Thursday, October 25, 2018

சண்டக்கோழி-2


Share/Bookmark

சண்டக்கோழி.. என்னோட லைஃப்ல மறக்க முடியாத ஒரு படம். ஏன்னா அவ்ளோ பெரிய சர்ப்ரைஸ வேற எந்தப் படமும் இதுவரைக்கும் கொடுத்த்தில்ல. சண்டக்கோழி வந்தப்போ கல்லூரில படிச்சிட்டு இருந்தோம். அன்னிக்கு செமஸ்டர் எக்ஸாம் எழுதி முடிச்சிட்டு வெளில வந்தா வெளில சண்டக்கோழி போஸ்டர். அடுத்த மூணு நாள் ஸ்ட்டி லீவு ரைட்டு கெளம்பு. அன்னிக்கு நாங்க பட்த்துக்கு போனதுகு ஒரே ஒரு காரணம் மீரா ஜாஸ்மீன் மட்டுத்தான். பேர் வேற சண்டக்கோழின்னு இருந்த்தால அது ஒரு ஹீரோயின் ஓரியண்ட்ட் சப்ஜெக்ட்டா இருக்கலாம். மீராஜாஸ்மீன் கெத்து காமிச்சிருக்கும்னு கெளம்பிப் போனோம்.  ஆனா லிங்குபாய் குடுத்தாரு பாருங்க ஒரு ட்விஸ்ட்டு. தம்பி காசி வெட்டிருவான் இறங்கி ஓடுன்னு அந்தப் பெரியவர் சொன்னதும் அய்ய்யோ ஹீரோ செத்தாண்டான்னு நினைக்கும்போது இறங்கிப்போய் பொள பொளன்னு பொளக்குறது.. அடுத்து அண்ணேன் பையன் மேல எதுவும் கை வைச்சிடலயென்னதும். ஒருத்தன தூக்கிப்போட்டு மிதிச்சி ராஜ்கிரன் ஒருத்தன எட்டி மிதிச்சி இந்த மண்ணுல உள்ள ஒவ்வொரு உசுறலயும் என்னோட உசுரும் கலந்துருக்குடான்னு சொல்லி ஒருத்தன குச்சி மாதிரி ரெண்டா உடைச்சி போடுவாறு. 

ஒரு ட்ரெண்ட் செட்டர் அந்தப் படம். எப்பவும் வில்லன் பெரிய ஆளா இருப்பான். ஹீரோ அடிமட்ட்த்துலர்நுது அவன எதிர்ப்பான். ஆனா வில்லன் பெரிய ஆளு.. ஹீரோ அவன விட பெரிய ஆளு அப்டிங்குற கான்செப்ட் அதுக்கப்புறம் நிறைய படங்கள்ல வர ஆரம்பிச்சிது. விஷாலுக்கு தமிழ்ல்ல மட்டுமில்லாம தெலுகுலயும் மிகப்பெரிய மார்க்கெட் உருவாக காரணமா இருந்த படம் இந்த சண்டைக்கோழி. குருவி சேக்குற மாதிரி லிங்கு பாய் சேத்து வச்சிருந்த மரியாதையெல்லாம் அஞ்சான் அப்டிங்குற ஒரு படத்தோட நம்மல்லாம் சேந்து சிதைச்சிட்டோம்.  அவருக்கு நாம செஞ்சது மிகப்பெரிய பாவம். இத விட மொக்கைப் படம் எடுத்தவன்லாம் அசால்ட்டா வெளிய சுத்திக்கிட்டு இருக்கபோ லிங்குபாய்க்கு மனதளவுல மிகப்பெரிய பாதிப்பை சமூக வலைத்தளங்கள் மூலமா உண்டாக்கிட்டோம். அந்த பாதிப்புலருந்து அவர் மீண்டு வர சில வருஷங்கள் ஆயிருச்சி. புதுசா எதாவது ட்ரை பன்னி மறுபடி சிக்கல்ல மாட்டாம இருக்க, ஏற்கனவே ப்ளாக்பஸ்டரான சண்டக்கோழியோட இரண்டாவது பாகத்தை எடுத்து ஒரு சேஃப்பான கேம் விளையாட முயற்சி பன்னிருக்காரு லிங்கு பாய். விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி இவங்கல்லாம் நடிச்சி யுவன் இசையில லிங்குபாய் இயக்கி வெளிவந்துருக்க இந்த சண்டைக்கோழி -2 எப்டி இருக்குன்னு பாக்கலாம்.

