Tuesday, October 1, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்!!!


Share/Bookmark

ஒருத்தன் தன்னப்பத்தி தானே பெருமையா பேசிக்கிறத என்னிக்கு நிறுத்துறானோ அப்பதான் உருப்படுவான். வாயால கெட்டவிங்க பல பேரு. அதுல நம்மாளும் ஒருத்தரு. சித்திரம் பேசுதடி அஞ்சாதே படங்களுக்கு அப்புறம் அவரு குடுத்த ஒரு பேட்டிய பாத்துருக்கேன். சித்திரம் பேசுதடி படத்தோட வெற்றிக்கு அப்புறமும் எனக்கு ஒழுங்கா சாப்பிட கூட வழியில்லாம சுத்திகிட்டு இருந்தேன். அதனோட வெளிப்பாடுதான் "அஞ்சாதே"யில் ஒரே ரத்தக்களரியா வந்திருந்ததுன்னு சொல்லிருந்தாரு. அதே மிஷ்கின் போன வருஷன் யுத்தம் செய் படத்துக்கு அப்புறம் பேசிய ஒரு வீடியோவயும் பாத்துருக்கேன். அதாவது இந்திய படங்களையே பார்த்திராதவர் போலவும் குரோசோவா படங்கள மட்டுமே அய்யா பார்த்து வளர்ந்தது போலவும் ஒரு அதிகபிரசங்கி தனத்துக்கும் அதிகமான ஒரு அலட்டல் அவரோட பேச்சுல இருந்துச்சி. 

அதுக்கும் மேல முகமூடி படத்துக்கு முன்னால பேட்மேன் படத்தை இப்படி கூட எடுக்கலாம்னு நா காட்டியிருக்கேன்னு சொல்லிருந்தாரு. படம் பாத்தப்புறந்தான் தெரிஞ்சிது இவ்ளோ கேவலாமா கூட எடுக்கலாமோன்னு. அப்படி இருந்தும் இந்த படத்துக்கு போக ஒரு முக்கியமான காரணம் "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" ங்கற attractive டைட்டில் தான். (எல்லாரும் சூப்பரா இருக்குன்னு சொன்ன மூடர் கூடம் படத்துக்கு இப்போ வரைக்கும் நா போகாம இருக்கதுக்கு காரணமும் அதோட டைட்டில் தான்)  முகமூடி படத்தோட ரிசல்ட்டு தான் அவருக்கு அடுத்து நல்ல படம் எடுக்க காரணமா இருந்துச்சின்னு கூட சொல்லலாம். நந்தலாலாவோட தொலைஞ்சி போன மிஷ்கின் இந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியின் மூலமா மறுபடியும் திரும்ப கிடைச்சிருக்காரு.

சில படங்கள்ல படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரம் கழிச்ச பின்னால தான் நாம ஓரளவு கதையோடவும் கதைக் களத்தோடவும் ஒண்ற முடியும். ஆனா இந்த படத்துல முதல் காட்சியிலிருந்தே நம்மள கதைக்குள்ள இழுத்துடுறாரு. அஞ்சாதே, யுத்தம் செய் டைப்பிலான காட்சிப் பதிவுகளா இருந்தாலும் அங்கங்கே நச்சுன்னு சில காட்சிகள வச்சி அங்க இங்க நம்மள நகர விடாம பண்ணிடுறாரு. நம்ம தமிழ் சினிமால பொதுவா ஒரு அடிபட்டவர ஹாஸ்பிட்டல் கொண்டு போனா மொத ஷாட்ல ஹாஸ்பிட்டல வெளியிலருந்து காமிப்பாங்க. அடுத்த ஷாட்ல ஸ்டெச்சர்ல வச்சி தள்ளிக்கிடே பின்னாடி ஓடுவாங்க... அடுத்த ஷாட்ல .சி.யூ க்குள்ள போனோன ஒரு நர்ஸ் வந்து "இதுக்கு மேல நீங்க வரக்கூடாது" ன்னு சொல்லிட்டு அதுவும் உள்ள போயிடும். ஆனா ரோட்டுல அடிபட்டு கிடக்குற  ஒருத்தர ஒரு மெடிக்கல் காலேஜ் பையன் ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு வர்றதுலருந்து ஆரம்பிச்சி  அவர ஒவ்வொரு இடமா தூக்கிட்டு ஓடுற முதல் காட்சியே நமக்குள்ள எதோ பண்ண ஆரம்பிச்சிடுது.

