வழக்கமான ஒரு
மர்டர் மிஸ்ட்ரி திரில்லர். ஆனால் கர்நாடகத்தையும் ஹிந்துஸ்தானியையும் கலந்து கர்நாடகஸ்தானி
என்ற ஒன்றை வெண்ணிற ஆடை மூர்த்தி உருவாக்குவதைப் போல, மர்டர் மிஸ்ட்ரியுடன் ஒரு சூப்பர்
நேச்சுரல் ஹாரரை கலந்து விட்டு அடித்து புது ஐட்டமாக ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஒரு ஏரியில்
கிடைக்கும் மண்டை ஒட்டுடன் ஆரம்பிக்கிறது திரைப்படம். தொடர்ந்து அந்த மண்டை ஓடு யாருடையது,
அந்த மண்டையை யார் மண்டை ஓடாக மாற்றியது என்பதைக் கண்டறியும் ஒரு சுவாரஸ்யமான இவெண்டிகேஷன்.
எந்த இடத்திலும் போரடிக்காமல் நல்ல விறுவிருப்பாகவே செல்கிறது.
சமீப காலங்களில்
வந்த இன்வெஸ்டிகேஷன் படங்களிலெல்லாம் சிசிடிவி ஃபுட்டேஜை எடுத்து வைத்துக்கொண்டு, இந்த
இடத்துல ஃப்ரீஸ் பன்னுங்க.. இப்ப ஸூம் போங்க.. வண்டி நம்பர நோட் பன்னுங்க என்றவாரே
ஓப்பியடித்துக் கொண்டிருப்பார்கள். அதுபோன்ற சிசிடிவி காட்சிகள் படத்தில் இல்லாதது
ஆறுதலளித்தது.
நிச்சயம் முறை
பார்க்கலாம்.