சுத்துப்பட்டி ஏழு கிராமங்களும் சேர்ந்ந்து நடத்துற வேட்டைக்கருப்பு கோயில் திருவிழாவுல கறிச்சாப்பாட்டுல உண்டாகுற சின்ன சண்டை மிகப்பெரிசா மாறி இரண்டு கோஷ்டிங்களுக்குள்ள மோதலா மாறி அதுல வரலட்சுமியோட கணவர் இறந்துடுறாரு. பதிலுக்கு அவரக் கொன்னவங்க குடும்பத்தையே கருவருக்கனும்னு முயற்சி பன்னி எல்லாரயும் கொல்ல கடைசி பையன கொல்லப் போகும்போது துரை அய்யா வந்து காப்பாத்தி அவனோட உசுற காப்பாத்துற பொறுப் பேத்துக்கிறாரு. ஏழு வருஷம் கழிச்சி திரும்பம்வும் திருவிழா நடத்த, அந்த திருவிழா முடியிறதுக்குள்ள மிச்சம் இருக்க ஒரு பையனயும் கொல்ல வரலட்சுமி தீவிரமா முயற்சிக்க அவங்கட்டருந்து ராஜ்கிரனும் அவரோட பையன் விஷாலும் எப்படி அந்தப் பையன காப்பாத்துறாங்கன்றதுதான் கதை.

வீடியோ விமர்சனம்



ஒரு படம் ஓடும்போது இடையில திருவிழா வரலாம். ஆனா ஒரு திருவிழாவுக்கு இடையில அப்பப்ப படம் ஓடுறது இந்தப் படத்துலதான். வேட்டக்கருப்பு திருவிழாவுல படம் ஆரம்பிச்சி அதே திருவிழா முடியும்போது படமும் முடியிது.

ஏற்கனவே சொன்ன மாதிரி சண்டக்கோழி முதல் பாகத்தோட வெற்றிக்கு காரணம் அது நமக்கு கொடுத்த சர்ப்ரைஸ் எலெமெண்ட்ஸ் தான். இந்தப் படத்துல அது ஒண்ணு தான் மிஸ்ஸிங்.

படத்தோட ப்ளஸ்… சர்ப்ரைஸ் எலெம்ண்ட்ஸ் இல்லன்னாலும் சண்டக்கோழி முதல் பாகத்தோட ரெண்டவது பாதி பாக்குற மாதிரியான் ஒரு சுவாரஸ்யத்த படம் முழுசும் கொண்டு வந்துருக்காங்க. விஷால் ஆளூ அப்டியே இருக்காரு. கீர்த்தி சுரேஷ் அல்டிமேட்.  முதல் ஒருசில காட்சிகள்ல கீர்த்தி பேசுறது கொஞ்சம் எரிச்சலா வரும். என்ன பன்ற? மீராஜாஸ்மீன் மாதிரி.. அதான் நமக்கு வரலைல்ல.. விட்டுற வேண்டியதுதான.  போகப் போக மனசுல நின்னுடுறாங்க. அதுவும் திருவிழாவுல ஒரு டான்ஸ் ஆடுறாங்க பாருங்க. தரம். என்ன ஒரு ப்ரச்சனைன்னா தெலுகுல நாக சைதன்யான்னு ஒருத்தன் இருக்கான். அவனால வாய மூட்வே முடியாது. ஆல் டைம் ஓப்பன்லதான் இருக்கும். கீர்த்தி சுரேஷுக்கும் கிட்டத்தட்ட அதே ப்ரச்சனை இருக்குன்றதுதான் கொஞ்சம் வருத்தமான் விஷயம்.

