Saturday, March 29, 2014

LEGEND - பாலைய்யா வஸ்தாவய்யா!!!


Share/Bookmark
தலைப்ப பாத்ததும் படிக்கிறவங்களத் தவற “இவன் ஏண்டா இப்புடி பாலகிருஷ்ணா படத்துக்கெல்லாம் போய் அடிவாங்குறான்”ன்னு எம்மேல பாவப் படுறவங்கதான் அதிகமா இருப்பீங்க. ஏன்னா பாலகிருஷ்ணாவ நம்மூர்ல அப்டித்தான் வச்சிருக்கோம். ஜெய் சென்னா கேசவான்னு பாலைய்யா சொன்னதும் ட்ரெயின் பொட்டி தனியா கழண்டு ரிவர்ஸ்ல ஓடுறது தான் பாலகிருஷ்ணா பேர சொன்னதும் நமக்கு ஞாபகம் வரும். அதுமட்டும் இல்லை இன்னொரு படத்துல மாடில நிக்கிறவரு திடீர்னு நாலு கேரி பேக்க எடுத்து ஊதி பலூன் மாதிரி முட்டில கட்டிக்கிட்டு கீழ குதிப்பாரு. அடிபடாம இருக்க டேக்டிக்ஸ். அவரு எதுவும் கட்டாம குதிச்சிருந்தா கூட யாரும் கேள்வியெல்லாம் கேக்கப்போறதில்லை, அப்புறம் இன்னொரு படத்துல வில்லன்கள்ல்லாம் AK 47, PK 57 ல்லாம் வச்சிகிட்டு நிப்பாங்க. நம்மாளு அவங்களுக்கு முன்னால பழங்காலத்து வாள் ஒண்ண எடுத்துகிட்டு போய் நிப்பாரு. என்னாடான்னு பாத்தா அந்த வாள லைட்டா சூரியனுக்கு முன்னால ஆட்டுனோன , அந்த கத்தி க்ளார் அடிச்சி அந்த வெளிச்சம் பட்டு வில்லன்களோட கண்ணு கூசுது. டக்குன்னு அவனுங்கள அடிச்சிபோட்டுட்டு நம்மாளு துப்பாக்கிய புடுங்கிருவாரு.

சரி.. இவ்வளவு வக்கனையா பேசுறியே அப்புறம் எதுக்கு படத்துக்கு போனன்னு கேப்பீங்க. காரணம் இல்லாம நா எங்கயும் போய் அடி வாங்கமாட்டேன். நா அதிக தடவ பாத்த தெலுகு படங்கள்ல பாலகிருஷ்ணாவ வச்சி இதே போயப்பட்டி சீனு எடுத்த சிம்மா படமும் ஒண்ணு. பாலகிருஷ்ணா மேல இருந்த அபிப்ராயத்த மொத்தமா மாத்துன படம் அது. வழக்கமான தெலுகு ஓவர்டோஸ் காட்சிங்க பல இருந்தா கூட சில சீன்ல அப்டியே
புல்லரிச்சிரும். உதாரணத்துக்கு ஒரு சீன்

”என்ன கொல்றதுக்கு இந்த ஊர்ல யாரு இருக்கா.... “ம்பான் ஒரு கொடூர வில்லன்

”தேவுடு” அப்டிங்கும் அந்த அம்மா..

”கடவுளா? எங்க? வரசொல்லு பாப்போம்..” ம்பான் அவன்.

”டேய் எங்க எங்கன்னு கேக்காதடா..  எதிர்ல வந்து நின்னாருன்னா எரிஞ்சி சாம்பலாயிடுவ”ங்கும்  அந்தம்மா

உடனே அந்த அம்மாவ ரயில்வே ட்ராக்ல தள்ளி விட்டு

”உனக்கு சாவு வருது... இப்போ உன் சாவு முன்னால வருதா... இல்லை உன் தேவுடு முன்னால வர்றாரா பாப்போம்.. டேய் கடவுள் வர்றாரான்னு பாருங்கடா” ன்னு சொல்ல

வில்லனோட அள்ளக்கை “நீ இருக்கன்னு  தெரிஞ்சா அந்த கடவுள் கூட இங்க வரமாட்டாருன்னா”ன்னு சொல்லிக்கிட்டே அந்த அம்மாவ வெட்டப்
போகும் போது டக்குன்னு நம்ம கஜேந்ராவுல வர்ற மாதிரி சிங்கம் படம் போட்ட கோடாரி கத்தி  ஒண்ணு வந்து அவன் நெஞ்சுல சத்துன்னு பாயும்....

யார்ரான்னு எல்லாம் திரும்பிப்பாக்க ரயில்வே ட்ராக்குக்கு அந்தப்பக்கம் பாலையா கெத்தா நிக்க பின்னால வானத்துல இடி இடிக்கும்.. உடனே அந்த அம்மா

“எங்க இருக்காரு எங்க இருக்காருன்னு கேட்டல்ல... தேவுடு ஒச்சாடுரா “ ன்னு வெறித்தனமா அந்தம்மா சொல்லும். பாலகிருஷ்ணாவுக்கே அந்த சீன் இவ்வளவு effective ah இருக்குன்னா நம்ம தலைவர்லாம் அதே சீன்ல நடிச்சிருந்தா எப்டி இருந்துருக்கும்னு நிறைய தடவ யோசிச்சிருக்கேன்.

