Tuesday, December 30, 2014

சிறந்த பொழுதுபோக்கு படங்கள் – 2014


Share/Bookmark
10. பன்னையாரும் பத்மினியும்


பெரிய ஆரவாரமோ அலட்டலோ இல்லாத ஒரு அழகான படம். சின்ன வயசுல கார்கள் ஊருக்குள்ள வரும் போது எனக்கெல்லாம் அப்டித்தான் இருக்கும். அது பின்னாலயே போறது. எப்படா அந்த ட்ரைவர் அண்ணேன் நம்மள ஏத்துவார்னு காத்துகிட்டு இருந்த டைமெல்லாம் உண்டு. (இப்ப மட்டும் என்ன BMW கம்பெனி ஓனராவா ஆயிட்டன்னு நீங்க கேக்குறது புரியிது) அட்டக்கத்தி தினேஷ் பத்மினியோட கதைய சொல்லி முடிச்சிட்டு, கார் வந்ததும் தன்னோட சொந்த கார கூட விட்டுட்டு பத்மினில ஆசையா ஓடிப்போய் ஏறி உக்காந்து போறது செம ஃபினிஷிங்.

9. தெகிடி :


ஒரு ராஜேஷ்குமார் நாவலை படமா பாத்த உணர்வு. குறைந்த  பட்ஜெட்ல எடுக்கப்பட்ட சில நல்ல படங்கள்ல இதுவும் ஒண்ணு. சில விஷயங்களை கணிக்க முடிஞ்சாலும், கடைசி வரை சுவாரஸ்யமா கொண்டு போனது சூப்பர்.


சுந்தர்.சியோட ஃபார்முலாவுல ஒரு பேய் படம். ஆனா வழக்கமான அரைச்ச மாவையே இரண்டாவது பாதில அரைக்காம கொஞ்சம் புதுசா எதாவது செஞ்சிருந்தா இந்த வருஷத்தோட மிகப்பெரிய ஹிட்டா இந்தப் படம் அமைஞ்சிருக்கும்

7. மெட்ராஸ்

ரொம்ப நாளுக்கு அப்புறம் கார்த்திக்கு ஒரு ஹிட். தமிழ் சினிமாவுல இப்ப இருக்க ஒரு சில நல்ல நடிகர்கள்ல கார்த்தியும் ஒருத்தர். அவர ஒழுங்கா யூஸ் பண்ண படம்னு இத சொல்லலாம்.

6. யாமிருக்க பயமே

பெரிய பெரிய நடிகர் பட்டாளங்கள்லாம் இல்லாம, காமெடிய மட்டும் நம்பி வெளிவந்து ஜெயிச்ச ஒரு சூப்பர் படம். 


முழுக்க முழுக்க ராஜ்கிரனை மட்டுமே நம்பி உருவாக்கப்பட்ட படம். கிராமத்து அப்பாவி தாத்தாவா காமெடியும் சரி, செண்டிமெண்டும் சரி பூந்து விளையாடிருப்பாரு.

4. சதுரங்க வேட்டை

Brilliant ஆன திரைக்கதையில, இன்னிக்கு நம்மூர்ல நடக்குற ஏமாத்து வேலைகளையெல்லாம் ரொம்ப சுவாரஸ்மா சொன்ன படம். நட்ராஜுக்குள்ளயும் இப்படி ஒரு சூப்பர் நடிகர் இருக்காருன்னு உணர்திய படம். கடைசில அவர் கோபுர கலசத்தப் பத்தி மூச்சி விடாம சொல்ற விஷயங்கள்ள படத்துல அத கேக்குறவருக்கு மட்டும் இல்லை. நமக்குமே புல்லரிக்கும்.

3.ஜிகர்தண்டா


இந்த வருஷத்துல வந்த படங்கள்லயே சிறந்த திரைக்கதையுடைய படம்னு இத சொல்லலாம். ஒவ்வொரு சீன்லயும் ஒவ்வொரு கேரக்டர்லயும் அவ்வளவு தெளிவு. முதல் பாதில நமக்கு உறுத்தலா படுற சில விஷயங்கள் கூட ரெண்டாவது பாதில பாக்கும் போது சரிதான்னு தோணிரும். என்ன இந்த சித்தார்த் முகத்த தான் கொஞ்சம் சகிச்சிகிட்டு பாக்க வேண்டியிருந்துச்சி.


நா ஏற்கனவே ஒரு பதிவுல சொன்ன மாதிரி அஜித்த வச்சி ரொம்ப சூப்பரா எடுக்கனும்னு அவசியம் இல்லை. அறுக்காம எடுத்தால படம் நல்லாருக்கும். அதே மாதிரி தான் இந்தப் படமும். ரொம்ப வித்யாசமான முயற்சிக்கெல்லாம் போகாம அஜித்த வச்சி, எஃபெக்டிவ்வா ஒரு படம். கொஞ்சம் கூட போர் அடிக்காத மசாலா படம்.



சென்ற வருஷத்தோட தொடர் தோல்விகளுக்கு பிறகு, தனுஷோட செம கம் பேக் படம். தனுஷோட 25 படங்கள்ல்லயும் பெஸ்டுன்னு கூட சொல்லலாம். மக்கள் ஒரு ஹீரோவ எந்த அளவுக்கு ரியல் லைஃப் கேரக்டரோட தொடர்பு படுத்திக்கிறாங்களோ அந்த அளவு அவர எல்லாருக்கும் பிடிக்க ஆரம்பிக்கும். அப்படி பாக்கும் போது தனுஷ் அந்த பாதையில முன்னேறி போயிட்டு இருக்காரு. ஒரு கொக்கி குமாரோ, கே.பி.கருப்போ இல்லை ரகுவரனோ வானத்துலருந்து குதிச்ச template ஹீரோக்களா இல்லாம இயல்பா இருக்கது தான் அதோட வெற்றிக்கு காரணமே.

 (கோலி சோடாவ காணும்னு சில பேர் வெறியாயிருப்பீங்களே. இன்னும் கோலி சோட பார்க்காத என்னை மன்னிச்சிருங்க யுவர் ஹானர்)

மனம்


அப்புறம் இந்த வருசத்துல பாத்த ”மனம்” ங்குற தெலுங்கு படத்த பத்தி சொல்லியே ஆகனும். குடும்ப படம்னு கேள்விப்பட்டுருக்கோம்ல அது இதுதான். நாகர்ஜூனாவோட மொத்த குடும்பமும் நடிச்ச படம். நாகர்ஜூனாவோட அப்பா நாகேஷ்வரராவோட கடைசி படமும் இதுவே. இந்த வருஷம் ரிலீஸ் ஆன தெலுங்கு படங்கள்லயே பெஸ்டு இதுது தான். பார்க்காதவங்க நிச்சயம் பாருங்க. கதைய தெரிஞ்சிக்காம பாத்தீங்கன்னா, நிச்சயம் அந்த படத்தோட தீமே உங்களுக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும். இந்த feel good படம்ன்னு சொல்லுவாங்களே.. இந்த படத்த பாத்தா அத நீங்க ஃபீல் பண்ணுவீங்க. ஒரே ஒரு கஷ்டம் என்னன்னா நாகர்ஜூனாவோட மொத பையன், தொரந்த வாயன் நாக சைதன்யா மூஞ்ச தொடர்ந்து பாக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அத மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. 


Monday, December 29, 2014

வித்தையை இறக்கிய படங்கள் -2014


Share/Bookmark
கவுண்டர் வெளியூருக்கு பொய்ட்டு சைக்கிள்ல ஊருக்கு திரும்ப வந்துகிட்டு இருக்காரு. தூரத்துலருந்து பாக்கும் போது அவரோட அழகுராஜா சைக்கிள் கடையில ஒரே கூட்டமா இருக்கு. ஃபுல்லா கிழவிங்க கூட்டம்.

