Tuesday, January 29, 2019

இணையத்தை கலக்கிய வாட்ஸாப் ஸ்டேட்டஸ் மீம்ஸ்!!!


Share/Bookmark




































Friday, January 11, 2019

பேட்ட – ரஜினி படம்..!! ரஜினி மட்டுமே படம்!!!


Share/Bookmark

மாறாததெல்லாம் மண்ணோடு.. மாறுவதெல்லாம் உயிரோடுகோச்சடையானில் வரும் ஒரு பாடல் வரி. காலத்துக்கு ஏற்ப மாறாத விஷயங்கள் விரைவில் காணாமல் போய்விடும். ஒருவர் ஒரு துறையில் நாற்பது ஆண்டுகள் அசைக்கமுடியாத ஒரு சக்தியாக திகழ்கிறார் என்றால் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு அதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டதுதான் முக்கியக் காரணம். அதுபோக ஒரு நடிகர் எந்த வித குறுக்கீடும் இல்லாமல் தன்னை முழுமையாக ஒரு இயக்குனரிடம் ஒப்படைக்கும்பொழுதே அந்த நடிகனின் முழுத் திறமையும் வெளிப்படுகிறது. இதைத் அன்றிலிருண்டு இன்றுவரை கடைபிடிப்பவர் திரு.ரஜினிகாந்த்.

அதே போல ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஒரு நடிகரை இயக்கும் இயக்குனர், அவருடைய ரசிகனின் பார்வையிலிருந்து அவரை ரசித்து இயக்கும்போதே மிகப்பெரிய ஆச்சர்யங்கள் நிகழ்கிறது. நான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகன். நான் அவரை எப்படியெல்லாம் பாக்கனும்னு ஆசைப்பட்டேனோ அதை மனசுல வச்சி உருவாக்கியிருக்கது தான் இந்த சிவாஜி திரைப்படம்இது சிவாஜி திரைப்பட உருவாக்கத்தின் போது ஷங்கர் சொன்னது. அவர் சொன்னது போலவே பட்த்தின் அவுட் புட்டும். ஒவ்வொரு ரசிகனும் ரஜினியை எப்படி பார்க்க நினைத்தானோ அப்படி இருந்தது திரைப்படம்.

அதே மாதிரியான ஒரு அற்புதத்தைதான் மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் நிகழ்த்தியிருக்கிறார்.அட.. இப்டி தலைவரப் பாக்காத்தானே நாங்கல்லாம் ஆசப்பட்டோம்என படம் பார்த்துவிட்டு இப்பொழுது கூறாதவர்கள் இல்லை. நாடி நரம்பு ரத்தம் சதை புத்தி அத்தனையிலயும் ரஜினிவெறி ஊறிப்போன ஒரு ரசிகனுக்கு அவர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதன் வெளிப்பாடு இப்படித்தான் இருக்கும்.

பேட்ட ஆடியோ லாஞ்ச் ஃபங்க்ஷன்ல கார்த்திக் சுப்பராஜ் பேசும்போதுநாங்க தலைவர எந்தெந்த ஆங்கிள்ல காமிக்கனும்.. அவரு எப்டி வரனும்.. எப்டி நிக்கனும்னுலாம் உக்கந்து பேசிக்கிட்டே இருப்போம்என்றார். உண்மையில் அது ஒவ்வொரு ஃப்ரேமிலும் அப்பட்டமாகத் தெரிகிறது. பொதுவாக ஒரு படத்தின் காட்சியில் நடிகர் ஒண்றிரண்டு ஃப்ரேம்களில் அழகாகத் தெரிவார். ஆனால் பேட்டயில் ஒவ்வொரு ப்ரேமிலுமே தலைவர் அவ்வளவு அழகாக  இருக்கிறார்

