Thursday, December 3, 2009

ஏறி வாய்யா... ஏரி வாயா..


Share/Bookmark
சென்னையில பஸ்ல போயிட்டு வர்றவங்களுக்கு கீழ்க்கண்ட வாசகங்களெல்லாம் ஒண்ணும் புதுசா இருக்காது.

"காலையிலேயே வந்துட்டான் சாவு கிராக்கி 100 ரூபாய தூக்கிகிட்டு.. எறங்கி அடுத்த பஸ்ல வா.."

" படியில நின்னு பல்ல காட்டிக்கிட்டு நிக்காம உள்ளா வாப்பா..... எதுத்தாப்புல வர்றவன் தலைய மட்டும் தனியா கொண்டு போய்ட போறான்.."

"ஏன்யா.... கம்பிய கட்டி புடிச்சிகிட்டு இங்கயே நிக்கிறியே .. அது என்ன உம் பொண்டாட்டியா... அது ஒன்னும் கீழ விழுந்துடாது விட்டுட்டு உள்ள போ..."

"என்பா கிண்டி ஒரு டிக்கெட் குடு " ன்னு கேக்குற பெரியவர்ட "கிண்டியெல்லாம் டிக்கெட் தர முடியாது... சும்மாதான் தருவேன். வேணும்னா வாங்கு இல்லன்னா எறங்கு.."

இப்புடி எல்லாருக்கும் பஞ்ச் தர்றவங்கதான் நம்ம சிட்டி பஸ் கண்டக்டருங்க. இப்புடி எல்லார்கிட்டயும் எரிஞ்சி விழற இவங்க சில பேர பாத்தா மட்டும் பொட்டி பாம்பா அடங்கிடுவாங்க. அவங்க வேற யாரும் இல்ல, ஸ்கூல் படிக்கிற பசங்க தான்.

அவிங்க வண்டில ஏறுனா டிக்கெட்டும் எடுக்க மாட்டாயிங்க.. வழியையும் விட மாட்டாயிங்க. கையில வச்சிருக்கிற 25 கிலோ school bag க்கு லக்கேஜும் வாங்க மாட்டயிங்க.. இதுனாலேயே நம்ம கண்டக்டர்களுக்கு அவியிங்கள பாத்தாலே ஒரு கொல வெறி...

அதுலயும் அந்த பசங்களுக்கு கண்டக்டர கலாயிக்கிரதுல அப்புடி ஒரு சந்தோசம்... நான் பாத்து ரசிச்ச சில புஞ்ச்சுகள் இதோ..

அன்னிக்கு
ஒருநாள் அப்புடித்தான் கண்டக்டரு
" டிக்கெட்... டிக்கெட்... டிக்கெட் வாங்கு... " ன்னுட்டே வந்தாரு...

அங்க இருந்த ஸ்கூல் பையன் ஒருத்தன் "அண்ணே... பாஸ்" ன்னு பஸ் பாச எடுத்து காமிச்சான்...

உடனே பக்கதுல இருந்தவன்.. "அண்ணே ... நா பெயில் " ன்னு ஸ்கூல் rank card ah எடுத்து காமிச்சிட்டான்..

"ஆமாண்டா... இப்புடியே பேச்சு படிச்சிகிட்டே இரு உருப்புட்டுரலாம்..." ன்னு முனுமுனுத்துகிட்டே போன அவர பாக்க கொஞ்சம் பாவமா தான் இருந்துச்சி..

அப்புறம் ஒருநாள் " ஏன்பா .. முன்னாடி ஏதாவது டிக்கெட் இருக்கா ..." ன்னு கேட்டாரு வழக்கமான slang ல.

" இங்க ஒரு சூப்பர் டிக்கெட் இருக்குண்ணே... ஆனா ரொம்ப நேரமா மொரச்சிகிட்டே இருக்கு.. இத வந்து கொஞ்சம் என்னனு கேளுங்கண்ணே... " ன்னான் முன்னாடி foot borard ல நின்ன ஒருத்தன்.

அவன் சொன்னது கேக்காத மாதிரியே, bag la வச்சிருந்த register ah எடுத்து கணக்கு எழுத ஆரம்பிச்சிட்டாரு நம்மாளு.

இதுகூட பரவால... அன்னிக்கு வேப்பேரி பஸ் ஸ்டாப் ல பஸ் வந்து நின்னுச்சி... கீழ நெறய பசங்க bag மாட்டிகிட்டு நின்னுட்டிருந்தாங்க... திடு திடு ன்னு ஒரு பையன் மட்டும் படில ஏறி கண்டக்டர் கிட்ட

" அண்ணே இந்த பஸ் மின்னல் நகர் போகுமாண்ணே? ன்னு கேட்டான்.

"போகும்.. போகும்... எல்லாரும் சீக்ரமா இருங்க" ன்னாரு அவரு.

"ஆனா நாங்கதான் அங்க போகலியே... நீங்க கெளம்புங்க" ன்னு சொல்லிட்டு இறங்கிட்டன்.

அசிங்கப்பட்டன் ஆட்டோக்காரன் ங்குற மாதிரி ஆயிடுச்சி அந்த கண்டக்டரோட நெலம...

"புள்ளைய பெக்க சொன்ன குட்டி சாத்தான பெத்து விட்டுருக்கயிங்க.." ன்னு அந்த பையனோட அப்பா அம்மாவ திட்டிட்டு விசிலடிச்சாறு.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

Sridhar said...

:-))

அன்புசிவம்(Anbusivam) said...

ரை..ரை..ரை..ரைய்ய்ய்ய்ட்...

புலிப்படை said...

www.Tamilaruvy.com wach tamil DVD HQ movies online visit now www.Tamilaruvy.com or www.Aruvymovies.com

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...