Monday, July 20, 2009

ஆறிய ஜெயராஜு


Share/Bookmark

"ஒ மா ஸிமீ யா ஆயா ஆயா"
"ஒக்காளி ஸ்விங் ச்சாய் ச்சாய் ச்ச ச்சைச்சா "
"அய்ய கக்கா ஆயி ஆயி ஆயியே"
" ஒ ஆயி ய்யே ஆயி ய்யே ஆயி ய்யே "

என்னடா இவன் ஆயி ஆயி ன்னு அசிங்கமா பேசுறானேன்னு யாரும் தப்ப நெனைக்க வேண்டாம். இதெல்லாம் நம்ம "ஹாரிஸ்" ஜெயராஜ் பாட்டுக்கு இடயில வர்ற வார்த்தைகள் தான். இது போன்ற கருத்துக்கள் நிறைந்த பாடல்களை தமிழக மக்களுக்கு அள்ளி தருவதில் அவருக்கு நிகர் அவரே.
பொதுவா சினிமா ல ஒருத்தர் பெரிய ஆளு ஆயிட்டங்கன்னா பழசெல்லாம் மறந்துடுவங்கன்னு சொல்லுவாங்க. ஆனா பழச மறக்காத ஒரே ஆளு யாருன்னா நம்ம நாறிய ச்சி ஆரிய ஜெயராஜ் தான். மின்னலே படத்துல என்ன டியூன் போட்டாரோ அதையே தன் இன்னிக்கு வரைக்கும் போட்டுக்கிருக்காரு.

சுருக்கமா சொன்ன இவரு சூப்பர் ஸ்டார் மாதிரி. ஏன்னா அவரு அன்னிக்கு சொன்னத தான் இன்னிக்கு சொல்வாரு. இன்னிக்கு சொன்னத தான் என்னிக்கும் சொல்வாரு. அதே மாதிரித்தான் இவரும். "அன்னிக்கு போட்ட டியூன தான் இன்னிக்கு போடுறாரு. இன்னிக்கு போட்ட டியூனதான் என்னிக்கும் போடுவாரு".

இதுல இன்ன்னொரு காமெடி என்னன்னா இதுவரைக்கும் ஆரிய ஜெயரோட ஆல்பம் failure ஆனதே இல்லன்னு இவருக்கு ஒரு நல்ல பேரு வேற. எப்புடிடா ஆகும்? ஒரே டியூன் ல வரியா மட்டும் மாத்தி போட்டு பாட்ட release பண்ணிடுவாரு. நம்ம பயலுக அத கேப்பாங்க. எங்கயோ கேட்ட மாதிரி இருக்கும். ஆனா எங்கன்னு அவனுங்களால கண்டுபுடிக்க முடியாது. அதுனால சிம்பிள் ஆ " அட நல்லாருக்கு" ன்னு வடிவேலு பாணியில சொல்லிட்டு போய்டுவானுங்க.

நம்ம பசங்க கிட்ட உள்ள கெட்ட பழக்கம் என்னன்னா மொதல்ல எவன் என்ன சொல்றனோ அதையே கடைசிவரைக்கும் follow பண்ணுவானுங்க. அதுனால எல்லாரும் "fantastic, என்னமா பாட்டு போட்டு இருக்காரு.. பின்னிட்டாரு " ன்னு ரெண்டு மூணு பிட்ட extra va போட்டு இவனையெல்லாம் பெரியாளு ஆக்கிவிட்டானுங்க.

இதுல நம்ம சூப்பர் டைரக்டரு கெளதம் மேனனும் , 'ஆறிய' ஜெயராஜும் ஒன்னா சேந்துட்டானுங்கன்னா அவ்ளோதான், " நாராயணா இந்த கொசு தொல்ல தாங்கமுடியலடா.. மருந்தடிச்சி கொல்லுங்கடா..."
கெளதம் புதுசா ஒரு படம் ஆரம்பிச்சாருன்னா, harris ஜெயராஜ் ட்ட போய் "போன படத்துல போட்டு குடுத்த பாட்டு மாதிரியே போட்டு குடுங்கன்னு" கேப்பாரு போலருக்கு. அதுக்கு இவன் " அட அதுக்கென்ன அதே பாட்டையே போட்டு தர்றேன் " ன்னு போட்டுகுடுதர்றான். அதுக்கு கெளதம் " அப்பச்சரி ...நானும் அதே மாதிரியே பாட்டையும் எடுதர்றேன்னு " ஒரே பாட்ட இதுவரைக்கும் நாலு தடவ எடுத்துருக்கங்காங்கையா.... அட வெக்கங்கெட்டவங்களா.... இதுக்கு ஏன்டா வெள்ளையும் சொள்ளையுமா அலையிறீங்க?