படத்துல ராஜ்கிரன் கூட ஒரு நாலு கெழவங்க இருப்பாங்க. ஆரம்பத்துலருந்து கடைசி வரை.. ”டேய் அய்யா மேல கை வச்சிட்டாங்கடா.. அவங்க மொத்தத் தலையும் உருளனும்டா.. டாய் தம்பி மேல கை வச்சிட்டானுக்கடா அவங்க மொத்தத் தலையும் உருளனும்ண்டா.. டாய் நம்ம ஊர்க்காரன் மேல கை வைச்சீட்டாஙக்டா…அவங்க மொத்தத் தலையும் உருளனும்டா…”ன்னு சொல்லிக்கிட்டே இருப்பானுங்களே தவற கடைசி வரைக்கும் ஒரு ப்ளேடால கூட யாரயும் கிழிக்க மாட்டானுங்க

கேமரா, ஸ்டண்டு, பின்ணனி இசை எல்லாமே சூப்பர். யுவன் பாடல்கள்ல மட்டும் கொஞ்சம் கவுத்துட்டார். கம்பத்து பொன்ணூ பாட்டு மட்டும் சூப்பரா இருக்கு, அதே மாதிரி அந்தப் பாட்ட நல்லாவும் பிக்சரைஸ் பன்னிருக்காங்க. விஷாலும் சரி, ராஜ்கிரணும் சரி முதல் பாகத்துல கொடுத்த பர்ஃபார்மன்ஸூல கொஞ்சம் கூட குறையாம இதுலயும் பன்னிருக்காங்க.

இது வந்து என்ன கதைன்னே தெரியில.. இதுமாதிரி தமிழ்ல 45003 படம் வந்துருச்சி.. இதெல்லாம் ஒரு கதையா? அப்டினுலாம் சில விமர்சகர்கள் சொல்ல வாய்ப்பு உண்டு. கதையே இல்லாம படம் எடுக்கும் திறமையானவர்கள்ல ஒருத்தர்தான் லிங்குசாமி. விளையாட்டா சொல்ல்ல… சீரியஸாதான் சொல்றேன். ”பையா படத்துல பாத்தீங்கன்னா கதையே இருக்காது… “அப்டின்னு லிங்குசாமியே சொல்லிருக்காரு. ஆனாலும் படம்  ஹிட்.

ஏற்கனவே பார்த்த மாதிரியான காட்சிகள் இருந்தாலும், ஒரு சில காட்சிகள் எளிதா யூகிக்க முடியிறதா இருந்தாலும் படம் கொஞ்சம் கூட போர் அடிக்காம ஓடுது. ராஜ்கிரன், விஷால், ஊரு, கோயில்னு அந்த சண்டக்கோழி atmosphere eh ஒரு நல்ல ஃபீல குடுக்குது. கண்டிப்பா ஒரு தடவ குடும்பத்தோட பார்க்கக்கூடிய ஃபேமிலி எண்டர்டெய்னர் தான் இந்த சண்டக்கோழி. 

Tuesday, October 9, 2018

NOTA - Review !!!


Share/Bookmark

மொத்தம் நடிச்சதே மூணு படம் தான். அதுவும் தெலுங்குல.. முதல் முறையா தமிழ்ல எண்ட்ரி ஆகுறாரு.. டைரக்டர் பெரிய ஆள் இல்லை.. ரொம்பப் பெரிய banner um இல்ல. அப்டி இருந்தும் ஒரு பட்த்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைச்சிருக்குன்னா ஒரு மிகப்பெரிய விஷய்ம் தான். நம்ம ஊரு ஹீரோக்கள், மக்களுக்கு ரொம்ப பழக்கமான ஹீரோக்கள் சிலர் படங்களுக்கு கூட இந்த அளவு வரவேற்பு இருந்த்தில்ல. அந்த வசீகரமான தோற்றத்துல விஜய் தேவர்கொண்டா ஆந்த்ரா கார்ங்க மனசுல மட்டும் இல்லாம தமிழ்நாட்டுலயும் மக்கள் மனசுல நல்ல இடம் பிடிச்சிருக்காரு. அதுமட்டும் இல்லாம மத்திய மற்றும் மாநில அரசுகள் மேல மக்களுக்கு பெரிய அதிருப்தி நிலவிட்டு இருக்க சமயத்துல நோட்டா அப்டிங்குற டைட்டிலோட படம் ஆரம்பிச்சதும் மக்கள் இன்னும் ரெட்டிப்பு மகிழ்ச்சியோட பட்த்த உற்சாகப்படுத்திருக்காங்க. ஆனந்த் சங்கர் இய்க்கத்துல சாம் CS இயக்கத்துல விஜய் தேவ்ரகொண்டா சத்யராஜ் நடிச்ச நோட்டா படம் எப்டி இருக்குன்னு பாக்கலாம். 

