Monday, June 11, 2018

Blue சட்டையின் காலா விமர்சனமும் பின்னணியும்!!!


Share/Bookmark
படத்தைப் பார்க்காமல் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் உளறிய ப்ளூ சட்டையின் காலா விமர்சனத்திற்கு சில பதில்கள்!!


Thursday, June 7, 2018

காலா – செம்ம வெய்ட்டு!!!


Share/Bookmark

நம்ம மக்களைப் பொறுத்த அளவு ரஜினிங்குறது ஒரு தவிர்க்க முடியாத சொல். அதுவும் அவரோட படங்கள் வருதுன்னா கிட்டத்தட்ட ஒரு திருவிழா மாதிரிதான். எதற்கெடுத்தாலும் ரஜினிய குறை சொல்றவங்க கூட அவர் படம் வரும்போது தியேட்டர்ல பார்க்க தவறுவதில்லை. ஏன்னா ஒவ்வொருத்தரும் ஏதோ காலகட்டத்துல இந்த மனுஷனுக்க்கு ரசிகரா இருந்துதான் வந்துருப்பாங்க. பெரும்பாலானவங்க குடும்பத்தோட படத்துக்கு போறதே ரஜினி படங்கள் வரும்போதுதான். இவர் படத்துக்கு போனா நல்லாருக்கும்.. இவர் படத்துக்கு குடும்பத்தோட நம்பிப் போகலாம்” அப்டிங்குற நம்பிக்கைய மக்கள் கிட்ட இத்தனை வருட சினிமா வாழ்க்கையின் மூலமா ஆழமா விதைத்திருப்பவர் ரஜினி. அப்படிப்பட்ட ஒருத்தரை இயக்குறப்போ அவர் மேல நம்பிக்கை வச்சிருக்குற ஒவ்வொருத்தரயும் மனசுல வச்சிதான் இயக்கனும். அப்படி செய்யத் தவறும்போது விளைவுகளும் தவறாத்தான் இருக்கும்.

கபாலி இதுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. நம்ம கிட்ட இருக்கது யாரு? அவரோட பொட்டன்ஷியல் என்னனு முழுமையா தெரியாத அல்லது அந்த பொட்டன்ஷியல உபயோகிக்க ஒரு இயக்குனரோட படைப்பாதான் கபாலி இருந்துச்சி. வணிக ரீதியா படம் மிகப்பெரிய வெற்றியடைந்தாலும், ரஜினி ரசிகர்கள் பலருக்கே மிகப்பெரிய ஏமாற்றமா கபாலி இருந்துச்சி. திரும்பவும் அதே இயக்குனர்கிட்ட படமா? பொதுவா ஒவ்வொரு ரஜினியோட புதுப்பட அறிவிப்பின் போதும் ஒரு மிகப்பெரிய உற்சாகம் இருக்கும். மறுபடியும் ரஜினியை ரஞ்சித்தான் இயக்கப்போறார்னு வந்த செய்தி உற்சாகத்துக்கு பதிலா பீதியில எக்ஸ்ட்ராவா ரெண்டு தடவ உச்சாதான் போக வச்சிது. ஆனா நாம நினைச்சது தப்புன்னு செவுட்டுல அறையிற மாதிரி உணர வச்சிருக்கு இந்த காலா.

உண்மைய சொல்லனும்னா எந்திரனுக்கப்புறம் முழு திருப்தியோட நான் பார்த்த ஒரு படம் இந்தக காலா. கபாலில நடந்த பெரும்பாலான தவறுகளை திருத்தி, எல்லா மக்களுக்கும் பிடித்த மாதிரியான ஒரு படத்தை குடுத்துருக்காங்க.

படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ் என்னன்னா சிவாஜிக்கப்புறம் அதே பழைய துரு துரு ரஜினி, கெத்தான ரஜினி, காமெடி பன்ற ரஜினி, பாடல்கள்ல அழகா சின்ன சின்ன ஸ்டெப் போடுற ரஜினின்னு நமக்கு பிடிச்ச ரஜினினோட அத்தனை முகங்களையும் ஒருசேர காமிச்சிருக்காங்க.

