Saturday, May 23, 2015

டிமான்ட்டி காலனி – MUST WATCH!!!


Share/Bookmark
சில ஆங்கிலப்படங்களைப் பாத்து “என்னடா இவிங்க இப்புடி இருக்காய்ங்க” ன்னு ரெண்டு மூணு நாள் அந்த நெனைப்பாவே திரிஞ்சிருக்கேன். பெரும்பாலும் எனக்கு அப்படிப்பட்ட ஃபீல் குடுத்த படங்களைப் பத்தி அப்பப்போ எழுதியும் இருக்கேன். அந்த வரிசையில ஒரு படம் EXAM. ஒரே ரூமுக்குள்ள பத்தே பத்து பேர மட்டும் வச்சிக்கிட்டு கொஞ்சம் கூட போர் அடிக்காம எடுத்துட்டு போயிருப்பாய்ங்க. இந்த படத்தையாவது ஒரு கணக்குல சேத்துக்கலாம். அந்த படத்துல வர்ற EXAM க்கு சில ரூல்ஸ் இருக்கும். பதிலைத் தேடுறேங்குற பேர்ல roof ah உடைப்பாய்ங்க. பேப்பர கொளுத்துவாய்ங்க. எதாவது நம்மள அட்ராக்ட் பண்றதுக்குன்னு ஒரு விஷயம் இருக்கும்.

ஆனா The Man From Earth ன்னு இன்னொரு படம் இருக்கு. இது வேற லெவல். ஒண்ணுமே பன்ன மாட்டாய்ங்க. ஒரு வீட்டுல உக்காந்து ஒருத்தன் பேசுவான். சுத்தி ஒரு நாலு பேரு அதக் கேப்பாய்ங்க. அவ்வளவு தான். படம் முழுக்க பேசிக்கிட்டே தான் இருப்பாய்ங்க. ஆனா, செம இண்ட்ரஸ்டிங்கா இருக்கும். இந்தப் படத்தோட க்ளைமாக்ஸ்லாம் பாத்துட்டு, அவிங்க கால்ல விழுந்துடலாம் போல இருந்துச்சி. ஒரே அறையில ஒரு படத்த போர் அடிக்காம எடுக்குறதுங்குறது சாதாரண விஷயம் இல்லை. ஸ்ட்ராங்கான ஸ்கிரிப்ட் இருந்தா மட்டுமே முடியும்.
அந்த வகையில கொஞ்சம் கூட போர் அடிக்காம, ரொம்ப கம்மியான கேரக்டர்கள மட்டும் வச்சிக்கிட்டு டிமாண்ட்டி காலனின்னு ஒரு சூப்பர் படத்த குடுத்துருக்காங்க.

பேய் படங்களுக்கும், காமெடி படங்களுக்கும் எப்பவுமே மார்க்கெட் போறதில்லை. இந்த டைப் படங்களுக்கு கதைகளுக்காகவும் ரொம்ப தேடி அலையவும் வேண்டியதில்லை.

இயக்குனராக ஆசைப்படுற ஒருத்தன், ஃபோட்டோ ஸ்டூடியோ வச்சிருக்க ஒருத்தன், எலெக்ட்ரீஷியன் வேலை பாக்குற ஒருத்தன், ஒரு ஆண்டி கிட்ட அல்லக்கை வேலை பாக்குற ஒருத்தன்னு, நாலு ரொம்ப சாதாரணமான கேரக்டருங்க. ஒரு நாள் வித்யாசமா எதாவது ஒரு இடத்துக்கு போறதுன்னு முடிவு பண்ணி, சென்னையில ரொம்ப வருஷமா பூட்டிக் கிடக்குற டிமாண்ட்டி காலனிங்குற ஒரு இடத்துக்கு போறாங்க. அந்த இடத்துக்குப் போறதுனால அவங்களுக்கு என்னென்ன விளைவுகள் வருதுங்குறத படம் பாக்குறவங்கள மிரட்டி சொல்லிருக்க படம் தான் டிமாண்ட்டி காலனி.

மெளன குருவுக்கு அப்புறம் அருள் நிதிக்கு சொல்லிக்கிற மாதிரி ஒரு படம். இந்தப் படத்துல அவர ஹீரோன்னுலாம் சொல்ல முடியாது. நாலுபேர்ல ஒருத்தராத்தான் வர்றாரு. முந்தைய தோல்விகள் அண்ணன ரொம்ப அடி வாங்க வச்சிருக்கும் போலருக்கு. முதல் ரெண்டு மூணு காட்சிகள்ல யார் யாரையோ தாக்குற மாதிரி வசனங்கள். குறிப்பா ஒரு ப்ரோடியூசர்கிட்ட ஒருத்தன் கதை சொல்ல வரும்போது அவரு ”தம்பி.. இந்த கதையெல்லாம் வேண்டாம். காமெடி ஸ்க்ரிப்ட் எதாவது இருக்கா?” ம்பாரு. “காமெடியா?” ன்னு இவன் கேட்ட உடனே “அதாம்பா.. கதையே இருக்கக் கூடாது. கடைசி வரைக்கும் ஹீரோவும் காமெடியனும் பேசிக்கிட்டே இருக்கனும். எவன் ஹீரோ எவன் காமெடியன்னே தெரியக்கூடாது” ங்குறாரு. ஏம்பா உதயநிதிய ஓட்டனும்னா நேரா இத வீட்டுலயே போய் சொல்லிட்டு வந்துருக்கலாம்ல. ஏன் தேவையில்லாம ஒரு சீன் வேற வேஸ்டு.

