Monday, October 1, 2012

தாண்டவம் - என்னது மகாத்மா காந்தி செத்துட்டாரா?


Share/Bookmark
எனக்கு ஒண்ணு தான் புரியல... நம்ம ஊர்ல உள்ள மக்கள் எல்லாம் லவகுசாவுக்கு  அப்புறம் இப்பதான் தியேட்டர் போயி படம் பாக்குறோம்ன்னு இவிங்க மனசுல எதுவும் நம்ம மக்களைப் பத்தி நெனைச்சிட்டு இருக்காய்ங்களான்னு தெரில காந்தி காலத்துல  வரவேண்டிய படத்தையெல்லாம் இப்ப ரிலீஸ் பண்ணி இவியிங்க பண்ற அலும்பு இருக்கே.. ஆத்தாடி... அது எப்புடி கொஞ்சம் கூட வெக்கமே படமா இத ஒரு கதைன்னு எழுதி  அதுல நாலு பெரிய ஆக்டர்ஸ வேற நடிக்க வச்சி ரிலீஸ் பண்ணிருக்காய்ங்கன்னு தெரியலப்பா.

இந்த கொடுமையில இந்த கதைய என்னோட கதைன்னு ஒரு உதவி இயக்குனர் சொல்றாரு. இல்லைங்குறாரு மெயின் இயக்குனரு... டேய் இது உங்க ரெண்டு பேரோட கதையுமே  இல்லையேடா... கஜினி படத்தை திரும்ப எடுத்து வச்சிகிட்டு இதுக்கு ரெண்டு பேரும்  சண்டை வேற...  நன்னாரிப்பயலுகளா... கஜினியே ஆட்டைய போட்டது... ஆட்டைய போட்டதுலருந்தே ஆட்டைய போட்டுட்டீங்களா... இதுக்காகவே நம்ம டைரக்டர் விஜய்ய திருடர் குல திலகம் என்று இன்றிலிருந்து அன்போடு அழைப்போமாக...  ஆக்சுவலா இது தமிழ் சினிமாவோட பொதுக்கதைடா..

முதல் ரெண்டு சீன பாத்தாலே படத்தோட மொத்த கதையும் நமக்கு புரிஞ்சிடும். முதல் காட்சில லண்டன்ல நாலு இடத்துல குண்டு வெடிக்குது. உடனே ஒரு வருடத்திற்கு பிறகு ன்னு போட்டு அந்த குண்டு வெடிப்புல செத்தவங்களுக்கெல்லாம் அஞ்சலி செலுத்துறாங்க. அப்ப வர்றாரு நம்ம விக்ரம்.. நைட்டோட நைட்டா போயி ஒருத்தன போட்டுத் தள்றாரு.. இது பத்தாதா நமக்கு கதைய கணிக்க... அந்த குண்டு வெடிச்சதுல அனுஷ்கா செத்துப்போச்சி... அதுக்காக இவரு காரணமானவங்கள கொல்றாரு..  வாவ்...
கதை ரொம்ப புதுமையா இருக்குல்ல.

கொலைக்கான காரணத்த கண்டுபுடிக்கிற போலீஸ் ஆப்பீசர் கேரக்டர்ல நாசர்...  ஈழத் தமிழ் பேசுறேன்னு சொல்லிட்டு புதுசா தமிழ்ல நடிக்க வந்த மும்பை ஆக்ட்ரஸ் மாதிரி அப்பப்ப இடைஇடையே சிங்களத் தமிழ்ல பேசி வெறுப்பாக்குறாரு.  என்ன  கண்றாவிக்கு  இதெல்லாம்.   மிஸ்டர் விஜய் எல்லா படத்தையும் பாக்குற நீங்க ஒரு  தடவ தெனாலி படத்த பாத்துருக்கலாமே..இல்லன்னா நாசருக்கவது போட்டுக் காட்டியிருக்கலாம்.வரலன்னா விட்டுட வேண்டியது தானே... அந்த கேரக்டர் அந்த மாதிரி பேசனும்ங்கற அவசியம் கதையிலயும் இல்ல அந்த கேரக்டர்லயும் இல்லை. அப்புறம் ஏண்டா ஏன்? கதை நடக்குறது தான் லண்டன்ல... ஆனா திரும்புற பாக்கமெல்லாம் தமிழ் ஆப்பீசர்ஸ்தான்
இருக்காய்ங்க. அதோட பெரிய காமெடி நாசர் இந்த கொலைக்கேச இன்வெஸ்டிகேட் பண்ணுவாரு பாருங்க... பியூட்டிஃபுல்...

