நம்ம தமிழ் சினிமாவுல
யார் யாரையெல்லாம் பெரிய டைரக்டருங்கன்னு தூக்கி வச்சிருந்தோமோ அவிங்க எல்லாரும்
கொஞ்ச கொஞ்சமா நாதாரித்தனத்த காட்ட ஆரம்பிச்சிட்டாய்ங்க. உதாரணமா போனவருஷம்
மிஸ்கின், பாலா, விஜய் மாதிரி டைரக்டருங்க எடுத்த படங்கள பாத்தப்போ
அதுக்கு முன்னாடி எடுத்த படங்கள்லாம் இவிங்க தான் எடுத்தாய்ங்களான்னு ஒரு டவுட்ட
கெளப்பி விட்டுச்சி.. அந்த வரிசையில இப்போ வந்து ஜாயிண்ட் அடிச்சிருக்காரு நம்ம
அமீர். மொதல்ல மெளனம் பேசியதேன்னு ஒரு காமெடி கலந்த மசாலா படத்த கொஞ்சம் வித்யாசமா
எடுத்தாரு. அப்புறம் ராம் ன்னு ஒரு த்ரில்லர் படம். அதுக்கப்புறம் பருத்திவீரன்னு
கிராமப்புற கதைன்னு நல்லா எறங்கி வேல செஞ்சிருந்தாரு.
சரிஒவ்வொரு
படத்துலயும் நிறைய வித்யாசம் காமிக்கிறாரே...இதுலயும் எதோ மாஃபிஸ்கோ லவ் ஸ்டோரி
காஃபிஸ்கோ லவ் ஸ்டோரின்னு பிரியாத மாதிரி கேப்ஷன் வேற போட்டுருக்காரே. எப்புடியும்
படம் நல்லாருக்கும்ங்கற நம்பிக்கையில தான் படத்துக்கு போனேன். மத்த ரெண்டு படங்களை
விட மெளனம் பேசியதே படத்த எடுத்த டைரக்டருப்பா... எதாவது
பண்ணிருப்பாருன்னு போனா.... உண்மைய சொல்லப்போனா இந்த
அளவு ஒரு கேவலமான படத்த கடந்த ரெண்டு மூணு வருசத்துல
பாத்ததே இல்லைங்க..
படத்தோட
ஒன்லைன மட்டும் கேட்டா எதோ நல்லாருக்க மாதிரி தெரியும்... ஆனா அதுக்கு நம்மாளு ஒரு
கதை திரைக்கதை எழுதிருக்காரு பாருங்க... வக்காளி.. வடிவேலு மூஞ்சில காரி துப்புன
கரடி கூப்டு வந்து தான் இவர டீல் பண்ண வைக்கனும். ஜெயம் ரவி
தாய்லாந்துல ஒரு பெத்த டான். அவரு போட்டுருக்க கோட்டுக்கும் அவரு வச்சிருக்க
மீசைக்கும் அவரு எதோ பில்லா மாதிரி பெரிய டெரரானவர்னு நெனைப்பீங்க ஆனா அது தான் இல்லை. அவரு எப்பிடி டான்
ஆனானாருங்கறதுக்கு நம்ம டைரக்டரு ஒரு
ஃப்ளாஷ்பேக் வச்சிருக்காரு பாருங்க. அங்க நிக்கிறாரு.
ஜெயம்ரவியோட அப்பா
ஒரு கெட்டவருன்னு அவங்க அம்மா அவர விட்டுட்டு மகன் ஜெயம் ரவியையும் மகளையும்
அழைச்சிட்டு தாய்லாந்துக்கு பொழைக்க வர்றாங்க... ஏண்டா டேய்..
பொழைக்கிறதுக்காக ஒரு தேனிலருந்து மதுரைக்கோ இல்லை ஒரு ராசக்காபார்ளையத்துலருந்து
மெட்ராஸூக்கோ போறாய்ங்கன்னா சரி...
