சிலபேரு உயிரோட இருக்கும்போது அவங்க எவ்வளவு
பெரிய ஆள்ங்குறது அவங்களுக்கே தெரியிறதில்லை. இறந்த அப்புறம்தான் தூக்கி வச்சிக் கொண்டாடுறாங்க.
அப்துல் கலாம் அய்யா ஒரு வேளை இப்ப நடக்குறதயெல்லாம் பாத்துக்கிட்டு இருந்தார்ன்னா
அவரே நம்ப மாட்டாரு. ஒரு தனி மனிதனுக்கு இவ்வளவு மரியாதை, எத்தனை ரசிகர்கள், எத்தனை
ஃபாலோயர்கள். அதுல முக்கால்வாசி ”திடீர்” ரசிகர்கள், ”திடீர்” பாலோயர்கள். சரி அவங்கள பின்னால கவனிச்சிக்குவோம். சமீப காலங்கள்ல இவ்வளவு பேர் ஒரு தனிமனிதனோட இறப்புக்கு
வருந்துவது இதுதான் முதல் தடவ. ஒரு சில அரை கிறுக்கர்களத் தவற எல்லாருமே கலாம கொண்டாடுறாங்களே
தவற யாரும் திட்டல. அந்த கிறுக்கய்ங்க கூட இத செய்யாம விட்டுட்டாருன்னு திட்டுறாய்ங்களே
தவற “இப்புடிப் பன்னிட்டாரே”ன்னு சொல்லல. அந்த ஒண்ணே சொல்லுது இவர் எவ்வளவு பெரிய மனிதர்னு.
அவரோட மறைவு நிச்சயம் ஒரு பெரிய இழப்பு தான்.
ஆனா இந்த ரெண்டு நாள்ல தான் நம்ம எவ்வளவு
போலியா வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்னும் தெரியிது. வண்டாருய்யா கருத்து சொல்லன்னு யாரும்
ஆரம்பத்துலயே அசிங்கமா திட்டவேணாம். முழுசா படிச்சிட்டு கொஞ்சம் யோசிச்சி பாத்தப்புறம்
தப்புன்னா கழுவி ஊத்துங்க தப்பில்லை. இடம் பொருள் ஏவல்ங்குறது எல்லா விஷயங்களுக்குமே
உண்டு. ”மஞ்சுளா அம்மாவைப் பிரிந்து சோகத்தில் வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” ன்னு கேப்டன் ஒரே ஒரு வார்த்தை தப்பா சொல்லிட்டாரு.
அத வச்சி இப்ப வரைக்கும் ஓட்டுறோம். அன்னிக்கு எத்தனையோ பேர் இறங்கல் தெரிவிக்க கூட
இல்லை. அவங்கல்லாம் எஸ்கேப் ஆயிட்டாங்க. ஆனா மஞ்சுளா அவர்களோட இறுதி சடங்குளையெல்லாம்
நேரலையா கேப்டன் டிவில ஒளிபரப்பினாரு கேப்டன். அந்த ஒரு தப்பான வார்த்தை, அவர் அன்னிக்கு செஞ்ச நல்ல
விஷயங்கள் எல்லாத்தையும் மறக்க வச்சிருச்சி.
நல்லது செய்யனும்னு ஆசைப்பட்டு வர்றவங்க
செய்யிற சின்ன தப்பால மாட்டிகிறதும், எதுவுமே பன்னாம இருக்கவங்க safe ah எஸ்கேப் ஆயிடுறதும் இப்ப ரொம்ப சகஜமாயிருச்சி.
அதானால சில விஷயங்கள பன்றதுக்கு பண்ணாமலேயே இருக்கலாம் போலருக்கு. நேத்து கூட அப்படி
ஒரு விஷயம் ஆதித்யா டிவில நடந்துச்சி.
மதுரை முத்து ஒரு காமெடி சொல்லுவாரு.. “எங்களை கல்யாண
வீட்டுக்க்கு ப்ரோக்ராம் பன்ன பேசக்கூப்புடுவாங்க.. போவோம். காதுகுத்துக்கு ப்ரோக்ராம்
பன்ன கூப்புடுவாங்க போவோம். அரசியல் கூட்டத்துக்க்கு ப்ரோக்ராம் பன்ன கூப்டுவாங்க.
அங்கயும் போவோம். திடீர்னு ஒருநாள் ஒருத்தர் இறந்ததுக்கு பேசக்கூப்புட்டாய்ங்க. நாங்க
பயந்துட்டோம். அங்க போனப்புறம் “யோவ் சாவு வீட்டுல எப்புடிய்யா காமெடி சொல்றது?” ன்னு
அவய்ங்ககிட்ட கேட்டேன். அதுக்கு அவிங்க “கொஞ்சம் சிரிப்பு வராத மாதிரி சோகமான ஜோக்கா
சொல்லுங்க தம்பி” ன்னு சொன்னாய்ங்க. “அது எப்புடிய்யா சிரிப்பு வராத ஜோக்கு சொல்றது?”