இண்ட்ரோ சாங்கும் அப்டித்தான். எதோ ஜெயிப்போம் ஜெயிப்போம்னு ஒரே தன்னம்பிக்கை தளும்பி ஓடுது.  அருள் நிதி டான்ஸ் ஆட முயற்சி பண்ணிருக்காரு. அதுவும் அவர் முகத்துக்கு மட்டும் எக்ஸ்ட்ரா லைட்டிங்க். பாடி மூவ்மெண்ட்ஸ்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா மூஞ்சி மட்டும் சிரிச்சா மாதிரி எந்த ரியாக்சனும் இல்லாம அப்டியே இருக்கு. கொஞ்ச நாள் முன்னால “புலி உறுமுது புலி உறுமுது” பாட்டுல விஜய் முகத்துக்கு பதிலா மோடி முகத்த ஒட்ட வச்சி ஒரு மிக்ஸ் பண்ணிருந்தாங்க. மோடி மூஞ்சி அப்டியே இருக்கும் விஜய் பாடி மட்டும் மூவ்மெண்ட் காட்டும். இந்த இண்ட்ரோவ பாக்கும் போது எனக்கு அந்த மோடி வீடியோ ஞாபகம் தான்.ரொம்ப நேரம் அறுக்காம ஆங்கிலப் படங்கள் மாதிரி நேரடியா கதைக்குள்ள போயிடுறாங்க. இண்ட்ரொவ தவிற வேற பாட்டுங்க எதுவும் இல்லை. டிமாண்ட்டி காலனிக்குள்ள நுழையிறதுலருந்து, படத்தோட க்ளைமாக்ஸ் வரைக்கும் கொஞ்சம் கூட தொய்வில்லாம, எடுத்துட்டு போயிருக்காங்க. கிட்டத்தட்ட யாவரும் நலம் தியேட்டர்ல பாத்தப்போ இருந்த அதே ஃபீல்.

ரெண்டு மணி நேர படத்துல கிட்டத்தட்ட ஒண்ணே கால் மணி நேரம் ஒரே வீட்டுல தான் நடக்குது. நாலே கேரக்டர் தான். ரெண்டாவது பாதில அப்பப்போ ஆங்கிலப்படமான 1408 ன் தாக்கம் அதிகமா தெரியிறத தவிர்க்க முடியல. பயமுறுத்துறாங்கன்னு சொல்றத விட, சின்ன சின்ன ட்விஸ்டுங்கள நிறையா வச்சி ஆடியன்ஸ எங்கேஜ் பண்ணி வச்சிருக்காங்கன்னு தான் சொல்லனும்.

ஒரு ஓலைச்சுவடி ஜோதிடரா எம்.எஸ்.பாஸ்கர். ஒரு சீன் வந்தாலும் கலக்கிருப்பாரு. ஓலைச்சவடி பாக்குறவங்கள என்ன பண்ணுவாங்களோ அப்டியே பண்றாரு. (ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்). ஆனா அந்த சீன ரொம்ப காமெடியாவும், அவர கொஞ்சம் டுபாகூர் போலவும் காமிச்சிட்டு அவர் சொல்றது  எல்லாம் உண்மைன்னு சொல்றது தான் கொஞ்சம் உறுத்துற மாதிரி இருக்கு.

படத்துல இன்னொரு பெரிய ப்ளஸ் கேபா ஜெரிமியாவோட மியூசிக். முதல் படத்துலயே பட்டைய கெளப்பிருக்காரு. BGM செமையா இருக்கு. புதுசாவும் இருக்கு. கேமராவும் செம. டிமாண்டியோட கதை வரும்போது செம ரிச்சா இருக்கு. படம் முழுக்க மழை பெய்ஞ்சிக்கிட்டே இருக்கு. அதுவும் அந்த மழை பெய்யும் போது அருள் நிதி தங்கியிருக்க ஏரியா வியூ செம. அதுவே ஒரு பீதியக் கிளப்புது.


புது இயக்குனரான அஜய் ஞானமுத்துவோட இயக்கத்துல டிமாண்ட்டி காலனி கண்டிப்பா பாக்கலாம். அதுவும் திகில் படங்கள விரும்பிகள் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய படம். 

Saturday, May 16, 2015

புறம்போக்கு என்கிற புறம்போக்கு!!!


Share/Bookmark
ஒரு படத்துக்கு கதை திரைக்கதை எவ்வளவு முக்கியமோ அதே அளவு அந்தப் படத்தோட டைட்டிலும் முக்கியம். ஏண்ணா அந்தப் படத்தப் பத்தின மொத இம்ப்ரஷன குடுக்குறதே டைட்டில் தான். என்ன தான் அது படத்துக்கு ரொம்ப பொருத்தமான தலைப்புன்னாலும் கொஞ்சம் யோசிச்சி வைக்கிறது நல்லது. கொஞ்சநாளுக்கு முன்னால கருங்காலின்னு ஒரு படத்துக்கு பேரு வச்சிருந்தாய்ங்க. டேய் என்னடா இது. கருங்காலி பிக்காலின்னு. எவனையாவது கேவலமா திட்டுறதுக்கு தான் நம்ம கருங்காலிங்குற பேர யூஸ் பண்ணுவோம். இப்புடி ஒரு டைட்டில கேட்டா மொதல்ல படத்துக்கு போகத் தோணுமா இல்லை  எவனாவது கேட்டா என்ன படத்துக்கு போறோம்னு ஒழுங்கா சொல்லத்தான் முடியுமா? ”எங்கடா போற… கருங்காலிக்கு போறேன்”.. அவ்ளோதான் நம்மள ஒரு மாதிரி பாக்க ஆரம்பிச்சிருவாய்ங்க.