கவுண்டர் : அய்யோ.. தென்னதிது.. நம்ம கடையில இவ்வளவு கூட்டம். அதுவும் ஒரே பல்லு போன கிழவிங்க கூட்டமா இருக்கு. சாகப்போற வயசுல இவளுக சைக்கிள் ஓட்டி என்ன பண்ண போறாளுக

கடைக்கு பக்கத்துல போகப் போக அந்த கிழவிங்க எதோ வித்யாசமா பண்ற மாதிரி தெரியிது. என்னன்னு பக்கத்துல ஒளிஞ்சி நின்னு பாக்குறாரு.

எல்லாரும் ஒரு 30 செகண்டு சத்தம் போட்டு சிரிக்கிறாங்க. அப்புறம் ஒரு 30 செக்ண்டு “ஹ்ம்ம்ம்ம்ம்… ஹ்ம்ம்ம்ம்ம்… ஹ்ம்ம்ம்” ன்னு அழுவுறாங்க.

கவுண்டர் : அய்யோ என்னாச்சி இவளுங்களுக்கு. ஏன் அழுவுறாளுங்க அப்புறம் சிரிக்கிறாளுங்க. ஒரு வேளை நம்ம அழகேசன் மண்டைய எதுவும் போட்டுட்டானா…அவன் மண்டைய போட்டா யாரும் அழ மாட்டாங்களே.. 
சரி கிட்டக்க போய் பாப்போம்” ன்னு பக்கத்துல போறாரு.
பக்கத்துல போனதும் தான் தெரியிது “செந்தில் எல்லாருக்கும் நடுவுல உக்காந்துகிட்டு .. “சிரிங்க.. சிரிங்க சிரிங்க” ந்க்குறாரு. அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி “ஹாம் போதும் போதும்.. அழுங்க.. அழுங்க” ன்னு மாத்தி மாத்தி சொல்லிட்டு இருக்காரு. கிழவிங்களும் அதே மாதிரி பண்ணுது.

கவுண்டர் வேக வேகமா கூட்டத்துக்குள்ள பூந்து

கவுண்டர்: டேய் மண்டையா… இந்தப் பல்லு போன கிழவிங்களயெல்லாம் கூப்டு வச்சி என்னடா பண்ணிட்டு இருக்க.

செந்தில் : அண்ணே இவங்களுக்கெல்லாம் நியூ இயர கொண்டாட புது மாதிரியா சொல்லி குடுத்துகிட்டு இருக்கேண்ணே

கவுண்டர் : என்னது புது மாதிரியான கொண்டாட்டமா? எங்க இன்னொருக்கா சொல்லு

செந்தில் : இப்போ 2014 முடிய போகுதா..

கவுண்டர்: ஆமா

செந்தில் : ”அதுக்காக எல்லாரும் கொஞ்ச நேரம் அழுவனும்ணே.. எல்லாம் அழுங்க “ கிழவிங்க எல்லாரும் அழுறாங்க

செந்தில் : இப்போ 2015 ஆரம்பிக்க போகுதா… அதுக்காக கொஞ்ச நேரம் சிரிக்கனும்னே.. எல்லா சிரிங்க சிரிங்க ந்ன்னு சொன்னதும் எல்லாரும் சிரிக்கிறாங்க

கவுண்டர் : ஓ.. இத்தானா அந்த புதுவிதமான கொண்டாட்டம்… கொஞ்சம் இப்புடி பக்கத்துல வாம்மா.. ன்னு செந்தில் கழுத்த புடிச்சி “ஏண்டா பொங்கப்பாணை மண்டையா.. அந்த மூஞ்சிகள பார்றா.. இதுங்கல்லாம் இன்னும் எத்தனை நாள் தாக்கு புடிக்கும்னு தெரியல. அதுங்கள கூப்டு வந்து உனக்கு புதுவிதமான கொண்டாட்டம் கேக்குது. இதுங்கல்லாம் இப்ப நியூ இயர் கொண்டாடலன்னு யார் அழுதது.

டக்குன்னு பக்கத்துல இருக்க ஒரு கிழவிய இழுத்து “மத்ததுங்களாவது பரவால்ல.. நாள் கணக்கு.. இது மூஞ்சப்பாரு. இதுக்கெல்லாம் மணிக்கணக்கு தான். இன்னும் எத்தனை மணி நேரம் இதெல்லாம் தாக்கு புடிக்கும்னு தெரியல. நீ கொண்டாடுறதுல யாராவது பட்டுன்னு மண்டைய போட்டுட்டா நாயே நா யாருக்கு பதில் சொல்றது?

செந்தில் : ஐ ஆம் வெரி சொரிண்ணே..

கவுண்டர் : ஏன் குப்பாயிக்கா… இவந்தான் கொழந்தைப் பையன் கூப்டான்னா நீங்களும் கிளம்பி வந்துடுறதா..

குப்பாயிக்கா : பப்ளூ எதோ பார்ட்டின்னு சொல்லி எங்கள கூப்டான்… அதான் வந்தோம்..

கவுண்டர் : ஆமா.. இது தாஜ் ஹோட்டால்.. இவரு பாலிவுட் நடிகரு…இவரு பார்டி குடுக்குறாருன்னு ஹீரோயின் நீங்கல்லாம் கிளம்பி வந்துட்டீங்க… போங்கடீ…புருசனுக்கு வீட்டுல பழைய கஞ்சிய ஊத்தமாட்டாளுக.. இதுங்களுக்கு பார்ட்டி ஒரு கேடு..

 செந்தில் : அண்ணேன்.. அதெல்லாம் விடுங்கன்னே.. நீங்க வழக்கமா சொல்லுவீங்களே.. இந்த மைண்ட் புளோயிங் படங்களப்பத்தி.. கொஞ்சம் சொல்ல முடியுமா?

கவுண்டர்: டேய்.. டிசம்பர் மாசம் வந்தா போதும் அவன் அவன் லிஸ்டு போடுறேன்னு கெளம்பி வந்துடுறானுக. எனக்கு பிடித்த படங்கள் எங்க ஆயாவுக்கு பிடித்த படங்கள்னு அவனுங்க தொல்லை தாங்கல. இதுல நம்ம வேற இதெல்லாம் பண்ணனுமா.

செந்தில் : அண்ணேன் அடுத்தவங்க சாப்புடுறாங்கன்னு நாம சாப்பிடாம இருக்கோமா. அடுத்தவங்க தூங்குறாங்கன்னு நாம தூங்காம இருக்கோமா.. அது மாதிரிதாண்ணே இதுவும்.

கவுண்டர் : என்ன கருத்தா? மூஞ்ச இப்டி பக்கத்துல கொண்டுவா.. துப்பூபூ.. சரி .டேய் பினாயில் டப்பா மண்டய… வருசா வருசம் நா பாக்குற படத்துல முக்காவாசி படம் மொண்ணையாவும் ஒரு கால்வாசி படம் மட்டும் தான் நல்லாவும் இருக்கும். ஆனா இந்த வருசம் வெளியூர்களுக்கு போய் தங்கி பஞ்சர் ஒட்டுணதால நிறைய மொன்னை படங்கள பாக்க முடியல.

செந்தில் : அய்யோ.. அப்ப எனக்கு டைம் பாஸூ?

கவுண்டர் : அடிங்க செத்த எலி மண்டையா.. ஒரு நல்ல விஷயம் சொன்னா உனக்கு டைம் பாஸ் போச்சின்னு வருத்தமா படுற.. சரி எதோ ஆசைப்பட்டுட்ட.. வழக்கமா சொல்லிவேற வச்சாச்சி.. வா அப்புடி நடந்துகிட்டே பேசுவோம்.



கவுண்டர் : இந்த வருசத்த மொத மொத இந்த ராசியான தம்பி தான் ஆரம்பிச்சி வச்சாரு. பாரு இந்த வருசம் அவருக்கு நல்லா இல்லைன்னாலும் மத்த படங்களுக்கு நல்லா இருந்துருக்கு.

செந்தில் : ஆமா எதுக்குண்ணே இந்த படத்துக்கு ஜில்லான்னு பேருவச்சாங்க?

