ஒருத்தன அடிச்சி அவனுக்கு வலி வர வைக்கலாம்... ஆனா மேல கை படாம சிரிக்க வச்சே நமக்கு வயிறு வலி வர வைக்கிற வித்தைய சுந்தர் சி எங்கதான் கண்டுபுடிச்சாரோ? உங்களுக்கு இதுவரைக்கும் ரொம்ப புடிச்ச நகைச்சுவை படம்னா உடனே எத சொல்லிவீங்க? உள்ளத்தை அள்ளித்தா? மாமன் மகள்? மேட்டுக்குடி? வின்னர்? சிவா மனசுல சக்தி? பாஸ் என்கிற பாஸ்கரன்? இந்த எல்லா படத்தையும் அடிச்சி தூக்கிட்டு முன்னால நிக்குது இந்த கலகலப்பு...
யப்பா.... படத்துல ஒரு லெவலுக்கு மேல நம்மளால சிரிக்கவே முடியல... ஒரு காமெடிக்கு நாம சிரிச்சி முடிக்கிறதுக்குள்ள அடுத்த காமெடி.... படத்துல முதல் பாதிய தூக்கி நிறுத்துறதே மிர்ச்சி சிவா தான்... எங்கருந்துய்யா வாங்குன அந்த மூஞ்சியையும், அந்த டயாலாக் பேசுற slang கயும்... சிவா சாதாரணமா ஒரு டயலாக் பேசுனாலே அது பயங்கரம இருக்கு.. சிவா பேசுற ஒவ்வொரு டயலாக்கும் தியேட்டரே அதிருது..
முதல் பத்து நிமிஷத்துல விமல் வர்ற ஒரு ரெண்டு மூணு சீன் Bore அடிச்சாலும் சிவா கலத்துல எறங்குன உடனே எல்லாத்தையும் மறக்க வச்சிடுறாரு.. இளவரசுவ பத்தி சொல்லனும்னா அவர்ட்டருந்து இதுக்குமேல ஒரு நடிப்ப வாங்கமுடியாது.. காமெடில கொன்னு எடுத்துருக்காரு... அஞ்சலி, ஓவியா ரெண்டு பேருக்கும் நடிக்க பெருசா வாய்ப்பு இல்லன்னாலும் அழகான ஹீரோயின்களா படத்துல வலம் வர்றாங்க...
முதல்பாதி சிவா, விமல், இளவரசு, வி.எஸ்,ராகவன்னு படம் கலாட்டாவ நகர, ரெண்டாவது பாதில எண்டர் ஆவுறாரு சந்தானம்.. சில முன்னணி ஹீரோக்களுக்கே intro scene la அவ்வளோ வரவேற்பு இருக்கதில்ல இப்பல்லாம்.. ஆனா இந்த படத்துல சந்தானம் introduction kku எதோ ரஜினி பட intro மாதிரி கொடூர சவுண்டு.. சந்தானத்துக்கு மூணு body guards.. ஒருத்தர் பேரு மண்டை கசாயம், இன்னொருத்தர் பேரு பேயி.. தளபதி தினேஷ் பேரு
திமிங்கலம்... அந்த பேர நெனைச்சே ரொம்ப நேரம் சிரிச்சிகிட்டு இருந்தேன்... தமிழ் சினிமால கொடூர வில்லன்களா இருந்த எல்லாரும் இப்ப காமெடிக்கு மாறிட்டாங்க... அவங்க காமெடி பண்றப்ப வழக்கத்த விட அதிகமா ரசிக்க முடியுது...
"ஏண்டா.. சைக்கிளாடா ஓட்டிகிட்டு இருக்கேன் sudden brake போட்டு நிறுத்துறதுக்கு" ன்னு ஆரம்பிக்கிற சந்தானம் ஒவ்வொரு சீன்லயும் விழுந்து விழுந்து சிரிக்க வச்சிருக்காரு.. ஒரு சீன்ல அவசர அவசரமா எல்லாரும் சண்டைக்கு கெளம்பும் போது, தளபதி தினேஷ் "பாஸ் வீடு வரைக்கும் போய் சுகர் மாத்திரை போட்டுகிட்டு வந்துடுறேன்" ன்னு சொல்றதும், "நீயேல்லாம் எப்புடி பாஷா பாய்கிட்ட body guard ah இருந்தன்னு " ன்னு ன்னு தளபதி தினேஷ சந்தானம் வாருறதும் செம கலக்கல்... இவங்கல்லாம் பத்தாதுன்னு மனோபாலா வேற... தாறு மாறு காமெடி...உண்மைலயே இந்த படத்துக்கு தான் "கர்ப்பிணி பெண்கள், இதய நோய் உள்ளவர்கள் பார்ப்பதை தவிர்க வேண்டும்" ன்னு போடனும்.. சிரிச்சி சிரிச்சி அவங்களுக்கு எதாவது ஆனாலும் ஆயிடும்..
வசனங்கள் எல்லாமே மிக அருமை... கேபிள் ஷங்கருக்கு ஒரு சபாஷ்... பட்டைய கெளப்பிருக்காரு... எடுத்த சீனயே திரும்ப திரும்ப எடுத்தாலும் அதுல சலிப்பு வராம காமெடி பண்றதுல சுந்தர்.சி க்கு நிகர் அவரே தான்.. காமெடி படங்கள்ல மட்டும் தான் எந்த லாஜிக்கையும் பாக்காம மனசு விட்டு சிரிக்க முடியும். படத்துல போர் அடிக்கிற விஷயம்னா ரெண்டு டூயட் தான்... மத்தபடி பிண்ணனி இசையில எல்லாம் குறை சொல்ற மாதிரி எதுவும் இல்ல... "இவளுங்க இம்சை தாங்க முடியல" ங்குற பாட்டு சொல்ற மாதிரி இருக்கு.. ஆனா வழக்கம் போல ஆடியோவுல "குத்துங்க .. எசமான் குத்துங்க." ன்னு வர்றா வரிகள "கொல்லுங்க.. எசமான் கொல்லுங்க" ன்னு மாத்தி விட்டுருக்காங்க... இத பாட்டு எழுதும் போதே யோசிக்க மாட்டீங்களா? ஹி ஹி
டைட்டில்ல சுந்தர்.சி பேர் போடும் போது என்னையும் என் நண்பனையும் சேத்து ஒரு 10 பேர் மட்டும் தான் தியேட்டர்லயே கைதட்டுனோம்... ஆனா படம் முடிஞ்ச அப்புறம் தியேட்டர்ல உள்ள எல்லாரும் எழுந்து நின்னு கை தட்டுனாங்க... இதுதான் அவருக்கு கிடைச்ச பெரிய வெற்றி..சுந்தர்.சி ஃபேன்னு சொல்லிக்கிறதுக்கே ரொம்ப பெருமையா இருக்கு.
நேத்து சில பதிவர்கள் இந்த படத்த பத்தி எழுதுன reviews படிச்சேன்... "சுமார்"
"ஒகே ஒகே அளவுக்கு இல்லை" ன்னுல்லாம் எழுதிருந்தாங்க... அவங்கள என்ன சொல்றாதுன்னு தெரியல... சுந்தர்.சி யோட எல்லா படங்கள்லயும் பெஸ்டு இந்த படம்தான்.. சந்தோஷமா போங்க..ரொம்ப சந்தோஷமா வருவிங்க. அனைவரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய ஒரு படம். நா ரொம்ப நாளுக்கு அப்புறம் இந்த படத்த தான் ரெண்டாவது தடவ பாக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.