இப்ப அதே மாதிரி ஒரு பீலிங்க குடுக்குற டைட்டிலோட வந்துருக்கதுதான் நம்ம புறம்போக்கு என்கிற பொதுவுடைமை. ஒரு பெரிய இயக்குனர் கதைக்கு தகுந்த மாதிரியான ஒரு டைட்டிலத் தான் வச்சிருக்காருன்னாலும், இந்த டைட்டிலே ரொம்ப கேளிக்கு உள்ளாகுது. தேவி காம்ப்ளக்ஸ்ல பைக் பார்க்கிங் வழக்கமா பட வாரியா பிரிச்சி பிரிச்சி இந்தப் படம்லாம் அங்க விடு அந்தப் படம்லாம் அந்தாண்ட விடுன்னு சொல்லி பார்க் பண்ண வைப்பாய்ங்க. நேத்து செம காமெடி என்னன்னா பைக் டோக்கன் போடுறவரு “36 வயதினிலேயெல்லாம் அந்தப்பக்கம் விடு. பொறம்போக்கெல்லாம் இந்தப்பக்கம் விடு” ன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு. யோவ் பொறம்போக்கெல்லாம் இந்தப்பக்கம் விடுன்னா வெறியாயி எவனாவது வெளுத்துறப் போறாய்ங்களோன்னு நினைச்சிட்டு இருந்தேன். நல்ல வேளை கொஞ்ச நேரத்துல் அப்புடியே மாத்தி தேவியெல்லாம் இங்க விடு. தேவி பாலாவெல்லாம் அங்க விடுன்னு துதிய மாத்தி பாட ஆரம்பிச்சிட்டாரு

இது இப்டின்னா தியேட்டர் உள்ள விட்டப்புறம் “புறம்போக்கெல்லாம் வரிசையில நில்லுங்கப்பா” ன்னு இன்னொரு செக்யூரிட்டி சொல்ல ஆரம்பிச்சிட்டாரு.  படம் ஆரம்பிச்ச உடனே ஆர்யாவை காட்டும்போது “ஏய் பொறம்போக்குடா”  ன்னு பின்னாலருந்து ரெண்டு பேரு கத்துறாய்ங்க. இதெல்லாம் தேவைதானா. இந்த போஸ்டோட டைட்டிலயே பாருங்க. ரெண்டு தடவ புறம்போக்குன்னு படிக்க எவ்வளவு கடியா இருக்கு. சரி ரொம்ப லென்த்தா போயிட்டு இருக்கு. உள்ள போவோம்.

மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட்டுகளைக் குடுக்கலன்னாலும், தரமான சில படங்களைக் குடுத்து தனக்குன்னு ஒரு ஸ்டைலையும் பேரயும் உருவாக்கிக்கிட்டரு எஸ்.பி. ஜனநாதன். விஜய் சேதுபதி, ஆர்யா ஷாம்ன்னு மூணு ஹீரோக்கள வச்சி, ஒவ்வொருத்தருக்கும் ஈக்குவலான வெய்ட்டேஜ் உள்ளது மாதிரி திரைக்கதை எழுதி இயக்கிருக்காரு. இப்போ இந்த புறம்போக்கு படத்தைப் பற்றி பார்க்கவேண்டுமேயானல் குறைந்த பட்சம் நாம் பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரையாவது பின்னோக்கிச் செல்ல வேண்டும். அய்யயோ ரொம்ப பின்னோக்கி போறோமோ. சரி வேண்டாம் ஒரு எட்டு வருடம் பின்னோக்கி செல்வோம்.

பிரபு சாலமனோட இயக்கத்துல சிபிராஜ் நடிச்ச ”லீ” ன்னு ஒரு படம் 2007 ல ரிலீஸ் ஆச்சு. அதுல சிபிராஜ் ஒருத்தன கொலைவெறியோட தொரத்த, அவன் மரண பயம் எடுத்து ஒட்டிக்கிட்டு இருப்பான். ஏன் தொறத்துறாருன்னு நமக்கு தெரியாது. ஓடுற அவனுக்கும் தெரியாது. ஆனா அவன தொரத்தி ஒரு மொட்டை மாடிக்கு கொண்டு போய் அடிச்சி பிச்சி நாற உரிச்சி, மொட்டை மாடிலருந்து சிபி தொங்க விட்டுடுவாரு. தொங்கிக்கிட்டே அவன் மரண பயத்துல சிபிகிட்ட “உனக்கு என்ன வேணும்?” ன்னு கேக்க, சிபி அதுக்கு “எனக்கு ஒரு துப்பாக்கி வேணும்” ம்பான். அடப்பாவிகளா… காத தொடுறதுக்காடா இவ்வளவு தூரம் தொறத்திட்டு வந்தங்குற மாதிரி ஒரு துப்பாக்கிகாடா அந்தப் பச்சைப் புள்ளைய போட்டு இந்த அடி அடிச்சன்னு நமக்கு தோணும். அந்தப் படத்துல ஒரு துப்பாக்கி வாங்குறதுக்காகவே சிபி ரொம்ப கஷ்டப்பட்டு அவனப் போய் பாத்து இவனப் போய் பாத்து என்னென்னவோ பண்ணுவாறு.