வில்லன் எவ்ளோ பவர்ஃபுல்லுங்குறதப் பொறுத்துதான் ஹீரோவோட கெத்தே இருக்கு. நானா படேகர் நாலு சீன் வந்தாலும் பட்டையக் கெளப்பிருக்காரு. “அவனக் கொல்லுங்கடாஆஆஆஆஆ”ன்னு ஹை பிட்ச்ல கத்துற வில்லன்கள விட லேசான பேஸ் வாய்ஸ்ல “ஏ…….ய்… பாம் வச்சிருவேன்”ன்னு ரகுவரன் மாதிரி கொஞ்சமா பேசுற வில்லன்கள் தான் என்னிக்குமே பவர்ஃபுல். அப்டி ஒரு கேரக்டர்தான் நானா படேகர். நாலு வசனம்தான்.. அதுவும் ரொம்ப அமைதியா பேசுறாரு. ஆனாலும் அவரப் பாத்தாலே நமக்கு உள்ளுக்குள்ள அள்ளு கெளம்புது.

அதே மாதிரி ரஜினியோட மனைவியா வர்ற ஈஸ்வரி ராவும் சூப்பரா பண்ணிருக்காங்க. குறிப்பா தன்னோட முன்னால் காதலனைப் பத்தி சொல்ற சீன் தியேட்டரே கலகலக்குது. ரஜினியோட மகனா வர்ற திலீபனுக்கும் சூப்பரான ரோல். கபாலியோட casting ல பெரும்பாலான முகங்களும், அவங்களோட கதாப்பாத்திர அமைப்புகளும் ரொம்ப எரிச்சலூட்டுற மாதிரி இருக்கும். அதை கிட்டத்தட்ட 90% கிட்ட இந்தப் படத்துல சரி செஞ்சிருக்காங்க. ஆனா இந்த லூஸ் டீ ஷர்ட் போட்டுட்டு , தொப்பிய சைடுல மாட்டிக்கிட்டு ராப் பண்ணுறேங்குற பேர்ல நாலு பேர் ஏன் சுத்திக்கிட்டு இருக்கானுங்கன்னு தெரியல. அவனுங்களப் பாத்தாதான் கல்லக் கொண்டு எரியனும் போல இருக்கு.  

எனக்கு மிகப்பெரிய பீதி என்னன்னா கொஞ்ச நாள் முன்னால ரஞ்சித் குடுத்த பேட்டில ரஜினி சாரோட கேரக்டர் ஒரு எமோஸனான கேரக்டருன்னாரு பாருங்க… ஆத்தாடி.. இது அதுல்ல… இப்டித்தான் கபாலில எமோசன் எமோசன்னு சொல்லி நம்மள மோஸன் போற அளவுக்கு அடிச்சானுங்க. இதுல மறுபடி எமோசனான்னு  நினைச்சி பயந்துட்டு இருந்தேன். ஆனா அப்டி எதுவும் தப்பா நடக்கல.

ஜினிக்கும்- ஹூமா குரேஷிக்கும் நடக்குற காட்சிகள ரொம்ப சூப்பரா பன்னிருக்காங்க. அதுமட்டுமில்லாம ஃப்ளாஷ்பேக் காட்சிகள அனிமேஷன் படங்கள் மூலமா விளக்குனது செம சூப்பர். அதுவும் அந்த ”தம்பிக்கு எந்த ஊரு” ஸ்டைல் தலைவர அதுல பாக்க செம்மையா இருந்துச்சி. ஹூமா குரேஷி ஆளும் சூப்பரா இருக்காங்க. எல்லாத்துக்கும் மேல கருத்து சொல்லாத சமுத்திரக்கனிய திரையில பாக்குற சொகமே தனிதான்.