அதற்கேற்றார்போல் கதை நடக்கும் இடம் மலைப்பிரதேசம். அந்த லொக்கேஷனுக்கும் அவருடைய காஸ்ட்யூமிற்கும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. அதுவும் ஹாஸ்டலுக்குள் வந்து மாணவர்களை ஒழுங்கு படுத்தும் ஒன்றிரண்டு காட்சிகளையும் , இண்டர்வல் ப்ளாக்க்கில் உள்ளே போங்கடாஎன்று அரட்டுவதையும் சிங்கத்தின் கர்ஜனையுடன் ஒப்பிட்டால் அது சற்று குறைவாகத்தான் இருக்கும்.  அவ்வப்போது தலைவர் வைத்திருக்கும் ரேடியோவில் ஒலிக்கும் பழைய பாடல்கள் காட்சிகளை இன்னும் அழகாக்குகின்றன. ஸ்டண்ட் அதகளம். அதுவும் இண்டர்வல் ப்ளாக்கிற்கு முந்தைய பில்ட் அப் சீன் வெறித்தனம்.

பேட்ட ஒரு தனி திரைப்படமாக இல்லாமல் ஒரு ரஜினி ரசிகனின் ஒட்டுமொத்த ரஜினி சார்ந்த அனுபவங்களையும், இன்றைய ட்ரெண்டில் மூண்று மணிநேரத்தில் ரீவைண்ட் செய்து பார்க்கும் ஒரு அனுபவமாகத்தான் இருக்கிறது. மணல் மாஃபியா, RSS, டம்மி பீஸ் சிங்காரம் என படம் முழுவதும் நிஜத்தில் பார்க்கும் பல கதாப்பாத்திரங்களை உலவ விட்டு ஊமை குத்தாக குத்தி விட்டிருக்கிறார்.

ஒரு ரஜினி ரசிகனாகவும் ஒரு சினிமா ரசிகனாகவும் படத்தில் எனக்கு சில வருத்தங்கள் உண்டு. வழக்கமாக தலைவர் படங்களில் அந்த படத்திற்கான ட்ரேட் மார்ட் ரஜினி ஸ்டைல் என்று ஒண்று இருக்கும். பாட்ஷா “ஒருதடவ சொன்னா” , படையப்பா “சல்யூட்” , பாபா முத்திரை, சிவாஜியின் கூல் வசனம், எந்திரனில் டாட்.. அதுபோல பேட்டைக்கென்ற ஒரு ட்ரேட் மார்க் மூவ்மெண்டோ, பஞ்ச்சோ இருந்திருக்கலாம்.

அதேபோல ஹீரோ எந்த அளவிற்கு கெத்தானவர் என்பது வில்லன் எந்த அளவிற்கு பவர்ஃபுல்லானவர் என்பதைப் பொறுத்தே அமையும். அந்த வகையில் வில்லனின் கதாப்பாத்திரம் இன்னும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கலாம். நவாஸுதீன் கடைசி வரை கதாநாயகனுக்கு பயந்த ஒரு வில்லனாகத்தான் காண்பிக்கப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் எந்த அளவிற்கு பவர்ஃபுல்லானவர், அவர் செல்வாக்கு எப்படி என்பதெல்லாம் காண்பிக்கப்படவில்லை. விஜய் சேதுபதியை இன்னும் சிறப்பான வில்லனாக உபயோகித்திருக்கலாம்.

படம் வெளியாவதற்கு முன்பு அஜித் ரசிகர்களின் பெரும்பாலான பதிவுகள் “பேட்டயில் ரஜினியுடன் நிறைய கதாப்பாத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தல அவர்களை ஒற்றை ஆளாக எதிர்க்கிறார்” என்பது போல இருந்தது. ஆனால் அதை அப்படியே மாற்றிக் கூற வேண்டும். படத்தில் அத்தனை பேர் இருந்தாலும் தலைவரின் கதாப்பாத்திரத்திற்கு அடுத்து படத்தில் அடுத்த வெய்ட்டான கதாப்பாத்திரம் யார் என்று கேட்டால் நிச்சயம் ஒருவரை குறிப்பிட்டு கூற முடியாது. ஆரம்பம் முதல் கடைசி வரை ரஜினி மட்டுமே கதையில் நிறைந்திருக்கிறார். மற்ற எந்த கதாப்பாத்திரமும் மெருகேற்றப்படவில்லை. சிம்ரன் கொஞ்ச நேரம், திரிசா கொஞ்ச நேரம், மேகா ஆகாஷ் கொஞ்ச நேரம் என பல கதாப்பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டு அப்படியே அத்துவிடப்படுகின்றன. (தலைப்பே இன்னொரு முறை படிக்கவும்)