அட பாட்டு தான் இப்புடி போடுறான்னா Background Music சுத்தம். நாலு பேர கூப்டு வைச்சி "ஓமியோ கஜினி ஓமியோ கஜினி ஒமியோமியோ" னு ஒப்பாரி வைக்கிற மாதிரி வாயில வர்றதா சொல்லுங்கப்பா ன்னு விட்ருவான் போலருக்கு...

அட பொது வாழ்க்கைய விடுங்கப்பா... இவரோட கெட்டப்ப பார்த்து "நீங்க யாரு ஏ.ஆர்.ரகுமான் தம்பியா?" ன்னு கேக்கனும்னு இவருக்கு ஆசை போல. அதுக்கு நீ சொந்தமா பாட்டு போடனும் ராசா. உன்ன ஆஸ்கர் மேடைல நிக்க வச்சா, ஒலகம் தாங்காதுடா சாமி. நீ யாருயாருட்டெல்லாம் பாட்ட சுட்டியோ அவன்லாம் துரத்தி துரத்தி சி.டியாலேயே அடிப்பான்!

Harris ஜெயராஜ் பாட்டுன்னா " வாவ்" னு சொல்லணும்.. கெளதம் மேனன் படம்னா "superb... செதுக்கிருக்கண்டா... " னு feel பண்ணனும்... அப்பத்தான் கெத்துன்னுந்னு நெனச்சிக்கிட்டு நெறைய பேர் ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருக்க்காயங்க. இவன் கேவலமா டியூன் போட்டாலும் வாவ் சொல்றவனுங்க, ஸ்ரீ காந்த் தேவா நல்ல ட்டின் போட்டாலும் ஒத்துக்க மாட்டங்க. இவனுங்கல்லாம் இருக்குற வரைக்கும் , ஆறிப்போன பழைய பாடல்களைப் போடும் ஆறிய ஜெயராஜ் மாறிய ஜெயராஜா மாறவே மாட்டாரு
!!

Wednesday, May 27, 2009

IPL 2009 (Inthiya Perusugalin Lollu)


Share/Bookmark


கடந்த நாற்பது நாட்களாக IPL போட்டிகள், எதிர்பாராத பல திருப்பங்களுடன் நடந்து முடிவடைந்துள்ளது. கடந்த முறை கோப்பை வென்ற ராஜஸ்தான் அரையிறுதிக்குள் கூட நுழைய முடியவில்லை. அதுபோல் கடந்த முறை கடைசி இடத்தில் இருந்த டெக்கான் இந்த முறை கோப்பையை வென்றுள்ளது. இத பாக்கும் போது ஒரு பஞ்ச் டயலாக் ஞாபகம் வருது. "வாழ்கை ஒரு வட்டம்டா, இதுல மேல இருக்கவன் கீழ வருவான். கீழ இருக்கவன் மேல போவன்". அப்போ நடுவுல இருக்கவன் எங்க போவான்னு கேக்க கூடாது. இந்த IPL ல interesting ah மாத்துன சில special performers ah பற்றி பாக்கலாம்.

கங்குலி (கேப்டன் சங்கிலி) : இவரு ரொம்ப நல்லா விளையாடுவாரு. ஆனா ஒரு சின்ன பிரச்சனை என்னன்னா இவருக்கு கண்ணு கொஞ்சம் சரியா தெரியாது. மத்தபடி ரொம்ப நல்லா விளையாடுவாரு. இவரு பேட்டிங் பண்ணும் போது சில நேரம் ball, keeper கைக்கு போனது கூட தெரியாம " எங்க இன்னும் பந்தே வரல?" னு வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாரு. "அட கருமம் புடிச்சவனே ball பின்னாடி போய் பத்து நிமிஷம் ஆகுதுடா" னு யாரவது இவருக்கு சொல்லணும். இவன டீம் ல சேத்ததே பெருசு. இந்த கொடுமையில இவருக்கு கேப்டன் பதவி வேணுமாம். வெளங்கிடும்.