சந்தோஷ் நாராயணன் படத்தோட இன்னொரு பில்லர். 9 ட்ராக் போட்டுருந்தாலும் படத்துல நாலு தான் வருது. BGM உம் சிறப்பு. அதுவும் குறிப்பா fly over ஃபைட்டு ஆரம்பிக்கிறப்ப வர்ற மியூசிக்குக்கும், நிக்கல் நிக்கல் பாட்டு வர்றப்பவும் புல்லரிச்சிருச்சி. ஒவ்வொரு ரஜினி படத்துலயும் இந்த “Goosebumps moment” குறைஞ்சது ஒரு நாலஞ்சாவது இருக்கும். ஆனா கபாலிலயோ அல்லது லிங்காவுலயோ ஒண்ணு கூட இல்லாதது வருத்தம். இப்ப காலாவுல நிச்சயம் ஒரு நாலஞ்சி Goosebumps moments இருக்கு.  

கடைசியா இயக்குனர் ரஞ்சித். ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு காட்சிப்படுத்தும் திறன் அப்டின்னு ஒண்ணு இருக்கு. என்னதான் நல்ல கதை திரைக்கதை இருந்தாலும் அந்த காட்சிப்படுத்துறதுலதான் ஒரு சினிமாவோட உயிரே. தன்னோட காட்சிப்படுத்தும் திறன் என்ன அப்டிங்குறத ஒவ்வொரு இயக்குனரும் ஒரு ரெண்டு அல்லது அதிக பட்சம் மூணு படங்களுக்குள்ள காமிச்சிருவாங்க. அதான் அவங்களோட கெப்பாகுட்டி. அதுல ஒரு படி மேல கீழ இருக்கலாமே தவிற ஒரே படத்துல மிகப்பெரிய முன்னேற்றம் எதையும் காமிச்சிட முடியாது. உதாரணமா நூறு கோடிரூவா குடுத்து சுசி கணேசன்கிட்ட படம் எடுக்க சொன்னாலும் அவரு சுசி கணேசன் மாதிரி தான் எடுப்பாரே தவிற ஷங்கர் மாதிரி எடுக்க முடியாது.  

ரஞ்சித்தோட திறமை என்ன, அவரால எந்த அளவு படமெடுக்க முடியும் அப்டிங்குறத நம்ம  கடந்த மூணு படங்கள்ல பாத்துருக்கோம். இந்தக் காலாவுலயும் அது மிகப்பெரிய அளவுல மாற்றம் எதுவும் அடையல. கபாலியோட கதைய விட இந்தக் காலாவுல ஒண்ணும் பெரிய கதையெல்லாம் எதுவும் இல்ல. ஆனா இந்தக் காலா கபாலிய விட பல மடங்கு சூப்பரா இருக்க மாதிரி நாம உணர முடியுதுன்னா அதுக்கு காரணம் அவர் சேர்த்திருக்குற “ரஜினிகாந்த் காட்சிகள்” தான். படத்தை காப்பாத்துறதே அது தான். ரஜினி இல்லாம வேற எந்த ஒரு நடிகரயும் அந்தக் கதாப்பத்திரத்துல பொருத்தியே பார்க்க முடியாது.  

ஆனா ஒண்ணு. ரஞ்சித் ஒரு அதிர்ஷ்டக்காரப் பையன்பா.. எல்லாரும் நிறைய படம் எடுத்து பழகிட்டு அப்புறம்தான் ரஜினிய வச்சி எடுப்பாங்க. ஆனா இவரு ரஜினிய வச்சித்தான் படம் எடுத்தே பழகுறாரு. முந்தைய படங்கள்ல பேசின அதே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலத்தான் இந்த படத்துலயும் ரஞ்சித் பேசியிருக்காரு. படத்துல எக்கச்சக்க குறியீடுகள். இயக்குனருக்கே தெரியாத பல குறியீடுகள அக்கு வேற ஆணி வேற பிரிச்சி ரெண்டு நாள்ல உங்களுக்கு நம்ம சமூக வலைதள நண்பர்கள் குடுத்துருவாங்க.. கொஞ்சம் காத்திருங்க.

மொத்ததுல நீங்க ரொம்ப நாளுக்கப்புறம் பார்க்கப்போர “ரஜினி” படம் இந்தக் காலா. எஞ்சாய் பன்னுங்க.Tuesday, May 15, 2018

இரும்புத்திரை!!!!