என்னடா அட்லீஸ்ட் ஒரு துப்பாக்கி வாங்க  இவ்வளவு கஷ்டப்படுறான்னு நமக்கு தோணும். ஏன்னா நாம பாத்த சினிமா துப்பாக்கிங்குற விஷயத்த நமக்கு ரொம்ப சாதாரணமாக்கிருச்சி. மசாலாப் படங்கள்ல வர்ற ஒரு கடைநிலை அள்ளக்கை அடியாள் கூட துப்பாக்கி வச்சிருப்பான். அதனால சிபி துப்பாக்கி வாங்க ரொம்ப கஷ்டப்படுறாருன்னு காமிக்கும்போது அத அவ்வளவு சுலபமா ஏத்துக்க முடியல. ஆனா அவங்க காட்டியிருக்கதுதான் உண்மைரங்குறது வேற விஷயம்.

இப்ப புறம்போக்குக்கு வருவோம். கம்யூனிஸ்ட் கொள்கை கொண்ட புரட்சியாளரான ஆரியாவுக்கு, தேசத்துரோக குற்றத்துக்காக 3 தூக்கு தண்டனை விதிக்கிறாங்க. அவர ஒழுங்கான முறையில, ஒரு குறிப்பிட்ட தேதிக்குள்ள தூக்கு போடனும்னும், தூக்கு போடுறதுல எக்ஸ்பெர்ட்டான ஒருத்தர வச்சித்தான் தூக்கிலிடனும்ன்னும் தீர்ப்புல சொல்றாங்க. ஆர்யா இயக்கத்த சேர்ந்தவங்க அவர தப்பிக்க வைக்க முயற்சி பண்ணுவாங்கங்குறதுக்காக அத மெக்காலேங்குற போலீஸ் ஆஃபீசரான ஷாம்கிட்ட ஒப்படைக்கிறாங்க. யாரவச்சி தூக்குல போடப் போறாங்கங்கன்னு மீடியா எல்லாம் ஆவலா எதிர்பார்க்க, தூக்குல போடுறதையே பரம்பரை தொழிலாக செய்யும் எமலிங்கம் (எ) விஜய் சேதுபதிய செலெக்ட் பண்றாங்க.

இதற்கிடையில ஆர்யா இயக்கத்தை சேர்ந்த கார்த்திகா தலைமியிலான ஒரு சிறு கும்பல் ஆர்யாவை தப்பிக்க வைக்க விஜய் சேதுபதிய யூஸ் பண்ணிக்கிறாங்க. ஆர்யாவை எந்தப் பிரச்சனையும் இல்லாம தூக்குல போடனுங்குற ஒரே இலக்கோட இருக்காரு ஷாம். கார்த்திகா கும்பல் விஜய் சேதுபதிய யூஸ் பண்ணி ஆர்யாவை தப்பிக்க வச்சாங்களா இல்லையாங்குரது தான் மீதிக் கதை.

இப்ப படம் பாக்குற நமக்கு உள்ள ப்ரச்சனை ஒண்ணே ஒண்ணு தான். இதுவரைக்கும் பல தூக்கு தண்டனை அரங்கேற்றங்களை நாம சினிமாவுல பாத்துருக்கோம். வெள்ளைக்கலர் டவுசர் போட்டுக்கிட்டு, பெரிய மீசையோட ஒருத்தர் அந்த தூக்கு போடுற லீவர கையில புடிச்ச மாதிரி நிப்பாரு. கைதிக்கு கருப்பு துணிய மாட்டி விட்டப்புறம் போலீஸ்காரர் வாட்ச பாத்து தலைய அசைக்க, டவுசர் போட்ட மீசக்காரர் படக்குன்னு லீவர இழுப்பாரு. இல்லை அவரு லீவர இழுக்க போற சமயத்துல யாராவது வந்து நிறுத்துங்கன்னு சொல்லி தண்டனைய கேன்சல் பண்ணிருவாங்க. அவ்வளவு தான் அந்த லீவர புடிச்சி இழுக்குறவருக்கு நாம குடுக்குற இம்பார்ட்டன்ஸ் இது வரைக்கும்.

ஆனா இங்க அது தான் மெயினே. படத்தோட ஆரம்பத்துல ஆர்யாவை யார் தூக்கு போட்டு சாகடிக்கப் போறதுங்குறதையே ஒரு பெரிய ப்ரச்சனையா பேசுறாங்க. நமக்கு “என்னய்யா இதெல்லாம் ஒரு ப்ரச்சனையா” அப்டிங்குற மாதிரி தோணுது. ஆனா அவங்க காமிக்கிறது தான் உண்மை. இந்த உண்மைய நாம புரிஞ்சிக்கிட்டு படத்தோட நம்மள இன்வால்வ் பண்ணிக்கிறதுக்கு கொஞ்சம் நேரம் ஆகுது. தூக்குல ஒருத்தன போடுறதுங்குறது சாதாரண விஷயம் இல்லைங்குறது விஜய் சேதுபதி கேரக்டரோட கொஞ்சம் பழகுனப்புறம் தான் நமக்கு நல்லா புரிய ஆரம்பிக்குது.  அதுக்கப்புறம் படத்தோட கடைசி வரைக்கும் நாம அந்த ட்ராக்க விட்டு விலக மாட்டோம்.

