Wednesday, October 16, 2013

ராமையா வஸ்தாவய்யா - RAMAIYYA VASTHAVAIYYA!!!


Share/Bookmark
நம்மூர்ல ஒரு தடவ வந்த சீனு திரும்ப வந்தாலே நச்சி பிச்சி படத்த நாரா உரிச்சி தொங்க  போட்டுறாய்ங்க.. ஆனா இதுவரைக்கும் ஒரு 50 தடவ ஒரே கதையோட தெலுகுல படம்  எடுத்துகிட்டு இருக்காங்க. பாக்குற நமக்கே போர் அடிக்கிது. எடுக்குற அவிங்களுக்கு போர் அடிக்க மாட்டுது. அவனுகளும் திரும்ப திரும்ப எடுத்துகிட்டே இருக்காய்ங்க.. அதுவும் திரும்ப திரும்ப ஃப்ளாப் ஆயிட்டே இருக்கு. ஆனா அதப்பத்தி கொஞ்சம் கூட வெக்கமோ துக்கமோ துயரமோ அவிங்க படுறாப்ள தெரியல. ஒரு நல்ல கதை வந்துச்சின்னா அத்தனை ஹீரோவும் அதே கதைய ஒரு தடவ நடிச்சி ரிலீஸ் பண்ணாதான் தூக்கம் வரும்.

இந்த படம் அந்த படத்தோட காப்பிப்பா ன்னு ஒரே வார்த்தையில சொல்லிட முடியாது. ஏன்னா நா எந்த படத்த சொல்றேனோ அந்தப் படமே அதுக்கு முன்னால இன்னொரு படத்தோட காப்பியா தான் இருக்கும். அதனால இந்த படம் எந்தப் படம் மாதிரி இருக்குன்னு கொஞ்சம் பாப்போம். (அய்யய்யோ ரொம்ப ஒலருறேனே... சோத்துல வெசம் வச்சிருவாய்ங்களே)

நம்ம வல்லரசு வாசிம் காண் பெத்த பணக்கார டான். ஆரம்பத்துலயே ஒரு குரூப் அவர தூக்க ட்ரை பண்ணி மிஸ் ஆயிடுது. அது அப்டியே இருந்துட்டு போவுது. நணபர்களோல ஜாலிய சுத்திகிட்டு இருக்க தலைவர் NTR வழக்கம்போல ஒரு ரோட்டுல கொட்டுற மழையில சமந்தாவ பாத்தது ஃபீல் ஆயிடுறாப்ள. அப்புறம் இவரு போற எடத்துலயெல்லாம் அந்த புள்ளை எதேச்சையா வந்து வந்து போக (ஹீரோயின்னாலே அப்டி வந்து வந்துதான போவனும்) அந்த புள்ளை மேல செம லவ் ஆயிடுறாப்ளே.. 

அப்டியே பின்னால சுத்தி பிக் அப்பும் பண்ணிடுறாப்ளே. அப்புறம் சமந்தா அதோட அக்கா கல்யாணத்துக்கு நம்மாள அது ஊருக்கு அழைச்சிட்டு போவுது.
சமந்தாவோட அப்பாதான் நம்ம வாசிம் கான். கல்யாணம் முடிஞ்ச உடனே வாசிம்கானுக்கு திரும்ப ஒரு ஃபோன் மிரட்டல் வருது. இந்த முறை NTR வருங்கால மாமனார காப்பாத்துறதா வாக்கு குடுத்துட்டு அவர ஒரு தனியான எடத்துக்கு அழைச்சிட்டு போயி வச்சிட்டு கொலைகாரனுக்காக காத்திருக்காங்க.

அப்ப போடுறோம் ட்விஸ்ட... காப்பாத்துறேன்னு கூட்டிட்டு போயி NTR eh அவிங்க எல்லாரையும் பொள பொளன்னு பொளந்து, வாசிம் கானையும் வாயில கத்திய எறக்கிட்டு சிட்டிசன் அஜித்  மாதிரி "அத்திப்பட்டி"ன்னு சொல்லிட்டு கெளம்புறாரு. அப்போ தான் தெரியிது இவரு சமந்தாவ ப்ளான் பண்ணி கரெக்ட் பண்ணிருக்காருன்னு.

இதுக்கப்புறம் கதை நமக்கு தெரியாதா.. இன்னொரு கிராமத்துல இன்னொரு பாப்பா... ரெண்டு  ஹீரோயின் இல்லைன்னா தெலுகுல யாரும் படமே நடிக்க மாடேன்னு அடம் புடிக்கிறாய்ங்க. அது வேற யாரும் இல்ல.. நம்ம சுருதி... அந்த கிராமத்துலயும் ஃபுல் மேக்கப்போட சிட்டி கேர்ள் மாதிரி... அதத்தான் நம்மாளு ஒரிஜினலா லவ்வுறாரு. வழக்கம் போல வில்லன் குருப்பு அந்த புள்ளையும், NTR சொந்தக்காரனுங்க எல்லாரயும் போட்டு தள்ளிட பழி வாங்குறது தான் மேட்டர். ஃப்ளாஷ்பேக் அப்படியே ரவி தேஜாவோட "வீரா" படத்தின் மறு ஒளிபரப்பு. கடைசில எப்படா படம் முடியும்னு ஆயிப்போசி.

