
தனுஷோட
மாரி படம் ரிலீஸ் ஆகியிருந்த சமயம் “செஞ்சிருவேன்” வசனம் ரொம்ப ஃபேமஸா இருந்துச்சி.
அப்ப படம் பாத்த சில பேரு ”படத்துல நம்மள வச்சித்தான் செஞ்சிட்டாங்க” ன்னு ரைமிங்கா
ஆரம்பிச்சி வச்சானுங்க. அப்பலருந்து இந்த “செஞ்சிட்டானுங்க” குரூப் தொல்லை தாங்க முடியல.
எந்த படத்துக்கு போனாலும் “செஞ்சிட்டாங்க” “செஞ்சிட்டாங்க”ன்னு ஸ்டேட்டஸ் போட்டுக்கிட்டு இருக்காய்ங்க. நாயக் கூப்டு
“உன்ன என்ன நாயே செஞ்சாங்க கொஞ்சம் சொல்லு” ந்ன்னு கேட்டா சொல்லத் தெரியாது. ஏன் படம் நல்லா இல்லைன்னு
கேட்டாலும் தெரியாது. இப்ப வரைக்குமே மாரிய நல்லால்லன்னு சொல்றவனுங்கள்ள பாதி பேருக்கு
ஏன் நல்லால்லன்னு சொல்றானுங்கன்னு அவய்ங்களுக்கே தெரியாது. ”பேப்பர் ரோஸ்ட் சாப்டா
லிவருக்கு நல்லது” ”யாரு சொன்ன்னது?” ”எல்லாரும் சொல்றாங்க நானும் சொல்றேன்.” கதை தான்.
அதுவும்
இப்ப திரியிறது எல்லாமே அதிகப்பிரசங்கிகளாத்தான் திரியிதுங்க. எல்லாம் ஒலக சினிமா குரூப்பு.
இப்பதைக்கு இவனுங்க யோசிக்காம நல்லாருக்குன்னு சொல்றது “காக்கா முட்டை” மணிகண்டன் படங்களத்தான்.
அந்தாளும் இன்னொரு நாலஞ்சி படம் ஹிட்டாகி பெரியாளாயிட்டா அப்புறம் படம் வர்றதுக்கு
முன்னாலயே அவர் படங்களையும் ஃப்ளாப் ஆக்கி விட்டுருவானுங்க.
இன்னொரு
குரூப்பு “படம் நல்லாருக்கு”ன்னு ஸ்டேட்டஸ் போட்டோம்னா “உண்மையாவா சொல்றீங்க?” “அப்டியெல்லாம்
இருக்காதே” ம்பானுங்க. நாயே படம் பாத்துட்டு பேசிக்கிட்டு இருக்கேன். நீ குத்து மதிப்பா
கொஸ்டீன் கேட்டுக்கிருக்க. இதெல்லாம் ஏன் சொல்றேன்னா இந்தப் படத்துக்கும் இந்த ‘செஞ்சிட்டானுங்க”
குரூப் வேலைய காமிப்பானுங்க. அதுங்கள்ட “மொதல்ல நீ படம் பாத்தியா”ன்னு கேக்கனும்.
SPOILER
ALERT
இதுவரை
நமது பதிவுகள்ல Spoiler Alert கள் போட்டதில்லை. ஏன்னா படத்தின் கதை சுவாரஸ்மாக இருந்தாலோ,
இல்லை படத்தோட ட்விஸ்ட், முக்கியமான காட்சிகளப் பத்தி பதிவுகள்ல நா போடுறது இல்லை
(அப்டின்னு நானே நினைச்சிட்டு இருக்கேன்.) ஆனா போன தடவ ஒருத்தர் ஃபீல் பன்னிட்டாரு.
அதற்காக. சரி கொடியப் பறக்க விடுவோம்.
கொடி
படத்தின் ட்ரெயிலரப் பாத்துட்டு, பாடல்களைக் ஒரு தடவப் கேட்டாலே, எப்பவாச்சும் சினிமா
பாக்குற ஆளால கூட இந்தப் படத்தோட கதையை 90% கணித்து விட முடியும். தமிழ்சினிமாவோட பாரம்பரிய
Identical twins கதைய அரசியல் களத்துல சொல்லிருக்காங்க.
மீசை
வச்சா சந்திரன், மீசைய எடுத்தா இந்திரன் மாதிரி மீசை தாடி வச்சி மொரட்டுத் தனமா இருந்தா
அண்ணன் கொடி. நீட்டா ஷேவ் பன்னிக்கிட்டு ஃபுல் ஃபார்மல்ஸ்ல சாஃப்ட்டா இருந்தா தம்பி
அன்பு. இந்த ரெண்டு க்ளீஷே கேரக்டர்களை வச்சி என்ன மாதிரி வேணாலும் படம் எடுக்கலாம்.