விக்ரம பாத்தா பாவமா இருக்கு... அவருக்கு மட்டும் ஏன் இப்புடி? காசி கெட் அப்பையும் தெய்வத்திருமகள் கெட்டப்பையும் கலந்து விட்டு ஒரு புது நடிப்பு, பாடி லாங்வேஜ்  கண்டுபுடிச்சிருக்காரு. ஆனா ஒண்ணும் வேலைக்காகல. ஒரு சீன்ல சட்டையில்லாம வர்ற ஃபைட் மட்டும் செம... உடம்பு செம ஃபிட்.... பழனி படிக்கட்டு மாதிரி கட்டிங்ஸ் இல்லைன்னாலும் பயங்கரமா இருக்கு. ஆனா மூஞ்சி செம்ம அடி வாங்கி உண்மையிலயே நோயாளி மாதிரி ஆயிட்டாரு.

எமி ஜாக்சன்... லண்டன்ல உள்ள ஒரு தமிழ்ப் பெண்... செம அழகா இருக்காங்க.
ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா பல தமிழ் ஹீரொயின்கள விட டயலாக்குக்கு  சூப்பரான லிப் மூவ்மெண்ட்... எமிய வச்சி இவிங்க போடுற மொக்க இருக்கே... யம்மா. மிஸ்லண்டனா எமிய செலெக்ட் பண்ற மாதிரி ஒரு சீன் எடுத்துருப்பாய்ங்க..  சரி ஹீரோயின் இண்ட்ரொடக்ஷனுக்காக ஒரு சீனு அப்டி இருந்தா பரவால்லன்னு  பாத்தா, அடுத்தடுத்து போடுற மொக்க இருக்கே...அப்பவே எழுந்து ஓடிரனும் போல இருக்கும். சீன் இல்லன்னா இன்னொரு ரெண்டு இங்கிலீஷ் படத்த சேத்து பாத்துட்டு நல்ல சீனா எடுக்குறது... ஏன் விஜய் சார் இப்டி?  "நங்காய்... நீலாவின் தங்காய்...." ஸ்டைல்ல ஒரு பாட்டு வேற இதுக்கு... அதே ட்யூன் அதே கொரியோக்ராஃபி... ஆனா ஹன்ஸிகாவுக்கு பதிலா எமி ஜாக்சன்...  அந்த பாட்டு ஃபுல்லா எமிய நடக்க விட்டே எடுத்துருக்காரு நம்ம விஜய்.. அப்ப தான் எனக்கு மைண்டுல ஒண்ணு தோணுச்சி... அட நல்லா நடக்க வைக்கிறீங்களே.. நீங்க அஜித்த வச்சி இன்னோரு DON story பண்ணலாம் போலருக்கே" ன்னு.

