Tuesday, June 28, 2011

அவன் இவன்!!!


Share/Bookmark
மொத படத்துல ஹீரோயின் மட்டை... ஹீரோ லூசேய்....
அடுத்த படத்துல ஹிரோவே மட்டை... 
அதுக்கப்புறம் ரெண்டு ஹீரோவுல  ஒருத்தரு மட்டை.. ஒருத்தரு already அரை லூசு 
 அதுக்கப்புறம் திரும்பவும் ஹீரோயின் மட்டை.... ஹீரோ  அதே மாதிரி அரை மெண்டல். 

இப்ப இன்னாடான்னு பாத்தா, ஹீரோ ஹீரோயின சாவடிச்சி நம்மளுக்கு Bore 
அடிச்சி போயிருச்சி போலருக்கு. அதுனால தான் இந்த படத்துல அதுக்காகவே ஸ்பெஷலா ஒரு ஊருகாவ  ரெடி பன்னிருக்கரு நம்ம பாலா. ஓவ்வொரு டிரக்டருக்கும் ஒவ்வொரு செண்டிமெண்ட் .. அது மாத்ரி நம்ம பாலா சாருக்கு
யாரையாச்சும் சாவடிக்கிற செண்டிமெண்ட்... இந்த தடவ நம்மளையும் சேத்து
சாவடிச்சிருக்கரு.

ஆரம்பதுலருந்து கடைசி வரைக்கும் மொக்க போட்டுட்டு கடைசில, யப்பா tempo லாம் வச்சி கடத்திருக்கோம்பா.. கொஞ்சம் பாத்து போட்டு குடுங்கன்னு சொல்ற மாதிரி, செண்டிமெண்ட் சீனெல்லாம் வச்சிருக்கேன்பா ஏதாவது பாத்து படத்த ஓட்டுங்கன்னு சொல்ற மாத்ரி இருக்கு.

நான் கடவுள் பாத்தப்பவே, இனி பாலா படம் பாகவே கூடாதுன்னு நானும் என் நண்பனும் முடிவு பண்ணுனோம்.. சரி என்னோட favorite விஷால் இருக்கறேன்னு பாத்தா, இந்த படத்துக்கு நான் கடவுள் நாலு தடவ பாக்கலாம் போலருக்கு.   

விஷால் நடிப்பு  மட்டும் ஓரளவு படத்துல  அங்கங்க தெரிஞ்சாலும்,  நல்ல சீன்னு படத்துல சல்லட போட்டு தேடுனாலும் கெடைக்காது. கேக்கும்  போதே அருவருப்ப வரவைக்கிற மாதிரி வசனங்கள் படம் முழுசும்... ஒருவேள இப்புடி 
எழுதுறது தான் காமெடி போலருக்குன்னு நெனசிகிட்டு எழுதுனாரா என்னனு தெரில. காமெடி பண்றதா   நெனசிகிட்டு, சரண் படத்துல வர்ற மாதிரி  படத்துல நடிக்கிரவைங்க தான் சிரிக்கிராயிங்க..நமக்கு சிரிப்பு வர மாட்டேன்குது.   அதுவும் ஆர்யாகூட வர்ற ஒரு பையன் படம் முழுசும் அவனே மொக்க போட்டு அவனே சிரிசிக்கிறான்... கிறுக்கு பயபுள்ள.. 

படத்துல நம்ம அழகர் மலை RK ஒரு படு பயங்கரமான வில்லனா வர்றாருப்பா  ( நவரசங்கள்ளையும்  பின்னுவாராமா). இந்த maggi  two  minutes noodles மாதிரி இவரு கடைசி ten  minutes வில்லன். 

ஒருதடவ ரெண்டு தடவன்ன பரவல.. ஒவ்வொரு தடவையும் வெள்ளை கொடிய எடுத்துட்டு வந்து நின்ன என்ன பண்றது? அது மாதிரி தான் ஒரு தடவ ரெண்டு தடவன்ன பரவல ஒவ்வொரு தடவையும் நம்மாளு ஒரே படத்த எடுத்துட்டு வந்து நிக்கிறாரு.. 

இதுல ஒரு கொடும என்னன்னா அடுத்த வருஷம் இந்த படத்தையும் நேஷனல் அவார்டுக்கு nominate பண்ணி, சிறந்த டைரக்டர் அவார்டு பாலாவுக்கு தான் குடுப்பாயிங்க .. அது  அடுத்த படத்தையும்  இதே மாத்ரி எடுத்துட்டு வந்து நிக்கும். 

