Saturday, January 30, 2016

அரண்மனை 2 – அல்வா!!!


Share/Bookmark
பொதுவா ஒரு படத்தோட ரெண்டாவது பார்ட்டுங்குறது முதல் பாகத்துல நடிச்ச அதே கேரக்டர்கள வச்சி முதல் பாகத்தோட கதையின் தொடர்ச்சியையோ இல்லை அதற்கு சம்பந்தமான வேற ஒரு கிளைக் கதையையோ எடுக்குறது தான். ஆனா நம்ம தமிழ் சினிமாவ பொறுத்த அளவுல அப்படி இல்ல. ஒருசில படங்களைத் தவிற ரெண்டாவது பார்ட்டுங்குறது பெரும்பாலும் ரெண்டாவதா எடுக்கப்படுற படத்தோட ப்ரமோஷனுக்காகவும் நல்ல ஓப்பனிங்குக்காக மட்டுமே பயன்படுத்தப்படுது. உதாரணத்துக்கு சொல்லனும்னா பீட்சா-2, பில்லா-2, காஞ்சனா-2, பசங்க-2, தலைநகரம்-2 போன்ற படங்கள் அதே ஹீரோ அல்லது அதே இயக்குனர் என்ற ஒருசில ஒற்றுமைகளைத் தவிற கதையில முழுசும் வேறுபட்ட படங்கள். எனக்கு தெரிஞ்சி சிங்கம்-2 மட்டும்தான் அதே கதாப்பாத்திரங்கள வச்சி முதல் படத்தோட தொடர்ச்சி மாதிரி வந்த படம்.

தமிழ்ல இப்போதைக்கு படம் எடுத்துட்டு இருக்குற இயக்குனர்கள்ல பி.வாசு, கே.எஸ்.ரவிகுமாருக்கு அப்புறம் அதிக படம் இயக்கிய இயக்குனர் சுந்தர்.சி தான். அன்பே சிவம், சின்னா போன்ற ஒண்ணு ரெண்டு படங்களைத் தவிற ஒர்க் பன்ன  அத்தனை படங்களும் காமெடிய மையமா வச்ச படங்கள்தான். கொஞ்ச நாள் நடிக்க வந்து கால் உடைஞ்சி நடிக்கிறத நிறுத்திருந்தாலும் திரும்ப ரெண்டாவது ரவுண்டு கலகலப்புல ஆரம்பிச்சி தொடர்ந்து 3 படம் செம ஹிட். ஆம்பள ஆவரேஜாதான் போச்சின்னாலும் காமெடில பட்டைய கெளப்பிச்சு.  அரண்மனை வெற்றியத் தொடர்ந்து அதோட அடுத்த பார்ட்ட சொந்த தயாரிப்புல எடுத்து ரிலீஸ் பன்னிருக்காரு. படம் எப்டின்னு பாப்போம்.

ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னால சந்திரமுகியோட ரெண்டாவது பாகம் தெலுங்குலயும் (நாகவள்ளி) , கன்னடத்துலயும் (ஆப்த ரட்சகா) பி.வாசு எடுத்திருந்தாரு. அதுக்கு நம்ம தளத்துல ஒரு விமர்சனமும் போட்டுருந்தோம் (நாகவல்லி விமர்சனம்). அதாவது அதுல ரெண்டாவது பார்ட்டுன்னு பேர மட்டும் வச்சிக்கிட்டு முதல் பாகத்துல இருந்த கேரக்டர்கள மட்டும் மாத்தி திரும்ப அதே படத்த எடுத்து ரிலீஸ் பன்னிருந்தாரு. ஆனா இங்க அரண்மனை-2 ல நடக்குற கொடுமையோ அதுக்கும் மேல.

அரண்மனையோட அடுத்த பார்ட்டுன்னு நெனைச்சி போனா, இது அடுத்த பார்ட் இல்லை. வேற நடிகர்கள் நடிச்சி அதே அரண்மனையோட முதல் பாகமே ஓடிக்கிட்டு இருக்கு. என்னடா பித்தலாட்டம் இது. ”அண்ணே போன வாரம் ஒரு வடை போட்டு குடுத்தீங்களே.. சூப்பரா இருந்துச்சின்னே… அதே மாதிரி ஒண்ணு போட்டு குடுங்கண்ணே” ன்னா அதே மாதிரி என்ன அதே வடையே இருக்கு” ன்னு எடுத்து குடுக்குற மாதிரி கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாம அப்புடியே எடுத்துருக்காங்க.

சக்திவாய்ந்த அம்மன் இருக்க ஒரு ஊரு. பேய்கள்லாம் அந்த ஊருல அண்டவே அண்டாது. அப்படி இருக்க கோயில புதுப்பிக்கனும்னு அம்மன தூக்கி ஒரு பத்து நாள் நவதாணிய கிடங்குன்னு எதோ சொல்லி அதுக்குள்ள வச்சி பூட்டிடுறாங்க. இந்த கேப்புல பில்லி சூனியம் வக்கிரவியிங்க அவனுங்க பொழப்புக்காக சில பேய்கள கிளப்பி விடுறாய்ங்க. அதுல ஒரு கொடுரமான பேயி நேர ஒரு அரண்மனைக்குள்ள போயிருது.

அப்புறம் என்ன… திடீர் திடீர்னு ஒடையிதாம்.. சாயிதாம்… ராதாரவிய தூக்கி போட்டு மிதிக்கிதாம். ராதாரவி பையன் சித்தார்த்தும் பேயப் பார்த்து மெரண்டு போயிட, அப்புரம் வர்றாரு நம்ம ”ஷரவணா” சுந்தர்.சி. அரண்மனை 1 ல என்ன பன்னாரோ அதயே இங்கயும் பன்றாரு பேய யாருன்னு கண்டு புடிச்சி அதுகூட பேச்சுவார்த்தை நடத்தி பத்தரமா திரும்ப அனுப்பி வைக்கிறதுதான் மீதிக் கதை.

படத்துல வர்ற எல்லா சீனுமே அருதப் பழசு. தீயா வேலை செய்யனும் குமாரு படம் ரிலீஸ் ஆனப்போ நானும் என் நண்பனும் “மச்சி இந்தப் படத்த பாருடா.. எதோ புது டைரக்டர் எடுத்த மாதிரி இருக்கு… சுந்தர்.சி இந்த ட்ரெண்டுக்கு சூப்பரா அடாப்ட் ஆயிட்டாருடா” ன்னு பேசிக்கிட்டு இருந்தோம். இப்ப என்னன்னா அப்டியே உல்டாவாயிருச்சி. அரண்மனை வந்தப்புறமே எத்தனை சூப்பர் பேய் படம் எவ்வளவு நல்ல புது சீனோடா வந்துச்சி. அதப் பாத்தாவது கொஞ்சம் திரைக்கதைக்கு மெனெக்கெட்டிருக்கலாம்.

ஒரு பேய் படத்துல யாராவது ஒரு பொண்ணு முழிய உருட்டி உருட்டி பாக்கும். ஸ்லோ மோஷன்ல போகும். எப்ப பாத்தாலும் மொறைச்சிகிட்டே இருக்கும். அதாவது நம்ம அதுதான் பேயின்னு நினைப்போமாம். எத்தனை படம் அதே மாதிரி. இப்பல்லாம் அதுமாதிரி எதாவது கேரக்டருக்கு பில்ட் அப் குடுத்தாலே அந்த கேரக்டர் டம்மி பீஸாத்தான் இருக்கும்னு பொறந்த குழந்தை கூட சொல்லிடும். அப்டி இருந்தும் படத்துல பூனம் பாஜ்வாவுக்கு அந்த கேரக்டர் தான்.

பேய் வர்ற சீன்லயெல்லாம் பூணம் பாஜ்வா ரூமுக்குள்ள எதோ பயங்கரமா மந்திரம் பன்னிட்டு இருக்கு. சரி எப்புடியும் அந்தப்புள்ள பேயா இருக்காது. நா ஒரு படி மேல போய் யோசிச்சேன். ஒரு வேளை ஹாரி பாட்டர் படத்தோட 1st part ல Professor Snape ah இப்டித்தான் காமிப்பாய்ங்க. எப்பவுமே மந்திரம் பன்னிட்டு இருக்க கெட்டவன் மாதிரி. ஆனா ஸ்நேப் தீய சக்திக்கிட்டருந்து காப்பாத்துரதுக்கு தான் மந்திரம் பன்னாருன்னு கடைசில தான் தெரியும்.  ஒரு வேளை அதத் தான் காப்பி அடிச்சிருப்பாய்ங்களோன்னு பாத்தா.. கடைசில ஒண்ணு சொன்னாய்ங்க பாருங்க. ச்சை.. உங்களுக்கு போய் ஹாரி பாட்டர் லெவல்ல யோசிச்சேன் பாருடா.. என் மூஞ்சில நானே காரி துப்பிக்கனும்னு நெனைச்சிக்கிட்டேன்.