பொழைக்கிறதுக்கு தாய்லாந்து போறாய்ங்களாம்.. ஏண்டா
மூணு பேருக்கு பேங்காக் போக ஃப்ளைட் டிக்கெட்டு
அங்க இருக்க விசா எடுக்க ஆவுற காசே ஒரு
லட்ச ரூவாய்க்கு மேல ஆவுமேடா.. அந்த காச இங்க வச்சிகிட்டு ஒரு பொட்டிக்கடை போட்டே
பொழைக்கலாமேடா... அட அதக்கூட
விடுங்க... தாய்லாந்துல குறிப்பா எந்த ஏரியாவுக்கு போவாய்ங்க தெரியுமா... "பட்டாயா"... அந்த எடத்துல
prostitution தான் முக்கிய
தொழிலே... நல்ல குடும்பத்துல பொறந்தவியிங்க கண்டிப்பா அந்த ஊர்ல தான போய்
தங்கணும். இதுலயே டைரக்டர் டச்சு உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே.
அங்க ஜெயம் ரவி போதை
பொருள் விக்கிற கும்பலோட சேந்து நெறைய பணம் சம்பாதிக்க ஆரம்பிச்சிடுறாரு. ஒண்ணும்
பெருசா பண்ணல... ஒரு கஞ்சா பொட்டலத்த எடுத்துட்டு போயி ரயில்வே ஸ்டேசன் ஓரமா
ஒருத்தன்கிட்ட மாத்திட்டு வர்றாரு. அவ்ளோதான் சரி ஒரு
சீன்ல மட்டும் தான் இப்புடி பண்றாருன்னு பாத்தா மொத்த படத்துலயுமே டான் ஜெயம் ரவி
பண்ற வேலை இந்த பொட்டி மாத்துறது மட்டும் தான். ஏண்டா நாயே இந்த பொட்டி மாத்துற
வேலைக்கு உனக்கு கெத்தா ஒரு மீசை... ஒரு கோட்டு... ஒரு துப்பாக்கி...அந்த மீசைய
மழுங்க வழிச்சிட்டு அக்கிள்ல ஒரு மஞ்சப்பைய சொருகி வச்சிருந்தாலே கரெக்டா இருந்துருக்கும்.
அதுவும் அந்த கோட் போட்டுருக்கும் போது எதோ கையில கான்கிரீட் போட்டு விட்ட மாதிரி
நீட்ட மாட்டேங்குறாரு மடக்க மாட்டேங்குறாரு... கெத்தாமா...
டயலாக் பேசுறாரு
பாருங்க... செம மொக்கை... சும்மா டயலாக் பேசுனாலே செம்ம காமெடியா இருக்கும்...
இதுல "ஆ அப்புடியா" ங்க்குற டயலாக்க நம்மாளு..."ஆஆஆ.... அப்ப்..ப்பு...டியாஆ"
ங்குற மாதிரி செம்ம ஸ்லோவா பேசுறாரு... டைரக்டர் சொல்லி குடுத்துருப்பாரு போல.. ஒரு சீன்ல அவரோட
தங்கச்சி ஒருத்தன் கூட ரோட்டுல திரிஞ்சிகிட்டு இருக்கு. அத பாத்த இவரு கூப்டு
அடவைஸ் பண்றாரு... அந்த புள்ளை "நான் அவர லவ் பண்றேன்" ன்னு சொல்லுது... அது கூட்டிட்டு வந்த அது
லவ்வர பாக்கனுமே...
ஆத்தாடி... அவன் ஆளையும் பேசுறதையும் பாத்தாலே நமக்கு ஸ்பாட்ல வாந்தி வந்துரும்.