Share/Bookmark

நம்ம ஊர்ல ஒரு கெட்டப்பழக்கம் என்னன்ன மக்கள எப்பவுமே நிம்மதியா இருக்க விட மாட்டானுங்ககடையில பொரட்டா திங்கப்போனா ஒருத்தான் அய்ய்ய்யோ இத்த் திண்ணா கேன்சர் வருமேம்பானுங்க.. சரி காய்கறி வாங்கிட்டு போய் சமைக்கலாம்னா இதெல்லாம் பூச்சி மருந்து போட்டு வளர்த்த காய்கறி..இதத் திண்ணாலும் கேன்சர் வரும்.. சிக்கன் திங்கலாமா.. சிக்கனையெல்லாம் ஊசி போட்டு பெருசாக்குராங்க.. அத்த திண்ணாலும் கேன்சர் வரும். அது பாதாளக் கிணறுஅது வந்த பாதைஅய்யோ… அந்த வகையில இப்ப மொபைல் டேட்டாவுக்கும் வார்னிங்.

கொஞ்ச நாள் முன்னால உணவுபொருள் பற்றிய  விழிப்புணர்வுக்காக வேலைக்காரன்னு ஒரு படம் வந்துச்சி. அந்த வரிசையில அடுத்து மொபைல் டேட்டா திருட்டுக்களப் பற்றிய ஒரு விழிப்புணர்வு படம்தான் இந்த இரும்புத்திரை. இந்தப் படம் மூலமா இவங்க சொல்றது எனன்ன்னா இண்டர்நெட்ட யூஸ் பன்னி எதையுமே பண்ணிறாதிய.  ஸ்மார்ட் ஃபோன வச்சிக்கிட்டு எதயுமே சொல்லிராதியாஹலோவாச்சும் சொல்லிறலாமாடா….. அதயும் சொல்லிறாதிய.. எல்லாத்தையும் ஒருத்தன் ஒட்டுக்கேட்டுட்டு இருக்கான்.. உங்க கேமரா வழியாவே உங்கள நிறைய பேர் பாத்துக்கிட்டு இருக்கான்..

வீடியோ விமர்சனம்படத்துல இவங்க காமிக்கிற அத்தனையுமே மறுக்க முடியாத உண்மை. நம்முடைய தனித் தகவல்கள் எப்படி வெளில லீக் ஆகுது.. நம்மோட ஃபோன் நம்பர் எப்படி எதோ ஒரு பேங்க் காரனுக்கோ, ஒரு RO purifier கம்பெனிக்கோ தெரியிதுநம்ம கூகிள்ல ஒரு விஷயத்த பத்தி தேடிருந்தோம்னா அடுத்தநாள் அது தொடர்பான விளம்பர்ங்கள் நம்ம ஃபேஸ்புக்குல வரும். நம்ம அடுத்தவங்களுக்குத் தெரியாதுன்னு நினைக்கிற அத்தனை விஷயங்களையும் அடுத்தவன் நினைச்சா கண்டிப்பா பார்க்க முடியும். நம்மளை அறியாமலேயே நம்மளப் பத்தின நிறைய விஷயங்கள இந்த் உலகத்துக்கு நம்ம தெரியப்படுத்துறோம். அதெல்ல்லாம் நிறைய தப்பு நடக்க காரணமா அமையிது  அப்டிங்குற நிறைய விஷயங்கள படத்துல சொல்லிருக்காங்க.

