Friday, December 18, 2009

நா அடிச்சா தாங்க மாட்ட ..


Share/Bookmark

இந்த பதிப்பில் வரும் சம்பவங்கள் கதாபாத்திரங்கள் யாவும் உண்மையே. ஆனா யார் மனதையும் புண்படுத்துவற்காக அல்ல.

இடம்: விஜய் வீடு.
நாள் : வேட்டைக்காரன் ரிலீஸ் ஆனா மூன்றாவது நாள்.

விஜய்: என்னப்பா இப்புடி ஆயிடுச்சி. போன வாரம் தான் சன் டிவி ல "வருகிறது வேட்டைக்காரன்" ன்னு போட்டாங்க. இந்தவாரம் "இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக, திரைக்கு வந்து சில நாட்களே ஆனா" ன்னு போடா ஆரம்பிச்சிட்டாங்க. ரொம்ப கஷ்டமா இருக்குப்பா...

எஸ்..சந்திரசேகர்: ஆமாண்டா மகனே... படம் வர்றதுக்கு முன்னாடி டிரைலர் மட்டும் 25 நாள் ஓடுனிச்சி. ஆனா படம் நாலு நாள் கூட தாக்கு புடிக்க மாட்டேங்குதேப்பா...

விஜய்: ஆமாப்பா.. என்னோட அடுத்த படமாவது ஒரு வாரம் ஓடுற அளவுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி படமா இருக்கணும்.

எஸ்..சி: அதுக்கு தான் உன்னோட அடுத்த படத்த நானே தயாரிச்சி டைரக்ட் பண்ணலாமுன்னு இருக்கேன்.

விஜய்: என்பா.. என் படம் நாலு நாள் ஓடுறது உனக்கு பொறுக்கலையா. நீ மூடிக்கிட்டு, எல்லா ஆடியோ ரிலீஸ் பங்க்ஷன் லயும் " என் மகன் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்" ன்னு பேசுறதோட நிறுத்திக்க.

எஸ்..சி: நானும் நாலு வருஷமா இத தான் எல்லா மேடயிலையும் சொல்லிக்கிட்டிருக்கேன். எல்லாரும் இத கேட்டுட்டு ஓரமா போய் நின்னு, கெக்க புக்க கெக்க புக்க ன்னு சிரிச்சிட்டு " போங்க சார்.. காமெடி பண்ணாதிங்க" ன்னு சொல்லிட்டு போய்டுரானுங்க.

விஜய்: அட விடுப்ப. இவிங்க எப்பவுமே இப்புடி தான். இனிமே நீ " விஜய் தான் அடுத்த எம்.ஜி.ஆர்" ன்னு சொல்லிப்பாரு என்ன reaction ன்னு பாப்போம்.

எஸ்..சி: அப்ப நம்ம வீட்டுக்கு permanent ah ஒரு ஆம்புலன்ஸ் வாங்கிடுப்பா. எனக்கு அடிக்கடி தேவைப்படும். ஆனா எது பேசுறதா இருந்தாலும் நானே பேசிக்கிறேன். நீ இனிமே பிரஸ் மீட்டுக்கு ஏதும் போய் பேசிடாத. திருச்சி ல பேசும்போது வெறிநாய் கொலைக்கிற மாதிரி விட்டியே ஒரு எபக்ட்டு.... எல்லாரும் எண்ட வந்து " என்ன சார் உங்க பையன நாய் கடிச்சிருச்சா?" ன்னு கேக்குராயிங்க.

விஜய்: சரி விடுப்பா... நம்ம சண்டைய அப்புறம் வச்சிக்குவோம்.. என்னோட அடுத்த படத்துக்கு கதை சொல்றதுக்காக வெளில டைரக்டருங்க எல்லாம் wait பண்ணிட்டு இருக்காங்க. வரச்சொல்லு.

முதல்ல ஒருத்தரு வர்றாரு.

டைரக்டர்: சார், இந்த படத்துல கதை தான் சார் ஹீரோ.

விஜய்: நிறுத்து. கதைங்கற வார்த்தைய கேட்டாலே எனக்கு அலர்ஜியா இருக்கு.
அதுக்கு தமிழ் நாட்டுல வேற ஆளுங்க இருக்காங்க. போயிட்டு அடுத்த ஆள வர சொல்லு. நம்மள பத்தி தெரியாம வந்துட்டிங்க போலருக்கு.