ன்னு கேட்டேன். “இந்த டிவிலயெல்லாம் சொல்லுவீங்களே தம்பி அந்த மாதிரி சொல்லுங்க” ன்னு
சொல்லி அசிங்கப்படுத்திட்டாருன்னு.
மதுரை முத்து சொன்ன காமெடிய நேத்து ஆதித்யா
டிவில செஞ்சே காமிச்சாய்க. ”அடிக்கடி கடிக்கடி”ன்னு நினைக்கிறேன். ப்ரகாஷ்ராஜ் மாதிரி
ஒருத்தன். பாக்யராஜ் மாதிரி ஒருத்தன். ரெண்டு பேரும் கலாம் இறந்ததுக்கு ரொம்ப சோகமா
ஹோஸ்ட் பண்ணிட்டு இருக்காய்ங்க. ஃபோன் பன்றவய்ங்க கிட்டயும் கலாம பத்தி ரொம்ப உருக்கமா
பேசிட்டு, “அய்யா நம்மளவிட்டு போனது ரொம்ப வருத்தமான செய்தி… சரி நீங்க இந்த காமெடி
சீன பாருங்க” ன்னாய்ங்க. அதப்பாக்கவே ரொம்ப awkward ah இருந்துச்சி. அவங்க இந்தப் ப்ரோக்ராம்
பன்னாமலேயே இருந்துருக்கலாமோன்னு தோணுச்சி.
நகைச்சுவைக்குன்னே இருக்க சேனல்ல இப்படி
ஒரு ப்ரோக்ராம் கண்டிப்பா பன்னித்தான் ஆகனும்னு எந்த அவசியமும் இல்லை. அடுத்தவங்க நம்ம
ஏன் ஃபீல் பன்னலன்னு கேள்வி கேட்டுருவாங்களோன்னு தான் இன்னிக்கு பல பேர் திரியிறாய்ங்க.
நம்ம இன்னிக்கு செய்யிற நிறைய விஷயங்கள் “பாருப்பா நானும் கலாம் இறந்ததுக்கு ஃபீல்
பன்றேன் நல்லா பாத்துக்கோ. நாளைப்பின்ன இல்லைன்னு சொல்லிடக்கூடாது” ங்குற மாதிரி தான்
இருக்கு.
இன்னொரு மெண்டல் குரூப்பு. ஜெயலலிதாவும்,
கலைஞரும் இறுதி அஞ்சலி செலுத்தப் போகலன்னும், தனுஷ் ஏன் நேத்து பர்த்டே கொண்டாடுனாருன்னும்
எதோ கொலைக்குத்தம் பன்ன லெவல்ல கழுவி ஊத்துறாய்ங்க. சரி ஒரு நிமிஷம். கலாம் இறந்துட்டாருங்குறதால
உங்களோட ரெகுலர் ஆக்டிவிட்டீஸ்ல எதயாவது நிறுத்திருக்கீங்களா இல்லை மாத்திருக்கீங்களா?
இல்லை ஒரு வேளை சாப்பாட்டையாவது நிறுத்திருக்கோமா?
இல்லை போன ரெண்டு நாள்ல பிறந்தநாள் கொண்டாடுன உங்க நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லாம
இருந்துருக்கீங்களா? நம்மளப் பொறுத்த அளவு கலாம் ஃபோட்டோவ ப்ரொஃபைல் பிக்சரா மாத்திக்கிறதும்
அவரப்பத்தின எதாவது மெசேஜ் வந்த அத உடனே நாலு பேருக்கு அனுப்புறதும், அவர் சொன்ன
“quotes” ah கூகிள்ல தேடி அத ஸ்டேட்டஸா போட்டுக்கிறதும் தான் நம்ம காட்டுற வருத்தம்.
இதே தனுஷ் யாருக்கும் சொல்லாம வீட்டுல நல்லா பிறந்தநாள் கொண்டாடிட்டு, ஃபுல்லா சரக்கடிச்சி தூங்கிட்டு
மறுநாள் காலையில ஒரு கலாமுக்காக ஒரு சோகமான ட்வீட் போட்டிருந்தா இந்நேரம் அந்த லெவலே
வேறயாயிருக்கும்.