கதை.. சின்ன வயசுலயே எதிர்பாராத விதமா சி.எம் ஆகுற ஒருத்தர் என்ன பன்றாரு அப்டிங்குறதுதான். இதே ஒன் லைனோட ஏற்கனவே முதல்வன், தெலுகுல லீடர், பரத் அனி நேனு அப்டின்னு ஏற்கனவே சில படஙக்ள் வந்துருக்கு. இந்த மூணு படங்கள்லயும் ஹீரோவுக்கு அந்த முதல்வர் பதவி வர்றதுக்கே கிட்ட்த்தட்ட அரை மணி நேரம் ஆகும். அதுக்கப்புறம்தான் அவஙக் களத்துல  இறங்கி பூந்து விளையாடுவாங்க. ஆனா இந்தப் பட்த்துல வெரி ஃபர்ஸ்ட் சீன்லயே விஜய் தேவர்கொண்டாவுக்கு முதல்வர் பதவி. அட்டே.. முதல் சீன்லயேவா.. அப்ப சம்பவம் பெருசா இருக்கும் போலயேன்னு நினைச்சா.. ஒண்ணியும் இல்ல..  

பெரிய அளவுல எந்த ஒரு இம்பாக்டயும் ஏற்படுத்தாத ரொம்ப சாதாரணமான காட்சிகளோட படம் சொத சொதன்னு போய்க்க்கிட்டு இருக்கு. நம்மளும் இப்ப விஜய் தேவர்கோண்டாவுக்கு கோவம் வரும் பாரு.. இப்பலருந்து பிச்சி எடுக்கப்போராரு பாருன்னு வெய்ட் பண்ணிக்கிட்டே இருப்போம்.  அதுக்குள்ள படம் முடிஞ்சி போச்சு.

வீடியோ விமர்சனம்




திரைக்கதைங்குற பேர்ல தமிழ்நாட்டுல கடந்த ரெண்டு வருஷமா நடந்த சில சம்பவங்கள அப்டியே imitate பன்னி வச்சிருக்காங்க. மிகப்பெரிய காமெடிய்யெல்லாம் நேரடியா பாத்துட்டோம். திரும்ப அதயே திரையில கொண்டு வந்து அதன் மூலமா என்ன சொல்ல வர்றாங்கன்னே தெரியல. சென்னை வெள்ளம் டைம்ல நம்ம social media நல்லா செயல்பட்டாலும் பட்டுச்சி வர்ற போற பட்த்துலயெல்ல்லாம் ஃபேஸ்புக்குல இளைஞர்கள ஒண்ணு கூட்டுறேன், twitter la … இளைஞர்கள் சக்தின்னு இன்னும் எத்தனை பட்த்துல ரம்பம் போடப்போறாஙக்ன்னு தெரியல.