(http://www.youtube.com/watch?v=drnwlsrXTdI)



அதே மாதிரி செம பவர்ஃபுல்லான சீன்களோட  வந்து ஜெயிச்சதுதான் 2010 ல வந்த சிம்மா. திரும்பவும் அதே கூட்டணி சேர்ந்துருக்கேங்குற நம்பிக்கையில தான் போனேன். பெரிய அடி ஒண்ணும் இல்லை. படம் ஓக்கே தான். திரும்ப அதே சிம்மாவ லைட்டா டிங்கரிங் பண்ணி எடுத்துருக்காங்க.

இந்த போயப்பட்டி சீனுவுக்கு வேற கதையே தெரியாது போல. ஊர்ல ஒரு பெரிய குடும்பம் இருக்கும். அந்த குடும்பந்தான் ஊர்ல யாருக்கு என்ன ப்ரச்சனை வந்தாலும் தீர்த்து வைக்கும். அந்த பெரிய குடும்பத்துல ஒருத்தர் தான் நம்ம சுமன் (எல்லா படத்துலயும்). அந்த பெரிய குடும்பத்துக்கு தொல்லை குடுக்குறதுக்காகவே ஊர் ஜனங்களை கொடூரமா கொல்லுற ஈவு இறக்கம் இல்லாத வில்லன் குடும்பம் ஒண்ணு இருக்கும். இவிங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கிறது தான் கதை. சிம்மாவும் அதே தான். அடுத்து வந்த ஜூனியர் NTR ரோட தம்முவும் அதே தான். இப்போ இந்த LEGEND உம் அதே தான்.

சிம்மாவுல கூட பாலைய்யா டாக்டரா இருப்பாரு. அப்டியே சைடுல அநியாயத்த தட்டிக் கேப்பாரு. ஆனா இதுல  அநியாயத்த தட்டிக்கேக்குறது தான் வேலையே. சும்மா இதே பொழப்பா திரியாம சார் அப்டியே எதாவது வேலைவெட்டிக்கு போங்க சார். முதல் பாதில YO YO பாயா வந்து தாறுமாறு குத்தாட்டமெல்லாம் போட்டு செம்ம சிரிப்பு காட்டுறாரு. பாலகிருஷ்ணாவ நம்மாளுகதான் ஓட்டுறாய்ங்கன்னா அவிங்க ஊர்ல அதுக்கும் மேல ஓட்டுறாய்ங்க. கஷ்டப்பட்டு எடுத்த ஃபைட் சீன்லயெல்லாம் பயபுள்ளைங்க சிரிச்சிக்கிட்டு இருக்குங்க. ப்ரம்மானந்தம் கால் மணி நேரமே வந்தாலும் சூப்பர். வழக்கமான தாறுமாறு காமெடி. அவரு பேரு Bendu மாணிக்கம். அதாவது பாம்பேல உள்ள ரவுடிங்களை எல்லாம் பெண்டு எடுத்ததால வந்த பேராம். ப்ரம்மு பாட்ஷா ரஜினி கெட்டப்ல வர்றது
செம.


பாட்டு ஃபைட்டு காமெடின்னு போயிட்டு இருக்க படத்துல ஒரு ட்விஸ்ட்ட வச்சி “LEGEND JUST ARRIVED"  ன்னு போட்டு இண்டர்வல் விடுறாங்க. அடப்பாவிகளா இத மொதல்லையே சொல்லிருந்தா நாங்க டைரக்டா இண்டர்வல் முடிஞ்சப்புறமே வந்துருப்போமேடா... நம்ம LEGEND பாலைய்யா ghost rider பைக்குக்கு  மஞ்ச பெயிண்ட் அடிச்சா மாதிரி ஒரு பைக்க எடுத்துக்கிட்டு தப்ப தட்டிக்கேக்குறாரு. பாக்குறவங்களயெல்லாம் அந்த கஜேந்த்ரா கத்திய வச்சி பொளந்து கட்டுறாரு. திடீர்னு ஆக்‌ஷன்லருந்து மாறி “பொண்ணுன்னா யாருன்னு தெரியுமாடா.. நம்மள பத்து மாசம் சுமந்து பெக்குறவதாண்டா பொண்ணு.. நமக்கு ஒண்ணுன்னா நம்ம கூடவே இருந்து பாத்துக்குறா பாரு அவ தாண்டா பொண்ணு” ன்னு செண்டிமெண்ட போட்டு தாக்குறாரு. அய்யய்யோ.. நாட்டாமை படத்துக்கு வசனம் எழுதுன யாரோ அந்தப்பக்கம் பொய்டாங்க போல. எத்தனை தடவ.

அங்கங்க ரெண்டு மூணு சூப்பர் சீனும் வருது. பாலைய்யா வில்லன்கிட்ட ஒரு ட்ரெயின் கதை சொல்றாரு.