ஒரே குஷ்டமப்பா....

Monday, June 20, 2011

கவுண்டர் டனார்.. கேப்டன் பனார்


Share/Bookmark
இந்த பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே... யார் மனதையும் புண் படுத்துவதற்காக அல்ல

கவுண்டர் வீட்டு வாசல்ல பைப்புல தண்ணி அடிச்சிக்கிட்டு இருக்காரு... அப்ப அங்க செந்தில் வேக வேகமா ஓடி வர்றாரு.

செந்தில்: அண்ணே... அண்ணே.. இங்க என்னனே பன்னிகிட்டு இருக்கீங்க....

கவுண்டர்:
அட ராக்கெட் ஒன்னு செஞ்ச்சேன்டா.. அத வானத்துல அனுப்புறதுக்கு நல்ல நேரம் பாத்துக்கிட்டு இருக்கேன்...

செந்தில்:
வெளையாடாதீங்கண்ணே...

கவுண்டர்: டேய் ஸ்பெக்ரம் மண்டையா.. நா கொழாயில தண்ணியடிச்சிகிட்டு இருக்கது தெரியிதல்ல. அப்புறம் என்ன நாயே கேள்வி?

செந்தில்: சரி அத விடுங்க... சீக்கிரம் கெளம்பி நம்ம பஞ்சாயத்து போர்டு டிவி
ஆஃபீஸுக்கு வாங்க..

கவுண்டர்: எதுக்குடா நாயே?

செந்தில்: இன்னிக்கு பேட்டியெடுக்கனும்னு சொல்லி ரெண்டு அரசியல் வாதிங்கள வர சொல்லிருந்தோம். ஆனா அவங்க பேர கேட்டாலே யாரும் பேட்டி எடுக்க வர மாட்டேங்குறாய்ங்க. நீங்க வந்தாதான் நாக்க புடுங்கிக்கிற மாதிரி நல்லா கேள்வி கேப்பீங்க.

கவுண்டர்: ஏண்டா நாக்க புடுங்கிற மாதிரி நா என்ன கட்டிங் ப்ளேயர் வச்சிக்கிட்டாடா கேள்வி கேக்க போறேன். ஆமா அடுத்தவன் பயந்து ஓடுற அளவுக்கு அப்புடியாருடா வரப்போறா?

செந்தில்: அத அங்க வந்து பாருங்க.

கவுண்டர்: இந்த தோணித்தலையன் லோலாயி தாங்க முடியலையே... இன்னிக்கு  தண்ணியடிக்கிறது கேன்சல்.

-----------------------------------------------------------------------------------------------------
பஞ்சாயத்து போர்டு டிவி ஆஃபீஸ்:

கவுண்டர செந்தில் உள்ள அழைச்சிகிட்டு வர்றாறு.

செந்தில்: (விஜயகாந்தையும், TR ஐயும் காமிச்சி) இவங்கதாண்ணே நா சொன்ன
அந்த ரெண்டு பேரு.

கவுண்டர்: என்னடா அரசியல் வாதிகள்ன்னு சொன்ன... இவனுங்க உக்காந்து
இருக்கனுங்க..

செந்தில்: என்னண்ணே இப்புடி கேட்டுபுட்டீங்க... இவங்க ரெண்டு பேரும் கட்சி
தலைவருங்கண்ணே....

கவுண்டர்: ரோடு போடுற தார்ல மூஞ்சி கழுவுன மாதிரி இவன், மூங்கி பொதருக்குள்ளருந்து எட்டிப்பாக்குற மாதிரி ஒரு மூஞ்ச வச்சிகிட்டு அவன்.... நல்ல கட்சி தலைவருங்கடா....இந்த மூஞ்சிகள பேட்டி எடுக்க சொன்னா எவன் வருவான். இதுகள என்ன நாக்க புடுங்கிக்கிற மாதிரி கேக்க சொல்ற நீ... ஏற்கனவே நாக்க புடுங்கி வச்சிட்டு வந்தவனுக மாதிரிதான் இருக்கானுக.

செந்தில்: அண்ணேன் சத்தம் போடாதீங்கண்ணே அவங்களுக்கு கேட்டுற போகுது. சரி வாங்க நிகழ்ச்சிய ஆரம்ம்பிப்போம்.