கருத்துக்கள், விழிப்புணர்வு இதையெல்லாம் தாண்டி ஒரு படமா இந்த இரும்புத்திரை எப்டி இருக்குன்னு பார்ப்போம். விஷாலுக்கு தனி ஒருவன் மாதிரி ஒரு பவர்ஃபுல்லான படம் பண்ணனும்னு ஆசை வந்துருக்கு. தப்பில்லஆனா தனி ஒருவனையே திரும்பப் பண்ணதுதான் தப்பு. அதே செட்டப். அதுல ஜெயம் ரவி IPS போஸ்டிங்அவருக்கு ஹெல்ப் பன்ன நாலு ஃப்ரண்ட்ஸ்.. இதுல விஷால் மிலிட்டரி மேஜர். அவருக்கு ஹெல்ப் பன்ன அவ் அரோட ஜூனியர் நாலு பசங்க. அங்க சித்தார்த் அபிமன்யூ ரோல்ல இங்க அர்ஜுன். நயந்தாராவாக சமந்தா. இம்புட்டுத்தேன் மேட்டர். குடும்பங்களைக் கவர் பண்ண கொஞ்சம் ஃபேமிலி செண்டிமெண்ட். அவ்ளோதான் இருப்புத்திரை ரெடி. எல்லாத்தையும் ஒரே இடத்துலருந்து எடுக்கக்கூடாதுன்னு காதல் காட்சிகளை மட்டும் அப்படியே சில மாசங்களுக்கு முன்னால வந்த மாயவன் படத்துலருந்து எடுத்துருக்காங்க
.
இவங்க எடுத்துகிட்ட கான்செப்ட், சொல்லிருக்க விஷயங்கள் எல்லாமே நல்லாதான் இருக்கு. ஆனா சொல்லிருக்க விதம்தான் ரொம்ப சொதப்பல். முக்கியமா திரைக்கதை ஒட்டமும் கதாப்பாத்திர அமைக்குகளும். இந்தப் படத்துல விஷால் மிலிட்டரி ஆளா வர்றதுக்கான எந்த அவசியமும் படத்துல இல்ல. முதல் நெருடலே அதுதான். ஒரு சாதாரன சிவிலியன் கேரக்டரா விஷால வச்சி இத எடுத்துருந்தாலே இன்னும் சிறப்பா இருந்துருக்கும். டெல்லிகணேஷ வச்சி கொஞ்சம் செண்டிமெண்ட் ட்ரை பன்னிருக்காங்க. அவரோட வயது முதிர்ந்த தோற்றத்த பாத்து நமக்கு ஃபீலிங் வருதே தவிற காட்சிகள்ல ஒண்ணும் இல்ல.

அடுத்து அர்ஜூனோட கேரக்டர சித்தார்த் அபிமன்யூ அரவிந்தசாமி மாதிரி கொண்டு வர முயற்சி பன்னிருக்காங்க. ஆனா அது அரவிந்த சாமி மாதிரி வர்றதுக்கு பதிலா அடுப்புல வெந்த சாமி மாதிரி தான் வந்துருக்கு.

இந்த சினிமாக்கள்ல ஹேக்கர்ன்னு ஒரு கேரக்டர் வருவானுங்க.. முடியெல்லாம் சுருள் சுருளா வச்சிக்கிட்டு சோடாபுட்டி ஒண்ண போட்டுக்கிட்டு,  யோ யோன்னுட்டு வருவாங்கசூப்பர் ஹீரோக்கள விட பவர்ஃபுல்லான ஆளுங்க இவனுங்க. ஒரு லேப்டாப்ப குடுத்துட்டா எத வேணாலும் ஹேக் பண்ணுவானுங்கடேய் அந்த ஃட்ராஃபிக் சிக்னல ஹேக் பண்ணு.. அந்த சிசிடிவி கேமராவ ஹேக் பண்ணு… பன்னியாச்சி பன்னியாச்சிஅந்த லேண்ட் லைன் ஃபோன ஹேக் பன்னுபண்ணியாச்சு.. அந்த செல்ஃபோன ஹேக் பண்ணு.. பண்ணியாச்சி.. கொண்ட்ருவேன்.. அது டிவி ரிமோட்டு….  அது மாதிரியான ஒரு கேரக்டர்தான் அர்ஜூனுக்கு. இந்தியாவுல உள்ள அத்தனை ஸ்மார்ட் ஃபோன்கள், ட்ராஃபிக் சிக்னல்கள், சிசிடிவி கேமராக்கள் அத்தனையும் இவரோட கண்ட்ரோல்தான். எத வேணும்னாலும் எந்த நொடில வேணும்னாலும் அக்ஸெஸ் பன்னுவாரு.