6 பாட்டும் செம. எப்டி இருந்த தமன் எப்டியோ ஆயிட்டாரு. BGM உம் சூப்பர். தெலுகு படத்துலயும் இளையராஜா பாட்டுங்கள background ல போட்டு ஓட்டுறதுக்கு ஆரம்பிச்சிட்டாய்ங்க. ஆனா இன்னும் ஃபைட்டுக்கு மியூசிக் மட்டும் மொக்கையா குடுத்து கடுப்பேத்துறாரு. ஃபைட்டு எல்லாம் ரத்தக் களரி. இப்போலாம் எல்லா தெலுகு படமுமே 'A' சர்டிஃபிகேட்டோட தான் ரிலீஸே ஆவுது. நல்லா இருக்க மூஞ்ச ஆப்ரேசன் பண்ணி அசிங்கப்படுத்திக்கிறதே இந்த ஹீரோயின்களூக்கு வேலையா போச்சி. அந்த வரிசையில  இப்போ சமந்தா. நல்லா அழகா இருந்த மூக்க ஆப்ரேஷன் பண்ணி இப்ப அலங்கோலமா ஆக்கி வச்சிருக்கு. சுருதி ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை. ஒரு பாட்டுல அதுக்கு ஸ்ரேஷா கோஷல்  வாய்ஸ்.. அவ்ளோ அழகான வாய்ஸ அந்த மூஞ்சிக்கு கொஞ்சம் கூட சேரல.

தலைவர் ரவி தேஜாவ வச்சி மிரப்பகாய் எடுத்தவரு தான் டைரக்டரு. நிறைய சீன் மிரபகாய்  எடுக்கப்பட்ட அதே லொக்கேசன். ப்ரம்மானந்தம் இல்லாததால காமெடியும் ரொம்ப சொல்லிக்கிற மாதிரி இல்லை. NTR ah பாட்ஷாவுல பளபளன்னு பாத்துட்டு இதுல லேசா தாடியோட பாக்க எதோ உடம்பு சரியில்லாதவரு மாதிரி இருக்கு.  பாட்டு picturization உம் சரி அதுக்கு உள்ள காஸ்டியூமும் சரி.. ரொம்ப ordinary. அதனால டான்ஸூம் அவ்வளவா எடுக்கல.

மொத்ததுல திரும்பவும் எந்த மாற்றமும் இல்லாம அதே பழைய கதை திரைக்கதை தான். படம் ரொம்ப average தான். ஆனா கடைசி கொஞ்ச நேரத்த தவற படம் போர் அடிக்காம தான் போகுது.

அப்புறம் நைட் ஷோங்கறதால மொத்தமே தியேட்டர்ல ஒரு 60 பேர் தான் இருந்துருப்பாங்க. எனக்கு ரெண்டு சீட் தள்ளி ஒரு husband & wife ஒரு சின்ன கொழந்தையோட உக்காந்துருந்தாங்க. சத்தம் தாங்கமுடியாம அந்த கொழந்தை இண்டர்வலுக்கு அப்புறம் அழ ஆரம்பிச்சிருச்சி. அப்போ அந்த அப்பா கொழந்தைய தூக்கிட்டு வெளில போனவருதான். கடைசி வரைக்கும் அந்த அம்மா மட்டும் உக்காந்து படம் பாத்துகிட்டு இருந்துச்சி. படம் முடிஞ்சி வெளில போறப்போ பாத்தா அந்த  கொழந்தைய தோள்ல போட்டுகிட்டு வெளிலயே நின்னுகிட்டே இருக்காரு...

அவர பாத்தோன என் மைண்டுல இளைய ராஜா வாய்ஸ்ல..."ஆஆஆங்ங்.... அ ஆ ஆங்க்..... ஏ தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே... மான் போல வந்தவனே யாரடிச்சாரோ...." ன்னு ஓட ஆரம்பிச்சிருச்சி. எல்லார் வீட்டுலயும் இதே கதி தானா?Monday, October 14, 2013

சச்சின் என்னும் சரித்திரம் – ஆரம்பம்!!!


Share/Bookmark

இவனுகளுக்கு வேற வேலையில்லப்பா… எழுதுறதுக்கு எதுவும் கிடைக்கலன்னா உடனே சச்சினை பத்தி எழுத ஆரம்பிச்சிடுவாய்ங்க ன்னு நீங்க சலிச்சிக்கிறது எனக்கும் புரியிது. இணையத்துல சச்சினைப் பத்தியும் அவரோட சாதனைகளை பத்தியும் இருக்க லட்சக்கணக்கான பதிவுகள்ல இதுவும் ஒண்ணா இருந்துட்டு போவுது விடுங்க. யாருக்கும் தெரியாத விஷயங்கள் எதயுமே இதுல சொல்லப்போறதில்லை. உங்களப்போல நானும் அவரைப் பத்தி பார்த்த படிச்ச சில விஷயங்களோட தொகுப்பாகவே இதனை எழுதுறேன். நமக்கு பிடிச்ச ஒருத்தர அடுத்தவங்க புகழும்போது எத்தனை தடவ வேணாலும் சலிக்காம கேட்டுக்கிட்டே இருக்கலாம். இந்த சின்ன உதாரணத்தோட ஆரம்பிக்கிறேன். 