அடுத்து இதற்கு முந்தைய பல பதிவுகளில் குறிப்பிட்டது போல, புறாவை மறைய வைப்பது பெரிய விஷயமில்லை. மறைந்த புறாவை திரும்ப கொண்டுவருவதில் தான் அடங்கியிருக்கிறது prestige. மொத்தக் கதையும் பின்னப்பட்டிருப்பது அந்த ப்ளாஷ்பேக்கை சுற்றித்தான். அப்படியிருக்க அந்த ஃப்ளாஷ்பேக் எவ்வளவு அழுத்தமாக அமைக்க முடியுமோ அப்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பேட்டயின் ஃப்ளாஷ்பேக் இன்னும் சிறப்பாக செய்யப்பட்டிருக்கலாம். ரொம்ப அவசர அவசரமாக ப்ளாஷ்பேக் ஓடி முடிந்ததைப் போல இருந்தது மட்டுமல்லாமல், சசிகுமார், திரிசா கதாப்பாத்திரங்களெல்லாம் மனதில் ஒட்ட மறுக்கின்றன. 

அதே போல பேட்டவேலனின் அடாவடிகளை எதிர்பார்த்து காத்திருந்த நமக்கு சட்டென ஃப்ளாஷ்பேக் முடிந்ததும் ஒரு ஏமாற்றம். ஃப்ளாஷ்பேக் காட்சிகளை இன்னும் கொஞ்சம் இழுத்து பிந்தைய பகுதி ரிவெஞ்ச் காட்சிகளை கொஞ்சம் சுருக்கியிருக்கலாம்.

பின்னணி இசையில் அனிரூத் கலக்கியிருக்கிறார். கடந்த சில படங்களில் இல்லாத அளவுக்கு பாடல்கள் பேட்டயில் அதகளம். ஐந்து பாடல்களையும் முழுவதுமாக உபயோகித்திருக்கலாம். ஆஹா கல்யாணமும், பேட்ட பராக்கும் முழுவதுமாக இல்லாதது வருத்தமளித்தது.

ஒரே ஒரு பாட்ஷா தான். அதை யாராலும் உடைக்க முடியாது. நானே நினைச்சாலும் அந்த மாதிரி படம் எடுக்க முடியாது என தலைவர் முன்பொரு முறை சொல்லியிருந்தார். நூறு சதவிகித உண்மை. ஆனால் பேட்டயில் ஃப்ளாஷ்பேக்கும் வில்லனும் இன்னும் கொஞ்சம் மெருகேற்றப்பட்டிருந்தால் கண்டிப்பாக இதை அடுத்த பாட்ஷா என்றே கூறலாம்.

பேட்டயின் ட்ரெயிலரைப் பார்த்து உற்சாகமான நண்பர் ஒருவர் “நண்பா… நம்ம தலைவரு ஃப்ளாஷ்பேக்குல தலைவர் ரசிகராவே வந்தா எப்டி இருக்கும்.. முரட்டுக்காளை படத்துக்கு தலைவர் முதல் நாள் அளப்பரையா போய் படம் பாக்குற மாதிரி சீன் வச்சா செமையா இருக்கும்ல…”ன்னாரு… மெரண்டுட்டேன். உண்மையிலயே செம மேட்டர்.. அப்படி காட்சி அமைக்கப்பட்டால் உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன் நண்பான்னு சொல்லியிருந்தேன். நானும் அப்படி இருக்காதா என எதிர்பார்த்துதான் காத்திருந்தேன். சிறிய ஏமாற்றம்.

