வழக்கமா டைரக்டருங்க கதைய எழுதிட்டு ஹீரோவ தேடுவாங்க... இன்னும் சில பெரிய ஹீரோக்களுக்கு ஹீரோவுக்காக கதை எழுதுவாங்க.. ஆனா ஒரு காமெடியனுக்காக கதை (?) எழுதப்பட்டு வெளிவந்துருக்க படம் தான் இந்த ஒரு கல் ஒரு கண்ணாடி. பாஸ் என்கிற பாஸ்கரனோட மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு, முழுக்க முழுக்க சந்தானத்தோட ஒன்லைன் பஞ்ச்சுகள நம்பி மட்டுமே எடுக்கப்பட்ட படம்.
பாஸ் என்கிற பாஸ்கரன்ல கதைக்கு தேவையான மாதிரி சந்தானத்தோட காமெடி இருந்துச்சி.. ஆனா இங்க சந்தானத்துக்கு ஏத்த மாதிரி கதையை சுத்தி சுத்தி வளைச்சி நெளிச்சி என்னென்னமோ பண்ணிருக்காய்ங்க... ராஜேஷோட போன இரண்டு படங்கள போலவே லவ், லவ் ஃபெயிலியர், ஒயின் ஷாப், மச்சான் மச்சான்னு கூட திரியிற சந்தானம்... ஒரு சீனுக்கு கெஸ்ட் அப்பிரண்ஸ் குடுக்குற "B" கிரேடு ஹீரோக்கள்னு சுட்ட தோசையையே திரும்ப திரும்ப சுட்டுகிட்டு இருக்காங்க.. இதுனாலயோ என்னவோ தெரியல படம் பாத்து முடிச்சப்புறம் ஒரு படம் பாத்த ஃபீலிங் இல்லாம பல பிட்டு காமெடிங்கள சேத்து பாத்த ஒரு எஃபெக்ட் தான் இருக்கு. அதுவும் கடைசி அரை மணி நேரம் என்ன பண்றதுன்னு தெரியாம கண்ட மேனிக்கு மொக்கைய
போட்டு சாவடிச்சிடுறாய்ங்க.
ஆனா சந்தானம் எந்த விதத்துலயும் நம்மள ஏமாத்தல... நிறைய இடங்கள்ல
தியேட்டர அதிர வச்சிருக்காரு.. ஆனா தியேட்டர்ல இருந்தவங்க, படத்துல நிறைய இடத்துல நல்ல நல்ல காமெடிங்க இருந்தும் ட்ரெயிலர்ல போடுற மொக்க டயலாக்குங்க வர்றப்பதான் சவுண்டு அதிகமா குடுத்தது கொஞ்சம் வருத்தமா இருந்துச்சி... உதாரணமா ஒரு சீன்ல வேதம் புதிது படத்துல வர்ற பாலுத்தேவர் சீன கலாய்ப்பாங்க.. ஆனா அதுக்கு தியேட்டர்ல ஒரு ரெஸ்பான்ஸும் இல்ல.. ஒரு வேளை எத காலாய்க்கிறாங்கன்னு சரியா டிரைக்டர் புரிய வைக்கலையோ என்னவோ..
அப்புறம்இந்த படத்துல சந்தானம் மஞ்ச கலரு பேண்டு, பச்சை கலரு பேண்டுன்னு டூயட்டுல வர்ற எம்.ஜி.ஆர் மாதிரியே படம் புல்லா வர்றாரு.. அதோட மயிலாப்பூர்ல இருக்கேன்ன்னு சொல்லிகிட்டு வித்யாசமான ஒரு ஸ்லாங்ல பேச ட்ரை பண்றாரு.. ஏண்டா இப்புடி மொக்கத்தனமா பண்ணிகிட்டு இருக்காய்ங்கன்னு நெனைச்சிட்டு இருந்தேன் அப்புறம் தான் கண்டுபுடிச்சேன் ஏன் இப்புடி பண்றாய்ங்கண்ணு.. கேரக்டர்ல differentiation காமிக்கிறாங்களாமா.