கவுண்டர் : (ஹை பிட்ச்ல) ஏண்டா நாயே.. கருப்பு காண்டாமிருகம் மாதிரி இருக்க உனக்கெல்லாம் யாரு அழகேசன்னு பேருவச்சா? இதெல்லாம் யாராவது கேட்டாங்களா? பொத்துனாப்ள பாத்துட்டு போ நாயே




கவுண்டர் : தமிழ்ல நம்ம ஜில்லா படத்துக்கு போட்டியா ஹாலிவுட்ல எடுத்து ரிலீஸ் பண்ண படம் தாண்டா இந்த காட்ஸில்லா

செந்தில் : அதுசரிண்ணே நீங்க டைனோசர நேர்ல பாத்துருக்கீங்களா?

கவுண்டர் : இல்லைடா தவக்களை வாயா. நீ பாத்துருக்கியா?

செந்தில் : எண்ணன்னே இப்டி கேட்டுட்டீங்க.. நா சின்ன வயசா இருக்கும் போது எங்க தாத்தா வீட்டுல டைனோசர் தான் வளத்தாரு.. நானும் டைனோசரும் ஒண்ணா தானே விளையாடுவோம்

கவுண்டர் : (ஆச்சர்யமாக) அய்யோடா.. இப்ப அந்த டைனோசர்  எங்கடா அழகேசா?

செந்தில் : (சோகமாக) திடீர்னு ஒரு நாள் அந்த டைனோசருக்கு பன்றி காய்ச்சல் வந்து செத்து போச்சிண்ணே..

கவுண்டர் : தம்பி… ஒரு மனுசன் புளுகலாம்.. ஆனா டைனோசர் சைஸுக்கெல்லாம் புழுகக்கூடாது.. மூடிக்கிட்டு வா..
(செந்தில் திருதிருவென முழுக்கிறார்)



கவுண்டர் : வாழ்க்கையில ஒரே ஒரு விஷயம் தப்பா பண்ணிட்டு ஏண்டா அத பண்ணோம்னு ஒருத்தன் நெனைச்சி நெனைச்சி அழுக வச்சது இந்தப்படம் தாண்டா..

செந்தில் : ஹிஹி.. கரெக்டா சொன்னீங்கண்ணே..

கவுண்டர் : ரொம்ப பல்ல காட்டாத.. நீ பொறந்தது கூட அந்த மாதிரி தான். ஒரே ஒரு தடவ நீ பொறந்துட்ட… அதுக்கப்புறம் ஏண்டா நீ பொறந்தன்னு இந்த ஊர்காரனுகள்ளாம் அழுதுகிட்டு இருக்காங்க. அடுத்தவன சொன்னா மட்டும் சந்தோசம் பொத்துகிட்டு வந்துருமே



செந்தில்  : அண்ணேன் நம்ம ஊருல மரப்பல்லி கேள்விபட்டுருக்கேன்.. அது என்னண்ணே அனாபெல்லி?

கவுண்டர் : அது ஒண்ணும் இல்லைடா.. ஒரு பேய் இருக்கு. ஆனா அதப்பாத்து நமக்கு பயமே வரலன்னு வைய்யி…. அதுக்கு பேரு தான் அனாபெல்லி

செந்தில் : அப்போ பயம் வந்துச்சின்னா?

கவுண்டர் : உன் மூஞ்சிய கொஞ்ச நேரம் காட்டு. பேய் செத்துபோயிரும்



செந்தில் : நூறு கோடி நூறு கோடி நூறு கோடி..

கவுண்டர் : டேய் பாதளக்கஉரண்டி வாயா? என்னடா நூறு கோடி?

செந்தில் : அது ஒண்ணும் இல்லைன்னே.. இந்த பேர எப்ப பாத்தாலும் நூறு கோடி நூறு கோடின்னு கத்தனும்னு ஒருத்தர் என்கிட்ட சொல்லிட்டு நூறு ரூவா பணமும் குடுத்துட்டு போனாறு.. அதான் பேர பாத்தோன ஆட்டோமேட்டிக்க வாயில வந்துருச்சி

கவுண்டர் : எனக்கு ஆட்டோமேட்டிக்கா வாயில இன்னொன்னு வருது சொல்வா? படுவா… நூறு கோடின்னா எவ்வளவுன்னு தெரியுமாடா?

செந்தில் : என்னண்ணே இப்டி கேட்டுட்டீங்க.. நா சின்ன வயசுல ஸ்கூலுக்கு போகும் போது எங்க தாத்தா பாக்கெட் மணியா நூறு கோடி தான் குடுப்பாரு

கவுண்டர் முறைச்சிகிட்டே பக்கத்துல கிடக்குற கட்டைய பாக்க, செந்தில் நைஸாக எஸ்கேப் ஆயி ஓட ஆரம்பிக்கிறாரு.


இந்த வருடத்தில் நிறைய படங்கள் வித்தையை இறக்கிருந்தாலும், இந்த வருடத்தில் பெரும்பாலான நாள் ஊர்ல  இல்லாததால பாக்க முடியல. அப்புறம் அந்த படங்கள பாத்துட்டேன்னாலும், தியேட்டர்ல பாக்காத படங்களை பத்தி தப்பா எழுதக்கூடாதுங்குற காரணத்துனால (Professional Ethics)  இதோட முடிச்சிக்குறேன். 


Tuesday, December 23, 2014

பிசாசு – ஒரு பொண்ணு உள்ள கண்ணா?!!


Share/Bookmark
வர வர எனக்கு இந்த சூடு சுரனை போன்ற விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிகிட்டே வருதுன்னு நெனைக்கிறேன். இல்லைன்னா இந்தப் படம் பாத்தே இருக்க மாட்டேன். சமீபத்துல மிஷ்கின் அவர்கள் ரசிகர்களோட கேள்விகளுக்கு பதில் சொல்ற மாதிரியான ஒரு வீடியோ ரிலீஸ் ஆச்சு. அதப் பாத்தும் ஒருத்தன் அதுக்கப்புறம் மிஷ்கின் படம் பாத்தா காரணம் நா மேல சொன்ன மேட்டர்தான். என்ன வாயிடா அது என்ன வாயி.. “வேணாம் சார்.. என் படத்த யாரும் பாக்க வேணாம் சார்” ன்னு சொல்றாரு. அப்புறம் எதுக்கு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்த யாரும் பாக்க மாட்டேங்குறாங்க.. நானே போஸ்டர் ஒட்டுறேன்ன்னு படம் போட்டாருன்னு தெரியில. “வாயி இல்லைன்ன உன்ன நாயி தூக்கிட்டு போயிரும்” ன்னு வசனம் கேள்விப்பட்டுருப்போம். ஆனா வாயி இருக்கதால ஒருத்தன நாயி தூக்கிட்டு போகப்போகுதுன்னா அது நம்ம மிஷ்கின் சாரத்தான்.

சரி நம்ம பிசாசு படத்துக்கு வருவோம். படம் ஆரம்பிச்ச முதல் காட்சியிலிருந்தே பிசாச களத்துல இறக்கிருக்காரு மிஷ்கின். இதுவரை உலக சினிமாவில் காட்டாத ஒரு பேய். முகம் முழுக்க முடி, ஒரே ஒரு கண் என்று பிசாச காட்டுற ஒவ்வொரு சீனும் நமக்கு அடி வயித்துல பீதியக் கெளப்புது. ஒரு கட்டத்துல பயம் தாங்காம பக்கத்துல உள்ளவர்கிட்ட “அண்ணேன் என்னண்ணேன் பேய் இவ்ளோ பயங்கரமா இருக்கு..உங்களுக்கு பயமா இல்லையா?” னேன். “மூதேவி அது பேய் இல்லடா. அது தான் படத்தோட ஹீரோ.” ன்னாரு. அய்யயோ அசிங்கமா போச்சேன்னு நெனைச்சிட்டு “அப்போ பேய் எப்பன்னே வரும்?” ன்னேன். “வந்தா  பாத்துக்க” ன்னு சொல்லிட்டு படம் பாக்க ஆரம்பிச்சிட்டாரு.  
என்னய்யா ஹீரோ.. 