பேய் காட்சிகள் பெரிய தாக்கத்த ஏற்படுத்தாதது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. ஏன்னா முதல் பாகத்துலயே பெருசா பயமா இருக்காது. ஆனா மிஸ்ஸானது என்னன்னா காமெடிதான். சந்தானத்தோட impact la ஒரு பத்து சதவீதம் கூட சூரியால குடுக்க முடியலங்குறது தான் உண்மை. வழக்கமா சுந்தர்.சி பட காமெடிங்க கொடூரமா சிரிக்க வைக்கும். அரண்மனை 1 கூட அப்டித்தான். சந்தானம் லட்சுமிராய பாத்துக்கிட்டு இருக்கும்போது திடீர்னு நடுவுல நித்தின் சத்யா எந்திரிப்பான். “யார்ரா இவன் மழையில திடீர்னு முளைச்ச நாய்கொடை மாதிரி” ம்பாரு.

இன்னொரு சீன்ல கோவைசரளா வெக்கப்பட்டு ஓடி வரும். ஏன் ஒடி வர்றன்னு சந்தானம் கேக்க “அவரு பாத்ரூம்ல என் மூஞ்ச வரைஞ்சி வச்சி பக்கத்துல ஐ லவ் யூன்னு எழுதிட்டு வந்துட்டாருன்னு” வெக்கப்பட்டுக்கிட்டே சொல்லும். அதுக்கு சந்தானம் “பாத்ரூம்ல கிரிணி பழத்த கீரி வச்ச மாதிரி ஒரு மூஞ்சி வரைஞ்சிருந்திருச்சே அது உன் மூஞ்சி தானா” ம்பாரு அதெல்லாம் நினைச்சி நினைச்சி சிரிப்பு வரும். ஆனா சூரி சிரிக்க வைக்கிறதுக்கு பதில் பெரும்பாலான இடங்கள்ல கடுப்பத்தான் கெளப்புறாரு. வசனங்கள்னு பாத்தா எல்லாம் சந்தானத்துக்கு எழுதுன மாதிரி தான் தெரியிது. ஆனா நம்ம சூரிக்கு “வந்துட்டாய்ன்… நின்னுட்டாய்ன்… செஞ்சிட்டாய்ன்” ன்னு ஒரே ஸ்லாங்குலதான் வசனம் பேச வரும். கோவை சரளா மனோபாலா காம்போவுல ஒருசில இடங்கள் சிரிக்க வச்சாலும் பெரிய அளவுல ஒண்ணும் இல்லை.

படத்துல உருப்படியான ஒரு விஷயம்னா கேமராதான். நல்ல கலர்ஃபுல்லா தரமா எடுத்துருக்காப்ள. அதுவும் அந்த ப்ரம்மாண்ட அம்மன் சிலை சம்பந்தப்பட்ட காட்சிகளும், கடைசில் குஷ்பு ஆடுற பாட்டும் விஷுவல் செம. உருப்படியான இன்னொரு விஷயம்.. ச்ச ச்ச.. ஒண்ணு இல்லை மூணு… திரிசா, ஹன்சிகா, பூணம் பாஜ்வா.. தரம். திரிசால்லாம செம அழகு. சுந்தர்.சி யோட வழக்கமான பீச் பாட்டுல திரிசா நல்ல ஃப்ரீயா நடிச்சிருக்கு. அந்த ஃப்ரீ இல்லீங்க. நல்ல காத்தோட்டமான ட்ரெஸ்லாம் போட்டுக்கிட்டு நடிச்சிருக்குன்னு சொன்னேன். செகண்ட் ஹாஃப்ல செகப்பு புடவையில திரிசாவும், ஹன்சிகாவும் மாறி மாறி வரும்போது… பாக்க ரெண்டு கண்ணு பத்தல.. செம்ம அழகு.

ஹிப் ஹாப் தமிழா ரெண்டு பாட்டு ஓக்கே.. ஆனா ஒரே இரைச்சல். பாட்டு ஓடி முடிஞ்சி ரெண்டு நிமிஷம் ஆகியும் காதெல்லாம் “கொய்ய்ய்ய்ய்ங்” ன்னு சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கு. தம்பி பாடுறத கொஞ்சம் நிறுத்திக்கிட்டா நல்லாரும். இவன் பாடுனா எல்லா பாட்டும் ஒரே மாதிரி இருக்கு.

பேய் வர்ற காட்சிகள் ஒண்ணு ரெண்டு பயமுறுத்துது. மற்றபடி எந்த காட்சியுமே அவ்வளவு சிறப்பா இருக்குன்னு சொல்ல முடியல. அதுபாட்டுக்கு ஓடுது. பாத்த படத்தையே திரும்ப பாக்குறதால நமக்கு எந்த ரியாக்‌ஷனுமே வரல. ரெண்டாவது பார்ட்டுன்னு கடனுக்கு எடுக்காம கொஞ்சம் மெனக்கெட்டிருந்தா இன்னும் நல்லா பன்னிருக்கலாம்.


சமீப காலங்கள்ல வந்த சுந்தர்.சி படங்கள்ல என்னை ஏமாற்றிய முதல் படம் இதுதான். எடுக்காமயே இருந்துருக்கலாம். 

                                                               (Idream, 29/01/16, 10pm)

Friday, January 15, 2016

கதகளி – பழக்கப்பட்ட நாடா!!!


Share/Bookmark
ஒரு கதாநாயகனுக்கு ரெண்டு மாசத்துக்கு ஒரு படம் ரிலீஸ் ஆகுதுங்குறது பெரிய விஷயம் இல்லை. ஆனா அதே ஒரு இயக்குனருக்கு ரெண்டு மூணு மாச கேப்புல படம் ரிலீஸ் ஆகுறது மிகப்பெரிய விஷயம். சில இயக்குனர்கள் எவ்வளவு கேப் ஆனாலும் பரவால்ல சார். நல்ல கதைக்காக நான் வொய்ட் பன்றேன் சார் டைப். ஆனா சில இயக்குனர்கள ஒரு ரெண்டு மாசம் ஆளக்காணும்னு பாத்தா மூணாவது மாசம் எதாவது ஒரு படத்தோட ட்ரைலரோட வந்து நிப்பாங்க. பூரி ஜகன்நாத், சுசீந்திரன் போன்ற இயக்குனர்கள் இந்த கேட்டகிரி. வத வதன்னு எதாவது எடுத்துத் தள்ளிக்கிட்டே இருப்பாய்ங்க. அந்த வரிசையில அடுத்ததா சேர்ந்திருக்கது நம்ம பாண்டிராஜ். ரெண்டு வாரம் முன்னால தான் ஒரு படம் ரிலீஸ் ஆச்சு. இப்ப இன்னொரு படம். ஒரு படம் முழுசா எடுத்து ரிலீஸூக்கு ஆறு மாசமா காத்திருக்கு.

நம்ம விஷாலும் பாண்டிய நாட்டுக்கு அப்புறம் வேற மாதிரி ஆட ஆரம்பிச்சிட்டாரு. Full fledged  தெலுங்கு டைப் action unlimited படங்கள் இல்லாம ”ஆக்சன் படம் மாதிரியும் இருக்கனும் அதே மாதிரி பழைய படங்கள் மாதிரி இல்லாமயும் இருக்கனும். அப்ப நா பாண்டிய நாட்டையேத்தான் திரும்ப எடுக்கனும்” னு அதே மாதிரி கதை திரைக்கதையில கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டாரு. பாண்டிய நாடு டைப் படத்துல பாயும் புலிக்கு அப்புறம் வந்திருக்கதுதான் இந்த கதகளி.

மாமன் கதகளி ஆடி பாத்ததில்லைல.. இப்ப வந்து ப்ரீயா பாருங்க. இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் டைப் படம்ங்குறதால (அப்டித்தான் நெனைக்கிறேன்) கதையப் பத்தியோ காட்சிகளப் பத்தியோ ரொம்ப வெளாவரியா உள்ள போகத் தேவையில்லை. பொதுவாச் சொல்லனும்னா முதல் பாதி நல்லாவே இருக்கு. வழக்கமான பாண்டிராஜ் டைப் காதல் காட்சிகள். அங்கங்க சிரிப்பும் வர வைக்கிற கருணாஸோட ஒரு சில நகைச்சுவைகள்.