பேசிட்டே இருக்க ஜெயம் ரவி பொட்டுன்னு துப்பாக்கிய எடுத்து அவர சுட்டுடுறாரு... எனக்கு மலைக்கோட்டை படத்துல வர்ற ஒரு டயலாக்கு தான் ஞாபகம் வந்துச்சி..."நாம இதுவரைக்கும் யாரை அடிச்சிருக்கோம்... கோயில் குருக்கள்.. தமிழ் வாத்தியாரு... பழைய துணிக்கு பக்கெட் விக்கிறவன்..இந்த மாதிரி சாஃப்ட் கேரக்டரையெல்லாம் அடிச்சி ரவுடியா பாஃர்ம் ஆயிட்டோம்" அதே மாதிரி அவன் செத்தோன ஜெயம் ரவி தங்கச்சி "what just happened?" ன்னு வாரணம் ஆயிரம்ல சூர்யா செத்துப்போயி வாய பொளந்து கெடக்கும் போது அவன் பொண்ணு "Mummy...see daddy is smiling" ன்னு சொல்ற மாதிரி சொல்லுது...
பேசிட்டே இருக்க ஜெயம் ரவி பொட்டுன்னு துப்பாக்கிய எடுத்து அவர சுட்டுடுறாரு... எனக்கு மலைக்கோட்டை படத்துல வர்ற ஒரு டயலாக்கு தான் ஞாபகம் வந்துச்சி..."நாம இதுவரைக்கும் யாரை அடிச்சிருக்கோம்... கோயில் குருக்கள்.. தமிழ் வாத்தியாரு... பழைய துணிக்கு பக்கெட் விக்கிறவன்..இந்த மாதிரி சாஃப்ட் கேரக்டரையெல்லாம் அடிச்சி ரவுடியா பாஃர்ம் ஆயிட்டோம்" அதே மாதிரி அவன் செத்தோன ஜெயம் ரவி தங்கச்சி "what just happened?" ன்னு வாரணம் ஆயிரம்ல சூர்யா செத்துப்போயி வாய பொளந்து கெடக்கும் போது அவன் பொண்ணு "Mummy...see daddy is smiling" ன்னு சொல்ற மாதிரி சொல்லுது...
அப்புறம் கஞ்சா
பொட்டி மாத்தபோகும்போது ஒரு துப்பாக்கி சண்டை... நம்ம சின்ன புள்ளைல சின்ன குச்சிய
துப்பாக்கி மாதிரி வச்சிகிட்டு சும்மா "டிஷூம் டிஷூம்"ன்னு சுட்டு வெளாடுவோமே... அத விட காமெடியா
இருக்கு.. ஜெயம் ரவி மேல நின்னு நாக்கு தள்ள சண்டை போட்டுகிட்டு இருக்கும் போது, நீது சந்தரா கீழ நின்னு "ஆதி என்ன நடக்குது அங்க?... கீழ வா... பயமா இருக்குங்குது... ஏண்டி அவன் என்ன சைக்கிளா ஓட்டிகிட்டு இருக்கான் சடன் ப்ரேக் அடிச்சிட்டு உடனே வர்றதுக்கு... சண்டை போட்டுட்டு இருக்கான்...
நீட்து சந்திரா...
நம்மூர்ல பெரிய பெரிய ஹீரோக்களே சினிமாவுல புகைபிடிக்கிறமாதிரி காட்சிகளை வக்கிற
சுத்தமா கொறைச்சிட்டாங்க... ஆனா இந்தாளு ஒரு டைரக்டர் சங்க தலைவரு... படத்துல
நீட்டு சந்த்ரா வர்ற முக்காவாசி காட்சிகள சிகரட் புடிக்கிற மாதிரி வச்சிருக்காரு....
யோவ்... நானெல்லாம் கொஞ்ச நாள் முன்னாடி அந்த புள்ளைக்கு ஃபேனா இருந்தேன்யா...
இனிமே அந்த புள்ளை குடும்ப பாங்கினியா நடிச்ச கூட அது தம்மடிச்சது தானய்யா
முன்னாடி வந்து நிக்கும்.
