்புட கூப்டா கூட
"facebook la invite பண்ணும்மா.. அப்பதான் சாப்புட வருவேன்னு சொல்ல
ஆரமபிச்சிட்டாங்க. அந்த அளவுக்கு நம்ம ஆளுங்களுக்குள்ள ஒருதாக்கத்த உண்டாக்கிருச்சி இந்த Facebook.

எல்லாரும் இங்க இருக்காங்க. திரையுலகத்த சேந்தவங்க மட்டும் இல்லாம எல்லா துறைய சேந்தவங்களும் இதுல அடக்கம். அரசியல்வாதிகள் எல்லாம்
ஊர் ஊரா போயி "எங்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில வெற்றி பெற வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" ன்னு கேக்குறதுக்கு பதிலா இன்னும் கொஞ்ச நாள்ல "எங்களை பெருவாரியான "like"க்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்குமாறு உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்னு இங்க வந்துப்ரச்சாரம் பண்ணாலும் ஆச்சர்யபடுறதுக்கில்ல.

Facebook சில குஜால்டிகள்:

1.இதுல நண்பர்களை நம்ம தேடி போக வேண்டியதில்லை. இவிங்களே "இவுங்களையெல்லாம் நீங்க friends ஆக்கிக்கலாம்னு நம்மக்கு லிஸ்ட்டும் குடுத்துடுராய்ங்க (Friend Suggestions) .நம்ம clik பண்ணா மட்டும் போதும். இந்த லிஸ்ட்டுல பாத்தீங்கன்னா, நமக்கு தெரிஞ்ச friend um இருப்பான். அவனோட friend um இருப்பான். அவனோட "ஒண்ணு விட்ட" சித்தப்பா பையனோட கூட படிச்சவனும் இருப்பான். Docamo தத்துவம் மாதிரி வாழ்க்கை சில க்ளிக்குகள்லயே மாறிவிடும்.

2.யாரும் எதையும் யாருக்கும் தெரியாம பண்ண முடியாது. எவன் எவன் யார் யார் ஃபோட்டோவுக்கு எத்தனை லைக் போட்டுருக்கான், என்னென்ன ஜொல்லு
விட்டுருக்கான், எங்கெங்க பல்பு வாங்கிருக்காங்குற மேட்டரெல்லாம் ஊருக்கே தெரிஞ்சிடும்.

3.முன்னாடியெல்லாம் காணாமல் போனவர்களை கண்டுபுடிக்க
தூர்தர்ஷன்ல விளம்பரம் குடுத்து, அவர்களை பற்றிய தகவல் தெரிந்தால்
"காவல் துறை கட்டுபாட்டு அறை, எழும்பூர் சென்னை-8" க்கு தகவல் சொல்ல
சொல்லுவாய்ங்க. ஆனா இப்போ அங்கயெல்லாம் போக தேவையில்ல..காணம போனவங்கள Facebook la தேடுனா ஈசியா கண்டு புடிச்சிரலாம். மூணாங்கிளாஸ் படிக்கும் போது (நீ இப்ப வரைக்குமே அவ்வளவுதானடா படிச்சிருக்கன்னு கேக்குற உங்க மைண்ட் வாய்ச நா கேட்ச்பண்ணிட்டேன்) தொலைஞ்சி போன என் நண்பன முந்தா நாளுதான் இங்க கண்டுபுடிச்சேன்.

4.கும்பலா மொக்க போட நெனக்கிறவிங்க பொதுமக்களை கஷ்டபடுத்தாம தனியா குருப் குரூப்பா பிரிஞ்சி அவனுங்களுக்குள்ளயே மொக்க போட்டுக்கலாம்  (facebook groups). இதுனால மற்ற பொது ஜனங்களுக்கு எந்த விதமான காயமோ உயிரிழப்போ ஏற்படுறதில்லை.

5.நல்ல விஷயமோ கெட்ட விஷயமோ... Facebook புண்ணியத்தாலா ஒரு மணி
நேரத்துல ஒரு விஷயத்த உலகம் ஃபுல்லா பரப்பிடலாம். தமிழ்நாட்டுல
:"மாப்ள தண்ணி கேக்குறாரு"ன்னு போட்டோம்னா அடுத்த அரை மணி நேரத்துல அமெரிக்காவுல "மாப்ள தங்கத்துல  சொம்பு கேக்குறாரு"ங்கற அளவுக்கு விஷயம் பரவும்

சில கடுப்புகள்:

1 .இந்த Yahoo chat la எல்லாம் பாத்த மொத்தமா ஒரு நாலு status message தான்
இருக்கும். available- உயிரோட தான் இருக்கான், idle -வெட்டியா இருக்கான்
busy-வேல செய்யிற மாதிரி ஆக்ட் பண்றான் invisible-யாருக்கும் தெரியாம ஓபி அடிக்கிறான் இதுதான் அந்த நாலு message kum அர்த்தம். ஆனா இதுல போடுறானுங்க பாருங்க status message... கருமம்... " i am eating" "i am bathing" "on the way to office" இப்புடியேலாம் போட ஆரம்பிச்சிட்டாய்ங்க.. ஏண்டா status message ங்கறதுக்காங்க உங்களோட ஒவ்வொரு state (நிலை) ஐயுமாடா message ah போடுவீங்க... முடியலடா...இதவிட கொடுமை இதுக்கு ஒருத்தன் "like" போட்டு "அப்புடியா.. என்ன சாப்டீங்க" ன்னு கமெண்டும் போடுவான்..

2. வழக்கமா பொண்ணுங்க ஃபேஸ் புக்ல இருந்தா profile photo வா ஒரு பட்டாம்  பூச்சி ஃபோட்டோவோ இல்ல, எதாவது ஒரு பூவோட photo வயோ தான் போட்டுருப்பாங்க.எதாவது ஒண்ணு ரெண்டு புள்ளைங்கதான் அவங்களோட ஃபோட்டோவ போட்டுருக்காங்க அதுல நல்லதா ஒண்ண செலெக்ட் பண்ணி friend ஆயிடலாம்னு பாத்தா அதுங்க ஆயிரத்தெட்டு செட்டிங் பண்ணி வச்சிருக்குங்க. பசங்களுக்குண்ணா க்ளிக் பண்ண உடனே friend request போயிருது. ஆனா பொண்ணுங்களுக்கு மட்டும் "U know this person personally" nnu ஒரு கேள்வி வேற. டேய் personal ah தெரிஞ்சிக்கதாண்டா request அனுப்புறோம். அதுக்கு முன்னாடியே இப்புடி கேட்ட எப்புடி? தெரியாதவங்கள freind ஆக்குறத்துக்கு தாண்டா friend "request அனுப்பனும். ஏற்கனவே friend ah இருக்கவன add பன்றதுக்கு பேரு request ila

3.அப்புறம் இந்த personal photo. போட்டோ போடுவாங்களாம். ஆனா அத அடுத்தவங்க பாக்க கூடாதாம்.. அவங்களுக்கு தெரிஞ்சவங்க மட்டும் தான் பாக்கனுமாம் எந்த ஊரு ஞாயம் இது. "ச்சல்லம்.. இங்க வாடி. அடுத்தவன் ஃபோட்டோ பாக்க கூடாதுன்னா அப்புறம் என்னா ....த்துக்கு social network ku வர்ற. உன் ஃப்ரண்டுங்க மட்டும் தான் பாக்கனும்னா நீ என்ன பண்ணிருக்கனும்... சொல்லு ச்சல்லம் என்ன பண்ணிருக்கனும்.. அவங்களுக்கு மட்டும் மெயில் அனுப்பிட்டு பேசாம இருந்துருக்கனும். இப்புடி ஃபோட்டோ போட்டு அத லாக் பண்ணி வைக்க நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா... இல்ல அவ்வளவு பெரிய அப்பா டக்கரான்னு கேக்குறேன். இனிமே யாராது ஃபோட்டோவ லாக் பண்ணி வைக்கிறத பாத்தேன்.. மூஞ்சில பூரான் விட்டுருவேன்.

4. இன்னொரு தொல்லை இந்த Notificaiton. ஒருத்தனுக்கு ஒரு கமெண்ட் போடோம்னாஅதோட விடமா அதுக்கு அப்புறமா அவனுக்கு 100 பேர் கமெண்ட் போட்டாலும் நமக்கு அந்த 100 தடவையும் notifiaction வந்து சாவடிக்கிது.

5. வயல்ல விவசாயம் பாத்த காலம் போக இப்ப எல்லாம் facebook லயே விவசாயம் பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. அன்னிக்கு ஒருத்தர் எண்ட "பாஸ் முந்தாநாளு வயல்ல கேரட் போட்டுருந்தேன். இன்னேரம் வளந்துருக்கும்... அருவடை பண்ணனும்"னாரு என்னது முந்தாநாளூ போட்டு இன்னிக்கு அருவடை பண்ண போறீக்களா.. இது என்னப்பா புதுவிதமான கேரட்ட இருக்குன்னு பாத்தா, அவரு facebook game la கேரட் போட்டுருந்துருக்காரு."கம்யூட்டர்ல போடுற கேரட்டு கூட வளர்றதுக்கு மூனு நாள் ஆதுதா.சரி பாஸ்.. போடுறதுதான் போடுறீங்க.. பொன்னி அரிசி
ஒரு மூட்டை போட்டு அருவடை பண்ணி குடுங்க பாஸ்.. வீட்டுக்கு வேணும்"ன்னேன் அதுக்கென்ன.. தாராளமா பண்ணிடலாம்னு இப்ப அவரோட வயல்ல பொன்னி அரிசி போட்டுருக்காரு. கூடிய விரைவில் இந்தியாவுல பஞ்சம் பஞ்சு பஞ்சாய் பறந்து போய்விடும்ங்கறதுல எந்த சந்தேகமும் இல்ல.