படத்தோட மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்டே விஜய் சேதுபதி தான். அசால்டு பண்ணிருக்காரு. ரொம்ப சாதாரணமான வசனம் கூட அவர் ஸ்லாங்குல சொல்லும்போது செமையா இருக்கு. காளி முன்னால நின்னு வசனம் பேசுற ஒரு சீன்லயும், க்ளைமாக்ஸ்லயும் செமைய நடிச்சிருக்காரு.

ஆர்யாவை மொதல்ல காமிக்கும்போதே இவர் ஆஃப்கானில் ஆயுத பயிற்சி பெற்றவர்னு பல கெட்டப்புல ஃபோட்டோஷாப் பண்ணி காமிக்கிறாங்க. ஒசாமா பில் லேடன் மாதிரியான கெட்டப்பும் அதுல இருக்கு. அந்த ஸ்லைடு காமிச்சவுடனே பாதிபேரு சிரிச்சிட்டாய்ங்க. அவர சுத்தி ஒரு மிகப்பெரிய இயக்கம் இருக்கது மாதிரியும் , ”இண்டர் நேஷனல லெவல்ல லிங்கு இருக்குடா என் நொங்கு” ங்குற மாதிரியும் சித்தரிக்கிறாங்க. ஆனா அவருக்கு சொல்லப்படுற ஃப்ளாஷ்பேக்குல அந்த இம்பேக்ட குடுக்குற அளவுக்கு எதுவும் இல்லை. அதுவும் ஆரம்பத்துல தண்டனை கிடைச்ச ஆர்யா ஷாம் கிட்ட  அவரோட வழக்கமான ஸ்லாங்கான “என்னே பாஸ்… சொல்லுங்கே பாஸ்…” ங்குற மாதிரி பேசிட்டு வர்றாரு. ஆர்யாவை அந்தக் கேரக்டருக்கு பொருத்திப் பாக்கவே நமக்கு நேரம் ஆகுது. ஆனா போகப்போக  அதுவே பழகிருது.  

ஷாம் மெக்காலேங்குற போலீஸ்காரரா நல்லாவே நடிச்சிருக்காரு. சொந்தக் குரல் போல. கொஞ்சம் சகிக்கல. படத்துல கடுப்பேத்துற மாதிரியான விஷயம்னா கார்த்திகாவும் அவர் கூட இருக்க நாலு அல்லக்கைகளும் தான். அவய்ங்க எதோ பண்ணிட்டு இருக்காய்ங்க. இங்க்லீஸ்காரன் வடிவேலு கூட கல்யாணத்த நிறுத்துற குரூப் மாதிரி இவய்ங்க விஜய் சேதுபதிய கொல்லப்போறேன்னு சொல்லிட்டு போகும் போது தெரியிறாங்க.

எஸ்.பி.ஜனநாதன் ஆரம்பத்துல கொஞ்சம் போரடிக்க வச்சாலும், ஒரு அரைமணி நேரத்துல படத்துக்குள்ள இழுத்துடுறாரு. ஆனா அவர் படிச்ச கம்யூனிச புத்தகங்கள்ல உள்ள அத்தனை வசனங்களையும் ஒரே படத்துல இறக்கப் பாத்துருக்காரு. நிறைய இடங்கள்ல வசனங்கள் வலுக்கட்டாயமா திணிக்கப்பட்டது மாதிரி இருக்கு.

பாடல்கள்லாம் வர்ஷன்னு ஒருத்தர் போட்டுருக்காரு. அவ்வளவு சிறப்பா சொல்லிக்கிற மாதிரி இல்லை. ஸ்விஜய் சேதுபதியோட இண்ட்ரோ சாங் “சந்து மொனையில ஆளுவல்லி கிழங்கு விக்கிற ஆயா” ன்னு ஒரு பாட்டு. அப்புடியே அந்தப் பாட்டு மலேசியா வாசுதேவன் பாடுன மாதிரியே இருக்கு. டன் ஆயிட்டேன். அதக் எனக்கு கேட்ட உடனே “சல்லாம் போடு குருவே… நா சால்ட்டு கோட்டா சிலுவை” ஞாபகம் வந்துருச்சி. என்னைய மாதிரியே மலேசியா வாசுதேவன மிஸ் பண்றவங்க யாராவது இருந்தா அந்தப் பட்ட கேளுங்க. (http://www.isaikadal.com/purampokku-2015/) இந்த லிங்க்ல ரெண்டாவது பாட்டு. மிஷன் இம்பாஸிபில், நார்னியா, பாட்ஷான்னு கண்ட இடத்துலருந்து BGM ah ஆட்டைய போட்டு போட்டுருக்காய்ங்க. கடைசியா BGM யாருன்னு பாத்த நம்ம ஸ்ரீகாந்த் தேவா.

சினிமோட்ட்டோகிராஃபியும் சூப்பர். எந்த ஊர்ல எடுத்தாங்கன்னு தெரியல. அந்த ஜெயில் காட்சிகளல்லாம் பாக்கும் போது எதோ ஒரு வித்யாசமான ஃபீல் இருக்கு. விஜய் சேதுபதி, ஆர்யா, ஷாம் இவங்க மூணு பேரோட ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் செம. மொத்தத்துல புறம்போக்கு என்கிற ஒரு பொதுவுடைமை நிச்சயம் ஒருதடவ பாக்கலாம். 


Tuesday, May 12, 2015

தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க - மம்மி வெர்ஷன்!!!


Share/Bookmark

குறிப்பு : இந்தப்பதிவு வெறும் நகைச்சுவைக்காகவே... எந்தக்கட்சியையும் சார்ந்து எழுதப்பட்டதல்ல.. (அவ்வ்வ்)


Sunday, May 3, 2015

உத்தம வில்லன் – சேகர் செத்துருவான்!!!