அடுத்தவர் வர்றாரு.

டைரக்டர் 2: வணக்கம் சார்.

விஜய்: வணக்கம் லாம் இருக்கட்டும். ஆரம்பி .

டைரக்டர் 2: சார் இந்த படத்துல நீங்க இது வரைக்கும் பண்ணாத ஒரு புது கேரக்டர் சார். படத்துல நீங்க ரிகஷா ஓட்டுறீங்க. படத்தோட பேரு "மாட்டுக்காரன்".

விஜய்: யோவ். உனக்கு அறிவு இருக்கா.. படத்துக்கு மாட்டுக்கரன்னு பேரு வச்சிட்டு ரிக்ஷா ஓட்டறேன்னு சொல்ற.

டைரக்டர் 2: ஏன் சார், நீங்க மட்டும் கில்லி ன்னு பேர் வச்சிட்டு கபடி விளையாண்டிங்க. போக்கிரின்னு பேர் வச்சிட்டு போலீஸ் ah நடிச்சீங்க. வில்லு ன்னு பேர் வச்சிட்டு படம் full ah துப்பாக்கியாலேயே சுட்டுகிட்டு இருந்தீங்க. வேட்டைக்கரன்னு பேர் வச்சிக்கிட்டு ஆட்டோ ஒட்டுநீங்க. அப்பல்லாம் உங்க அறிவு எங்க சார் போச்சு?

விஜய்: நீ ரொம்ப பேசுற. உனக்கு சான்ஸ் கெடையாது. கெளம்பு. அடுத்தவன வரச்சொல்லு. அவனாவது எனக்கு புடிச்ச மாதிரி கதை சொல்றானா பாக்கலாம்.

அடுத்தவரு உள்ள வர்றாரு.

டைரக்டர் 3: சார் இந்த படத்துல மூணு வில்லன் சார். நாலு fight சார். அஞ்சி குத்து பாட்டு சார். அஜித்த தாக்குற மாதிரி ஒரு ஆறு பஞ்ச் டயலாக் சார். ஒரு சீன்ல ரஜினி மாதிரி டான்ஸ் ஆடுறீங்க சார். ஹீரோயின் ah ஆந்திர லிருந்து ஏறக்குறோம் சார்.

விஜய: super.. excellent.. fantastic.. bale... நாளைக்கே பூஜா போட்டு படத்த ஆரம்பிக்கிறோம். அப்புறம் படத்தோட டைட்டில் நெருப்பு மாதிரி இருக்கணும்.

டைரக்டர் 3: அப்ப படத்துக்கு "நெருப்பு" ன்னே பேர் வச்சிக்கலாம் சார்.

விஜய்: சூப்பர். உங்களுக்கு பேரரசு மாதிரி பெரிய எதிர்காலம் இருக்கு.
எஸ்..சி: என்பா அப்ப கதை?

விஜய்: அத படம் எடுக்கும் பொது டைம் இருந்த யோசிச்சிக்கலாம் பா. இந்த நெருப்பு அடுத்த வேட்டைக்கு கெளம்பிட்டான்.

Thursday, December 3, 2009

ஏறி வாய்யா... ஏரி வாயா..


Share/Bookmark
சென்னையில பஸ்ல போயிட்டு வர்றவங்களுக்கு கீழ்க்கண்ட வாசகங்களெல்லாம் ஒண்ணும் புதுசா இருக்காது.

"காலையிலேயே வந்துட்டான் சாவு கிராக்கி 100 ரூபாய தூக்கிகிட்டு.. எறங்கி அடுத்த பஸ்ல வா.."

" படியில நின்னு பல்ல காட்டிக்கிட்டு நிக்காம உள்ளா வாப்பா..... எதுத்தாப்புல வர்றவன் தலைய மட்டும் தனியா கொண்டு போய்ட போறான்.."

"ஏன்யா.... கம்பிய கட்டி புடிச்சிகிட்டு இங்கயே நிக்கிறியே .. அது என்ன உம் பொண்டாட்டியா... அது ஒன்னும் கீழ விழுந்துடாது விட்டுட்டு உள்ள போ..."

