Thursday, April 15, 2010

IPL 2010 (Inthiya Perusugalin Lollu)


Share/Bookmark இந்த பதிப்பு IPL 2010 (Inthiya Perusugalin Lollu) (http://muthusiva.blogspot.com/2009/05/ipl-2009-inthiya-perusugalin-lollu.html) oda தொடர்ச்சி தான். ஒவ்வொரு டீமுக்கும் தமிழ் ல பேரு வச்சிருந்த எப்புடி இருந்துருக்கும்னு பாருங்க.. இதவிட சிறந்த காமெடியான தமிழாக்கம் உங்களுக்கு தோணுச்சினா அனுப்புங்க.



சென்னையின் சிறப்பான ் (அ)சிங்கங்கள்:
தோணி: மன்கூஸ்ஸ எடுத்துகிட்டு ஆஸ்திரேலியால இருந்து ஹேடன் வந்துருக்காக... சவுத் ஆப்பிரிக்காவுலருந்து மார்கல் வந்துருக்காக... ஸ்ரீலன்காவுலருந்து முரளி வந்துருக்காக...மற்றும் நம் உறவினர்களெல்லாம் வந்துருக்காக..
Audience : எல்லாரும் வந்து என்னடா புரயோஜனம். ரன் அடிக்க மாட்டேங்குறீங்கலேடா. சாதா bat வச்சிருந்தப்பவே நல்ல தானடா விளையாண்டீங்க. இப்ப மன்கூஸ்ஸ எடுத்துட்டு வர்றேன்னு சொல்லி semi final போறதுக்கே டண்டணக்கா போடா வேண்டியதாயிருச்சேடா.

டோனி: chennai super kings ku விசில் போடு ..
Audience: நாங்க மொதல்ல உன்ன
போடுரோம்டா . அப்பறம் உனக்கு விசில் போடுறோம்..

பதினோரு ராஜாக்கள்:
ஒரு டீமுக்கு வாழ்க்கையில அடி விழலாம். ஆனா அடியே வாழ்க்கைய இருந்த என்ன பண்றது. திரும்ப துபாய்க்கே போயிறலாம இல்ல இங்க ஒரு ஓரஞ்சாரமா உக்காந்து தொழில் பண்ணலாமா ன்னு preeti zinda யோசிச்சிக்கிட்டு இருக்காங்கலாம்.

Team Punch: ஏய்.. ஏய் ... செட்டு செங்கல்பட்டு , மதுர, திருச்சி , சேலம் , கோயம்புத்தூரு, North ஆற்காடு , south ஆற்காடு , FMS வரைக்கும் பாத்தவங்கட நாங்க.. நாங்க அடி வாங்காத ஏரியாவே கெடயாது. பேட் , ball எல்லாம் எங்கள touch பண்ணி பண்ணி tired ஆயி கெடக்கு. அப்புடி துப்பிட்டு கெளம்ப பாரு.


கொல்கத்தாவின் குதிரைக்கார தளபதிகள்:
ஷாருக்: டேய் கங்குலி, நானும் வலிக்காத மாதிரியே எவ்வளவு நேரந்தான் நடிக்கிறது. அதுகூட பரவல்ல.. சீக்கு வந்த கோழி மாதிரி இருக்க உன்ன 100 தடவ தாதா, தாதான்னு சொல்ல வச்சிட்டியேடா...

கங்குலி: அது ஒன்னும் இல்ல ஷாருக்.. நாங்க சும்மா தோத்து பாத்தோம்..

ஷாருக்: டேய்.. யாரு காசுல யாருடா தோத்து பாக்குறது? மொத்தம் இருக்கதே பதினாலு மேட்ச் தான். நீங்க பதினாளுலையுமே தோத்து பாக்குரீங்கலேடா..
Mc Cullum: அட விடுங்க பாஸ்.. IPL 2011 ல கலக்குறோம் பாருங்க...
ஷாருக்: என்னது 2011 ah? அடுத்த வருஷம் நீ இந்த பக்கம் வந்த, மொத dead Body நீதாண்டா. டேய் இனிமே IPL eh கெடயாதுடா... அட நா இனிமே இந்தியாவே இல்லடா.. ஆப்பிரிக்க பக்கம் போய் settle ஆக போறேன்.