Share/Bookmark
முன்னெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆகும்போதும் எல்லாரும் கேக்குற ஒரு கேள்வி ”படம் நல்லாருக்கா நல்லா இல்லையா? ங்குறது தான். ஆனா இப்ப கொஞ்சம் ட்ரெண்டு மாறி “படத்த முழுசா பாக்க முடியுமா முடியாதா? ங்குற கேள்வியத்தான் இப்ப வர்ற படங்கள்லாம் நம்மள கேக்க வைக்கிது. ஒவ்வொரு படத்துலயும் வித்யாச வித்யாசமா மொக்கைய போட்டு தெறிச்சி ஓட வைக்கிறாய்ங்க. படங்களை தரத்தின் அடிப்படையில முன்று பிரிவா பிரிக்கலாம். அவையாவன ஜில், ஜங், ஜக். இந்த ஜக் வகை மொக்கை படங்களை இதற பரிணாம வளர்ச்சியை வச்சி பிப்பா, பிஃப்பா, பிம்ளக் ன்னு மூணு வகையா பிரிக்கலாம். அந்த பிம்ளக் வகையைச் சேர்ந்த ஒரு படம் தான் நம்ம உத்தம வில்லர்.

நண்பர்களுக்கு ஒரு எச்சரிக்கை. நீங்க உத்தம வில்லன் படம் பாக்கனும்னு ஒரு ஐடியா வச்சிருக்கீங்களா? முதல்ல ஆசை, கோபம், விருப்பு, வெறுப்புன்னு உங்களுக்குள்ள மனிதர்களுக்குள்ள உள்ள உணர்வு இருந்துச்சினா கண்டிப்பா உங்களால இந்தப் படத்த முழுசா பாக்க முடியாது. மேற்கூறிய அனைத்து உணர்ச்சிகளையும் துறந்து நீங்க ஒரு ஜென் நிலையை அடைஞ்சா மட்டுமே உத்தம வில்லனின் க்ளைமாக்ஸ் வரை உங்களால் தாக்கு பிடிக்க முடியும் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவன் ஒரு ரஜினி ஃபேன்பா. உடனே கமல் படத்த ஓவர் மட்டமா பேசுவான்னு மட்டும் தப்பா நினைச்சிட்டு, மேல நா குடுத்த எச்சரிக்கையை ரொம்ப லைட்டா எடுத்துக்கிட்டீங்கன்னா நிச்சயம் வருத்தப்படுவீங்க. நா காலேஜ்லருந்து பாத்த பல சரித்திர மொக்கை படங்களை ஒன்றிலிருந்து பத்தாக வரிசைப்படுத்தி வச்சிருந்தேன். நேத்து பாத்த புது வரவான உத்தம வில்லன் நேரடியா அந்த டாப் டென்ல முதல் இடத்த புடிச்சிருச்சின்னு சொன்னா அது மிகையாகாது. சரி வாங்க உத்தம வில்லரப் பத்தி கொஞ்சம் பாக்கலாம். கதையைத் தெரிஞ்சிகிட்டா படத்தோட சுவாரஸ்யம் (அவ்வ்) போயிருமோன்னு எதுவும் வருத்தப்படாதீங்க. நீங்க வருத்தப்பட இன்னும் நிறைய விஷயம் இருக்கு.

உச்ச நிலையில் இருக்கும் ஒரு பெரிய ஹீரோவுக்கு மூளையில கட்டி வந்துருது. சாகுறதுக்கு முன்னால கடைசியா தன்னோட குருநாதரான பாலச்சந்தரோட சேந்து ஒரு படம் பண்ணலாம்னு முடிவு பண்ணி அவர அப்ரோச் பண்றாரு கமல். மூளையில கட்டி இருக்கது தெரிஞ்சதும் அவர் உடனே கமல வச்சி படம் பண்ண ஒத்துக்கிறாரு. என்ன படம் மாதிரி படம் பண்ணலாம்னு பாலச்சந்தர் கமல்கிட்ட கேக்க “படம் பாத்துட்டு வெளில போகும்போது தியேட்டர்லருந்து எல்லாரும் சிரிச்சிட்டே போகனும் சார்.. காமெடி பண்ணுவோம்” ங்குறாரு. உண்மையிலேயே உத்தமவில்லன் படத்த பாத்துட்டு வெளில வரும்போதும் எல்லாரும் சிரிச்சிட்டே தான் வர்றாய்ங்க. என்ன கொஞ்சம் நார்மலா சிரிக்காம காதல் பரத் மாதிரி தலைய சொறிஞ்சிக்கிட்டே “ஞா..ஞா..ஞா” ன்னு சிரிச்சிட்டு வர்றாய்ங்க.

உடனே அவர்களோட காமெடிப்படம் தொடங்கப்படுது. அந்தப் படதோட பேர்தான் உத்தம வில்லன். என்ன செஞ்சாலும் சாகாத உத்தமன்ங்குற ஒரு கேரக்டர சுத்தி நடக்குற ராஜா காலத்து கதை தான் அந்த உத்தமவில்லன். அது வேற செம காமெடி படமா… காமெடி பண்றாங்க பாருங்க… சிரிச்சி சிரிச்சி வயிறு வலிச்சிருக்கும்னு நினைச்சி வயித்துவலி மாத்திரையெல்லாம் எதுவும் எடுத்துட்டு போயிடாதீங்க. அந்த மாதிரி அசம்பாவிதம் எதுவும் நடக்கவே இல்லை. ஒரு இடத்துல கூட மருந்துக்கும் சிரிப்பு வராது.  

