இயக்குனரை
சார்ந்து இல்லாம ஒரு நடிகர் தன்னுடைய படங்களுக்கு, தன்னுடைய பெயருக்காக மட்டும் கூட்டத்தை
இழுப்பது சாதாரண விஷயம் இல்லை. அதுக்கு நிறைய வெற்றிகளைக் குடுக்கனும். நிறைய காலம்
காத்திருக்கனும். ஆனா அத ரொம்ப குறுகிய காலத்துலயே சாதிச்சவர் விஜய் ஆண்டனி. இன்னிக்கு
வார நாள்…. வெள்ளிக்கிழமை கூட இல்ல வியாழக் கிழமை.. அப்படியிருந்தும் இத்தனை திரையரங்குகள்
ஹவுஸ் ஃபுல்லா இருக்குன்னா கண்டிப்பா அதுக்கு காரணம் விஜய் ஆண்டனியும், அவருடைய கதைத்
தெரிவும், திரைப்படங்களில் அவருடைய அடக்கமான நடிப்புமே காரணம். நிறைய மக்களுக்கு பிடித்த
நடிகராயிட்டாரு. தமிழ்நாட்டுல மட்டுமில்லாம ஆந்திராவிலும் கூட. இந்த வருஷம் ஆந்திராவுல
அதிக நாட்கள் ஓடிய படங்கள் வரிசையில “பிச்சைக்காரனோட தெலுங்கு பதிப்பான “பிச்சகாடு”வும்
ஒண்ணு. வித்யாசமான கதைக்களங்களைத் தெரிவு செய்யும் விஜய் ஆண்டனியின் மற்றுமொரு வித்யாசமான
முயற்சி இந்த சைத்தான்.
The
Prestige படத்தோட முதல் காட்சில மைக்கல் கெய்ன் சின்ன பையன் ஒருத்தனுக்கு புறாவ வச்சி
மேஜிக் செஞ்சி காமிச்சி ஒரு வசனம் சொல்லுவாரு.
Making something disappear is not
enough. You have to bring it back. That's why every magic trick has a
third act, the hardest part, the part we call "The Prestige".
அது
மாதிரி தான் ஒரு கதைய எத்தனை முடிச்சுகள் வேணும்னாலும் போட்டு சுவாரஸ்யமாக்கிக்கிட்டே
போகலாம். ஆனா அந்த முடிச்சுகள எப்படி கடைசில அவிழ்க்குறோம்ங்குறதுலதான் அந்தக் கதையோட
வெற்றி அடங்கி இருக்கு.
விஜய்
ஆண்டனி படம் என்பது ஒரு பக்கம் எதிர்பார்ப்பை ஏற்படுத்த, இன்னொரு பக்கம் படத்தோட சூப்பரான
ட்ரெயிலர் இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்துச்சி. அந்த எதிர்பார்ப்புக்கு
படம் பூர்த்தி செஞ்சிதா இல்லையான்னு பாப்போம்.படம்
பார்க்காத, பார்க்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் அப்டியே ஸ்கிப் பன்னி கடைசி பாராவுக்கு
போயிருங்க. படம் பார்த்தவர்கள் தொடரலாம்.
SPOILER
ALERT
சென்னையில்
ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில எந்த ப்ரச்சனை
வந்தாலும் சால்வ் பன்னக்கூடிய , எந்நேரமும்
வேலையப் பத்தியே நினைச்சிட்டு இருக்கக்கூடிய சின்சியரான வேலைக்காரர் விஜய் ஆண்டனி.
மேட்ரிமோனில பாத்து ஒரு புள்ளையையும் கல்யாணம் பன்னிக்கிறாரு. கொஞ்ச நாள்ல “3” படத்துல
தனுஷுக்கு வர்ற ப்ரச்சனை மாதிரி விஜய் ஆண்டனிக்கும் மண்டைக்குள்ள யாரோ பேசுற மாதிரி
குரல் கேக்குது. அதுவும் பாருங்க காலகேயர்கள் பேசுற மாதிரி புரியாத பாஷையில கேக்குது.
இந்தாளு
“உஸுமலரசே யஸூமலரசே” ”மக்கயால மக்கயாலா காய காவுவா” ந்னு புரியாத வார்த்தையெல்லாம்
வச்சி ட்யூன் போடும்போதே நினைச்சேன். பின்னால
இப்புடியெல்லாம் மண்டைக்குள்ள நடக்கும்னு. இப்ப நடந்துருச்சி பாருங்க. கூடிய சீக்கிரம்
ஹாரிஸ் ஜெயராஜூக்கும் இதே வியாதி வரும்னு எதிர்பார்க்கலாம்.