டெல்லியின் துணிச்சலான பிசாசுகள்:
சேவாக்: நம்ம கிட்டருந்து எல்லாரும் ரொம்ப ஓவரா எதிர் பாக்குராயிங்களோ..குறு குறுன்னு பாக்குராயிங்க...

கம்பீர்: கொஞ்சம் frank ah பேசலாமா?
சேவாக்: சொல்லு.
கம்பீர்: நாம இது வரைக்கும் யார அடிச்
சிருக்கோம்? Kolkatta Kinght Riders, Kings XI, Rajastan Royals இது மாதிரி soft ஆனா charactera எல்லாம் அடிச்சி நாம ரெண்டு IPL லயும் பெரிய ரவுடியா form ஆயிட்டோம். இப்ப எல்லாரும் உசாரயிட்டானுங்க. நம்ம என்ன பண்றது?

சேவாக்: டேய் company சீக்ரெட் ah வெளில சொல்லாதடா.. சரி விடு எப்புடியும் semi final ah ஆப்பு வச்சி வீட்டுக்கு தான் அனுப்ப போராயிங்க. அதுக்கு இப்பவே போயிடுவோம். ஆனா என்ன நடந்தாலும் பயத்த மட்டும் கண்ணுல காமிக்காத. நம்மள மாதிரி ரவுடிங்களுக்கெல்லாம் பயம் தான் முக்கியம்.

கம்பீர்: ஏய்... ஏய்... எல்லாம்
பாத்துக்குங்க... நாங்களும் ரவுடி தான்.


மும்பை இந்தியர்கள்:

ஜெயசூர்யா: தல... தல... தல...
சச்சின்: என்னடா?
ஜெயசூர்யா:கங்குலி டீம் நம்ம கூட match ku வர்றாங்க தல....
சச்சின்: கங்குலிக்கு கட்டம் சரியில்ல.. நம்ம கூட மோதுறதே அவனுக்கு வேலையா போச்சு.
ஜெயசூர்யா: தல... கங்குலியா கொன்னுறு...

சச்சின்: ஹ்ம்ம்.. செத்த பாம்ப அடிக்கிற பழக்கம் எனக்கு இல்ல... என் சங்கத்துலருந்து ஆள அழச்சிட்டு போய் அவன முடிச்சிரு..
ஜெயசூர்யா: சரி தல..

சச்சின் song : நா அடிச்சா தாங்க மாட்ட.. நாலு மாசம் தூங்க மாட்ட... மோதி பாரு வீடு போயி சேர மாட்ட...

ராஜஸ்தானின் பகட்டானவர்கள்:

யூசுப் பதான் : அண்ணே... நாம ஏண்ணே எல்லா மட்ச்ளையும் தோத்துகிட்டே இருக்கோம்..
ஷேன் வார்ன்: நாம தோக்கலடா... இதெல்லாம் treatment.
யூசுப் பதான்: என்ன treatment ah?

ஷேன் வார்ன்: ஆமாடா... இப்ப நமக்கு வயித்துல எதாவது பிரச்சனைன்னு வசிக்கவேன்... நேரா போயி banglore ta match ku போவனும். அவியிங்க எல்லாரும் சேந்து வயித்துலேயே மிதிச்சி அடிச்சி அனுபிடுவாயிங்க..
இப்ப deccan ta match ku போனோம்னு வைய்யி... அத்தன பயலும் கழுத்துலே மிதிப்பானுங்க... கழுத்து வலியெல்லாம் போயிடும்.
மும்பை கிட்ட match ku போனோம்னு வையி அத்தன பயலும் மேல ஏறி டிங்கு டிங்குன்னு மிதிப்பனுங்க. மொத்த வலியும் போயி face fresh ஆயிடும்...

