Monday, March 18, 2013

பரதேசி - அய்யாவுக்கு ஒரு நேஷனல் அவார்டு பார்சல்!!!


Share/Bookmark
பாலா படம்னு சொன்னதுமே நமக்கு மனசுல டக்குன்னு ஒரு கேள்வி வந்துட்டு போகும்... யாரு மனசுல யாரு... இந்தப் படத்துல சாவப்போறது யாரு?ன்னு..அதுவும் ஸ்பானரால  அடிவாங்கி சாவப்போறாய்ங்களா இல்ல கொறவளைய எவனும் கடிச்சி துப்ப  போறாய்ங்களாங்குறது அடுத்த எதிர்பார்ப்பு. எடுத்த அனைத்து படங்கள்லயும் final destination la வர்ற மாதிரி விதவிதமா சாவடிச்சி ஜாலி பண்ணிக்கிட்டு இருந்த பாலா நான் கடவுள்லயும் "அவன் இவன்" லயும் படம் பாத்தவிங்களையும் சேத்து சாவடிச்சிருந்தாரு. சரி இனிமே இவரு எடுக்குற படத்த பாக்கக்கூடாதுன்னு ஒரு முடிவு எடுத்து வச்சிருந்தேன். ஆனா சிலர் கொடுத்த பில்ட் அப்புகளும், சில நாளிதழ்கள் வழங்கிய 5 ஸ்டார்களும் ஆட்டோமேட்டிக்கா  தியேட்டர நோக்கி அழைச்சிட்டு போயிருச்சி.

1939 இல் தேயிலை எஸ்டேட்டுகளில் வேலைசெய்தவர்களின் உண்மைக் கதைங்கற ஸ்லைடோட  ஆரம்பிக்கிர படம், சாலூர் என்கிற ஒரு வறண்ட கிராமத்துல வாழ்ந்துகிட்டு  இருக்கிற மக்களோட வாழ்க்கைமுறையிலேயே முதல் பாதி முழுவதும் பயணிக்குது. 1939ஐ திரையில கொண்டுவர மொதல்ல டைரக்டரும் கேமராமேனும் முடிவு செஞ்ச ஒண்ணே ஒண்ணு படம் பாக்குறவிங்களுக்கு வெளிச்சமா எதுவுமே தெரியக்கூடாதுன்னு தான் போலருக்கு. படம் முழுக்க ஒரே கருங்கும்முன்னு இருக்கு.. இருந்தாலும் அவங்களோட முயற்சி ஒண்ணும்  வீண் போகல... அந்த கிராமத்துல தண்டோரா போடுற வேலை பாத்துக்கிட்டு இருக்கவர் தான் ஒட்டுபொருக்கி (எ) ராசா . பிதாமகன் விக்ரமையும் பதினாறு வயதினிலே சப்பானியையும் சரிபாதியாக கலந்த மாதிரியான ஒரு கேரக்டர்.

ஒட்டுப்பொருக்கி  மேல ஆசைப்படுற ஹீரோயின் தான் வேதிகா. இப்பவே சொல்லிடுறேன். நீங்க படம் பாத்துட்டு வந்து எங்க படத்துல வேதிகாவையே காணும்னு என் சட்டைய புடிச்சிற கூடாது. மூஞ்சில வண்டிமைய அள்ளி அப்புன மாதிரி ஒண்ணு சுத்திகிட்டு இருக்கும். அதுதான் வேதிகா. அந்த செவத்த புள்ளைய ஏன்யா இவ்வளவு அலங்கோல படுத்தி வச்சிருக்கீங்க. வெளக்க தேடி வந்து விழுகுற விட்டில் பூச்சிங்க மாதிரி பாலா படம்னோன பல்ல காட்டிக்கிட்டு வந்து நடிக்க வேண்டியது... ஆனா பாலா படத்துல நடிச்சா அதுதான் அவங்களுக்கு கடைசி படம்ங்கறது கொஞ்ச நாள் கழிச்சி தான் அவங்களுக்கு தெரியவரும். நம்ம பூஜாவை திரை உலகத்துலருந்தே ஒழிச்ச பெருமை எல்லாம் அய்யா பாலாவையே சாரும். சரி இங்க  வருவோம்.