பாலைய்யா : ரயில்வே ட்ராக்குல ஒருத்தன் வேகமா ஓடுறான். அவனுக்கு எதுத்தாப்புல ஒரு ட்ரெயின் வேகமா வருது. ட்ரெயின் அவன அடிச்சி தூக்கிட்டு போயிடுது. இதுல ட்ராக்ல ஓடுனவன பத்தி நீ என்ன நெனைக்கிற?

வில்லன் : ரிஸ்க் எடுத்துருக்கான்

பாலைய்யா : அதே ட்ராக்ல ஒருத்தன் வேகமா ஓடுறான். ட்ரெயின் அவன் பின்னால வருது. அவன அடிச்சிட்டு ட்ரெயின் போயிடுது. இப்போ என்ன நெனைக்கிற?

வில்லன் : இப்பவும் அவன் ரிஸ்க் எடுத்துருக்கான்.

பாலைய்யா : அந்த ரெண்டு கதையிலயிமே வர்ற ட்ரெயின் நாந்தான். எங்க இருந்தாலும் அடிச்சி  தூக்கிட்டு போயிட்டே இருப்பேன்னு கெத்தா சொல்லுவாரு.

ரொம்ப நேரம் ஓடுற ஃப்ளாஷ்பேக்ல கடைசில legend சார் ஒரு லவ் சாங் பாடப்போக மொத்த தியேட்டருமே கொந்தளிச்சிட்டாய்ங்க. படத்துல 1st half தனி படமாவும் 2nd half தனி படமாவும் ஓடுது. அதவிட கொடுமை க்ளைமாக்ஸ் ரெண்டுக்குமே சம்பந்தம் இல்லாம அரசியல உள்ள கொண்டு வந்து கடுப்பேத்துறாங்க. வில்லன் ஜகபதி பாபு ஆள் செம கெத்தா இருக்காரு. ஆனா வழக்கமான தெலுங்கு பட கொடூர வில்லன் கேரக்டர்தான்.

DSP.... BGM லைட்டா மொக்கைன்னாலும் பாட்டெல்லாம் பக்கா. வீரம் படத்துக்கு இண்ட்ரோ சாங் போட்டுக் குடுத்த கையோட இந்த படத்துக்கும் போட்டுருப்பாப்ளே போல. ”சூர்யுடு சந்த்ருடு” பாட்டுல அதே எஃபெக்ட். போயப்பட்டி சீனுசார் அடுத்த படத்துலயாவத்து திரும்ப சிம்மாவயே எடுக்காம வேற எதாவது எடுங்க.

படத்துல பாலைய்யா டான்ஸ் ஆடுறேன்னு பண்ற காமெடியத் தவற வேற எங்கயும் அந்த அளவு போர் அடிக்கல. சமீபத்துல பாத்த பல தெலுங்கு படங்களுக்கு இது கொஞ்சம் பரவால்லை.  மொத்தத்துல படம் சிம்மாவுக்கு கீழ்.. தம்முவுக்கு கொஞ்சம் மேல். 

Thursday, March 20, 2014

ஆல் இன் ஆல் அழகுராஜா ஆசிரமம்!!!


Share/Bookmark

குறிப்பு: இந்த பதிவில் வரும் சம்பவங்கள்  யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல.

இடம்: வடக்குபட்டி சுவாமிகள் ஆசிரமம்
நேரம் : மாலை 6 மணி,

"அரே ஓ சம்போ... அரே ஓ சம்போ... அரே ஓ சம்போ..." ன்னு செந்தில் காவி உடையில சொல்லிக்கிட்டே முன்னால வர வடக்கு பட்டி சுவாமிகளான கவுண்டர் பவ்யமா வந்துகிட்டு இருக்காரு...முகத்தில் தாடி... மெதுவா
வந்து அவருக்கான பீடத்தில் உக்காருறாரு..

செந்திலிடம் மெதுவாக

கவுண்டர்: டேய்... கமண்டல வாயா... என்னடா இன்னிக்கு கூட்டம் கம்மியா இருக்கு....

செந்தில்: அண்ணேன் உங்களுக்கு தெறமை பத்தலைன்னு யாரும் வரமாட்டேங்குறாங்க..

கவுண்டர்: என்னது திறமையா? அப்புடி என்ன திறமைய இவனுக எதிர்பாக்குறானுக?

செந்தில்: உங்களுக்கு வாய்க்குள்ள கைய விட்டு லிங்கம் எடுக்க தெரியலையாம்....

கவுண்டர்: டேய் என்ன என்ன சாமியார்னு நெனைச்சானுகளா இல்ல மேஜிக் மேன்னு நெனைச்சானுகளா? ஏண்டா டேய் வாய்க்குள்ள கைய விட்ட வாந்தி தானடா நாயே வரும்.. லிங்கம் எப்புடி வரும்?

செந்தில்: அதெல்லாம் தெரியாது.. நீங்க லிங்கம் எடுத்தாதான் நல்லா ஃபேமஸ் ஆவீங்க..