சரி அவனுக்கு மூஞ்சி எங்கடா இருக்கு? வடிவேலு சொல்றாமாதிரி “இருக்குன்னு எழுதிப் போடுங்கடா”.. முள்ளு புதரருக்குள்ளருந்து யாரோ ஒளிஞ்சி நின்னு பாக்குற மாதிரியே இருக்கு மூஞ்சி.

ஆக்ஸிடெண்ட்ல பலமா அடிபட்ட ஒரு பொண்ண அந்த முள்ளு புதரு காப்பத்த முயற்சி பண்றாப்ள. ஆனா on the way லயே அந்தப்புள்ள இந்த முள்ளுப் புதரு கைய்யப் புடிச்சிகிட்டே இறந்துடுது. ஃபீல் ஆயிடுறாப்ளே.. கொஞ்ச நேரம் வயலின் வாசிச்சா கூல் ஆயிடுவாப்ளே. மெண்டலி மெண்டல் ஆயி கண்ட இடத்துல நின்னு வயலின் வாசிக்கிறாரு.

இப்போ இந்த இடம் தான் ரொம்ப பயங்கராமான இடம். மனச தேத்திக்குங்க.. பயந்துடாதீங்க. செத்துப்போன புள்ள பேயா மாறி இவரு வீட்டுக்கே வந்துடுது. வந்த பேயி இவன் மொகரைய பாக்க பயந்துகிட்டு கிச்சன்ல இருக்க ஒரு சிம்னில போய்  ஒளிஞ்சிக்கிது. அப்புறம் அதுகிட்ட பேச்சுவார்த்தையெல்லாம் நடத்தி ஃப்ரண்ட் ஆயிடுறாங்க.

இதற்கிடையில மகளைக் கொன்னவன பழிவாங்கியே ஆகனும்னு வெறியோட கையில கத்தியோட சுத்துற அப்பா ராதாரவிக்கு நம்ம முள்ளுப் புதரு ஹெல்ப் பண்ணி எப்படி கொலைகாரன கண்டுபுடிக்கிறாருன்னு ஒரு ட்விஸ்ட வச்சி சொல்லிருக்க படம் தான் இந்தப் பிசாசு. .

எண்ணி ஒரு 15 பேர மட்டும் வச்சி, ஒவ்வொருத்தருக்கும் கரெக்டான ரோல வச்சி படம் எடுத்துருக்கது சூப்பர். ஆனா ஏன் மிஷ்கின் பட ஹீரோக்கள் எல்லாம் பிதாமகன் விக்ரம் மாதிரியே இருக்காங்கன்னு தான் புரியல. நேரா நடக்க மாட்டாய்ங்க. நிமிந்து பாக்க மாட்டாய்ங்க. எப்பவும் காலைக்கடன அடக்கி வச்சிருக்க மாதிரியே மூஞ்ச வச்சிருப்பாய்ங்க.

வழக்கமா மிஷ்கின் படங்கள்ல தூரமா ஒரு இடத்துல கேமராவ வேற எதயோ ஃபோகஸ் பண்ணி வச்சிட்டு, பின்னால கேரக்டர்கள் எதோ பண்ணிட்டு இருக்கும். அது இந்தப் படத்துலயும் தொடருது. முதல் பாதில நிறைய இடத்துல இதே மாதிரி பொறுமைய சோதிக்கும் காட்சிகள். முதல் பாதில பல இடங்களில் சில பேர் பொறுமை இழந்த comedy mode க்கு மாறி படத்த ஓட்ட ஆரம்பிச்சிடுறாய்ங்க.

முதல் பாதில எந்த அளவு கேலி கிண்டலுக்கு இடம் குடுத்துருக்காரோ அதுக்கு நேர் மாறா ரெண்டாவது பாதில வாயத்திறக்க விடாம படத்துக்குள்ள இழுத்து வச்சிடுறாரு. அதுக்கு முக்கிய காரணம் ராதாரவி கேரக்டர். மகள பறி குடுத்துட்டு தவிக்கிற அப்பாவா பின்னி பெடல் எடுத்துருக்குறாரு.

கொஞ்ச நாளுக்கு முன்னால “இருக்கு ஆனா இல்லை”ன்னு ஒரு  பேய் படம் வந்துச்சி. அந்தப் படத்தோட முதல் பாதியும் இந்தப் படத்தோட முதல் பாதியும் அப்படியே ஒண்ணு தான். இதச் சொன்னா அந்தாளு “வேணாம் சார்.. நீங்க படம் பாக்க வேணாம் சார்” ம்பாறு. நம்ம யாரு வம்புக்கும் போறதில்ல தும்புக்கும் போறதில்ல. நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்துடுறது. “இருக்கு ஆனா இல்லை” ஏற்கனவே பாத்திருந்ததால பிசாசின் முதல் பாதி எனக்கு அவ்ளோ பெரிய impact ah குடுக்கல. புதிதாக பார்ப்பவர்களுக்கு ஓரளவுக்கு பிடிக்கலாம்.

பிசாசு மிஷ்கினோட முந்தைய படங்களின் அளவுக்கு தரமானதா இல்லைன்னாலும் ஒதுக்கிவிட முடியாத ஒரு படமே.


Sunday, December 14, 2014

இது ரஜினி சார்- உரசாதீங்க!!!


Share/Bookmark
குறிப்பு: இது சமூகவலைத்தளங்களில் உலவும் பல்வேறு மனிதர்களைப் பற்றிய ஒரு பொதுவான பதிவு. எந்த ஒரு தனிநபரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதல்ல (அப்டின்னு தான் சொல்லுவேன். நீங்களா தான் புரிஞ்சிக்கனும்)   தமிழ்நாட்டுல முன்னால சினிமா துறையோட பிஸினஸ விரிவாக்கவும், பல மடங்கு பெருக்கவும் ரஜினிங்குற ஒருத்தர் தேவைப்பட்டாரு. ஆனா இப்போ சினிமா மட்டும் இல்லாம சினிமா சார்ந்த அத்தனை துறையோட பிஸினஸ பெருக்கவும், அத மக்கள்கிட்ட கொண்டு போகவும் ரஜினி மட்டுமே தேவைப்படுறாரு. சின்ன உதாரணம் கடந்த ரெண்டு வாரத்துல தமிழ்நாட்டுல ரிலீஸ் ஆன அத்தனை வாரஇதழ்களோட அட்டைப்படங்களையும் டைட்டிலையும் பாத்தாலே போதும். எல்லாத்துலயும் ரஜினி, ரஜினி ரஜினி மட்டும் தான். அடுத்த சூப்பர்ஸ்டார தேடுன குரூப்பு கூட இதுல விதிவிலக்கு இல்லை.

அதுமட்டும் இல்லை. ஒருத்தனுக்கு பப்ளிசிட்டி தேவைப்பட்டாலோ இல்லை நாலு பேரு அவன உத்து கவனிக்கனும்னு ஆசைப்பட்டாலோ அதுக்கும் ரஜினி ஒருத்தர்தான் தேவைப்படுறாரு. அரசியல்வாதிகள்தான் இந்த அல்ப ட்ரிக்க யூஸ் பண்றாய்ங்கன்னா, சமூக வலைத்தளங்கள்ல சில அல்பங்களும் இதே ட்ரிக்கதான் யூஸ் பண்ணிட்டு இருக்குங்க. அதாவது அவிங்கதான் பகுத்தறிவு பகலவன்கள் மாதிரியும் மத்த அனைவருக்கும் அடிப்படை அறிவுங்குற ஒண்ணே இல்லாத மாதிரியும் அதுங்களே நினைச்சிக்கிறது தான் இதுல ஹைலைட்.