Monday, July 18, 2011

சினிமா விமர்சனங்கள்!!!


Share/Bookmark
2015


தங்க மகன் - THANGA MAGAN

BENGAL TIGER - பெங்கால் டைகர் (TELUGU)

தூங்கா வனம் - THOONGAVANAM

வேதாளம் VEDHAALAM

நானும் ரெளடி தான்  - NAANUM ROWDY THAN

10 என்றதுக்குள்ள - 10 ENDRATHUKKULLA

49 ஓ  - 49 'O'

புலி - PULI

மாயா - MAAYA

பாயும் புலி - PAAYUM PULI

தனி ஒருவன் - THANI ORUVAN

கிக் 2 - KICK 2 (TELUGU)

ஸ்ரீமந்த்துடு SRIMANTHUDU  (TELUGU)

மாரி MAARI

பாகுபலி - BAAHUBALI

பாபநாசம் - PABANASAM

INSIDIOUS CHAPTER 3  (ENGLISH)

மாசு (எ) மாசிலாமணி  - MASS

டிமாண்டி காலனி - DEMONTY COLONY

புறம்போக்கு (எ) பொதுவுடைமை - PURAMPOKKU ENGIRA POTHUVUDAIMAI

உத்தம வில்லன் - UTTAMA VILLAIN

காஞ்சனா 2 - KANCHANA 2

கொம்பன் - KOMBAN

PREDESTINATION (ENGLISH)

காக்கி சட்டை - KAKKI SATTAI

டெம்ப்பர் - TEMPER (TELUGU)

அனேகன் ANEGAN 

என்னை அறிந்தால் - ENNAI ARINTHAL 

”ஐ” - I

ஆம்பள - AAMBALA


2014

பிசாசு PISASU

லிங்கா - LINGAA

நாய்கள் ஜாக்கிரதை - NAAIGAL JAAKRATHAI

கத்தி KATHTHI

பூஜை - POOJAI

ANNABELLE (ENGLISH)

அரண்மனை - ARANMANAI 

பவர் POWER  (TELUGU)

ரபசா - RABHASA (TELUGU)

அஞ்சான் - ANJAAN 

வேலையில்லா பட்டதாரி - VELAIYILLA PATTATHARI

மஞ்சப்பை - MANJAPPAI

கோச்சடையான் KOCHADAIIYAAN

GODZILLA 2014 (ENGLISH)

ரேஸ் குர்ரம் - RACE GURRAM (TELUGU)

லெஜெண்ட் LEGEND 

ஜில்லா JILLA

வீரம் - VEERAM


2013

பிரியாணி - BIRIYANI 

இரண்டாம் உலகம் - IRANDAM ULAGAM

பீட்சா 2 வில்லா - PIZZA 2 VILLA 

பாண்டிய நாடு PANDIYA NADU 

ஆரம்பம் - AARAMBAM

ராமைய்யா வஸ்தாவைய்யா - RAMAYYA VASTHAVAIYA (TELUGU)

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - ITHARKUTHANE AASAIPATTAI BALAKUMARA

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - ONAYUM AATTUKKUTTIYUM

யாயா YA YA

தலைவா  - THALAIVAA

THE CONJURING (ENGLISH)

பட்டத்து யானை  - PATTATHU YAANAI 

மரியான் - MARIYAAN

சிங்கம் 2 SINGAM 2

பலுபு - BALUPU (TELUGU)

தில்லு முல்லு - THILLU MULLU

தீயா வேலை செய்யனும் குமாரு - THEEYA VELA SEIYYANUM KUMARU

AFTER EARTH (ENGLISH)

குட்டிப்புலி - KUTTIPPULI 

சூது கவ்வும் SOODHU KAVVUM 

பாட்ஷா - BAADSHAH  (TELUGU)

கேடி பில்லா கில்லாடி ரங்கா - KEDI BILLA KILLADI RANGA

INSIDIOUS (ENGLISH)