யூசுப் பதான்: அப்பா எல்லா எடத்துலயும் நீயா விரும்பி தான் அடி வாங்குற
ஷேன் வார்ன்: அட
ஆமாப்பா.. அவ்வவ்....


பெங்களூருவின் பகட்டான சவால்காரர்கள்:

இவியிங்க ஒரு Unlimited Meals Association. ஒவ்வொருத்தனும் மொழாம் பழத்துக்கு மூக்கு மொளச்ச மாதிரி இருக்கானுங்க. இந்த kaalis கருமம் புடிச்சவன்லாம் batting பண்ண வந்த 20 over முடிஞ்சும் போக மாட்டேன்னு அடம் புடிக்கிறான்.. இந்த ஊத்தப்பம் (Robin Uthappa)வேற indian team ல எடுத்தப்ப எல்லாம் இந்த மாதிரி விளயாண்டதே இல்ல.. ball கெடச்சா ground ku வெளில அடிச்சிபுடுறான். அப்பறம் இவங்க டீம் ல ஒரு spinner இல்லாத கொறதான். அணில் கும்ப்ளே ங்குற medium pace bowler ah வச்சி தான் adjust பண்ணிக்கிறாங்க.

தக்கணத்தின் விரட்டல்காரர்கள்:
இவியிங்கள பத்தி சொல்றதுக்கு பெருசா ஒன்னும் இல்ல.. இவியிங்க எப்போ ஜெயிப்பயிங்க எப்போ தோப்பாயிங்கன்னு யாருக்கும் தெரியாது. ஆனா ஜெயிக்க கூடாத நேரத்துல correct ah ஜெயிப்பாயிங்க.

Wednesday, March 3, 2010

விண்ணை தாண்டி வருவாயா....


Share/Bookmark
நண்பர்களே.... யாராவது இந்த படத்துக்கு போகணும்னு ஆசப்பட்டீங்கன்னா, நல்ல plan பண்ணி போங்க. Office la வேல பாக்குறவங்க இந்த படத்த காலைல பாத்துட்டு மதியம் office போயிடலாம்னோ, இல்ல காலேஜ் ல படிக்கிறவங்க இந்த படத்த morning பாத்துட்டு afternoon class ku போயிடலாம்னோ நெனச்சி போனீங்க... செத்தீங்க.... ஏன்னா அவ்ளோ நேரம் ஓடுது இந்த படம். Night show போன விடிஞ்சி தான் வீட்டுக்கு போகலாம்.

இந்த படம் பாக்க என்கூட ஒரு நாலு பேர அழைச்சிட்டு போனேன். படம் முடியும் போது side la இருந்தது ஒரு சத்தம். "ச்சீ... அப்புடியெல்லாம் பண்ணாதீங்க நயன்தாரா...!! " ன்னு.

டேய்
இந்த படத்துல த்ரிஷா தானடா heroine. யாருடா நயனதாராவ கூப்புடுறதுன்னு பாத்தா.... என் பக்கத்துல உக்கார்ந்து இருந்தவன் தூக்கத்துல ஒளரிக்கிட்டு இருக்கான்.... டேய் சனியன் புடிச்சவனே எழுந்திரிட போலாம்" ன்னா bed coffee குடுத்தா தான் வருவேன்னு அடம் புடிக்கிறான்.ஒரு வழியா அவன எழுப்பி கூப்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சி...

நா சொன்ன இந்த ஒரு minus point தாங்க இந்த படத்துல. டக்குன்னு முடிக்க வேண்டிய படத்த ஒரு ரெண்டு கிலோமீட்டர் இழுத்து முடிச்சிருக்காங்க.

