Monday, July 27, 2009

மோதி விளையாடு


Share/Bookmark
சரண் இயக்கத்தில் வினய் நடிப்பில் வெளிவந்திருக்கும் புதிய திரைப்படம். ஒரு வலுவில்லாத கதைக்கு திரைக்கதை எழுத முடியாமல் எழுதி, தோற்றுபோய் இருக்கிறார் சரண். படத்தின் அனைத்து காட்சிகளுமே வெளிநாடுகளில் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. காட்சி பதிவு (மட்டும்)அருமை.

.
வழக்கமாக நல்ல திரைக்கதை எழுதி வசனங்களில் மட்டும் கோட்டை விடும் சரண் இந்த முறை திரைக்கதையிலேயே கோட்டை விட்டிருக்கிறார். ஒரே ஒரு எதிர்பாராத திருப்பத்தை தவற படத்தில் சொல்லிக்கொள்வது போல வேறு எதுவும் இல்லை. முதல் பாதியில் சந்தானம் , மயில் சாமி ஆகியோர் இருந்தும் கூட அவர்களை அதிகம் நம்பாமல் காஜல் அகர்வாலை வைத்து கதையை (?) நகர்த்தியிருக்கிறார்கள். எங்களால முடியல....

இடைவேளை
வரை, ஏன்டா வந்தோம் னு நினைக்கும் போது கதையில் ஒரு திருப்பம். சரி second half எதோ இருக்கும் போலருக்குன்னு நெனச்சா, நம்மலவிட கேனயன் வேற யாரும் இல்ல. பின்பாதியில் எதோ திரைக்கதையை ஒப்பேத்துனா போதும் னு படம் எடுத்து நம்மள கடுப்பேத்தி இருக்காங்க.

ஹரிஹரன்-லெஸ்லி இசையில் இரண்டு பாடல்கள் இனிமை. "மோதி விளையாடு மோதி விளையாடு " பாடல் படமாக்கப்பட்ட விதம் அருமை.

கடைசி வரைக்கும் படத்துல யாரும் மோதி விளையாடல. படத்த பாத்துட்டு நாங்க தான் சுவத்துல மோதி மோதி வெளயாண்டோம். இதுல எங்களுக்கு பெரிய வருத்தம் எதுவும் இல்ல. ஆனா சரணிடம் அடுத்து சரணடைந்திருப்பது தல அஜித். அத நெனைக்கும் போது தான் lite ah கஷ்டமா இருக்கு. 'தல' யின் தலை தப்பிக்குமா?

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

Anonymous said...

மச்சி.. எனக்கு மிகவும் பிடித்த சரணின் இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால் கடுமையான வாந்தி பேதியுடன் கூடிய ஏமாற்றமே மிஞ்சியது. சந்தானம் மயில்சாமி தான் ஆறுதல். 'தல'ய பத்திக் கவலைப்படாத மச்சி, தல தரணியாளும்.

Anbu said...

\\கடைசி வரைக்கும் படத்துல யாரும் மோதி விளையாடல. படத்த பாத்துட்டு நாங்க தான் சுவத்துல மோதி மோதி வெளயாண்டோம். \\

நானும்தாங்க..

Unknown said...

Machi padathukku 'Odi poidu' per vachirukkanum.. Thappa 'Modhi vilayadu' nu vachuttanga.. Nee onnum tension aagatha.. Naama vangatha adiya.. adhuvum idhey saranoda "Idhaya thirudan" la vaangathatha??

freeya vidu..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...