போன மாசம் 31ம் தேதி தாண்டவத்த பாத்துட்டு வீட்டுக்கு வந்தப்ப வந்த குளுர் ஜொரம் இன்னும் எனக்கு விட்ட பாடு இல்ல.. முகமூடி, தாண்டவம்னு மாறி மாறி அடி வாங்குனதுல தியேட்டர் பக்கம் போகவே இப்பல்லாம்அல்லு கெளம்புது. நல்ல வேளை மாற்றானுக்கு போகலாம்னு மொத நாளே முடிவு பண்ணி, மதுரை தங்கரீகல் தியேட்டர்ல வரிசையில நின்னு, டிக்கெட் கெடைக்காததுனால மயிரிழைல உயிர் தப்பிச்சேன்.
ஒரு மாசமா படம் பாக்கலன்னதும் கண்ணெல்லாம் படக்குப் படக்குன்னு அடிக்க ஆரம்பிச்சிருச்சி..கையெல்லாம் நடுக்க ஆரம்பிச்சிருச்சி. சரி ஜொரம் கெடந்த கெடந்துட்டு போகுதுன்னு நம்ம க்ரோம்பேட்டை வெற்றி தியேட்டர்லயே ஆப்ரேஷன போட்ரலாம்னு ப்ளான் பண்ணேன். 2010ல எந்திரன் ரெண்டாவது தடவ வெற்றி காம்ப்ளெக்ஸல உள்ள ராகேஷ்ல பாத்ததுட்டு, "என்னடா இது நாம இங்க உக்கார்ந்துருந்தா ஒரு கிலோமீட்டருக்கு அந்தாண்ட குட்டி டிவில படம் ஓடிகிட்டு இருக்குன்னு" வெறிச்சி ஓடுனவந்தான். தாம்பரத்துக்கு மாறி 6 மாசத்துக்கு மேல ஆகியும் வெற்றில காம்ப்ளெக்ஸ்ல ஒரு படம் கூட பாத்தில்ல. இன்னிக்கு தூரமா போய் படம் பாக்குற அளவுக்கு பாடி தாங்காதுங்குறாதால வெற்றிலயே பாத்தேன். ஸ்கிரீன் ரொம்பவே நல்லா இருந்துச்சி.
வழக்கமா எந்தப்டம் பாத்தாலும் எதாவது ஒரு காரணம் இருக்கும்.. பிடிச்ச ஹீரோ இல்லை பிடிச்ச டைரக்டர்னு... எதாவது.. ஆனா இந்த பீட்ஸா பாக்குறதுக்கு எந்த ரீசனும் இல்லை.. ஏன்னா யாரையுமே தெரியாது. ஹீரோவயும் ஹீரோயினையும் ஏற்கனவே ஒவ்வொரு படத்துல பாத்துருக்கேன் அவ்வளவுதான். ஆனா சமீபகாலமா வந்த பல படங்களை கம்பேர் பண்ணூம் போது ரொம்பவே சூப்பரான ஒரு படம் இந்த பீட்ஸா...
கதைய பாத்தா கிட்டத்தட்ட ஒரு short film எடுக்குற மாதிரியான கதைதான். ஆனா அதுக்கு சூப்பரா ஒரு ஸ்கிரீன் ப்ளே எழுதி பட்டைய கெளப்பிருக்காங்க. அதிகமான கேரக்டர்கள்லாம் இல்லை... மொத்தமாவே படத்துல ஒரு 10 கேரக்டர்ஸ் தான். அவங்களுக்குள்ளயே கதைய சுத்தவிட்டு முடிஞ்ச அளவு ட்விஸ்டுங்கள வச்சி ஆடியன்ஸ மெரள வச்சிருக்காங்க.
1. தெளிவான கதை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை
2. மொக்கை போடாம , ஆங்கிலப்படங்கள் மாதிரியே முதல் காட்சியே கதைக்களத்திற்கு போயிடுது
3. தேவையில்லாத வழ வழ கொழ கொழ சீன்கள் எதுவும் இல்லாம கதைக்கு தேவையான
சீன்கள் மட்டுமே இருக்கு.
4. இண்டர்வல்க்கு முந்தைய மற்றும் பிந்தைய கால் மணி நேரங்கள் தான் படத்தின் ஹைலைட். கொலை வெறி.... பீதிய கெளப்பி விட்டுடுறாய்ங்க
5. ஹீரோயின் ரம்யா... குள்ளநரி கூட்டத்துல இருந்தத விட இதுல சூப்பரா இருக்காங்க
ஏதாவது எதிர்பாத்து போயி இல்லைன்னாதான் மைனஸ் தெரியும்... இந்த படத்துக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாம வந்தாதால எதுவும் மைனஸா தெரியல... எனக்கு பின் வரிசையில உக்காந்து ஒரு கருமம் புடிச்சவன் கச கசன்னு பேசிகிட்டே இருந்தான். அதுதான் ஒரே படம் பாக்கும்போது ஒரே
கடுப்பு.

படத்தின் ப்ளஸ்:

மைனஸ்:

டுப்பாக்கி :
இன்டர்வல்ல துப்பாக்கியோட ரெண்டவாது ட்ரெயிலர் போட்டாய்ங்க...
என்னா சவுண்டு... "இன்னுமாடா இவர நம்பிக்கிட்டு இருக்கீங்கன்னு" ன்னு தோணுச்சி. அப்புறம் என்னன்னு தெரியல் ட்ரெயிலர் முடியும் போது விஜய் வாய நாய் கடிச்ச மாதிரி வச்சிகிட்டு "I am வொய்ட்டிங்" ங்குறாரு.. பாத்து படம் பாக்க போற நம்மள எதுவும் கடிச்சி வச்சிட போறாரு... உசாரய்யா உசாரு. ட்ரெயிலர்ல பகவதி, வேட்டைக்காரன்னு எல்லாரயும் ஒண்ணா பாத்த ஒரு பீலிங்கு..