அனுஷ்கான்னு ஒரு ஆண்டி இந்த படத்துல நடிச்சிருக்காங்க.(But அழகா இருக்காங்க) படத்துலயே படு மொக்கையான கேரக்டர் அவங்களுக்கு தான். கண் டாக்டரான அவங்க புருசனா வரப்போறவரு யாரு என்ன பண்ராருன்னு தெரியாமயே கண்ணாலம் பண்ணிக்குறாங்களாமா... கணவன் மனைவியா விக்ரம் அனுஷ்கா வரும் காட்சிங்க எல்லாமே அப்புடியே  மெளன ராகம் மாதிரி. டயலாக் கூட  அப்புடியே... உதாரணத்துகு ரெண்டு பேரும்  கார்ல வரும்போது விக்ரம் கவனிக்காம கார ஸ்பீட் ப்ரேக்கர்ல வேகமா விட்டுட்டு அனுஷ்காட்ட பேசுற டயலாக்க பாருங்க..

விக்ரம்: சாரி.. பாக்கல

அனுஷ்கா: பாருங்க...

என்னத்த சொல்ல... ஜகபதி பாவுவும் ஒண்ணும் பெருசா சொல்லிக்கிற அளவுக்கு இல்ல. ஆனா ஆளு மட்டும் கெத்தா இருக்காரு...பாட்டும் சரி BGM உம் சரி... ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லை.. எனக்கு ரொம்ப புடிச்சதே தல SPB பாடுன "தகிட தகிட தக தாஆஆஆஆ" தீம் தான்.. அத டைட்டில்ல பத்தே செகண்ட் மட்டும் தான் வந்துச்சி.. :(


விஜய் எடுத்த பழைய படங்களுமே படுமொக்கைகள் தான். ஓடுச்சின்னு தெரியல... இதுல இவருக்கு பல ஃபேன்ஸ் வேற. விஜய் படங்கள்ல  ஒரு மேட்டர் மட்டும் நோட் பண்ணுங்க.. இவர் எடுத்த சீன்களை எல்லாம்  பாருங்க... பெரும்பாலான சீன்ஸ் காமெடியாவும் இருக்காது.. சீரியசாவும் இருக்காது. செண்டிமெண்ட்டாவும் இருக்காது... ஆக்ஷனாவும் இருக்காது... மொக்கையா மட்டுமே இருக்கும்.

இன்னிக்கு நம்ம ஸ்டூடியோவுக்கு சிறப்பு விருந்தினரா இயக்குனர் விஜய்
வந்துருக்காரு... பேட்டி எடுக்கப்போறது வேற யாரும் இல்லை.... நம்ம தலைவர் தான்..

(கவுண்டர் ஸ்லாங்லயே படிங்க... பேட்டிகங்கள்ல பாத்துருக்கேன், டைரக்டர் விஜய் காமெடியா ஒரு கேள்வி கேட்டாலும் அதுக்கு ரொம்ப சீரியஸா பதில் சொல்லுவாரு.. அதே மாதிரி இங்க உள்ள பதிலையும் படிங்க)

விஜய் : வணக்கம்ணே

கவுண்டர் : டேய்... கார்ப்பெட் வாயா... உனக்கு வணக்கம் சொல்ற மூடுல நா இல்ல.. அந்த கருமத்த நீயே வச்சிக்க...  ஆமா நீ இதுவரைக்கும் எத்தனை படம் எடுத்துருக்க?

விஜய்: நா இதுவரைக்கும் ஒரு நாலு படம் எடுத்துருக்கேன்

கவுண்டர் : அடுத்தவங்க எடுத்ததுலருந்து நீ எடுத்தத கேக்கல நாயே... நீ எத்தனை படம் சொந்தமா எடுத்துருக்க?

விஜய்  : (வசீகரா விஜய் ஸ்டைல்ல) வல்லா... நா சொந்தமா எடுத்ததுன்னு சொல்லப்போனா...  how to say... ... well ah...

கவுண்டர் : அப்ப நீ எதுவும் சொந்தமா எடுக்கல...

விஜய் : அப்படியும் வைத்துக் கொள்ளலாம்...

கவுண்டர் : உன் மொகரைய பாக்கும்போதே தெரியிங் சரி அத விடு... தாண்டவம்னு ஒரு  படம் எடுத்துருக்கியே... அதுல என்ன கருமாந்த்ரத்துக்கு லண்டன்ல கதை நடக்குது... ஏன் அந்த கண்றாவிய இந்தியாவுலயே எடுக்க மாட்டியா?