அர்ஜுன் ஆளு செம கெத்தா இருக்காரு. ஆனா வசனங்கள் இன்னும் பவர்ஃபுல்லா இருந்துருக்கலாம். அர்ஜூன் படத்துல பன்ற பல விஷயங்கள் செம காமெடி.  ஒரு சீன்ல லிஃப்டுக்குள்ள நின்னுட்டு வாட்ச்ல இப்டி ரெண்டு தட்டு தட்டுவாரு. என்ன பண்ணேன் தெரியுமா? கை அரிக்கிதுன்னு சொரிஞ்சீங்க.. இல்லே ஒரு டெர்ரிஸ்டோட அக்கவுண்ட்லருந்து உன் அக்கவுண்ட்டுக்கு பணம் ட்ரான்ஸ்ஃபர் பன்னேன்ரைட்ரா.. அவர பவர்ஃபுல்லா காமிக்கனும்னு நினைச்சது ஓக்கேதான் அதுக்குன்னு இப்டி சிரிப்பு வர்ற மாதிரியெல்லாமா காமிக்கிறது.

லோன் வாங்க வர்றவன அடிச்சி விரட்டி மல்லையாவ புடிச்சியா, எங்ககிட்ட மட்டும் ஏன் கடன் திரும்ப கேட்டு வர்றன்னு சொல்ற காட்சியெல்லாம் வலுக்கட்டாயமா மக்கள கைதட்ட வைக்கனும்னு திணிக்கப்பட்ட காட்சிகள். மல்லையாவ புடிக்கிற வரைக்கும் குடுத்த கடன எவனும் கேக்கக்கூடாதுன்னு சொல்ல வர்றாங்களான்னும் தெரியல.

நிறைய ப்ரச்சனைகள் சொல்லிருக்காங்களே தவிற அதற்கான சரியான தீர்வு எதையும் படத்துல சொன்ன மாதிரி தெரியல. நம்ம படத்துலருந்து அவங்க சொல்றது  என்னன்ன இண்டர்நேட்டே எங்கயும் யூஸ் பன்னக்கூடாது,  எந்த் ஆப்புமே இன்ஸ்டால் பன்னக்கூடாது, ஸ்மார்ட் ஃபோனுக்கு பதிலா பழைய 1100 மாடல்கள யூஸ் பன்னனும், அப்டிங்குறதுதான். அதெல்லாம் நடக்குற காரியமா?

படத்துல  நல்ல விஷயங்கள்னு பாத்தா கேமரா, ஸ்டண்ட் எல்லாமே நல்லாருக்கு. யுவனோட மியூசிக் ஆஹா ஓஹோல்லாம் இல்லாட்டியும் பரவால்ல.  அடுத்து சமந்தா.. சமீபத்துல வந்த எந்தப் பட்த்துலயும் இவ்வளவு அழகா இல்ல.  திரும்ப லிப் சர்ஜரிலாம் பன்னிக்கிட்டு பழைய சமந்தாவா செம சூப்பாரா இருக்காங்க. ரோபோ ஷங்கரோட ஒண்ணு ரெண்டு ஒன்லைன் சிரிக்க வைக்கிது. 

யுவனோட இசையில ரெண்டு பாட்டு பரவால்ல. ரெண்டு பாட்டுதான் வந்துச்சின்னு நினைக்கிறேன். விஷால் அலுவலகப் பணிகள்ல மூழ்கி நடிப்புல கவனம் செலுத்த முடியலையா என்னன்னு தெரியல.. ரொம்ப மந்தமா இருக்காரு. கெட்டப்பும் சரியில்லாம அவன் இவன்ல இருக்க விஷால் மாதிரி இருக்காரு சில சீன்ல. மித்ரன் திரைக்கதைய இன்னும் விருவிருப்பாவும் சுவாரஸ்யமாவும் அமைச்சிருந்தா ரொம்ப சூப்பரான படமா வந்துருக்கும்.

மொத்தத்துல இந்த இரும்புத்திரை புதுமையான ஒரு ப்ரச்சனைய டீல் பன்னிருக்க ஒரு சுமார் ரகமான படம் தான்.LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...