”இதான்யா ரஜினி படம்.. அவர வச்சி இப்டித்தான் எடுக்கனும்” என்கிற வாசங்களை படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது கேட்ட முடிகிறது.  அதேபோல படம் முடிந்து வெளியில் வரும் அனைவர் முகத்திலும் பல நாட்களுக்கு முன் தொலைத்த எதோ ஒண்று மீண்டும் கிடைத்துவிட்ட திருப்தியும் மகிழ்ச்சியும் காண முடிகிறது. கண்டிப்பாக சிவாஜிக்குப் பிறகு முழுக்க முழுக்க ரஜினி படமாக வெளிவந்திருக்கும் இந்த பேட்ட அத்தனை பேருக்கும் பிடித்த படமாக இருக்கும்.
  

Sunday, January 6, 2019

சிறந்த படங்கள் 2018 – அதிரடிக்காரன்!!!


Share/Bookmark

சிறந்த படங்கள் என்று சொல்வதற்கு பதில் எனக்குப் பிடித்த படங்கள் என்று கூறுவதுதான் வைப்பதுதான் சரியாக இருக்கும். ”2019 eh முடியப்போவுது.. இதுல 2018 சிறந்த படங்கள் லிஸ்டு ரொம்ப முக்கியம்“ என்று நீங்கள் நினைப்பது இங்கு வரை கேட்கிறது.  நண்பர்களால் நல்ல படங்கள் என்று முத்திரை குத்தப்பட்ட சில படங்களை பார்க்கவில்லை. அவற்றையெல்லாம் பார்க்காமல் இந்தப் பதிவை இடுவது அவ்வளவு நன்றாக இருக்கது என்பதால் ஒருவாரம் நேரம் எடுத்து ஒருசில படங்களைப் பார்த்துவிட்டு பதிவிடுகிறேன். இன்னும் கூட நல்ல படங்கள் என பெயரெடுத்த நடிகையர் திலகம், அடங்க மறு, கனா போன்ற படங்களை பார்க்கவில்லை. சமீபத்தில் பார்க்கும் உத்தேசமும் இல்லை. அதனால் பார்த்தவற்றில் பிடித்தவற்றை வரிசைப்படுத்துவோம். வழக்கம்போல் திரையரங்கில் படங்கள் எனக்கு எந்த மாதிரி பாதிப்பை கொடுத்தது என்கிற அடிப்படையிலேயே இவை வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது.



10. நிமிர் 



உதயநிதி இதுவரை நடித்த படங்களிலேயே உருப்படியான ஒரு படமாக இதச் சொல்லலாம். நண்பர்கள் பலருக்கு இந்தப் படம் பிடிக்காமல் போனதற்கு உதயநிதி நடித்தது ஒரு முக்கியக் காரணம். ஃபஹத் ஃபாஸில் நடித்த ஒரிஜினல் வெர்ஷன் நான் பார்க்கவில்லை. அதனால் எனக்கு உதயநிதி இந்தப் படத்தில் பெரிய உருத்தலாகத் தெரியவில்லை.  படம் பார்த்த பொழுது கதைக்கு ஏற்ற ஒரு நாயகனாத்தான் இருந்தார். நடிப்பிலும் பெரிய குறை தெரியவில்லை.

09. அசுரவதம்


இதுவும் பெரும்பாலான நண்பர்களுக்கு பிடிக்காமல் மிகப்பெரிய தோல்வியைத் தழுவிய ஒரு படம். ஆனால் இந்த வருடத்தில் பிடித்த படங்களில் ஒண்று. ஒரு இயக்குனர் அவர் எடுத்துக்கொள்ளும் genre க்கு முதலில் நியாயம் செய்ய வேண்டும். அந்த வகையில் ஒரு முக்கியமான படம் இது. முதல் காட்சியிலிருந்து கதையை விட்டு எங்கும் நகராமல் அருமையாக அமைக்கப்பட்ட காட்சிகள். பெரும்பாலும் படம் பார்க்கும்பொழுது நமக்கு கதாநாயகனின் மனநிலையில் படம் பார்ப்போம். ஆனால் இதில் அப்படியே மாறி, வில்லனின் மனநிலையில் ரசிகர்களை படம் பார்க்க வைத்திருந்தது சிறப்பு.