அந்த புள்ள ஒட்டுப்பொருக்கிய கலாய்க்கிறதாவும், காமெடி பண்றதாவும் நெனைச்சி என்னென்னவோ பண்ணி நமக்கு அருவருப்ப கூட்டுது. அசிங்கமாவும் அருவருப்பாவும் பேசுறது மட்டுமே காமெடின்னு நெனைச்சி நம்ம பாலா நமக்கு வாந்திதான் வரவக்கிறாரு. அவன் இவன் பாத்தவங்களுக்கு இது தெரிஞ்சிருக்கும். இங்கயும் அதே தான்.. வேதிகா பண்ற மொக்கை காமெடிக்கெல்லாம் அந்த ஊரே கூடி நின்னு சிரிக்குது. படம் பாக்கும் போது உங்களுக்கு எந்த சீன் காமெடி சீன்னு கன்பீசன் வரக்கூடாதுங்கறதுக்காக ஸ்கிரீன்ல இருக்கவங்களையே சிரிக்க வச்சிருக்காரு. so, அந்த காட்சில் நடிச்சிருக்கவங்க யாராவது சிரிச்சா ஓ இது காமெடி போலருக்குன்னு நாமளும்
சேந்து சிரிச்சிக்க வேண்டியது தான். தியேட்டர்ல முக்கால்வாசி பேரு அப்புடித்தான் சிரிச்சிட்டு இருந்தாங்க.

ஆனா எல்லா அருவைக்கும் அதர்வா ஒருத்தரே ஆறுதலா இருக்காரு. கல்யாண பந்தில  சாப்பாடு கெடைக்காம கொட்டு அடிச்சிட்டே காட்டுக்குள்ள உக்காந்து அழுகுறதும், கூலிக்கு வேலை செஞ்சிட்டு, கூலி கெடைக்கலன்னதும் 'நியாமாரே... கூலிய குடுத்துருங்க நியாமாரே" ன்னு கலங்கி அழுகுறதுமா நம்மையும் சேத்து கலங்க வச்சிடுராரு. உண்மையிலயே அதர்வா இந்த படத்துக்கு செமயான choice.

பிழைக்க சரியான வழியில்லாம திரியிற சாலூர் கிராம மக்கள், நிறைய சம்பளம் கெடைக்கும்னு கங்கானி சொன்ன ஆசை வார்த்தைங்கள நம்பி ரொம்ப தூரத்துல உள்ள ஒரு டீ எஸ்டேட்டுக்கு பஞ்சம் பொழைக்க கிளம்பி போறாங்க. 48 நாள் நடந்து நடந்து சோர்ந்து போன ஒருத்தர் மயங்கி கீழ விழந்து, உயிருக்கு போராடிகிட்டு இருக்காரு. அவரோட மனைவி கதறி அழ, கங்கானி "இதெல்லாம் ஊர் போர வரைக்கும் தாங்காது... இங்கயே விட்டு வா"ன்னு அவர அங்கயே போட்டுட்டு அவர் மனைவியையும் மத்தவங்களையும் இழத்துட்டு போயிடுறாரு. விழுந்து கிடப்பவர் அவரோட மனைவிய நோக்கி உதவிக்காக கைய நீட்ட, உதவ முடியாமல் மனைவியும்  மற்றவர்களும் செல்ல.... இடைவேளை... இந்த ஒரு காட்சியே அவர்கள் பஞ்சம் பிழைக்க போகிற இடம் எவ்வளவு கொடூரமானதுங்கறதுக்கு ஒரு சிறந்த உதாரணம்.

இரண்டாம் பாதியில் அனைவருமே டீ எஸ்டேட்டுல கொத்தடிமைகளாக்கப்பட்டு கொடுமை படுத்தப்படுறாங்க.  உள்ள வந்தப்புறம் தான் எல்லாருக்கும் தெரியுது இங்க வந்தா போக வெளிய போக முடியாதுன்னு. வேறு ஒரு ஊர்லருந்து அங்க வந்து வேலை செஞ்சிட்டுருக்க தன்ஷிகா, அதர்வாமேல பரிவா இருக்காங்க. பாருங்க விஷக்காய்ச்சல் வந்து
அவங்களும் இறந்து போயிடுறாங்க. நல்ல வேளை... அவங்களை ராவோட ராவா யாரும் கடத்திட்டு போயி, மூஞ்ச கிழிச்சி காலையில மூட்டையில் கட்டிக்கொண்டு வந்து வீட்டு முன்னாடியெல்லாம் போடுறமாதிரி எடுக்கல.