அந்தக் கதையில் வரும் வில்லத்தனமான ராஜாவாக நாசர். இம்சை அரசனில் வடிவேலு செஞ்ச காமெடியவே திரும்ப நமக்கு செஞ்சி காமிச்சி அருத்துக் கொல்றாரு. சமீப காலத்துல நாசர எந்தப் படத்துலயும் இவ்வளவு மொக்கை பண்ணதில்லை. அதுவும் ஒரே காமெடியை அம்பது இடத்தில் ரிப்பீட் அடிக்கிறாய்ங்க. மொத தடவையே அதப் பாத்தாலே சிரிப்பு வர மாட்டேன்ங்குது. இதுல திரும்பத் திரும்ப. குறிப்பா நாசரோட காது காமெடியும், ஹீரோயின் கமல்கிட்ட புலிய பழக்கி விடும்போது வரும் காமெடியும் (?).

ஷூட்டிங் ஒரு பக்கமா போயிட்டே இருக்க, கமலுக்கு மூளையில் கட்டி இருக்கது ஒவ்வொருத்தருக்கா தெரிய ஆரம்பிக்குது.  கரெக்டா உத்தம வில்லன் ஷூட்டிங் முடியிறதுக்கும் கமல் நோயோட உச்சகட்டத்த அடையிறதுக்கும் சரியா இருக்கு.ஆப்ரேஷன் தியேட்டர். ஆப்ரேஷன் பன்னா 50-50 chance தான். பிழைத்தால் பிழைக்கலாம். இல்லைன்னா கஷ்டம். கமல் கடைசில பிழைச்சாரா இல்லியாங்குறத நீங்களே படத்த பாத்து தெரிஞ்சிக்குங்க. சாதா ஹீரோக்களோட படங்கள்னா ஆப்ரேஷன் முடிஞ்சி வெளில வந்து டாக்டர் “இட்ஸ் எ மெடிகல் மிராக்கிள்” ன்னு சொல்லுவாறு. ஆனா இவரு உலக நாயகர். எதையுமே வித்யாசமா உலகத்தரத்தில் செய்யக்கூடியவர். அப்போ க்ளைமாக்ஸ் என்னவா இருக்கும்னு நீங்களே கெஸ் பன்னிட மாட்டீங்களா என்ன?

கமல் ஒரு மிகச் சிறந்த நடிகர்ங்குறதுல எந்த சந்தேகமும் இல்லை. ஆனா ஒருத்தர் ஒரு வேலையை ஒழுங்கா செஞ்சாதான் அதோட அவுட்புட் நல்லா வரும். நமக்கு எல்லாம் தெரியும்னு நாய் வாய வைக்கிற மாதிரி பாக்குற எல்லா இடத்துலயும் கொஞ்சம் கொஞ்சம் வச்சிட்டு போனா இப்படித்தான். கமல் ஒரு நடிகரா, அவர ஒரு இயக்குனர்கிட்ட ஒப்படைச்சிட்டு வாய மூடிட்டு இருந்தா அவர வச்சி எவ்ளோ பெரிய ஹிட்டெல்லாம் குடுக்க முடியும். கேங்கும் நா தான் லீடரும் நாதான். ஐ ஆம் ஸ்டோரி, ஐ ஆம் ஸ்க்ரீன் ப்ளே. ன்னு இருந்தா என்ன செய்றது.

என்னடா இவன் ஓவரா பேசுறானேன்னு நினைக்காதீங்க. நா சமீபகாலத்துல பாத்த மிகச்சிறந்த மொக்கை இந்தப் படம். எந்த இடத்துலயுமே படம் பாக்குறவங்கள கவராத ஸ்க்ரீன் ப்ளே. கமலின் வழக்காமான் அதிகப்பிரசங்கித் தன கேரக்டர்கள். ஜெராமும் அவர் பொண்ணும் வந்து மலையாளம் பேசுறாங்க. கமலோட மனைவியும், மாமனாரும் தெலுங்கு. கமலின் மகன் ஆங்கிலத்துல அதிக பீட்டர்ன்னு எல்லாமே எரிச்சலைக் கெளப்புது.

மீசிக்க ஜிப்ரான்கிட்ட குடுத்துருக்காரு. புது மியூசிக் டைரக்டர நம்பி கமல் தைரியமா படம் குடுத்துருக்காருபான்னு ஏகப்பட்ட அளப்பரைகள். “பேக்கரிய நீ வச்சிக்க உங்க அக்காவ நா வச்சிக்கிறேன்” ங்குற டீல் மாதிரி மியூசிக்க நீ போடு பாட்டெல்லாத்தையும் நானே பாடிக்கிறேன்னு டீல் போட்டுருப்பாப்ள போல. அது கூட பரவால்ல.. பக்கும் பக பக பக பக ன்னு ஒரு தீம் வருது. அதுலயும் பகபகபக ன்னு இவரு தான் வந்து கத்துறாப்ள. ஆனா படத்துல மியூசிக்க குறை சொல்ல முடியாது. பாடல்களும் சரி, BGM உம் சரி அருக்கல. ஆனா அதை தவற மத்ததெல்லாம் அருத்துச்சிங்குறது வேற விஷயம்.