பசங்க படத்துல “சோபிக்கண்ணு” ன்னு ஒரு புது பேர இண்ட்ரோடியூஸ் பன்னி குடுத்த நம்மாளு இதுல மீனுக்குட்டின்னு இன்னொரு பேர இறக்கி விட்டுருக்காரு.. மீனுக்குட்டி வேற யாரும் இல்லை. நம்ம கேத்ரின் தெரெசா தான். அதுவும் ”மீனுக்குட்டி”ன்னு அந்தப்புள்ள வாயால சொல்லும் போது செம சூப்பரா இருக்கு. எந்தப் புள்ளை டப்பிங் குடுத்துச்சோ. முதல் பாதி முழுக்க ரொம்ப சீரியஸான காட்சிகள் எதுவும் வைக்காம விஷால் கேத்ரினை உசார் பன்றத காமெடியா வச்சி முடிச்சிட்டாங்க.


வழக்கமா ஹரி படத்துலயும் பாண்டிராஜ் படத்துலயும் உள்ள கடுப்பான விஷயம் கச கசன்னு ஃபோன்லயே பேசிக்கிட்டு இருப்பாய்ங்க. “அதுக்கும் இதுக்கும் எவ்வளவு தூரம்… காருக்கும் உங்களுக்கும் எவ்வளவு தூரம்… சென்னையிலருந்து தூத்துக்குடிக்கு ஃப்ளைட்டுல அஞ்சி நிமிசம்”ன்னு ஹரி படத்துல தொட்டதுக்கும் ஃபோன்லயே பேசிக்கிட்டு இருப்பாய்ங்க. அதே மாதிரிதான் இந்தாளு படத்துலயும். ”பசங்க”ல ஆரம்பிச்ச இந்த்ப் பழக்கத்த இன்னும் விடல. படத்துல விஷாலுக்கு ஒரு 500 ஃபோன் வந்துருக்கும். வக்காளி அந்த ஃபோன தூக்கி போட்டு உடைங்கடான்னு வெறியாயிருச்சி. மேலும் பசங்க, வம்சம் மாதிரியே இதுலயும் லவ் ட்ராக்கும் ஃபோன வச்சி தான் வருது.

நல்ல சுவாரஸ்யமா போற முதல் பாதில இண்டர்வல் முடியும் போது கரெக்ட்டா கதை சூடு புடிக்க ஆரம்பிக்குது.  ஒரு மணி நேரத்துல இண்டர்வல். பரவால்ல படம் நீட்டாதான்யா எடுத்துருக்காய்ங்கன்னு ரெண்டாவது பாதில வந்து உக்காந்தா நம்ம பொறுமைய ரொம்ப சோதிக்கிறாய்ங்க. எத்தனை பேரு சஸ்பெக்ட்ன்னு லிஸ்ட்ட நம்ம கிட்ட குடுத்துடுறாங்க. அவங்க குடுத்த ஆப்ஷன், குடுக்காத ஆப்ஷன் எல்லாத்தையும் வச்சி அத செஞ்சது யாரா இருக்கும்னு நம்மளே நிறைய கெஸ் பன்னி வச்சிருப்போம். பெரும்பாலானவங்க கரெக்ட்டா கெஸ் பன்னிடலாம்.

யார் அத செஞ்சதுன்னு தெரிஞ்சிக்க நாம ஆர்வமா இருக்கும்போது படத்த ஜவ்விழுப்பு இழுத்து கடைசில சற்று டொம்மை போல ஒரு க்ளைமாக்ஸ் வச்சி முடிக்கிறாங்க. அதுவும் ஒரு ஃபினிஷிங் டச் சும்மா வலுக்கட்டாயமா ஹீரோவுக்கு கெத்து காமிக்கனும்ங்குற நோக்குல வச்சா மாதிரி இருக்கு.

பெரும்பாலும் ஹீரோ யாரு.. ஹீரோவோட கெப்பாசிட்டி என்னங்குறத முழுசா முதல் பாதிலயே சொல்றது நல்லது. பல படங்கள்ல இண்ட்ரோ ஒரு ஃபைட்டு வைக்கிறதுக்கு காரணமும் ஹீரோவோட கெப்பாசிட்டி, அவர் எப்படிப்பட்டவர்ங்குறத விளக்குறதுக்கு தான். இங்க கிட்டத்தட்ட படம் முடியிற வரைக்கும் விஷால் எப்படிப்பட்டவரு? அவருக்கு சண்டை போட வருமா? இல்லை பாண்டிய நாடு டைப்புல ஊம குத்த வாங்கிட்டு ஒதுங்கிடுவாராங்குற சந்தேகமே இருக்கு. க்ளைமாக்ஸ்ல விஷால் வில்லன்கள பொள பொளன்னு பொளக்கும்போது தான் அவருக்கு சண்டை வரும்போல.. ஹீரோ டம்மி இல்லை அடி அம்மி மாதிரி இருக்கும்னு தெரியிது.

கேத்ரின் ட்ரெசா மூஞ்சிலாம் நல்லா குண்டாகி செம அழகா இருக்கு. விஷால் ரெகுலர் பர்ஃபார்மன்ஸ். இசை ஹிப் ஹாப் தமிழா. எல்லா பாட்டையும் அவரே பாடுறாதால எல்லாம் ஒரே மாதிரி இருக்கு. ஓக்கே ரகம். சில இடங்கள்ல BGM காட்சிக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி எதோ ஓடுது. “கத களி.. கத களி”ன்னு வர்ற தீம் மியூசிக் செம.

எனக்கு மறதி ரொம்ப ஜாஸ்தி. ஒரு வேலைய ஆரம்பிச்சி செஞ்சிட்டு இருக்கும்போது இடையில வேற ஒரு வேலை க்ராஸ் பன்னா அத பன்ன ஆரம்பிச்சி இத விட்டுருவேன். ரெண்டு நாள் கழிச்சி மொத வேலை என்னாச்சின்னு எவனாது கேக்கும்போது தான் “ஆத்தாடி மறந்துட்டோமே” ன்னு ஞாபகம் வரும். ஆனா படங்களைப் பொறுத்த மட்டுல இது அப்புடியே ஆப்போசிட். எங்கயாது பாத்த சீனோ கதையோ உள்ள வந்துச்சின்னா டக்குன்னு மூளை ஒரு search ah போட்டு எடுத்துக்குடுத்துரும்.
-
அப்டித்தான் இன்னிக்கு படம் ஓடிக்கிட்டு இருக்கும்போது ஒண்ணும் தெரியல. படம் முடிஞ்சி தியேட்டர விட்டு வெளில வரும்போது மண்டையில எதோ குடைய லேசா எலி செத்த நாத்தம். இந்த நாடாவ நாம ஏற்கனவே எங்கயோ பாத்துருக்கோமே… ஆக இந்த நாடா நமக்கு ரொம்ப பழக்கப்பட்ட நாடான்னு அத ஃபாலோ பன்னி பாத்தா… அட நம்ம தடையற தாக்க. அதே கதையில அப்புடியே number of suspects ah மட்டும் அதிகப்படுத்தி ஒரு ஆல்ட்ரேஷன் பன்னா நம்ம கதகளி.. அடங்ங்ங்… என்னமோ ஒழிஞ்சி போங்க. படம் பார்த்து முடிச்சவங்க தடையறத் தாக்கவோட இத ஒப்பிடு பாத்துக்குங்கப்பா.


மொத்தத்துல கதகளி முதல் பாதி சந்தோஷத்தை கொடுக்கும். ரெண்டாவது பாதி நம்ம பொறுமைய சோதிக்கும். ஆனா நிச்சயம் ஒரு தடவ பாக்கலாம்.  


NANNAKU PREMATHO – NTR’S SPECIAL 25!!!