பதினாலு கொலைகளுக்கு மேல பண்ண ஒரு மிகப்பெரிய கரிமினல் wolf (மிஷ்கின்) தப்பிச்சிட, அவர உயிரோடவோ இல்லை பிணமாகவோ பிடிச்சே தீரனும்னு போலீஸும் CBCID யும் ஒரு ரவுடி கும்பலும் வெறியோட அலையிறாங்க. சிபிஐ wolf ah  சுட்டுட, படுகாயத்தோட தப்பிக்கிர wolf க்கு யாருக்கும் தெரியாம ஆப்ரேஷன் பண்ணி அவர காப்பாத்துறாரு வழக்கு எண் ஸ்ரீ. அந்த ஆப்ரேஷன் முடிஞ்சி 8 நாள் எழுந்து நடக்கவே முடியாதுங்கற நெலமை இருந்தாலும்  போலீஸ் கெடுபிடியையும் மீறி wolf 6 நாள்லயே வெளியில வந்து சில காரியங்கள் பண்றாரு.  பல முறை wolf ah பிடிக்க முயற்சி பண்ணி தோற்ற போலீஸ் இந்த முறை வித்யாசமான ஒரு ப்ளான் பண்ணி அவர பிடிக்க பாக்குறாங்க. Wolf யாரு? இவ்வளவு அவசரமா காயம் ஆறுவதற்கு முன்னலயே அவரு ஏன் வெளிய வந்தாரு? அவர எதுக்கு இந்த காரியங்களை செய்றாரு? அவர ஏன்  அவர எல்லாரும் தேடுறாங்க?ங்குறத எல்லாம் பாடல்களே இல்லாத இரண்டரை மணி நேர படத்துல கடைசி வரைக்கும் த்ரில்லிங்கா  கொண்டு சென்று சொல்லியிருக்கது தான் இந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.

படத்தோட முதுகெலும்பே wolf ங்கற க்ரிமினலா வர்ற மிஷ்கினோட கேரக்டர் தான். முதல் இருபது நிமிஷத்துக்கு பிறகே இந்த கேரக்டர் நடமாட ஆரம்பிச்சாலும் அதுக்கப்புறம் படம் முழுவதும் நிறைஞ்சிருக்கது அந்த ஒரே கேரக்டர் தான். வெறித்தனம், கெத்து, இரக்கம், சோகம்னு ஒரே கேரக்டர்ல பல வேரியேஷன். பட்டைய கெளப்பிருக்காரு.வழக்கமா ஒரு ஹீரோ ஒரு வித்யாசமான கேரக்டரா இருந்தா, அவரு ஏன் அப்டி ஆனாருன்னு ஒரு கப்பியான ஃப்ளாஷ்பேக்க போட்டு சாவடிச்சிருவாய்ங்க. ஆனா ஃப்ளாஷ்பேக் காட்சிகள வைக்கக் கூடிய தேவை இருந்தாலும், சொல்ல வேண்டிய விஷயத்தை ஒரு ஓநாய் ஆட்டுக்குட்டி கதையை வச்சி சொல்லி முடிக்கிறது செம. அதுவும் அந்த கதை சொல்லும் போது ஒரே ஷாட்ல ஒரு 3 நிமிஷத்துகிட்ட தொடர்ந்து பேசிருக்காரு.

படம் முடியிற வரைக்குமே ஒரு விதமான சஸ்பென்ஸோடவே நகர்த்திகிட்டு போயிருக்கது சூப்பர். பல காட்சிகள் யுத்தம் செய் படத்தையும் அஞ்சாதே படத்தையுமே ஞாபகப்படுத்துது. முக்கால் வாசி காட்சிங்க மிஷ்மினின் ஃபேவரேட் லொக்கேஷன்களான ஆளில்லாத ரோட்டுல சோடியம் லைட்டு வெளிச்சத்துலயே படமாக்கப்பட்டிருக்கு. பாடல்கள் எதுவும் இல்லை. ஆனா படம் 2.30 மணி நேரம் ஓடுது. எந்த ப்ரேக்குமே இல்லாம இண்டர்வல் வரைக்கும் பாத்ததே எதோ ஒரு ஃபுல் படம் பாத்த எஃபெக்டு இருந்துச்சி.
படத்துக்கு இன்னொரு பெரிய ப்ளஸ் இசையராஜா. இந்த காலகட்டங்கள்ல வெளிவர்ற படங்களுக்கு இளையராஜாவோட BGM செட் ஆகாதுன்னுதான் நா இதுவரைக்கும் நெனைச்சிட்டு இருந்தேன். ஆனா அந்த நெனைப்ப சல்லி சல்லியா நொறுக்கிட்டாரு இந்த படத்துல. புதுசா ஒருத்தன்கிட்ட இந்த படத்த பாக்க சொல்லி BGM யாருன்னு சொல்ல சொல்லி கேட்டா கண்டிப்பா ரஹ்மான்னு தான் சொல்லுவான். அந்த அளவு ப்ரம்மாண்டமா ஹாலிவுட் ரேஞ்ல இருக்கு. படத்துல வசனங்கள் பேசுறத விட இசையே நிறைய இடங்கள்ல பேசுது. 