கவுண்டர்: அடி செருப்பால ப்ரேமானந்தா மண்டையா.. நா பாட்டுக்கு சைக்கிள் கடை வச்சிக்கிட்டு  அஞ்சோ பத்தோ சம்பாதிக்கிட்டு நிம்மதியா இருந்தேன்... சாமியார் தொழிலுல நிறையா சம்பாதிக்கலாம்னு ஆசைகாட்டி என் கடைய மூடுனதும் இல்லாம இப்ப வாய்க்குள்ளருந்து லிங்கம் எடு பைக்குள்ளருந்து 
சொம்பு எடுன்னு லொல்லா பண்ற... நாயே இப்புடியே பேசுனா உன் மண்டைக்குளருந்து மண்டை ஓட்ட எடுத்து எல்லாருக்கும் காமிச்சிருவேன் 

செந்தில்: நா என்னண்ணே பண்றது.. ஒருத்தரும் வரமாட்டேங்குறானுகளே...

 கவுண்டர்: (ஹைபிட்ச்ல) ஏண்டா  வரமாட்டேங்குறானுகளா? ஏண்டா நா என்ன மத்த சாமியார்கள் மாதிரி தனியா ரூம்குள்ள அவனுகள கூப்டு பணிவிடை செய்ய சொன்னனா இல்லை கதவ தொறங்க காத்து வரட்டும்
கக்கூச தொறங்க நாத்தம் வரட்டும் அருத்து கொன்னனா? சும்மா வந்து உக்காந்துட்டு 10 ரூவாய  உண்டில போட்டு போறதுக்கு இந்த நாயிகளுக்கு என்ன வலிக்குது... யாருடா அவிங்க இந்த அமளி துமுளிலயும் இங்க வந்து உக்காந்துருக்கது...

செந்தில்: அண்ணேன்... அவனுகல்லாம் நம்ம கடையில வேலைக்கு இருந்தவிங்கதான்.. இப்ப சினிமால சேந்து பெரியா ஆளாயிட்டானுக... நீங்கதான் அவருன்னு தெரியாம உங்ககிட்ட் ஆசீர்வாதம் வாங்க
வந்துருக்கானுங்க...

கவுண்டர்: அய்யயோ இவனுகளா... கடையில் இருக்கும்போது மொத்து மொத்துன்னு மொத்திருக்கேன்.. தெரிஞ்சா கொன்னுருவானுகளே..

செந்தில்: அண்ணேன் இப்ப அவிங்க சினிமா கார்ங்கண்ணே.. சாமியார் வேஷத்துல யார் என்ன சொன்னாலும்
நம்புவானுக...சும்மா அள்ளி விடுங்க...

கவுண்டர்: சரி ஒவ்வொருத்தனா வரச்சொல்லு...

முதல்ல சொம்பு வர்றாரு...

கவுண்டர்: அரே ஓ சம்போ.. வா மகனே... உன் பிரச்சனையை கூறு...

சொம்பு  : வாழ்க்கையில கஷ்டத்துக்கு மேல கஷ்டமா வந்துகிட்டே இருக்குது ya

கவுண்டர்: அப்ப செத்துப்போயிரு...

சொம்பு  : (பதட்டமாக) அய்யோ சாமி...

கவுண்டர்: த... இது... வாய் கெளம்பி... ச்சி.. கொழம்பி மாத்தி சொல்லிட்டேன்...நீ சொல்லு மகனே... உனக்கு
என்ன கஷ்டம்னு

சொம்பு   :நா நடிக்கிற எந்த படமுமே ஓட மாட்டேங்குது ya

கவுண்டர்: (மனதிற்குள்.. நடிச்சாத்தானடா ஓடும் போண்டா வாயா..) சரி மகனே அதுக்கு நா  என்ன பண்ணனும்?

சிம்பு : நா சினிமாவ விட்டே விலகிடலாம்னு இருக்கேன்.

கவுண்டர் : அப்படியே.. மிக்க மகிழ்ச்சி மகனே.. இந்த மாதிரி நல்ல காரியம் செய்யறதுக்கெல்லாம் யோசிக்கவே கூடாது. டக்குன்னு முடிவெடுத்துடனும்.

சொம்பு  என்ன ya  நா சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா நீங்க என்ன உண்மையிலேயே போக சொல்லிடுவீங்க போல

கவுண்டர் : இப்ப என்ன பண்ணனுங்குற நீயி?

சொம்பு  : நீங்க எனக்கு மந்திரிச்சி குடுக்குற ஒத்த தாயித்துல மொத்த தமிழ்நாடும் என் படத்த கொத்தா
பாக்க திரண்டு வரனும்...

இத கேட்டவுடன் கவுண்டர் சைடுல இருக்க செந்தில பாத்து மொறைச்சிகிட்டே...

கவுண்டர்: ஒரே தாயித்துல... அதுக்கென்ன குடுத்துறலாம் மகனே... ஒரே தாயித்துல உன் படம் 100 நாள் ஓடோனும் அவளவுதானே..
டேய் ப்ளாக்பெர்ரி அந்த மந்திரிச்ச தாயித்த எடு...

இந்தா மகனே இத கட்டிக்கிட்டு நீ மட்டும் வெளில போ..அப்புறம் பாரு என்ன நடக்குதுன்னு..