09. இரவுக்கு ஆயிரம் கண்கள் :



ஆரம்பம் முதல் கடைசி வரை சுவாரஸ்யமாக வேறு வேறு கோணங்களில் பின்னப்பட்ட கதை. அஜ்மலைத் தவிற வேறு யாரையாவது வில்லனாக போட்டிருக்கலாம் என்பதைத் தவிற மற்றபடி சிறப்பான திரைப்படம்.


08. மெர்க்குரி


இந்த இயக்குனர் இந்த மாதிரி படங்கள்தான் எடுப்பார் என்பதை விட இவர் என்ன படம் எடுத்தாலும் நன்றாக இருக்கும் என்பதே ஒரு சிறந்த இயக்குனருக்கு அடையாளம். அந்த வகையில் கார்த்திக் சுப்பராஜ் வியக்கவைக்கும் ஒரு இயக்குனர். எடுத்த அனைத்து படங்களுமே வேறு வேறு genre. ஆனால் அனைத்திலுமே முழு உழைப்பை கொட்டி திறமையானவர் என்பதை நிரூபித்திருக்கிறார். இந்த மெர்க்குரியிலும் கூட.


  
07.சிலுக்குவார்பட்டி சிங்கம்.



இந்த வருடம் வெளிவந்த ஒருசில நகைச்சுவைப் படங்களில் வின்னர் இது தான். இந்த வருடத்தில் திரையரங்கில் அதிகம் சிரிக்க வைத்த திரைப்படம். அத்தனை நகைச்சுவை நடிகர்களிம் முழு potential ஐ வெளிக்கொணர்ந்த படம். கலகலப்பு இரண்டாம் பாகமும் அத்தனை நகைச்சுவை நடிகர்களைக் கொண்டிருந்தாலும் முதல் பாதி முழுவதும் நகைச்சுவையே இல்லாமல் இருந்ததாலும், ஜீவாவின் கதாப்பாத்திரம் அந்தப் படத்திற்கு எந்த வகையிலும் உதவாதாலும் ஒரு முழுமையை உணர முடியவில்லை. ஆனால் இந்த சிலுக்குவார்பட்டி சிங்கம் அந்தக் குறைகளை நீக்கி பார்வையார்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்திருக்கிறது.



06. வடசென்னை



பல வருடங்கள் பேச்சுவார்த்தையில் இருந்து பல பில்ட் அப்புகளுக்கு பிறகு வெளிவந்த திரைப்படம். தனுஷ் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர் என்பதை மற்றொரு முறை நிருப்பித்திருக்கும் படம் இந்த வடசென்னை. தனியாக performance செய்து காட்டுவதற்கு காட்சிகளெல்லாம் இல்லை. ஆனால் அந்த கதாப்பாத்திரத்தில் அவரது நடை, உடல் அசைவுகள், பேச்சு என தனுஷால் மட்டுமே சாத்தியாமன ஒன்று. இயக்குனர் வெற்றி மாறன் வட சென்னையை ஒரு படி உள்ளே இறங்கி அலசி எடுத்திருக்கிறார். ஆனால் டாக்குமெண்டரி  மாதிரியான படமாக்கலும், படத்தை சுவாரஸ்யப்படுத்துவதுபோலான காட்சிகள் அதிக அளவில் இல்லாமல் இருந்ததாலும் பெரும்பாலன மக்களுக்கு சென்றடையவில்லை.