ரஜினிகாந்த் ஒருதடவ அமிதாப்கிட்ட “எனக்கு உலகத்துல உள்ள எல்லாருமே நல்ல பழக்கப்பட்டவங்க “ ன்னு பெருமையா சொல்லிட்டு இருந்துருகாரு. உடனே அமிதாப் இத டெஸ்ட் பண்ணி பாக்கலாமேன்னு “சரி உங்களுக்கு Tom cruice ah தெரியுமா?” ன்னு கேக்க உடனே ரஜினி “நல்லா தெரியுமே… அவன் நம்ம பய தான்” ன்னாரு.

உடனே ரெண்டு பேரும் டாம் க்ரூஸ் வீட்டுக்கு போய் காலிங் பெல்ல அடிக்க கதவைத் திறந்த டாம் க்ரூஸ் ரஜினிய பாத்து ஷாக் ஆயி “தலைவா… what a surprise… என்ன திடீர்னு வந்துருக்கீங்க.. ஃபோன் பண்ணிருந்தா நானே வந்துருப்பேனே” ன்னு கதற ஆரம்பிச்சிட்டாப்ள… 
 
இதப் பாத்த அமிதாப் “சரி எதோ ஃப்ளூக்ல க்ளிக் ஆயிருச்சி… அடுத்து இன்னொருத்தர வச்சி டெஸ்ட் பண்ணுவோம்னு “உங்களுக்கு ஒபாமாவ தெரியுமா ரஜினி?” ன்னு கேக்க

“என்ன இப்டி கேட்டுட்டீங்க.. நாங்க ரெண்டு பேரும் ஃபேமிலி ஃப்ரண்ட்ஸ்” ன்னு சொல்லிட்டு ஒபாம வீட்டுக்கு போக ரஜினிய பாத்த ஒபாமா “வாவ்… உங்களுக்கு நூறு ஆயுசு ரஜினி… இப்பதான் உங்களுக்கு கால் பண்ணலாம்னு ஃபோன் எடுத்தேன் அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க… வாங்க லஞ்ச்ல வந்து ஜாயின் பண்ணிக்குங்கன்னு சொல்லி சாப்ட கூப்டுகிட்டாரு…

அமிதாப் கொஞ்சம் டர்ர்ர் ஆகி சரி கடைசியா ஒரு பெரிய ஆப்பா வப்போம்னு நெனைச்சி “உங்களுக்கு போப்ப தெரியுமா ரஜினி” ன்னு கேக்க
“ரொம்ப நல்லாவே தெரியும்… போன மாசம் கூட வீட்டுக்கு வந்துட்டு போனாரு” ன்னு சொல்லி போப்ப பாக்க வாட்டிகன் கெளம்பி போனாங்க…
வாட்டிகன் சர்ச் முன்னால ஒரே கூட்டமா இருக்க, அமிதாப் கிட்ட ரஜினி “அமிதாப் நீங்க இங்கயே இருங்க… நா உள்ள பொய்ட்டு போப் கூட பால்கனில வந்து நிக்கிறேன்” ன்னு சொல்லிட்டு உள்ள பொய்ட்டு கொஞ்ச நேரத்துல போப் கூட வெளில வந்து பால்கனில நின்னாராம். வெளில ஒரே கூட்டமா இருக்க என்னன்னு பாத்தா அமிதாப் மயங்கி  விழுந்து கிடந்துருக்காரு..

“என்ன அமிதாப் என்னாச்சி… ஏன் மயக்கம் போட்டீங்க?” ரஜினி கேக்க
“இல்லை ரஜினி… நீங்க போப் கூட வெளில வந்தப்போ கூட எனக்கு பெருசா எதுவும் தெரியல.. ஆனா அப்போ கூட்டத்துலருந்த ஒருத்தன் “ரஜினி கூட ஒருத்தர் நிக்கிறாரே யாரு அவரு? ன்னு ஒரு கேள்வி கேட்டான்.. அதக் கேட்டதும் தான் எனக்கு தலையே சுத்தி மயக்கம் போட்டுட்டேன்” னாராம்.

ஏன் இப்போ இத சொன்னேன்னா, இந்த ஜோக் இதுவரைக்கும் எனக்கு ஒரு பத்து தடவ forward மெயிலா வந்துருக்கும். ஆனா ஒவ்வொரு தடவையும் இத ஒரு வரி விடாம ஃபுல்லா படிச்சி எதோ புதுசா படிக்கிற மாதிரி படிச்சி சந்தோஷப் படுவேன். அதே மாதிரி தான் சச்சினை பத்தின நல்ல விஷயங்களை எவ்வளவு படிச்சாலும் பாத்தாலும் bore அடிக்காதுங்கற நம்பிக்கையில இத பதிவ ஆரம்பிக்கிறேன். 