Share/Bookmark
பொதுவா முன்னனியில் இருக்குற ஹீரோக்களோட பாதைய கொஞ்சம் திருப்பி பாத்தோம்னா, ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்துலயும் ஒரு சில குறிப்பிட்ட படங்கள் அவர்களோட இமேஜையும் , அவங்க படத்தோட standard ah  யும் மாத்தி அமைக்கிற மாதிரி இருக்கும். அந்த குறிப்பிட்ட படங்களுக்கு முன் பின் அவங்களோட படங்கள்ல நிறைய மாற்றங்கள் தெரியும். இது மாதிரியான மாற்றங்கள் நிகழ்ந்தா மட்டுமே ஒருத்தர் சரியான பாதையில பயணிச்சிட்டு இருக்காருன்னு அர்த்தம். அப்படிப்பட்ட ஒரு சரியான வெற்றிப்பாதையில பயணிக்கிற ஒரு ஹீரோ தான் நம்ம NTR ஜூனியர். அவருக்கும் மேல சொன்னதுபோல ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளியிலும் ஒவ்வொரு படங்கள் வந்து அவரோட படங்கள ட்யூன் பன்னிக்கிட்டே இருக்கு.

சினிமா பின்னனி இருந்ததால் மட்டுமே இவர் சினிமாவுக்குள்ள நுழைய முடிஞ்சிது. இல்லைன்னா இவரோட ஆரம்ப கால தோற்றத்துக்கு சத்தியமா சைடு ரோலுக்கு கூட சேத்துக்கிட்டு இருக்க மாட்டாங்க. ஆனா சினிமாக்குள்ள வந்த இந்த ஒரு 10 வருஷ காலத்துல அவர் நடிப்பிலும் உடல் ரீதியாகவும் அடைஞ்ச மாற்றங்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. நா காலேஜ் படிச்சிட்டு இருக்கும்போது வந்த மன்மதன் படத்துல “நூவண்டே நாக்கு சால இஷ்டம்.. நேனே சிம்மாத்ரி… நேனே சாம்பா… தீஸ்கோரா” ன்னு சந்தானம் இவரத்தான் கிண்டல் அடிப்பாரு.  வேலையில்லா பட்டதாரி படத்துல சமுத்திரக்கணி தனுஷ பாத்து சொல்வாறே “ உன் கூட படிச்சவன்லாம் படிச்சி வேலை வாங்கி எங்கயோ பொய்ட்டான். ஆனா நீ இன்னும் இங்கயே சுத்திக்கிட்டு இருக்க” ன்னு. அதே தான் இங்கயும்.

அன்னிக்கு NTR ah கிண்டலடிச்ச சிம்பு இன்னும் அதே நிலமையில தான் இருக்காரு. ஆனா இன்னிக்கு நிலைமையில NTR ரோட ரேஞ்சே வேற. தெலுகு டாப் 5 ஹீரோக்கள்ல அவரும் ஒருத்தரு. அவருக்குன்னு மிகப்பெரிய ஃபேன் பேஸ். எல்லா படங்களுக்கும் மிகப்பெரிய ஓப்பனிங். இவரோட சினிமா standard ah யும் ஒரு சில படங்கள் கொஞ்சம் கொஞ்சம் மெருகேத்தி மாத்தி அமைச்சிது. அதுல முதல் படம் SS ராஜ மெளலி எடுத்த எமதொங்கா. அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்டுகிட்டு ஜம்போ சைஸ்ல இருந்த NTR ah பாதியா குறைச்சது அந்தப் படம். உடல் ரீதியா மிகப்பெரிய மாறுதல். அப்புறம் 2010 ல பிருந்தாவனம்னு ஒரு ட்ரெண்ட் செட்டிங்க் படம். கடந்த 5 வருஷங்கள்ல தெலுங்குல வந்த பல படங்களுக்கு இந்தப்படம் தான் பேஸ். அடுத்ததா போன வருஷம் வந்த டெம்பர். NTR ன்னா டான்ஸ் ஆடிட்டு சத்தம்போட்டு பஞ்ச் டயலாக் மட்டும்தான் பேசுவாறுன்னு இருந்த இமேஜ உடைச்சி அவருக்குள்ள இருந்த நடிகன வெளில கொண்டுவந்து பூரி ஜகன்நாத்துக்கே உரிய ஆக்‌ஷன் பேக்ல உருவாக்கப்பட்ட படம். இப்ப அடுத்து அவரோட இன்னொரு லெவலுக்கு எடுத்துட்டு போற மாதிரியான படம்தான் இந்த நாநாக்கு ப்ரேமதோ.

லண்டன்ல செட்டில் ஆன ஒரு மிடில் க்ளாஸ் குடும்பம் ராஜேந்திர ப்ரசாத்தோடது (Quick gun Murugan). அவரோட 3 மகன்கள்ல ஒருத்தர்தான் NTR. திடீர்னு அவருக்கு ஒரு பயங்கர வியாதி வந்துட ஒரு மாசம்தான் உயிரோட இருப்பார்னு சொல்லிடுறாங்க. வேலைய இழந்துட்டு சொந்தமா ஒரு கம்பெனி ஆரம்பிக்கிற NTR க்கு அப்பா சீரியஸா இருக்க விஷயம் தெரிஞ்சி உடனே வீட்டுக்கு வர்றாரு. அந்த சமயத்துல அப்பா ராஜேந்திர ப்ரசாத் ரொம்பவும் ஃபீல் பன்னி அழறாரு. இதப்பாத்த அவரோட மூத்த மகன் “அப்பா.. நீங்க ஏன்பா இப்ப கவலப்படுறீங்க.. உங்க மூணு மகன்களும் நல்ல நிலமையில இருக்கோம். என்கிட்ட ரேஞ்ச் ரோவர் கார் இருக்கு. தம்பி ஒரு 4 பெட் ரூம் வீடு வாங்கிருக்கான். சின்ன தம்பி (NTR) புதுசா கம்பெனி ஆரம்பிச்சிருக்கான். இப்ப நீங்க சந்தோஷமாத்தானப்பா சாகனும். ஏன் கவலப்படுறீங்க?” ன்னு கேக்குறான்.

அதுக்கு அவர் “ஏண்டா ரேஞ்ச் ரோவர் காரா? நீ சின்ன வயசுல Ferrari கார்ல ஸ்கூலுக்கு போனவண்டா… உன் தம்பி கிட்ட 4 பெட்ரூம் வீடு இருக்கா? 24 பெட்ரூம் உள்ள வீட்டுல ஒளிஞ்சி புடிச்சி விளையாண்டவனுங்கடா நீங்க. உங்கள நா கஷ்டப்பட்டுதான் வளர்த்தேன். ஆனா இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. லண்டன்ல மிகப்பெரிய பணக்காரன் நான். என்ன ஒருத்தன் ஏமாத்தி நடுத்தெருவுக்கு கொண்டு வந்துட்டான். அவன எதுவும் பன்னாம சாகுறோமேன்னு தான் எனக்கு வருத்தமா இருக்கு..” ன்னு சொல்ல NTR oda பழிவாங்கும் படலம் ஆரம்பிக்கிது.

அப்பாவ ஏமாத்துனது வேற யாரும் இல்லை. இப்பதைக்கு லண்டன்ல மிகப்பெரிய பிஸினஸ்மேனா இருக்க  ஜகபதி பாபு. பல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர். அவர அப்பா ராஜேந்திர பிரசாத் சாகுறதுக்குள்ள zero ஆக்கி பழி வாங்கனும். இதான் கதை. (இப்ப நா சொன்னது முதல் அஞ்சி நிமிஷம்தான் மக்கழே.. அதனால படம் பாக்க நினைச்சவங்க பயப்படாதீங்க. உடனே கதை வழக்கமான அதே கதைன்னு டமால் டூமீல்னு அடிச்சி தொம்சம் பன்னுவார்னு தப்பா நினைக்காதீங்க. இது வேற லெவல் அப்ரோச். படத்துல NTR சத்தம் போட்டு ஒரு வசனம் கூட பேசல.

எப்ப பாத்தாலும் Butterfly Effect ah பத்தி பேசிக்கிட்டு, பாக்குற எல்லாத்தையும் உள்வாங்கி கணக்கு போட்டு மூவ் பன்ற ஒரு நடமாடும் ஷெர்லாக் தான் நம்ம அபி ங்குற NTR கேரக்டர். ஆளு லுக்கே செம. ஜம்முன்னு இருக்காரு. செம மெச்சுருட்டி & ஸ்க்ரீன் ப்ரசனஸ். பட்டைய கிளப்பிருக்காரு.  டான்ஸு ஃபைட்டுலயெல்லாம் அதே எனர்ஜி.