அப்ப
விஜய் ஆண்டனிய ஒரு சைக்கார்டிஸ்டுக்கிட்ட அழைச்சிட்டு போறாங்க. சைக்கார்டிஸ்டுன்னாலேதான்
உடனே படுக்க வச்சி மூஞ்சில மாவு பெனைஞ்சி ”இப்ப நா உங்க ஆழ் மனசுக்கு போகப்போறேன்….
இப்ப உங்களுக்கு வயசு 15” ன்னு ஆரம்பிச்சிருவாய்ங்க. அதுவும் கொஞ்சம் கூட மாறாம அதே
வசனம். இப்பல்லாம் இந்த மாதிரி ஹிப்னடைஸ் பன்ற காட்சிகள பாக்கும்போது தலைநகரம் படத்துல
வடிவேலுவ மனோபாலா ஹிப்னாடைஸ் பன்றதுதான் பட்டுன்னு ஞாபகம் வருது. இப்ப உனக்கு பத்து
வயசு. என்ன பன்னிக்கிட்டு இருந்த? நானா… ஊர்ல
மாடு மேச்சிக்கிட்டு இருந்தேன்”
ஒருத்தன
கண்ண மூடச் சொல்லி “இப்ப இழுத்து மூச்சு விடுங்க… இப்ப அப்டியே உங்க கடந்த காலத்துக்கு
போகப்போறீங்க… ஈஸி… ஈஸி” ன்னு சொல்றத மட்டும்தான் ஆதிகாலத்துலருந்து இப்ப வரைக்கும்
தமிழ் படத்துல சைக்கார்டிஸ்ட் டாக்டருங்க சொல்லிக்கிட்டு இருக்காங்க. Insidious படத்துல
ஒரு கிழவி ஹீரோவ ஹிப்னாடைஸ் பன்னும் பாருங்க. ”கண்ண மூடு…. இப்ப நீ ஒரு தியேட்டர்ல
உக்கார்ந்துருக்க.. அந்தத் தியேட்டர்ல உன்னத்தவற யாருமே இல்ல. சுத்தி ஒரே இருட்டு…
இப்ப அந்த வெள்ளை ஸ்க்ரீன் மட்டும் தான் உன்னோட கண்ணுக்கு தெரியிது. அந்த ஸ்கீரினயே
உத்துப் பாரு….இன்னும் நல்லா பாரு” ன்னு சொல்லியே அவன் மைண்டுக்குள்ள போகும். அத
imagine பன்னா நமக்கே மைண்டு எங்கயோ போவும்.
ஒரு பத்து வருஷம் பின்னால போங்க.. இன்னும் பத்து வருஷம் பின்னால போங்க.. இன்னும் ஒரு பத்து வருஷம் பின்னால போங்க... அடேய் எனக்கு மொத்தமே 27 வயசுதாண்டா ஆகுது.
சென்னை 28 ல சொல்ற மாதிரி இதுக்கு மேல பின்னால போகனும்னா வெளில நின்னு கை தான் தட்டனும்.
நுங்கம்பாக்கம்
இண்டர்வியூக்கு போறதுக்கு டேக் டைவர்ஷன்ல ஆந்த்ராவுக்கு போற மாதிரி 27 வயசு விஜய் ஆண்டனி
மைண்டுக்குள்ள, பத்து பத்து வருஷமா பின்னால போயி இதுக்கு முந்துன ஜென்மத்தோட நினைவு
வர்ற அளவுக்கு மாவு பெனைஞ்சிடுறாங்க. அடப்பாவிகளா… கிணறு தோணுடுறேன் கிணறு தோண்டுறேன்னு
பூமியோட அடுத்த பகுதிக்கே வந்துட்டீங்களேடா….
போன
ஜென்மத்துல விஜய் ஆண்டனி ஒரு ஆக்ஷன் அன்லிமிட்டடா இருப்பாருன்னு தானே நினைக்கிறீங்க?
நெவர். ரொம்ப சாஃப்ட்டான தமிழ் வாத்தியாரு… சிலப்பல ஜலபுல ஜங்க்ஸ்களால கொலை செய்யப்படுறாரு.
அப்ப செத்ததுக்கு இப்ப பழி வாங்க சாஃப்ட்வேர் இஞ்ஜினியர் விஜய் ஆண்டனி உடம்புல வர்றாரு.
அதுலருந்து அம்பி, அண்ணியன் மாதிரி அப்பப்ப போன ஜென்ம கேரக்டராவும், அப்பப்ப ரியல்
கேரக்டராவும் இருக்காப்ள.
க்ளைமாக்ஸ்ல
ஒரு சீன்ல விஜய் ஆண்டனிய சங்கிலியால கட்டி வச்சிருக்கப்ப படக்குன்னு போன ஜென்ம கேரக்டரு
உள்ள வருது. “யானைப் பலமிது யாக்கையில் வர…” ந்ங்குற மாஸ் சாங்க போடுறாங்க. அடேய் இருங்கடா…
நல்லா பாருங்கடா வந்துருக்கது தமிழ் வாத்தியாருடா… அவரு ஃப்ளாஷ்பேக்குலயே யாரயும் அடிக்கல…
இப்ப எதுக்குடா அவருக்கு மாஸ் சாங்கு?