விஜய்: கதைக்கு தேவைப்பட்டதால லண்டன் போனோம்...

கவுண்டர்: (ஹை பிட்ச்ல) உனக்கு தேவைப்பட்டுச்சின்னு சொல்லு நாயே... உனக்கு லண்டன் பாக்கனும்னு ரொம்ப நாள் ஆசை அதுனால ஒரு இளிச்சவாய் ப்ரொடியூசர் கெடைச்ச உடனே பொய்ட்டு வந்துட்ட.. ஆமா கதை கதைன்னு சொல்றியே ... அது ஒரு கதையா.. இந்த படத்துக்கு தாண்டவம்னு பேரு வச்சதுக்கு அந்த தொணைக்காலயும் 'வ" வயும் எடுத்துட்டு  "தண்டம்" அப்டின்னு வச்சிருக்கலாம்...


விஜய் : என்ன சார் இப்டி சொல்லிட்டீங்க... இந்த கதையமட்டும் நா அமெரிக்காவுல சொல்லிருந்தேன்னா...

கவுண்டர் :
குப்புற போட்டு செருப்புலயே அடிச்சிருப்பாய்ங்க... இன்னொருதடவ அத கதைன்னு சொன்ன வாயில கிரீஸ அள்ளி அப்பிப்புடுவேன்... படுவா..ஆமா இந்த விக்ரம் எப்புடி   ஒத்துகிட்டான்.. அவண்ட்ட போயி நீ என்ன சொன்ன?

விஜய்: அது ரொம்ப சிம்பிள்... "சார் இந்த படத்துல உங்களுக்கு செம கேரக்டர்... உங்களுக்கு கண்ணு தெரியாது... வாயால டொக்கு டொக்குன்னு சவுண்டு விட்டு, அத வச்சே வில்லன்கள கொல்றீங்க" அப்டின்னு மட்டும் சொன்னேன்... உடனே கால்ஷீட் குடுத்துட்டாரு.

கவுண்டர்: ஹைய்ய்யோ. அவண்ட்ட உள்ள கெட்டப் பழக்கம் இதான்யா... கண்ணு தெரியாத கேரக்டர் காது கேக்காத கேரக்டர்ன்னாலே உடனே ஒக்கே சொல்லிடுறான்... மவனே  நீ மட்டும் முழுக்கதைய சொல்லிருந்த அவன் வீட்டு நாய விட்டு பாதி மூஞ்ச கடிக்க  வச்சிருப்பான்.

விஜய்: சரி விடுங்கண்ணே... இதயெல்லாம் ஒரு பெரிய விஷமா பேசிக்கிட்டு.. எனக்கு  ஒரு அர்ஜெண்ட் வேல இருக்கு... நா பொய்ட்டு அடுத்த பட விமர்சனம்போது வர்றேன்.

கவுண்டர்: என்னது அடுத்த படமா? டேய் சீரியஸ் மூஞ்சா.... இதுவே கடைசியா இருக்கட்டும்.. இனிமே இந்த ஸ்டூடியோ பக்கம் உன்ன பாத்தேன் கரண்டு கம்பிய எடுத்து வாய்க்குள்ள சொருகி விட்டுருவேன்... ஓடிப்போயிரு...


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

20 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

செம மொக்கையான படத்தையும், இவ்வளவு சிரிக்கும்படியா விமர்சனம் பண்ணியிருக்கீங்களே பாஸ். சூப்பர்!!

படம் பார்க்கும்போது கூட இவ்வளவு சிரிப்பு வரல....சே சே...படம் முழுக்க சிரிப்பே வரல. :) :)

Anonymous said...

விக்ரம் நடித்த படத்திற்க்கு பெயர் தெய்வ திருட்டு மகள்

'பதஞ்சலி' ராஜா said...