.அப்புறம் பட்த்துல மிகப்பெரிய கன்ஃபியூஷன் என்ன்ன்னா எடுக்க வேண்டிய சீனயெல்லாம் வாயால சொல்லி முடிச்சிடுறாஞக். வாயால சொல்லி முடிக்க வேண்டிய சீனையெல்லாம் எடுத்து வச்சிருக்காங்க. உதாரணமா தமிழ்நாட்டோட CM. அவருக்கு தண்டனை கிடைக்கிது. கோர்ட்ல தீர்ப்பு சொல்றத ஒரு ஷாட்ல காமிக்கனும். அவர கைது பன்றத ஒரு ஷாட்ல காமிக்கனும். ஆனா அத ஜஸ்ட் வாயல சொல்லி முடிச்சிடுறாங்க. அடுத்து செம்பரம்பக்கம ஏரியால ஊருக்குள்ள வெள்ளம் வந்துருச்சி. Social media பசங்கல்லாம் உதவி பன்ன போயிருக்காங்க. அப்ப வெள்ளத்தயும் வெள்ளத்துல சிக்கிருக்க ஒரு ரெண்டு மூணு பேர  எப்டி காப்பாத்துறாங்கன்றதயும் காட்டுனாதான் அந்த சீனு வெய்ட்டா இருக்கும். அதாவது ஒரு டைனோசருங்குறது செம்ம பெருசா இருக்கும்.. பல்லுல்லாம் ஷார்ப்பா இருக்கும். வாயி அத்தாத் தண்டி இருக்கும். எடை மட்டும் 200 டன் இருக்கும். இப்டியெல்லாம் வாயாலயே டைனோசர பத்தி அரை மணி நேரம் சொல்றத விட ஒரு சீன் டைனோசர காமிச்சா கிடைக்கிற எஃபெக்ட்டு வேற.
பட்ஜெட் இல்லைன்னு சொல்றீங்களா.. சரி ஒத்துக்கலாம்அப்புறம் ஏன் அந்த மாதிரி சீனயெல்லாம் வைக்கிறீங்க. உங்க பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஸ்க்ரீன்ப்ளே எழுதிருக்கலாமே.

இந்தப் படம் ஒரு பொலிடிக்கல் சட்டைராவும் ஒர்க் அவுட் ஆகாம இல்ல ஒரு சீரியஸான பொலிட்டிகல் த்ரில்லராவும் ஒர்க் அவுட் ஆகாம நட்டக்க நடுவுல என்ன பன்றதுன்னே தெரியாம அம்போன்னு நிக்கிது.

நல்ல ஒரு ப்ளாட் ஃபார்ம். அனுபவமில்லாத முதல்வர். அவருக்கு உதவி செய்ய ஒரு வயதான அனுபவமுள்ள பத்திரிக்கையாளர் சத்யராஜ். சப்போர்ட்டிங் ஆக்டர்களா நாசர், M.S,பாஸ்கர்னு சூப்பர் நடிகர்கள். சூப்பரா பன்னிருக்கலாம். ஆனா ரொம்ப மோசமான ஸ்க்ரீன் ப்ளே. நாசருக்கும், சத்யராஜூக்கும் அவங்க சின்ன வயசுல இருக்க ஃப்ளாஷ்பேக் காட்சிகள் ஒரு பத்து நிமிஷத்துக்கிட்ட ஓடுது. அதெல்லாம் பட்த்துக்கு எந்த வகையில சப்போர்ட் பன்னுதுன்னே தெரியல. தண்டம். இன்னொரு கொடுமை என்ன்னா பட்த்துக்கு நோட்டான்னு பேர் வச்சிருக்காங்க. அதுக்கும் இந்தப் பட்த்துக்குமே என்ன சம்பந்தம்னு தெரியல.

‌ஹீரோயின வச்சி மொக்கை போடல.. தேவையில்லாத டூயட் இல்ல..  ஹீரோவும் அவர சுத்தி நடக்குற அரசியல் மட்டும்தாம் 2:15 மணி நேரம் ஓடுது. எவ்வளவோ சூப்பரா எடுத்துருக்கலாம். அவ்ளோ டைம் இருந்துச்சி. ஆனா  எதுமே சொல்லல. 
‌ரௌடி சிம் நு சொல்லுவாங்க.. டைட்டில்லயே ரவுடி சி எம்னு தான் போடுறாங்க .நமக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. ரவுடின்னா அடிச்சி அந்தர் பப்ன போறார்னு.  ரவுடின்னா தமிழ் சினிமால மொத சீன்லயே மார்க்கெட்ல ஓட விட்டு ஒருத்தன வெட்டுனாதான் ரவுடி.  அப்டி ஒரு பில்ட் அப் பன்னி வச்சிருக்கோம். ஆனா இங்க இவரு ஒரே ஒரு கெட்ட வார்த்தை மட்டுமே பேசி ரவுடி சி.எம் ஆ ஃபார்ம் ஆகிடுவாரு. 