இப்புடியே மொக்கை
மொக்கையா காட்சிங்க போயிட்டு இருக்க ஒரு சின்ன டிவிஸ்ட வச்சி ஜெயம் ரவிய
பாம்பேக்கு அழைச்சிட்டு போறாய்ங்க... பாம்பே போனா அங்க காட்ஃபாதர் அஜித் மாதிரி
இன்னொரு ஜெயம் ரவி இருக்காரு.. அவருதான் பகவான். மும்பை கா பகவான். அவரு
தாய்லாந்து ஜெயம் ரவிய விட பெரிய டண்டனக்கா டான். அவர காட்டுனோன இண்டர்வல்... போலீஸ் தேடுற பெரிய
கிரிமினல். சரி இனியாது படம் எதாது தேறும்னு பாத்தா முதல் பாதியே பரவால்ல
போலருக்கு ரெண்டாவது பாதி...
மீசையெல்லாம் எடுத்துட்டு எல்லா வெரல்லையும் மோதரம் காதுல பல கடுக்கன்னு பகவான் கேரக்டர்ல ஜெயம் ரவி பாக்க நல்லா தெரிஞ்சாலும் போக போக எப்படா படம் முடியும்னு ஆயிருது. சிரிக்கிறது சினுங்குறதுன்னு பகவானா ஜெயம் ரவி புதுசா முயற்சி பண்ணிருந்தாலும் இவன் சும்மாவே இப்புடித்தான இருப்பான் இதுல என்ன புதுசுன்னு உள்மனசு கேள்வி கேக்குது.
மீசையெல்லாம் எடுத்துட்டு எல்லா வெரல்லையும் மோதரம் காதுல பல கடுக்கன்னு பகவான் கேரக்டர்ல ஜெயம் ரவி பாக்க நல்லா தெரிஞ்சாலும் போக போக எப்படா படம் முடியும்னு ஆயிருது. சிரிக்கிறது சினுங்குறதுன்னு பகவானா ஜெயம் ரவி புதுசா முயற்சி பண்ணிருந்தாலும் இவன் சும்மாவே இப்புடித்தான இருப்பான் இதுல என்ன புதுசுன்னு உள்மனசு கேள்வி கேக்குது.
யாருமே
இல்லாத கடையில யாருக்குய்யா டீ ஆத்துறங்குற கதை தான் நம்ம யுவன் ஷங்கர் ராஜா வோட
நிலமை... எந்த சீனுமே நல்லா
இல்லைன்னாலும் BGM மட்டும் செம
சீனா இருக்கு. ஒரு சீன்ல
நீது சந்த்ராவ அவ மாமனும் இன்னும் சில ரவுடிகளும் அடிச்சி கஷ்டப்படுத்த, தடார்ன்னு வர்றாரு ஜெயம் ரவி.. சரி அடி பிண்ணி
பெடலெடுக்க போறாருன்னு பாத்த பைய தொறந்து ஒரு மூணு கட்டு பணத்த எடுத்து
குடுத்துட்டு நீதுவ அழைச்சிட்டு போறாரு.. அப்ப யுவன் ஒரு மீசிக் போடுறாரு
பாருங்க... :"ஸோம்... ஸீம்.... ஸாம் ..டடடான்"ன்னு
ஒரு செம மீசிக்கு... டேய்... இந்த மியூசிக் போடுற அளவுக்கு அங்க ஒண்ணுமே
நடக்கலையேடா,.. ஒரு ஃபைட்ட போட்டு எல்லாத்தயும் அடிச்சி
நவுத்திட்டு நீதுவ அழைச்சிட்டு போற மாதிரி காட்சி இருந்தா இந்த மீசிக்கு ஓக்கே...
அந்த நாயே கஞ்சா வித்த காச குடுத்து இவள வாங்கிட்டு போவுது... இதுக்கு ஏண்டா இந்த
பில்ட் அப்பு.