படத்தோட title போடும் போதே ரஜினி ரசிகர்கர்களின் முகம் சிவப்பாக மாறுற அளவுக்கு ஒரு கொடுமை நடக்குது. காரணம் 'young super star' simbhu போடுறதுதான். ஆனா படம் முடிஞ்சி வர்றப்போ "ச்ச... போன போகுது போட்டுக்கட்டும்" ன்னு சொல்ற அளவுக்கு நடிச்சிருக்க்காறு சிம்பு. இது வரைக்கும் இப்டி ஒரு சிமபுவ யாரும் பாத்துருக்க மாட்டங்க. அவ்ளோ சூப்பரான நடிப்பு. இவ்ளோ expressions, இவளோ அழகான முகம் இதெல்லாம் இவளோ நாள் எங்க வச்சிருந்தாருன்னே தெரியல....

படம் ஆரம்பிச்ச மொத நிமிஷத்துலேர்ந்து த்ரிஷாவ லவ் பண்ண ஆரம்பிக்கிறாரு. படத்தோட கடைசி நிமிஷம் வரைக்கும் அத மட்டுமே பண்றாரு எ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கோட.

த்ரிஷா தேவதை மாத்ரி வர்றாங்க. இந்த சிம்பு-த்ரிஷா pair ah விட best pair வேற இருக்குமான்னு சந்தேகம் தான். அவ்ளோ அழகா லவ் பண்றாங்க. படத்துல நெறைய scene ல கை தட்டி ரசிக்கிற மாதிரி இல்லாம, feel பண்ணி ரசிக்க வச்சிருக்காங்க.

லவ் story ன்னு வந்துட்டாலே, ஹீரோவோட பேரு கார்த்திக் னு தான் இருக்கணும்னு நடிகர் சங்கத்துல எதாவது சட்டம் போட்டுருக்காங்கலான்னு தெரியல. இந்த படத்துல சிம்பு பேரும் கார்த்திக் தான்.

"இந்த உலகத்துல எத்தனையோ பேரு இருக்கும் போது, நா உன்ன மட்டும் ஏன் லவ் பண்ணேன் ஜெஸ்சி? " இந்த dialogue ah சிம்பு படத்துல ஒரு 40 தடவ சொல்லுவாரு.

" நீ ஏன் என்ன லவ் பண்ண கார்த்திக்?" இந்த dialogue ah த்ரிஷா ஒரு 50 தடவ சொல்லுவாங்க.

ஒரு கட்டத்துல " டேய் கருமம் புடிச்சவனுன்களா... நீங்க லவ்வே பண்ண வேண்டாம்... செத்துருங்கடான்னு " நம்ம சொல்ற அளவுக்கு second half la இழுவை.

இதுக்கும் மேல வழக்கமான கெளதம் படத்தோட வாடை கொஞ்சமும் குறையல. எப்பவும் போல எல்லா சீன்லயும் background voice la narrate பண்றது. வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் ல வர்ற அதே எடத்துல US la ஒரு song. அத விட கொடும வழக்கமா அவன் படத்துல வர்ற மாதரியே 3rd class வசனங்கள்.

"என் பொண்ண உன் பையன் try பண்றான்"

"அவளோட front ah பாத்தத விட back ah தான் அதிகமா பாத்தேன்"

"ஒ..... "வில் ஆரம்பிக்கிற கெளதம் மேனனோட favorite வார்த்தை அடிக்கடி...

இதுமாதிரி வசனங்கள் இந்த மாதிரி படத்துக்கு தேவையா? இவன் திருந்த மாட்டங்க... திருந்தவே மாட்டன்...

எ.ஆர்.ரஹ்மான் first half ல ஹாரிஸ் ஜெயரஜோட feel ah ye குடுத்தாலும் , second half "மன்னிப்பாயா" song வரும் போது, " நா அவன் மாதிரி இல்லீங்கோ... வேற மாதிரீங்கோ" ன்னு proof பண்ணிடுறாரு.

"த்ரிஷா கெடைக்கலன்ன திவ்யா" ங்குற அருமையான ஒரு message ah இந்த படத்துல சொல்லிருக்காங்க... கண்டிப்பா ஒரு தடவ பாக்கலாம்..(தியேட்டருக்கு போனா ஒரு தடவ பாத்து தானப்பா ஆவனும்னு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது).

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...