சச்சின்ங்கற ஒருத்தருக்கு எப்பவுமே மக்கள்கிட்ட ஒரு தனி இடம் உண்டு. நல்லா யோசிச்சி பாருங்க… இதுவரைக்கும் நீங்க ஒரு ஸ்கோர் கார்ட பாக்கும் போது யரோட ஸ்கோர முதல்ல பாப்பீங்க? ஃப்ரண்ட்ஸ்கிட்ட கேக்கும் போது யாரோட ஸ்கோர முதல்ல கேப்பீங்க? “மச்சி… மேட்ச் என்னடா ஆச்சி? என்னது நூத்தி இருவதுக்கு மூணு விக்கேட்டா? சச்சின் எவ்ளோடா?” இதுதான் நம்ம அடுத்த கேள்வி.  மொதல்ல ட்ராவிட் எவ்ளோன்னோ இல்லை கங்குலி எவ்வளவு அடிச்சாருன்னோ நாம யாரும் எப்பவும் கேட்க மாட்டோம். அது தான் சச்சினுக்கு இருக்க ஒரு பெரிய பவர்.

எதிர்பார்ப்புங்கறது மனுஷனுக்கு மனுஷன் மாறுபடும். ஆனா சச்சின் ங்கற ஒருத்தர பொறுத்த அளவு எல்லாரோட எதிர்பார்ப்பும் ஒண்ணே ஒண்ணு தான். ஒரு சின்ன உதாரணம். நா காலேஜ் படிச்சிட்டு இருக்கும் போது ஒரு மேட்ச்… சச்சின் 65 ரன்ல அவுட் ஆயிட்டாரு. பக்கத்துல இருந்தவன் அசிங்க அசிங்கமா திட்ட ஆரம்பிச்சிட்டான். ‘என்னடா இவன் லூசு மாதிரி அவுட் ஆயிட்டு போறான்… வேஸ்டுடா” அது இதுன்னு என்னென்னவோ திட்ட ஆரம்பிச்சிட்டான். 

“என்னாச்சி மச்சி.. 65 ரன் எடுத்துத்துட்டு தானடா போறாரு.. ஏன் இப்டி திட்டுற?”ன்னேன்

“டேய் 65 ரன்னு யாரு வேணாலும் அடிப்பாங்கடா… யாருடா அவரு? சச்சின்.. நூறு அடிச்சா தாண்டா அது சச்சின்” ன்னான். 

என்னால எதுவும் பேச முடியல. நா சொல்ல வந்தது இதே தான். நம்ம மக்களோட எதிரிபார்ப்பு எல்லாமே இது தான்.

      1.  சச்சின்ங்கறவரு விளையாடுற அத்தனை மேட்ச்லயுமே சதம்   
       அடிக்கனும் 
       2.  50 ஓவரும் அவுட் ஆகாம வெளையாடனும் 
       3. ஜெயிக்கிற வரைக்கும் நின்னு விளையாடனும்

இவ்வளவு தான் நம்மளோட எதிர்பார்ப்பு. மத்தவிங்க அடிச்சாலும் சரி… அடிக்காட்டாலும் சரி.. அதப்பத்தி எந்த கவலையும் இல்லை. இந்த எதிர்பார்ப்பு ஒண்ணு ரெண்டு நாள்லயோ, இல்லை நாலு அஞ்சி செஞ்சுரி மட்டும் அடிக்கிறதாலயோ ஒருத்தனால கொண்டு வந்திட முடியாது. தல சொல்ற மாதிரி “அவர் வாழ்க்கையில ஒவ்வொரு மேட்சும் ஒவ்வொரு சதமும் ஒவ்வொரு ரன்னும் அவரா செதுக்குனது” அவர் ஒவ்வொரு ball ah ஃபேஸ் பண்ணும் போதும் நமக்கு ஹார்ட் பீட் ரேட் எப்டி இன்கிரீஸ் ஆகும்னும், அதே ball ah ஃபோருக்கோ சிக்ஸூக்கோ அடிச்சப்புறம் நமக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும்னும் அத அனுபவிச்சவங்களுக்கு மட்டுமே தெரியும்.

நம்மாளுங்களுக்கு இந்த சிறுபிள்ள தனமான நம்பிக்கைங்கறது ரொம்பவே அதிகம். அது ஒருவிதமான ஜாலியும் கூட. கொசு கடிக்குதேன்னு ஒருத்தன் அடிக்கிறதுக்காக கைய தொடைகிட்ட கொண்டு போவான். அந்த நேரம் பாத்து நம்மாளு ஃபோர் அடிச்சிடுவாரு. சூப்பர்… இங்க கைய வச்சாதாண்டா தலைவருக்கு செண்டிமெண்டு போலருக்குன்னு அவரு அடுத்த ஒவ்வொரு ball ah ஃபேஸ் பண்ணும் போதும் அவன் கொசு அடிக்கிற மாதிரியே கைய கொண்டு போவான். எதுக்கு? அவர் அடிக்கனும்ங்கறதுக்கு தான். 