சொம்பு  : சரிங்க சாமி..

கவுண்டர் : ஆமா நீ காலையில யாரு முகத்துல முழிக்கிற?

சொம்பு   : என்னோட முகத்துல தான் ya.. எழுந்த உடனே கண்ணாடி பாப்பேன் ya

கவுண்டர் : இய்ய்ய்ய்ய்ய்ய்ய்

சொம்பு   : ஏன் ya எதாவது பிரச்சனையா?

கவுண்டர் : நல்ல வேளை.. இன்னும் உயிரோட இருக்கியேன்னு சந்தோஷப்படு.. மூஞ்சாடா இது..

”அண்ணே” அப்டின்னு செந்தில் கவுண்டரோட தொடைய கிள்ளுறாரு.

கவுண்டர் : (கவுண்டர் சமாளித்துக் கொண்டு) அ.. இது... காலையில முழிக்கிறதுக்கான இது மூஞ்சி இல்லைன்னு சொல்ல வந்தேன்..
என்னா மூஞ்சி இது.. அப்டியே ராஜ கலை தாண்டவமாடுதே...

சொம்பு   : அப்புறம் வேற யாரு முகத்துல முழிச்சா நல்லது சாமி?

கவுண்டர் : டெய்லி ஒரு கரடி முகத்துல முழிச்சா உங்க வாழ்க்கை ஓகோன்னு இருக்கும்

சொம்பு   : கரடிக்கு நா எங்க போறது சாமி. அது காட்டுல தான இருக்கும்

கவுண்டர் : தம்பிக்கு எப்பவுமே தமாசுதான்... ஆக கரடிய நீ உங்க வீட்டுல பாத்ததில்லை?

சொம்பு   : இல்லையே சாமி

கவுண்டர் : அப்போ நீ தினமும் உன் முகத்துலயே முழிச்சி நாசமா போ..  ன்னு சொன்ன உடனே சிம்பு  கெளம்பிடுறாரு.




கவுண்டர் தூரமா எட்டிப்பாத்துட்டு “டேய் ஆக்ஸ்ஃபோர்டு மண்டையா.. என்னடா நம்ம ஆசிரமத்துக்குள்ள தார் போடுற இஞ்சின் ஒண்ணு வருது? நமக்காக ரோடு எதுவும் போடப்போறானுகளா என்ன?

செந்தில் : அய்யோ அண்ணே.. நல்லா பாருங்க.. அது நம்ம விருச்சக காந்த்.

கவுண்டர் : அய்யோ இவன் தொல்லை தாங்க முடியலன்னு தானே நான் சைக்கிள் கடையையே காலி
பண்ணிட்டு சாமியாரா வந்தேன். இங்கயும் வந்துட்டானா...

விருச்சக காந்த் சாமிகள் முன்னால வந்து உட்காருறாரு.

கவுண்டர் : டேய் இவன் எதுக்கு வந்துருக்கான்னு கேளுடா....

வி.காந்த் : கேட்டுங்க மக்கழே கேட்டுக்குங்க... வீட்டுல கரண்ட் இல்லை மக்கழே கரண்ட் இல்லை... கேட்டுக்குங்க மக்கழே

கவுண்டர் : டேய் என்னடா இவன் ஜோசியம் பாக்குற ரோபோ மாதிரி பேசுனதயே திரும்ப திரும்ப பேசிகிட்டு  இருக்கான்.

செந்தில் : இன்னும் தெளியலைன்னு நெனைக்கிறேன்

கவுண்டர் : இல்லடா தெளிஞ்சிருச்சின்னு நெனைக்கிறேன். அதான் இப்புடி உளருறான். அந்த கமண்டலத்துல இருக்க குவாட்டர கொஞ்சம் இவன் வாயில ஊத்தி விடு

செந்தில் கமண்டலத்துல இருக்க குவாட்டர வி.காந்த் வாயில ஊத்தி விடுறாரு.

கவுண்டர் : இப்போ தெளிவா பேசுவான் பாரு

வி.காந்த்: ஸ்.. ஸாமி... உங்ககிட்ட ஒண்ணு கேக்கனும் தான் வந்துருக்கேன்..

கவுண்டர் : எங்கிட்ட இருந்த ஒரு குவாட்டரத் தான் இப்போ உனக்கு ஊத்தி விட்டாச்சேடா.. இனிமே என்கிட்ட
எதுவும் இல்லைடா...

வி.காந்த் : அது இல்ல ஸாமி... இந்த log ஸபா எலெக்ஸன்ல யார்கூட gooட்டணி வைக்கல்லாம்னு கேக்கலாம்னு வந்தேன்

கவுண்டர் : டேய் அரை போதை நாயே.,.. எலெக்சன் முடிஞ்சி 10 நாள் ஆச்சுடா இன்னும் கூட்டணியே நீ  முடிவு பண்ணாம சுத்திகிட்டு இருக்கியா..

வி.காந்த் : (நாக்கை துருத்திக் கொண்டு ) ஹே... இத ஏன்யா என்கிட்ட கேக்குற.. அந்த அம்மாகிட்ட போய் கேளுய்யா...