முதல்ல லொல்லு சபா மனோகர் மாதிரி ஒருத்தரு. ஆனா லொல்லு சபா மனோகர விட அதிகம் காமெடி பண்ணக்கூடியவரு.  இப்ப இவரு என்ன சொல்றாருன்னா ”ரஜினி தவிர்க்கப்படவேண்டியவர்”ன்னு ஒரு ரெண்டு பக்கத்துக்கு ஒரு கட்டுரை எழுதிருக்காப்டி. அதுமட்டும் இல்லாம கடந்த ரெண்டு நாள்ல அவரு போட்ட போஸ்ட் எல்லாம் பாத்தா எல்லாமே ரஜினியை வசை பாடி போட்டது தான்.



ஏண்டா பாடிசோடா.. மண்டைய மறைச்சாலும் மண்டை மேல இருக்க கொண்டைய உன்னால மறைக்க முடியுதா? ரஜினி தவிர்க்கப்பட வேண்டியவர்னு சொல்லிட்டு, ரஜினியப் பத்தி ரெண்டு பக்கத்துக்கு உக்காந்து போஸ்ட் எழுதிருக்கியே, இதான் நீ ரஜினிய தவிர்க்குற லட்சனம். ரஜினிய புடிக்காத மாதிரி காட்டிக்கிற உன்னாலயே அவர தவிர்க்கமுடியலையே.. அவரப்புடிச்ச மத்தவங்க எப்புடிடா தவிர்ப்பாங்க.

அதுமட்டும் இல்லை. மோடி ரஜினிக்கு  வாழ்த்து தெரிவிச்சா இவனுங்க பதட்டமாயிடுறாய்ங்க. அதப் பாத்த அடுத்த செகண்டு “ரஜினி அரசியலுக்கு வந்தால் ஒண்ணும் பன்னமுடியாது.. ரஜினிக்கு அரசியல் வாய்ஸ் இல்லவே இல்லை” ன்னு பதட்டத்துல ஸ்டேட்டஸ அள்ளித் தெளிக்கிறாய்ங்க. சரி ரஜினி அரசியலுக்கு வந்தாதான் ஒண்ணும் நடக்காதே.. அப்புறம் ஏன் உங்களுக்கு கால் உதறுது? ரஜினிக்கு மோடி வாழ்த்து சொன்னா என்ன ஒபாமா வாழ்த்து சொன்னா என்ன? செல்வாக்கு இல்லாத ஆளப்பத்து உங்களுக்கு ஏன்யா வாய் கொழருது?

அப்புறம் இன்னொரு யக்கா இருக்காங்க. நிறைய படிச்சவங்க. பகுத்தறிவுல இவங்கள அடிச்சிக்க ஆள் கிடையாது. அதாவது இவங்களோட பகுத்தறிவுல இவங்க கண்டுபுடிச்ச விஷயம் என்னன்னா ‘சின்னக் குழந்தையா இருக்கும் போது ரஜினிய புடிச்சா தப்பு இல்லையாம். ஆனா படிச்சப்புறம் ரஜினிய புடிக்கக் கூடாதாம். கமலத்தான் புடிக்கனுமாம். அதுதான் யக்காவோட பகுத்தறிவுக் கொள்கை.

அதாவது இது எப்டிக்கீதுன்னா நா சின்ன வயசுல எங்க அப்பாவ அப்பான்னு கூப்புடுவேன். ஆனா படிச்சப்புறம் இவரு எங்க அப்பா மாதிரி தெரியலையே.. பக்கத்து வீட்டுக்காரர பாத்தாதான் எங்க அப்பா மாதிரி தெரியிறாரு. எத்தனை வருசத்துக்கு தான் ஒருத்தரையே அப்பான்னு கூப்டுறது. இனிமே பக்கத்து வீட்டுல இருக்கவரையே  அப்பான்னு கூப்புடுவோம்னு முடிவு பண்ற மாதிரி இருக்கும்.

அதுமட்டும் இல்லை. யக்காவுக்கு வடிவேலு ஃபோட்டோவ விட ரஜினி ஃபோட்டோவ பாத்த ரொம்ப ரொம்ப சிரிப்பு வருதாம். யக்காவ பாருங்கைய்யா.. என்னா அழகு.. இந்தப்பக்கம் பாத்தா ஐஸ்வர்யா ராய மடிச்சி வச்சா மாதிரி இருக்காங்க. அந்தப் பக்கம் பாத்தா காத்ரீனா கைஃப வடிச்சி வச்சா மாதிரி இருக்காங்க. கவுண்டர் சொல்றா மாதிரி.. “என்னா மூஞ்சி… உலகத்து அழகுகளையெல்லாம் ஒட்டுமொத்தமா சேத்து வச்சா மாதிரி இருக்கு இந்த மூஞ்சி.. காலங்காத்தால வேலைக்கு போறவன் இந்த மூஞ்ச பாத்துட்டு போனா போதும்… ஸ்பாட் அவுட்” . அப்படிப்பட்ட யக்காவுக்கும் ரஜினியை பாத்த சிரிப்பு வராம என்ன செய்யும். யக்காவுக்கு திடீர்னு பப்ளிசிட்டி வேணும்னா உடனே ஒரு ஜாதிப்போஸ்ட போட்டு தேடிப்பாங்க. இதெல்லாம் ஒரு பொழப்பு. 

இதுல அல்டிமேட் காமெடி என்னன்னா இவய்ங்களுக்கு ரஜினியை புடிக்காததுக்கு ஒரு காரணம் சொல்லுவாய்ங்க பாருங்க. பகுத்தறிவு வாதிகள்னா இவய்ங்கதான். அதாவது ரஜினி இந்த ஊர்ல சம்பாதிச்சி வெளியூர்ல சொத்து வாங்குறாராம். ரஜினி இந்த ஊருக்கு எதுமே செய்யலையாம்.

இல்லை நா தெரியாமத்தான் கேக்குறேன். ரஜினி நம்மூர்ல சொத்து வாங்குறதால வர்ற வரிப்பணம் கிடைக்காததுனால தான் தமிழ்நாடு இன்னும் பின் தங்கியிருக்கு. இல்லைன்னா அகில உலக லெவல்ல நம்பர் ஆயிருக்கும் அப்டித்தானே ராஜாக்களா? ஏண்டா நொன்னைகளா Swizz Bank ல பத்தாயிரம் கோடி இருபதாயிரம் கோடின்னு கருப்பு பணம் வச்சிருக்கவன்கிட்டல்லாம் இத கேக்க துப்பில்லை. வந்துட்டாய்ங்க ரஜினி கால்ல விழுகுறதுக்கு.

சரி ரஜினி ஏன்யா தமிழ்நாட்டுல சொத்து வாங்கனும்? அவரு சம்பாதிச்ச காசுல எங்க வேணா சொத்து வாங்குவாறு அதுல உனக்கென்ன எரியிது? நா தெரியாமத்தான கேக்குறேன் இப்போ துபாய்ல சம்பாதிக்கிற காசுல துபாயில மட்டும் தான் செலவு பண்ணனும், இந்தியாவுக்கு யாரும் எடுத்துட்டு போகக்கூடாதுன்னு ஒரு சட்டம் போட்டாய்ங்கன்னா இன்னிக்கு தமிழ்நாட்டுல கால்வாசி பேருவீட்டுல அடுப்பெரியாது. இவனுங்க மட்டும் துபாய், சிங்கப்பூர்ன்னு போய் சம்பாதிச்சி இங்க அள்ளிட்டு வருவாய்ங்களாம் யாரும் கேக்கக்கூடாதாம். ஆனா ஒருத்தர் கர்நாடகாவுல சொத்து வாங்குனா எதோ பெரிய குத்தமாம்.