இது கூட பரவால்ல.. சவுத் ஆஃப்ரிக்கா மேட்ச்ல சச்சின் 200 அடிச்சப்போ தெரியாத் தனமா ஒருத்தன் தலைய சொறியும் போது ஃபோர் அடிச்சிட்டாரு. அவ்வளவு தான். அதுக்கப்புறம் போட்ட ஒவ்வொரு பாலுக்கும், 50 ஓவரும் அவன் தலைய சொறிஞ்சிட்டே தான் இருந்தான். ஒர்க் அவுட் ஆயிருச்சில்ல.. அடிச்சாருல்ல 200… இந்த “மாதிரி சிறுபிள்ளை தனமான நம்பிக்கையல்லாம் அப்டியே விட்டுடனும்.. அதுக்கு பகுத்தறிவே ஊட்டி ஊட்டி ரொம்ப உள்ள போன வாழ்க்கே கசந்திடும்” ன்னு இன்னொரு கடவுள் சொல்லிருக்காரு. 

சச்சினுக்கு மக்கள்கிட்ட இவ்வளவு மரியாதை இருக்க இன்னொரு காரணமும் இருக்கு. அதுக்கு முன்னால வரைக்கும் ரேடியோ வழியாக மட்டுமே கிரிக்கெட்டை பத்தி கேட்டு வந்த மக்கள் கிரிக்கெட்டுன்னு ஒரு விளையாட்ட டிவி வழியா பாக்க ஆரம்பிச்சதே என்பதுகளோட இறுதிலதான். டிவிங்கற ஒரு விஷயம் எல்லா மக்களிடமும் ஊடுருவிய காலத்துல அனைவராலும் அறியப்பட்ட முதல் ஹீரோ சச்சின். அன்று முதல் இன்று வரை எல்லா மக்களுக்கும் பிடித்தமானவராக இருக்கும் ஒரே ஹீரோவும் சச்சின் ஒருவர் மட்டும் தான். 

அந்த ஹீரோவப் பற்றிய உங்களுக்கு தெரிந்த சில விஷயங்களையும், தெரியாத சில விஷயங்களையும் இந்த தொடர் பதிவின் மூலமா கொஞ்ச நாள் தொடரலாம்னு ஆசைப்படுறேன். முடிஞ்ச அளவு சுவாரஸ்யமாக தொடரவும் முயற்சி செய்றேன்.

(சரித்திரம் தொடரும்)

Sunday, October 13, 2013

நய்யாண்டி – ஜருகண்டி!! ஜருகண்டி !!! ( கவுண்டர் Review)


Share/Bookmark

என்னடா ரெண்டு மாசமா ஒண்ணும் பெரிய சம்பவங்கள் எதுவும் நடக்கலியே... நல்லா போயிட்டு  இருக்கேன்னு பாத்தேன்... நடத்திட்டாய்ங்க. ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு கெப்பா குட்டி இருக்கு. ஒருத்தனால என்ன ரேஞ்சுல படம் எடுக்க முடியும்,அவன் பாடி எவ்வளவு தாங்கும்.. இதெயெல்லாம் பாத்து தான் ஒருத்தர்கிட்ட படத்த குடுக்கனும். சுசிகணேசன்கிட்ட கந்த சாமிய குடுத்து நல்லா வாங்கி கட்டிகிட்டது மாதிரி. அவரு எடுத்துருந்தது அதுக்கு முன்னாடி ரெண்டே ரெண்டு பிட்டு படம்தான். அவர நம்பி பல கோடிரூவாய எந்த நம்பிக்கையில குடுத்தாங்கன்னு தெரியல. அதே மாதிரி தான் இங்கயும். நம்ம சற்குணம் எடுத்தது ரெண்டே ரெண்டு படம் அதுவும் ஒரு படம் full க்கு தாங்காது. அவர நம்பி நம்ம தனுஷ் எந்த நம்பிக்கையில படம் குடுத்தாருன்னு தெரியல. படம் ஒரளவுக்கு  எதாவது சொல்ற மாதிரி இருந்தா மட்டும் தான் என்னால ரிவியூ எழுத முடியும். இல்லன்னா மொத்த பொறுப்பையும் அவர்கிட்ட குடுத்துருவேன். அவர்கிட்ட நீங்களே படத்த பத்தி கேட்டுக்குங்க....

இடம் : அழகுராஜா சைக்கிள் கடை... மாலை 4 மணி..
செந்தில் : என்னணே ஒரே டென்சனா உக்காந்துருக்கீங்க?

கவுண்டர் : அட ஏண்டா அழகேசா... வாரம் ஏழு நாலும் இந்த ஓட்டை விழுந்த சைக்கிள் டியூபையும் துரு புடிச்சி போன ரிம்மையும் பாத்து பாத்து போரடிச்சி போச்சிடா.. மனுசனுக்கு ஒரு எண்டர்டைன்மெண்ட் இருந்தா தானே வாழ்க்கை ஒரு கில்ஃபான்ஸா போவும்

செந்தில்: அட இவ்வளவு தானா... இதுக்கு என்கிட்ட ஒரு சூப்பர் ஐடியா இருக்கே... 