கவுண்டர் : டேய் அழகேசா... என்னடா இவன் சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசுறான். இவன் பேசுறதயெல்லம பாத்தா இவனுக்கு யாரோ நைட்டு வீட்டுல குவாட்டர ஊத்தி விட்டு இந்த ரெண்டு மூணு டயலாக்க பேசுறதுக்கு மட்டும் திரும்ப திரும்ப ட்ரெயினிங் குடுப்பாங்க போலருக்கு...

செந்தில் : எனக்கும் அப்டித்தாண்ணே தோனுது..

கவுண்டர் :  சரி அத விடு.. டெல்லிக்கு போய் செம வாங்கு வாங்கிட்டு வந்தியாமே உண்மையா?

வி.காந்த்:  ஒரு பொண்ணப்பாத்து “துமாரா நாம் கியாஹே” ன்னு எனக்கு தெரிஞ்ச இங்கிலீஸ்ல கேட்டேன்.

கவுண்டர் : நல்ல வேளை .. சோளீக்கே பீச்சே கியாஹேன்னு கேக்கல... பிஞ்ச செருப்பெடுத்துக்கிட்டு ஓட ஓட விரட்டிருப்பா...

வி.காந்த்:  இப்போ எனக்கு கூட்டணிதான் பிரச்சனை மக்கழே.. அதுக்கொரு வழி சொல்லுங்க..

கவுண்டர் : சார்.. நீங்க இன்னும் ஒரு ரெண்டு குவாட்டர  உள்ள விட்டுக்கிட்டு நல்லா குப்புற படுத்து யோசிங்க அடுத்த எலெக்சனுக்குள்ள கூட்டணிய முடிவு பண்ணிடலாம்.

(ஆசிரம காவளாளிகள் விருச்சக காந்த வலுக்கட்டாயமா அப்புறப்படுத்துறாங்க...)

வி.காந்த் : மக்கழே.. நா எழுதிவச்சி படிக்கல மக்கழே... வாயில வந்தத பேசுறேன் மக்கழேன்னு பொலம்பிகிட்டே
போறாறு..

கவுண்டர் : டேய் ஐ ஃபோன் மண்டையா... என்னடா வெளிநாட்டுலருந்தெல்லாம் நம்ம ஆசிரமத்துக்கு ஆள்
வர ஆரம்பிச்சிட்டாங்களா,.. யார்ரா அவங்க

செந்தில் : அது ஒண்ணும் இல்லைண்ணே.. ஃப்ளைட் ஒண்ணு காணாம போச்சாம்.. அத அமெரிக்காவாலயே கண்டுபுடிச்சி குடுக்க முடியலையாம்.. நீங்க தான் அத கண்டு புடிச்சி குடுக்கனும்னு கேட்டு வந்துருக்காங்க.

கவுண்டர் :  அய்யய்யோ... அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில என்கிட்டயே வந்துட்டாணுகளா.. ஆசிரமத்த
இழுத்து மூடுடா...




Friday, March 14, 2014

நானும் ரஜினி ரசிகன் தான்.. ஆனா.....!!!! (201)


Share/Bookmark
நானும் ரஜினி ஃபேன் தாங்க.. போன படம் எவ்வளவு சூப்பரா இருந்துச்சி.. ஆனா இந்த படம் எனக்கு  அவ்வளவா புடிக்கலங்க.. என்னங்க ரஜினி எப்பவும் கை கால ஆட்டி ஸ்டைல் பண்ணிட்டு மட்டுமே நடிச்சிகிட்டு இருக்காரு. ஒரு வித்யாசமான ரோல்ல நடிச்சா தான நல்லாருக்கும். அட என்னங்க.. இந்த படத்துல ரஜினி ஸ்டைலே இல்லீங்க. அவர்ட புடிச்சதே அந்த ஸ்டைல்தான். அது இல்லாம படம் எடுத்தா எப்டிங்க பாக்குறது. என்னடா மாறி மாறி உளருறானேன்னு பாக்குறீங்களா? இப்புடி உளருறதெல்லாம் நா இல்லீங்க. "நானும் ரஜினி ரசிகன் தான்"ன்னு சொல்லிகிட்டு சுத்திகிட்டு திரியிற சில ஜந்துக்கள். சிவாஜி வரும் போது படையப்பா சூப்பர்ங்க,, இது அவ்வளவு நல்லா இல்லைன்னு சொல்லுவாய்ங்க. எந்திரன் வரும்போது அட
சிவாஜி எவ்வளவு செம்மையா இருந்துச்சி இந்த படத்துல ரஜினி மாதிரியே இல்லீங்கம்ப்யாங்க. ஒவ்வொரு  ரஜினி படம் வரும் போதும் அதற்கு முந்தைய படம் அவர்களுக்கு மிகவும் பிடிச்சிருந்ததாகவும் இப்போ
ரீலீஸ் ஆவுற படம்தான் இவுகளுக்கு பிடிக்காத மாதிரியும் சீன் போட்டுகிட்டு திரியிறவிங்கதான் இந்த "நானும் ரஜினி ரசிகன் தான் சார்" குரூப்பு.