பெரும்பாலும் நம்ம தமிழ் சினிமாவுல கையாளப்பட்டிருப்பது ஆள்மாராட்டக் கதை தான்.
எம்ஜியார்,
ரஜினி, கமல்னு உட்பட இந்த ஆள்மாராட்டக் கதைகளில் பெரும்பாலானவங்க நடிச்சிருக்காங்க.
கோழையாக இருந்தவர் இடத்தில் அதிரடி ஹீரோ உள்ள போய் முதல்ல ஆட்டம் போட்ட வில்லன்களையெல்லாம்
வெளுத்து வாங்குவார். அதப் பாக்க நமக்கும் ஹேப்பியா இருக்கும்.
இதான்
நம்ம பாரம்பரியம். பாரம்பரியத்தையும் விட்டுடாம, முழுசா அதே பழைய வடையையும் சுடாம,
ரொம்ப பெரிய மாற்றங்களும் செய்யாம பட்டும் படாம, இந்த ட்வின்ஸ் மேட்டர சிறப்பா டீல்
பன்னி ரசிக்கும்படியான ஒரு படத்தக் குடுத்துருக்காங்க.
ரெண்டு
தனுஷூக்குமே தனித்தனி காதல் கதை. கொஞ்சம் காமெடி. தனுஷ் அரசியல்ல இருக்கதுக்கு ஒரு
ஸ்ட்ராங்கான முன்கதைன்னு எல்லாமே நல்லா பன்னிருக்காங்க. தம்பியாக வர்ற தனுஷ் அப்படியே
“வேலையில்லா பட்டதாரியில “ அவருக்கு தம்பியா நடிச்சவர மாதிரியே பன்னிருக்காரு. நேர்
மாறா கொடி கேரக்டர்ல செம கெத்து. பிரிச்சிருக்காரு.
தீப்பொறி
ருத்ராவாக திரிசாக்கா. பதவிக்காக எதையும் செய்யத் துணியும் பெண் அரசியல்வாதியா நடிச்சிருக்காங்க.
அவங்க கேரக்டர ஆரம்பத்துலருந்தே கொஞ்சம் கொஞ்சமா வெளிச்சம் போட்டு காட்டுறதாலயே என்னவோ
“கொடி” தனுஷ்- ருத்ரா காதல் காட்சிகள்ல காதலை விட ஒரு cunningness தான் வெளிப்படையா தெரியிது.
ப்ரேமம்
அனுபமா கொஞ்ச சீன் தான் வர்றாங்கன்னாலும் அழகு. S.A.சந்திரசேகர், ராஜ்கபூர்,
template அம்மா சரண்யா, காளி வெங்கட்ன்னு நட்சத்திர பட்டாளங்கள் ஏராளம். எல்லாம் அவங்கவங்க
வேலைய கரெக்ட்டா செஞ்சிருக்காங்க. MLA கருணாஸ் கேரக்டரும், நடிப்பும் அருமை.
தனுஷோட
ஸ்க்ரீன் ப்ரசன்ஸ், ஸ்டைல், நடிப்பு அனைத்துமே சிறப்பு. ஸ்டண்ட்டும் நல்லா பன்னிருக்காங்க.
“கொடி பறக்குதா’ பாட்டு ஆரம்பிக்கிறப்போ தியேட்டர்ல விசில சத்தம் பொளந்துருச்சி. நா
மறுக்கா மறுக்கா சொல்றேன்… அதான். அதே தான். அடுத்து தனுஷ்தான். Mark my words.
பாடல்களும்
சிறப்பு. சித்ரா பாடுன பாட்ட ஆல்பத்தோட ரிலீஸ் பன்னாம இருந்துருந்தா ட்விஸ்ட்ட இன்னும்
கொஞ்சம் ட்விஸ்ட் மாதிரி ஃபீல் பன்னிருக்கலாம். இயக்குனர் துரை செந்தில்குமார் எதிர்
நீச்சலுக்கு பிறகு, இதுல அதவிட நல்ல இம்ப்ரூவ்மெண்ட். கொஞ்சம் கூட போர் அடிக்காத திரைக்கதை
அமைப்பு.
பல
வருஷங்களுக்கு முன்னால ரஜினியும் பாரதிராஜாவும் ஏத்துன கொடி அவ்வளவு சிறப்பா பறக்கல.
ஆன இப்ப தனுஷும் துரை.செந்தில்குமாரும் ஏத்திருக்க கொடி ரொம்ப நல்லாவே பறக்குது. வேலையில்லா
பட்டதாரிக்குப் பிறகு மிகப்பெரிய வெற்றிக்காக காத்திருக்கும் தனுஷுக்கான கரெக்ட்டான
படம். நல்ல எண்டர்டெய்னர். குடும்பத்தோட பாக்கலாம்.