யுவராஜ் சிங் (சிங்குக்கு ஊதிட்டாங்க சங்கு): எல்லாரும் மேட்ச் ல தோத்தா ரெண்டு பாயிண்ட் போயிடுமேன்னு வருத்தப்படுவாங்க. ஆனா இவனுக்கு preeti zinda ட்ட இருந்து கெடைக்கிற ஒரு முத்தம் போயிடுமேன்னு வருத்தம். யாரு preeti பக்கதுல உட்காருரதுங்குரதுல பஞ்சாப் டீம் ல கடுமையான போட்டியம்ப்பா. அதுனாலயே இவரு சீக்கிரம் அவுட் ஆயிட்டு பக்கத்துல வந்து கப்புனு உக்கர்ந்துடுவாராம் (இல்லன்னா மட்டும் அடிச்சிடுவானா னு நீங்க கேக்குறது எனக்கு புரியிது ). இதுனால ஒருநாள் ஸ்ரீசாந்துக்கும் இவருக்கும் அடிதடி ஆயிடிடுச்சாம்ப்பா.அப்புறம் கடைசில " கூட்டுக்குடும்பத்திலே விரிசல் விழலாமா? ஆளுக்கு ஒரு ஒரு பக்கமா உக்காருங்கப்பா" ன்னு லலித் மோடி தீர்ப்பு சொல்லி சண்டைய வெலக்கி விட்டாராம்.


வி.வி.எஸ்.லக்ஷ்மன் : இவன் ஒரு வளந்து கெட்டவன். டிராவிட் எல்லாம் திருந்திட்டன். இன்னும் இவன் திருந்தலப்பா. ஆனா duck out ஆனா கூட "சுனா பானா யாரும் பாக்கல போ போ" .. நு ஒடம்ப வெரப்பா வச்சிக்கிட்டு தான் வெளில போவான். ஆனா நல்ல வேளை, ஹைடரபாத் டீம் உசாரா இவன ஓரம் கட்டி உக்கார வச்சிட்டாங்க. இல்லன்ன அவன்ங்க எல்லாம் cup வாங்குறது நடக்குற காரியமா? அட போங்க பாஸ் .


மகேந்திர சிங் தோணி (அப்புடியே வீட்டுக்கு போ நீ ): இவன் பேர தோணி னு வச்சதுக்கு பதிலா சாணின்னு வச்சிருக்கலாம். 20-20 மேட்ச் ல பதினெட்டாவது ஓவர் ல கூட விக்கெட் ஸ்டாண்டிங் பண்ணுறதுல இவரு ரொம்ப கவனமா இருப்பாரு. ஒரு மேட்ச் ல எட்டு விக்கெட் save பண்ணா அடுத்த மேட்ச் ல பதினெட்டு விக்கெட்டுக்கு விளையாட விடுவாங்கன்னு யாராவது இவன்ட சொன்னாங்களோ என்னவோ? சென்னை தோத்த எல்லா மேட்ச் லயும் தோணி ரொம்ப கஷ்டப்பட்டு விளையண்டாருங்க, சென்னை டீமுக்காக இல்லங்க opponent டீமுக்காக.

எல்லாரும் பேட்டிங் பண்ண வந்தா opponent டீம் அவங்க விக்கெட்ட எடுக்க தான் பாப்பாங்க. ஆனா தோணி பேட்டிங் பண்ண வந்தா மட்டும் "டேய் இவன்தாண்டா நம்ம trump card. இவன வச்சி தாண்ட நம்ம மாட்ச்ச முடிக்கணும். இவன மட்டும் அவுட் ஆக்கிடவே கூடாது" ன்னு ரொம்ப கவனமா இருப்பங்கலாம்ப்பா. Semi final la பெங்களூரு வின் பண்ணவுடனே மனிஷ் பாண்டே கு man of the match award குடுத்தாங்க. ஆனா அவங்க "நாங்க இந்த மேட்ச் ஜெயிச்சதுக்கு எங்க தெய்வம் தோணி தான் காரணம். அதுனால இந்த award அவருக்கு குடுக்குறதுதான் நியாயம் னு சொல்லி , தோனிக்கு man of the match குடுத்துட்டங்கலாம்.