ஒரு குடும்பம் தமிழ்ல 8 சேனல், தமிழ் இல்லாம ஆந்த்ரா கன்னடா கேரளாவுல ஒரு 22 சேனல்னு மொத்தம் 30 சேனல் வச்சி எவ்வளவோ சம்பாதிக்கிறாங்க. அவருக்கு எங்கெங்க சொத்து இருக்குன்னு எவனாவது கேட்டீங்களா? இல்லை அவரு தமிழ்நாட்டுக்கு என்ன செஞ்சிருக்காருன்னு கேட்டீங்களா? ரஜினி நாலு வருஷத்துக்கு ஒரு தடவ படம் நடிக்கிறாரு. அத ஒரே ஒரு தடவ நீ 100 ரூவா குடுத்து தியேட்டர்ல பாக்குற. இந்த மாதிரி வக்கனையா பேசுற நாயிங்க டிவிடி வாங்கி திருட்டுத் தனமாதான் பாக்குதுங்க. அதுக்கே அவர என்ன செஞ்ச என்ன செஞ்சன்னு இத்தனை கேள்வி கேக்குறியே, ஒவ்வொரு மாசமும் 200 ரூவா குடுத்து, அவன் சேனல பாத்து, அவன் போடுற add எல்லாம் பாத்து அவனுக்கு எவ்வளவோ லாபத்த குடுத்துருக்கீங்களே அவர்கிட்ட எவனாவது கேட்டுருக்கீங்களாய்யா?

ரஜினி தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யலையாம். ங்கொய்யால எதுக்குடா செய்யனும். நீ என்ன செஞ்சிட்ட அவருக்கு இல்லை நீ என்ன செஞ்சிட்ட இந்த ஊருக்கு? ஒரு சின்ன உதாரணம். நாலு வருஷம் முன்னால ஒரு வெள்ள நிவாரண நிதி எல்லார்கிட்டயும் திரட்டுனாங்க. அப்போ தமிழ்நாட்டுல நாலைஞ்சி தடவ முதல்வரா இருந்த ஒருத்தர், அதுக்கு ஒரு அமவுண்டு குடுக்குறாரு. எப்புடின்னு கேளுங்க. அதாவது அவரு ஒளியின் ஓசை என்கிற ஒலகப்படத்துக்கு கதை வசனம் எழுதியதால கிடைச்ச 5 லட்ச ரூபா சம்பளத்த நிவாரணத்துக்காக குடுக்குறாரு. அவரோட சொத்துக்கணக்குக்கு எத்தனை சைஃபர் போடுறதுன்னே இன்னும் தெரியாம முழிச்சிட்டு இருக்காய்ங்க. அவரு கஷ்டப்பட்டு சம்பாதிச்ச அந்த ஒலகப்பட சம்பளத்த மட்டும் நிவாரணத்துக்கு குடுக்குறாரு. ஏன் அங்க போய் நாலு கேள்விய கேக்க வேண்டியது?

அப்புறம் இன்னொரு கிருக்கன். 64 வயதில் 20 வயது பெண்களுடன் டூயட் பாடுறாருன்னு ஒரு குறை சொல்றான். சரிங்க மிஸ்டர் மெண்டல், நீங்க சொல்ற மாதிரியே 20 வயசு பொண்ணுங்க வேணாம். அந்த காலத்துல அவரோட நடிச்ச ஸ்ரீபிரியா, அம்பிகாவையே இப்பவும் ஹீரோயினா போட்டு எடுப்போம். நீ பாக்குறியா படத்த?

அப்புறம் சமீபத்துல ”ச்சீ மான்” ன்னு இன்னொரு கிருக்கன் ஒரு அல்டிமேட் காமெடி பண்ணாப்டி. அதாவது “ரஜினி அரசியலுக்கு வந்தால் நாங்கள் மோதிப்பார்க்கத் தயார்”ன்னு ஒரு அறிக்கை. அதாவது சார் எப்டின்னா, காஷ்மீர்லருந்து கன்யாகுமரிவரைக்கும் உள்ள அத்தனை அரசியல் வாதிகளையும் மோதி ஜெயிச்சிட்டு ஸபெசல் பர்மிசன்ல ரஜினியோட மோத வந்துருக்காரு.  ஏற்கனவே அரசியல்ல இருக்கவய்ங்க கூட மொதல்ல மோது சனியனே. அரசியல்லயே இல்லாத ஒருத்தர அரசியலுக்கு வரவச்சி அதுக்கப்புறம் மோதுறாராம். ஒருத்தனுக்கு எந்திரிச்சி நிக்கவே வக்கில்லையாம்.. ஆனா… சரி விடுங்க அத ஏன் என் வாயால சொல்லிகிட்டு.

சவால் விடுறாராம் சவால். சரி நீயும் ஒரு டைரக்டர் தானே.. ‘நா ஒரு படம் டைரக்ட் பண்ணி ரிலீஸ் பண்றேன். ரஜினி ஒரு படம் நடிச்சி ரிலீஸ் பண்ணட்டும்  மோதிப்பாக்கலாம்”ன்னு நீ ஒரு சவால் விட்டியன்னா ஆம்பளடா. ஒரு முதலை தரையில இருக்கும்போது அதுக்கு முன்னால போய் நின்னு டான்ஸ் ஆடிட்டு பெரிய இவன் மாதிரி பீத்துறது பெரிய விஷயம் இல்லை. தில் இருந்தா அதே டான்ஸ அந்த முதலை தண்ணிக்குள்ள இருக்கும்போது போய் பக்கத்துல ஆடிப்பாரு. டங்குவாரு அந்துரும். 


Saturday, December 13, 2014

லிங்கா - இதற்குத்தானே ஆசைப்பட்டோம் லிங்கேஸ்வரா!!!


Share/Bookmark
லிங்கா ஆரம்பித்த அடுத்த வாரத்துலயே விகடன் ”லிங்காவின் கதை இதுதான்”னு ஒரு ஆர்டிகிள் போட்டுருந்தாங்க. முதல் முதலா படம் வர்றதுக்கு முன்னால ஊடங்கள் கதைன்னு போடுற ஒரு விஷயம் சரியா இருந்தது இந்தப் படத்துலதான். அச்சு பிசிறாமா அதே கதை தான். மக்களுக்காக அணை கட்டுறதும் அதுக்கு வர்ற ப்ரச்சனைகளும் தான் படம்.

படத்தில் இரண்டு லிங்கேஸ்வரன்கள். கடைசியா சிவாஜியில பாத்த அதே துறுதுறு தலைவர திரும்பவமும் கொண்டுவந்து நிறுத்திருக்காரு KSR. முதல் முக்கால் மணி நேரம் சந்தானம் குரூப்போட லூட்டி செம. அனுஷ்கா மொத ரெண்டு மூணு காட்சிகள்ல பாட்டி மாதிரி தெரிஞ்சாலும் போகப்போக பியூட்டி. யப்பா.. தலைவர் பக்கத்துல அனுஷ்கா வயசான மாதிரி தெரியிது ஹீரோயின மாத்துங்கன்னா கேக்குறீங்களா.

ராஜா லிங்கேஷ்வரன் ப்ரிட்டீஷ் காலத்து கலெக்டர். இரண்டாவது பாதிய முழுவதுமே அவரே ஆக்ரமிக்கிறாரு. என் மக்களுக்கு என் சொந்த செலவுலயே அணை கட்டிக்கிறேன்னு வெள்ளைக்காரனுங்க கிட்ட சவால் விடும்போதும் சரி, ஜாதிப்பிரச்சனையில பிரிஞ்சிருக்க மக்களை ஒண்ணு சேர்க்க கோவமா வசனம் பேசும்போதும் சரி, குடிசையில சிரிச்சிட்டே எல்லாருக்கும் சாப்பாடு போடும் போதும் சரி. பட்டைய கெளப்புறாரு.

உயிர் இருக்கும் வரைக்கும் தான் அதுக்கு பேர் உடம்பு. இல்லைன்னா அதுக்கு பேர் சவம். கோயில்ல இருக்கும் வரை தான் சாமி. யாராவது தூக்கிட்டு ஓடுனா அதுக்குப்பேரு சிலை. அதே மாதிரி தான் சில விஷயங்களுக்கு மதிப்பே, அது சில பேர்கிட்ட இருக்கும்போது தான்.  இந்த பஞ்ச் டயலாக்குகள் அப்படித்தான். ரஜினி பேசுறதாலதான் பஞ்ச் டயலாக் ஃபேமஸ் ஆச்சே தவிற பஞ்ச் டயலாக் பேசுறதால ரஜினி ஃபேமஸ் ஆகல.