சின்ன பயண விமர்சனம் பண்ண சொன்ன இப்படி தான் இருக்கும் விமர்சனம்..

நல்ல படம் பாருங்க

Anonymous said...

//விஜய் படங்கள்ல ஒரு மேட்டர் மட்டும் நோட் பண்ணுங்க.. இவர் எடுத்த சீன்களை எல்லாம் பாருங்க.///

இதுக்கு பேசாம எங்கள தற்கொல பண்ணிக்க சொல்லிருக்கலாம்...

boss said...

boss kalakkuringa....super review.....100% true and bold review....keep it up

ரா.ரமணன் said...

உங்கள் விமர்சனம் அருமை!! ஆனால் ஒரு சின்ன வினா, "சிங்களத்தமிழ்" என்று நீங்கள் குறிப்பிடுவது எந்த நாட்டில், எந்த பிரதேசத்தில் கதைக்கப்படுகிறது அல்லது கதைக்கப்பட்டது?? நான் இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவன் தற்போது கொழும்பில் வசிக்கிறேன்.

TJ said...

"சிங்களத்தமிழ்" என்றால் என்ன ?
நானும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவன்..

முத்துசிவா said...

@ஹாலிவுட்ரசிகன் :

haha... thanks boss :)

முத்துசிவா said...

@Anonymous:

//விக்ரம் நடித்த படத்திற்க்கு பெயர் தெய்வ திருட்டு மகள்//

க. க.க போங்க :)

முத்துசிவா said...

@பதஞ்சலி' ராஜா said...

//சின்ன பயண விமர்சனம் பண்ண சொன்ன இப்படி தான் இருக்கும் விமர்சனம்..
//

கரெக்ட் பாஸ் ... ஆமா நீங்க யார சொல்றீங்க ?

முத்துசிவா said...

@boss :

thanks boss :)

முத்துசிவா said...

@ரா.ரமணன் , Tharsi gan:

மன்னிக்கவும்... மாற்றிவிட்டேன்

Anonymous said...

Boss it is declared as a hit in box office.and running housefull in many theatres.

சேக்காளி said...

இந்தியாவின் தலை சிறந்த 5 ரா ஆபிசர்களில் ஒருவருக்கு திருமணம்.அதற்கு 2 நாட்கள் முன்பு வரை அது(திருமணம்)பற்றி அவருக்கு தெரியவில்லை.இப்படி பட்ட பதவிகளில் இப்படி பட்ட ஆபிசர்கள் இருந்தால் நாம முன்னேறி விடுவோம்.

சேக்காளி said...

இந்தியாவின் தலை சிறந்த 5 ரா ஆபிசர்களில் ஒருவருக்கு திருமணம்.அதற்கு 2 நாட்கள் முன்பு வரை அது(திருமணம்)பற்றி அவருக்கு தெரியவில்லை.இப்படி பட்ட பதவிகளில் இப்படி பட்ட ஆபிசர்கள் இருந்தால் நாம முன்னேறி விடுவோம்.

சேகர் said...

இத மட்டும் விஜய் பார்த்திருந்தான் தூக்குல தொங்கீருவான். அவ்வளவு கிண்டல். சூப்பர் நண்பா. இன்று எனது தலத்தில் http://eththanam.blogspot.in/2012/10/blog-post_4.html?

ANBUTHIL said...

தாண்டவம் தென்டந்தான்னு ஒரே வரில சொல்லுங்க

KaviIni Imaya said...

This film is the combination of GHAZHINI , DHAAMDHOOM , MOUNA RAGAM.
Vijay started copying Tamil films now-a-days.

கோவை நேரம் said...

செமையா எழுதி இருக்கீங்க பாஸ்...இன்னும் சிரிப்பு வருது...

KaviIni Imaya said...

Also post reviews for "PIZZA". Nice thriller.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...