அதாவது ஒவ்வொரு படம் வரும்போதும் அது நல்லாருக்குன்னு பகிரங்கமா ஒத்துக்க முடியாத சில அந்நியர்களோட முட்டாள் தனமான பேச்சுக்கள்தான் இதெல்லாம். எதாவது குறை சொல்லனும். சரி சும்மா சொல்லி வைப்போம் அப்டின்னு அந்த படம் சூப்பர்ங்க பத்து வருசம் முன்னால வந்த படம் சூப்பர்ங்கன்னு எதாயாவது சொல்லிக்கிட்டு திரிய வேண்டியது.

மத்த நடிகர்களோட ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் ஒரு பெரிய வித்யாசம் இருக்கும். ஒருத்தன் ரஜினிக்கு ரசிகனாயிட்டான்னா அதுக்கப்புறம் அவன் மாறமாட்டான். ஆனா மத்த நடிகர்களுக்கு அப்படி இல்லை. எங்க கம்பெனியில அஜித் ஃபேன் ஒருத்தன் இருந்தான். ஒரு நாள் ஆஞ்சனேயா படத்த வச்சி அவன ஓட்டும் போது "ஹலோ.. ஆஞ்சனேயா படம் வரும் போது நா ஒண்ணும் அஜித் ஃபேன் இல்லீங்க. அப்போ நா விஜய் ஃபேன்" ன்னான். எனக்கு தூக்கி வாரிப்போட்டுருச்சி. ஏண்டா என்னடா நம்ம அரசியல் கட்சிகள்
எலெக்சனுக்கு எலெக்சன் மாறி மாறி கூட்டணி வக்கிற மாதிரி ஆயிட்டீங்க. ஆனா இதுக்கு காரணம் வேற ஒண்ணும் இல்லை. யாராவது ஒருத்தரோட ரசிகனா ஃபார்ம் ஆயிட வேண்டியது. அப்புறம் அவனோட நாலு படம் மட்டையானோன பொத்துனாப்புள எவன் படம் ஓடுதோ அவன் பக்கம் திரும்பிக்க வேண்டியது.

ஆனா அன்னையிலிந்து இன்னிக்கு வரைக்கும் ரசிகர்கள ஏமாத்தாத ஒரே ஆள் தலைவர் தான். அவர் ரசிகர்களா இருக்கும் போது வேற ஒருத்தன நெனைச்சு கூட பாக்க முடியாது. எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. நா ரெண்டாவது படிக்கும் போது (இப்போ வரைக்கும் நீ அவ்வளவு தானடா படிச்சிருக்க) கஷ்டப்பட்டு ஏழு ரூவா சேத்து பக்கத்து வீட்டு அண்ணன்கிட்ட சொல்லி ருத்ராட்சை வாங்கி போட்டேன். ஆனா ரெண்டு நாள்ல எங்க சார் பொடனில தட்டி அத கழட்ட சொல்லிட்டாருங்கறது வேற விஷயம். அன்னிக்கு ஆனா அவர எந்த அளவு புடிச்சிதோ இப்போ வரைக்கும் அத விட பல மடங்கு அதிகமா புடிக்கிதே தவற கொஞ்சம் கூட குறையல.


ரஜினியைப் பிடிக்காதவர்கள்ன்னு யாரும் இருக்க முடியாது. பிடிக்காதது போல காட்டிக்கொள்ள விரும்பும் சில பேருதான் இந்த மாதிரி உளரிக்கிட்டு இருக்காய்ங்க. இப்போ இந்த மாதிரி ஆளுங்களுக்கு இன்னொரு வயித்தெரிச்சல் சேந்து வந்துருச்சி. சில உலகநாயகர்களோட படங்கள் உள்ளூரக்கூட தாண்ட முடியாத சமயத்தில motion capturing ங்குற அடுத்த கட்ட சினிமாக்குள்ள தலைவர் நுழைஞ்சிட்டது பலபேரால பொறுக்க முடியல. அதுவும் என்னடா ஆறாயிரம் தியேட்டருங்குறாய்ங்க, 10 மொழில ரிலீசுங்குறாய்ங்க அப்போ இப்போலருந்தே  ஆரம்பிப்போம்னு கோச்சடையான் இசையிலருந்து வேலைய ஆரம்பிச்சிருக்காய்ங்க. ஏ.ஆர்.ரஹ்மான் இத விட கேவலமா மீயூசிக் போட்டதே இல்லையாம். ஏண்டா டேய்.. ஒரு period film க்கு இத விட சூப்பரா போடமுடியுமான்னு தெரியல. விட்டா குத்து பாட்டே இல்லைன்னு குறை சொல்லுவாய்ங்க போல.