படத்துல ஒரு சீன்கூட நம்மூர்ல எடுக்கல. எல்லா சீனுமே ஃபாரின் தான். கேமரா பட்டைய கெளப்புது. ஒவ்வொரு காட்சியும் செம ரிச் லுக். படத்தோட இயக்குனர் சுகுமார். ஆர்யா, ஆர்யா 2, நேன் ஒக்கடினே படங்களை எடுத்தவர். நேன் ஒக்கடினே படம் பாதி ஃபாரின் பாதி இந்தியாவுல இருக்கும். ஆனா இந்தப்படத்துல மருந்துக்கு கூட ஒரு லோக்கல் காட்சி இல்ல. திரைக்கதை ரொம்ப வேகமா இல்லைன்னாலும், ப்ரில்லியண்ட்டான திரைக்கதை. எல்லா காட்சிகளும் ஒண்ணுக்கொன்னு தொடர்புள்ள மாதிரி அமைச்சிருக்காரு. ஒரு திரைக்கதையில காட்சிகளுக்கு இடையே உள்ள லிங்க் எவ்வளவு அதிகமா இருக்கோ அந்த அளவு அது சக்ஸஸ்ஃபுல்லான திரைக்கதையா இருக்கும்.

வில்லன் ஜகபதி பாபு. ஆளு செம கெத்து. சீன்ஸூக்கேத்த அதே ரிச் லுக் அவர்கிட்டயும். அவர் மகள்தான் ஹீரோயின் (ரகுல் ப்ரீத் சிங்) . இப்பதைக்கு நம்ம லேட்டஸ்ட் டார்லிங் இதுதான். செம பீட்டிடா மச்சான். ஒவ்வொரு படத்துலயும் பாடல்கள் எடுக்கப்படுற விதம் என்னை ப்ரம்மிக்க வைக்க தவறுறதே இல்லை. அஞ்சு பாட்டும் செமையா எடுத்துருக்காய்ங்க. அதுலயும் இண்ட்ரோவும், I wanna follow follow you பாட்டும் செம.

இப்ப படத்துக்கு மீசிக் யாருன்னு கேப்பீங்களே… கபக் கபக்… அவரே தான். நம்ம தல DSP. வழக்கம் போல ஒரு ட்யூன். அஞ்சி பாட்டு. இந்த ஆர்கெஸ்ட்ரா பாடுறவங்களுக்கெல்லாம் DSP பாட்ட செலெக்ட் பன்னா ரொம்ப ஈஸி. ஒரு படத்துல ஒரே ஒரு கரோக்கி டவுன்லோட் பன்னிக்கிட்டா போதும். அது ஒண்ண வச்சே அஞ்சி பாட்டும் பாடிக்கலாம். தெலுங்கு படங்கள்ல அதுவும் NTR படங்கள்ல பாட்டு மொக்கையா இருந்தா கூட ப்ரச்சனையே இல்லை. விஷூவல்லயும், கொரியோகிராஃபிலயும் பிரிச்சிருவாய்ங்க். இன்னொரு சோகமான விஷயம் இந்த படத்தோட ஆடியோ ரிலீஸூக்கு ஒரு வாரம் முன்னால DSP யோட அப்பா இறந்துட்டாரு. அவருக்காக கம்போஸ் பன்ன “நாநாக்கு ப்ரேமதோ…” ங்குற சோக பாட்டு. படத்தோட கடைசில வருது. சூப்பர். ரெண்டு நாளா அதே பாட்டத்தான் முணுமுணுத்துக்கிட்டு இருக்கேன்.  

படத்துல சில மைனஸ்னு பாத்தா NTR ரோட characterization la சில விஷயங்கள்தான். பட்டர் ஃப்ளை எஃபெக்ட்டுன்னு ஒவ்வொரு மூவ்மெண்டுக்கும் என்ன நடக்கும்னு அவர் சொலறது கூட ஓக்கே. ஆனா ஒரு சீன்ல ஒருத்தன் ஓடிவர்றத கன்னாலயே பாத்து 18 km/hr ன்னு கணக்கு போடுவாறு.. நா அப்டியே ஸ்டன் ஆயிட்டேன். இன்னும் ஒரு சில ரொம்ப சினிமாத்தனமான காட்சிகள். ஆனா சினிமாவுல சினிமாத்தனம் இருக்கது சகஜம் தான. 


இது NTR ரோட 25 வது படம். கமர்ஷியலா படம் எந்த அளவு போகும்னு தெரியல. ஆனா நிச்சயம் NTR career la ரொம்ப முக்கியமான, அவரோட இன்னொரு முகத்தை காண்பித்த ஒரு படம். எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. 


Tuesday, January 12, 2016

பேச்சிலர் பசங்க சாபம் சும்மா விடாதுங்க!!!


Share/Bookmark
நாட்டுல பெண்களுக்கு ஒரு ப்ரச்சனைன்னா கூட்டம் கூட்டமா பொங்கி எழுறாங்க. மாட்ட வெட்டுனா ஒரு குரூப்பு காப்பாத்த கிளம்புறாய்ங்க. ஜல்லிக்கட்ட தடுக்க ஒரு குரூப்பு கிளம்புனாய்ங்க. சேவ் டைகருங்குறாய்ங்க.  அட நாய கல்லக் கொண்டு எறிஞ்சா கூட காப்பாத்த புளூ க்ராஸூ ரெட் கிராஸுன்னு என்னென்னமோ சொல்றாய்ங்க. ஆனா நாட்டுல இந்த பேச்சிலர் பசங்களுக்கு நடக்குற கொடுமைய தட்டிக்கேக்க ஒரு சின்ன சங்கமாச்சும் இருக்காய்யா? எத்தனை கஷ்டத்ததான் அவனும் தாங்குவான்.  படிச்சி முடிச்சி அவன் அவனுக்கு வேலை கெடைக்கிறதே பெரும்பாடா இருக்கு. அப்டி வேலை கெடைச்சி அவன் ஒரு ஊருக்கு வந்தா அவன் நிலமையப் பாருங்க.

1. சிங்கிள்னாலே நம்ம சமுதாயத்துல நம்மள ஒரு ஆளாவே மதிக்க மாட்டாய்ங்க. “சார் தனியாவா படம் பாக்க வந்தீங்க” “சார் தனியாவா ட்ராவல் பன்றீங்க” நாங்க ஃபேமிலியா வந்துருக்கோம். கொஞ்சம் ஷிஃப்ட் ஆயிக்கிறீங்களா?  ஒரு பேச்சிலர உச்சகட்ட கடுப்புக்கு ஆளாக்குர வார்த்தைகள்னா அது “சார் நாங்க ஃபேமிலியா வந்துருக்கோம்” ங்குறது தான். கவுண்டர் சொல்றமாதிரி அவனுங்களப் பாத்து “இன்னிக்கு ஒரு நாள் உனக்கு ஃபேமிலி இல்லன்னு நினைச்சிக்கடா” ன்னு சொல்லத்தோணும். ஆனா கைக்கொழந்தையோட நிக்கிற அம்மாவுக்காக மாறி உக்காருவான்யா நம்ம பேச்சிலரு.

2. நல்ல ஏரியாவுல ஒரு வீடு குடுக்கமாட்டாய்ங்க. வீட்டையெல்லாம் சுத்தி காமிச்சிட்டு ”அஞ்சி மாச வாடகைய அட்வான்ஸா குடுத்துருங்கோ…” ன்னு எல்லாத்தையும் சொல்லி முடிச்சி கடைசியா ஒரு கேள்வி “நீங்க பேமிலியா பேச்சிலரா?”ம்பாய்ங்க.  ”எத்தனை தடவடா இதே கேள்விய கேப்பீங்க?” ன்னு சிவாஜி ரஜினி மாதிரி நம்ம நினைச்சிட்டு “பேச்சிலர்” தான்ம்போம். இங்க ஒரே ஃபேமிலியா இருக்கா… அதனால பேச்சிலர்ஸ்க்கு வீடு குடுக்குறதில்லை” ன்னு பல்ப குடுத்து அனுப்பிருவாய்ங்க. ஒருதடவ வீடுபாக்க போனப்ப இப்டி சொன்ன ஒரு மாமாகிட்ட “வீட்டுல வயசுப்பொண்ணுங்க எதாவது இருக்காங்களா மாமா?” ன்னோம் “இருக்காங்களே.. ஏன் கேக்குறேள்?” ன்னாரு. “இல்ல பேச்சிலருக்கு எதுவும் கட்டி வச்சிரப்போறேள். பாத்து நல்ல ஃபேமிலி மேனுக்கா கல்யாணம் பன்னிக் குடுங்கோ…” ன்னதும் தூக்கி அடிக்கிறதுக்கு அவர் பஞ்ச பாத்திரத்த தேட நாங்க எஸ்கேப்பு.  