ஒரு விஷயம் செஞ்சாலும் தப்பு கண்டுபுடிப்போம். செய்யலன்னாலும் தப்பு கண்டுபிடிப்போம். Maggi la நச்சுப்பொருள் இருக்குன்னு தடை பண்ணா, ஏன் மத்ததை தடை பன்னலன்னு கேப்போம். விஷால் நாய்களுக்காக போராட்டம் இருந்தா ஏன் ஈழத்துக்கு போராடலைன்னு கேப்போம். இந்த Celebrities ah கேள்வி கேக்குறதுலயும் அவிங்கள தொவைச்சி காயப்போடுறதுலயும் நமக்கு இருக்க சொகம் இருக்கே? அடடா.. ஏன்னா நாம என்ன சொன்னாலும் அவங்க கேட்டுக்குவாங்க. ரியாக்ட் பன்ன மாட்டாங்கங்குற தைரியம். விஷால நாய்களுக்கு போரட்டம் பண்ணிட்டு ஈழத்துக்கு ஏன் போராடலைன்னு கேக்குறவிங்களால அவிங்க ஆஃபீஸ் கேண்டீன்ல “இன்னிக்கு ஏன் பொங்கல் போடாம இட்லி போட்டீங்க? “ ன்னு கூட கேக்க முடியாது. ஏன்னா அங்க இன்ஸ்டண்ட் ரியாக்ஷன் இருக்கும்.
நம்ம செஞ்சா அது நியாயம். அடுத்தவன் செஞ்சா
அது தப்பு. அவங்களும் மனுஷங்கதாங்குற ஒரு அறிவுகூட இல்லாம வாய் இருக்குன்னு என்ன வேணாலும்
பேச ஆரம்பிச்சிடுறோம். கலைஞரோட உடல்நிலை என்னன்னு எல்லாருக்குமே தெரியும். ஜெயலலிதாவுக்கும்
கொஞ்ச நாளா உடல்நிலை சரியில்லைன்னு தகவல்கள்தான் வந்துட்டு இருக்கு. அப்படி இருக்கும்போது
அவங்க இறுதிஅஞ்சலிக்கு போகலன்னு அசிங்கமா பேசுறத எந்த வகையில சேத்துக்கிறது?
கடந்த ரெண்டு நாளா நீங்களே நல்லா யோசிச்சி
பாருங்க. கலாம் சம்பந்தமா எத்தனை செய்திய wats app la நம்ம அனுப்பிருக்கோம். அதுல எத்தனை
உண்மை? எத்தனை பொய்யி? கலாம் இறந்துட்டாருங்குற செய்தி மட்டும் உண்மை. உடனே பத்துவருசத்துக்கு
முன்னால எடுத்த ஒரு ஃபோட்டோவ “கலாமின் இறுதி நிமிடங்கள்” ங்குற பேர்ல போட்டுவிட்டாய்ங்க.
ஒருத்தன் நாளைக்கு எல்லாருக்கும் லீவு. கவர்மெண்ட்
சொல்லிருச்சுன்னு அனுப்புறான். ராமேஸ்வரத்துக்கு கவர்மெண்ட் இலவசமா பஸ் இயக்குதுன்னு
ஒருத்தன் கிளப்பி விடுறான். (இதயெல்லாம் அரசாங்கம் அறிவிக்கிறதுக்கு முன்னாலயே). திடீர்ன்னு
இன்னிக்கு காலையில ஒபாமா கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்துறதுக்கு ராமேஸ்வரத்துக்கு
வர்றார்ன்னு அனுப்புறாய்ங்க.
இறந்த செய்தி வந்து அரைமணி நேரம்கூட ஆகல.
கலாமைப் பத்தி பக்கம் பக்கமா கட்டுரைங்க வந்து குவியிது. கலாம் இத சொல்லிருக்காரு.
அத சொல்லிருக்காரு. அவ்வளவுயும் பாத்து “டேய்.. கலாம் இவ்வளவு சொல்லிருக்க்காராடா..
இவ்வளவு நாள் எங்கடா போயிருந்தீங்கன்னு தான் தோணுச்சி. அதயெல்லாம் கலாம் தான் சொன்னாருன்னு
நாம எத்தனை பேருக்கு உறுதியாத் தெரியும்? எதோ வருது நாமளும் அனுப்புறோம்.
இந்த வாட்ஸ் ஆப் வந்ததுலருந்தே என்னன்னு
தெரியல நம்மாளுங்களுக்கு “தாய்க்கு ஒரு ப்ரச்சனைன்னா ஆம்புலன்ஸ கூப்புடுவேன். தாய்நாட்டுக்கு
ஒரு ப்ரச்சனைன்னா நானே ஓடுவேன்” ன்னு உணர்ச்சி பொங்க எவனுக்காச்சும் உதவி பன்னியே ஆகனும்னு
அடம்புடிக்கிறானுங்க. எவனுக்காச்சும் ரத்தம் கேட்டு மெசேஜ் வருதா? இல்லை இத ஒருத்தருக்கு
அனுப்புனா பாதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு வாட்ஸ் ஆப் பத்து பைசா தர்றேன்னு ஒத்துக்கிச்சின்னு
மெசேஜ் வருதா? Forward ah போட்டுவிடு. அது உண்மையா பொய்யா? யாருக்கு என்ன போச்சு?