நாய் முதல் பேய் வரை விரலை சொடுக்கி பஞ்ச் டயலாக்க பேச ஆரம்பிச்சதன் விளைவு தான் அவரு இப்ப பஞ்ச் டயலாக்குகளே பேசுறதில்லைன்னு முடிவு பண்ணிருக்காரு. நல்லா ஞாபகம் வச்சிக்குங்க கண்ணுங்களா. ரஜினி பேசுற வரைக்கும் தான் பஞ்ச் டயலாக்குகளுக்கு மரியாதை.

ஒரு சிரிப்பாலயே வசனம் பேசுற ஒரே ஆள் தலைவர்தான். ஒரு சீன்ல ப்ரிட்டீஷ்காரன் “லிங்கேஸ்வரன் நீ சொன்னத செய்யனும்” அப்டிம்பான். அதுக்கு தலைவரு அவன கேவலாமா ஒரு பார்வை பாத்துட்டு “ஹா ஹா… யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்கன்னு தெரியல போலருக்கு” ம்பாரு. ப்ப்பா.. தாறுமாறு..

ராண்டி பட்டைய கெளப்பிருக்காரு. செம ரிச்சான visuals. ட்ரெயின் ஃபைட்டு சூப்பரா எடுத்துருக்காங்க. க்ளைமாக்ஸ்ல வெய்ட்டான தெறி ஃபைட்டு ஒண்ண போட்டுருக்கலாம். தலைவரோட உடல்நிலைய மனசுல வச்சி KSR முடிஞ்ச அளவு ஸ்டண்ட் காட்சிகளை தவிர்த்திருக்காரு.
படத்தில் தலைவரைத் தவிற வேற யாருக்கும் பெருசா முக்கியத்துவம் தரப்பட்டதா தெரியல. குறிப்பா வில்லன்கள். வில்லன்கள இன்னும் பவர் ஃபுல்லா காமிச்சிருக்கலாம். ஜகபதி பாபுவ மெயின் வில்லனா ஆக்கிருக்கலாம்.

நேத்து முதல் ஷோ பாத்துட்டு ஒருத்தர் விமர்சனம் எழுதிருந்தாரு. அதுல கடைசில ”படம் பாக்கலாமா?- பாக்கலாம்” ன்னு எழுதிருந்தாரு. ஏன் சார் எதோ விஷால் படத்துக்கு விமர்சனம் எழுதுற மாதிரி எழுதிருக்கீங்க. இது ரஜினி படம் சார். தமிழ்நாட்டுல முக்கால்வாசி பேரு குடும்பத்தோட தியேட்டருக்கு போறதே தலைவர் படம் வரும் போது தான். Facebook ல நண்பர் ஒருத்தர் சொன்னது மாதிரி “ரஜினி படத்த விமர்சிக்கிறது பொங்கல், தீவாளி, New year ah விமர்சிக்கிற மாதிரி. ரஜினி படம் வர்றதுங்கறது ஒரு festival அத கொண்டாடனும். கொண்டாடலாமா வேணாமான்னு யோசிக்கக் கூடாது”.

”சிரித்து வரும் சிங்கமுண்டு, புன்னகைக்கும் புலிகள் உண்டு, உறையாமல் உயிர் குடிக்கும் ஓநாய்கள் உண்டு”ங்குற மாதிரி நிறைய நரிகள் நாரதர்கள் உலவிக்கிட்டு இருக்காய்ங்க. நம்பாதீங்க.  நிச்சயம் ஏமாற்றமளிக்காத ஒரு தலைவர் படம். 


இணையத்தில் உலவுற திடீர் போராளிகளுக்காகவும், பகுத்தறிவு பகலவன்களுக்காகவும் ஒரு பதிவு on the way. 


Thursday, December 4, 2014

தலைவன் இருக்கிறான்!!!


Share/Bookmark
ஒருசிலர் நடிக்கிற ரெண்டு மூணு படங்கள் வரிசையா சூப்பர் ஹிட் ஆகும். திடீர்னு ரெண்டே வருஷத்துல ரொம்ப உயரத்துல போயிருவாங்க. ஆனா கொஞ்ச நாள் கழிச்சி அவங்க எங்க இருக்காங்கன்னே தேடிகண்டு பிடிக்க வேண்டியிருக்கும். அத எல்லாரும் அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. இன்னும் சில பேருக்கு பத்துபடம் வரிசையா அடிவாங்கும். ஆனா அசராம பதினொராவது படத்த ஹிட்டாக்கி காட்டுவாங்க. அத எல்லாரும் hard work ன்னு சொல்லுவாங்க. ஆனா எத்தனை வருஷமானாலும்,  எப்ப வந்தாலும், எப்படி வந்தாலும் ஒவ்வொரு தடவையும் அதிரடியாக அதகளப்படுத்த ஒருத்தரால மட்டும் முடியும் . ஒரு அடி சறுக்கினாலும் அடுத்தது நூறு அடி முன்னோக்கிப் போக  அவரால மட்டுமே முடியும். அவரத்தான் எல்லாரும் ரஜினின்னு சொல்லுவாங்க.  

அவர் ஒரு குறும்புக்கார ஆளுப்பா. எப்பல்லாம் மத்தவங்களுக்கு அவரோட படங்களை முந்திப்போகனும்னு ஆசை வருதோ அப்போ அவர் திரும்ப வந்து Target ah reset பண்ணி விட்டு, அவங்க ஆசையில லைட்டா மண்ணென்னைய ஊத்தி பத்தவச்சிட்டு இமயமலைக்கு போயி ரெஸ்ட் எடுக்க ஆரம்பிச்சிடுவாரு. அதுக்கப்புறம் அந்த டார்கெட்ட அவங்க நெருங்கவே சில வருஷங்கள் ஆகும்.

ஒவ்வொரு துறையிலயும் போட்டிகள் இருக்கும். சக போட்டியாளர்களும் இருப்பாங்க. அவங்க கூட போட்டி போடுறதுல தப்பே இல்லை. ஆனா அதே துறையில legend ன்னு ஒரு ஆள் இருப்பாங்க. அவங்ககிட்ட மட்டும் வச்சிக்கக் கூடாது. க்ரிக்கெட்டுல ஆயிரம் பேர் வந்து போறாங்க. ஒவ்வொருத்தரையும் ஒவ்வொருத்தர வச்சி replace பண்ணிக்கலாம். ஆனா சச்சின்ங்குற இடத்துல வேற ஒரு ஆள நினைச்சிப் பாக்க முடியாது. எத்தனை முறை விழுந்தாலும் எழுந்து வந்தவர். கடைசி வரைக்கும் அவருக்கு இருந்த grace ah யாராலயும் புடிக்கவோ ஒழிக்கவோ முடியல. எத்தனை பேர் வேணாலும் வரலாம். எத்தனை ரன் வேணாலும் அடிக்கலாம். ஆனா அதெல்லாம் அவர் அடிக்கிற ஒரு ரன்னுக்கு ஈடாகாது. இவ்வளவு ஏன் அவர் எடுத்த பூஜ்ஜியத்துக்கு கூட மதிப்பிருக்கு.

அப்படித்தான் தலைவரும். அவர ஒரு போட்டியாளரா நெனைச்சாலே அவ்வளவு தான். அப்புறம் போட்டியிலயே இருக்க முடியாது.  அவர் ஒரு நடிகர்ங்குறதையும் தாண்டி மக்கள் கூட அவருக்கு இருக்க bonding eh வேற. நம்ம ரத்த சொந்தங்களுக்கு ஒண்ணுன்னா “தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்”ன்னு சொல்லுவாங்க. ஆனா தமிழ்நாட்டுல பெரும்பாலவங்களுக்கு ரத்த சொந்தம் இல்லாத குடும்ப உறுப்பினர் தான் தலைவர். அவருக்கு எதாவது ஒண்ணுன்னாலும் நமக்கு உடம்பு உதறும். அது அனுபவிச்சி பாத்தவங்களுக்குத் தான் புரியும்.