3. ஆபீஸ்ல சனிக்கிழமை ஞாயித்து கிழமையில வேலைக்கு வர வைக்கனும்னா மொதல்ல பேச்சிலரத்தான் தேடுவாய்ங்க. அதாவது ஃபேமிலி மேனுக்குதான் சனி ஞாயிறுல வேலை இருக்க மாதிரியும் பேச்சிலர்லாம் சும்மா திரியிற மாதிரியும். ஏண்டா நீங்க ஃபேமிலியாயிட்டீங்க. நாங்க ஆவ வேணாமா? லீவுகீவு குடுத்தாதான நம்மளும் ஃபேமிலியாவுறதுக்கு எதாவது ஏற்பாடு பன்ன முடியும்.

4.  சரி சனி ஞாயிறு எப்பவாச்சும் லீவாச்சேன்னு ஃப்ரண்டு வீட்டுக்கு எதுவும் போனா சேகரு செத்தான். ”அப்புறம் தம்பி எப்ப கல்யாணம்? உன் செட்டுல எல்லாருக்கும் ஆயிருச்சி… நீ எப்ப பன்னிக்க போற?” உடனே அதுக்கு நாம நமக்கு லட்சிய வெறிதான் முக்கியம்னு மன்னன் கவுண்டர் மாதிரி “ தண்ணியிலே இருக்கும் மீன் கருவாடாகலாம்.. ஆனால் கருவாடு மீனாகாது.. எங்களுக்கு லட்சியம் தான் முக்கியம்.. என்ன உடமாட்டேங்குறாங்கம்மா…” ன்னு எதாவது சொல்லி எஸ்கேப் ஆகி வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிரும்.

5. நம்ம வீட்டுல ஒரு ஃபங்ஷன்னா ஒரு இடத்துல நிக்கவிடாமா நம்மளயேதான் வேலை சொல்லி கொல்லுவாய்ங்க. கல்யாணம் பன்னவிய்ங்க சேஃப்டியா ஒரு ஓரமா நின்னு “வாங்க வாங்க… காப்பி சாப்டிங்களா.. டிபன் சாப்ட மறந்துடாதீங்க” ன்னு போற வர்றவனுங்கள கேக்குற ரொம்ப கடினமான வேலைய பாத்துகிட்டு இருப்பாய்ங்க.  

6. பேச்சிலரா இருக்கவன் நிம்மதியா ஒரு ஃபோன்கூட பேச முடியாது. காச எடுத்துட்டாய்ங்கன்னு கஸ்டமர் கேருக்கு ஃபோன் போட்டு பேசிகிட்டு இருந்தா கூட சைடுல போறவன் “என்ன மச்சி.. ஃபோன்ல ஆளா? நடத்து நடந்து” ம்பானுங்க.  “கடுப்பேத்தாம போடா… ஆள் இருந்தா உன் கூடல்லாம் ஏண்டா இன்னும் நா சகவாசம் வச்சிருக்கேன்”

7. போன மாசம் வரைக்கும் நம்மளோட ஒரே வீட்டுல குப்பைக்கு நடுவுல பெரண்டுகிட்டு இருந்துருக்கும் நாயி. கல்யாணம் ஆயி ரெண்டு மாசத்துல நம்ம வீட்டுக்கு வந்து “என்னடா.. வீட்ட பெருக்க மாட்டீங்களா.. இவ்ளோ குப்பையா இருக்கு?” ன்னு ஒரு ரியாக்சன் விடுவான் பாருங்க. அவனுக்கு ஒரு பாயாசத்த போடனும்போல தோணும்.

8. அதுவும் இந்த ரூம் சுத்தம் பன்றதும், துணி துவைக்கிறதும்தான் பேச்சிலர் வாழ்க்கையில மிகக் கடினமான ரெண்டு விஷயம். திடீர் திடீர்னு ஊர்லருந்து எவனாவது நம்ம ரூமுக்கு விசிட் அடிப்பாய்ங்க. அதுவும் பஸ் ஏறுன அப்புறம்தான் நமக்கு ஃபோன் பன்னுவாய்ங்க. அதுக்கப்புறம் அரக்க பறக்க அவிய்ங்களுக்காக சுத்தம் பன்னனும். இல்லைன்னா ஊர்ல போய் கண்டத வத்தி வச்சிருவாய்ங்க. எவன் எப்ப வீட்டுக்கு வருவானோன்னு ஒரு பீதிலயே வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்கும்.

9. வேற யாரும் அட்வைஸ் பன்றது கூட பரவால்லை. ஆனா போனமாசம் கல்யாணம் ஆன நம்ம நண்பன் வந்து நம்மளப் பாத்து அக்கரையா “அப்புறம் மச்சி… எப்படா கல்யாணம்… சீக்கிரம் பண்ணுடா… காலாகாலத்துல இதெல்லாம் பன்னிடனும்டா” ம்பான் பாருங்க. ”கல்யாணம் ஆகலன்னு கூட கவல இல்ல மச்சான்.. நீயெல்லாம் அட்வைஸ் பன்ற பாத்தியா…”  நேரா செவத்துல போய் டமார் டமார்ன்னு மோதிக்கலாம் போல இருக்கும்.

10. பல வருஷமா நம்ம கூட ஒண்ணா ஆபீஸ் கேண்டீன்ல சாப்பிட்டுக்கிட்டு இருக்கவன் திடீர்னு ஒரு நாள் “மச்சி ஆபீஸ் சாப்பாட்டுல எதோ கலக்குறானுங்கடா.. வயித்துக்கு ஒத்துக்கமாட்டேங்குது” ன்னு ஆரம்பிச்சான்னா மறுநாள்லருந்து அவன் வீட்டு சாப்பாடு கொண்டு வரப்போறான்னும் நம்ம அதுக்கு மேல அவன கேண்டீனுக்கு சாப்ட கூப்டக்கூடாதுன்னும் நம்மளே புரிஞ்சிக்கனும். மீறி கூப்டா பங்கம் நமக்குத்தான்.

11. சரி கண்டவன்லாம் வீட்டு சாப்பாடு கொண்டு வர்றானேன்னு நம்மளும் வீட்டுல சமைச்சி சாப்பாடு கொண்டு வருவோம்னு எங்காளு பேச்சிலரும் ரெண்டு நாள் அரிசி பருப்பெல்லாம் வாங்கிட்டு போய் சமச்சி கொண்டு வருவான். சமைச்சத சாப்டப்ப இருக்க ஜாலியா இருக்கும். ஆனா சமைச்ச பாத்திரத்த கழுவனுமேன்னு நினைக்கும்போது தான் சோலி முடிஞ்சி போகும். அப்புறம் ரெண்டு நாள்ல “கேண்டீன் சாப்பாடு ஈஸ் த சீக்ரெட் ஆப் மை எனர்ஜி” ன்னு திரும்ப பழைய நிலமைக்கே போயிடுவோம்.

12. எக்காரணம் கொண்டும் சமீபத்துல கல்யாணம் ஆன நண்பய்ங்க கூட மட்டும் படத்துக்கு போக ப்ளான் மட்டும் போடவே கூடாது. “மச்சி நம்ம ரெண்டு பேரும் படத்துக்குப் போய் ரொம்ப நாளாச்சில்லா.. புக் பன்னுடா போவோம்ப்யாங்க. புக் பண்ணிட்டு தியேட்டருக்கு நம்ம போயிருவோம். அப்ப ஒரு ஃபோன் வரும். “மச்சி நா நம்ம படத்துக்கு வரத்தாண்டா கெளம்பிட்டு இருந்தேன்… அந்த நேரம் பாத்து என் மாமனாரும் மாமியாரும் ஊர்லருந்து வந்துட்டாங்கடா..இப்ப நா வந்தா “அவ கோச்சிக்குவா” (நோட் திஸ் பாய்ண்ட்) இன்னொரு நாள் பாக்கலாம்டா..” ன்னு நம்மள டீல்ல விட்டுருவாய்ங்க. இதே மாதிரி கெளம்பும்போது பூனை குறுக்க போயிருச்சி…குழந்தை சட்டையில ஆய் போயிருச்சின்னு ஒவ்வொரு காரணம் சொல்லி நம்மள காண்டேத்தி சாவடிப்பானுங்க.