கதை நடக்குறது சென்னையில தான். நள்ளிரவு காட்சிகளே அதிகம்னாலும் சென்னைக்கு இரவு பகல் வித்யாசம் எதுமே இல்லை. எந்த நேரத்துலயும் எல்லா இடங்களயும் எவனாது திரிஞ்சிட்டு  தான் இருப்பான். ஆனா படத்துல வர்ற அத்தனை காட்சிகள்லயும் சென்னை சாலைகள் தீவாளிக்கு லீவு விட்ட பள்ளிக்கூடம் மாதிரி  ஆள் அரவமே இல்லாம தொடைச்சி வச்ச மாதிரி இருக்கு. முழு சென்னையிலயும் சுத்துறது ஒண்ணு போலீஸ் இல்லை அந்த ரவுடி கும்பலோட ஆளுங்க. வேற  யாருமே இருக்க மாதிரி காமிக்கல. அதுவும் அத்தனை பேர் கையிலயும் துப்பாக்கி. கிடைக்கிற அத்தனை பேரயும் சுட்டு சுட்டு விளையாடுறாங்க. மொத்த படத்துலயும் சேத்து பாத்தா செத்தவிங்க கணக்கு ஒரு நூற தாண்டும். அப்புறம்  CBCID ah வர்ற லால்ங்கற கேரக்டர் செம காமெடி. எப்பவுமே உக்காருற எடத்துல கட்டி வந்த மாதிரி ஒரு நடை நடந்துகிட்டு இருக்க அவர பாத்தா பாணி பூரி விக்கிறவரு மாதிரியே இருக்கு. ஆனா இதயெலாம்  படத்துக்கு ஒரு மைனஸா சொல்லவே முடியாது.

அடிபட்ட wolf ah மெடிக்கல் காலேஜ் பையனான ஸ்ரீ தூக்கிடு அலையும் போது ரோடு ஓரமா இருக்க மன நலம் பாதிக்கப்பட்ட ஒருத்தர்  ஸ்ரீய பாத்து "நீ டாக்டர் நீ டாக்டர் நீ டாக்டர்" ன்னு சொல்ற காட்சி சூப்பர். துப்பாக்கிய வச்சிகிட்டு எல்லரயும் மிரட்டும் போதும் சரி, ஆப்ரேஷன் பண்ண இடத்துல ஸ்ரீ எட்டி எட்டி மிதிக்கும் போது துடிக்கிற காட்சியிலும் சரி, தன்ன சுட வந்த புல்லட்ட வாங்கிட்டு கீழ விழுந்த திருநங்கையோட முகத்த பாக்க முடியாம தலை குணியும் போதும் சரி, ஓநாய் ஆட்டுக்குட்டி கதைய ஒரே ஷாட்ல சொல்லி அத்தனை பேரயும் அழவைக்கும் போதும் சரி.. மிஷ்கின் பட்டைய கெளப்பிருக்காரு.
இந்த தடவை மிஷ்கின் பண்ண ஒரே தப்பு தப்பான டைமுல படத்த ரிலீஸ் பண்ணது தான். படத்தோட ட்ரெயிலர பாத்துட்டே சமூக வலைத்தளங்கள்ல மக்களால ஹிட்டாக அறிவிக்கப்பட்ட ராஜா ராணியோட ரிலீஸ் பண்ணது மொத தப்பு. இந்த படம் ரிலீஸான  5 நாள்லயே இளைஞர்களின் நாயகன் விஜய் சேதுபதியோட இன்னொரு படமும் (இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா) ரிலீஸ் ஆக போகுதுங்கறது இன்னொரு தப்பு.