---------------------------------------------------------------------------------------------------------------
கவுண்டர்: மிஸ்டர் விஜயகாந்த்,...நா நேரடியா கேள்விய ஆரம்பிச்சிடுறேன்....
நீங்க இந்த எலெக்ஷன்லயும் ஜெயிச்சிருக்கீங்க...இத எப்புடி ஃபீல் பண்றீங்க?

விஜய்காந்த்: (அவருக்கே உரிய slang இல்) ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு... ரொம்ப
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. எல்லாத்துக்கும் காரணம் நா தி.மு.க வோட கூட்டணி வச்சிக்கிட்டது தான்... ஒ..... சாரி.. சாரி.... ஒளருரேன்ல... எல்லாத்துக்கும் காரணம் நான் தே.மு.தி.க வோட கூட்டணி வச்சிகிட்டது தான்....

கவுண்டர்:
இப்ப தெளிவா பேசிட்டாராமா.... அய்யா நீங்க யாருகூட வேணாலும்
கூட்டணி வச்சிக்குங்கையா.. (மனதிற்குள்: இவன் ஓட்டயே, இவன் இவனுக்கு போட்டு கிட்டானா இல்ல எதிர்கட்சிக்கு போட்டானான்னு தெரியல... இவரு தலைவரு...) சரி விடுங்க... ஜெயிச்சிட்டீங்க... அடுத்ததா நாட்டுக்கு என்ன பண்ணலாம்னு இருக்கீங்க..

விஜயகாந்த்: ஊர்ல இருக்க எல்லாருக்கும் இலவசமா வேலை குடுக்கலாம்னு இருக்கேன்..

(கவுண்டர் ஒரு ஜெர்க் அடிச்சிட்டு)  என்னது இலவசமா வேலை குடுக்க போறியா..ஜெயிக்கிறதுக்கு முன்னால இலவசமா மிக்சி தர்றேன் கிரைண்டர் தர்றேன், ஆட்டுகுட்டி தர்றேன், கோழி முட்டை தர்றேன்னு சொன்னீங்க.. இப்ப என்னடா வேலை தர்றேங்குறீங்க..அந்த இலவசமா வேலை தர்றதுக்கு பதிலா, இலவசமா சம்பளத்த குடுத்துட்டீங்கன்னாநம்ம மக்கள் எல்லாம் சந்தோசப்படுவாங்க.

விஜயகாந்த்: இத பத்தி நாம அடுத்த எலெக்ஷன்ல யோசிப்போம்.. அவ்வ்

கவுண்டர்: சரி அப்புறம் வேற என்ன செய்வீங்க

விஜயகாந்த்: அப்புறம் தமில் மொளிய வளர்க்க பாடுபடுவேன்

கவுண்டர்:
அது என்னடா ஆன்னா ஊன்னா தமிழ் மொழிய வளர்க்குறேன் வளர்க்குறேன்னு ஆரம்பிச்சர்றீங்க.. தமிழ்மொழி என்ன அப்பு கமல் மாதிறியா இருக்குது. நீங்க எதும் பண்ணாம இருந்தாலே அது வளர்ந்துரும்டா...

விஜயகாந்த்: அட அதுக்கில்ல மிஸ்டர் gavunda மணி, இப்புடியெல்லாம் பண்ணாதான் என்னைய தமிழன்னு ஒத்துக்குவாய்ங்க நம்மூர்ல.. இல்லைன்னா.. " ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே hi pitch la TR குரல் கேக்குது

TR: மறத்தமினுங்க நானு.. நா ஒரு அமுக்கப்பட்ட தமிழன்.. தமிழ்தான் என் மூச்சு...தமிழ்ன் தான் என் பேச்சு... ஒரு தமிழ்னுக்க்கு இந்த தமிழ்நாட்டுல.....

கவுண்டர்:
டேய் க்ராஸ்டாக் வாயா.. நீ இருடி உன்கிட்ட அப்புறம் வர்றேன்...
 குறுக்க பேசுன கொஞ்சோண்டு தெரியிறா மூஞ்சிலயும் தார ஊத்தி கருக்கிருவேன்..சரிங்க விஜயகாந்த், இந்த் ஈழத்தமிழ்ர்களுக்காக நீங்க எதாவது செய்யலாம்னு நெனக்கிறீங்கலா?