13. அப்புறம் இன்னும் சில பேரு இருக்கானுங்க… எதுக்கெடுத்தாலும் “உங்களுக்கென்ன ஜி.. நீங்க பேச்சிலர்… ஜாலி லைஃப்… எஞ்ஜாய் பன்றீங்க… ” ன்னே நம்மளப்பாத்து சொல்லிக்கிட்டு திரிவாய்ங்க. அப்புறம் என்ன நொன்னைக்கு நாயே நீ கல்யாணம் பன்ன.. ஜாலியாவே இருக்கவேண்டியது தான…

14. எல்லாத்துக்கும் மேல பேச்சிலருக்கு இருக்க மிகப்பெரிய குழப்பம் சண்டே மதியானம் என்ன சாப்பாடு சாப்புடுறதுங்குறது தான். பதினொரு மணிக்கு எழுந்து “வீட்டுல சமைக்கலாமா.. இல்லை வழக்கம்போல பிரியாணியே திங்கலாமா இல்லை ஆந்த்ரா மெஸ் பக்கம் ஒரு ரவுண்டு பொய்ட்டு வருவோமாங்குற கன்பீசன்லயே மூணு மணி ஆயிப்போயிரும். அதுக்கப்புறம் பக்கத்துல இருக்க பாய் கடைக்கு போய் மீதம் இருக்க குஸ்காவ மட்டும் வாங்கித்திண்ணுட்டு நாளக் கழிப்போம். 

    ஆகவே மக்கழே.. பேச்சிலரா இருக்கது ஒண்ணும் சாதாராண விஷயம் இல்ல. எத்தனை சிக்கல், எத்தனை டென்ஷன், எத்தனை கண்ணீர், எத்தனை நன்றி, இன்னும் எத்தனை எத்தனையோ... 

  யாருப்பா அது ஓரமா உக்காந்து அழுகுறது? ஓ கல்யாணமானவரா.. ந்தா இருங்க வர்றேன். 


நன்றி : நண்பன் அசால்டு அசார், நண்பன் பாலி, நண்பன் கார்த்தி

Saturday, January 2, 2016

”ஓ”ரிங்குல ஓட்டை – நாஸா சம்பவம் பகுதி 2!!!


Share/Bookmark
இந்தப் பதிவின் முதல் பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும். லாஞ்ச் பன்னி சரியா 73 செகண்ட்ல சேலஞ்சர் Space shuttle வெடிச்சி அதில் பயணம் செய்த  டீச்சர் உட்பட ஏழு பேரும் இறந்து போனாங்க. இந்த சேலஞ்சர் Space shuttle லாஞ்ச் பன்றத கிட்டத்தட்ட அமெரிக்காவோட 17 சதவீத மக்கள் லைவ்வா பாத்துக்கிட்டு இருந்தாங்கன்னு போன பதிவில சொல்லிருந்தோம். அதனால சேல்ஞ்சர் வெடித்து சிதறிய செய்தி கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்குள்ள அமெரிக்க மக்கள் தொகையில 85 சதவீத பேருக்கு `தெரியப்பட்டுவிட்டதாக ஒரு சர்வே சொல்லுது. 

ஒரு மாத தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு சேலஞ்சரோட பாகங்கள் அட்லாண்டிக் கடலோட ஒரு பகுதியில கண்டெடுக்கப்பட்டது. அந்த பாகங்கள ஆய்வு செய்து பாக்கும்போது, சேலஞ்சர் வெடிக்கும்போதே ஏழு பேரும் இறந்து போகல. ஒரு சிலர் உயிரோட இருந்திருக்கலாம். ஆனா உடைந்த பகுதிகள் கடல்ல வந்து விழுந்த வேகம் ரொம்ப அதிகம். அதனால சேலஞ்சர் வெடிச்சப்போ ஒருசிலர் உயிரோட இருந்திருந்தாலும் கடல்ல மோதும்போது அவர்கள் இறந்திருக்கக்கூடும்னு தெரிவிச்சாங்க.

இந்த சேலஞ்சர்ல பயணம் செய்ஞ்சவங்க இருந்தது அலுமினியத்தாலான ஒரு மூடப்பட்ட கேபின். விபத்து ஏற்பட்ட போது அந்த கேபின் உடைஞ்சிருக்க வாய்ப்பில்லை எனவும், விபத்து நடந்த ஒருசில விநாடிகள்ல அந்த அலுமினியம் கேபின் ஒரே பீஸா ராக்கெட்லருந்து பிரிக்கப்பட்டு மேலருந்து கீழ விழுந்துருக்கும் எனவும் நாஸா விஞ்ஞானிகள் ஊகிச்சிருந்தாங்க. சேலஞ்சர் வெடிச்ச சமயத்துல அந்த அலுமினியம் கேபின்ல ஏற்பட்ட சேதம் மிகக் குறைவுதான் எனவும், கேபின் மேலருந்து கீழ விழும்போது அதில் இருந்தவர்கள் சுயநினைவோடுதான் இருந்திருப்பார்கள்ன்னும் சொல்லிருக்காய்ங்க. ஆத்தாடி சின்ன பாலத்துல பஸ் ஏரி கீழ இறங்கும்போதே நமக்கு தொண்டை அடைச்சிரும். அவிங்களுக்கு எப்புடி இருந்துச்சோ…

இந்த விபத்தால நாஸா 32 மாதங்களுக்கு இந்த space shuttle program ah நிறுத்தி வச்சிருந்தாங்க. அதே சமயம் இந்த விபத்துக்கான காரணத்த கண்டுபிடிக்க Rogers Commission ன்னு ஒரு குழுவ அமைச்சி விசாரணையும் நடத்திட்டு வந்தாங்க. இந்த ரோஜர்ஸ் கமிஷன் கொஞ்சம் டீப்பா உள்ள இறங்கித் துலாவுனதுல விபத்து ஏற்படக்காரணம் சேலஞ்சர்ல உள்ள Solid Rocket Booster ல ஏற்பட்ட டெக்னிக் fault தான் காரணம்னு தெரிஞ்சிது. அது மட்டும் இல்லாம இந்த டெக்னிக் ஃபால்ட் ஏற்பட முக்கியக் காரணமே நாஸாவோட organizational structure உம், அங்க இருக்கவிய்ங்களோட decision making process um தான்னு இன்னொரு பிட்டயும் சேத்து போட்டாய்ங்க. இது ரெண்டும் என்னென்னன்னு ஒவ்வொன்னா பாப்போம்.

சரி இந்த Solid Rocket Booster ங்குறது என்ன? சேலஞ்சர் Space shuttle க்கு ரெண்டு சைடுலயும் நம்ம தீவாளிக்கு விடுற ராக்கெட் மாடல்ல ரெண்டு நிக்கிதே.. அதான் சாலிட் ராக்கெட் பூஸ்டர். இதோட முக்கிய வேலை என்னன்னா முதல் ரெண்டு நிமிஷத்துக்கு ராக்கெட் பறக்க தேவையான உந்து சக்தியை குடுக்குறது தான். அதாவது அது ஒரு solid fuel ல எரிஞ்சி, ராக்கெட்ட பறக்க வைக்கும். இரண்டு நிமிஷத்துல இதுல உள்ள எரிபொருள் முழுசும் எரிஞ்சி முடிஞ்சப்புறம் இத ராக்கெட்டுலருந்து கழட்டி விட்டுருவாய்ங்க. பாராஷூட் உதவியோட இந்த சாலிட் பூஸ்டர் கடல்ல விழுந்துடும். கடல்ல விழுந்த பூஸ்டர திரும்ப recover பன்னி அதுல என்னென்ன பார்ட்ஸெல்லாம் மட்டையாயிருச்சோ அதயெல்லாம் மாத்திட்டு, நல்லா இருக்க பார்ட்ஸையெல்லாம் அப்டியே வச்சிகிட்டு பட்டி டிங்கரிங்லாம் பாத்து அதே பூஸ்டர அடுத்த தடவ ராக்கெட் பறக்க விடுறதுக்கு பயன்படுத்துவாய்ங்க.

இப்ப வெடிச்ச சாலிட் ராக்கெட் பூஸ்டர் ஏற்கனவே ஒரு ஏழெட்டு தடவ பயன்படுத்தப்பட்டதுதான். இப்ப மட்டும் அதுக்கு என்ன கேடு வந்துச்சின்னு தான கேக்குறீங்க. இந்த சாலிட் ராக்கெட் பூஸ்டருக்குள்ள பெரிய சைஸ்ல ரெண்டு “O’ ring இருக்கு. இந்த O ring தான் பூஸ்டருக்குள்ள எரியிற நெருப்ப வெளில வராம தடுக்குறது. ஆனா அன்னிக்குன்னு பாத்து இந்த ஓரிங்ல கொஞ்சம் ப்ரச்சனை ஆனதால சாலிட் ராக்கெட் பூஸ்டருக்குள்ள மட்டும் எரிய வேண்டிய நேருபு கேப்புல வெளில வந்துருச்சி. வெளில வந்தது கூட ப்ரச்சனை இல்லை. ஆனா அது வந்த இடத்துல பாருங்க நம்மாளுங்க ஒரு fuel tank ah வச்சிருந்துருக்காய்ங்க. பெட்ரோல் டாங்கிக்குள்ள நெருப்ப கொளுத்தி போட்டா என்னாகும்? டஸ் ஆயிருச்சி.  