 கவுண்டர் : தம்பி நீ ஏற்கனவே எனக்கு ஐடியா தர்றேன்னு சொல்லி பலமுறை ஓட ஓட அடி வாங்கிருக்க.. மரியாதையா என்ன கொஞ்சம் தனியா விட்டுட்டு ஓடிப்போயிரு..

செந்தில் :(சோகமாக) என்னண்ணே... நா உங்க தம்பி மாதிரி உங்களுக்கு ஒரு நல்லது பண்ணலாம்னு பாத்தா இப்டி பேசுறீங்களே...

கவுண்டர் : டேய்... டேய்... இப்போ என்னத்துக்கு அழுவுற நீயி... சரி சொல்லித் தொலை..

 செந்தில் : நம்மூர் கொட்டாயில புது படம் ரிலீஸ் ஆயிருக்குண்ணே... சாயந்தர ஆட்டத்துக்கு போனா உங்க டென்சன் எல்லாம் போயிரும்னே...

கவுண்டர் :டேய்... யோசனை என்னவோ நல்லாத்தான் இருக்கு.. ஆனா நா படம் பாக்குறதயே விட்டுட்டேனேடா.. இப்பல்லாம் ஒரு நாயும் ஒழுங்கா படம் எடுக்குறதே இல்லை.. 14 ரீல காலி பண்ணனும்ங்கறத்துக்காகவே எத எதயோ எடுத்து வைக்கிறாங்க.... இது சரிப்பட்டு வராது ஆள விடு...

செந்தில் : அண்ணேன்... இவரு நல்ல டைரக்டருண்ணே... நேசனல் அவார்டு எல்லாம் வாங்கிருக்காரு..

கவுண்டர் : டேய் படப் பொட்டி மண்டையா...நேசனல் அவார்டுங்றது எந்த படத்துக்கு தருவாய்ங்க? வந்துச்சா வரலியா, ஓடுச்சா ஓடலையாண்ணு தெரியாத ரேஞ்சில ஒரு படம் வரும் பாத்தியா அதுக்கு தான்அவார்டு குடுக்கும் போது தான் அப்டி ஒரு படம் வந்ததையே மக்கள் தெரிஞ்சிக்குவாங்க.. அப்டி இல்லைன்னா எவன்கிட்டயாது காசு நெறையா இருந்தா அத குடுத்து ஒரு நேசனல் அவார்டு வாங்கிக்குறாய்ங்க.. இதெயெல்லாம் நம்பி போக முடியாதுடா..

செந்தில் : போங்கண்ணே... இவ்ளோ சொல்லியும் கேக்காமாட்டேங்குறீங்க.. இனிமே நா இங்க சைக்கிள் தொடைக்க மாட்டேன்...

கவுண்டர் : ஆமா சைக்கிள் தொடைக்கிறது பெரிய கவர்னர் உத்யோகம் இவரு இல்லைன்னா யாரும் பாக்க முடியாது.. சரி இவ்ளோ கெஞ்சிறதால வர்றேன்... மவனே எதாவது மிஸ் ஆச்சு நாளையிருந்து சைக்கிள் தொடைக்க கை இருக்காது...(தியேட்டரில்)

கவுண்டர் : அடேங்கப்பா... டேய் மண்டையா கூட்டம் அலை மோதுது.. படம் சூப்பரா இருக்கும் போலருக்குடோவ்... 

செந்தில்: இருக்காதா பின்ன... நம்ம தனுஷ் வேற நடிச்சிருக்காறே..

கவுண்டர் : யாரு இந்த கம்பு குச்சில சட்டைய மாட்டி விட்டா மாதிரி ஒருத்தன் இருப்பானே அவனா.. ரொம்ப விபரமான பையன்,...

செந்தில் : (சத்தமாக) அண்ணே... அண்ணே... அங்க பாருங்கண்ணே..
கவுண்டர் : என்னடா அங்க..

செந்தில் : இந்த படத்தோட டைரக்டரு சற்குணம் வர்றாருண்ணே...  

கவுண்டர் : டேய் வாடா.. நா இதுவரைக்கும் சினிமா காரங்கள பாத்ததே இல்லை பாத்து ரெண்டு வார்த்த பேசிட்டு வருவோம்...

கவுண்டர் : அய்யா வணக்கம்ங்க..

சற்குணம் : ம்ம்ம்... வணக்கம் வணக்கம்... படம் பாத்துட்டீங்களா
கவுண்டர் : இனிமே தாங்க பாக்க போறோம்... 

சற்குணம் : அதானே பாத்தேன்... படம் பாத்துருந்தா இந்நேரம் சிரிச்சி சிரிச்சி உங்க வயிறே புண் ஆயிருக்குமே

கவுண்டர் : அப்டீங்களா.. அவளோ காமெடியா எடுத்துருக்கீங்களா?

சற்குணம் : அட என்ன அப்டி கேட்டுட்டீங்க.. இந்த கதைய நா தனுஷ் கிட்ட சொல்லும் போதே அவரு கைதட்டி சிரிச்சி ரசிச்சார்னா பாத்துக்குங்களேன்... its a laugh riot 

கவுண்டர் : அடேங்கப்பா.. (சைடுல லைட்டா திரும்பி ) டேய் மண்டையா லாப் ரியாட்னா என்னடா?