விஜய்காந்த்:
கண்டிப்பா செய்வேன்..ஈழத்தமிழ்ர்கள காப்பத்துற போலீஸ் அதிகாரியாஒரு படத்துல நடிக்கப் போறேன். படத்தோட பேரு "ஈழநாதன்". க்ளைமாக்ஸ்ல ராஜபக்ஷேவ பேக் சாட்லயே பின்றேன் பாருங்க. அவரு அப்புடியே திருந்தி எல்லா தமிழர்கள்டயும் மன்னிப்பு கேக்குறாரு.

கவுண்டர்: ஓ.... இப்பவும் காப்பாத்துற மாதிரி படம்தான் நடிப்பீங்க... வேற எதுவும் பண்ண மாட்டீங்க... வேணும்னா ஒன்னு பண்ணலாம்.. நீ நடிக்கப்போற அந்த படத்த Sri lanka வுல ரிலீஸ் பண்ணா மிச்சமிருக்க கொஞ்ச நஞ்ச பேரும் செத்து போயிருவாங்க..அப்புறம் இந்த தொல்லையே இருக்காது...

விஜய்காந்த்: ஏய்... இலங்கைல மொத்தம் ரெண்டு கோடியே முப்பத்தஞ்சி லட்சத்தி இருபத்தி ரெண்டாயிரம் பேரு,,

கவுண்டர்:
ஒண்ணுக்கு போயிட்டு இருக்காங்களா?

விஜயகாந்த்:
ஒண்ணுக்கு இல்லீங்க....

கவுண்டர்: அப்ப ரெண்டுக்கு போறாங்களா... இவன் எது எதெல்லாம் கணக்கு எடுத்து வச்சிருக்கான் பாருங்கய்யா.... த.... ச்சை... உன்கிட்ட நோ மோர் கொஸ்டீன்ஸ்...அப்புடியே ஓடிப்போயிரு.

TR ah பாத்து "டேய் கம்பளி பூச்சி வாயா.." நீயும் இவன் கூடவே ஒடிப்போயிரு...இல்லை கரண்ட்டு ஒயர புடுங்கி வாயிக்குள்ள விட்டுருவேன்...

TR: எதுக்குங்க நா போகனும்... என்கிட்ட இன்னும் நீங்க ஒரு கேள்வி கூட கேக்கலஅப்புடியே கெளம்ப சொன்னா எப்புடி... யூ ஆர் சப்ரச்சிங், அப்ரசிங் அண்ட் டிப்ரசிங் ய தமிழன்....

கவுண்டர்:
என்னது அப்ரசிங்கா.. ஒக்கா மவனே இன்னொரு வார்த்த பேசுன இங்கயேஉனக்கு ஆப்ரேசந்தான்...

TR: கவுண்டமணி:...... ஒரு தமிழனோட வீடியோ வெளியாகி அவன் பெரியாளாகுறது உங்களூக்கு புடிக்கல...நான் பேசுன வீடியோ you tube la வந்தா என்ன போடு போடுது தெரியுமா?

 கவுண்டர்:
டேய் மூங்கி பொதரு வாயா.... வக்காளி எனக்கு வெறி வர்றதுக்குள்ள  போயிருடா....

செந்தில்:
அண்ணேன் அவர விடுங்கண்ணே... இங்க பாருங்க ஆஃபீஸூக்கு வெளிய நின்னுஒருத்தரு ரொம்ப நேரமா பொலம்பிகிட்டு இருக்காரு.. இத வந்து என்னன்னு கேளூங்கண்ணே..

கவுண்டர்: என்னடா?

Anonymous: நா என்ன எழுதிட்டேன்... எனக்கு எதுக்கு பணம் தந்தீங்க... நா என்ன
எழுதிட்ட்டேன்... எனக்கு எதுக்கு பணம் குடுத்தீங்க... நா அப்புடி என்ன எழுதிட்டேன் எனக்கு எதுக்கு பணம் குடுத்தீங்க...

கவுண்டர்: டேய் கிட்னா நாயே... நீ எழுதுனதுக்காக பணம் குடுக்கலடா.. இனிமே எதுவும்எழுதிர கூடாதுண்ணு பணம் குடுத்தது... மரியாதையா ஒடிப்போயிரு... எல்லாம் இந்தபண்ணாட பன்னிய சொல்லனும்ங்க... ஒழுங்கா தண்ணி அடிச்சிகிட்டு இருந்தவன கூப்டு வந்துஇவனுங்க கிட்ட மாட்டிவிட்டுருச்சி... ஒரே குஸ்டமப்பா....