ஒரு
படத்த பொறுத்த அளவு அதுல இருக்க ஹீரோ எப்படிப்பட்டவர் அவரால அடிக்க முடியுமா இல்ல அடிக்க முடியாதா?
எத்தனை பேர அடிக்கிற கெப்பாசிட்டி இருக்கு போன்ற விஷயங்களையெல்லாம் முன்னாலயே காட்டிரனும்.
அட்லீஸ்ட் முதல் பாதிலயாவது காட்டனும். கடைசிவரைக்கும் எதுவுமே காட்டாம க்ளைமாக்ஸ்ல
பல பேர அடிக்கிறதெல்லாம் ஏற்றுக்கொள்ளும்படியே இருக்காது.
படத்தோட
டைட்டில் கார்டுல, “இந்தப் படத்தின் ஒரு பாதி சுஜாதாவோட நாவல தழுவியது” ன்னு போடுறாங்க.
தழுவுனதுதான் தழுவுனீங்க… முழுசா தழுவிருக்கலாம்ல. ஆரம்பத்துல போட்ட முடிச்சுகள அவுக்குறதுக்கு
பின்னால ரொம்ப கஷ்டப்பட்டு, தெளிவில்லாம எங்கெங்கயோ போய் முடிச்சிருக்காங்க.
பூர்வ
ஜென்ம கதைகள வச்சி மக்கள சுவாரஸ்யத்தோட உச்சத்துக்கே கொண்டு போக முடியும். ”நெஞ்சம்
மறப்பதில்லை” படத்தையெல்லாம் இப்ப பாத்தாலும் கொடூரமா இருக்கும். மஹாதீரா, யாவரும்
நலம் படங்களெல்லாம் இந்த பூர்வ ஜென்ம கதைக் களங்கள்லதான் மாபெரும் வெற்றியடைஞ்சிது.
அனேகன் படத்தோட ஒரு பகுதி கூட அப்டித்தான்.
பூர்வ
ஜென்ம ஞாபகம் அப்டிங்குறது ஒரு instinct ah காமிக்கப்படும்போது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்.
ஆனா அதுக்கே அறிவியல் சாயம் பூசி, அத செயற்கையா தூண்டுவது மாதிரி காண்பித்திருப்பது
கொஞ்சமும் ஒட்டவில்லை. சுஜாதாவின் ஒரிஜினல் கதை எப்படியோ தெரியல… ஆனால் இங்கு முடிவு மஹா சொதப்பல்.
படம்
முதல்ல ரொம்ப ஸ்லோவாதான் பிக் அப் ஆகுது. கிட்டத்தட்ட இண்டர்வலுக்கு முந்தைய பிந்தைய
கால் மணி நேரங்கள் நல்ல சுவாரஸ்யம். மற்றபடி ரொம்ப ஆவரேஜாதான் படம் நகருது. அநேகன்
படத்துல க்ளைமாக்ஸ்ல அது உண்மையா இல்ல imagination ah ன்னு ஒரு முடிவுக்கே வர முடியாத
மாதிரி ஒரு குழப்பு குழப்புவாய்ங்க. அதே குழப்பம் இங்கயும்.
விஜய்
ஆண்டனி வழக்கம்போல் அலட்டல், ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நடிப்பு. பாடல்கள் அவ்வளவு
சிறப்பா இல்லை. “யானைப் பலமிது” மட்டும் நல்லாருக்கு. மத்ததெல்லாம் ரொம்பக் கஷ்டம்.
ஹீரோயினா வர்ற புள்ள செம அழகா இருக்கு. குறிப்பா அதோட லிப்ஸ்டிக் கலர் சூப்பர். அந்த
புள்ளைக்கு டப்பிங் வாய்ஸூம் அருமை. அந்தக் குரல எங்கயோ கேட்ட ஞாபகம். அநேகமா சதுரங்க
வேட்டைல ஹீரோயினுக்கு வர்ற குரலா இருக்கலாம். படம் பாத்தவங்க அந்தக் குரல வேற எந்தப்
படத்துலயாவது கேட்டிருந்தா சொல்லுங்க.
மொத்தத்தில்
முந்தைய விஜய் ஆண்டனி படங்கள் அளவுக்கு இது நம்மள impress பன்னல. அதே சமயம் ரொம்ப அருவைன்னும்
சொல்ல முடியாது. வேற நல்ல படம் எதுவும் ரிலீஸ் ஆகாத காரணத்தால பாக்க முயற்சி பன்னலாம்.