ஸ்பெஷலா டைரக்டர் அமீர பத்தி சொல்லனும்னா படத்துல ஒவ்வொரு கேரக்டரையும் செதுக்கிருக்காருன்னு தான் சொல்லனும்... குறிப்பா ஜெயம் ரவி தங்கச்சி கேரக்டரும் அது கூட்டிட்டு வர்ற லவ்வர் கேரக்டரும்...கண்றாவி வக்காளி படத்துல ஒருத்தன் கூட ஒழுங்கா பேசமாட்டேங்குறாய்ங்க. இதுல ரெண்டு டம்மி பீஸ் வில்லனுங்க வேற.. தெலுங்கயும் தமிழையும் கலந்துவிட்டு காதுஜவ்வ கிழிச்சிடுறாய்ங்க.. சரி இவரு 4 வருசமா படமே எடுக்கலையே.... செம கதைய ஒண்ண ரெடிபண்ணி படம் எடுத்துருப்பாரோன்னு நெனைச்சா படம் பாத்தப்புறம் தான் தெரியிது நம்மாளு நாலு வருசமா கதை எதுவும் கெடைக்காம சுத்திட்டு இருந்துருக்காருன்னு. இவனுகளையெல்லாம் நம்பி எப்புடி பெட்டு கட்டுறது...
மொத்தத்துல
படத்த பத்தி சொல்லனும்னா.... அது நம்மள பாத்துருச்சி... எல்லாரும் தாழ்வான பகுதிய
நோக்கி ஓடுங்க!!!! இது ஒரு mafisco love story
எல்லாம் இல்லை... இதுக்கு
கடுப்பிஸ்கோ லவ் ஸ்டோரி.
இந்த படத்துக்கு torrent
தேடி கூட உங்க நேரத்தை தயவு செஞ்சி
வீணடிக்காதீங்க...
9 comments:
அவ்வளவு பீதியாவா இருக்கீது
kalakalapu padam thala namma cable ji dialogue preparation.....adhu...malaikottai illa...
//kalakalapu padam thala namma cable ji dialogue preparation.....adhu...malaikottai illa...// அந்த டயலாக் முதன் முதல்ல வந்தது மலைக்கோட்டை படத்துலதான் தல... மனோபாலா பொன்னம்பலத்துகிட்ட சொல்லுவாரு.. கலகலப்புல வந்தது ரிப்பீட்டு :)
padam nalla erukko ellayo unnoda vimarsanam padichathum, vanthi than varuthu ethuku nan padathaiye pathuruppen...
freeya blogla elutharappave eppadi
ne ellam paisa kuduthu domain vangiruntha...
//padam nalla erukko ellayo unnoda vimarsanam padichathum, vanthi than varuthu ethuku nan padathaiye pathuruppen...//
இவரு படத்த கூட பாத்துருவாராம்... விமர்சனத்த படிக்க முடியலையாம்... ஏண்டா நாயே... Google ல free ah ஒரு account create பண்ண வக்கில்லாம நீயே anonymous ah வந்து கமெண்டு போட்டுகிட்டு இருக்க...நீ எங்க காசு குடுத்து படம் பாக்க போற... எவனாச்சும் download பண்ணுவான் ஓரமா நின்னு எட்டிபாக்கலாம்னு இருக்கியா?
//freeya blogla elutharappave eppadi
ne ellam paisa kuduthu domain vangiruntha...//
டேய் மொன்னை... ஏற்கனவே காசுகுடுத்து வாங்குன domain ல தாண்டா எழுதிட்டு இருக்கேன்... நீ மொதல்ல account create பண்ணிகிட்டு அப்புறம் வா...
Unmaiya sonna admin ku nandri,,, naanum
yemanthutan Thala
ஹா.ஹா.ஹா. செம.. அண்ணாத்த ரொம்ப அனுபவிச்சிட்டிங்க போல..நாங்கதான் அப்பவே சொன்னொம்ல.. :)
ஹா.ஹா.. செம..அண்ணாத்த நாங்கதான் அப்பவே சொன்னொம்ல..
Semma Comedy
Ungalukku comedy sense athigam boss
// டேய்... இந்த மியூசிக் போடுற அளவுக்கு அங்க ஒண்ணுமே நடக்கலையேடா,..
//
Post a Comment