‌நாசருக்கு ஒரு மெக்கப்ப் போட்டுருப்பாங்க பாருங்க. சாதாரனாமாமே நாசருக்கு மூஞ்சில முக்கால்வாசி  மூக்குதான் இருக்கும்... இதுல செகண்ட் ஆஃப்ல அவருக்கு ஆக்ஸிடெண்ட் ஆணப்புறம் உள்ள கெட்டப்புல மூக்க இன்னும் கொஞ்சம் பெருசாக்கி விட்டுட்டாங்க. மூஞ்சி முழுக்கவுமே மூக்குதான் இருந்துச்சி. ரொம்ப மோசமான கெட்டப்.

உருப்படியான ஒரே விஷயம் விஜய் தேவரகொண்டா ஆளு சூப்பரா இருக்காரு. அவருக்கு குடுக்கப்பட்ட சீன்ஸ நல்லா பன்னிருக்காரு. அவ்ளோதான். இசையெல்லாம் ரொம்ப சுமார் ரகம்


படம் ரொம்ப போர் அடிக்கல. ஆனா பெரிய சுவாரஸ்யமாவும் போகல.
சிம்பிளா சொல்லனும்னா இதே டெம்ப்ளேட்டோட வந்த பரத் அனி நேனுங்குற படம் குடுத்த impact la 1% கூட இந்தப் படம் குடுக்கலங்குறதுதான் என்னோட கருத்து. உங்களொட ரெண்டரை மணி நேரத்த பாத்து செலவு பன்னுங்க

Thursday, October 4, 2018

விஜய்ணா ஏன் அப்டி பேசினார் தெரியுமா?


Share/Bookmark
சர்கார் ஆடியோ லாஞ்ச்ல விஜய்ணா, முதலமைச்சர் ஆவேன். லஞ்ச ஊழல ஒழிப்பேன்னுலாம் பேசுனது எதனால தெரியுமா?


Tuesday, October 2, 2018

செக்க சிவந்த வானம் !!!


Share/Bookmark

இந்த ஆடுகளம்னு ஒரு படம் பாத்துருப்பீங்க… அதுல பேட்டக்காரன்னு ஒருத்தர் இருப்பாரு. ஒரு காலத்துல ஓஹோன்னு வாழ்ந்தவரு. சம காலத்து பசங்க கூட போட்டி போட முடியாம ரொம்ப கஷ்டப்படுவாரு. , தன்னோட கெத்த நிரூபிக்கிறதுக்காக நிறைய தில்லு முள்ளெல்லாம் பன்னுவாரு. அந்த மாதிரி தான் மணி சார். ஒரு காலத்துல ஓஹோன்னு பேர் சொல்லுற படங்கள எடுத்தவரு. சம கால படங்களோட போட்டி போட முடியாம ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தாரு. நானும் யூத்துக்கு படம் எடுக்குறேன், மேல் தட்டு மக்களோட லவ்வ படமாக்குறேன்னு பல வித லவ் ஸ்டோரிக்கள எடுத்து, ஆடியன்ஸ தியேட்டர விட்டு தெறிச்சி ஓட வச்சதுதான் மிச்சம். அவர் எடுத்த லவ் ஸ்டோரி எதுவுமே மக்களுக்கு பிடிக்கலன்னு அவரு தெரிஞ்சிக்கவே பத்து பதினைஞ்சி வருஷன் ஆயிருக்கு.  லவ் ஸ்டோரிய தலைய சுத்தி தூக்கி வீசியே ஆக வேண்டிய கட்டாயம், ஜெயிச்சே ஆக வேண்டிய கட்டாயம். இப்படி பல கட்டாயங்களுக்கு நடுவுல ஒரு கொரியன் படத்துல இன்ஸ்பையர் ஆகி எடுக்கப்பட்ட படமான இந்த செக்கச் சிவந்த வானம் எப்டி இருக்குன்னு பாக்கலாம்.