சரி வழக்கமா ஒழுங்கா வேலை செய்யிற ஓரிங் இந்த தடவ மட்டும் ஏன் மட்டை ஆயிருச்சின்னு ரோஜர்ஸ் கமிஷன் விசாரிக்க ஆரம்பிச்சாங்க. அந்த ஓரிங்க தயாரிச்ச நம்ம தியோக்கால் இஞ்ஜினியர்கள்கிட்ட விசாரிக்க ஆரம்பிக்கும்போது தான் நிறைய உண்மை தெரிய வந்துச்சி. சேலஞ்சரோட ஒரிஜினல் லாஞ்சிங் டேட் தள்ளி தள்ளி போனதால நாஸா விஞ்ஞானிகள் ஒரே டென்ஷன்ல இருந்துருக்காய்ங்க. அந்த சமயத்துல தான் ஜனவரி 28ம் தேதி கண்டிப்பா ராக்கெட்ட லாஞ்ச் பன்னியே ஆகனும்னு முடிவு பன்னாங்க. ஆனா வானிலை ரொம்ப மோசமாத்தான் இருந்துச்சி.

பொதுவாவே இந்த ரப்பரோட property வெப்பநிலையப் பொறுத்து மாறுபடும். அதே மாதிரி ரப்பர் ஐட்டங்கள ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில தான் ஸ்டோர் பன்னி வைக்கனும்.. எதாவது Manufacturing கம்பெனிகள்  ல வேலைபாக்குறவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஸ்டோர்கள்ல ரப்பர் ஐட்டங்களை மட்டும் A/C room ல தான் ஸ்டாக் வச்சிருப்பாங்க. அதுமட்டும் இல்லாம அதுங்களுக்கு shelf life ன்னு ஒண்ணு இருக்கு. ரொம்ப நாள் ஸ்டோர்லயே வச்சிருக்க முடியாது. யூஸ் பன்னாம இருந்தா கூட ஒரு சில வருஷங்கல ரப்பர் சீல்கள டிஸ்போஸ் பன்னித்தான் ஆகனும்.

நாஸா ஜனவரி 28ம் தேதி லாஞ்ச் பன்னப்போறாங்கங்குறத தெரிஞ்சிக்கிட்ட தியோக்கால் இஞ்ஜினியருங்க மொதநாள் நாஸா ஆளுங்களுக்கு ஃபோன் பன்னி “அண்ணே.. நம்ம ஓரிங் நல்ல ஓரிங் தான்னே.. ஆனா அது 10 டிகிரி செண்டிகிரேட் க்கு மேல தான் அது ஒழுங்கா ஒர்க் பன்னும். ஆனா இப்ப இருக்க temperature ரொம்ப கம்மி. இந்த கண்டிஷன்ல லாஞ்ச் பன்னா ஓரிங் ஃபெயில் ஆகுறதுக்கு நிறைய வாய்ப்பிருக்கு” ன்னு சொல்லிருக்காய்ங்க.

ஆனா நாஸா இருந்த டென்ஷன்ல இவய்ங்க சொல்றத காதுல வாங்கிக்கிற நிலமையில இல்லை. அதே மாதிரி இந்த காரணத்த காட்டி இன்னொரு தடவ லாஞ்ச்ச தள்ளி போட்டுக்கவும் அவங்க விரும்பல. அதனால தான் அன்னிக்கு நைட்டு தியோக்கால கன்வீன்ஸ் பன்னி இந்த விஷயத்த பெருசாக்காம சேலஞ்சர லாஞ்ச் பன்னி வெடிக்க விட்டுட்டாய்ங்க.

சரி நாஸாவோட Organizational Structure உம் Decision making உம் தான் இந்த விபத்து ஏற்படக் காரணம்னு ரோஜர்ஸ் கமிஷன் சொன்னதுக்கும் ஒரு முக்கியக் காரணம்  இருக்கு. இந்த சேலஞ்சர் Space shuttle லாஞ்ச் பன்னது கென்னடி ஸ்பேஸ் செண்டர்ங்குற இடத்துலருந்து. அதுக்கும் கொஞ்ச நாள் முன்னால கொலம்பியா ஸ்பேஸ் ஸ்டேஷன்லருந்து ஒரு சேட்டிலைட் லாஞ்ச் பன்னப்பவே தியோக்காலோட ஓரிங்ல கொஞ்சம் எரோஷன் இருந்ததாக கொலம்பியா ஸ்பேஸ் ஸ்டேஷன் இஞ்ஜினியர்ஸ் சொல்லிருக்காங்க. ஆனா அவங்க சொன்ன இந்த் ஸ்டேட்மெண்ட் நாஸாவோட தலைமை அதிகாரி காதுக்கு கடைசி வரைக்கும் போகாம இடையில உள்ளவனுங்களே தியோக்காலோட சேந்து இத மூடி மறைச்சிட்டாங்க. அதே மாதிரி சேலஞ்சர் லாஞ்சுக்கு மொதநாள் ராத்திரி நடந்த டிஸ்கஷனும் நாஸாவுல பெரிய லெவலுகு போகாமா இடையில இருந்தவய்ங்களே பேசி அமுக்கிட்டாய்ங்க.

சரி ஒவ்வொரு இன்சிடெண்டும் ஒரு சில பாடங்களக் கத்துக்கொடுக்குது. அதே மாதிரி இந்த் சேலஞ்சர் டிஸாஸ்டரும் space shuttle ல ஒரு சில குறிப்பிட்ட டிசைன் மாற்றங்கள் உண்டாகக் காரணமா இருந்துச்சி. முதல்ல fail ஆன ஓரிங் assembly design ah 3” க்கு அதிகப்படுத்தி இன்னொரு protection ring ங்கும் குடுத்தாங்க. 

அடுத்ததா பயணம் செய்யிறவங்களோட safety. சேலஞ்சர் வெடிக்கிற வரைக்கும், ஒரு வேளை ஆக்ஸிடெண்ட் எதாவது நடந்தா அந்த ராக்கெட்ல பயணம் செய்யிறவங்க தப்பிக்கிறதுக்கான Emergency Escape Plan எதுவுமே இல்லை. இந்த விபத்துல 7 பேர் இறந்த உடனே நாஸா இந்த மாதிரி Emergency Escape Option கொடுக்குறதுக்கான தீவிர ஆராய்ச்சில இறங்குனாங்க. நம்ம படங்கள்ல வர்ற மாதிரி Ejector seat டைப் எஸ்கேக் ரூட்டுகள ட்ரை பன்னி பாத்தாய்ங்க. ஆனா எதுவுமே ஒத்து வரல. கடைசில ராக்கெட்டுல பயணம் செய்யிறவங்க எஸ்கேப் ஆகுற மாதிரி ஒரு option ah implement பன்னாங்க. அதுகூட ராக்கெட் ஸ்மூத்தா பறக்கும்போது மட்டும் தான் எஸ்கேப் ஆக முடியும். சேலஞ்சர்ல நடந்த மாதிரி வெடிச்சி சிதறும்போதெல்லாம் அத வச்சி ஒண்ணும் செய்ய முடியாது.




இதுமாதிரி எமர்ஜென்ஸி எஸ்கேப் குடுக்குறதுல நிறைய ப்ரச்சனை இருக்கதால, ரிஸ்க்க கம்மி பன்றதுக்கு ராக்கெட்ல பயணம் செய்யிற ஆட்களின் எண்ணிக்கையும் கணிசமா குறைச்சாங்க. இன்னும் இந்த விபத்த பத்தின ஏராளமான விஷயங்கள் கொட்டிக்கிடக்கு. நம்ம இதுக்கு மேல மொக்க போடாம முடிச்சிக்குவோம்.

“The Challenger Disaster” ங்குற படத்துல அந்த ரோஜர்ஸ் குழு எப்படி இந்த சேலஞ்சர் விபத்த இன்வெஸ்டிகேட் பன்றாங்கன்னு காமிச்சிருப்பாங்க. முடிஞ்சா பாருங்க.





LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...