"என்பா கிண்டி ஒரு டிக்கெட் குடு " ன்னு கேக்குற பெரியவர்ட "கிண்டியெல்லாம் டிக்கெட் தர முடியாது... சும்மாதான் தருவேன். வேணும்னா வாங்கு இல்லன்னா எறங்கு.."

இப்புடி எல்லாருக்கும் பஞ்ச் தர்றவங்கதான் நம்ம சிட்டி பஸ் கண்டக்டருங்க. இப்புடி எல்லார்கிட்டயும் எரிஞ்சி விழற இவங்க சில பேர பாத்தா மட்டும் பொட்டி பாம்பா அடங்கிடுவாங்க. அவங்க வேற யாரும் இல்ல, ஸ்கூல் படிக்கிற பசங்க தான்.

அவிங்க வண்டில ஏறுனா டிக்கெட்டும் எடுக்க மாட்டாயிங்க.. வழியையும் விட மாட்டாயிங்க. கையில வச்சிருக்கிற 25 கிலோ school bag க்கு லக்கேஜும் வாங்க மாட்டயிங்க.. இதுனாலேயே நம்ம கண்டக்டர்களுக்கு அவியிங்கள பாத்தாலே ஒரு கொல வெறி...

அதுலயும் அந்த பசங்களுக்கு கண்டக்டர கலாயிக்கிரதுல அப்புடி ஒரு சந்தோசம்... நான் பாத்து ரசிச்ச சில புஞ்ச்சுகள் இதோ..

அன்னிக்கு
ஒருநாள் அப்புடித்தான் கண்டக்டரு
" டிக்கெட்... டிக்கெட்... டிக்கெட் வாங்கு... " ன்னுட்டே வந்தாரு...

அங்க இருந்த ஸ்கூல் பையன் ஒருத்தன் "அண்ணே... பாஸ்" ன்னு பஸ் பாச எடுத்து காமிச்சான்...

உடனே பக்கதுல இருந்தவன்.. "அண்ணே ... நா பெயில் " ன்னு ஸ்கூல் rank card ah எடுத்து காமிச்சிட்டான்..

"ஆமாண்டா... இப்புடியே பேச்சு படிச்சிகிட்டே இரு உருப்புட்டுரலாம்..." ன்னு முனுமுனுத்துகிட்டே போன அவர பாக்க கொஞ்சம் பாவமா தான் இருந்துச்சி..

அப்புறம் ஒருநாள் " ஏன்பா .. முன்னாடி ஏதாவது டிக்கெட் இருக்கா ..." ன்னு கேட்டாரு வழக்கமான slang ல.

" இங்க ஒரு சூப்பர் டிக்கெட் இருக்குண்ணே... ஆனா ரொம்ப நேரமா மொரச்சிகிட்டே இருக்கு.. இத வந்து கொஞ்சம் என்னனு கேளுங்கண்ணே... " ன்னான் முன்னாடி foot borard ல நின்ன ஒருத்தன்.

அவன் சொன்னது கேக்காத மாதிரியே, bag la வச்சிருந்த register ah எடுத்து கணக்கு எழுத ஆரம்பிச்சிட்டாரு நம்மாளு.

இதுகூட பரவால... அன்னிக்கு வேப்பேரி பஸ் ஸ்டாப் ல பஸ் வந்து நின்னுச்சி... கீழ நெறய பசங்க bag மாட்டிகிட்டு நின்னுட்டிருந்தாங்க... திடு திடு ன்னு ஒரு பையன் மட்டும் படில ஏறி கண்டக்டர் கிட்ட

" அண்ணே இந்த பஸ் மின்னல் நகர் போகுமாண்ணே? ன்னு கேட்டான்.

"போகும்.. போகும்... எல்லாரும் சீக்ரமா இருங்க" ன்னாரு அவரு.

"ஆனா நாங்கதான் அங்க போகலியே... நீங்க கெளம்புங்க" ன்னு சொல்லிட்டு இறங்கிட்டன்.

அசிங்கப்பட்டன் ஆட்டோக்காரன் ங்குற மாதிரி ஆயிடுச்சி அந்த கண்டக்டரோட நெலம...

"புள்ளைய பெக்க சொன்ன குட்டி சாத்தான பெத்து விட்டுருக்கயிங்க.." ன்னு அந்த பையனோட அப்பா அம்மாவ திட்டிட்டு விசிலடிச்சாறு.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...