இரண்டாம் பாதியில மக்கள் கஷ்டப்படுறதை காமிக்கிறதுக்காக பாலா எவ்வளவோ காட்சிகளை எடுத்துருந்தாரு... ஆனா அத்தனையும் பாத்தாலும் நமக்குள்ள ஒரு impact இல்லை... ஆனா இது அத்தனையும் அதர்வா கடைசியில தன்னால ஊருக்கு போக முடியலைங்கறத ஒரு  மலை மேல உக்காந்து அழுது பொலம்புவாரு பாருங்க....ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆ...அது ஒண்ணு போதும்... "நியாமாரே... சாதி சனத்த பாக்கனும் நியாமாரே.... நியாமாரே நாங்க எந்த தப்பும் செய்யல நியாமாரே...." ன்னு... கொடூரம்... அந்த ஒரு காட்சில தொண்டைய அடைக்க வச்சிடுறாரு. "உன்னையே நீ எண்ணி பாரு..." விக்ரம் ஸ்டைல்

படம் பாக்குற நமக்கு, அப்பாவியா இருக்க அதர்வா பொங்கி எழுந்து வெள்ளைக்கரனையும் கங்கானியையும் ஓட ஓட வெரட்டி வெரட்டி அடிச்சி கொண்ணுட்டு எல்லாரையும் விடுவிக்க போறாரு போலன்னு தோணும்.. ஆனா நல்ல வேளை... அப்புடி எதுவும் இல்லை...  ஒரு சூப்பரான க்ளைமாக்ஸ் வச்சிருக்காரு பாலா.

படத்துல ஒரு செம்ம காமெடியாருன்ன அது ஜி.வி.ப்ரகாஷ் தான். படம் நடக்குறது 1939ல அத ஸ்கிரீன்ல கொண்டு வர எல்லாரும் ரொம்ப கஷ்டப்பட்டுருக்காய்ங்க. ஆனா நம்மாளு கொஞ்சம் கூட கூச்சப்படவே இல்லை.. வழக்கமா எல்லா படத்துக்கும் போடுற மாதிரியே போட்டுருக்காரு. கொஞ்சம் வித்யாசமான இன்ஸ்ருமெண்ட்ஸாவது யூஸ் பண்ணி எதாது
வித்யாசமா முயற்சி பண்ணிருக்கலாம்...அதும் 1st half la மியூசிக் மட்டும் ரொம்ப odd ah தெரியுது. அப்புறம் தன்ஷிகா சாவும் போது ஒரு பீப்பீ ஊதிருப்பாரு பாருங்க... காது ஜவ்வு கிழிஞ்சிருச்சி. ஆனா பாட்டு எல்லாமே செம.

அப்புறம் பாலா... கடந்த ரெண்டு படங்கள்ல மொக்கையாகி திரும்ப இந்த படத்தின் மூலமா அவரோட ரசிகர்கள் மனசுல நாற்காலி போட்டு உக்காந்துட்டாருன்னு சொல்லலாம். கதைக்களமும் படமாக்கிய விதமும் ரொம்பவே சூப்பர். ஆனா பாலாசார்... நீங்க சீரியசாவே படம் எடுங்க.. படத்துல காமெடி சீன் வக்கிறேன்னு தயவுசெஞ்சி கடுப்பேத்தாதீங்க.

சாலூர் கிராமம்னு சொல்லிட்டு 10 பதினைஞ்சி சின்ன வீடுங்கள மட்டுமே காமிக்கிறதும், அந்த பதினைஞ்சி வீட்டுக்கு எதுக்குப்பா தண்டோரா போடுறவன்ங்குற கேள்வி மனசுல எழுறதையும் தவிர்க்க முடியல. இரண்டாவது பாதியில, வெள்ளைக்காரங்க காந்திய பத்தி தப்பா பேசிகிட்டு இருக்கப்போ, ஒரு துரையம்மா காந்திய ரொம்ப புகழ்ந்து பேசுறது மாதிரி ஒரு காட்சி  திணிக்கப்பட்ட ரகம்.. ஏன்சார் இதெல்லாம்? யார்ட்ட நல்ல பேரு எடுக்க இந்த காமெடியெல்லாம்? எல்லாத்துக்கும் மேல கிறிஸ்துவ டாக்டராக வர்ற தம்பதிங்க வைத்தியம் பாக்குறத விட்டுட்டு கொத்தடிமைங்களா இருக்க மக்கள்கிட்ட மதத்த பரப்பிகிட்டு இருக்கது போல காமிக்கிறதும், அதை தொடர்ந்து வர்ற ஒரு கேவலாமான பாடலும் படத்தோட தரத்த ரொம்பவே கொறைக்குது. உண்மையாவே இருந்தாலும் இதெல்லாம் ஏங்க... ஒருவேளை நீங்களும் உங்க படத்து மேல  கிறிஸ்தவ நண்பர்கள் கேஸ் எதுவும் போட்டு படத்த ஃபேமஸ் ஆக்கனும்னு எதிர்பாக்குறீங்களோ?