லஷித் மலிங்கா (நல்லா அடிப்பாரு மாங்கா ): எவ்வளவு தூரத்துல குச்சிய (stump) வச்சிருந்தாலும் கரெக்டா பாத்து அடிக்கிறதுல இவர மிஞ்சுரதுக்கு ஆளே கெடயாது. ரோடு ஓரத்து புளியமரத்துல புளியங்கா அடிச்சி தின்ன பயலுகள எல்லாம் கிரிக்கெட் வெளயாட விட்டா இப்புடித்தான். அப்பறம் இவருக்கு ஒரு சின்ன பிரச்சனை என்னன்ன இவரு மண்ட வைக்கோல் போர் மாதிரி இருக்குறதுனால , ரோட்ல போகும்போது ஆடு, மாடெல்லாம் ஏறி மேஞ்சிட்டு , செத்து போயிருதம்ப்பா. அதுனால தென் ஆப்பிரிக்க அரசு இவரோட மண்டைக்கு கடுமையா கண்டனம் தெரிவிசிருக்காங்க. அடுத்த தடவ இந்த மண்டையோட வந்தா, ஓடவிட்டு நடு மண்டையிலேயே சுட்டுருவோம் னு ரெண்டு மூணு தீவிரவாத அமைப்புகள் வேற மிரட்டல் விடுத்துருக்காங்கலாம் .


மேத்யு ஹேடன் : சென்னை டீம் கு சிக்குன ஒரு சிறந்த அடிமை இவன். . "யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற?" ங்குரமாதிரி, யாருமே அடிக்காத டீம் ல இவன் மட்டும் அடிப்பன். பிள்ளைய பெக்கசொன்ன எரும மாட்ட பெத்து வச்சிருக்காங்க. என்ன தான் இவன் கஷ்டப்பட்டு விளையண்டாலும், தோணி யோட ஆட்ட திறமையால சென்னைக்கு semi final லயே ஆப்பு அடிச்சி அனுப்பிட்டாங்க. Man of the series award ஆவது நமக்கு குடுப்பங்கலான்னு ஆவலோடு இருந்த இவருக்கு, அதுவும் கிடைக்கததால், "வடை போச்சே!!! " நு வருத்தத்தோட ஊருக்கு போய்ட்டாரு.


ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (சங்கி மங்கி ): இவன் கைலையெல்லாம் யாருடா பேட்ட குடுத்து வெளையாட வர சொன்னது. சின்ன புள்ளைங்க வெளையாடுற எடத்துல இவனுக்கு என்ன வேலைன்னு தெரியல. Bowling போட வர்றவனுங்கள மூஞ்ச காட்டி பயமுறுத்தி, அவங்களுக்கு வேப்பல அடிக்கிற அளவுக்கு கொண்டு போயிடுறான். தப்பி தவறி அவுட் ஆயிட்டான்னா கிங் காங் கோவப்படுரமாதிரி பேட்ட தூக்கி வீசிடுறான். இத பாத்துட்டு South african animal circus ல ஒரு நாள் guest appearance தர சொல்லி ஒருத்தர் கேட்டராம். அதுக்கு இவன், அவன் மூக்க புடிச்சி கடிச்சி வச்சிட்டானாம்.


ட்ரம்ஸ் மணி (நாலுல சனி): சென்னை டீம் ல ரன்அடிக்கிறாங்களோ இல்லையோ, இவன் drums அடிக்கிறத நிறுத்த மாட்டான். அடுத்த IPL ல இவருக்கு சென்னை டீம் ல இடம் கெடச்சாலும் கெடைக்கலாம். ஆனா கடைசில "என்னோட உழைப்பெல்லாம் வீனா போச்சே.... நானும் வீட்ல இருந்தே மேட்ச் பாத்துருக்கலாமோ?" ன்னு feel பண்ணிக்கிட்டே வீட்டுக்கு வந்துருக்காரு.
ஏதோ இவனுங்களால நமக்கு கொஞ்சம் time pass ஆனா சரி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...