Monday, June 13, 2011

கலைஞரின் "எவண்டி உன்ன பெத்தான்"


Share/Bookmark
கலைஞர் சமீபத்துல "அம்மா"வால ஏற்பட்ட மன உளைச்சல்கள கொட்டி சிம்புவோடபாட்டுக்கு தானே வரி எழுதி பாடுறாரு...ஆதே ட்யூன்ல பாடுங்க..

Oh (Big)Baby I feel like spitting
Spitting up up up in the aaaaaaair
When I Look At You, You Look At Me Like
You Wanna Make fight To Me There

நீ ஜெயிச்ச first செகண்ட்ல என்ன காணும்                                           
தேடிப்பாக்குறேன் தமிழ்நாட்டுல நானும்
நீ ஜெயிச்ச first செகண்ட்லருந்தே என்ன காணும்                               
தேடிப்பாக்குறேன் சந்து பொந்துல நானும்

சத்தியமா எனக்கு தயாநிதி வேணாம்
கண்டிப்பா எனக்கு கனிமொழி வேணும்
சத்தியமா எனக்கு தயாநிதி வே....ணாம்
 கண்டிப்பா எனக்கு கனிமொழி வேணும்

ஒண்ணு எனக்கு தமிழ்நாட்ட குடேய்...
இல்ல ரொம்ப சிம்பிள் ஸ்பெக்ட்ரம் கேச விடேய்
இல்ல தயவு செஞ்சி கனிமொழியயாச்சும் வெளிய விடேய்....

எவண்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்
கைல கெடச்சா செத்த்தான் செத்தான் செத்தான் செத்தான்

எவண்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்
அவன் கைல கெடச்சா செத்தான் செத்தான் செத்தான்...

மூஞ்சப் பாரு...  i feel like....
மூஞ்சப் பாரு...  i feel like....
மூஞ்சப் பாரு..   i feel like....


I FEEL LIKE .... BITING YOU
I FEEL LIKE .... PUNCHING YOU
I FEEL LIKE .... BEGGING YOU

என் head ache um நீதான், என் action 500 um நீதான்
             என்னப் புடிச்ச  71/2 நீ தான் ((hi pitch))
என் sleeping pills um நீதான், என் power glass um நீதான்
     நான் தினமும் போடுற sugar free yum நீதான் (hi pitch)
என் கலைஞர் காப்பீடு நீதான் என் சமச்சீர் கல்வி நீதான்
              எனக்கு அடிச்ச ஆ..ப்பும் நீதான்
என் கச்சத்தீவும் நீதான்... என் மஞ்ச துண்டும் நீதான்
             என் உண்ணா விரத போரும் நீதான்

என் enemy யும் நீதான். மடி கணிணியும் நீதான்
அட எல்லாமே நீதான்.... நீதான்.... நீதான்... நீதான்...ஆங்....ஆங்... ஆங்,... ஆங்... அஹ அஹ அஹ அஹ..ஆங்ங்ங்ங்.....

மூஞ்சப் பாரு... I FEEL LIKE...



Who the "M.." is your Mummy Mummy Mummy Mummy
நீ என்னை ஆக்கிட்ட Dummy Dummy Dummy Dummy

who the "D.." is your teacher teacher teacher teacher
Ne என்ன படுத்துற torture torture torture torture....

எவண்டி உன்ன பெத்தான் 
என் கைல கெடச்சா செத்தான்..
எவண்டி உன்ன ..........த்தான்....... த்தான்....... த்தான்....
அவன் கைல கெடச்சா செத்தான் செத்தான் செத்தான்



எண்ணம்: நண்பன் அசால்ட்டு அசார்
ஆக்கம்: முத்துசிவா



Wednesday, June 8, 2011

சில தலைவர் படங்களும் சில தலைவர்களும்


Share/Bookmark
இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனையே.. யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல


சில தலைவர் படங்களோட சீன்ஸ்ல இப்போ இருக்க அரசியல்வாதிகள் சிலர்
நடிச்சிருந்தா எப்புடி இருந்துருக்கும்னு ஒரு கற்பனை..