செந்தில் : அதாவதுன்னே இந்த படத்த பாத்தா நீங்க குலுங்க குலுங்க சிரிச்சி ரசிப்பீங்களாம்னே

கவுண்டர் : டேய் அழகேசா... நா உன்ன என்னவோ தப்பா நெனைச்சிட்டேண்டா.. இந்த அண்ணேன் சந்தோசமா இருக்கனும்னு நீ எவ்வளவு நல்ல மனசோட இருந்துருக்க...

சற்குணம் : அதுமட்டும் இல்லை இந்த படத்துல 5 பாட்டு இருக்கு பாருங்க.. ஃபெண்டாஸ்டிக்... அதயும் ஃபாரின்ல சூட் பண்ணிருக்கேன்... அசந்து போயிருவீங்க... குறிப்பா ஒரு தொப்புள் சீன் வச்சிருக்கேன் பாருங்க... ஒரு பய வச்சதில்லை இதுவரைக்கும் தமிழ் சினிமாவுல

கவுண்டர்: சார் நீங்க இங்கயே இருங்க... நாங்க படம் பாத்துட்டு வந்து இத பத்தி டீடெய்லா பேசுவோம்..

சற்குணம் : கண்டிப்பா... நா இன்னிக்கு இங்கயே தான் இருப்பேன்...

போகும் பொது கவுண்டர் "டேய் மண்டையா...படம் நல்லாருந்தா ராத்திரி ஆட்டத்துக்கு செகப்பிய கூப்டு வந்து ஒருக்கா பாத்துட்டு போயிறனும்டா.."
---------------------------------------
படம் ஆரம்பிக்கப்படுகிறது..

இண்டர்வல்

செந்தில் நெளிந்து கொண்டே
"அண்ணே,.. எனக்கு லைட்டா வயித்த கலக்குற மாதிரி இருக்குன்னே... நா கொஞ்சம் அர்ஜெண்டா வயக்காட்டு பக்கம் போறேன்.. நீங்க இருந்த மிச்ச படத்த முடிச்சி வச்சிட்டு வந்துருங்கண்ணே"

கவுண்டர் : (தோள் மேல கைய போட்டு) நீ இருடி.... என்னா மாதிரி படத்துக்கு கூட்டிட்டு வந்துருக்கா.. கொல்லைக்கு தான போவனும்... கொஞ்ச நேரத்துல நானே வரவைக்கிறேன்...

-----------------------------------------
படம் முடிந்து....

கவுண்டர் : (ரெண்டு காதையும் பொத்துனாப்ள மூடிகிட்டு) அடடடா.... ஆஆஆஆஅ........ ஐயயயோ.... (செந்தில் கைத்தாங்களா கூட்டிட்டு வர்றாரு..."டேய் அழகேசா... என்னால நடக்க முடியல... என்ன இப்புடி படிக்காட்டு ஓரமா உக்காரவச்சிட்டு நீ என்ன பண்ற படத்துக்கு போறதுக்கு முன்னாடி டைரக்டருன்னு ஒருத்தன காமிச்சல்ல அவன போய் பொத்துனாப்ள இங்க அழைச்சிட்டு வா... போ"

செந்தில் : சரிண்ணே

கவுண்டர் :டேய் அப்டியே எஸ்கேப் ஆவலாம்னு பாத்த... மவனே இன்னியோட உனக்கு க்ளைமாக்ஸ் தான்.
(5 நிமிடத்தில் செந்தில் சற்குணத்தோடு வருகிறார்)

சற்குணம் : என்ன சார் ... படத்த நல்லா எஞ்ஜாய் பண்ணீங்களா.. சிரிச்சி சிரிச்சே டயர்டு ஆயிட்டீங்க போல...

கவுண்டர் கடுப்பாயி அவன் பொரடில கைய வச்சி இழுத்து
(ஹை பிட்ச்ல) ஏண்டா நாயே... இது ஒரு படம் இதுக்கு நா சிரிச்சி சிரிச்சி டயர்டு ஆயிட்டேனா.. நா பேசாம என் கடையில உள்ள பழைய சைக்கிளயே பாத்துகிட்டு இருந்துருப்பேண்டா... ன் 200 ரூவாயையும் காலி பண்ணி இப்போ என்னை ஆஸ்பத்திரில அட்மிட் ஆக வச்சிட்டியேடா... ஆமா உன் பேரு என்ன நாயே?

"சற்குணம்ங்க"

கவுண்டர் : என்னடா பேரு இது  சருக்குனோம் வழுக்குனோம்னு... நீயெல்லாம் என்ன தைரியத்துல கேமராவ தூக்கிட்டு படம் எடுக்க வந்த்துட்ட.... ஒரு சீனாவது பாக்குற மாதிரி இருக்காடா...

சற்குணம் : சார்... actually its a laugh......