மணி சார் எடுத்த கடந்த சில படங்களைப் பாத்து கடுப்பாகி இனிமே மணி சார் படமே பாக்கக் கூடாது அப்டின்னு முடிவெடுத்த என்னைய மாதிரி பல பேர இந்தப் படத்தப் பாக்க வச்சதுக்கு முக்கியமான காரணம் இந்தப் படத்தோட ஸ்டார் காஸ்டிங். நாலு முன்ணனி ஹீரோக்கள், ப்ரகாஷ்ராஜ், ஜோதிகா.. அப்றம் எப்டி இந்தப் படத்த பாக்காம விடுறது.

வீடியோ விமர்சனம்

படத்தோட கதை ட்ரெயிலரப் பாத்தாலே எல்லாருக்கும் தெரியும். பெரிய கை ப்ரகாஷ்ராஜ் மட்டையானதும் அவரோட இடம் யாருக்கு அப்டிங்குற சண்டை அவரோட மூணு மகன்களுக்கு உண்டாகுது. அவங்களுக்குள்ள அடிச்சிக்கிட்டு யாரு அந்த இடத்த புடிக்கிறாங்கங்குறது தான் கதை

நாலு ஹீரோக்கள் இருந்தாலும் நாலுபேருக்கும் ஈக்குவலான ஸ்க்ரீன் ஸ்பேஸ் குடுத்து ஸ்க்ரீன் ப்ளே பன்னிருக்காங்க. நாலு பேரும் அதே மாதிரி நல்லாவே நடிச்சிருக்காங்க. குறிப்பா விஜய் சேதுபதிக்கும், சிம்புவுக்கும் ரசிகர்கள உற்சாகப் படுத்துற மாதிரி ஜாலியான வசனங்கள். சிம்புவோட ரசிகர்களெல்லாம் லெமூரியாக் கண்டத்தோட வழக்கொழிஞ்சி பொய்ட்டாங்கன்னு நினைச்சிட்டுருந்தேன். ஆனா சிம்பு எண்ட்ரிக்கு தியேட்டர் விசில் தெறிக்கிது. ஹிட்டு குடுத்து பல வருஷம் ஆச்சு. எந்தப் படமும் சொன்ன தேதிக்கு வர்றதில்லை. இருந்தாலும் இவ்வளவு ஃபேன் பேஸ் மெய்ண்டய்ன் பன்றது பெரிய விஷய்ம் தான்.

முதல் பாதி அப்டியே போரடிக்காம போகுது. ரெண்டாவது பாதில அண்ணன் தம்பிகளூகுள்ள சண்டை ஆரம்பிச்சதும் அது ஒரு சீரியஸான சண்டையாவே நம்மாள உணர முடியல. அவனுங்கத்தான் யுத்தம் நடக்குது யுத்தம் நடக்குதுன்னு அப்பப்ப சொல்லிக்கிறாங்க. ஆனா பாக்குற நமக்கு அப்டி ஒரு சீரியஸான யுத்தம் நடக்குற ஒரு ஃபீலே வர மாட்டுது. ஆடியன்ஸ அந்த கதைக்களத்துக்குள்ள இழுக்க முடியலன்னா அவங்க வைக்கிற காட்சிகளோட அழுத்தத்தையும் உணர வைக்க முடியாது.

எப்படி அர்விந்த் சாமிய அவங்க ரெண்டு பேரும் வீழ்த்துறாங்கன்றதுக்கு ரெண்டு  மூணு சீன் வச்சிருக்காங்க. அபாரம். ஒரு கும்பல் ரவுடிங்கள கூடாரத்துக்குள்ள விட்டு 30 செகண்ட் மோட்டிவேஷனல் ஸ்பீச் குடுக்குறாரு. மொத்த பயலுகளும் அவர் கூட சேந்துடுறாய்ங்க. சிங்கம் மாதிரி இருந்த அர்விந்த சாமி ரெண்டு மூணு இழப்புலயே பொட்டியத் தூக்கிட்டு ஊர் ஊரா ஓட ஆரம்பிச்சிடுறாரு.