1. சிவாஜி- The Boss -Interval Scene:




ரஜினியாக கலைஞர், ஆதிசேஷனாக அம்மா, விவேக்காக க.அன்பழகன்.

அம்மா: என்னங்க கலைஞரே இப்புடி ஆயிபோச்சு... படுபாவி பசங்க உங்கள
இந்த நெலைமைக்கு ஆளாக்கிட்டாங்களே..
ஆமா இனிமே நீங்க என்ன பண்ணுவீங்க கலைஞர்? 
கட்சி நடத்துவீங்களா? பாராட்டு விழா நடத்துவீங்களா?
சினிமாவுக்கு கதை எழுதுவீங்களா? நா வேணா தினத்தந்தில சொல்லி உங்களுக்கு ரிப்போட்டர் வேலை வாங்கி தரட்டுமா?

அய்யயோ அதுக்கெல்லாம் முன்னனுபவம் வேணுமே!! ஹ்ம்ம்ம். உக்காந்த எடத்துலையே நோகாம நோம்பு கும்புடுற வேல ஒண்ணு இருக்கு பாக்குறீங்களா?

அதான்,,,, ரொம்ப ஈசியான தொழில்..(ஒரு பேனா ரீஃபில கையில வச்சி) எதாவது கடையில கணக்கெழுதி  பொழைச்சிக்கோ.... ன்னு சொல்லிட்டு அம்மா சிரிச்சிட்டு போயிடுறாங்க..

கலைஞர் சோகமான BGM oda  அறிவாலையத்துல உக்காந்து அந்த ரீஃபில மேலையும் கீழையும் திருப்பி திருப்பி பாக்குறாறு..

(அப்போ கலைஞரோட சோகத்த புரிஞ்சிகிட்ட அன்பழகன்)

என்னதான் Parker பேனாவுல எழுதுனாலும் இந்த ரீஃபில்ல எழுதுற சொகமே
சொகம்தான் கருணா...

(கலைஞர் அப்பவும் சோகமாவே இருக்க)

க.அன்பழகன்: நீ பேசாம திருவாரூருக்கே போயிரு கருணா.....

கலைஞர்: 
இதுதான் என் ஊரு... இதவிட்டுட்டு நா எங்கேடா போவேன்.. இதுக்கு
நல்லது செய்யாம விடமாட்டேன்..

க.அன்பழகன்: எப்புடி?

கலைஞர்:
இந்த ரீஃபில வச்சித்தான்...இந்த ரீஃபில மேல தூக்கி போடுறேன். அது திரும்ப கீழ வந்துருச்சின்னா பூ பாதை.. அப்புடியே மேலையே போயிருச்சின்னா புஷ்ப பாதை.என் முடிவை கடவுளோ தற்செயலோ இது தீர்மானிக்கட்டும்..

க.அன்பழகன்: ???????!!!!!!

கலைஞர் ரீபிலை மேல தூக்கி போட அது திரும்ப அவரு கால்கிட்டயே விழுது. அதஎடுத்து கையில வச்சி, ஒரு உறுமு உறுமிட்டு

"இனி நா போற பாதை... (வழக்கம்போல) அதே பாதை"

அந்த ரீஃபில லெப்ல ஒரு தடவ ரைட்டுல ஒரு தடவ தூக்கி போட்டு மேல போடுறாருஅது அப்புடியே அவரு பாக்கெட்டுல போய் விழுது... அப்புடியே தலைய ஒரு சிலுப்பு சிலுப்ப, கலைஞர் Hair style um (??!!) மாறிடுது..

அண்ணாமலை சவால் சீன்:




ரஜினியாக விஜய்காந்த், சரத்பாவுவாக வடிவேல், ராதா ரவியாக அழகிரி

கேப்டன் hi pitch la கத்திகிட்டே வர்றாரு....

கேப்டன்:
வடிவேல்,..... வடிவேல்ல்ல்ல்ல்.......

வடிவேலு : மாடியிலருந்து ( என்ன காட்டெருமை மழையில நனைஞ்சி வந்து நிக்கிது)என்ன விஷயம்?

கேப்டன்: என்ன விஷயம்னா கேக்குற? எதோ ஆத்துறத்துல உன்ன ரெண்டு அப்பு அப்பிட்டேன்.. அதுக்கு,என்ன ரூமுக்குள்ள போட்டு நாலு மிதி மிதிச்சிருக்கலாம்மூஞ்சில காரி துப்பிருக்கலாம். ஆனா அத விட்டுட்டு ஊருக்குள்ள என் இமேஜ காலி பண்ணிட்டியேடா பாவி...