போனவாரம் திடீர்ன்னு ஆக்சிடெண்ட் ஆன ஒருத்தனுக்கு
அவசரம “A +ve “ வேணும்னு ஒரு மெசேஜ். நானும் சரி உதவலாமேன்னு ஒரு நாலுபேருக்கு அனுப்புனேன்.
அப்புறம் விசாரிச்சிப் பாத்தாதான் தெரியிது. அவனுக்கு ஆக்ஸிடெண்ட் நடந்தது ரெண்டு வருஷத்துக்கு
முன்னாடி. ஆக்ஸிடெண்ட் ஆனவனுக்கே அந்த மெசேஜ் திரும்ப போயிருக்கு. “அடப்பாவிகளா ரெண்டு
வருஷம் முன்னால ஆக்ஸிடெண்ட் ஆன எனக்கு இன்னுமாடா ரத்தம் கேட்டுட்டு இருக்கீங்க” ன்னு
புலம்புன சம்பவங்களும் இருக்கு. இன்னிக்கு ”ராத்திரி 12 மணிலருந்து 3 மணிவரைக்கும்
ரொம்ப கொடிய ரேடியேஷன்கள் பூமியைத் தாக்குறதால எல்லாரும் ஃபோன சுட்ச் ஆஃப் பண்ணி வைங்க.
இத நாசா கூட கன்ஃபார்ம் பன்னிருக்காங்க” ன்னு ரெண்டு மாசம் முன்னால
ஒரு மெசேஜ். ”நாசாவே சொல்லிட்டாங்களா.. அப்ப உண்மையாத்தான் இருக்கும்”னு நானும் நாலு
பேருக்கு அனுப்பிட்டு நைட்டு ஃபோன வேற ஆஃப் பண்ணி வேற வச்சேன். இப்ப வரைக்கும் அந்த
மெசேஜ் எனக்கு ஒரு இருபது தடவ வந்துருக்கு. ஒவ்வொரு தடவ அது வரும்போதும் “தா… அந்த
நாசாவ கொளுத்துங்கடா” ன்னு தான் தோணுது.
இந்த மாதிரி தப்பான தகவல்கள் குடுத்து ஏமாத்துறப்
பத்தி ஓரு ரெண்டுவரிக்கதை இருக்கு. “ஒரு பையன் ரூமுக்குள்ள புலி வந்துருச்சி புலி வந்துருச்சின்னு
அவங்க அப்பாவ அடிக்கடி ஏமாத்துவானாம். பதறியடிச்சிட்டு அவங்க அப்பா ஓடிப்போய் ரூமுக்குள்ள
பாத்தா பையன் மட்டும்தான் இருப்பான். புலியக் காணும். திடீர்னு ஒரு நாள் உண்மையிலயே
புலி வந்துருச்சாம். பையன் புலி வந்துருச்சி புலி வந்துருச்சின்னு கத்த, அப்பா எப்பவும்
போலத்தான்னு நினைச்சி கண்டுக்காம விட்டுட்டு ஒரு அரைமணி நேரம் கழிச்சி போய் பாத்தாரம்.
அப்போ ரூம்ல புலி மட்டும் இருந்துருக்கு. பையனக் காணும். அவ்வளவுதான். (இந்த புலிக்கதை எந்தப் படத்திலிருந்து ஆட்டையப் போட்டது எனக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு வெங்கலக் கின்னம்)
நம்மளும் இதயேத்தான் பன்னிட்டு இருக்கோம்.
இந்த மாதிரி தப்பு தப்பா அனுப்பி அனுப்பி, வெறுத்துபோனவங்க, உண்மையிலேயே யாருக்கவது
உதவி தேவைப்படுறப்போ அத செய்யாம விடுறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு. ஒரு விஷயத்த வந்த
உடனே மத்தவங்களுக்கு அனுப்பித்தான் நம்ம கடமை உணர்ச்சியக் காட்டனும்னு இல்லை. ஒவ்வொரு
செய்தியையும் கிளப்பி விடுறதுக்கு முன்னாலயோ இல்லை மத்தவங்களுக்கு அனுப்புறதுக்கு முன்னாலயோ
கொஞ்சம் யோசிச்சி பாருங்க.