கவுண்டர் : (வாயிலயே அடிச்சி) இங்கிலீசு... இங்கிலீசு... இந்த மொகரைக்கு இங்கிலீசு... நீயெல்லாம்  இனிமே தமிழே பேசக்கூடாது நாயே.... ஆமா அப்போ என்னவோ சொன்னியே என்ன அது

செந்தில் : laugh riot ண்ணே..

கவுண்டர் : அக்காங்... அது ஒண்ணு தான் கொறைச்சல்... அப்புறம் பாட்டு பட்டைய கெளப்புதா? டேய் இது தமிழ்ப் படம் தானேடா... எந்த பாட்டாவது தமிழ்ல வந்துச்சாடா... சரி அத விடு கும்பகோணம் பக்கத்துல ஒரு கிராமத்து பையனுக்கு காதல் வந்தாலும் அடுத்த செகண்டே சுட்சர்லாட்ந்து போயி  தான் சூட்டிங் எடுப்பீங்களாடா...

சற்குணம் : இல்லை சார்,... மக்கள் விருப்பப் படுறாங்கண்ணு தான்..

கவுண்டர் : மக்கள் என்னிக்குடா உங்ககிட்ட ஃபாரின் சாங்கு வேணும்னு கேட்டுருக்காங்க.. நாயே நீ சுத்திபாக்குறதுக்கு மக்கள் மேல பழிய போடுறியா

சற்குணம் : சார்... என்ன ஓவரா பேசுறீங்க... I am a national award winner

கவுண்டர்:  உனக்கு நேசனல் அவார்டு குடுத்த அந்த நாயி மட்டும் இப்போ என் கையில சிக்குச்சி வாயி மேலயே எட்டி மிதிச்சி போடுவேன்... ஆமா அது என்னடா ஹீரோயின்... அப்பு கமலுக்கு பொம்பள வேசம் போட்ட மாதிரி,.. இதுல அதுக்கு தொப்புள் சீன் மட்டும் தான் கொறைச்சல்... ஆமா அதுக்கு மனசுல என்ன சோதிகான்னு நெனப்பா... இந்த ஆக்டிங்கெல்லாம் நாங்க பல தடவ பாத்தாச்சும்மா.  அதுக்கும் சொல்லிவை... கடைப்பக்கம் வந்தா கல்லெடுத்து அடிச்சி போடுவேன்னு

சற்குணம் : கோவப்படாதீங்க சார்.. படத்துல ஹீரோ தான் சரியில்லை.. நா சொல்லிக்குடுத்த மாதிரி அவரு பர்ஃபார்ம் பண்ணல... அதான் உங்களுக்கு புடிக்கல..
கவுண்டர் : அய்யா என்ன சொன்னீங்க? ஹீரோ சரியில்லையா.. நாயே..நீ எடுத்துருக்க படத்துல கமலஹாசனே நடிச்சாலும் ஒண்ணும் பண்ண முடியாதுடா.. உன் கதை அப்புடி... அதென்னா மொத சீன்ல காதலிச்சிட்டு அடுத்த சீன்லயே அந்த புள்ளை இவன் கூட ஓடிப்போயிருது...

சற்குணம் : அப்பதான் சார் கதை ஸ்பீடா இருக்கும்...

கவுண்டர் : நீ ஒண்ணு பண்ணிருக்கலாமே... டைட்டில் போட்ட உடனேயே க்ளைமாக்ஸ போட்டுருந்தா இன்னும் ஸ்பீடா இருந்துருக்குமல்லோ... 

சற்குணம் : சரி சார்... விடுங்க... எதோ தப்பு நடந்து போச்சு... என்னோட அடுத்த படத்துல இந்த தப்பெல்லாம் நடக்காம பாத்துக்குறேன்...

கவுண்டர் : (லைட்டா தோள் மேல கைய போட்டு பக்கத்துல இழுத்து) இந்த மூஞ்சி இதுக்கு மேல கோடம்பாக்கத்துக்கு பக்கம் நடமாடுற மாதிரியோ இல்லை கேமராவ தூக்கிட்டு எங்கயும் படம் எடுக்கு போகுதுன்னோ எனக்கு எதாவது சேதி வந்துச்சி... வக்காளி பஸ் ஏறி வந்து கொறவளைய கடிச்சி போடுவேன் ஓடிப்போயிறு... (சற்குணம் விட்டா போதும்னு ஓடுகிறார்)

செந்தில் : அண்ணேன்.. நா வேணா அண்ணிய போய் அண்ணிய அழைச்சிட்டு வர்றேன்.. நீங்க ரெண்டு பேரும் இருந்து ரெண்டாவது ஆட்டம் பாத்துட்டு வர்றீங்களா?

கவுண்டர் மெதுவா கீழ குணிஞ்சி ஒரு பெரிய கல்ல எடுத்துகிட்டு
வக்காளி எங்க ரெண்டு பேரயும் கொலை பண்ணவா பாக்குற படுவா... இருடா இன்னிக்கு உன் மண்டைய பொளந்து மூளைய பாக்காம விடமாட்டேண்டா... ன்னு சொல்லிட்டு துரத்த செந்தில்  ஓடுகிறார்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...