Friday, October 28, 2011

7ஆம் அறிவு- A.R.முருகதாஸின் கந்தசாமி


Share/Bookmark

குறிப்பு: இந்த பதிவை படிக்கிற யாரும் "இய்யாய்... தமிழனோட பெருமையை பத்தி எடுத்துருக்க படத்த நீ எப்புடிடா குறை சொல்லலாம்" னு சண்டைக்கு வந்துடாதீங்க.. அதுமாதிரி ஆட்களுக்கு திமிரு விஷால் ஸ்டைல்ல ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன்... "நானும்  தமிழ்நாட்டுக்காரன் தாண்டா......." இந்த படத்தோட முயூசிக் ரிலீஸ்ல நம்ம முருகதாஸ் சார் வந்து "படம் நீங்க எதிர் பாக்குறத விட பயங்கரமா இருக்கும். அப்புடி இருக்கும் இப்புடி இருக்கும்"னு  ஏத்தி விட்டாரு. சரி..கருப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டானேன்னு நம்பி போய் பாத்தா..சொல்லிட்டான்யா பொய் சொல்லிட்டான்...

அந்த 15 நிமிஷ போதி தர்மர் கேரக்டரை வச்சி படம் முழுக்க ஓட்டனும்னா எப்புடி முடியும்? அந்த 15 நிமிஷத்த தவற படத்துல சூர்யா ஒரு டம்மி பீஸா வந்து போறாரு. கருமம் இந்த 6 பேக் வச்சாலும் வச்சாய்ங்க எவனும் சட்டை பட்டன போட மாட்டேங்குறாய்ங்க..பாட்டுன்னாலும் கழட்டிடுறானுக... ஃபைட்டுன்னாலும் கழட்டிடுறானுக..(சட்டையச் சொன்னேன்) அரவிந்தனா வர்ற சூர்யாவ இதவிட கேவலமா காமிக்கவே முடியாது.. காரக்கொழம்பு கொட்டிவிட்ட தலையோட தான் படம் முழுசும் வர்றாரு... "முன் அந்தி சாரலில்" பாட்டுல சூர்யாவோட காஸ்டியூமையும் அந்தமண்டையையும் பாத்தா.... கருமம்... பாலாகிட்ட மாட்டுன ஆர்யாவ விட கேவலமா இருக்காரு..

சூர்யா ஒரு மிக சிறந்த நடிகர்.. ஆனா அவரோட skills பாதிய கூட இந்த படத்துல யூஸ் பண்ணல.. கவனமில்லாத திரைக்கதை. அப்புறம் எனக்கு படத்துலயே ரொம்ப கடுப்பானதுன்னா "யம்மா யம்மா" பாட்டு picturization தான். பாட்டு ட்யூன்லயும் சரி.. வரிகளும் சரி.. அபூர்வ சகோதரர்கள் "உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்" ரேஞ்சுக்கு இருந்துச்சி. ஆனா படத்துல வர்றா situation um, picturizationum அந்த பாட்டுல 10% கூட இருக்காது.இதுக்கு 1 கோடி செலவு பண்ணி ரயில்வே ஸ்டேஷன் செட்டு போட்டாங்களாம்பா.. இந்த சோக பாட்டுக்கு சூர்யா அந்த செட்டுக்குள்ள நின்னு எதோ "அடியே கொல்லுதே" பாட்டுக்கு டான்ஸ் ஆடுற மாதிரி ஸ்டெப் போட்டுகிட்டு இருக்காரு.

அப்புறம் ஸ்ருதி.. சற்று டொம்மை போல இருக்கு... இது பக்கத்துல சூர்யா கேவலமா தெரியிரானா இல்ல சூர்யா பக்கதுல இது கேவலமா தெரியுதான்னு தெரில.. மொத்ததுல சூர்யா-ஸ்ருதி காம்பினேஷனே சற்று டொம்மை தான். படத்துல ஸ்ருதி சன் மியூசிக் காம்பயர்ஸ் மாதிரி தான் தழிழே பேசும். ஒரு சீன்ல தமிழ பத்தி தப்பா பேசுன ஒருத்தர்கிட்ட சுருதி தமிழர்களோட பெருமை பத்தி சீரியஸா டயலாக் பேசும்போது ச்சிப்பு வந்துருச்சி ச்சிப்பு. படம் ஃபுல்லா ஸ்ருதி "தமிலர்கள், தமிலர்கள்" ன்னு தான் சொல்லுது.

அப்புறம் முருகதாஸ்.... கிட்டத்தட்ட தசாவதாரம் ஸ்டைல்லயே Screen play எழுதிருக்காரு.கிட்டத்தட்ட என்ன.. அதே தான்.. அங்க ரங்கராஜ நம்பி மாதிரி இங்க போதி தர்மர்...அங்க ஃப்ளட்ச்சர் மாதிரி இங்க நம்ம ச்சைனீஸ் மாப்ள டோங் லீ.. அதுல கமல் scientist. அசின் கொஞ்சம் கிங்கினி மங்கினி.. அதே மாதிரி இங்க ஸ்ருதி scientist நம்ம சூர்யா கொஞ்சம் கிங்கினி மங்கினி... அப்புறம் "The Happening" "Avatar" எந்திரன் ன்னு சில படங்கள்லருந்து சில சீன்ஸ உருவிருக்காரு சரி விடுங்க என் மைண்டு ஒரு மானங்கெட்ட மைண்டு.. கேட்டா இன்ஸ்ப்ரேஷன் ஆப்ரேஷன்னு கதையை விடுவாய்ங்க.. அப்புறம் அங்க அங்க இந்தியா-பாக்கிஸ்தான், இந்தியா-சைனா, ஈழம், வீரம், மானம், ரோஷம் ன்னு டயாலாக்குகள சேத்துவிட்டுருக்காரு.

அப்றம் ஹாரிஸ் ஜெயராஜ்.. பாட்டு எல்லாமே சூப்பர்.. ஆனா BGM மட்டை.., வில்லனுக்கு ஒரு  BGM போட்டுருக்காரு பாருங்க.. கருமம்.. எங்க ஊர்ல ஐஸ் வண்டில Horn அடிச்சா அந்த சவுண்டுதான் வரும்.. படத்துல காமெடிங்கறது சல்லடை போட்டு தேடனும் இல்லன்னா நாமலே கஷ்டப்பட்டு எதாது ஒரு சீனுக்கு சிரிச்சிக்க வேண்டியது தான். படத்துலயே சிரிப்பு வந்த ஒரே டயலாக்   " டோங் லீ" ங்கற பேருக்கெல்லாம் அட்ரஸ் சொல்றதில்லன்னு ஒருத்தர்
சொல்லுவாரு. அதுக்குதான். வில்லன் செம.. அவருக்கு இருக்க ரெண்டு ஃபைட்டும் சூப்பர்.

படத்தோட ப்ளஸ்னு பாத்தா முதல் 15 நிமிடமும், வில்லனும் தான்.

மொத்ததுல

எழாம் அறிவு - இருக்கதுக்கான அறிகுறியே இல்ல.

Monday, October 24, 2011

தலைவரின் சில அரிய புகைப்படங்கள்


Share/Bookmark
படங்கள் மின் அஞ்சலில் பெறப்பட்டது

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...