வடிவேலு:
இத பாரு... உன் இமேஜ டேமேஜ் பண்ண வேண்டிய நெலமை பண்ணியாச்சி அதுக்கு உனக்கு என்ன நஷ்ட ஈடு வேணுமோ வாங்கிக்க...

கேப்டன்: நஷ்ட ஈடு வேணுமான்னா கேக்குற.. 50 படத்துல கஷ்டப்பட்டு போலீசாநடிச்சி கேப்டன்னு form ஆன பேர ஓரே நாள்ல காலி பண்ணியே.. அத திருப்பி குடு.. (இடி இடிக்குது) நா தண்ணியடிச்சத ஊருக்குள்ள சொல்லி என்ன மாதிரியே பேசி நா ஹாஃப் அடிச்சி  ஏத்துன போதைய, எனக்கு ஆப்படிச்சி உடனே எறக்குனியே அத திருப்பி குடு. இதுக்கெல்லாம் நஷ்ட ஈடு குடுக்க முடியுமா உன்னால?

வடிவேலு:
ஒரு ஊரு பாக்க உன்னபத்தி பேசுனதுக்கே இப்புடி பேசுறியே, உலமெல்லாம் பாக்குற சினிமால அத்தன பேருக்கு முன்னாடி என்ன பொளிச்சி பொளிச்சின்னு அடிச்சி அசிங்கப்படுத்துனியே அந்த மரியாதைய திருப்பி  தர முடியுமா உன்னால?

கேப்டன்: நானாவது உன் கன்னத்துலதான் அடிச்சேன். நீ என் வாழ்க்கையிலயே
அடிச்சிட்டியே...

அழகிரி:
நிறுத்துய்யா...இவரு பெரிய British இளவரசரு.. இவர எல்லாருக்கும்
முன்னாடி அசிங்கப்படுத்திட்டோம்... நீ மட்டும் அந்த அம்மா கூட சேந்துக்கிட்டு
எங்கள பத்தி தப்பு தப்பா பேசலாயா.... நானும் பாத்துகிட்டே இருக்கேன்... பேசிகிட்டே போற... போவியா...

கேப்டன்:
போறேன்... போறதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்லிட்டு போறேன்... இன்னிக்குஉங்களுக்கு காமெடி நல்லா வருதுங்கறதுக்குகாக என்னவச்சி காமெடி பண்ணி என்ன அசிங்கப்படுத்தி எனக்குள்ள தூங்கிட்டு இருந்த காமெடியன தட்டி எழுப்பிட்டீங்க..வடிவேல்ல்ல்ல்ல்ல்.... இதுவரைக்கும் இந்த கேப்டன நீ ஹீரோவாதான் பாத்துருப்ப.. இனிமே இந்த கேப்டன கமெடியனா பாப்ப...இந்த நாள்........... உன்னுடைய காலண்டர்ல குறிச்சி வச்சிக்கோ.... இன்னிலருந்து உன்னோட அழிவுகாலாம் ஆரம்பமாயிருச்சி.. எனக்கும் உனக்கும் காமெடி யுத்தம் தொடங்கிருச்சி..

இந்த யுத்தத்துல நா உன்னவிட நெறைய காமெடி சீன்கள்ல நடிச்சி, பல மிமிக்ரி வாய்ஸ் ட்ரை பண்ணி, உன்னோட முன்னேற்றத்த தடுத்து நிறுத்தி உன் காமெடி வெறிய ஒழிச்சி கட்டி, நீ எப்டி நா தண்ணியடிச்சத ஊருக்கெல்லாம் சொல்லிக்காட்டி என்ன அசிங்கப்படுத்துனியோ அதே மாதிரி நீ பக்கத்து வீட்டு ஆண்டி கூட "தண்ணி" அடிக்கிறத நா எல்லாருக்கும் நடிச்சி காட்ட்ல இந்த காந்த்.. விஜயகாந்தே இல்லடா

(டான் டடட டட்டான் டான் டடட டட்டான் டான் டடட டட்டான்) கேப்டன்
ரொம்ப கஷ்டப்பட்டு வேகமா நடந்து போறாரு.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...