05. இமைக்கா நொடிகள்


இந்த வருடம் வெளிவந்த மற்றொரு தரமான த்ரில்லர். நயன் தாராவின் தரமான சம்பவங்களில் இந்த இமைக்கா நொடிகளும் ஒண்று. க்ளைமாக்ஸ் மட்டும் எனக்கு அவ்வளவு திருப்தியாக இல்லை. காரணம் அதே மாதிரியான க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டுன் ஒரு மெல்லிய கோடு ( The Body) , Kshanam ( சத்யா) என்ற இரண்டு படங்கள் பார்த்தேன். பெரும்பாலானோர் பார்த்திருப்பீர்கள். திரும்பவும் அதே மாதிரியான ஒரு ட்விஸ்ட் சலிப்பை ஏற்படுத்தியதே தவிர மற்றபடி சிறப்பான ஒரு thriller.


04. கடைக்குட்டி சிங்கம்


குடும்பங்கள் கொண்டாடிய ஒரு வெற்றிப்படம். கார்த்திக்கு ஏற்ற கதாப்பாத்திரம். கிராமத்து கதைக்களமும், அதை சுவாரஸ்யமாக படமாக்கியதும் அனைவருக்கும் சென்று சேர உதவியது. நீண்ட நாட்களுக்கு பிறகு 90 களில் வந்த கே.எஸ்.ரவிகுமார், P.வாசு படங்களை பார்த்தது போன்றதொரு உணர்வு.




03. பரியேறும் பெருமாள்



ஒரு சமூகம் சார்ந்த அரசியல் பேசுவதற்கு சினிமாவை உபயோகிப்பதில் தவறில்லை. ஆனால் சினிமாவிற்கும், திரையரங்கிற்கு காசு கொடுத்து வரும் பார்வையாளர்களுக்கும் உண்டான ஒரு குறைந்த பட்ச மரியாதையை கொடுக்க வேண்டும். இதற்கு முன்னர் இதே விஷயத்தை பேசிய இயக்குனரின் படம் போல் அல்லாமல் ஒரு சினிமாவாகவும், அதே சமயம் சொல்ல வேண்டிய விஷயத்தை உரியவர்களுக்கு கொண்டு சேர்த்ததிலும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம்.


02. ராட்சசன்


கடந்த ஒரு சில வருடங்களில் வெளிவந்த சிறந்த சஸ்பென்ஸ் த்ரில்லர்களில் ஒண்று. ஆரம்பம் முதல் கடைசி வரை எந்த இடத்திலும் சறுக்காமல் பார்வையாளர்களை பதட்டத்துடன் உட்கார வைத்திருந்த தரமான சஸ்பென்ஸ் த்ரில்லர்.




01. 96



இந்த வருடம் வெளிவந்த படங்களில் மிக அழகான திரைப்படம். இதைப்பற்றி நண்பர்கள் வலைத்தளங்களில் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிவிட்ட காரணத்தினால் மேற்கொண்டு எதுவும் தேவையில்லை. ஒண்றே ஒண்று. இதற்கு முன்னர் “காக்கா முட்டை” திரைப்படம் பார்க்கும்பொழுது என்னையும் அறியாமல் படம் முழுவதும் என் முகத்தில் ஒரு புன்னகை இருந்துகொண்டே இருந்தது. அதன் பிறகு அதே மாதிரி ஒரு ஃபீலைக் கொடுத்தது இந்த படம் தான். திரிசா இவ்வளவு அழகை இவ்வளவு நாள் எங்கே வைத்திருந்தது என்று தெரியவில்லை. இயக்குனரும் இசையமைப்பாளரும் போட்டி போட்டுக்கொண்டு படத்தை அழகாக்கியிருக்கின்றனர். என்னைப் பொறுத்தவரை இந்த வருடத்தின் சிறந்த திரைப்படங்களில் முதலிடம் இந்த 96 க்கு தான்.

அடுத்து வெறியேற்றிய படங்கள் 2018 வந்து கொண்டிருக்கிறது. அநேகமாக கவுண்டர் வந்தாலும் வரலாம்.

தொடர்புடைய பதிவுகள்:

கவுண்டமணி தொகுத்து வழங்கும் சிறந்த படங்கள் - 2011

நம்ம TOP 14 தமிழ் சினிமா -2016!!!

நம்ம பத்து - 2015




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...