இந்த மாதிரி உணர்ச்சிகள் புரியாத சில ஜடங்கள் நம்மள அப்பப்போ சீண்டிப் பாக்குறதும் உண்டு. சில விஷயங்கள நா முன்னாலயே எழுத நினைச்சிருக்கேன். ஆனா அதுக்கான நேரம் இப்பதான் வந்துருக்கு.  ராணா ஆரம்பிச்ச அன்னிக்கே தலைவருக்கு உடம்பு சரியில்லாமா போய் ராமச்சந்திராவுல அடிமிட் ஆக, ஆளாளுக்கு வாயில வந்த புரளிய கிளப்பி விட்டதெல்லாம் யாரும மறந்திருக்க மாட்டாங்க.

                                        


அந்த நேரத்துல நா கொஞ்சம் வெளியூர்ல  இருந்ததால எந்த அப்டேட்டுமே சரியா கிடைக்கல. தலைவர் எங்க இருக்காரு.. எப்டி இருக்காரு.. கிட்டத்தட்ட பைத்தியம் புடிக்கிற மாதிரி இருந்துச்சி. அப்போ ரிலீஸ் ஆச்சி அந்த ஆடியோ. ”ஹலோ… நா ரஜினிகாந்த் பேசுறேன்.. ஹேப்பியா பொய்ட்டு வந்துட்டு இருக்கேன் நானு. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடுறேன் ராஜாக்களா…  பணம் வாங்குறேன். ஆக்ட் பண்றேன். அதுக்கே நீங்க இவ்ளோ அன்ப குடுக்குறீங்கன்னா உங்களுக்கு நா என்ன திருப்பிக் கொடுக்குறது.. நிச்சயமா நீங்க தலை நிமிர்ந்து நடக்குற மாதிரி நா வந்து நிப்பேன் கன்னா.. நா சீக்கிரம் வந்துருவேன்” ன்னு ஒரு தளுதளுத்த குரல்ல பேசி அவருக்கு உடம்பு சரியில்லாதத மறைக்க முயற்சி செஞ்சி தோற்றுப்போயிருப்பாரு.

“கன்னா பன்னிங்க தான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளாதான் வரும்”ன்னு கம்பீரமா கர்ஜித்த ஒரு குரல், ஒரு நிமிஷம் கூட தொடர்ந்து பேச முடியாம தளர்ந்து போயிருக்கதக் பார்த்தா ஒருத்தனுக்கு எப்படி இருக்கும்? அதக் கேட்ட தலைவரோட ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு சொட்டு கண்ணீராவது வராம இருந்திருக்காது.  சத்தியமா அன்னிக்கு நைட்டு ஒழுங்கா தூக்கமே வரல.

எனக்கு சில பேரோட கருத்து வேறுபாடு ஏற்பட்டதுண்டு. சிலரை உரண்டை இழுத்ததும் உண்டு. சில எதிரிங்களும் உண்டு. அவங்கல்லாம் அந்த நேரத்துல தான் அவங்களோட சுயரூபத்த காட்ட ஆரம்பிச்சாங்க. தலைவருக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டதும் அவங்களுக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சின்னு தெரியல. என்னுடைய தளத்துல வந்து அவங்க மனசுல நினைச்ச கமெண்ட்ட போட்டங்க.

தலைவர் சிங்கப்பூர் ஹாஸ்பிட்டல்ல இருக்காரு. அப்போ எனக்கு வந்த ஒரு கமெண்ட் “ரஜினி சிங்கப்பூர் ஹாஸ்பிட்டல்ல செத்துட்டான்” இது தான். இந்த கமெண்ட்ட அப்படியே போட எனக்கு மனசில்ல. இருந்தாலும் இதப்போட்டவங்க எப்படிப்பட்டவங்களா இருப்பாங்கன்னு நீங்களும் தெரிஞ்சிக்கனும்னு தான். அதப்பாத்ததும் எனக்கு உண்மையிலயே தலை கிருகிருன்னு சுத்திருச்சி. வெளியூர்ல இருந்ததால நண்பர்கள்கிட்டயும் உடனே கேட்க முடியல. 

அப்ப எனக்கு ரொம்ப ஆறுதலா இருந்தது www.envazhi.com தான். உடனே அதுல போய் பாத்தேன். தலைவர் நலமோடு இருக்கார்ன்னு ரொம்ப சமீபத்தைய பதிவு இருந்துச்சி. அதப்பார்த்தப்புறம் தான் ஓரளவு நிம்மதியாச்சி. தலைவர் ஊருக்கு வர்ற வரைக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு பத்து தடவையாவது அந்த தளத்துக்கு போய் பாப்பேன்.

நா மேலே சொன்ன கமெண்ட் வெறும் சாம்பிள் தான். அதே மாதிரி ஒரு 50 கமெண்டு வந்துருக்கும். ஒவ்வொன்னயும் பாக்கும்போது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சின்னு எனக்கு மட்டும் தான் தெரியும். எதிரியா இருந்தாலுமே அவன் தோக்கனும்னு தான் யாரும் ஆசைப்படுவாங்களே தவிற அவன் சாகனும்னு இல்லை. ஆனா இந்த ஜந்துக்கள எந்த லிஸ்டுல சேக்குறதுன்னு தெரியல.

ஆனா தலைவர் சொன்ன ஒண்ணே ஒண்ணு மட்டும் என் மனசுக்குள்ள இருந்துச்சி. “கடவுள் இருக்கான்.. நல்லவங்க வாழ்வாங்க… கொஞ்ச நேரம் ஆகும் அவ்ளோ தான்”. நாலு பேர் நாம நல்லா இருக்கனும்னு நெனைச்சாலே நாம நல்லா இருப்போம். ஒரு நாடே அவர் நல்லா இருக்கனும்னு நெனைக்கும் போதா எதாவது ஆகும்? சொன்ன மாதிரியே வந்தாரு. தப்பா சொன்னவங்க தலை குனியிற மாதிரியே வந்தாரு.

முழுவீச்சுல சினிமா நடிக்க முடிலன்னாலும் முடிஞ்ச வரை ரசிகர்களுக்காக கஷ்டப்பட்டாரு.  கோச்சடையான். இந்தியாவே திரும்பிப் பாத்துச்சி. நேரம் வந்துச்சி. ஃபுல் ஆக்‌ஷன்ல இறங்குனாரு. ஆறே மாசம். லிங்கா ரெடி. இப்போ அந்த கமெண்ட் போட்டவங்க, போட நினைச்சவங்க எல்லாருக்கும் கீழ இருக்கிற போஸ்டர் சமர்ப்பணம்.



நகரம் படத்துல வடிவேலு, சுந்தர்.சிகூட சண்டை போட பயந்து ஏரியாவுக்கு வாடா, தெருவுக்கு வாடா , வீட்டுக்கு வாடான்னு சொல்லி கடைசில போக இடம் இல்லாம கால்ல விழுவாரு. அதே மாதிரி கொஞ்ச நாளா தலைவர குறை சொன்னவங்க நானும் ரஜினி ரசிகன் தான். ஆனா ரஜினிக்கு கே.எஸ்.ரவிகுமார் தான் செட் ஆகும். ஷங்கர்லாம் சரியில்லைன்னு பஜனை பண்ணிட்டு இருந்தாங்க. இப்போ ரவிக்குமாரே வந்துட்டாரு. இனிமே உங்களுக்கு போக இடமே இல்லை கன்னா.. இதான் எண்டு.. இல்லை ஒரு வேளை ரஜினிக்கு பி.வாசுதாம்பா கரெக்டு.. சுரேஷ்கிருஷ்ணாதாம்பா வெய்ட்டுன்னு வேற எதாவது பஜனை பாடப்போறாங்களான்னு பொறுத்திருந்து பாப்போம். 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...