சிம்பு அவங்க அம்மா கிட்ட பேசுற மாதிரி ஒரு காட்சி. தளபதில ரஜினியும் ஸ்ரீவித்யாவும் பேசிக்கிற சீன் மாதிரி எடுக்க முயற்சி பன்னிருக்காரு.ஆனா ரொம்ப ஆர்டிஃபீஷியலான காட்சியாகிப்போச்சு.  என் சாயாவ செத்ததுக்கு நீங்க யாருமே ஃபீல் பன்னலம்மாம்பாரு.. டேய் உன் சாயாவ நீயே ரெண்டு சீன்ல தான் பாத்துருக்க. இதுல உனக்கே அழுக வரக்கூடாது. இதுல அம்மாவ வேற அழுகச்சொல்லுற… அம்மா.. நீங்க என் கூட இருந்த்தே இல்லம்மான்னுவாரு. இவந்தான் யார் கூடயும் அதிகமா பழகக் கூடாதுன்னு செர்பியால போய் படுத்துக்கெடப்பாரு. இதுல அம்மா கூட இல்லன்னு பீலிங் வேற.

இது ரொம்ப விறுவிறுப்பான திரைக்கதையும் இல்ல.. ஒரு ப்ரில்லியண்ட்டான ஸ்க்ரீன்ப்ளேயும் இல்ல. இத ஒரு நல்ல த்ரில்லரா கொண்டுபோயிருக்கலாம். அதுக்கான ஸ்கோப் கதையில இருக்கு. ஆடியன்ஸ் நாமதான் ஒருவேள இப்டி ட்விஸ்ட் வைப்பாங்களோ இல்ல அப்டி ட்விஸ்ட் வைப்பாங்களோன்னு யோசிக்கிறோம். ஆனா மணி சார் ட்விஸ்டே இல்லாத்துதான் இங்க ட்விஸ்டு அப்டின்னு ஒரு ட்விஸ்ட் வச்சிருக்காரு.

மணி சார் இந்தப் படத்துல செஞ்சிருக்கது ரெண்டு சாதனை. ஒண்ணு ரொம்ப நாளுக்கு அப்புறம் படம் ஓடிக்கிட்டு இருக்கும்போது பாதிலயே தெறிச்சி ஓடாம முழு படத்தையும் தியேட்டர்ல உக்கார்ந்து பாக்குற மாதிரி ஒரு படம் எடுத்துருக்காரு. இன்னொன்னு சிம்பு நடிச்ச ஒரு படத்த கரெட்டான தேதிக்கு ரிலீஸ்  பன்னிருக்காரு. ரெண்டாவது தான் மிகப்பெரிய சாதனை.

நண்பர்கள் பல பேரு ஏ.ஆர்.ரஹ்மான் செக்க சிவந்த வானத்துக்கு செமையா மியூசிக் போட்டுட்டு சர்காருக்கு மட்டும் சங்கு ஊதிட்டாருன்னுலாம் போட்டுக்கிட்டு இருந்தாங்க. எனக்கென்னவோ இந்தப் படத்துல கூட இசை பழைய ஏ.ஆர்.ரஹ்மான் படங்கள் மாதிரி பெரிய அளவுல பாதிப்ப உண்டாக்குற மாதிரி இல்லை.

ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்கும் கொஞ்சம் கூட போர் அடிக்காம படம் ஓடுது. அதே மாதிரி ஆஹா ஓஹோ.. மணி சார் ஈஸ் பேக், மணீ சார் ஈஸ் சைடு.. அப்டின்னு எக்ஸைட் ஆகுற அளவுக்கெல்லாம் படத்துல ஒண்ணும் இல்ல.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...