Monday, May 7, 2012

கலெக்டர் பாலமுரளி


Share/Bookmark

அவன் சொல்லி அடிக்கிறதுல கில்லி
சொல்லாம அடிக்கிறதுல திருப்பாச்சி
சொல்லி சொல்லாம சொழட்டி அடிக்கிறதுல சிவகாசி

இப்புடியெல்லாம் பாலமுரளிய பாராட்டனும்னு ஆசை தான்.. ஆனா என்ன.. அவருக்கு பாருங்க புகழ்ச்சி சுத்தமா புடிக்காது.. பட்டுக்கோட்டைலருந்து வந்து பட்டைய கெளப்பி தமிழ்நாட்டுலயே 5 வது இடத்துல IAS பாஸ்பண்ணி எங்க ஊருக்கு மட்டும் இல்லாம அவர் படிச்ச பள்ளிக்கும் பெருமை சேத்துருக்காரு நம்ம பால முரளி (http://www.facebook.com/balamuralidevendiran).

சோழர் பரம்பரையில் ஒரு கலெக்டர்.

இந்த விஷயத்த இங்க பதிவு செய்ய இன்னொரு காரணமும் இருக்கு. நானும் இவர் படிச்ச அதே ஸ்கூல்ல தான் படிச்சேன். இவர் படிச்ச அதே க்ளாஸ்ல தான் படிச்சேன். இவர் படிச்ச அதே வருஷம் தான் படிச்சேன். இவருக்கு முன்னாடி பெஞ்ச்ல தான் உக்காந்து படிச்சேன். ஏன்னா நா கொஞ்சம் குள்ளம் அவரு  கொஞ்சம் ஒசரம். அதுனால இவர தூக்கி பின்னாடி பெஞ்ச்ல போட்டுட்டாய்ங்க. அட சனியன் என் க்ளாஸ் மேட் தாங்க.

அரசினர் மேல்நிலைப்பள்ளி நாட்டுச்சாலை... இதான் நாங்க +1 & +2 படிச்ச
ஸ்கூல்... 2001-2003. அந்த வருடம் இன்னும் எங்க ஸ்கூல்ல மறக்க முடியாத
வருடங்களா இருக்கும்ங்கறதுல சந்தேகமே இல்ல. ஏன்னா 2003 ல எங்க
பேட்ச்ல தான் எங்க ஸ்கூல்ல முதல் முறையா 4 பேர் 1100 க்கு மேல
எடுத்திருந்தாங்க... ஸ்கூல் 1st வேற யாரும் இல்லை.. நம்ம கலெக்டர்
பால முரளி தான் (1133/1200). ஸ்கூல் 2nd எடுத்த பையனும் நமக்கு ரொம்ப வேண்டப்பட்ட  பையன் தான் (1131/1200) என்னது அவன் என்ன பண்ணிட்டு இருக்கானா? அவன விடுங்க.. அவன் ஒரு வெட்டி முண்டம் வீனா
போன தண்டம்... சும்மா மொக்கை படங்களா பாத்து அதுக்கு அத விட
மொக்கையா review எழுதிகிட்டு சுத்திகிட்டு இருக்கான்.

ஸ்கூல்ல நானும் இவரும் படிப்ப பத்தி பேசிருக்கோமோ இல்லையோ
பாபா படத்த பத்திதான் அதிக நேரம் பேசிருப்போம்.. ஏன்னா இவரும் நம்ம
தலைவரோட தீவிர ரசிகர். பாபாவுக்கு "ஒருவேள கதை இப்புடி இருக்குமோ, இல்ல ஒரு வேள அப்புடி இருக்குமோ" ன்னு என்னென்னவோ கற்பனை பண்ணி வச்சிருந்தோம்... கடைசில எல்லாம் டஸ் ஆயிருச்சி... :(

ஸ்கூல்ல, டியூஷன்லனு எங்க போனாலும் முன்னாடி முன்னாடி வந்து நின்னு மூஞ்ச காட்டி தொல்லை பண்ணிட்டே இருந்தான். சரி பரிட்சை முடிஞ்சோன்ன சனியன் ஒழிஞ்சாண்டா ன்னு பாத்தா ரிசல்ட் பாக்குற ப்ரவுசிங் சென்ட்டருக்கும் வந்து "ஹை நா உன்னவிட ரெண்டு மார்க் கூட எடுத்துட்டேனே... பிம்பிளிக்க பியாபீ" ன்னு கத்திகிட்டு இருந்தான்..


சரி இவன விட்டு தூரமா எங்கயாது ஓடிப்போயிரலாம்னு காரைக்குடி அழகப்பாவுல ஒரு சீட்ட வாங்கிகிட்டு போயிட்டேன்... விதி யார விட்டுது... அங்கயும் வந்துட்டான்... எங்க கலேஜ்க்கு பக்கத்துலயே (CECRI) la ஒரு சீட்ட வாங்கிகிட்டு. அடுத்த நாலு வருஷமும் இவன் கூட தானா... செத்தாண்டா சேகரு.... எப்புடியோ நாலு வருஷமும் ஓடிருச்சி... Final year படிக்கும் போது அவங்க காலேஜ் cultural program ku invite பண்ணிருந்தாரு. நானும் என் நண்பர்களும் போய் விழாவ நல்லா சிறப்பிச்சிட்டு (அவ்வ்வ்) வந்தோம். எங்க காலேஜ் Culturals ah விட ரொம்ப enjoy பண்ணது அங்க தான்...