இவிங்க என்ன நம்பிக்கையில இருந்தாய்ங்ன்னா.. அந்தப் புள்ள சவுந்தர்யா முன்னால சுல்தான்னு ஒரு படம் எடுத்துச்சி. அது அப்டியே ஆஃப் ஆயிருச்சி. அதே மாதிரி இதயும் கொஞ்ச நாள்ல ஊத்தி மூடிருவாய்ங்கன்னு நெனைச்சிட்டு இருந்துருப்பாய்ங்க போல. ட்ரெயிலர பாத்தே மெரண்டுட்டாய்ங்க. இந்தப்படம் ரிலீஸ் ஆனாலே நீங்கல்லாம் வாழ்க்கைல அப்புறம் ரஜினிய பத்தியே பேசக்கூடாதுடா.

அப்புறம் இந்த வட இந்திய காரய்ங்க.. நாம முப்பது வருசத்துக்கு முன்னால பாத்த படத்தயெல்லாம் இப்போ ரீமேக் பண்ணி பாத்துகிட்டு இருக்காய்ங்க. அவிங்களுக்கு பேச்சு. அனிமேஷன் சரியில்லையாமா. அவதார் அளவுக்கு இல்லையாமா. டின் டின்ல மூஞ்சி நல்லா தெரியிதாமா.. கோச்சடையான்ல அந்த அளவுக்கு இல்லியாமா.  டேய் அவதார் கூட கம்பேர் பண்றதுக்கு கூட ஒரு ரேஞ்ச் வேணும்டா.  நாங்க உங்க ஊர்ல படத்த ஓட்ட சாருக்கான நடிக்க வைக்க  தேவையில்லை. ஆனா நீ எங்க ஊருக்குள்ள நுழையனும்னாவே ரஜினி பேர சொன்னா தான் முடியும். அதான்டா ரஜினி.

அவரோட நடிச்ச சமகால ஹீரோக்கள் இப்போ நடிச்சிக்கிட்டு இருக்கது மாதிரி அப்பா ரோல்ல நடிச்சதில்லை. "நம்பிக்கை அதானே எல்லாம்"னு விளம்பரங்களுக்கு வந்ததில்லை. வருசத்துக்கு ஒரு படம் ரிலீஸ் பண்ணனும்னு அவசியமும் இல்லை. மூணு வருஷத்துக்கு ஒரு படம் தான் நடிப்போம். ஆனா Indian of the year ன்னாலும்  அவர் தான். Entertainer of the year ன்னாலும் அவர் தான்.  அதான் ரஜினி. 

பொதுவா தமிழ் சினிமாவ பொறுத்த அளவு ரஜினி எப்பவுமே ஒரு 10 வருஷம் முன்னால தான் இருப்பாரு.  அவரு பதினைஞ்சி வருஷத்து முன்னால நடிச்ச படங்கள தான் இப்போ அஜித், விஜய் படங்களா வந்துகிட்டு இருக்கு. எந்தெந்த கால கட்டத்துல மக்களுக்கு என்னென்ன படங்கள் குடுக்கனும்னு அவரவிட நல்லா தெரிஞ்சவங்க யாரும் இல்லை. பாட்ஷாவோட வரலாற்று வெற்றிக்கு அப்புறமும் அவரோட அடுத்த படங்கள்ல அந்த படத்தோட சின்ன தாக்கம் கூட இருந்ததில்லை. ஆனா இப்போ ஒருத்தனுக்கு ஒரு படம் தெரியாத்தனமா ஓடிட்டா போதும் அடுத்த 5 படம் அதே மாதிரி எடுத்து அறுத்து கொன்னுட்டு தான் விடுவாய்ங்க.

ரெண்டு மாசத்துக்கு முன்னால "தி ஹிந்து" ல ரஜினியப் பத்தி ஒரு கட்டுரை வந்துருந்துச்சி. அதாவது ரஜினி படங்கள் என்பது ஜேம்ஸ்பாண்ட் படங்கள் மாதிரி ஒரு genre ah மாறிவிட்டது. ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஹீரோக்கள் மாறி மாறி நடிப்பது போது இப்போது தமிழ்நாட்டில் ரஜினி படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த பொங்கலுக்கு "வீரம்" "ஜில்லா" என்ற இரண்டு ரஜினி படங்கள் வந்திருக்கின்றன. ஒன்றில் அஜித்தும் இன்னொன்றில் விஜய்யும் நடித்திருகின்றனர்". இது எப்டி இருக்கு.

ரஜினி அவரோட போட்டியாளர்காளாக சித்தரிக்கப்படும் பலரை விட எட்டாத உயரத்தில் பயணித்துக்  கொண்டிருக்கிறார்.  எனவே உங்களை வித்யாசமானவராகக்  காட்டிக் கொள்ள நீங்கள் செய்யும் இந்த சல்லித் தனமான வேலைகளை விட்டுவிட்டு, சரித்திரத்தில் இடம்பெறப் போகும் இந்தியாவின் முதன் மோஷன் கேப்சர் திரைப்படத்தைக் கொண்டாடத் தாயாருங்கள்.  சம்போ மகா... தேவாஆஆஆஆ!!!

Thursday, March 6, 2014

”கஸ்ட”மர் சர்வீஸ்!!!


Share/Bookmark
குறிப்பு: இது அனைவருக்கும் பொருந்தாதுன்னு நெனைக்கிறேன்... இருந்தாலும் சும்மா போட்டு வைப்போம்.























LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...