மொத்தத்துல பரதேசி நல்ல பொழுதுபோக்கு படமான்னு  கேட்டா சத்தியமா இல்லை.. ஆனா  பாலாவுக்கு பல விருதுகளை வாங்கித்தரப்போற படம்ங்கறதுல எந்த சந்தேகமும் இல்லை. அதே போல அதர்வாவுக்கு இது ஒரு மிகப்பெரிய தொடக்கமாகவும், வழக்கம்போல வேதிகாவுக்கு இதுவே கடைசி படமாகவும் அமைய நிறைய வாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கின்றன.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

Prem S said...

நமக்கு இந்த அழுகாச்சி படங்களை எல்லாம் பாக்க தைரியமில்லை எப்படி தான் பாக்குரீன்களோ

Anonymous said...

//அப்பாட்டக்கர் (எ) டைரக்டர் பாலாவின் பயோடேட்டா

பொது மக்கள்: படம் பிடிக்கவில்லை என்றாலும் சிலரால் அசிங்கப்படுத்தப்படுவோம் என்பதற்காக "பட்டையை கிளப்புது பாலா படம்" என்பவர்கள்//

This is from your own earlier blog. :-)

முத்துசிவா said...

@Anonymous:

ஹாஹா...

//பாலாவின் "எவன் அவன்?" ச்ச.."எவன்டா இவன்?" அடச்ச... அவனா இவன்? //

http://www.muthusiva.in/2011/06/blog-post_28.html

இது கூட நான் எழுதுனதுதான்... நல்ல படைப்புகளை வரவேற்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை...
ஆனால் அவரின் பெயருக்காக அவர் எதை எடுத்தாலும் சூப்பரப்பு என்று என்னால் கைதட்ட முடியாது நண்பா...

attack பண்ணதுக்கு நன்றி :)

Unknown said...

Nejamavae andha doctor character semma mokkai.. that gandhi scene too...Isaigyani illama poitarae!!

Anonymous said...

இந்த படத்தை இன்னமும் பார்க்கவில்லை, ஆனால் பரதேசி என்ற தலைப்பும், கதைக் கருவும், கண்காணிகளின் அராஜகங்களும், வெள்ளை முதலாளிகளின் சுரண்டல்களும் முன்னோட்டத்தில் பார்க்கும் போது, எனக்கு சட்டென நியாபகம் வந்தது, 150 ஆண்டுகளுக்கு முன்னால் வறுமையில் வாடிய தலித்களை ஏமாற்றி பொடி நடையாகவே இலங்கையின் மத்திய மாகாணத்துக்கு கொண்டு போய், போற வழியில் லட்சக்கணக்கானோர் இறந்து மடிய, மிச்சம் மீதி இருப்பவர்களை ஒரு கொத்தடிமைகளாக மாற்றி இன்றளவும் சீரழிந்து கிடக்கும் மலையகத் தமிழர்கள் தான். அதுவும் மலையகத்தில் கண்காணிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும் யாழ்பாணத் தமிழர்கள், அவர்களின் கொடுமைகளை, சாதி வெறிகளை பல்வேறு மலையக இலக்கியங்கள் சித்தரித்துள்ளன. அத்தோடு இலங்கை விடுதலை அடைந்த போது, அவர்கள் குறித்து சிறிதும் கவலைப்படாது நடுத்தெருவில் விட்டுச் சென்ற பிரித்தானியாரும், அந்நிய செலவாணியை அள்ளித் தர கடுமையாக உழைத்த அவர்களில் பலரை யாழ்ப்பாணத் தமிழர், சிங்களவர் சகிதமாக இந்தியாவுக்கு விரட்டி, மிச்சம் மீதி இருந்தவருக்கு இழுத்து இழுத்து குடியுரிமைக் கொடுக்காமல் மறுத்து, சொல்ல முடியாத துயரங்களை சந்தித்த ஒரு மாபெரும் கூட்டமே என் கண்கள் முன்னால் விரிந்தன. இவர்களை மதம் மாற்றத் துடித்தவர்கள், அடிமையாக்கியவர்கள் என என்னக் கொடுமைகள்,.

பரதேசி ( அயலவராக , வடக்கத்தியராக, தோட்டக் காட்டு சக்கிலியராக, ஈனத் தமிழராக ) துன்பட்ட கதைகளின் பிம்பம் தான் இக்கதையோ என்ற எண்ணமும் எனக்குள் எழுந்தது,. படம் பார்த்த பின் மீதியை கூறுகின்றேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...