படிக்கும்போதே வேலை வாங்குனதும் இல்லாம சைடுலயே கேப்புல கெடா வெட்டிகிட்டு  இருந்துருக்காரு. இவன் அடிச்ச மணி CECRI ஆஞ்சனேயருக்கு கேட்டுச்சோ  இல்லையோ... கவர்மண்டுக்கு கேட்டுருச்சி... அடிச்சாம்பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரு...

உன்னால பட்டுக்கோட்டைக்கே பெருமை... நீ படிச்சதால நம்ம ஸ்கூலுக்கு பெருமை... உன்னோட படிச்ச எங்க எல்லாருக்கும் பெருமை..

கண்ணா... என்னிக்கும் அந்நியாத்துக்கு தலைவணங்காத... அட்சி தூள் பண்ணு...


நண்பர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.



Thursday, May 3, 2012

KAHAANI- கஹானி - செம படம் !!!


Share/Bookmark
இதுவரைக்கும் நா பாத்துருக்க ஹிந்தி படங்கள விரல் விட்டு எண்ணுனா நாலஞ்சி விரல் பாக்கி இருக்கும்... அது என்னன்னு தெரியல...ஹிந்தின்னா ஒரு அலர்ஜி.. அந்த பாஷை உச்சரிப்ப கேக்கும்போதே எதோ இனம் புரியாத ஒரு வெறுப்பு..  எதுனால அப்டி ஆச்சுன்னு தெரியல... போன வருஷம் PM eh கால் பன்னி "மிஸ்டர் சிவா... நம்ம நாட்டுக்காக நீங்க இத செஞ்சே ஆகனும்" னு ஹிந்தில  சொன்னப்ப "sorry PM... எனக்கு ஹிந்தி தெரியாது" ன்னு சொல்லி ஃபோன கட் பன்னவன்... "சரி இப்ப அதுக்கு என்ன பண்ணனும்ங்குற" ன்னு தானே  கேக்குறிங்க.. சும்மாதான்... எப்புடி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல... சரி மேட்டருக்கு வருவோம்..

வித்யாபாலனே ஹீரோவாகவும், ஹீரோயினாகவும் நடிச்சி வெளிவந்துருக்க படம் இந்த கஹானி...அப்ப டபுள் ஆக் ஷனான்னு கேப்பீங்களே... அட படத்துல
எல்லாமே அவங்கதான்னு சொல்ல வந்தேன்ப்பா...


இந்த படத்த பாத்து முடிச்சதும் திரும்ப ஒரு "Sixth Sense" ah பாத்தது போல
ஒரு உணர்வு.. அதே தரத்தோட, அதே மாதிரியான ஒரு சஸ்பென்ஸ் திரைக்கதை. கதை கேட்காம போய் படம் பாக்குறவங்களுக்கு படம் முடியும் போது ஒரு மிகத் தரமான படத்த பார்த்த ஒரு ஃபீல் இருக்கும்.

சரி சன் டிவி டாப் 10 சுரேஷ் குமார் மாதிரி சுருக்கமா படத்த பத்தி கொஞ்சம் சொல்றேன்...அதே slang la படிங்க

"லண்டன்லருந்து கொல்கத்தாவுக்கு ப்ராஜெக்ட்டுக்காக வந்த தன்னோட
கணவன்ட்டருந்து எந்த தகவலும் வராததுனால அவர தேடி கொல்கத்தா
வராங்க நிறைமாத கற்பிணியான வித்யா பாலன். ஆனா இங்க வந்து பாத்த
அப்புறம் அவருடைய கணவன் பேர்ல கொல்கத்தாவுக்கு யாரும்
வரலைன்னும், அந்த கம்பெனில அப்புடி ஒரு ஆளே வேலை செய்யலன்னும்
தெரிய வருது. பின்னர் போலீஸோட உதவியோட கணவன கண்டுபிடிக்க
முயற்சி பண்ணும் போது பல திடுக்கிடும் உண்மைங்க தெரிய வருது. அதயெல்லாம் தாண்டி வித்யா பாலன் கடைசில தன் கணவனோட சேர்ந்தாரா இல்லையாங்கறத சுவாரஸ்யமாவும் ரசிக்கிற மாதிரியும் சொல்லியிருக்க படம் தான் இந்த கஹானி.. "

வித்யாபாலன பாத்தாலே "அய்யோ... பதினொரு மாசமா இருக்கும் போலருக்கே" ன்னு நமக்கே தோணும். அப்டியே கர்பிணி பெண்ணாவே மாறிருக்காங்க... சில காட்சில அவங்க வேகமா நடக்கும் போது நமக்கு பயமா இருக்கு.. எதாவது ஆயிருமோன்னு.....

அருமையான ஸ்கிரிப்ட்.. தெளிவான திரைக்கதை... கடைசிவரைக்கும் போர்
அடிக்காம விறு விறுபோட எடுத்துட்டு போயிருக்காங்க...   ரொம்ப நாளுக்கப்புறம் ஒரு சூப்பர் படம் பாத்த திருப்தி.... 



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...