அப்புறம் ஹன்சிகா... யப்பா... என்னா அழகு.... ஆல் யங் கேர்ள்ஸ்...அந்த சிரிப்புக்கு முன்னாடி நா செதைஞ்சி பொயிட்டேன்... இதுவரைக்கும் ஹன்சிகாவ புடிக்காம இருந்தா கூட இந்த படம் பாத்தா புடிக்கும்.... ஃபேஸ் ரியாக் ஷன்ஸ் எல்லாமே சூப்பர்.முடிஞ்ச வரைக்கும் நல்லா நடிக்க பாத்துருக்காங்க. ஆனா உதய நிதி, ஹன்சிகா ஜோடி அவ்வளவு பொருத்தமா இல்லை.
உதயநிதி ஸ்டாலின்.. ஹீரோவா நடிக்க எல்லா தகுதிங்களும் இருக்கு.. ஆனா இந்த படத்துல பெரிய நடிப்ப வெளிப்படுத்துற மாதிரி சீன்ஸ் எதுவும் இல்லை.. பெரிய டயலாக் பேசற சீனும் இல்லை... காமெடி பண்ண ட்ரை பண்ணிருக்காரு... சிரிப்பு அவ்வளவா வரலன்னாலும் கடுப்பு வரல... இவரு தைரியமா ஆக் ஷன் படங்கள்ல நடிக்கலாம்..கண்டிப்பா எடுபடும்...
ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கம் போலவே அவர்கிட்ட இருக்க அந்த அஞ்சி ட்யூன வச்சி மேனேஜ் பண்ணிருக்காரு.. வழக்கம் போல BGM மட்டை... காலைல டிவில ராஜேஷூம் உதயநிதியும் இந்த படத்துக்கு ஹாரிஸ் தான் பெரிய ப்ளஸ்ன்னு அளந்து விட்டுகிட்டு இருந்தாங்க.. ஆனா பாக்கப்போனா படத்துக்கு பெரிய மைனஸே ஹாரிஸ் ஜெயராஜ் தான்... செகண்ட் ஹாஃப்ல மின்சார கனவுல பாட்டுல வர்றா ஒரு பீஸ் மியூசிக்க அப்புடியே போட்டுருக்காரு.. இந்த படத்துக்கெல்லாம் யுவன் தான் கரெக்ட்.
கதைக்காக ரொம்ப ஒண்ணும் பெருசா மெனக்கெடாம எதோ சீன் சீனா எழுதி
ஒப்பேத்திருக்காங்க. அதுனாலயோ என்னவோ படம் ஒரு அஞ்சி பேர மட்டுமே சுத்தி நகருது.. அழகம் பெருமாள்ங்கற ஒரு நல்ல நடிகர இந்த படத்துல வேஸ்ட் பண்ணிட்டாங்கன்னு தான் சொல்லனும். அதே போல தான் சாயாஜி ஷின்டேவும். சரண்யா வழக்கம் போல.. நடிப்புல பிண்ணிருக்காங்க.
அப்புறம் டைரக்டர் ராஜேஷ்.. மக்களை சிரிக்க வைக்கனும்ங்கற நோக்கத்துல படம் எடுத்துகிட்டு இருக்காரு.. ரொம்ப நல்ல விஷயம்.. ஆனா ஒருத்தர நம்பியே படம் எடுக்கக்கூடாது.. அதே மாதிரி ஒரே படத்தையே திரும்ப திரும்ப எடுக்கவும் கூடாது. படங்களின் கதைக்களங்கள்ல variation காட்டாம இப்புடியே படம் எடுத்துக்கிட்டு இருந்தா கூடிய சீக்கிரம் தோல்வி இவர வந்து சந்திக்கும். ஆனா இந்த தடவ எஸ்கேப் ஆயிட்டாருன்னு தான் சொல்லனும். பாடல் காட்சிகள் படமாக்கிய விதம் எதுவுமே சரியில்ல.. அந்த "பட்டுக்கோ பட்டுக்கோ" பாட்டு சம்பந்தமே இல்லாம எதோ எடுத்து வச்சிருக்காய்ங்க.. அதோட 1st half la வர்ற மூணு பாட்டுமே ஒரே மாதிரி இருக்கு.
சரி சுருக்கமா படத்த பத்தி சொல்லனும்னா சுந்தர்.சி யோட உள்ளத்தை அள்ளித்தா படத்துக்கும் அழகான நாட்கள் படத்துக்கும் என்ன வித்யாசமோ அதே வித்யாசம் தான் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்கும் இந்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கும்.
எப்புடி இருந்தாலும் நம்பி போறவங்கள ஏமாற்றாத ஒரு படம்