அஞ்சாதே படத்துல அப்பப்போ ஒரு பாட்டு வந்து ஒரு சின்ன கேப் குடுக்கும். ஆனா இந்த படத்துல பாடல்கள் இல்லாததால நகர்றதுக்கு கூட வாய்ப்பு குடுக்காம உக்கார வச்சிருக்காரு.  என்ன பொறுத்த வரை மிஷ்கின் எடுத்த எல்லா படத்துலயும் பெஸ்டு இது தான். கண்டிப்பா பாக்க வேண்டிய படம். இத இப்டியே மெயிண்டெய்ண் பண்ணாருன்னா பரவால. இல்லை திரும்ப வேதாளம் முருங்க மரம் ஏறிடுதோ என்னவோ.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

13 comments:

rocking Raj said...

naa kandipaa oru visiyam soli aganum rahumanuku sariya bgm poda theriyadu itha avare sonadu AND BGM KAGA NATIONAL AWARD VANGANA ORE MUSIC DIRECTOR RAJASIR ONLY.

Anonymous said...

thanks brother....BGM nice

Unknown said...

நேற்று தான் நானும் இந்த படம் பார்த்தேன் செம்ம

யோக்கியன் said...

படத்தின் முழுகதையும் இங்கு வெளி படுத்தி இருக்க வேண்டாமே

யோக்கியன் said...

முழுகதையும் இங்கு வெளிபடுத்தி இருக்க வேண்டாம்.
எல்லா படத்தையும் குறை சொல்லும் நீங்களே சொல்லும் போது பார்க்காமல் இருப்போமா !

KaviIni Imaya said...

Boss Itharku Thane Aasai pattai Balakumara ku thayavu senju poidathinga. Sema Mokkai.

Anonymous said...

புதுசா ஒருத்தன்கிட்ட இந்த படத்த பாக்க சொல்லி BGM யாருன்னு சொல்ல சொல்லி கேட்டா கண்டிப்பா ரஹ்மான்னு தான் சொல்லுவான் //

இந்த மாதிரி புதுசா பார்கிறவன் சொல்ல மாட்டான். அவன் தான் எந்த படமும் பார்த்திருக்க மாட்டனே. ரகுமானை மட்டும் தெரிந்திருக்கவா போகிறது. சுட்டு போட்டாலும் ரகுமானுக்கு பின்னணி இசை அறிவு கிடையாது. இது உலக உண்மை.

Anonymous said...

புதுசா ஒருத்தன்கிட்ட இந்த படத்த பாக்க சொல்லி BGM யாருன்னு சொல்ல சொல்லி கேட்டா கண்டிப்பா ரஹ்மான்னு தான் சொல்லுவான் //

இந்த மாதிரி புதுசா பார்கிறவன் சொல்ல மாட்டான். அவன் தான் எந்த படமும் பார்த்திருக்க மாட்டனே. ரகுமானை மட்டும் தெரிந்திருக்கவா போகிறது. சுட்டு போட்டாலும் ரகுமானுக்கு பின்னணி இசை அறிவு கிடையாது. இது உலக உண்மை.

Anonymous said...

Miskin is not wolf. He is lamb along with Sree. The wolf is the legless villain

முத்துசிவா said...

@Anonymous
//இந்த மாதிரி புதுசா பார்கிறவன் சொல்ல மாட்டான். அவன் தான் எந்த படமும் பார்த்திருக்க மாட்டனே. ரகுமானை மட்டும் தெரிந்திருக்கவா போகிறது.//

நா சொன்ன புதுசாங்குறது அர்த்தம் இந்த படத்துக்கு யாரு music னு தெரியாதவங்க பாத்தா ரஹ்மான்னு சொல்லுவாங்கன்னு தான் சொல்லிருந்தேன்
//சுட்டு போட்டாலும் ரகுமானுக்கு பின்னணி இசை அறிவு கிடையாது. இது உலக உண்மை//

பாஸூ இதெல்லாம் உங்களுக்கே அடுக்குமா? உலக உண்மையா? ஆமா நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க?

முத்துசிவா said...

இளைய ராஜா நல்லா BGM போடுவாருன்னு சொல்லுங்க ஓக்கே... ஆனா ரஹ்மானுக்கு BGM eh தெரியாதுன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்... அப்போ நீங்க ரஹ்மான் மியூசிக் போட்ட எந்த படத்தையுமே பாத்ததில்ல போல

Raj said...

Rahman podarathu allam BGM. Etho satham seyyarar, athuvum computeril / nettil irunthu copy , past seithu.

Anonymous said...

Keeр оn worƙing, great job!

Here is my site - derm exclusive as seen on tv

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...