பரதேசி - PARADESI 

ஆதிபகவன் - AADHI BAGAVAN

விஸ்வரூவபம் VISWAROOPAM 

சமர் - SAMAR

கண்ணா லட்டு திங்க ஆசையா - KANNA LADDU THINGA AASAIYA

அலெக்ஸ் பாண்டியன் - ALEX PANDIYAN 


2012 

தமருகம் - DAMARUGAM (TELUGU)

துப்பாக்கி - THUPPAKKI 

ஸ்கை ஃபால் - SKY FALL (ENGLISH)

பீட்சா PIZZA

தாண்டவம் THAANDAVAM

சுந்தரபாண்டியன் - SUNDARAPANDIYAN

முகமூடி - MUGAMOODI 

தேவுடு ச்சேசின மனுஷுலு DEVUDU CHESINA MANUSHULU  (TELUGU)

THE DARK KNIGHT RISES (ENGLISH)

பில்லா 2BILLA 2 

நான் ஈ NAAN E

சகுனி SAGUNI

முரட்டுக்காளை - MURATTUKKALAI

தடையற தாக்க - THADAIYARA THAAKKA

MEN IN BLACK 3 (MIB 3)  (ENGLISH)

கலகலப்பு - KALAKALAPPU

கஹானி - KAHAANI (HINDI)

ஒரு கல் ஒரு கண்ணாடி - ORU KAL ORU KANNADI (OK OK)

அஸ்தமனம் - ASTHAMANAM 

அரவான் - ARAVAAN

சந்திரமுகி 2 நாகவல்லி CHANDRAMUKHI 2 NAGAVALLI (TELUGU)

EXAM (ENGLISH)


2011

ராஜபாட்டை  - RAJAPAATTAI

போராளி - PORALI

ஏழாம் அறிவு - ELAM ARIVU

வெடி - VEDI 

எங்கேயும் எப்போதும் - ENGEYUM EPPOTHUM

மங்காத்தா MANGATHA

அவன் இவன் - AVAN IVAN

சக்தி -  SHAKTHI (TELUGU)

யுத்தம் செய் YUDHDHAM SEI


2010

நகரம் மறுபக்கம் - NAGARAM MARUPAKKAM 

உத்தம புத்திரன் - UTHTHAMA PUTHIRAN

எந்திரன் - ENDHIRAN

விண்ணைத்தாண்டி வருவாயா - VINNAI THAANDI VARUVAAYAA


2009

ஆதவன் - AADHAVAN

மோதி விளையாடு MODHI VILAIYAADU

அயன் - AYAN


Monday, July 11, 2011

வேட்டைக்காரி


Share/Bookmark

Tuesday, July 5, 2011

அப்பாட்டக்கர் (எ) டைரக்டர் பாலாவின் பயோடேட்டா


Share/Bookmarkபெயர் 
பாலா
எடை

35 கிலோ 40 கிராம் (ஆடை அணிந்திருக்கும் போது)

தொழில் 

பாலுமகேந்திரா, பாரதிராஜா வரிசையில் ஒரு டைரக்டர் ("பா" வரிசைய சொன்னேன்)

பிடித்த லொகேஷன்

மலையும் மலை சார்ந்த இடங்களும்

பிடித்த விளையாட்டு

க்ளைமாக்ஸில் செத்து செத்து விளையாடும் விளையாட்டு

பிடித்த வரிகள் 

ஒரே க்ளைமாக்ஸ்... ஓகோன்னு வாழ்க்கை

"நா அப்புடியே ஷாக் ஆயிட்டேன்" Moment

நான் கடவுள் படத்திற்கு தேசிய விருது அறிவித்த பொழுது

சமீபத்திய அடிமை
ஆர்யா
நிரந்தர அடிமை
சூர்யா
அஜித்

இவர் மிரட்டினால் கூட பயப்படும் ஒரு ஆள்

ஆர்யா, சூர்யா

தேவைப்படும் போது முடி வளர்க்க சொல்லவும், வெட்டச் சொல்லவும் உபயோகப் படுத்தப்படும் ப்ராணிகள்

பூஜா

ஒரு படத்திற்கு ஆசைப்பட்டு வந்து, வாழ்நாள் முழுவதும் பட வாய்ப்புகளை இழந்தவர்

விஷால்

எதற்காக ஒண்ணரை கண்ணுடன் நடிக்கிறோம் என்ற தெரியாமலேயே ஒரு படம் முழுவதும் நடித்தவர்

பொது மக்கள்

படம் பிடிக்கவில்லை என்றாலும் சிலரால் அசிங்கப்படுத்தப்படுவோம் என்பதற்காக "பட்டையை கிளப்புது பாலா படம்" என்பவர்கள்

செய்த ஒரே நல்ல காரியம்

விக்ரம் என்பவருக்கு மறுபடியும் வாய்ப்பு கொடுத்ததுLinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...