ஒவ்வொரு காட்சியும் ரொம்ப ரொம்ப நீளம். சீரியல விட மோசமா ஓடிக்கிட்டு இருக்கு. படம் ஆரம்பிச்சி, ஆடியன்ஸ் படத்துக்குள்ள போறதுக்குள்ள கமல் ஜெயராம் பேசிக்கிற மாதிரி ஒரு ரொம்ப நீளமான சீன். பாதி பேர் அப்பவே வெறியாயிட்டாய்ங்க. கூட்டத்துலருந்து ஒருத்தன் “யோவ் படத்த போடுங்கையா” ன்னு கத்த ஆரம்பிச்சிட்டான். அதவிடக் கொடுமை செகண்ட் ஹாஃப் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே ஒரு பத்துபேர் கொண்ட குழு தியேட்டர விட்டு வெளிய பொய்ட்டு போன வேகத்துல திரும்ப உள்ள வந்து “பைக்க எடுக்க முடியல பாஸூ” ன்னு சலிச்சிக்கிட்டு உக்காருறாய்ங்க.

படத்துல கமல் 25 வருஷதுக்கு முன்னால பிரிஞ்ச காதலிக்காக ரொம்ப வருத்தப்படுறாரு. அதுவும் ஆண்ட்ரியா கூட ரொமான்ஸ் பண்ணிக்கிட்டே. வீட்டுல மனைவியா ஊர்வசி வேற. எனக்கு உடனே வடிவேலு காமெடிதான் ஞாபகத்துக்கு வந்துச்சி. உனக்கு இவன் எத்தனையாவது? “அஞ்சாவது” அப்ப உனக்கு ? “ஏழாவது” உன்ன விட ரெண்டு லீடிங்குன்னு.

படத்தில் நல்ல காட்சிகள்னு பொறுக்குனா ஒரு மூணு நாலு தேறும். கமல் பாலச்சந்தர்கிட்ட என்கதைய சொல்றதுக்கு ஒரு நிமிஷம் குடுங்க சார்னு சொல்லிட்டு “ஹீரோவுக்கு மூளையில கட்டி” ன்னு சொல்வாறு. உடனே பாலச்சந்தர் ”போடா இது பல படத்துல வந்துருச்சி”ன்னு சொன்னதும், “சார் இது படத்து கதை இல்லை.. என்னோட கதை.. படத்துக்கு இனிமே தான் கதை புடிக்கனும்” ன்னு சொல்வாரு. அப்புறம் கமல் அவர் பையன் கிட்ட உண்மைய சொன்னதும் ரெண்டுபேரும் அழுற சீன் செம்ம. எம் எஸ் பாஸ்கர் அழுது பர்ஃபார்மென்ஸ் பண்ற சீனும் சூப்பர்.

ரியலாக வரும் காட்சிகள் சாதா அருவை ரகம்னா, உத்தமனோட கதையில வர்ற காட்சிகள் மெகா அருவை. உத்தம வில்லனுக்கு ஒரு வெளக்கம் வேற. வில்லப் புடிக்கிறவன் வில்லனாம். ஆனா கடைசி வரைக்கும் உத்தமன் வில்ல கண்ணால கூட படத்துல பாக்க மாட்டாரு. உத்தமனோட கதை க்ளைமாக்ஸ்ல திடீர்னு அந்த ராஜாவே நீங்க தான் சார்ன்னு விடுறாங்க ரீலூ. இதெல்லாம் என்ன கணக்குன்னே தெரியல.
பூஜா குமார் கப்பி. ஒரு சில ஆங்கிள்ல ஓக்கே. ஆனா அவருக்குண்டான வசனங்களும் அத அவர் பேசும்போது குடுக்குற ரியாக்‌ஷனும் செம்ம கடி. ஆண்ட்ரியா பாத்திரமாகவே மாறியிருக்கிறார் (பாத்திரத்த சமீபத்துலதான் பாத்தேன் டாக்டர்).

ஆனா இப்ப ஒரு செம காமெடி என்னன்னா யாருமே இத ஒரு மொக்கை படம்னு ஒத்துக்க மாட்டாய்ங்க. அதாவது கமல் அருமையா படம் எடுத்துருக்கதாகவும், அவர் எடுத்தது நமக்கு தான் புரியாம படம் நல்லா இல்லைன்னும், இந்த உத்தம வில்லன் இன்னும் 15 வருஷத்துக்கு அப்புறம் வர வேண்டிய படம் இப்பவே வந்துருச்சின்னும் நம்ம காதுலயே ரீல் சுத்துவாய்ங்க. அதுக்கும் மேல இன்னும் சில பேரு ட்ரிக்ஸா ஒண்ணு சொல்லுவாய்ங்க பாருங்க “எனக்கு புடிச்சிருக்குப்பா” ன்னு. அவிங்கள மட்டும் அசைக்க முடியாது. இன்னொரு குரூப்பு இங்க வந்து “லிங்காவுக்கு இது பரவால்லை”ன்னு கமெண்டு போடுவாய்ங்க. வக்காளி வெறியாயிருவேன் பாத்துக்குங்க.


மொத்தத்துல உங்களோட பொறுமையின் அளவை சோதிச்சி பாக்க ஆசைப்படுறவங்க உத்தம வில்லனுக்கு போங்க. அவர் பாஷையிலயே சொல்லனும்னா “படம் செம மொக்கைன்னு சொல்லல.. செம மொக்கையா இல்லாம இருந்தா நல்லாருந்துருக்கும்” அம்புட்டுத்தேன். 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...